PDA

View Full Version : போதி மரங்களும், ஹிரா குகைகளும்.எஸ்.எம். சுனைத் ஹஸனீ
15-07-2008, 06:53 AM
நின்று போகும் அழியா நிகழ்வுகளுக்கு
ஜீவனுடைக்கும் வருத்தல்கள் மட்டுமே
உந்துதல்களின் மூலமென்றெல்லாம் இல்லை

அந்நிகழ்வுகளின் காலமும்
அது நிகழும் சூழ்நிலைகளுமே
அந்நிகழ்வை உறுதி செய்வதாய்
தலைகீழாய் நின்று சொல்வதும்
கண்ணை மூடிக்கொண்டு சொல்வதும்
அவரவர் ஆத்ம விருப்பங்கள்

விரல்களுக்குள் பொருள் சிக்கும் வரை
அதன் ஊனத்தை மனம் ஏற்பதில்லை

சிக்குண்டுச் சிதறும் சில காகிதங்களும்
பாதையின் செடி கொடிகளும்தான்
இன்னமும் உலாவிக் கொண்டிருக்கும் காற்றை
அவ்வப்போது ஆஜர் படுத்துகின்றன.

கவிதைக் கருவும் வார்த்தைகளும்
நுனி நாக்கில் நடனமாடினாலும்
பேனாவும் வெற்றுத்தாளுமில்லாமல்
அவைகள் வெற்று உளறல்கள்தான்.

சில எலிகள் புலிகளாவதும்
சில சிங்கங்கள் ஓநாய்களாவதும்
அவைகளுக்கு முன்பே
அந்தந்த இடங்களும் காலங்களும்
நிர்ணயித்து விடுகின்றன.

சில இடம் பொருள் கால ஏவல்கள்
ஒருங்கணித்து சிலருக்களித்த ஞானங்களை
காவிகளும் கமண்டலங்களுமே
தந்ததாய் சொல்லி அலைகிறோம்

எழுதப்பட்ட ஞானத்தை அடையக்கூட
புத்தருக்கு ஒரு போதிமரமும்
நபிகளாருக்கு ஒரு ஹிரா குகையும்
அத்தியாவசியப்பட்டிருக்கிறது

எதற்காவது எங்காவது எப்பொழுதாவது
வெறுமனே சென்று திரும்பி வந்ததற்காய்
அதிகம் அலுத்துக்கொள்ளாதீர்கள்
உள்ளுக்குள் உங்களையறியாமல்
அந்நேரம் தைக்கப்பட்டிருக்கும் கீற்றல்களை
வேறு பயணத்தில் அறிந்து கொள்வீர்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

நாகரா
15-07-2008, 03:47 PM
நின்று போகும் அழியா நிகழ்வுகளுக்கு
ஜீவனுடைக்கும் வருத்தல்கள் மட்டுமே
உந்துதல்களின் மூலமென்றெல்லாம் இல்லை

அந்நிகழ்வுகளின் காலமும்
அது நிகழும் சூழ்நிலைகளுமே
அந்நிகழ்வை உறுதி செய்வதாய்
தலைகீழாய் நின்று சொல்வதும்
கண்ணை மூடிக்கொண்டு சொல்வதும்
அவரவர் ஆத்ம விருப்பங்கள்

விரல்களுக்குள் பொருள் சிக்கும் வரை
அதன் ஊனத்தை மனம் ஏற்பதில்லை

சிக்குண்டுச் சிதறும் சில காகிதங்களும்
பாதையின் செடி கொடிகளும்தான்
இன்னமும் உலாவிக் கொண்டிருக்கும் காற்றை
அவ்வப்போது ஆஜர் படுத்துகின்றன.

கவிதைக் கருவும் வார்த்தைகளும்
நுனி நாக்கில் நடனமாடினாலும்
பேனாவும் வெற்றுத்தாளுமில்லாமல்
அவைகள் வெற்று உளறல்கள்தான்.

சில எலிகள் புலிகளாவதும்
சில சிங்கங்கள் ஓநாய்களாவதும்
அவைகளுக்கு முன்பே
அந்தந்த இடங்களும் காலங்களும்
நிர்ணயித்து விடுகின்றன.

சில இடம் பொருள் கால ஏவல்கள்
ஒருங்கணித்து சிலருக்களித்த ஞானங்களை
காவிகளும் கமண்டலங்களுமே
தந்ததாய் சொல்லி அலைகிறோம்

எழுதப்பட்ட ஞானத்தை அடையக்கூட
புத்தருக்கு ஒரு போதிமரமும்
நபிகளாருக்கு ஒரு ஹிரா குகையும்
அத்தியாவசியப்பட்டிருக்கிறது

எதற்காவது எங்காவது எப்பொழுதாவது
வெறுமனே சென்று திரும்பி வந்ததற்காய்
அதிகம் அலுத்துக்கொள்ளாதீர்கள்
உள்ளுக்குள் உங்களையறியாமல்
அந்நேரம் தைக்கப்பட்டிருக்கும் கீற்றல்களை
வேறு பயணத்தில் அறிந்து கொள்வீர்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி


