PDA

View Full Version : இலங்கைக்கு போகாதே.. : சரத்குமார் எதிர்ப்பு.

ராஜா
13-07-2008, 02:42 PM
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை செல்லக் கூடாது: சரத்குமார்

சென்னை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் தடுக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் ஆறுகாட்டுத்துறை என்னும் மீனவ கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், நாராயணசாமி, வாசகன் என்ற இரண்டு மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையில் நெஞ்சைப் பிளப்பதாக இருக்கிறது.

இலங்கை தாக்குதலும், தமிழக மீனவர்கள் அதற்கு பலியாவதும் தொடர்கதையாகி இருக்கும் நிலையில், இந்தியர்களின் குறிப்பாக தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொள்ளும் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பாக் ஜலசந்தி மீன்வளம் நிறைந்த பகுதி, வேதாரண்யம் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இந்தப் பகுதியைத் தான் பயன்படுத்த முடியும். இந்தப் பகுதியில் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்களை இனியும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. பாக் ஜலசந்தி முழுவதும், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை இந்திய அரசு பெற்றுத்தர வேண்டும். தமிழக முதல்வர் அறிக்கையும், கடிதமும் மட்டும் அனுப்பிக் கொண்டு இருக்காமல், உடனே டெல்லிக்கு விரைந்து சென்று பிரதம மந்திரியை சந்தித்து மீனவர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரைமேல் பிறந்து, கடல் தண்ணீரில் வாழ்ந்து அன்றாடம் உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவ நண்பர்களின் உயிரைப் பறிக்கும் இலங்கை கடற்படையையும், இத்தகைய கொடும் செயல்களை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் இலங்கை அரசையும், இந்தியா வன்மையாக கண்டிக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு விளையாட செல்வதை உடனடியாக தடுக்க வேண்டும். தமிழன் என்றால் நாதியற்றவனா? தமிழனுக்கு தமிழ்நாட்டில் பாதிப்பு என்றால் மத்திய அரசு மௌனத்தை தான் கடைப்பிடிக்குமா?

எனவே மீனவர்கள் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடி கொலை வெறித்தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையையும், இலங்கை அரசையும், உடனடியாக கண்டித்து இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தாவிட்டால் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Source: Oneindia

பாலகன்
13-07-2008, 04:40 PM
சரியான முறையில் எதிர்ப்பை காட்டிய சரத்திற்கு வாழ்த்துக்கள்

ஆடு பகை
குட்டி உறவா?

நல்லாயிருக்குதே நியாயம்

தகவலுக்கு நன்றி ராசா

அன்புடன்

aren
14-07-2008, 05:39 AM
இதற்கும் இந்தியா கிரிக்கெட் விளையாட இலங்கை செல்வதற்கும் சம்பந்தம் இல்லை.

நம் இந்திய கடற்படையினர் இந்தியா இலங்கை எல்லையில் காவல் இருக்கவேண்டும். அப்படி செய்தால் இந்த மாதிரியான கொலைகள் நடக்காமல் தடுக்கமுடியும்.

ராஜா
14-07-2008, 05:52 AM
மாட்டிரிக்ஸ் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

மேலும் நம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டியிருக்கமாட்டார்கள் என்று உறுதியாகக் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாதபோது, சரத் கூறுவதுபோல, இரு நாட்டு அணியும் பங்குகொள்ளும் போட்டிகளை ரத்து செய்வது முடியாத காரியம்.

கண்மணி
14-07-2008, 05:56 AM
அதைவிட கிரிக்கெட் மைதானத்தில் இரு நிமிடம் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செய்வது இன்னும் மனதில் அறையக் கூடிய போராட்டம்..

ஆனால் யோசிக்க வேண்டிய விஷயங்களும் உண்டு.

