PDA

View Full Version : வினையோடு விளையாடி..அமரன்
14-07-2008, 07:44 AM
உங்கள் ஹீத்ரூ விமானநிலையத்தின் புதிய ஓடுபாதையிலிருந்து முதன் முதலாகப் பறந்த விமானம் என்னும் வரலாற்றைப் பதிவுக்காகக் காத்திருக்கும் விமானம்...

அந்தப்பதிவில் தாமும் இருக்க விரும்பும் முதல் பிரியர்கள்.. யாரையும் அசட்டை செய்யாத முத்தப் பிரியர்கள்... இவர்களுடன் நமக்குத் தேவையான இருவரும் இருந்தனர்.

சுற்றும் முற்றும் கண்கள் மேய்ந்த கண்களுடன், தமக்குள் பேசி சிரித்த வண்ணம் கொண்ட இருவரும் நீல நிற டீசல் மார்க் ஜீன்ஸ்பான்டில் இருந்தார்கள்.. பான்டில் ஆங்காங்கே காணப்பட்ட பொத்தல்களில் செல்வம் நிறைந்திருக்க மேலே அணிந்திருந்த இறுக்கமான வெள்ளை அரைக்கரை டீ சர்ட்டின் ஆங்கில எழுத்துகளில் நாகரிகம் மின்னியது. ஹை ஹீல் சூ அவர்களின் உயரத்தை இன்னும் அதிகமாகக் காட்டியது.

அவர்களின் தலைக்குமெலே சுவரில் ஒட்டியிருந்த ஒலிபெருக்கி சங்கீதமாய் தொண்டையை செருமிவிட்டு "இன்னும் சற்று நேரத்தில் போக்குவரத்து துறை மந்திரி வந்துவிடுவார்" என்று அறிவித்தது. அறிவித்து முடிக்கவும் கறுப்புக்கலர் ஜக்குவார் காரின் கதவைத் திறந்துகொண்டு மந்திரி இறங்கவும் சரியாக இருந்தது.

பெரிதான பாதுகாப்பு வளையங்களோ கோசம்போடும் தொண்டர்களோ பந்தாவான கெடுபிடிகளோ இன்னபிற மந்திரிக்கே உரித்தான ஆர்ப்பாட்ட அடையாளங்களோ எதுவுமின்றி சாதாரணமாக வந்திறங்கிய மந்திரியை பார்த்த அக்கணத்தில், என்னதான் சிரத்தை எடுத்து அலங்காரம் செய்திருந்தாலும் அவையெல்லாம் பூக்களென சொன்னது முகத்தில் படர்ந்த நம்ம ஊரு வேர்.

"என்னடி இது.. தனிப்பட்ட பாதுகாப்புப்படை இல்லை. ஏர் போட் செக்கியூரிட்டி வேறு குறைவாக இருக்கு. மந்திரியை இலகுவில் கொன்றிடலாம் போல இருக்கு" பகடியாய் ஒருத்தி சொல்ல அதைக்கேட்ட மற்றவள் மையமாய்ச் சிரிக்க ஹெட்போன் சமேதராய் அவர்களை நெருங்கினார் விமான நிலையத்தின் பாதுகாப்பு "உத்தி"யோகத்தர்.

பூமகள்
14-07-2008, 08:05 AM
சில நேரங்களில்...

இடம் பொருள் ஏவல் தெரியாமல் பேசிவிடுவது.. எவ்வகை ஆபத்தை விளைவிக்குமென்று....... புரியாமல் பேசிவிடும் பலர் அனுபவிக்கும் திண்டாட்டம் இது..

பெரியண்ணாவின் இடம் பொருள் ஏவல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3048) பதிவை நினைவு கூர்கிறேன்..!!

சிறிய சம்பவ பின்னணியில்.. அமைந்த கதை.. எதுக்கும் இன்னொரு முறை படித்து முழுதும் புரிய முற்படுகிறேன்..!

வெகு நாட்களுக்கு பின் ஒரு கதை வடித்துப் பதித்தமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் அமரன் அண்ணா. :)

ஓவியன்
14-07-2008, 09:35 AM
"உத்தி"யோகத்தருக்கும் தமிழ் தெரியும் போல..!! :)

விகடன்
14-07-2008, 10:30 AM
யாருக்குமே இடையூறாக இல்லாது செவ்வனே சேவை புரியும் காவல்த்துறையை பாராட்டுவதா?
இல்லை
இடம் பொருள் ஏவல் தெரியாமல் மனதிலிருந்த ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் சொல்லிய அந்த பேதையின் நிலை கண்டு வருந்துவதா என்று தெரியவில்லை.

கடுகு சின்னதென்றாலும் காரம் பெரிதாக இருப்பதுபோல கதையின் அளவு சின்னதானாலும் அதன் மூலம் சொல்லவந்த விடயம் உரயோங்கி நிற்கின்றது.

மன்மதன்
14-07-2008, 03:13 PM
நறுக்.. சிறுகதை..

ரசித்தேன்...

logini
23-07-2008, 06:31 AM
இலங்கையின் தற்போதைய நிலமை இது தான்.

இளசு
23-07-2008, 06:36 AM
கிண்டல், நக்கல்களுக்கு இது இடமில்லை என விமான நிலையங்களில் எச்சரிக்கை பார்த்திருக்கிறேன்..

படிப்பினை ஊட்டும் கதை.

பாராட்டுகள் அமரன்..

MURALINITHISH
26-08-2008, 08:54 AM
அட வாயை கொடுத்து மாட்டிகிட்டாங்களே இதுக்குதான் சொல்றது அக்கம் பக்கம் பாத்து பேசுன்னு

அமரன்
26-08-2008, 09:00 AM
"உத்தி"யோகத்தருக்கும் தமிழ் தெரியும் போல..!! :)
என்ன பாஸ்...நம்ம பொண்ணுங்க எப்பங்க பப்பளிக் பிளேஸ்ல தமிழ்ல பேசி இருக்காங்க. நாமதானே தமிழாக்கம் செய்ய வேண்டி இருக்கு.

கருத்தளித்து ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.

தீபா
26-08-2008, 11:23 AM
அடப்பாவமே!! சும்மா பேசினதுக்கேவா!!! நறுக்' குறுங்கதை.

tamilambu
26-08-2008, 02:36 PM
இலங்கையின் தற்போதைய நிலமை இது தான்.

குறிப்பாக இலங்கைத்தமிழர்களின் நிலை.

அமரன்
26-08-2008, 09:13 PM
இலங்கை தாண்டி உலக நிலை என்ற வளர்ச்சியை(!) அடைந்துவிட்டது என்பதைக் காட்டவும் இந்தக்கதை. யாரை நோவது... யாரைக் குற்றம் சொல்வது.

நன்றி தென்றல்.. நன்றி தமிழன்பு