PDA

View Full Version : ஒரு பெண் ஒரு பையனிடம் என்ன எதிர்பார்க்கிறாள்

மதுரை மைந்தன்
18-07-2008, 12:05 AM
இணைய தளத்தில் வெளியான ஒரு பதிவிலிருந்து:

1. பையனுக்கு நகைச் சுவை உணர்வு இருக்கணும். ஆனால் கோமாளியா இருக்கக் கூடாது.

உதாரணமாக

பையன் : நீங்க கோழிக் கறி சாப்பிடுவீங்களா?
பெண்: இல்லை நான் வெஜிடேரியன்
பையன்: அப்ப நீங்க மட்டனும் சாப்பிட மாட்டீங்க?
பெண்: !!!!

2. பையன் அறிவாளியாகவும் புத்தி கூர்மை உள்ளவனாகவும் இருக்க வேண்டும். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் அதில் அறிவு பூர்வமாகவும் தர்க்க ரீதியிலும் உரையாட தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக ஷேவிங் பிளேட்டின் விளம்பரத்தில் பிக்னி அணிந்த மங்கை ஏன் வர வேண்டும் என்று அலச வேண்டும்.

3. பையன் எடுப்பாக இருக்க வேண்டும். அழகாக இருக்கத் தேவையில்லை. ஆனால் வசீகரமாக இருக்க வேண்டும். எந்தப் பையனிடமும் எனக்குப் பிடிக்காதவை மூன்று.

1.. வாய் தர்நாற்றம்
2. உடம்பிலிருந்து கெட்ட வாசனை
3. மோசமான நகைச்சுவை உணர்வு

4. பையனுக்கு உறவுகளை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். " நாம் நண்பர்களாக இருப்போம்" என்று சொல்லி விட்டு இடுப்பில் கை போடக் கூடாது. தான் எடுக்கும் தீர் மானங்களில் திடமாக இருக்க வேண்டும். உள்ளாடைகளை மாற்றுவது போல மதற்றக் கூடாது.

5. பையன் உலக அறிவு உள்ளவனாகவும் பரந்த மனப்பான்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும். ஆனால் இப்படி இருக்கக் கூடாது.

பையன்: நீ நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டாயா?
பெண்: இல்லை
பையன்: ஏன்?
பெண்: அது அப்படித் தான்
பையன்: ஆனால் நீ ஒரு இந்துப் பெண். ஆகவே பொட்டு வைத்துக்
கொள்ள வேண்டும்

பெண் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்

6. பையன் நெடுந்தூர கார் சவாரி டின்னருக்கான அழைப்பு இவைகள் மூலம் காதலிக்க தெரிஞ்சிருக்க வேண்டும். பையனுக்கு எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய மூன்று நாட்கள்:

1. பெண்ணின் பிறந்த நாள்
2. பெண்ணின் பிறந்த நாள்
3. பெண்ணின் பிறந்த நாள்

7. பையன் எனது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு கோபம் வந்தால் நான் கத்துவதில்லை. மௌனமாக ஒதுங்கி விடுவேன். இதை அவன் புரிந்து கொள்ள வேண்டும்.

8. கடைசியாக பையன் என் தந்தையைப் பொல் இருக்க வேண்டும். ஏனெனில் நான் சந்தித்த ஆண்களில் என் தந்தையே தலை சிறந்தவர்.

ஓவியா
18-07-2008, 01:01 AM

ஆனாலும் இது ரொம்பவே உண்மை, சில பசங்கள பார்த்தாலே தெரியும் கோமாளி'ஸ்னு, பாவம் நல்ல பசங்க சூது--வாது தெரியாது'னு ரேகிங் பண்ணாம விட்டு விடுவோம். :lachen001::lachen001:

2. பையன் அறிவாளியாகவும் புத்தி கூர்மை உள்ளவனாகவும் இருக்க வேண்டும். எந்த தலைப்பைக் கொடுத்தாலும் அதில் அறிவு பூர்வமாகவும் தர்க்க ரீதியிலும் உரையாட தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக ஷேவிங் பிளேட்டின் விளம்பரத்தில் பிக்னி அணிந்த மங்கை ஏன் வர வேண்டும் என்று அலச வேண்டும்.

