PDA

View Full Version : நீ நலம் தானே அம்மா?அகத்தியன்
16-07-2008, 06:38 AM
சுகமாய்தான் இருக்கிறேன் அம்மா.
நீ சுகமா?
என் ஒவ்வொரு காலையும் இப்போது
உன் சத்தங்கள் இல்லாமல் விடிகின்றன.

உன் ஏச்சுக்களை கேட்டவாறு தூங்கும்
அதிகாலை சுகம் இங்கில்லை.

உன் தேனீர் மணம்
இன்னும் என் நாசித்துவாரங்களில்,
என் நாவுகளில் ஒட்டியுள்ள
அதன் இனிமையினை இன்னும் தேடிப்பார்க்கிறேன்.
எங்குமில்லை அம்மா.

உன் சமையலறை சத்தங்களின்
லயங்கள்.
என் பாக்கிஸ்தானி சமையலாளியின் அறைகளில்
நான் கேட்டதில்லை.

நீ நலம் தானே அம்மா?
என் நாட்களினை எண்ணிக் கொண்டிருக்க்கின்றேன்..
நீ பிசைந்த பழஞ்சோறு ஒரு கவளம் உண்பதற்காக.

அதுவரை
நீ அழைக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளுக்கும்
உன்னிடம் நான் பொய்யாய் சொல்லிக்க்கொண்டிருப்பேன்.
நான் சந்தோசமாக இருப்பதாக.

shibly591
16-07-2008, 07:40 AM
நன்று நண்பரே..இயல்பான பதிவுகள்...

யதார்த்தம் நிறைந்த கவிதை

பிச்சி
16-07-2008, 08:34 AM
அம்மாவைப் பத்தி எத்தனை கவிதைகள் சொன்னாலும் ஈடாகாது. உங்கள் சிந்தனை அட்டகாசம்.

அன்புடன்
பிச்சி

அகத்தியன்
16-07-2008, 10:59 AM
நன்று நண்பரே..இயல்பான பதிவுகள்...

யதார்த்தம் நிறைந்த கவிதை

நன்றி நண்பரே,

வாழ்க்கை என்ன சொல்கின்றது?

நீர் அதனிடம் என்ன சொல்கின்றீர்?

அகத்தியன்
16-07-2008, 11:00 AM
அம்மாவைப் பத்தி எத்தனை கவிதைகள் சொன்னாலும் ஈடாகாது. உங்கள் சிந்தனை அட்டகாசம்.

அன்புடன்
பிச்சி

நன்றி பிச்சி.

அம்மா என்றால் அன்புதானே!

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்

அமரன்
16-07-2008, 12:08 PM
வேலைக்குப்போகாத வேளைக்காலைகளில்
பனிக்குளிருக்கு இதமாக
இழுத்துப் போர்த்திய போர்வைகள்
நான் வைத வார்த்தைகள்.

மரக்கரித்துண்டு வீராப்பால்
மரணிக்கும் தறுவாயில்
குவளைக்கொஞ்சல் கணங்கள்
விட்டெறிந்த பாணங்கள்
என் காலைத் தேனீர் பானங்கள்.

பழஞ்சோற்றுக்குழையலுக்கு பக்கபலமான
பச்சை மிளகாயும் சின்ன வெங்காயமும்
உனக்கீந்த பின்பு உன்
நறுக் சொல் காரத்துடனுண்ட
நீ தந்த த(க)ண்ணிச்சோறு என்னாகாரம்.

என்னை விட்டு நீ
விலகிச்சென்ற கணம் முதலாய்
அத்தனையும் கொடுத்து
நிம்மதியையும்
இலவச இணைப்பாம்
பணத்தையும் வாங்குகிறேன்
உன் தந்திரம் அறிந்தும்.

-அன்புடன் அம்மா

சிவா.ஜி
16-07-2008, 12:13 PM
தாயைப் பிரிந்த கன்றின் மன அழுகை...ஒவ்வொரு கன்றுக்கும் உள்ளிருந்து உறுத்துவதுதான். இங்கே கவிநயத்துடன் அந்த ஆதங்கம் அரங்கேறியிருக்கிறது.
காணும் நாளுக்காக, வாழும் நாட்களை வருத்திக்கொள்ளும் ஒரு வாலிபக் குழந்தையின் முகாரி. பாராட்டுகள் அகத்தியன்.

அகத்தியன்
16-07-2008, 12:50 PM
வேலைக்குப்போகாத வேளைக்காலைகளில்
பனிக்குளிருக்கு இதமாக
இழுத்துப் போர்த்திய போர்வைகள்
நான் வைத வார்த்தைகள்.

