PDA

View Full Version : ஓரெழுத்து ஒரு மொழி



பாரதி
19-07-2008, 01:28 PM
அன்பு நண்பர்களே,

சமீபத்தில் மின்னஞ்சலில் கீழ்க்கண்ட விபரங்கள் அடங்கிய மின்னூல் கிடைக்கப்பெற்றேன். இதில் தரப்பட்டுள்ளவை சரியானவையா? இதில் ஏதும் விடுபட்டிருக்கிறதா..? அல்லது திருத்தங்கள் தேவையா என்பதைக் கூறுங்களேன். இதில் உள்ள சிலவற்றின் பொருள் நான் அறிந்திராதவை. இதைக்குறித்து மேலும் அறிந்தவர்கள் விளக்கினால் மகிழ்வேன். நன்றி.

-----------------------------------------------------------

தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. இவ்வகைச் சொற்களுக்கு ஓரெழுத்து ஒரு மொழி என்று பெயர். தமிழில் மொத்தம் 246 எழுத்துக்களில் 53 எழுத்துக்களுக்கு தனியே பொருள் உண்டு. அந்த 53 எழுத்துக்களின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் பின் வருமாறு:

1. உயிர் இனம் 9
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ

அ- ஆறாம் வேற்றுமை உருபிடைச்சொல், சாரியை இடைச்சொல்
ஆ - பசு, எருது, ஆச்சா மரம்
இ- சாந்தம், சுட்டிடைச்சொல்
ஈ - பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
உ- சுட்டு
ஊ - இறைச்சி, உணவு, விகுதி.
ஏ - அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு
ஐ - அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்
ஓ - சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை

2. ம இனம் 6
மா, மீ, மு, மே, மை, மோ

மா - பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ - மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு
மூ - மூப்பு (முதுமை), மூன்று
மே - மேல், மேன்மை
மை - கண்மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்.
மோ - முகர்தல்

3. த இனம் 5
தா, தீ, தூ, தே, தை

தா - கொடு, குறை, கேடு, குற்றம், பகை
தீ - நெருப்பு, இனிமை, அறிவு, இடம்
தூ - வெண்மை, இறைச்சி, பறவை இறகு
தே - கடவுள்
தை - தமிழ்மாதம், தையல், திங்கள்

4. ப இனம் 6
பா, பீ, பூ, பே, பை, போ

பா - அழகு, பாட்டு, நிழல்
பீ - பவ்வீ
பூ - மலர், சூதகம்
பே - அச்சம், நுரை, வேகம்
பை - கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை
போ - செல்

5. ந இனம் 7
ந, நா, நி, நீ,நே,நை,நோ
ந - இன்மை, அன்மை

நா - நாக்கு, தீயின் சுவாலை
நி - செலுத்தலென்னும் பொருட்டு
நீ - நீ
நை - வருந்து, இகழ்ச்சி
நோ - நோவு, துன்பம், வலி

6. க இனம் 7
க, கா, கீ, கு, கூ, கை, கோ
க - வான், பிரமன், தலை

கா - சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்
கீ - கிளிக்குரல்
கு - பூவுலகு
கூ - பூமி, ஏவல், கூழ், கூவு
கை - உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்
கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

7. வ இனம் 4
வா,வீ,வை,வெ

வா - வருகை
வீ - மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு
வை - வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்
வெ- வவ்வுதல் அல்லாது கெவ்வுதல் (ஒலிக்குறிப்பு)...(??)

8. ச இனம் 6
ச, சா, சீ, சு, சே, சோ

ச - கூடிய
சா - சாதல், சோர்தல், பேய், மரணம்
சீ - வெறுப்புச்சொல் அல்லது நீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை
சு - நன்மை
சே - சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்
சோ - மதில், அரண்

9. யா - 1

யா - ஒரு வகை மரம், யாவை, அசைச்சொல்


10. நொ -1

நொ - வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு


11. து-1

து - உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்

ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 53 ஆகும்.


நன்றி:
1. மின்னூல் தயாரித்த பெயரில்லா நண்பர்
2. குணமதி

இளசு
19-07-2008, 01:39 PM
ஆ!
நல்ல பதிவு .. நன்றி பாரதி!

