PDA

View Full Version : எனது விஞ்ஞான கவிதை

மதுரை மைந்தன்
13-07-2008, 01:36 PM
மனித க்ளோனிங் இல்லாதிருந்தும்
உன்னைக் காண்கிறேன்
எங்கு சென்றாலும்
நீயாக இருக்கிறாய்
யாரைப் பார்த்தாலும்

மனித க்ளோனிங் சாத்தியமானால்
நீ பார்க்கும் இடமெல்லாம்
நானாக இருப்பேன்
நீ நடத்தும் சுயம்வரத்தில்
அனைத்து மணவாளர்களும் நானே

இளசு
13-07-2008, 03:53 PM
எத்தனை அறிவியல் புதுநுட்பம் வந்தாலும்
அத்தனையும் காதலுக்கே முதல் அர்ப்பணம்!

வாழ்த்துகள் மதுரை வீரன் அவர்களே!

பூமகள்
13-07-2008, 04:44 PM
கண் முன்னே
இல்லாமல் போகும்
இருப்புகளில் நீ...!!

சாலையோர கம்பம்
தாண்டி பயணிக்கையில்
கம்பம் சாய்ந்து நீ
கையசைக்கிறாய்...

ஏதோ கூட்டத்தில்
உன் உடை அணிந்து
வேறொருவர்..

ஆங்காங்கே தெரிந்தும்
யாருக்கும் தெரியாமல்
உன் கண் இசைவில்
எனை இல்லாமலே
வெட்கப் படுத்துகிறாய்..

எல்லா இடங்களில்
நீ இன்றி
மறுநொடி ஏமாந்தாலும்..

அந்த அரைநொடிப்
புன்னகைக்காக
மீண்டும் ஏமாறத்
தயாராகும் மனம்...!!

---------------------------------------------
இப்படிப் பட்ட காட்சிப் பிழைகள் க்ளோனிங் இன்றி அனுபவிக்க வேண்டிய உணர்வுகள் மதுரை வீரன் அண்ணா..

அழகு கவிதை வடித்தமைக்கு பாராட்டுகள்..!!
அண்ணலின் பின்னூட்டம் 'நச்' ... :)

மதுரை மைந்தன்
13-07-2008, 07:05 PM
எத்தனை அறிவியல் புதுநுட்பம் வந்தாலும்
அத்தனையும் காதலுக்கே முதல் அர்ப்பணம்!

வாழ்த்துகள் மதுரை வீரன் அவர்களே!

மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?

தங்களுடய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி இளசு அவர்களே

மதுரை மைந்தன்
13-07-2008, 07:12 PM
கண் முன்னே
இல்லாமல் போகும்
இருப்புகளில் நீ...!!

சாலையோர கம்பம்
தாண்டி பயணிக்கையில்
கம்பம் சாய்ந்து நீ
கையசைக்கிறாய்...

ஏதோ கூட்டத்தில்
உன் உடை அணிந்து
வேறொருவர்..

ஆங்காங்கே தெரிந்தும்
யாருக்கும் தெரியாமல்
உன் கண் இசைவில்
எனை இல்லாமலே
வெட்கப் படுத்துகிறாய்..

எல்லா இடங்களில்
நீ இன்றி
மறுநொடி ஏமாந்தாலும்..

அந்த அரைநொடிப்
புன்னகைக்காக
மீண்டும் ஏமாறத்
தயாராகும் மனம்...!!

---------------------------------------------
இப்படிப் பட்ட காட்சிப் பிழைகள் க்ளோனிங் இன்றி அனுபவிக்க வேண்டிய உணர்வுகள் மதுரை வீரன் அண்ணா..

அழகு கவிதை வடித்தமைக்கு பாராட்டுகள்..!!
அண்ணலின் பின்னூட்டம் 'நச்' ... :)

பூமகள் தங்கச்சி,

உங்களுடய எதிர் பாட்டு மிக அருமை.

