PDA

View Full Version : கவிதை நாற்றம்



நாகரா
15-07-2008, 11:13 PM
உணர்வின் வெப்பத்தால்
எண்ணத் தோலில்
வடியும் வார்த்தை வியர்வையைக்
காகிதத்தில் துடைக்கிறேன்
காற்றில் பரவுகிறது
கவிதை நாற்றம்

ஓவியன்
16-07-2008, 01:45 AM
எண்ணத்தோல், வார்த்தை வியர்வை....

சொல்லாடல்களை இரசித்தேன்...
சிறிய கவிதை - அழகு..!! :)

நாகரா
16-07-2008, 01:51 AM
உம் இரசிப்புக்கு நன்றி ஓவியன்

mukilan
16-07-2008, 03:25 AM
நாற்றம் என்ற சொல் தற்பொழுது தவறாக துர்நாற்றத்தை மட்டும் குறிப்பதால் தலைப்பைக் கண்டு கொஞ்சம் முகம் சுளித்துக் கொண்டு வந்தாலும் அழகுத் தமிழில் உங்கள் கவியின் நறுமணம் கண்டு மன மகிழ்ந்தேன். கவிதைக்கு நன்றி.

நாகரா
16-07-2008, 03:30 AM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி முகிலன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-07-2008, 07:14 AM
செரிக்கவியலா
சூழ்நிலைக் குமட்டல்களில்
இதெல்லாம் நிதர்சனமென்ற
தற்காப்புச் சிகிச்சை செய்தும்
மனங்கள் கக்கி விடுகின்றன
கவிதை வாந்திகளை.

உங்கள் கவிதை ஈன்றெடுத்த தத்துக் குழந்தை இது.

பிச்சி
16-07-2008, 07:30 AM
அண்ணா, இப்படி பொருத்தி எழுத எப்படியண்ணா முடிகிறது. பிரம்மாதம்.

அன்புடன்
பிச்சி

பூமகள்
16-07-2008, 08:25 AM
செரிக்கவியலா
சூழ்நிலைக் குமட்டல்களில்
இதெல்லாம் நிதர்சனமென்ற
தற்காப்புச் சிகிச்சை செய்தும்
மனங்கள் கக்கி விடுகின்றன
கவிதை வாந்திகளை.
உங்கள் கவிதை ஈன்றெடுத்த தத்துக் குழந்தை இது.
கவிஞர் வடிக்கும் கவிதைகள் வாந்தியென்று சொல்ல முடியாது ஜூனைத் அண்ணா..

கவிஞர் விரல்களில் காகிதங்களில் பரிமாறும் அமுதெனக் கொள்ளலாம்..

எண்ணங்களும் நாற்றமென சொல்ல முடியாது...

கவிதை உருவாக்கும் எண்ணங்கள்... எல்லா வகை உணர்வுக் கலவையையும் ஏற்படுத்தும்..வல்லமைப் படைத்தது. எழுதப்படும் கவிக் கருவினைப் பொருத்தே... எண்ணங்களின் வாசனை அமையும்.

கவிதை அழகு... நாற்றம் என்பது.... தூய தமிழில் நல்ல வார்த்தை தான் முகில்ஸ் அண்ணா..

பூவின் நறுமணத்தைக் கூட நாற்றமென்று முன்னர் சொல்லாடல் பயன்படுத்தியதாக எங்கோ படித்த நினைவு..

கவிதை பற்றிய கவிதைக்கு பாராட்டுகள்.

நதி
16-07-2008, 08:51 AM
வியர்வை வியக்க வைக்கும். தாக்கும் உணர்வின் வெப்பத்துக்கு ஏற்ப மாறும் மணம் காட்டும். பொருத்தப்பாடு கனகச்சிதம்.

வாந்தி வரும் சந்தர்ப்பங்கள்..

ஒவ்வாமை
அதீத உட்கொள்ளுகை
"பித்த"வாந்தி
இன்னபிற...

எது எப்படியோ வாந்திகள் கவிஞர்கள் எழுதும் சில கவிதைகளைப் போல காரணத்தை அப்பட்டமாகக் காட்டிவிடுகின்றன. நாயகர்களுக்கு பாராட்டுகள் .

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-07-2008, 09:02 AM
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் பூமகள்.

ஆதி
16-07-2008, 09:04 AM
கவிதை நாற்றத்தில் ஐயா என்ன ஞானம் போதிக்கிறார் என்றறியவே உள்வந்தேன்

உணர்வின் வெப்பத்தால்
எண்ணத் தோலில்
வடியும் வார்த்தை வியர்வையைக்
காகிதத்தில் துடைக்கிறேன்
காற்றில் பரவுகிறது
கவிதை நாற்றம்

என்று வாசித்த உடனே.. வார்த்தைகள் வடம் போட்டுக் கட்டிவிட்டன மனதை..

சிக்கன கவிதையானாலும் சிங்கார கவிதை ஐயா..

நாற்றம் இழந்த
நறுமணத்தை மீண்டும்
புழக்கத்திற்கு கொணர்ந்தமைக்கு
வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா..

pkarthi28
16-07-2008, 09:18 AM
உமது கவிதையின் நாற்றத்தை நுகர்ந்து(படித்து) சுவைத்தேன்..!
மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள்... :)

நாகரா
16-07-2008, 09:37 AM
ஹஸனீ, பிச்சி, பூமகள், ரவித்திரன், ஆதி, கார்த்தி உம் உற்சாக வரிகளுக்கு நன்றி பல.

