PDA

View Full Version : கடவுளும் கல்யாணியும்

மதுரை மைந்தன்
18-07-2008, 03:11 PM
கல்யாணி ஒரு கல்லூரி மாணவி. அவளும் அவளது தோழிகளான கௌரி சரசுவதி மீனா ஆகியோர் ஒரு குறும்புக்கார படடாளம். கல்யாணிக்கு சற்று குறும்பு அதிகம். தெருவில் எதிர்ப்படும் பையன்களிடம் " உன்னோட ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு. அசப்பிலே சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்கே" என்பாள். அவர்களும் கூச்சத்துடன் தாங்ஸ் சொல்வார்கள். ஆனால் கல்யாணி தொடர்வாள் " வீட்டுக்குப்போய் நல்லா குளி. ஒரே கப் அடிக்குது". இதைக்கேட்டு தோழிகள் கொல் என்று சிரிப்பார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் பக்கத்து அம்மன் கோயிலுக்கு அவர்கள் தவறாமல் செல்வார்கள். கல்யாணிக்கு அம்மன் மீது பக்தி அதிகம். அன்றும் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து பிராசாத தட்டுக்களுடன் அர்ச்சகர் அவற்றை விநியோகம் செய்தார். விபூதி குங்குமம் இவைகளுடன் பொட்டுக்கடலையை பிராசதமாக அவர் கொடுத்ததை வாங்கிக் கொண்டு கௌரி சூள் கொட்டினாள். என்ன ஆயிற்று என்று அவளிடம் கல்யாணி கேட்டதற்கு அவள் சொன்னாள் " எப்போதும் பொட்டுக்கடலை தான் பிரசாதமா? ஒரு சுண்டல் இல்லை சர்க்கரைப் பொங்கலை ஏன் பிரசாதமாக கொடுக்கக் கூடாது?".

கல்யாணி யோசித்தாள். கௌரியிடம் " உனக்கு சர்க்ரைப் பொங்கல் தானே வேணும். இதோ ஏற்பாடு பண்றேன்" என்று சொல்லி விட்டு தோழிகளின் காதில் ஏதோ கூறினாள். பிறகு அவள் தன் தலையை அவிழ்த்து விட்டுக் கொண்டு லோசாக ஆடத்துவங்கினாள். சிறுது சிறுதாக பக்தர்கள் அவர்களை சூழத் தொடங்கினார்கள். இந்தப் பொண்ணுக்கு சாமி வந்திருக்கு என்று பேசிக் கொண்டார்கள். கூட்டம் சேர சேர கல்யாணியின் ஆட்டம் பெரிதாயிற்று. தோழிகள் அவளைத் தாங்கி பிடித்தனர்.

பக்கத்து கிராமத்திலிருந்த வந்திருந்த ஒரு விவசாயியின் குடும்பம் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து கல்யாணியின் காலடியில் விழுந்தனர். மூத்த விவசாயி துண்டை கக்கத்தில் வைத்துக் கொண்டு இரு கரங்களையும் கூப்பி " ஆத்தா என் கஷ்டங்களை எல்லாம் நீக்கு. இரண்டு வருசமா விளைச்சல் சரி இல்லை. கடன் வாங்கி அதை திருப்பி தர முடியாம தத்தளிக்கிறேன்" என்றார்.

அது வரை கண்ணை மூடிக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த கல்யாணி கண்ணைத் திறந்து " பக்தா உன் கஷ்டங்களை நான் அறிவேன். அவைகளை நிவர்த்திக்க வேண்டுமானால் நீ எனக்கு சர்க்கரை பொங்கல் படையல் போட வேண்டும். அப்படி செய்தால் அரசாங்கத்திடம் சொல்லி உன் கடன்களை தள்ளுபடி செய்ய வைப்பேன்" என்று சொல்லி விட்டு ஆட்டத்தை தொடர்ந்தாள். (அன்று காலையில் தான் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வந்த செய்தியை கல்யாணி படித்திருந்தாள். ஏழை விவசாயிக்கு அந்த செய்தி தெரியாது).

