PDA

View Full Version : நீ ஒரு விஞ்ஞான அதிசயம்



மதுரை மைந்தன்
16-07-2008, 11:57 AM
ஒரு முறை உன்னைப் பார்த்தபின்
திரும்ப திரும்ப என்னை
பார்க்க வைப்பதால்
அணு சக்தியைப் போல
தொடர் சக்தி நீ

என்னைப் பார்க்கும்
உன் கூர்மையான பார்வை
ஒரு லேசர் ஒளிக் கற்று

உன்னை சந்தித் பின்
உன்னிடம் சரணடையச் செய்தது
உனது புவி ஈர்ப்பு சக்தியைப் போனறது

நாம் சந்தித்த பின்
நீ விலகிச் சென்று
உருவாக்கிய வெற்றிடம்
இதுவரை விஞ்ஞானிகள் சாதிக்காதது

இவ்வளவு சக்தி வாய்ந்த நீ
ஒரு விஞ்ஞான அதிசயம்