மரக்கரித்துண்டு வீராப்பால்
மரணிக்கும் தறுவாயில்
குவளைக்கொஞ்சல் கணங்கள்
விட்டெறிந்த பாணங்கள்
என் காலைத் தேனீர் பானங்கள்.

பழஞ்சோற்றுக்குழையலுக்கு பக்கபலமான
பச்சை மிளகாயும் சின்ன வெங்காயமும்
உனக்கீந்த பின்பு உன்
நறுக் சொல் காரத்துடனுண்ட
நீ தந்த த(க)ண்ணிச்சோறு என்னாகாரம்.

என்னை விட்டு நீ
விலகிச்சென்ற கணம் முதலாய்
அத்தனையும் கொடுத்து
நிம்மதியையும்
இலவச இணைப்பாம்
பணத்தையும் வாங்குகிறேன்
உன் தந்திரம் அறிந்தும்.

-அன்புடன் அம்மா

நன்றி அமரன்.

மேற்குறிப்பிட்ட வரிகளில் எதை சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லை.

ஆனாலும் உங்கள் பதில் கவிதையிலிருந்து மீள எனக்கு அதிக பிரயத்தனம் தேவையாகிப்போனது

அகத்தியன்
16-07-2008, 12:53 PM
தாயைப் பிரிந்த கன்றின் மன அழுகை...ஒவ்வொரு கன்றுக்கும் உள்ளிருந்து உறுத்துவதுதான். இங்கே கவிநயத்துடன் அந்த ஆதங்கம் அரங்கேறியிருக்கிறது.
காணும் நாளுக்காக, வாழும் நாட்களை வருத்திக்கொள்ளும் ஒரு வாலிபக் குழந்தையின் முகாரி. பாராட்டுகள் அகத்தியன்.

நன்றி சிவா.

அனுபவங்களும்
உணர்வுகளும்தானே பாடல்களாகின்றன

மதுரை மைந்தன்
16-07-2008, 01:00 PM
அருமையான நடைமுறை கவிதை. வாழ்த்துக்கள் நணபரே

அமரன்
16-07-2008, 01:56 PM
நன்றி அமரன்.
மேற்குறிப்பிட்ட வரிகளில் எதை சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லை.
ஆனாலும் உங்கள் பதில் கவிதையிலிருந்து மீள எனக்கு அதிக பிரயத்தனம் தேவையாகிப்போனது
அகத்தியன்...
ஆக்கங்களை வாசிக்கும்போது ஆக்கியவன் மறைந்துவிடும் விதமாக ஈடுபாடுகாட்டுவது எனது வழக்கம். இந்தக்கவிதையை பொறுத்தமட்டில் அந்த முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். எழுதிய நீங்களும் கவிநாயகனாக என்னை நினைத்த மனப்பாங்கும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்திவிட்டன.

மகன் நலமாக உள்ளேன் என்று சொல்வது பொய்யெனத் தெரிந்தாலும் (தந்திரம்) அவனது தாய், தாயக ஏக்கங்களை அவள் அறிந்தாலும், ஊரோடில்லாவிட்டாலும் உயிரோடுள்ளானே என்ற நினைப்பை பெற்றுவிடுகிறாள் தாய். உபரியாக காசு.. இந்த இரண்டுக்கும் அவள் கொடுத்த விலை முதல் மூன்று பந்திகளில் சொன்னது போன்ற சில..

அகத்தியன்
16-07-2008, 02:08 PM
அகத்தியன்...
ஆக்கங்களை வாசிக்கும்போது ஆக்கியவன் மறைந்துவிடும் விதமாக ஈடுபாடுகாட்டுவது எனது வழக்கம். இந்தக்கவிதையை பொறுத்தமட்டில் அந்த முயற்சியில் நான் தோற்றுவிட்டேன். எழுதிய நீங்களும் கவிநாயகனாக என்னை நினைத்த மனப்பாங்கும் ஒன்றிணைந்து என்னை வீழ்த்திவிட்டன.

நிஜம் நண்பரே.

இன்றிரவு நான் நிம்மதியாய் தூங்குவேன்.

ஏனோ தெரியவில்லை. மனசு இப்போது மழை பெய்து ஓய்ந்த பின் இருக்கின்ற வானம் போல இருக்கின்றது.

மீண்டும் உமக்கு நன்றி.
இதை தவிர நான் எதைத்தரலாம் உமக்கு

இளசு
16-07-2008, 06:54 PM
எத்தனை வயதானால் என்ன?
அன்னையின் குரல் போதும்
மீண்டும் சிறுவனாக..