மூத்த விவசாயி " ஆத்தா அப்படியே செய்யறேன்" என்று சொல்லி தன்னிடமிருந்த பணத்தை திரட்டி மனைவியிடம் கொடுத்தார். மனைவி தனது மகனிடம் வேண்டிய பொருடகளை வாங்க லிஸ்ட் கொடுத்தனுப்பினாள். சிறுது நேரத்தில் இரண்டு செங்கல்களை அடுப்பாகவும் சிறு சுள்ளிகளை விறகாகவும் கொண்ட அடுப்பில் மீது ஒரு மண் பானையில் சர்க்ரைப் பொங்கல் கொதிக்கத் தொடங்கியது.

ஒரு இலையில் சர்க்கரைப் பொங்கலை வைத்து அதன் நடுவில் கர்ப்பூரத்தை ஏற்றி விவசாயியின் மனைவி அம்மனுக்கும் கல்யாணிக்கும் காட்டினாள். பிறகு ஆடிக்கொண்டிருந்த கல்யாணிக்கு சிறுது சர்க்கரைப் பொங்கலை ஊட்டினாள். தோழிகளுக்கும் சர்க்ரைப் பொங்கல் விநியோகம் செய்தாள். அந்த சமயத்தில் அங்கு வந்த பக்தர் ஒருவரிடமிருந்த தினத் தந்தி பேப்பரின் கொட்டை எழுத்து தலைப்புச் செய்தியான ' விவசியிகளின் கடன்கள் தள்ளுபடி' எனபதை படித்த மூத்த விவசாயி மிகுந்த உணர்ச்சி வயப்பட்டவராய் கல்யாணியின் காலில் விழுந்து அழுத வண்ணம் " ஆத்தா உன் மகிமையே மகிமை. என்னோட படையலை ஏற்று கடன்களை தள்ளுபடி செய்ய வைத்தாயே " என்று புலம்பினார்.

கல்யாணி சிறுது சிறுதாக ஆட்டத்தை நிறுத்தி மயக்கம் வந்தவள் போல் விழுந்தாள். பிறகு கண் முழித்து " நான் எங்கே இருக்கிறேன். எனக்கு என்ன ஆச்சு" என்றாள். விவசாயியின் மனைவி " அம்மா உன் மேல ஆத்தா வந்து எங்களுக்கு அருள் பண்ணினாள்" எனறாள். கல்யாணி ஒன்றும் புரியாதவள் போல முழிக்க தோழிகள் அவளிடம் " வா வீட்டுக்கு போகலாம். போகும் வழியில் நாங்கள் சொல்றோம்" என்று வெளியில் சென்றார்கள்.

கோயிலை விட்டு வெளியில் வந்தவுடன் கௌரி கல்யாணிடம் " உன்னோட நடிப்பு பிரமாதம். சர்க்கரைப் பொங்கலுக்கு தாங்ஸ்" என்றாள். அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

அன்று இரவு கல்யாணி முன் அம்மன் தோன்றினாள். முதலில் கல்யாணி அம்மன் தான் ஒரு ஏழை விவசாயியை ஏமாற்றியதற்கு கோபம் கொள்வாளோ என்று பயந்தாள். ஆனால் அம்மன் சிரித்துக் கொண்டே " கல்யாணி உனது விளையாட்டுத்தனத்திலும் ஒரு நன்மை விளைந்திருக்கிறது. அந்த ஏழை விவசாயி கடன் தொல்லை தாங்காமல் என்னை தரிசித்தபின் குடும்பத்துடன் தற்கொலை செய்யவிருந்தான். ஆனால் உன்னுடய விளையாட்டின் மூலம் கடன்கள் தள்ளுபடி ஆனதை அறிந்து மகிழ்ச்சியுடன் சென்றிருக்கிறான்" என்று சொல்லி மறைந்தாள்.