1. விளையாட்டில் இது போல அரசியல் நுழைக்கலாமா?
2. இது அரசுகள் தூதுவர்களைக் கொண்டு தீர்க்க வேண்டிய பிரச்சனை.. அதற்காக தமிழக / இந்திய அரசை நிர்பந்திப்பது தான் முக்கியம்..

pasaam
14-07-2008, 06:19 AM
இரண்டு அரசுகளையும் பொறுத்த அளவில் இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். நம் தமிழர்களைக் காப்பாற்ற இனி ஆணடவன் தான் புறப்படவேண்டும்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்................

ஓவியன்
14-07-2008, 10:55 AM
இந்த விடயம் தொடர்பாக...

தமிழக அரசு மவுனமாக இருப்பது,
பேசினாலும் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது,
பேசியும் மத்திய அரசு கண்டு கொள்ளாவிட்டால் தமிழக அரசு மவுனம் காப்பது,
விஜயகாந் பேசுவது,
சரத்குமார் பேசுவது...!!

எல்லாமே அரசியல் தான்...!!

arun
14-07-2008, 06:44 PM
தானும் அரசியல்வாதி என்று காட்டி கொள்வதற்காக தான் இந்த அறிக்கை

மற்ற படி தமிழன் மேல் உள்ள உண்மையான பாசத்தால் அல்ல

அறிஞர்
14-07-2008, 06:47 PM
சின்ன புள்ளை அரசியல்வாதி...

மற்றவர்கள் போல் உபயோகமற்ற செயலுக்காக குரல் கொடுக்கிறார்..

தீபன்
15-07-2008, 12:54 PM
இதற்கும் இந்தியா கிரிக்கெட் விளையாட இலங்கை செல்வதற்கும் சம்பந்தம் இல்லை.

நேரடி சம்பந்தமில்லைத்தான். ஆனால் உலகளவில் பிரபலமான விடயங்களில் செய்யப்படும் போரட்டங்கள் உலகளாவிய ரீதியில் பிரச்சினையை எடுத்துச் சொல்லுமல்லவா...? இது அந்த பிரச்சினைமேல் கவன ஈர்ப்பாக பயன்படுமென்பதும் ஒரு சம்பந்தம்தான்.

நம் இந்திய கடற்படையினர் இந்தியா இலங்கை எல்லையில் காவல் இருக்கவேண்டும். அப்படி செய்தால் இந்த மாதிரியான கொலைகள் நடக்காமல் தடுக்கமுடியும்.

நல்ல நகைச்சுவை... அவங்கதான் இலங்கைக்கு காவல் காக்க வந்திட்டாங்களே... கொந்தளிக்கும் தமிழக மீனவரால் இலங்கை படையினருக்கு ஆபத்து வந்துவிடுமென்ற அச்சமோ...:lachen001:
(தன்னாட்டு மக்களை கொன்ற நாட்டுப் படைக்கு துணையாக காவல் காக்கும் வள்ளுவரின் சிந்தனைப்படி நடக்கும் ஒரே நாடு இந்தியாதான்:icon_ush:)

தீபன்
15-07-2008, 01:01 PM
மாட்டிரிக்ஸ் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.

மேலும் நம் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டியிருக்கமாட்டார்கள் என்று உறுதியாகக் கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாதபோது, சரத் கூறுவதுபோல, இரு நாட்டு அணியும் பங்குகொள்ளும் போட்டிகளை ரத்து செய்வது முடியாத காரியம்.

எல்லைதாண்டியிருந்தால் மட்டும் சுட்டுக்கொல்லலாமா...? ஆயுதமில்லாத மீனவரை ஒரு ஆயுதப்படை கைது செய்ய முடியாதா..? உங்கள் நாட்டு மக்களின் படுகொலைக்கே உங்களின் நிலைப்பாடு வியப்பாயிருக்க்றது... காந்தி தேசத்தவரின் உணர்வுகள் இப்படியா சிந்திக்கிறது... உயிர்களே விளையாட்டாகிப்போய் விளையாட்டு உயிராகி விட்டதா...?