எந்நிகழ்வுகளாலும் உடையாத
உடைக்க முடியாத
நித்திய ஜீவனென்னும்
இன்ப உந்துதல்
உன் மூலம்

காலத்தின்
சூழ்நிலைகளின்
கைதி நீயென்று
உன் நிஜ நிலையைத்
தலை கீழாக்கும்
கண்மூடித்தனத்தை
உன் ஆன்ம ஒளியால்
கண்டு கொண்டு
நிகழ்வுகளின் எஜமானனாகு

விரல்களில் சிக்கிய பொருள்
அருவ அருளின் திட உருவமே
என்று மனம் உணர
பொருளின் ஊனம்
அருளில் கரையும்

அஃறிணைகளில் சலனமூட்டும்
அமுதக் காற்று
உயர்திணை உன்னை
ஏன்
இன்னும் உயிர்ப்பிக்கவில்லை?

அருவக் கடவுளின் கருவில்
உருவான அமரக் கவிதை
நீ.
உன்னை உச்சரித்தே
தன் மௌன ஆழத்தை
உணர்கிறான்
கடவுள்.
உன் நுனி நாக்கில்
நடனமிடும்
ஜீவனுள்ள வார்த்தையை
உச்சரிக்க
இன்னுமா தயக்கம்?
உன் மெய்யென்னும்
வெற்றுத் தாளில்
மனப் பேனா
பதியட்டும்
அவ்வார்த்தையின் தடம்

இடமும் காலமும்
முடித்த
பரிணாம முடிவில்
இடமும் காலமும் மீறி
நீ பாய்ந்தால் மட்டுமே
உருவாகும்
உன் புதுப் பரிமாணம்

எழுதாத ஞான தொனி
உன் இருதய குகையில் கேட்டு
ஆன்ம நேயனாம்
இறை தூதனாய்ப்
புத்தனாய்ப்
புது மறை எழுது

அலுவல் பளுக்களை உதறி
நீ
சும்மா இருந்த போது
உன்னில் கீறப்பட்டவைகளைப்
புரிந்து கொள்ளப்
பரிணாமப் பயணத்தின் முடிவில்
நீ
பாய வேண்டும்
வேறு பயணப் பாதையில்
________________________________________________________________________
உம் கவிதையின் கரு
ஆழமாயிருக்கிறது
அதை ஆக்க பூர்வமாக
ஆ(நா)ன்மீக நோக்கில்
இவ்வாறு புரிந்திருக்கிறேன்.
என் புரிதல் சரியா?!

வாழ்த்துக்கள் ஹஸனீ

இளசு
15-07-2008, 08:13 PM
ஜூனைத்தின் கவிதை -
ஜீவாத்மா பரமாத்மாவாகும் சாத்தியங்கள் எங்குமுண்டு..
எப்படி..எப்போது - என்பது ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது..
சூழல் குறியீடுகள் - சாமான்யர்கள் நமக்காக..மட்டுமே..
மற்றபடி நடப்பவை நடந்தேற வேண்டியவை..

எனச் சொல்வதாய் நானும் உணர முயல்கிறேன்..

இன்னும் ஆழமாய் நாகரா அவர்கள் உணர்வுரை பதித்திருக்கிறார்..

ஒரு மேலான ஞானதளத்தில் உலவும் கவிதை..

எட்டிப் பார்வையால் மட்டுமாவது துலாவ முயலும் நான்..!!!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-07-2008, 06:31 AM
[QUOTE=நாகரா;366515]எந்நிகழ்வுகளாலும் உடையாத
உடைக்க முடியாத
நித்திய ஜீவனென்னும்
இன்ப உந்துதல்
உன் மூலம்

காலத்தின்
சூழ்நிலைகளின்
கைதி நீயென்று
உன் நிஜ நிலையைத்
தலை கீழாக்கும்

நான் ஒரு புள்ளியைத்தான் தொட்டு வைத்தேன் நீங்கள் ஒரு பாதை இட்டு விட்டீர்கள். மிக்க நன்றி நாகரா அண்ணா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-07-2008, 06:35 AM
வெறும் மனித முயற்சிகளோடு மட்டுமல்லாமல் ஒருவனின் உயர்விற்கு அவனின் இடம் பொருள் காலம் ஏவல் பெரும் பங்காற்றுகின்றன என்பதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன் இளசு அண்ணா. இந்த கண்ணோட்டத்தில் ஒரு முறை படித்து பாருங்கள்.

பிச்சி
16-07-2008, 08:38 AM
இங்கே ஞானியர்கள் மட்டும் புழங்குவார்கள் போல் இருக்கிறதுஏ, கவிதை நன்றாக இருக்கிறது. .எம்.சுனைத் ஹஸனி அவர்களே

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-07-2008, 08:59 AM
அப்டியெல்லாம் இல்ல பிச்சி. உங்களைவிட ஞானியெல்லாம் நான் இல்ல. பாராட்டுக்கு நன்றி