ராஜா
22-07-2012, 11:31 AM
சக்கரைப் பொங்கல் வச்சு முடிக்கறவரைக்குமா ஆத்தா ஆடுச்சு..? என்று கிண்டலாக நினைத்துக்கொண்டே படித்தபோது, நிறைவில் வந்த நிஜ ஆத்தா ட்விஸ்ட் பொட்டில் அறைந்தது..

மிக அருமை அண்ணா..!

உங்களுக்குள் இருக்கும் இயல்பான திறமைக்கு தலைவணங்குகிறேன்..

மதுரை மைந்தன்
22-07-2012, 11:51 AM

இந்த கதையை நானே மறந்துவிட்டேன். மன்றத்திலும் இந்த கதைக்கு ( இந்த கதைக்கு மட்டுமில்லை) பொதுவாக எனது கதைகளுக்கு அதிக வரவேற்போ பின்னூட்டங்களோ இருந்ததில்லை. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் பல நாட்களாக மன்றத்தில் பதிவிடுவதை நிறுத்தியிருந்தேன். ஆனால் சமீபத்தில் சகோதரி கீதம், அன்பு ரசிகன் போன்ற நண்பர்களின் ஆதரவால் பதிவுகளை ஆரம்பித்தேன். இப்போது உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு புத்துயிரை அளிக்கிறது. மிக்க நன்றி ராஜா அய்யா!

கீதம்
22-07-2012, 01:22 PM
நம்பிக்கையே சிலருக்கு வாழ்வதற்கான பிடிப்பை உண்டாக்குகிறது, சில சமயம் போலியாக இருந்தாலும்.

சாமியார்களை நாடும் கூட்டத்துக்கும் காரணம் அதுதானே... தற்காலிக மன நிம்மதி, பரிகாரத்தின் மூலம் குற்றங்களும் தவறுகளும் சரிசெய்யப்படுமென்னும் உத்திரவாதம், கடவுளுக்கும் தனக்கும் இடையில் தகவற்பரிமாற்றத்துக்கான ஊடகம்...

இவை போன்று ஏதோ ஒருவிதத்தில் தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்நோக்கியிருக்கும், இக்கதையில் வரும் பாமர மக்களுக்கு பக்தியின் அடிப்படையில் ஊட்டப்படும் நம்பிக்கை அவர்களுடைய வாழ்க்கையையே மீட்டுத்தருகிறது. அதற்கு கல்யாணியின் சமயோசிதமும் அவர்களது அறியாமையும் துணைபுரிகின்றன. தவறு செய்துவிட்டோமே என்னும் கல்யாணியின் குற்றவுணர்வு கனவில் வரும் கடவுளால் சமாதானப்படுத்தப்படுகிறது.

மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அழகான கதை. பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா. என்னுடைய பின்னூட்டங்கள் உங்களுக்கு ஊக்கம் தருவதாகக் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

கலைவேந்தன்
22-07-2012, 03:42 PM
அருள் வாக்கு சொல்பவர்களின் பலமே பாஸிட்டிவ் அப்ரோச் தான். சாமியாடிகள் பல நேரம் தம்மை அறியாமலேயே நன்மை செய்துவிடுவதுண்டு.

கல்யாணியின் செயல் விளையாட்டாய் இருந்தாலும் அம்மன் வந்து இரவில் சொன்னது கற்பனையே என்றாலும் ஒருவகையில் நம்பிக்கை இழந்திருந்த விவசாயி குடும்பத்தின் வாழ்வை மீட்டுத்தந்த விளையாட்டு.

அழகான கதைகள் எழுதுகிறீர்கள் மதுரை அண்ணா.. இருந்தும் வரவேற்பின்மை எங்குமே தவிர்க்க இயலாதது. உங்களுக்கு மட்டுமென்றில்லை. எனக்கும் இன்னும் பல கதையாசிரியர்களுக்கும் இதே நிலைதான்.