உண்மையிலே நல்லா சிரித்தேன். ஆனால் நிஜத்தில் பையன் அந்த பிகினி மங்கையை நினைத்துக்கொண்டே கனவில் ஷேவிங் செய்வது :D:D

3. பையன் எடுப்பாக இருக்க வேண்டும். அழகாக இருக்கத் தேவையில்லை. ஆனால் வசீகரமாக இருக்க வேண்டும். எந்தப் பையனிடமும் எனக்குப் பிடிக்காதவை மூன்று.

1.. வாய் தர்நாற்றம்
2. உடம்பிலிருந்து கெட்ட வாசனை
3. மோசமான நகைச்சுவை உணர்வு

100% உண்மை, பெண்கள் சுத்தமா இருக்காங்களோ இல்லையோ பையன் சுத்தமா இருக்க வேண்டும். அட் லீஸ்ட் அசுத்தமாக இருக்கக்கூடாது.
அந்த மூன்றாவது முற்றிலும் உண்மை, நகைச்சுவைக்கும் XYZக்கும் வித்தியாசம் தெரியாமல் ஜோக்கடிப்பது.

4. பையனுக்கு உறவுகளை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். " நாம் நண்பர்களாக இருப்போம்" என்று சொல்லி விட்டு இடுப்பில் கை போடக் கூடாது. தான் எடுக்கும் தீர் மானங்களில் திடமாக இருக்க வேண்டும். உள்ளாடைகளை மாற்றுவது போல மதற்றக் கூடாது.

அப்ப Wஏற்ஸாVGYஊஞ்ற்ஸ் இவைகளை அடிக்கடி மாற்றுவது தப்பா :) சும்மா சும்மா :lachen001:

5. பையன் உலக அறிவு உள்ளவனாகவும் பரந்த மனப்பான்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும். ஆனால் இப்படி இருக்கக் கூடாது.

பையன்: நீ நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டாயா?
பெண்: இல்லை
பையன்: ஏன்?
பெண்: அது அப்படித் தான்
பையன்: ஆனால் நீ ஒரு இந்துப் பெண். ஆகவே பொட்டு வைத்துக்
கொள்ள வேண்டும்

பெண் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்

மற்றவரின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் சொ, மாமுக்கு பை பை டா டா

6. பையன் நெடுந்தூர கார் சவாரி டின்னருக்கான அழைப்பு இவைகள் மூலம் காதலிக்க தெரிஞ்சிருக்க வேண்டும். பையனுக்கு எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய மூன்று நாட்கள்:

1. பெண்ணின் பிறந்த நாள்
2. பெண்ணின் பிறந்த நாள்
3. பெண்ணின் பிறந்த நாள்

:D:D:D:D அப்பட்டமான பொய், உண்மை என்னவென்றால் 1.பெண்ணின் பிறந்த நாள் 2.பெண்ணின் அம்மா பிறந்தநாள் மற்றும் 3.பெண்ணின் அப்பாவின் பிறந்தநாள்.. :p:p:p

7. பையன் எனது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு கோபம் வந்தால் நான் கத்துவதில்லை. மௌனமாக ஒதுங்கி விடுவேன். இதை அவன் புரிந்து கொள்ள வேண்டும்.

நோ கமேன்ஸ்

8. கடைசியாக பையன் என் தந்தையைப் பொல் இருக்க வேண்டும். ஏனெனில் நான் சந்தித்த ஆண்களில் என் தந்தையே தலை சிறந்தவர்.

வெல் செய்ட். (நல்லா சொன்னீங்க போங்க)

பகிர்வுக்கு நன்றி.

நல்லா சிரித்தேன். ரசித்தேன். :D:D:D:D

கண்மணி
18-07-2008, 01:16 AM
இவ்வளவுதானா? இன்னும் நிறைய இருக்கே!