உங்கள் கூற்று மறைமுகமாக அப்படுகொலைகளை நியாயப்படுத்துவதாக அமைவதால்தான் இப்படி கேட்க தோன்றியது. தப்பாக நினைக்காதீர்கள் மாம்ஸ்.:lachen001:

ஆதி
15-07-2008, 01:07 PM

இலங்கை எல்லையில் இருக்கும் கடல் பகுதியில் அதிக மீன்கள் கிடைப்பதால் நம் மீனவர்கள் அடிக்கடி எல்லையை கடக்கவே செய்கிறார்கள்.. அதற்காக அவர்களை இலங்கை கடற்படை கைதி செய்வது நியாயமானதே.. ஆனால் சுட்டுக்கொல்வது என்பது நியாயமில்லை.. இதைவிட அநியாயம் இலங்கை பிரதமர் சுட்ட இலங்கை படையினர் இல்லை விடுதலை புலிகள் என்று நடந்த சம்பதில் இருந்து கைகழுவி இருப்பதே..

விளையாடாமல் இருப்பதாலோ, அஞ்சலி செலுத்துவதாலோ இந்த சம்பவங்கள் தொடராமல் இருக்க போவதில்லை..

இலங்கையில் நடக்கிற பிரச்சனை உலகுக்கே தெரியும்.. ஏற்கனவே அவர்கள் கிலியில் உள்ளார்கள் இந்த சூழலில் தமிழ் பேசும் யாரையும் புலிகளாகத்தான் பார்ப்பார்கள்.. ஏனெனில் நாம் மீந்தான் பிடிக்கிறோமா ? இல்லை எதையாவது கடத்துகிறோமா ? என்றெப்படி தெரியும் அவர்களுக்கு..

என்னை பொருத்தவரை நாம் எல்லை கடக்காதவரை.. அவர்கள் துப்பாக்கி எடுக்க மாட்டார்கள்..

தீபன்
15-07-2008, 01:12 PM
அதைவிட கிரிக்கெட் மைதானத்தில் இரு நிமிடம் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செய்வது இன்னும் மனதில் அறையக் கூடிய போராட்டம்..

ஆனால் யோசிக்க வேண்டிய விஷயங்களும் உண்டு.

1. விளையாட்டில் இது போல அரசியல் நுழைக்கலாமா?
2. இது அரசுகள் தூதுவர்களைக் கொண்டு தீர்க்க வேண்டிய பிரச்சனை.. அதற்காக தமிழக / இந்திய அரசை நிர்பந்திப்பது தான் முக்கியம்..
உங்கள் வளிமுறை குறைந்த பட்சமாவது செய்யவேண்டிய ஒன்றுதான். ஆனால் அப்படி நடந்தால் விளையாட வந்துவிட்டு அரசியல் பேசியதாகிவிடாதா... எதிர்ப்பையும் நேரடியாக காட்டுவதுதானே நேர்மை. அப்படியானால் விளையாடாமலே விடுவதுதானே சரியான எதிர்ப்பு!

விளையாட்டில் அரசியல் கலக்கலாம். காரணம் எதிரணி அரசியல் கலந்த அணிதானே! விளையாட்டில் காட்டிய தகுதிக்குத்தானே சாதாரண சிப்பாயாகவிருந்த அஜந்த மெண்டிஸ் லெப்ரினன்ட்டாக பதவி உயர்வு பெற்றார். அத்தகைய அரசியல் கலந்த அணியுடன் விளையாடலாமென்னும்போது தங்கள் அரசியல் எதிர்ப்பை அந்நாட்டுக்கு எதிராக காட்டுவதில் என்ன தவறு? இது அரசியல் கூட இல்லை. மரணித்த உயிர்களுக்காக செய்யப்படும் மனிதாபிமான செயற்பாடுதானே!

இன வெறுப்புணர்வை காட்டியமைக்காகத்தான் தென்னாபிரிக்க அணி பல ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தது. சிம்பாவே அணி பலதடைகளை சந்தித்தது. பல நாடுகள் ஒலிம்பிக்கில் பங்குகொள்ள முடியாமல் போயின. இதுவெல்லாம் விளையாட்டில் அரசியல்தானே...

விளையாட்டு சகோதரத்துவத்திற்குத்தானேதவிர ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்லவே!