எழுதியவரைப் பார்க்காமல் எழுத்தைப்பார்த்தால் இந்நிலை மாறக்கூடும்.

நம்பிக்கை தானே வாழ்க்கை.

சிறுகதைத் தளமொன்று இருக்கின்றது அண்ணா.. அங்கே தங்கள் கதைகளை அனுப்புங்கள். பல வாசகர்களைக் கொண்டது. எனது கதைகள் கூட நான்கு வெளியாகி உள்ளன.

jayanth
22-07-2012, 05:38 PM
இந்த கதையை நானே மறந்துவிட்டேன். மன்றத்திலும் இந்த கதைக்கு ( இந்த கதைக்கு மட்டுமில்லை) பொதுவாக எனது கதைகளுக்கு அதிக வரவேற்போ பின்னூட்டங்களோ இருந்ததில்லை. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் பல நாட்களாக மன்றத்தில் பதிவிடுவதை நிறுத்தியிருந்தேன். ஆனால் சமீபத்தில் சகோதரி கீதம், அன்பு ரசிகன் போன்ற நண்பர்களின் ஆதரவால் பதிவுகளை ஆரம்பித்தேன். இப்போது உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு புத்துயிரை அளிக்கிறது. மிக்க நன்றி ராஜா அய்யா!

மன்னிக்கவும் மைந்தரே...உங்களுடைய கதைகள் அனைத்தையும் படித்து அனைத்துக் கதைகளுக்கும் பின்னூட்டம் இட்டிருகின்றேன்...!!!
.
.
.
.
இந்தக் கதையும் சூப்பர் போங்கள்...!!!

கலைவேந்தன்
22-07-2012, 05:50 PM
உண்மைதான் ஜெயந்த். நீங்கள் என் கதைகளையும் தவறாமல் வாசித்து பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் பெருந்தன்மை மிக்கவர் என்பதில் ஐயமில்லை.

ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புகள் சீர்தூக்கி அலசப்படுகின்றபோது எழும் கர்வத்துக்கு ஈடேதும் இல்லை. கோடிக்கணக்கில் கொட்டிக்கிடைத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி அது.

அந்த வகையில் நீங்கள் மிகவும் போற்றத்தக்கவர் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

மதுரை மைந்தன்
23-07-2012, 10:17 AM
நம்பிக்கையே சிலருக்கு வாழ்வதற்கான பிடிப்பை உண்டாக்குகிறது, சில சமயம் போலியாக இருந்தாலும்.

சாமியார்களை நாடும் கூட்டத்துக்கும் காரணம் அதுதானே... தற்காலிக மன நிம்மதி, பரிகாரத்தின் மூலம் குற்றங்களும் தவறுகளும் சரிசெய்யப்படுமென்னும் உத்திரவாதம், கடவுளுக்கும் தனக்கும் இடையில் தகவற்பரிமாற்றத்துக்கான ஊடகம்...

இவை போன்று ஏதோ ஒருவிதத்தில் தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்நோக்கியிருக்கும், இக்கதையில் வரும் பாமர மக்களுக்கு பக்தியின் அடிப்படையில் ஊட்டப்படும் நம்பிக்கை அவர்களுடைய வாழ்க்கையையே மீட்டுத்தருகிறது. அதற்கு கல்யாணியின் சமயோசிதமும் அவர்களது அறியாமையும் துணைபுரிகின்றன. தவறு செய்துவிட்டோமே என்னும் கல்யாணியின் குற்றவுணர்வு கனவில் வரும் கடவுளால் சமாதானப்படுத்தப்படுகிறது.

மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அழகான கதை. பாராட்டுகள் மதுரை மைந்தன் அண்ணா. என்னுடைய பின்னூட்டங்கள் உங்களுக்கு ஊக்கம் தருவதாகக் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

சிறந்த எழுத்தாளரான நீங்கள் உங்களுடைய படைப்புகளுக்கு அதிகம் நான் பின்னூட்டங்கள் இடாவிட்டாலும் பெருந்தன்மையுடன் எனது கதைகளுக்கு விடாமல் பின்னூட்டங்கள் இட்டு வரும் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நன்றி சகோதரி!

மதுரை மைந்தன்
23-07-2012, 10:19 AM
அருள் வாக்கு சொல்பவர்களின் பலமே பாஸிட்டிவ் அப்ரோச் தான். சாமியாடிகள் பல நேரம் தம்மை அறியாமலேயே நன்மை செய்துவிடுவதுண்டு.

கல்யாணியின் செயல் விளையாட்டாய் இருந்தாலும் அம்மன் வந்து இரவில் சொன்னது கற்பனையே என்றாலும் ஒருவகையில் நம்பிக்கை இழந்திருந்த விவசாயி குடும்பத்தின் வாழ்வை மீட்டுத்தந்த விளையாட்டு.

அழகான கதைகள் எழுதுகிறீர்கள் மதுரை அண்ணா.. இருந்தும் வரவேற்பின்மை எங்குமே தவிர்க்க இயலாதது. உங்களுக்கு மட்டுமென்றில்லை. எனக்கும் இன்னும் பல கதையாசிரியர்களுக்கும் இதே நிலைதான்.

எழுதியவரைப் பார்க்காமல் எழுத்தைப்பார்த்தால் இந்நிலை மாறக்கூடும்.

நம்பிக்கை தானே வாழ்க்கை.

சிறுகதைத் தளமொன்று இருக்கின்றது அண்ணா.. அங்கே தங்கள் கதைகளை அனுப்புங்கள். பல வாசகர்களைக் கொண்டது. எனது கதைகள் கூட நான்கு வெளியாகி உள்ளன.

சிறுகதைகளின் தளத்தைப் பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி கலை வேந்தரே!

மதுரை மைந்தன்
23-07-2012, 10:26 AM
மன்னிக்கவும் மைந்தரே...உங்களுடைய கதைகள் அனைத்தையும் படித்து அனைத்துக் கதைகளுக்கும் பின்னூட்டம் இட்டிருகின்றேன்...!!!
.
.
.
.
இந்தக் கதையும் சூப்பர் போங்கள்...!!!

உங்கள் பாராட்டுக்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!.

நான் இங்கு குறிப்பிடது ஜூன் மாதம் 17ம் தேதி 2008ம் ஆண்டு பதிவான இந்த கதைக்கு நேற்று தான் நான்கு வருடங்கள் கழித்து ராஜா அய்யாவின் முதல் பின்னூட்டம் பதிவாகியிருக்கிறது என்பதை தான். இது போல் எனது சில கதைகளுக்கு அந்த கால கட்டத்தில் மன்றத்தில் பின்னூட்டங்கள் குறைவாகவோ பின்னூட்டங்களே இல்லாமல் போனது உண்டு. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல ஒரு சில உறுப்பினர்கள் எனது கதைகளை குறை கூறியதும் உண்டு.

கீதம்
24-07-2012, 02:58 AM
சிறந்த எழுத்தாளரான நீங்கள் உங்களுடைய படைப்புகளுக்கு அதிகம் நான் பின்னூட்டங்கள் இடாவிட்டாலும் பெருந்தன்மையுடன் எனது கதைகளுக்கு விடாமல் பின்னூட்டங்கள் இட்டு வரும் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நன்றி சகோதரி!