ஓவியா
18-07-2008, 01:33 AM
இவ்வளவுதானா? இன்னும் நிறைய இருக்கே!

அட போங்க கண்மணியக்கா,
உண்மை நிலவரத்தின்படி பட்டியலிட்டால் தமிழ் மன்ற டெடாபேஸ் நிரம்பி வழியும். பின் இங்கும் டிரப்பிக் அதிகாரிகள் தேவைப்படும். :D

மதுரை மைந்தன்
18-07-2008, 01:46 AM
பகிர்வுக்கு நன்றி.

நல்லா சிரித்தேன். ரசித்தேன். :D:D:D:D

நன்றி. உங்களின் எதிர் பார்ப்புக்களை இன்னும் விளக்கமாக கூறுங்கள். நாங்கள் ரசிக்கிறோம்.

ஓவியா
18-07-2008, 01:52 AM
நன்றி. உங்களின் எதிர் பார்ப்புக்களை இன்னும் விளக்கமாக கூறுங்கள். நாங்கள் ரசிக்கிறோம்.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, :redface::redface:
வந்ததை ஏற்று சிறப்பாக, சிக்கனமாக, சிம்பலாக வாழ ஆசை, அம்புட்டுதேன் சொல்லிபுட்டேன். :D

தீபன்
18-07-2008, 02:00 AM
யாராவது பதிலுக்கு பசங்க எதிர்பார்ப்பையும் சொல்லுங்கப்பா...

aren
18-07-2008, 05:06 AM
இவை அனைத்தையும் நான் பின்பற்றுகிறேன். இருந்தாலும் நம்பளை சுத்தி சுத்தி அடிக்கிறாங்களே. அதிலிருந்து தப்பிக்க என்ன வழி?

By the way, நான் உண்மையிலேயே கொஞ்சம் அறிவுள்ளவன். அதனால் பிரச்சனையாக இருக்குமோ?

மயூ
18-07-2008, 06:49 AM
இணைய தளத்தில் வெளியான ஒரு பதிவிலிருந்து:

1. பையனுக்கு நகைச் சுவை உணர்வு இருக்கணும். ஆனால் கோமாளியா இருக்கக் கூடாது.

உதாரணமாக

பையன் : நீங்க கோழிக் கறி சாப்பிடுவீங்களா?
பெண்: இல்லை நான் வெஜிடேரியன்
பையன்: அப்ப நீங்க மட்டனும் சாப்பிட மாட்டீங்க?
பெண்: !!!!

இது எப்படி கோமாளித்தனமான நகைச்சுவையாகும்.. இப்படியான சிட்டுவேசனில் என்ன ஆகும் என்றால்...
ஓ.. கமான்... என்று செல்லமாக அவர் கோவித்துக்கொள்வார். ஆனா பையன் "அப்ப நீங்க மட்டனும் சாப்பிட மாட்டீங்க?" என்று கேட்கும் போது நகைச்சுவையாக கேட்கிறேன் என்பதை முக பாவத்தால் உணர்த்த வேண்டும்...

எப்பிடி இருக்கு இது... :icon_b:

மயூ
18-07-2008, 06:52 AM
இவளவு டமேஜை ஏத்தாத்தான் ஒரு பெண் கிடைப்பாள் என்றால் பேசாம தனியாளா காலம் ஓட்டிடுவன்!

aren
18-07-2008, 08:11 AM
இவளவு டமேஜை ஏத்தாத்தான் ஒரு பெண் கிடைப்பாள் என்றால் பேசாம தனியாளா காலம் ஓட்டிடுவன்!

நடக்கற காரியமா பேசுங்க இங்கே. தனியாளாக இருப்பது இப்பொழுது சாத்தியம் ஆனால் பின்னர் வருத்தப்படுவீர்கள்.

(நான் வெளியே இருக்கும்பொழுது பேசுவேன், ஆனால் வீட்டிற்குப் போனால் பொட்டி பாம்புதான்)

மயூ
18-07-2008, 08:44 AM
நடக்கற காரியமா பேசுங்க இங்கே. தனியாளாக இருப்பது இப்பொழுது சாத்தியம் ஆனால் பின்னர் வருத்தப்படுவீர்கள்.