தீபன்
15-07-2008, 01:16 PM
இரண்டு அரசுகளையும் பொறுத்த அளவில் இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். நம் தமிழர்களைக் காப்பாற்ற இனி ஆணடவன் தான் புறப்படவேண்டும்.
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்................
ஆத்திகர்களின் நம்பிக்கைப்படி ஆண்டவன் நேராக வருவதில்லை... அவதாரமாகத்தான் வருவார்...
வந்துவிட்டார்...
கிடைக்கவேண்டியது விரைவில் கிடைக்கும்!

தீபன்
15-07-2008, 01:22 PM
தானும் அரசியல்வாதி என்று காட்டி கொள்வதற்காக தான் இந்த அறிக்கை

மற்ற படி தமிழன் மேல் உள்ள உண்மையான பாசத்தால் அல்ல
யார் சொல்கிறார்கள்.. எதற்காக சொல்கிறர்களென்பது இங்கு முக்கியமல்லவே. அவர் என்ன நோக்கில் சொல்லியிருந்தாலும் சொல்லப்பட்ட விடயம் பாரதூரமானதில்லையா...? ஏழை மீனவரின் துயரம் உறைக்கவில்லையா...?
எடுத்துக்காட்டப்படும் விடயத்தின் பரிமாணத்தை உணராது அதை சொல்பவர்களின் நோக்கங்களைஅலசுவதுதான் பக்கா அரசியல்! யார் குத்தினாலும் அரிசியானால் சரிதான் என்பதுதான் ஏழைகளின் நிலை. அதையேன் விமர்சிகிறீர்கள்?

தீபன்
15-07-2008, 01:26 PM
சின்ன புள்ளை அரசியல்வாதி...

மற்றவர்கள் போல் உபயோகமற்ற செயலுக்காக குரல் கொடுக்கிறார்..

நீங்களுமா....?

சரத்குமாரின் அரசியல் நேர்மைபற்றி பின்னர் பார்க்கலாம். ஆனால், தன்னாட்டு மக்களின் கொலைக்கு எதிர்ப்பு காட்டுவது உபயோகமற்ற செயலா..? இந்த விளையாட்டின்மூலம் வரும் நிதி அரசியலிற்கு செல்லவில்லையென உறுதியாக நம்புகிறீர்களா...?

பூனைக்கு விளையாட்டு... சுண்டெலிக்கு சீவன் போகிறது!

தீபன்
15-07-2008, 01:33 PM
இலங்கை எல்லையில் இருக்கும் கடல் பகுதியில் அதிக மீன்கள் கிடைப்பதால் நம் மீனவர்கள் அடிக்கடி எல்லையை கடக்கவே செய்கிறார்கள்.. அதற்காக அவர்களை இலங்கை கடற்படை கைதி செய்வது நியாயமானதே.. ஆனால் சுட்டுக்கொல்வது என்பது நியாயமில்லை.. இதைவிட அநியாயம் இலங்கை பிரதமர் சுட்ட இலங்கை படையினர் இல்லை விடுதலை புலிகள் என்று நடந்த சம்பதில் இருந்து கைகழுவி இருப்பதே..

விளையாடாமல் இருப்பதாலோ, அஞ்சலி செலுத்துவதாலோ இந்த சம்பவங்கள் தொடராமல் இருக்க போவதில்லை..

இலங்கையில் நடக்கிற பிரச்சனை உலகுக்கே தெரியும்.. ஏற்கனவே அவர்கள் கிலியில் உள்ளார்கள் இந்த சூழலில் தமிழ் பேசும் யாரையும் புலிகளாகத்தான் பார்ப்பார்கள்.. ஏனெனில் நாம் மீந்தான் பிடிக்கிறோமா ? இல்லை எதையாவது கடத்துகிறோமா ? என்றெப்படி தெரியும் அவர்களுக்கு..