க்ளோனிங் இல்லாமலே காதலனை பல வடிவங்களில் தாங்கள் காண்பது அற்புதம்

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி

பாலகன்
13-07-2008, 08:01 PM
மனித க்ளோனிங் இல்லாதிருந்தும்
உன்னைக் காண்கிறேன்
எங்கு சென்றாலும்
நீயாக இருக்கிறாய்
யாரைப் பார்த்தாலும்

கண்ணை நல்லா கசக்கிட்டு பாருங்கண்ணா

மனித க்ளோனிங் சாத்தியமானால்
நீ பார்க்கும் இடமெல்லாம்
நானாக இருப்பேன்
நீ நடத்தும் சுயம்வரத்தில்
அனைத்து மணவாளர்களும் நானே

இது முதலுக்கே மோசம்ங்கண்ணா

முத்து கவிதை மிக மிக அருமை

வாழ்த்துக்கள்

மதுரை மைந்தன்
13-07-2008, 09:52 PM
கண்ணை நல்லா கசக்கிட்டு பாருங்கண்ணா

இது முதலுக்கே மோசம்ங்கண்ணா

முத்து கவிதை மிக மிக அருமை

வாழ்த்துக்கள்

ஹா ஹா ஹா மணவாளர் நீங்கள் எனறால் நான் க்ளோனிங் செய்து கொள்ள மாட்டேன் போதுமா.

உங்களுடய நகைச்சுவை உணர்வுக்கு எனது பாராட்டுக்கள்.

நன்றி.

இளசு
13-07-2008, 09:56 PM
பார்க்கும் இடங்களில்லாம் பச்சை நிறம் கண்ட
பாரதிபோல் பாமகளுக்கும் காட்சிப்பிழை..

ஒன்று கடவுளுக்காக..
ஒன்று காதலுக்காக..'

இரண்டுமே யுகந்தோறும் இருந்துவருபவை
இரண்டுமே எனக்கு இன்னும் விளங்காதவை!

பாராட்டுகள் பாமகளே!

ஓவியன்
14-07-2008, 02:04 AM
குளோனிங் என்பதையே
வெறுக்கிறேன்...!!

நீ எனக்கும்
நான் உனக்கும்
மட்டுமே உரிமையாவதால்....!!

என் நிழல் கூட எனக்கு
போட்டியாக வேண்டாம்.....!!

பாராட்டுக்கள் மதுரை வீரன், ஆராயாமல் அனுபவிக்கச் சொன்ன பூமகளின் பின்னூட்டமும் அழகு..!! :)

கண்மணி
14-07-2008, 02:09 AM
மனித க்ளோனிங் இல்லாதிருந்தும்
உன்னைக் காண்கிறேன்
எங்கு சென்றாலும்
நீயாக இருக்கிறாய்
யாரைப் பார்த்தாலும்

மனித க்ளோனிங் சாத்தியமானால்
நீ பார்க்கும் இடமெல்லாம்
நானாக இருப்பேன்
நீ நடத்தும் சுயம்வரத்தில்
அனைத்து மணவாளர்களும் நானே

அப்போ உங்களை அவங்க காதலிக்கச் சாத்தியமே இல்லைன்னு முடிவே செய்திட்டீங்களா மதுரை வீரன்?:confused::confused::confused::D:D:D

மதுரை மைந்தன்
14-07-2008, 02:46 PM
குளோனிங் என்பதையே
வெறுக்கிறேன்...!!

நீ எனக்கும்
நான் உனக்கும்
மட்டுமே உரிமையாவதால்....!!

என் நிழல் கூட எனக்கு
போட்டியாக வேண்டாம்.....!!

பாராட்டுக்கள் மதுரை வீரன், ஆராயாமல் அனுபவிக்கச் சொன்ன பூமகளின் பின்னூட்டமும் அழகு..!! :)

அன்பு ஓவியன்

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல களோனிங்யை வெறுத்து என் கவிதையின் கடைசி பந்தி யாக எழுத மறந்தேன். அந்த பந்தியை எழுதியதற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
14-07-2008, 02:52 PM
அப்போ உங்களை அவங்க காதலிக்கச் சாத்தியமே இல்லைன்னு முடிவே செய்திட்டீங்களா மதுரை வீரன்?:confused::confused::confused::D:D:D

சகோதரி கண்மணி,

எப்படியாவது அவங்களைக் காதலிக்கணும்னு தான் க்ளோனிங் மூலம் அவங்க கண்ணுக்கு முன்னால் தெரிய ஆசைப்படுகிறேன். நன்றி

ஷீ-நிசி
14-07-2008, 02:59 PM
உன்னைப்போல் ஒருத்தி
இப்பூமியிலே இல்லை...
அப்படியொருவள் இருந்துவிட்டால் - அது
பூமியே இல்லை....