(நான் வெளியே இருக்கும்பொழுது பேசுவேன், ஆனால் வீட்டிற்குப் போனால் பொட்டி பாம்புதான்)
ஆகா.. உண்மை எல்லாம் வெளிய வருதுங்கோ...!!!
கலக்கல்... :icon_b:

நம்பிகோபாலன்
18-07-2008, 10:50 AM
ஒரு பெண் பையனிடம் எதிர்ப்பார்ப்பது விட்டுகொடுத்தல்.
அதே சமயம் ஒரு பையன் பெண்ணிடம் எதிர்பார்ப்பது தோழமை.

ஓவியா
18-07-2008, 10:58 AM
ஒரு பெண் பையனிடம் எதிர்ப்பார்ப்பது விட்டுகொடுத்தல்.
அதே சமயம் ஒரு பையன் பெண்ணிடம் எதிர்பார்ப்பது தோழமை.

நான் நினைத்தேன் ஆண் எதிர்ப்பார்ப்பது அழகையும், பெண் பணத்தையும் எதிர்பார்ப்பாள் என்று.

நடைமுறையில் 8/10 கேஸ் நான் சொல்வது போல்தான் இருக்கு. ;)

நம்பிகோபாலன்
18-07-2008, 12:38 PM
" நான் நினைத்தேன் ஆண் எதிர்ப்பார்ப்பது அழகையும், பெண் பணத்தையும் எதிர்பார்ப்பாள் என்று. "

அப்படி வாழ்வது வாழ்க்கையா இருக்குமா?

அறிஞர்
18-07-2008, 02:53 PM
வாழ்க்கை நிஜங்களில் சில குறிப்புகள் இவை..

இன்னும் எழுதினால்... எழுதிக்கொண்டே இருக்கலாம்...

பாவம்பா ஆண்கள்..

minmini
18-07-2008, 04:34 PM
ஒரு பெண் பையனிடம் எதிர்ப்பார்ப்பது விட்டுகொடுத்தல்.
அதே சமயம் ஒரு பையன் பெண்ணிடம் எதிர்பார்ப்பது தோழமை.

நான் நினைக்கிறேன் :icon_ush::icon_ush:
நீங்க மாற்றி சொல்லிப்புட்டீங்க:D:D

பென்ஸ்
18-07-2008, 06:47 PM
வாழ்க்கை நிஜங்களில் சில குறிப்புகள் இவை..

இன்னும் எழுதினால்... எழுதிக்கொண்டே இருக்கலாம்...

பாவம்பா ஆண்கள்..

சரியாக சொன்னீர் அறிஞரே....

ஆனால், பெண்கள் இப்படிதான் என்று தெரிந்தால் பிரச்சினை ஏன்பா வருது....

பெண்கள் இப்படியும்தான்...
ஆனால், இப்படியில்லை.

arun
18-07-2008, 07:48 PM
ஆண்களை விட பெண்களிடம் தான் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பது சொல்லப்படாத உண்மை

இதில் சிலவற்றை தான் தொகுத்து உள்ளார்

சுகந்தப்ரீதன்
19-07-2008, 09:37 AM
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும்;
அது பொம்பளைக்கும் தெரியும்..!!

அதனால வாங்க... நாம எல்லாரும் வேற திரி பக்கம் போய் திரிவோம்...!!

Keelai Naadaan
19-07-2008, 11:05 AM
பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும்;
அது பொம்பளைக்கும் தெரியும்..!!

அதனால வாங்க... நாம எல்லாரும் வேற திரி பக்கம் போய் திரிவோம்...!!
எனக்கும் ஒரு செய்யுள் நினைவுக்கு வருகிறது.