என்னை பொருத்தவரை நாம் எல்லை கடக்காதவரை.. அவர்கள் துப்பாக்கி எடுக்க மாட்டார்கள்..
நீங்களும் நியாப்படுத்துகிறீர்களே.... கிலியில் இருப்பவன் பலி கொள்ளல் நியாயமென்கிறீர்களா...? கிலியில் இருப்பவன் எல்லை தாண்டாவிட்டாலும் பலி கொள்ளத்தான் செய்வான்! வல்லரசு நாட்டு மக்களுக்கே இந்த நிலையா...?
தன்நாட்டு மக்கள் எல்லைதாண்டாதிருக்கவேனும் தன் படையை பயன்படுத்தாத அரசு எல்லைதாண்டியவரென சொல்லி சுட்டுக்கொல்லும் அயல் நாட்டு அரசுக்கு சர்வதேச எல்லையால் வரும் ஆயுத கப்பலகளை கண்டுபிடித்து கொடுக்க முடிகிறது...! என்ன விந்தை...!

ராஜா
16-07-2008, 04:19 AM
எல்லைதாண்டியிருந்தால் மட்டும் சுட்டுக்கொல்லலாமா...? ஆயுதமில்லாத மீனவரை ஒரு ஆயுதப்படை கைது செய்ய முடியாதா..? உங்கள் நாட்டு மக்களின் படுகொலைக்கே உங்களின் நிலைப்பாடு வியப்பாயிருக்க்றது... காந்தி தேசத்தவரின் உணர்வுகள் இப்படியா சிந்திக்கிறது... உயிர்களே விளையாட்டாகிப்போய் விளையாட்டு உயிராகி விட்டதா...?

உங்கள் கூற்று மறைமுகமாக அப்படுகொலைகளை நியாயப்படுத்துவதாக அமைவதால்தான் இப்படி கேட்க தோன்றியது. தப்பாக நினைக்காதீர்கள் மாம்ஸ்.:lachen001:

தப்பாக நினைக்க எதுவுமில்லை தீப்ஸ்..!

நீங்கள் ஒரு கண்ணோட்டத்தில் சிந்திக்கிறீர்கள்..

நாங்கள், இப்படியும் நடந்திருக்கக்கூடும் என்கிற கோணத்தில் சிந்திக்கிறோம். இருவர் உயிரிழந்தது சோகம்தான்.. எனினும் தீவிரவாதத்தால் எங்கள் நாடும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் எம் நாட்டு படையினர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டும் அல்லது அங்கீகரிக்கும் நாங்கள் இன்னொரு நாடு தன் பாதுகாப்புக்காக அவ்வாறு செயலாற்றும்போது,இரு வேறு கண்கள் கொண்டு பார்ப்பது எங்களால் இயலாத காரியம்.

தம்பி ஆதி சொன்னதுபோல, மீனவரா, போராளிகளா என்று முடிவெடுக்க படையினருக்கு இருக்கும் அவகாசம் சில விநாடிகளே..!

யாழ் மீனவர்களாலேயே, கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட எங்கள் மீனவர்களின் அவலக்கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

எங்கள் பிரச்னையை உணர்ச்சிகரமாக அல்லாமல், அறிவுகரமாக எப்படி அணுகலாம் என்பது எம் ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.. !

தீபன்
16-07-2008, 10:04 PM

தீவிரவாதமென்பது தனியே சில அமைப்புக்களால் மட்டும் ஏற்படுவதல்ல. சில அரசுகளும் தீவிரவாதமாகதான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் இலங்கை அரச தீவிரவாதத்தையும் இந்தியா தற்போது எதிர்க்கொள்கிறது.
ஆனால், நீங்கள் அது அந்த நாட்டின் இறையாண்மையென சொல்லி அவர்கள் செயல் சரியென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளீர்கள்.
போராளிக்கும் அப்பாவி மீனவர்க்கும் வித்தியாசம் தெரியாததாலேயே அவர்களை சுட்டுக்கொல்வது தவிர்க்க முடியாதது என்பது எவ்வளவு அபத்தம்...?
உணர்வு பூர்வமாக சிந்திக்காமல் அறிவு பூர்வமாக சிந்திக்க தெரிந்த இந்திய அரசு இன்னும் எத்தனை கொலைகளுக்கு பிறகு செயற்படலாமென காத்திருக்கிறது...?

