PDA

View Full Version : முடவனின் முரட்டுத்தனம்



நாகரா
20-07-2008, 06:37 AM
முள் உரசுந்
தாளில்
ஈர மை உலரவில்லை

இமை துறந்த
விழியை
நீண்ட இரா மூடவில்லை

தவங் கிடந்த
கவிதை
எளிதில் வசப்படுவதில்லை

கொம்புத் தேனை
முடவன்
எம்பாமல் விடவில்லை

தாளில்
மை உலரு முன்
விழியை
இரா மூடு முன்
முரட்டு முடவன்
கொம்புத் தேன்
சுவைப்பான்
விருந்தோம்பியும்
செல்வான்

இளசு
20-07-2008, 06:48 AM
வசப்படாமல் நழுவும் நவக்கவிதை
விடாமுயற்சியில் யுகக்கவிஞன்
கண்ணாமூச்சி ரேரே
வென்றவர் யாரே?

வாழ்த்துகள் நாகரா அவர்களே... விருந்துக்கு!

நாகரா
20-07-2008, 07:32 AM
வசப்படாமல் நழுவும் நவக்கவிதை
விடாமுயற்சியில் யுகக்கவிஞன்
கண்ணாமூச்சி ரேரே
வென்றவர் யாரே?

வாழ்த்துகள் நாகரா அவர்களே... விருந்துக்கு!

கொம்புத் தேன் விருந்துக்கு
உம் நான்கு வரி அமுதம்

வாழ்த்துக்களுக்கும் அமுதத்துக்கும் நன்றி இளசு

ஓவியன்
20-07-2008, 08:06 AM
விடா முயற்சியில்
எம்பிக் குதித்து
பறித்து வந்த
கொம்புக் கவித்தேன்
சுவையில் நானும் திளைத்து....

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணா..!!

நாகரா
20-07-2008, 12:39 PM
விடா முயற்சியில்
எம்பிக் குதித்து
பறித்து வந்த
கொம்புக் கவித்தேன்
சுவையில் நானும் திளைத்து....

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணா..!!

நன்றி தம்பி