கண்கள் பனித்தன..ஆனால்
மனமோ இனித்தது..

முன்னது பிரிவுகளால்
பின்னது அது எழுப்பிய பரிவுகளால்..

அகத்தியன், அமரன் - என் அன்பு இருவருக்கும்!

அகத்தியன்
17-07-2008, 05:45 AM
எத்தனை வயதானால் என்ன?
அன்னையின் குரல் போதும்
மீண்டும் சிறுவனாக..

கண்கள் பனித்தன..ஆனால்
மனமோ இனித்தது..

முன்னது பிரிவுகளால்
பின்னது அது எழுப்பிய பரிவுகளால்..

அகத்தியன், அமரன் - என் அன்பு இருவருக்கும்!

தங்கள் பாராட்டிற்கு நன்றி இளசு அவர்களே

mukilan
17-07-2008, 05:50 AM
நீ அழைக்கும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகளுக்கும்
உன்னிடம் நான் பொய்யாய் சொல்லிக்க்கொண்டிருப்பேன்.
நான் சந்தோசமாக இருப்பதாக.

புலம்பெயர் வாழ்வு வாழும் யாவருக்குமே நிகழும் சோகம் இது. வார்த்தைகளால் சொல்ல இயலாது. அனுபவித்தவர்கட்குப் புரியும். அன்னை மீதான ஏக்கம் தொட்டில் முதல் இடுகாடு வரை அல்லவா? எளிய சொற்களில் உங்கள் ஏக்கத்தின் வெளிப்பாடு மிக அருமை அகத்தியன்.

அகத்தியன் என்ற பெயருக்கும் தொலைபேசி உறவுகளுக்கும் ஏதோ சொந்தம் போல!

அகத்தியன்
17-07-2008, 05:53 AM
அகத்தியன் என்ற பெயருக்கும் தொலைபேசி உறவுகளுக்கும் ஏதோ சொந்தம் போல!

நன்றி முகில்

எனக்கு புரியவில்லை.:smilie_abcfra:

என்ன தொடர்பு??

தூரத்தில் இருப்போரை இணைப்பது அது ஒன்றுதானே?

mukilan
17-07-2008, 06:31 AM
மன்னிக்க வேண்டும் அகத்தியன்! திரியை திசைதிருப்ப நான் காரணமாகிவிடுவேனோ எனக் கருதுகிறேன். அகத்தியன் என்ற திரைப்பட இயக்குநர் தொலைபேசியிலேயே காதலித்துக் கொள்ளும் காதலர்கள் பற்றிய திரைப்படம் எடுத்ததால் அப்படிச் சொன்னேன்.:D:D

அகத்தியன்
17-07-2008, 06:37 AM

அது சரி......

உமக்கு ரொம்ப குசும்புதான் காணும்: :lachen001: :lachen001: :aetsch013:

பூமகள்
17-07-2008, 12:59 PM
தட்டு நிறைய
குழைந்த சோறு...
சாப்பிட முடியாத
காரக் குழம்பு..

காரமில்லாமல் நீ
தரும் உப்புபருப்பு
வேணுமம்மா...

எனக்கு பிடிச்ச
இனிப்பு காரம்
உன் பாசமிகு
பரிமாறலின்றி..
சுவைக்க வில்லை
இன்றெனக்கு..
எறும்புக்கு
பரிமாறிவிட்டேனம்மா..

பேச ஏதுமில்லையெனினும்..
தொலைபேசியில் உன்
சத்தம் கேட்டு..
மடையுடைந்து..
அழுதாலும்.. என்
குரல் காட்டும்
உற்சாகம் தந்திரமென
நீ அறிவாயா?

கண்கள் அழ
உதடு சிரிக்கும்
வித்தை கண்டு
விழி விரிய
கடந்து போகும்
தோழி சொல்வாள்..

நீ இன்னும்
குழந்தைதானடி...!
------------------------------------------
கண்கள் பனித்தன அகத்தியன் அண்ணா..

அந்த துயரை ஈடு கட்ட எந்த உறவும் இந்த மண்ணில் இதுவரை இருப்பதாகத் தெரியவில்லை..

அமரன் அண்ணாவின் அம்மாநிலையும்..
பெரியண்ணாவின் பரிவு பின்னூட்டமும் அற்புதம்..

மனம் நிறைந்த பாராட்டுகள் மூவருக்கும். :)

அகத்தியன்
17-07-2008, 01:42 PM

நன்றி பூ மகள்.

தங்கையின் வரிகள் நிஜத்தினை படம்பிடித்து காட்டுகின்றன.