எல்லை தாண்டிவரும் மீனவரை கண்டுபிடித்து சுடும் வல்லமை சிறுநாடான இலங்கைக்கு இருக்கும்பொது எல்லைதாண்டி செல்லும் தன் மீனவரை கண்டுபிடித்து கட்டுப்படுத்த வல்லரசு நாட்டு காவல் படைக்கு முடியாதிருப்பதேன்...?

கொல்லப்பட்டது 2 உயிர்களல்ல. இறுதி சம்பவத்தில் 2 உயிர்கள். அதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இளசு
16-07-2008, 10:24 PM
தமிழக மீனவர்கள் மரணமும், நம் ஈழத்தமிழ்ச்சகோதரர்கள் படும் துயரமும்
எந்நிலையில்லும் கண்டிக்கத்தக்கவை. தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை.

அந்த இரு சகோதரர்களின் இடத்தில் இருந்து பார்த்தால்
வலியும் இழப்பும் புரியும்.

தொடர்ந்து சிங்கள அரசும் கடற்படையும் செய்துவரும்
இந்த அட்டூழியங்கள் இன்னும் நீடிக்க விடலாமா?

அவசரமாய் ஒரு தீர்க்க நடவடிக்கை எடுக்காமல்
ஒரு லட்சம், இரு லட்சம் என உயிர்களை விலைபேசலாமா?

கலைஞரும், இந்திய அரசும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்

எவருமே வன்முறையால் துன்பப்படக்கூடாது..

இப்போது துன்பப்படுபவர்கள் - ஈழச் சகோதரர்கள், மீனவச் சகோதரர்கள்.

அந்தப் பரிவுடன் இப்பிரசினையை அணுகுவோம்.

ராஜா
17-07-2008, 03:33 AM
தீ
போராளிக்கும் அப்பாவி மீனவர்க்கும் வித்தியாசம் தெரியாததாலேயே அவர்களை சுட்டுக்கொல்வது தவிர்க்க முடியாதது என்பது எவ்வளவு அபத்தம்...?

பேரறிவாளர் தீபனுக்கு நன்றி..!

தீபன்
17-07-2008, 10:53 PM
பேரறிவாளர் தீபனுக்கு நன்றி..!
நன்றி மாமன்னரே!

மேலதிக தகவலுக்காக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தை அப்படியே இங்கு தருகிறேன்.

தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்: "தினமணி 19.07.2008"

கோடியக்கரை பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் கொல்லப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 250-க்கும் மேல்.

தமிழக மீனவர்கள்மீது சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கைது செய்து இழுத்துச் செல்வதும், படகுகளையும் மீன்பிடிக்கும் சாதனங்களையும் சேதப்படுத்துவதும் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால், பலமுறை சிறிலங்கா இராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து நமது மீனவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். உலங்குவானூர்தியில் வந்து சுட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவர்களைத் தாக்கவோ, தடுக்கவோ, அவர்களது உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தவோ இந்திய கடல்பாதுகாப்புப் படையினர் ஒரு தடவைகூட முயற்சி எடுக்காதது ஏன் என்பதுதான் புயாத புதிர்.

கச்சதீவை சிறிலங்காவுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது 1974 ஆம் ஆண்டு.

அப்போது இன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி இருந்தது. திமுகவுக்கும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும் சுமூகமான உறவு இருக்கவில்லை என்பது உண்மை.

ஆனால் அசுரப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த திமுக, இப்போது சேது சமுத்திரத் திட்டத்துக்காக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று களமிறங்கியதுபோல கச்சதீவு பிரச்சினையில் தமிழக உரிமைக்காக வலிமையாகக் குரல் கொடுத்ததா என்றால் இல்லை.

"இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்து வரும் மீன்பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சதீவுக்குச் சென்று வரும் உரிமை ஆகியவை உறுதிப்படுத்தப்படுகிறது" என்று அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் ஸ்வரண்சிங் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்திருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், கச்சதீவில் இந்திய உரிமையைத் தாரை வார்த்துக்கொடுக்கிறோம் என்று அரசைக் கண்டித்து கேள்வி எழுப்பியவர் பின்னாளில் பிரதமரான அன்றைய ஜனசங்க உறுப்பினர் அடல் பிகாரி வாஜ்பாய். அவரது கேள்விக்குத் தரப்பட்ட பதில்தான் மேலே குறிப்பிட்டது.

1976 ஆம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களால் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மேலே குறிப்பிட்ட உரிமையும் பறிக்கப்பட்டது. கச்சதீவு சிறிலங்காவிலிருந்து 10 கடல் மைல்கள் தூரத்திலும், இந்திய எல்லையிலிருந்து 12 கடல் மைல்கள் தூரத்திலும் இருக்கும் சிறிய தீவு. 2 மைல்களின் வித்தியாசத்தைக் காரணம் காட்டி சிறிலங்கா அரசு அதற்கு உரிமை கோரியபோது, நமது ஆட்சியாளர்கள் அதைத் தாரைவார்த்துக் கொடுத்தது மிகப்பெரிய தவறு.

1989 இலும், 1996 இலும், 1999 இலும் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற திமுக, கச்சதீவு பிரச்சினையையும், தமிழக மீனவர்களின் உரிமையையும் தனது ஆதரவுக்கு விலையாகக் கேட்டிருக்குமேயானால், நிச்சயமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாவிட்டாலும், இந்திய அரசின் நிர்ப்பந்தங்கள் சிறிலங்கா அரசின் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.

என்னென்னவோ துறைகளைக் கேட்டுப் பெற்றவர்கள் வெளியுறவுத்துறையைக் கேட்டுப் பெற்று இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவுகோர ஏன் முனையவில்லை என்பது திமுக மட்டுமல்ல, மத்திய ஆட்சியில் பங்குபெற்ற தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு அளிக்க வேண்டிய தன்னிலை விளக்கம்.

இந்தப் பிரச்சினையில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கச்சதீவை இந்தியா ஏன் நிரந்தரக் குத்தகைக்கு எடுக்கக்கூடாது என்று யோசனை தெவித்திருந்தார். இப்போது முதல்வர் கருணாநிதி, கச்சதீவில் நமது உரிமைகளை மீட்பதற்கான தருணம் வந்துவிட்டதாகக் கருதுவதாகவும், தமிழர் ஒருவரை சிறிலங்கா தூதுவராக்க வேண்டும் என்றும் யோசனை கூறியிருக்கிறார்.

எங்கள் கட்சிக்காரரை வெளிவிவகாரத்துறை அமைச்சராக்குங்கள் என்றோ, கச்சதீவில் நமது உரிமையை மீட்போம் என்றோ சொல்ல அவருக்கு ஏன் துணிவு வரவில்லை என்று புரியவில்லை.

1974-ல் கச்சதீவைத் தாரை வார்க்கும்போதோ, 1976-ல் இந்தியா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்தபோதோ மத்திய அரசுடன் முதல்வருக்கும் திமுகவுக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை உண்மை.

ஆனால், இப்போது இருக்கிறதே! மத்தியில் ஆளும் கூட்டணியில் சர்வ வல்லமை படைத்த தோழமைக் கட்சியாக திமுக இருக்கிறதே! பிறகும் ஏன் அனைத்துலக உடன்பாடு என்று நழுவுகிறார்கள்?

திமுகவோ, அதிமுகவோ, பாமகவோ, மதிமுகவோ, எதுவாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் இந்தியாவைச் சுற்றியுள்ள கடலில் மீன்பிடிக்கும் உரிமைக்கும் கச்சதீவின் மீது நமக்குள்ள உரிமைக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டும்தான், எந்தவொரு மத்திய அரசுக்கும் ஆதரவளிக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் தமிழ், தமிழன், தமிழர் நலன் என்று பேசுவதெல்லாம் வெறும் வாய்ப்பந்தல்தான்.