பல சொற்கள், பொருட்கள் -புதிது, கற்றேன்..

தூ - உமிழ்தலைக் குறிக்க பயன்படுத்துகிறோம்.

பை - Bye
யா - yaar (யெஸ் யா(ர்) என்பதே கல்லூரிப் பெண்களின் முத்திரை..)
நோ - No

-இப்படி ஆங்கிலத்தமிழ் ஓரெழுத்துச் சொற்கள் இப்போது நிரவி இருக்கின்றன..

செல்வா
19-07-2008, 01:41 PM
இவ்வளவு இருக்கா........!!!
பகிர்தலுக்கு மிக்க நன்றி அண்ணா.....
தமிழ் மன்றத்திற்கு மிகவும் தேவையான ஒன்று...

பூமகள்
19-07-2008, 05:47 PM
சின்ன வயதில் படித்த நினைவு...!!

இலக்கணப் பாடங்கள் மீண்டும் நினைவுக்கு வருகின்றன பாரதி அண்ணா...

இங்கு பெரியண்ணாவும் பாரதியண்ணாவும் சேர்ந்து பாடமே நடத்தியிருக்கிறீர்கள்..

மிக அவசியமான கட்டுரை..
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பாரதி அண்ணா. :)

tamilambu
19-07-2008, 05:53 PM
அருமையானதும் பயனுள்ளதுமான பதிவு.
நான் நினைக்கிறேன், இந்த மாதிரியான சிறப்பியல்பு தமிழுக்கு மட்டுமே உண்டு. அதாவது இவ்வளவு நிறைய தனி எழுத்துக்களும் அந்த எழுத்துக்களுக்கு இவ்வளவு அர்த்தங்களும்.
ஆச்சரியம்தான்.

rajatemp
10-10-2008, 09:34 AM
நிச்சயமாக தமிழ் தனிமொழிதான்

leomohan
10-10-2008, 10:43 AM
பயனுள்ள பதிவு. நன்றி பாரதி.

குணமதி
03-12-2009, 02:33 PM
42 - உடன்




கு
கீ

சு

நி
து
பீ
- ஆகிய பன்னிரண்டையும் சேர்த்துக் கொள்க.

இன்னும் கூட இருக்கலாம் என்ற ஐயம் இருக்கிறது. பிறகு உறுதி செய்கிறேன்.

இளசு
03-12-2009, 07:06 PM
சேர்ப்புக்கு நன்றி குணமதி..

நீங்கள் தந்த 12க்கும் பொருள் அறியத் தர வேண்டுகிறேன். நன்றி!

பாரதி
04-12-2009, 01:27 PM
மிக்க நன்றி குணமதி.
அண்ணா கூறியதை நான் வழிமொழிகிறேன்.
பொருளை அறிய காத்திருக்கிறேன்.

குணமதி
04-12-2009, 01:41 PM
அ- ஆறாம் வேற்றுமை உருபிடைச்சொல், சாரியை இடைச்சொல்

இ- சாந்தம், சுட்டிடைச்சொல்

உ- சுட்டு

க- வான், பிரமன், தலை

கு- பூவுலகு

கீ- கிளிக்குரல்

ச- கூடிய

சு- நன்மை

ந- இன்மை, அன்மை

நி- செலுத்தலென்னும் பொருட்டு

பீ- பவ்வீ

இவற்றை அகராதியில் திரட்டினேன்.

'து' - உங்கள் பட்டியலில் கீழே உள்ளது.

நன்றி.

பாரதி
04-12-2009, 02:31 PM
நன்றி நண்பரே.
நீங்கள் கொடுத்த தகவல்களை திரியில் இணைத்து விட்டேன்.

குணமதி
04-12-2009, 04:42 PM
நன்றி நண்பரே.
நீங்கள் கொடுத்த தகவல்களை திரியில் இணைத்து விட்டேன்.

நன்றி.

அனுராகவன்
11-08-2012, 01:32 AM
நன்றி நண்பரே....

A Thainis
05-09-2012, 06:16 PM
ஓர் எழுத்து மொழியில் தமிழின் சிறப்பு கண்டு வியந்தேன், அருமையான பதிப்பு பாரதிக்கு என் மதிப்பு.