அத்தியின் மலரும், வெண்யாக்கை கொள் காக்கை தானும்,
பித்தர் தம் மனமும், நீரில் பிறந்த மீனின் பாதமும்,
அத்தன்மால் பிரம்மனால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம் தெரிவதில்லை கண்டீர்

அதனால வாங்க வேற திரிக்கே போவோம்.

meera
19-07-2008, 11:32 AM
ஆண்களை விட பெண்களிடம் தான் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பது சொல்லப்படாத உண்மை

இதில் சிலவற்றை தான் தொகுத்து உள்ளார்

அப்போ ஆண்கள் எதுவுமே எதிர் பார்க்களையா? எதிர்பார்ப்பு குறைவா இருக்கவங்க ஏன் 50 சவரன் அல்லது அதுக்கு மேல நகையும், 5 அல்லது 10 லட்சம் ரொக்கம், இதெல்லாம் இல்லாம வீடு, காரு, வீட்டுக்கு தேவையான சாமான் எதிர்பாக்கறாங்க???????????????? :confused::confused::sprachlos020:

நான் நினைத்தேன் ஆண் எதிர்ப்பார்ப்பது அழகையும், பெண் பணத்தையும் எதிர்பார்ப்பாள் என்று.

நடைமுறையில் 8/10 கேஸ் நான் சொல்வது போல்தான் இருக்கு. ;)

ஓவியாக்கா, நீங்க சொல்றது தப்பு. சில பெண்கள் பணத்தை எதிர்பார்க்கலாம், பல பெண்களுக்கு கணவர் நல்லவராய் முக்கியமாக சந்தேகம் இல்லாதவராம், தன் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவராய் வேண்டி இருக்கிறாது என்பது என் கறுத்து. இன்றைய நிலையில் பெண்களாலும் பணம் சம்பாதிக்கமுடியும். ஆனால் அவர்களுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கை.:D:D

ஓவியா
19-07-2008, 11:44 AM

அட நான் சும்மா காமிடியடித்தேன். :)

ஆனாலும் பணம் கொஞ்சம் முக்கியம்தான் இருப்பினும் நீங்கள் கூறுவதுபோல் நிம்மதிதான் அதிமுக்கியம் தங்கையே!!

பல பசங்களுக்கு அழகும் ரொம்ப ரொம்பவே முக்கியம் இது காமடிக்கு அல்ல.

Keelai Naadaan
19-07-2008, 12:20 PM
அப்போ ஆண்கள் எதுவுமே எதிர் பார்க்களையா? எதிர்பார்ப்பு குறைவா இருக்கவங்க ஏன் 50 சவரன் அல்லது அதுக்கு மேல நகையும், 5 அல்லது 10 லட்சம் ரொக்கம், இதெல்லாம் இல்லாம வீடு, காரு, வீட்டுக்கு தேவையான சாமான் எதிர்பாக்கறாங்க???????????????? :confused::confused::sprachlos020:

இதெல்லாம் எதிர்பார்த்தால் அவர்கள் கணவனாக இருக்க மாட்டார்கள்.. இருக்கவும் கூடாது.
அடிமைகளாக இருப்பார்கள். இருக்கவும் வேண்டும்

ரவிசங்கர்
20-07-2008, 07:09 AM
அருமை,அருமை விட்டுகொடுத்தல் தான் நல்லது.

விகடன்
20-07-2008, 08:25 AM
இவை நண்பர்களாக இருப்பதற்கோ அல்லது காதலிப்பதற்கான அத்திவாரமாகவோ இருக்குமாயின்..... கல்யாணத்திற்கு பின்னான எதிர்பார்ப்புக்கள் எப்படி இருக்கும்???

வயது ஏற ஏற பசங்க மண்டையில முடி குறைவதில்லை. இவங்களோட எதிர்பார்ப்புக்களை எண்ணியே குறைகிறது போலும்.

யாழ்_அகத்தியன்
29-07-2008, 09:32 PM
என்னை பொறுத்தவரையில்
பெண் தான் விரும்பும் ஆணுக்கு
தன்னைத் தவிர எதுவுமே பெரிதாக
தெரியக் கூடாது என்பதே

poornima
30-07-2008, 08:55 AM
அந்த கடைசி பாயிண்ட் இருக்கு பாருங்க... சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
க்யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.