மொய் வைக்கும் சமாச்சாரமா இது? நீங்கள் பின்னூட்டமிட்டால்தான் நானும் பின்னூட்டமிடுவேன் என்பதற்கு? மேலும் என்னுடைய பல பதிவுகளுக்கு நீங்கள் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இதில் பெருந்தன்மை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை அண்ணா. சில படைப்புகளைப் படித்தவுடனேயே அதன் நிறை குறை பற்றி ஏதேனும் குறிப்பிடத் தோன்றும். சிலவற்றுக்கு உடனே எதுவும் தோன்றாது. சிலநாள் மனதில் அசைபோட்டபடியே இருப்பேன். சொல்லவந்த கருத்து முழுமை பெற்றவுடன் கருத்திடுவேன். அப்படி எதுவும் தோன்றவில்லையெனில் வரும்வரை காத்திருப்பேன். அவ்வளவுதான்.

ஒரு படைப்பாளிக்கு பின்னூட்டங்களே எழுதுவதற்கான ஊக்கத்தை அளிக்கின்றன என்பது எத்தனை உண்மையோ, அதே அளவு உண்மை பின்னூட்டங்களும் கவனிக்கப்படுகின்றன என்னும்போது எழும் உணர்வு. என்னுடைய படைப்பின் சாரம் குறைந்துவிட்ட இவ்வேளையில் பின்னூட்டங்களால் மன்றத்தில் மகிழ்வோடு வலம் வருகிறேன். உங்களுடைய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி. நல்ல கதாசிரியர் நீங்கள். தொடர்ந்து எழுதினால் அனைவரும் மகிழ்வோம்.

கலைவேந்தன்
24-07-2012, 01:04 PM
நான் ஆறுதல் கொள்வது என்ன என்றால் இன்றைய நமது படைப்புகள் சமகாலத்தில் பாராட்டப்படவில்லை என்றாலும் பிற்காலத்தில் வரும் தலைமுறைகளால் பாராட்டப்படும் என்பது தான். நாம் அப்போது அந்த இன்பத்தைப் பெற வியலாமல் உலகை விட்டு மறைந்துவிட்டாலும் காலம் காலமாய்ப் பேசப்படும் பெருமை கண்டிப்பாக உண்டு.

பாரதியார் இருந்த காலத்தில் அவரது கவிதைகள் அத்தனை சிலாகிக்கப்படவில்லை. தேசிய எழுச்சி கீதங்கள் மட்டுமே அப்போதைய மக்களின் உண்ர்வைப் பிரதிபலிப்பதாக இருந்தமையால் அவை மட்டுமே மூலை முடுக்கெங்கிலும் பாடப்பட்டன.

பிற பாரதியார் கவிதைகளும் புதுக்கவிதையில் அவர் கையாண்ட பல உத்திகளும் பிற்காலத்தில் தான் பெரிதும் பேசப்பட்டன.

நமது படைப்புகளும் அவ்விதம் ஜீவன் கொண்டிருந்தால் இன்றைய மக்களின் பார்வையில் படாவிட்டாலும் பின்னாளில் பேசப்படலாம்.

பொதுவாக பாராட்டப்படுவதால் எழும் வினோதங்களை ’’ பாராட்டப்படும்போது ’’என்ற கவிதையில் நான் எழுதியதை இந்த நேரத்தில் நினைவு கூராமல் இருக்க இயலவில்லை.

அனைத்து உறுப்பினர்களும் தமர் பிறர் எனும் பேதம் விடுத்து படைப்புகளை மட்டுமே பார்த்து நிறை குறைகளை அலசுவது ஆரோக்கியமான தளத்திற்கு அடையாளம் என்பதில் இருகருத்தில்லை.

Keelai Naadaan
29-07-2012, 01:47 PM
கதை ரசித்து படிக்கும்படி இருக்கிறது.

நமது படைப்புகளும் அவ்விதம் ஜீவன் கொண்டிருந்தால் இன்றைய மக்களின் பார்வையில் படாவிட்டாலும் பின்னாளில் பேசப்படலாம்.

இதையே நானும் வழிமொழிகிறேன்.