பின்னே....
அது தேவலோகமடி கண்ணே!

அடடா... கவிதைகள் சும்மா தானா வருதே.. உங்க கவிதையைப் படித்தபின்னே....

வாழ்த்துக்கள் நண்பரே!

ஓவியன்
14-07-2008, 03:03 PM
இரசித்தேன் ஷீ..!!

உங்கள் பின்னூட்டம் அசத்தல்..!!! :)

கண்மணி
14-07-2008, 03:09 PM
சகோதரி கண்மணி,

எப்படியாவது அவங்களைக் காதலிக்கணும்னு தான் க்ளோனிங் மூலம் அவங்க கண்ணுக்கு முன்னால் தெரிய ஆசைப்படுகிறேன். நன்றி

உங்கக் குழப்பம் புரிஞ்சிடுச்சி மதுரை வீரன்..

ஆமாம் நீங்களா இருக்கறப்பவே அவங்களைக் காதலிக்க முடியலைன்னா குளோனிங் பண்ணி என்ன பிரயோசனம்?

ஓ உங்களை அவங்க காதலிக்கணும் அப்படின்னு சொல்ல நினைச்சீங்களா?

அதுலயும் ஒரு சிக்கல் மதுரை (என்னடா இது மதுரைக்கு வந்தச் சோதனை? அப்படின்னு பார்க்காதீங்க.. சும்மா டமாஷூக்குதான்)
100 குளோனிங் ல ஒரு குளோனிங்கைக் அவங்கக் காதலிக்க ஆரம்பிச்சா மத்த குளோனிங்குகள் பொறாமைப் பட மாட்டீங்களா? இல்லை ஒரிஜினலான நீங்கள் கவலைப் படமாட்டீங்களா?

எல்லாக் குளோனிங்க்கும் ஒரே மாதிரியான மனசு இருக்குமா? அப்படி மனசு இருந்தா நம்ம தானே மத்தவங்க அப்படி இருக்க நாம மட்டும் எப்படிச் சந்தோசமா இருக்கறதுன்னு கவலைப் படாதா?

ஒரே மாதிரியான மாசு இல்லாட்டி ஒரு குளோனிங் இன்னொரு குளோனிங் மேலப் பொறாமைப் பட்டு அது அடிதடியா முடிஞ்சிடாதா? இப்பக் காதலியைப் பத்திக் கவலைப்பட நேரமில்லாம நீங்க உங்களைப் பத்தியே கவலைப் பட நேரம் பத்தாமப் போயிடுமில்ல...

உங்களால உங்களுக்கே இவ்வளவு தலைசுத்தல்னா, பாவம் அவங்க நிலையை நினைச்சுப் பாருங்களேன்..!!! :D:D:D:D:D:D

நாகரா
14-07-2008, 04:11 PM
காட்சிப் பிழைகளும்
விஞ்ஞானத் தந்திரங்களுந்
தாண்டி
உம் காதல் வெல்லட்டும்.

கவிதை அருமை, வாழ்த்துக்கள் மதுரை வீரன்

உங்க நகைச்சுவை உணர்வுக்கு எனது பாராட்டுக்கள்

உங்க சிந்தனை அருமை. நீங்க எழப்பியிருக்கிற சந்தேகங்கள் நியாயமானவை. க்ளோனிங் பத்தி எனது சிந்தனை விசித்திரமானது. கோகுலத்தில் கண்ணன் ஒரே நேரத்தில் எல்லா கோபியருடன் நடனமாடின மாதிரி. க்ளோனிங் பத்தி உங்க சந்தேகம் பத்து தலை ராவணனுக்கு ஒரே நேரத்தில் எல்லா தலைகளிலும் தலைவலி வந்தா எப்படி இருக்கும் என்பது போல. சரி தானே?

களோனிங் மூலம் என்னைப் போல் பலர் இருந்தாலும் அனைவரும் என் அச்சே. இதில் யாராவது ஒருவருக்கு காதல் கை கூடாதா என்ற நப்பாசை. எவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாலும் அவர் என் அச்சு எனபதால் சண்டைக்கு அங்கே இடமேயில்லை.