ஷீ-நிசி
16-07-2008, 02:19 PM
கவிஞர் வடிக்கும் கவிதைகள் வாந்தியென்று சொல்ல முடியாது ஜூனைத் அண்ணா..

கவிஞர் விரல்களில் காகிதங்களில் பரிமாறும் அமுதெனக் கொள்ளலாம்..

எண்ணங்களும் நாற்றமென சொல்ல முடியாது...

கவிதை உருவாக்கும் எண்ணங்கள்... எல்லா வகை உணர்வுக் கலவையையும் ஏற்படுத்தும்..வல்லமைப் படைத்தது. எழுதப்படும் கவிக் கருவினைப் பொருத்தே... எண்ணங்களின் வாசனை அமையும்.



என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களும் இவைகளே!

கவிதையில் வார்த்தைகள் அருமை!

இளசு
16-07-2008, 05:27 PM
பொன்மலர் நாற்றமுடைத்து - சங்கப்பாடல் வரி..
படித்தவன் அடக்கமாய் இருந்தால்
பொன்னாலான பூவுக்கு மணமும் இருப்பதுபோல் அத்தனை சிறப்பாம்!

துர்நாற்றம் வேறு ...!

முகில்ஸ், பாமகள் சொன்னதுபோல் -
நாற்றம் இன்றைய வழக்கில் துர்நாற்றத்தைச் சுட்டவே பயன்பாட்டில்..

----------------------------

வேர்வைகளில் சுகந்தம் காணும் கணங்களும் உண்டு..
வாந்திகளால் விஷம் முறிந்து உயிர் பிழைப்பதும் உண்டு..

நேரம், இடம் பொருத்தது எல்லாமே!

நாகராவின் முதல் கவிதைக்கும்
ஜூனைத்தின் உடன்கவிதைக்கும்
இரட்டைப் பாராட்டுகள்!

mukilan
16-07-2008, 05:31 PM
நாற்றம் என்ற சொல் தற்பொழுது தவறாக துர்நாற்றத்தை மட்டும் குறிப்பதால் தலைப்பைக் கண்டு கொஞ்சம் முகம் சுளித்துக் கொண்டு வந்தாலும் அழகுத் தமிழில் உங்கள் கவியின் நறுமணம் கண்டு மன மகிழ்ந்தேன். கவிதைக்கு நன்றி.

ஆம் அண்ணா நான் தற்பொழுது தவறாக என்று கொடுத்த அழுத்தத்தை தங்கை கவனிக்கத் தவற விட்டாரென நினைக்கிறேன்.:D

நாகரா
17-07-2008, 02:27 AM
ஷீ-நிசி, இளசு. உம் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கு நன்றி

பாலகன்
17-07-2008, 03:16 AM
உணர்வின் வெப்பத்தால்
எண்ணத் தோலில்
வடியும் வார்த்தை வியர்வையைக்
காகிதத்தில் துடைக்கிறேன்
காற்றில் பரவுகிறது
கவிதை நாற்றம்

உணர்வின்
எண்ணத்தில்
வடியும் வார்த்தையை
காகிதத்தில்................
காற்றில்
கவிதை
படிச்சிட்டு ராக்கெட்டு செய்துட்டாங்களா அண்ணா

வெப்பத்தால்
தோலின்
வியர்வையை
துடைக்கிறேன்
பரவுகிறது
நாற்றம்
கவிதை எழுதிற ஆசையில் மறந்துவிட்டீர்களோ மின்விசிறியை ஓடவிட.........

அன்னப்பறவை வேலையை நான் எடுத்துக்கிட்டேன்

அன்புடன்

நாகரா
17-07-2008, 03:25 AM
உணர்வின்
எண்ணத்தில்
வடியும் வார்த்தையை
காகிதத்தில்................
காற்றில்
கவிதை
படிச்சிட்டு ராக்கெட்டு செய்துட்டாங்களா அண்ணா

வெப்பத்தால்
தோலின்
வியர்வையை
துடைக்கிறேன்
பரவுகிறது
நாற்றம்
கவிதை எழுதிற ஆசையில் மறந்துவிட்டீர்களோ மின்விசிறியை ஓடவிட.........


ராக்கெட்டு செய்தால் இன்னும் அசுர வேகத்தில் பரவுமே கவிதை நாற்றம்!

மின்விசிறி ஓட, அதிலிருந்து வரும் சூடுக் காற்று, உணர்வின் வெப்பத்தை இன்னும் அதிகப் படுத்துகிறதே, தம்பி!

உன் வித்தியாசமான பார்வைக்கு நன்றி பல, அன்புத் தம்பி

சிவா.ஜி
17-07-2008, 04:26 AM
வெகு அழகாகப் பொருந்தி வந்த வார்த்தைகள். எண்ணங்களின் வியர்வை கவிதை நாற்றமாக....உயரிய சிந்தனை.

அந்த நாற்றத்தால் ஈர்க்கப்பட்டு, அதனுள் அமிழ்ந்து அந்த அமிழ்தை சுவைக்க நாடி வந்த ரசிகனின் வாழ்த்துகள் நாகரா அவர்களே.

நாகரா
17-07-2008, 04:43 AM
கவிதை நாற்றத்தால் ஈர்க்கப்பட்ட உமக்கு நன்றிகள் சிவா