PDA

View Full Version : தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்: விபத்து நடந்தால் எப்படி கிளைம் செய்வது?



selvamurali
19-07-2008, 09:36 PM
தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் விபத்து நடந்தால் எப்படி கிளைம் செய்வது?

படித்தவர்கள் மத்தியிலேயே இன்னமும் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்பட வில்லை என்பதுதான் வேதனையான அதை சமயத்தில் உண்மையான உண்மை. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் பற்றி 10 பேரிடம் கேட்டால் ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது இந்த தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்.

அதென்ன தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்
சாலை விபத்தில் வாகனங்கள் மோதினால் அந்த வாகனத்துக்கு செய்யப்பட்ட தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் மூலம் க்ளைம் பெறலாம். இதன் மூலம் நாம் இன்சூரன்ஸ் செய்திருந்தால் மட்டுமே க்ளைம் செய்யமுடியும் என்பதெல்லாம் இல்லை.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் :அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் கொடுக்காது. ஏனென்றால் அந்த விபத்துக்களுக்கு போக்குவரத்து கழகமே க்ளைம் தரும். மற்றபடி தனியார் வாகனங்கள் மோதினால் அந்த வாகன உரிமையாளர் எந்த நிறுவனத்தில் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறாரோ அந்த நிறுவனம் க்ளைம் தரும். அப்படி ஒரு வேலைஅ வர் தரவில்லை என்றால் வாகன உரிமையாளர்தான் தரவேண்டும்

விபத்து நடந்தவுடன் க்ளைம் பெற என்ன செய்ய வேண்டும்?

[list=]விபத்து நடந்ததை முதலில் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனக் கவனித்து அந்த எப்.ஐ.ஆர் ஐ பெற வேண்டும்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் எண், உரிமையாளர் பெயர், அவரது தொலைபேசி எண், இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பன போன்ற தகவல்களைத் திரட்ட வேண்டும். எஃப் . ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் அவர்களே இந்த விபரங்களைப் பெற்றுவிடுவார்கள். அவர்களிடம் இருந்தேபெற்றுக்கொள்ளலாம்.

விபத்து நடந்த இடத்தில் இரண்டு பேரை சாட்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய பெயர், முகவரி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விபத்தை பற்றி செய்திதாள்களில் வந்தால் அதனை சேகரித்துக் கொள்ளுங்கள்.

விபத்து நடத்தும் காவலர்கள் அந்த இடத்தை சாக்பீசால் வரைந்து இருப்பார்கள். அதனை போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்.

விபந்து நடந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தற்போதைய மற்றும் எதிர்கால வருமான இழப்புகள், மன உளைச்சல் , மருத்தவ செலவு(சிகிச்சைக்கான மருத்துவ பில்கள்) இதர செலவுகள் என அனைத்தையும் குறிப்பிட்டு க்ளைம் கேட்டு ட்ரிப்யூனலில் வழக்கு தொடர வேண்டும்.

விபத்து நடந்து எத்தனை வருடம் கழித்தும் க்ளைம் பெற விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் க்ளைமைப் பெற முடியும்.

நஷ்டஈட்டுத் தொகை எத்தனை லட்சங்கள் என்றாலும் பெற முடியும்.

வாகன விபத்து க்ளைம் ட்ரிப்யூனலில் மட்டுமே க்ளைம் பெற முடியும். அந்த ட்ரிப்யூனல் வழங்கும் தீர்ப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம்.

பாதிக்கப்பட்டவர் விபத்து காப்பிட்டு பாலிசி எடுத்திருந்தால், தேரட் பார்ட்டி இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் நஷ்டஈட்டுத் தொகையுடன் விபத்து காப்பிடு மூலம் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.

எனவே உங்களுக்காவது அல்லது வேறு யாருக்காவது விபத்து ஏற்பட்டால் இந்த அடிப்படை விஷயங்களையும் கொஞ்சம் கவனித்தில் வைத்து செயல்பட்டால், எதிர்காலத்தில் இழப்பீட்டைப் பெற எளிதாக இருக்கும்.
வரும் முன் சற்றே விழிப்புடன் இருந்து பெறுவோமே!

http://tamilvanigam.in/viewtopic.php?f=18&t=455

பென்ஸ்
20-07-2008, 12:03 AM
நன்றி செல்வமுரளி,

தேர்ட் பார்ட்டி இன்சுரன்ஸ் இந்தியாவில் சட்டபடி கண்டிப்பாக எல்லா வாகணங்களும் கொண்டிருக்கவேண்டியது.

ஆனால் அதை வைத்திருப்பவர்கள் எத்தனை..????
அதற்க்காகா காவலர் பிடித்தாலும் 50 ரூபாய் கொடுத்தால் போதும்... இல்லை சுமார் 1000 ரூபாய் கொடுத்து இன்சுரன்ஸ் வாங்கவேண்டும் என்ற எண்ணம்....எல்லாம் ஒரு விபத்து நடக்கும் வரை மட்டுமே...

முளு இன்சுரன்ஸ் பற்றியும் சொல்ல முடிந்தால்... கேட்க்க தயாராக இருக்கிறோம்.

சூரியன்
20-07-2008, 05:20 AM
மிகவும் உபயோகமான செய்தி நண்பரே.
இதைப்பற்றி இன்னும் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிவா.ஜி
20-07-2008, 05:36 AM
இது எல்லாம் செய்து விட்டு வழக்கு முடியும்வரைக் காத்திருக்க வேண்டும். வழக்கு குறைந்த பட்சம் மூன்று வருடங்கள், அதிக பட்சம் அடுத்த ஜென்மம் வரை நடக்கும். இதில் வழக்கு நடத்தும் வழக்குரைஞருக்கு பத்து சதவீதம் கட்டணமாகக் கொடுக்க வேண்டும்.