மதுரை மைந்தன்
14-07-2008, 04:14 PM
உன்னைப்போல் ஒருத்தி
இப்பூமியிலே இல்லை...
அப்படியொருவள் இருந்துவிட்டால் - அது
பூமியே இல்லை....

பின்னே....
அது தேவலோகமடி கண்ணே!

அடடா... கவிதைகள் சும்மா தானா வருதே.. உங்க கவிதையைப் படித்தபின்னே....

வாழ்த்துக்கள் நண்பரே!

எனது கவிதைக்கு உங்களது பின்னூட்டம் அருமை. நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
14-07-2008, 04:15 PM
காட்சிப் பிழைகளும்
விஞ்ஞானத் தந்திரங்களுந்
தாண்டி
உம் காதல் வெல்லட்டும்.

கவிதை அருமை, வாழ்த்துக்கள் மதுரை வீரன்

உங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

அறிஞர்
15-07-2008, 07:51 PM
மதுரை வீரனின் விஞ்ஞான பார்வை..
பூமகளின் எதிர் பார்வை.
மற்றவர்களின் சுற்றுப் பார்வை

காதல் வெல்லட்டும்... அன்பரே...

கண்மணி
16-07-2008, 12:25 AM
சகோதரி கண்மணி,

உங்க நகைச்சுவை உணர்வுக்கு எனது பாராட்டுக்கள்

உங்க சிந்தனை அருமை. நீங்க எழப்பியிருக்கிற சந்தேகங்கள் நியாயமானவை. க்ளோனிங் பத்தி எனது சிந்தனை விசித்திரமானது. கோகுலத்தில் கண்ணன் ஒரே நேரத்தில் எல்லா கோபியருடன் நடனமாடின மாதிரி. க்ளோனிங் பத்தி உங்க சந்தேகம் பத்து தலை ராவணனுக்கு ஒரே நேரத்தில் எல்லா தலைகளிலும் தலைவலி வந்தா எப்படி இருக்கும் என்பது போல. சரி தானே?

களோனிங் மூலம் என்னைப் போல் பலர் இருந்தாலும் அனைவரும் என் அச்சே. இதில் யாராவது ஒருவருக்கு காதல் கை கூடாதா என்ற நப்பாசை. எவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாலும் அவர் என் அச்சு எனபதால் சண்டைக்கு அங்கே இடமேயில்லை.

அங்கத்தானுங்ணா டிஃபரன்ஸ் இருக்குண்ணா! கோகுலத்தில் கிருஷ்ணன் தான் எல்லார் கூடவும் இருக்கணும்னு நெனக்கலீங்ணா! அவர் தம் கூட இருக்கணும்னு கோபியர்கள் நினைச்சாங்க்ணா! ஒவ்வொரு கண்ணனுக்கும் ஒவ்வொரு கோபிகை. கணக்குச் சரியா இருந்திச்சிங்ணா!

எல்லா மனுஷனையும் தன்னைப் போல நெனைக்குனுமுங்க்ணா! இப்போ அடுத்த மனுஷனுக்கு அவள் சொந்தமாயிடக் கூடாதுங்கறது அடி மனசில் இருக்கறதினால தானே உங்களுக்கு க்ளோனிங் ஐடியாவே வந்துச்சிங்ணா?அவள் என்னைக் காதலிக்கணும் அப்படிங்கற காயினுக்கு அந்தப் பக்கம் அவள் வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது அப்டீங்கறது இருக்குதுங்னா!

என்னைப் போல ஒருவனுக்குக் கிடைச்சா ஒகே அப்படீன்னு உங்க மனசில இருக்குதுங்கறது சரி அப்டீன்னா, அவன் உங்க முக ஜாடையா மட்டும் இல்லாட்டி தப்பென்னங்ணா?:icon_b::icon_b:

மதுரை மைந்தன்
16-07-2008, 12:43 AM
மதுரை வீரனின் விஞ்ஞான பார்வை..
பூமகளின் எதிர் பார்வை.
மற்றவர்களின் சுற்றுப் பார்வை

காதல் வெல்லட்டும்... அன்பரே...

உங்னள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அறிஞர் அவர்களே. உண்மையில் சொல்லப் போனால் இந்தக் கவிதை நகைச்சுவையாக எழுதப் பட்டது.

மதுரை மைந்தன்
16-07-2008, 12:50 AM
அங்கத்தானுங்ணா டிஃபரன்ஸ் இருக்குண்ணா! கோகுலத்தில் கிருஷ்ணன் தான் எல்லார் கூடவும் இருக்கணும்னு நெனக்கலீங்ணா! அவர் தம் கூட இருக்கணும்னு கோபியர்கள் நினைச்சாங்க்ணா! ஒவ்வொரு கண்ணனுக்கும் ஒவ்வொரு கோபிகை. கணக்குச் சரியா இருந்திச்சிங்ணா!

எல்லா மனுஷனையும் தன்னைப் போல நெனைக்குனுமுங்க்ணா! இப்போ அடுத்த மனுஷனுக்கு அவள் சொந்தமாயிடக் கூடாதுங்கறது அடி மனசில் இருக்கறதினால தானே உங்களுக்கு க்ளோனிங் ஐடியாவே வந்துச்சிங்ணா?அவள் என்னைக் காதலிக்கணும் அப்படிங்கற காயினுக்கு அந்தப் பக்கம் அவள் வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது அப்டீங்கறது இருக்குதுங்னா!

என்னைப் போல ஒருவனுக்குக் கிடைச்சா ஒகே அப்படீன்னு உங்க மனசில இருக்குதுங்கறது சரி அப்டீன்னா, அவன் உங்க முக ஜாடையா மட்டும் இல்லாட்டி தப்பென்னங்ணா?:icon_b::icon_b:

சகோதரி கண்மணி,

சும்மா பிச்சு உதறிட்டீங்க. என்னுடய கவிதையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி துவைத்து காயப் போட்டுடீங்க. குத்துயிரும் குலைஉயிருமா கிடக்கிறேன் நான். ஹா ஹா ஹா

உங்களுடய பதிலை நான் மிகவும் ரசிக்கிறேன். நன்றி.

கண்மணி
16-07-2008, 12:58 AM
இன்னா சார் இது. இப்டீ ஜகா வாங்கிகினியே.. செரி செரி.. மெய்யாலுமெ உனிக்கு ஒரு ரோஷணை சொல்றேன் புட்சிக்க.. அவளோட நெகம், முடி எத்னாச்சும் லவட்டிகினு வந்து ஜீன் எட்த்து அத்தைக் க்ளோனிங் பண்ணி அத்தைக் கட்டிக்கோ இன்னா! ஒத்தக் க்ளோனிங்க்ல க்ளோஸ் பண்ணனும் பிசாத்து மேட்டரு.. இன்னான்ற நீய்யி!

ஆனா உனிக்குதான் ஆரைப் பாத்தாலும் அவளை பாக்கிற மாதிரியே கீதே! அப்புறம் யாரைக் கட்டினாலும் அவளைக் கட்டின மாதிரிதானே? இன்னா மெர்சலாக்கீதா?

மதுரை மைந்தன்
16-07-2008, 01:43 AM

என்னம்மா கண்ணு இப்படி சொல்லிப்பிட்டே. கமல ஹாசனு பத்து வேசம் போட்டுக்கினு அசினு அப்புறம் அந்த சாக்கி சாணோட பிசினு இவங்களைக் கட்டிக்கிட்டு டான்ஸ் ஆடினா பிகிலு அடிக்கிறீங்க. நானு மெய்யாலுமே பத்து பேரா போயி அவங்களும் பத்து பேரா வந்தாங்கனா பத்துல ஒன்னாவது தேறாதானு லோல் பட்டுகினு கீறேன். எதுனாச்சும் ரோசனை சொல்லாம ரோதனை பண்றியெ நியாயமா.

பிச்சி
16-07-2008, 07:22 AM
அழகான கவிதை. ரொம்ப வித்தியாசமா சிந்திக்கிறீங்க மதுரை அண்ணா.

அன்புடன்
பிச்சி

மதுரை மைந்தன்
16-07-2008, 11:22 AM
அழகான கவிதை. ரொம்ப வித்தியாசமா சிந்திக்கிறீங்க மதுரை அண்ணா.

அன்புடன்
பிச்சி

உன்னுடய பாராட்டுக்களுக்கு நன்றி தங்கச்சி.