PDA

View Full Version : என் காவியக் காதலன் கண்ணன் - 3

பிச்சி
16-07-2008, 07:53 AM
மாண்பில் மயக்கம்

நெடிய இரவை நீட்டி
தாழம் பூக்களிடும் வாசனையை
பகல் முழுவதும் நிரப்பி
நீல விசும்பினைக் குடைந்து
செய்த மோன மாளிகையில்
அமர்ந்திருந்தேன்.

என் உயிர்வலியின்
ஒரு துமியெடுத்து
பேரொளியின் ஒருப்பக்கம்
அறைந்து விளித்ததைக்
கண்டானோ கண்ணன்?

நுண்ணொலிகள் கிழிய
வாசலிடை வந்து நின்றான்

நான் கொறித்த காற்றை நுகர்ந்து,
உன் குதிகால் வெடிப்பில்
ஒரு ரேகையாக இருக்கவிடு என
விழி கணைகளால் தூதுவிட்டான்.

பலிக்கவில்லை

மூர்க்கம் மூக்கில் அமர
மாளிகை நோக்கி வரலானான்

மாட்சிமை பொருந்திய மாமதியாய்
நான் அமர்ந்திருப்பதைக் கண்டு
நாணம் மிகும் பெண்டிரைப் போல்
நாணி மயங்கினான்

அச்சமயம்
என் தூரிகையின்
வர்ணம் படா இழைகள்
அவனென் மாண்பில் மயங்கியதை
வரைந்துகொண்டிருந்தன.

சிவா.ஜி
16-07-2008, 11:08 AM
வாவ்....பிச்சியின் அழகு தமிழில் ஒரு காதல் ராகம். 'நான் கொறித்த காற்று" வித்தியாசமான சிந்தனை. பத்திகளனைத்தும் வரி வரியாய் விமர்சிக்கத் தூண்டினாலும்....கணிணி பிரச்சனையால் என் சிக்கனமான பாராட்டைத் தங்கைக்கு நல்கி வாழ்த்துகிறேன்.

மதுரை மைந்தன்
16-07-2008, 01:28 PM
பிச்சி சகோதரி

உங்க கவிதை அருமையானது. அழகான சொற்களால் வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்ட உங்களது திறமையைப் பாராட்டுகிறேன்.

பிச்சி
17-07-2008, 10:43 AM
வாவ்....பிச்சியின் அழகு தமிழில் ஒரு காதல் ராகம். 'நான் கொறித்த காற்று" வித்தியாசமான சிந்தனை. பத்திகளனைத்தும் வரி வரியாய் விமர்சிக்கத் தூண்டினாலும்....கணிணி பிரச்சனையால் என் சிக்கனமான பாராட்டைத் தங்கைக்கு நல்கி வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி சிவாஜி அண்ணா உங்கள் பாராட்டுக்களே எனக்குப் போதும்.

அன்புடன்
பிச்சி

பிச்சி
17-07-2008, 10:45 AM
பிச்சி சகோதரி

உங்க கவிதை அருமையானது. அழகான சொற்களால் வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்ட உங்களது திறமையைப் பாராட்டுகிறேன்.

மிக்க நன்றி மதுரை வீரன் அண்ணா.