PDA

View Full Version : பேய்கள் உலாவும் வீதி....



rshan4
17-07-2008, 08:55 PM
பேய்கள் உலாவும் வீதி....

இருண்ட அந்தப் பாதைகள்
ஓளி அற்றுப் போகின்றன
தெருவோரம்
பேய்களும் பிசாசுகள் கூடி
கருமையை வரவேற்கின்றன.

அந்த வழியில்தான் வருவார்கள்.
இவர்களும்
இங்குதான் காத்திருக்கின்றனர்.

இரவு
உணவுக்கு
உடம்புகள் சில கிடைத்துவிடும்
இவர்களிடம் தப்பினாலும்
வந்தவர்கள் எப்படியாவது
எமக்கு உணவு
தாயரித்துவிட்டுத்தான்
செல்வார்கள்.

பாவம் பொதுமக்கள்.

இங்கு காத்திருப்பவர்
இறப்பதில்லை.
ஆனால்
ஒரு நாள்.

இப்போது எல்லாம்
கண்களுக்கு
கறுப்பு வெள்ளைக்
கனவுகள் கூட நின்றுவிட்டன.

நினைவில் அழியும்
அந்தக் காட்சிகள்
நிழல் படத்தில்
பதிக்க முடியவில்லை.

அன்றுபோல் இன்றும்
இல்லாவிட்டாலும்
அதிகமாகவே
சுட்டுத் தருகின்றனர்.

பிரிவுக்கு சோகம்
பிசாசுகளுக்கு கொண்டாட்டம்.
கண்ணில் நனைத்த நீர்
நெஞ்சைத் தைக்கின்றன.
பாவம் இவர்கள்…..
பாவம் அவர்கள்…..

- முகவன் -:icon_b: