PDA

View Full Version : என் முதல் பிரமிப்பு நீதான் அப்பா

அகத்தியன்
17-07-2008, 06:06 AM
உனக்கு என் அக்காள்கள் வைத்த பெயர்-
அவனின் புகார் பெட்டி.
இன்றுவரையிலுந்தான்.

அம்மா சொல்வாள்
இப்பவும் குழந்தைப்பிள்ளையா அவன் என...
நீ சிரிப்பாய்.
அப்போது உன் கண்ணில் மின்னும் ஒளி
இன்றுதான் அதன் அர்த்தம் புரிகிறது.

எல்லோருக்கும் சம பங்கு
என்னைத் தவிர..
உன்னதும் எனக்குத்தானே...

கண்டிப்பான கணக்கு வாத்தியார்- பள்ளியிலே
ஆனால் எனக்கும்..
நீ ஆசான் தான்
எத்தனை பாடங்கள் உன்னிடமிருந்து கற்றேன்?

உன் கைகள் தலையணையாகி,
உன் அருகில் தூங்கிய நாட்கள்

எப்போதாவது அடித்துவிட்டு,
இரவு முழுதும்
தூக்கம் மறந்து முற்றத்தில் உலவுவாய்..
அதன் பின்னும்
என் கோபம் மறைய நீ செய்யும் பிரயத்தனங்கள்.

என் முதல் பிரமிப்பு நீதான் அப்பா
உனக்கான உன்னதங்களில்
நான் பொக்கிழம்.
எனக்கு தெரியும்
உனக்காக நான் செய்வதெல்லாம் ஒரு பிரார்த்தனை
என் இறைவனே!
அவரை என்னோடு இருக்க வை.
என் ஒரே ஒரு தோழனையும் என்னிடமிருந்து எடுத்துவிடாதே

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-07-2008, 06:18 AM
வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை அப்படியே கிட்டத்தில் பார்ப்பது போன்ற ஒரு பிரமிப்பு மனதில், நீர்த் தேக்கங்கள் கண்களில்,12 ரியால்கள் தொலைப்பேசிச்செலவு என்பது தனி. படிக்க படிக்க திகட்டாத உன்னதமானது உங்கள் கவிதை. பாராட்டுக்கள் அகத்தியன்.

shibly591
17-07-2008, 07:05 AM
பிரமிக்க வைக்கிறது உங்கள் கவிதை..

அப்பாக்களுக்கு தமிழில் கவிதைகள் குறைவு...காரணம் அவர்களின் கண்டிப்பு பலருக்கு பிடிப்பதில்லையோ என'னவோ...

இருந்தும் அந்த கண்டிப்பையே அற்புதமான கவிதையாக்கிய உங்களுக்கு 200 ஐ கேஸ்கள் என்னிடதிருந்து இதோ பிடியுங்கள் நண்பரே..

அகத்தியன்
17-07-2008, 08:41 AM
வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை அப்படியே கிட்டத்தில் பார்ப்பது போன்ற ஒரு பிரமிப்பு மனதில், நீர்த் தேக்கங்கள் கண்களில்,12 ரியால்கள் தொலைப்பேசிச்செலவு என்பது தனி. படிக்க படிக்க திகட்டாத உன்னதமானது உங்கள் கவிதை. பாராட்டுக்கள் அகத்தியன்.

நன்றி நண்பரே.

உமக்கு 12 ரியால்கள்தான்.

எனக்கு இன்று 30 திர்கம்கள்.

இவை எல்லாம் செலவுகள் அல்ல. சந்தோசங்கள் நண்பரே.

சரிதானே :icon_b: :icon_b:

அகத்தியன்
17-07-2008, 08:42 AM
பிரமிக்க வைக்கிறது உங்கள் கவிதை..

அப்பாக்களுக்கு தமிழில் கவிதைகள் குறைவு...காரணம் அவர்களின் கண்டிப்பு பலருக்கு பிடிப்பதில்லையோ என'னவோ...

இருந்தும் அந்த கண்டிப்பையே அற்புதமான கவிதையாக்கிய உங்களுக்கு 200 ஐ கேஸ்கள் என்னிடதிருந்து இதோ பிடியுங்கள் நண்பரே..

வள்ளல் ஷிப்லிக்கு என் நன்றிகள்.

உங்களின் பரிசு எனக்கு கிடைத்த பேறு கவிஞரே! :icon_b: :icon_b:

நன்றிகள்