போலீஸாரையும் கவனிக்க வேண்டும். அழைக்கும்போதெல்லாம் நீதிமன்றம் போக வேண்டும். வழக்குரைஞர் அலுவலகத்துக்கு நாயாய் அலைய வேண்டும்.

அரசாங்க சான்றிதழ்கள் ஒவ்வொன்றையும் பெற அந்த அதிகாரிகளை கவனிக்க வேண்டும்.

இது எல்லாம் முடிந்து தீர்ப்பு சொல்வதற்கு முன், தீர்ப்பு சொல்லும் நீதிபதியை தனியாக கனமான கவருடன் கவனித்தால் நஷ்டஈட்டுத் தொகை அதிகமாகும்.

வெற்றி
26-07-2008, 04:29 AM
முளு இன்சுரன்ஸ் பற்றியும் சொல்ல முடிந்தால்... கேட்க்க தயாராக இருக்கிறோம்.
ஆர்வத்துக்கு நன்றி..ஆனால் காப்பீடு என்பது மிகப்பெரிய கடல் போன்றது..உங்கள் கேள்வி அடிப்படையில் தான் பதில் சொல்ல முடியும்...நான் ஒரு ஜென்ரல் இண்சுரண்ஸ் ஏஜெண்ட் என்ற முறை முடிந்த வரை விளக்கம் கொடுக்கிறேன்

முன்புதான் தேர்டு பார்ட்டி மற்றும் புள் இன்சூரண்ஸ் என்ற வார்த்தைகள் இருந்தது...
இப்போது மூன்றாம் நபர் காப்பீடை எந்த நிறுவனமும் தருவதில்லை காரணம் அதனால் வரும் கோரல்கள் (கிளைம்) அவர்களின் வருமனாத்தை விட அதிகம்மாக இருக்கிறது..
அதனால் மோட்டர் பாலிசிகள் முழு திட்டங்கள் தான்(விலக்காக ஒரு சிலருக்கு மட்டும் தரப்படும் அதாவது இவரால் கிளைம் வராது என்ற நம்பிக்கை அடிப்படையில் ) தரப்படும்

சரி முதலில் தேர்டு பார்ட்டி என்றால் என்ன என்று சொல்கிறேன்

காப்பீடும் என்பது ஒரு ஒப்பந்தம்
ஆகவே ஒப்பந்த சட்டத்தின் அனைத்து விதிகளும் இதற்க்குப்பொருந்தும்..
ஒரு ஒப்பந்தம் போட இருவர் தேவை
இதில்
முதல் நபர் : காப்பீடு வழங்குபவர்
இரண்டாம் நபர் : காப்பீடு பெருபவர்
மூன்றாம் நபர் : இந்த இருவர் அல்லாத அனைவரும்

காப்பீடு பெறுபவர் அவருடைய வாகனத்துக்கு மட்டும் தான் காப்பீடு செய்கிறார் .....(முழு இன்சூரண்சில் அவரும் சேர்த்து என ஒரு வாக்கியம் வரும் அது அனைத்து சமயமும் ஒத்து வராது உதரணமாக காப்பீடு செய்தவர் வாகனவிபத்தில் உயிர் இழந்தால் அவருக்கு வாகன முழு காப்பீடு செய்து இருந்தாலும் அவரின் இறப்புக்கு பணம் கிடைக்காது ,,,ஏனெனில் அது ஒரு ஒப்பந்தம் ஆகையால் ஒரு ஒப்பந்ததாரர் இறந்த உடன் அந்த ஒப்பந்தம் நிறைவுக்கு வந்து விடும் )
அவர் பெரும் தொகை = 0
ஆனால் அதே சமயம் அவரின் பின் சீட்டில் இருந்த நபரும் இறந்து இருந்தால் முழுபாலிசி எடுத்து இருந்தால் அவருக்கு வாகண காப்பீட்டு தொகை கிடைக்கும்
இவர் பெறும் தொகை = அதிக பட்சம் 1 லட்சம் ரூபாய் மட்டுமே
அதேசமயம் அந்த வாகனம் மோதி வேறு ஒரு நபர் இறந்து இருந்தால் அவருக்கு கொடுக்கபடுவது தான் தேர்டு பார்ட்டி கிளைம்...(இது தான் அதிக அளவில் கொடுக்கபடும் கிளைம்)

இவர் பெரும் தொகை = வானமே எல்லை ( அதிக பட்ச அளவு கிடையாது)
இனி சந்தேகம் கேளுங்கள் பதில் சொல்கிறேன்

இளந்தமிழ்ச்செல்வன்
07-08-2008, 08:30 PM
மிக்க நன்றி நண்பரே. மிகவும் பயனுள்ள பதிவு.

namsec
16-08-2008, 02:23 PM
இன்சுரன்ஸ் பற்றி தெளிவான விளக்கங்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி !

அறிஞர்
16-08-2008, 05:15 PM
நம்ம ஊரில் வெளியே சென்று பத்திரமாக திரும்புவதே பெரிய விசயம்.

இது மாதிரி நல்ல விசயங்கள் பலருக்கு பயன் தரும்.

அமரன்
16-08-2008, 05:18 PM
தாயக உறவுகளுக்கு மிகவும் உபயோகமான பதிவு. தொடுத்த முரளிக்கும் தொடர்ந்த தோழர்களுக்கும் உளமார்ந்த நன்றி.