PDA

View Full Version : ஜாதக விஞ்ஞானிகள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-07-2008, 05:27 AM
வறண்ட தொண்டையும்
வற்றிய வயிறுமாய்
ஏழாமிட சூரியப்பெயர்ச்சியை
வழியின் விழியாய் எதிர் நோக்கியிருக்கிறேன்
விரதத்தை விலக்கிக்கொள்ள...

சுக்கிர உக்கிரமம் தணியட்டுமென்று
இயற்கை உபாதைகளை கூட
அந்தந்த இடங்களில்
அப்படியே இறுக்கியிருக்கிறேன்.

ராகுவும் கேதுவும் சற்று ஒழியட்டுமென்று
வாசல் தட்டிய தபால்காரனையும்
வாசலோடு வைத்திருக்கிறேன்.

மிதுன கோபால்
மேஷ ரமேஷ்
கடக சுந்தர்
நண்பர்களைக் கூட
இப்படித்தான் அழைக்கிறேன்.

நெஞ்சைப் பிடித்து
சாய்ந்த தந்தையையும்
வராண்டாவில் கிடத்திவிட்டு
சனியின் அனுகூலத்தை
நாட்காட்டியில் மேய்கிறேன்.

கணிணியில் நிரல் எழுதும்
விஞ்ஞான யுகத்தில்
கணிணியில் ஜாதகம் எழுதும்
பொய் ஞான சூனியன் நான்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com
junaid-hasani.blogspot.com.

Narathar
13-07-2008, 05:40 AM
கணிணியில் நிரல் எழுதும்
விஞ்ஞான யுகத்தில்
கணிணியில் ஜாதகம் எழுதும்
பொய் ஞான சூனியன் நான்.

நாரயணா!!!!!! :D

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-07-2008, 06:08 AM
நாரதர் நாராயணா என்றால் ஏதோ வில்லங்கத்தை துவக்கப்போகிறார் என்று அர்த்தம். வில்லங்கத்தை கொஞ்சம் முன்பாக சொல்லி விட்டால் தப்பியோட தயாராகி கொள்வேன்.

இளசு
13-07-2008, 06:22 AM
எனக்குப் பிடிக்காதவற்றில் இப்படிப்பட்ட ''ஜாதக/கிரக/வாஸ்து/எண்கணித/ராசிக்கல்'' நம்பிக்கைகளும் ஒன்று..

அதிலும் அதீதமாய் இதை நம்பி மட்டும் வாழ்க்கை நடத்துபவர்களை நினைத்தால் --'' நெஞ்சு பொறுக்குதில்லையே''..

எந்த தொழில்நுட்பம் என்றாலும், நமக்குப் பிடித்த செயலுக்காய் வளைப்போம் என்பதற்கு -

நல்லதாய் நம் மன்றம் சாட்சி..
அல்லதாய் கணினி ஜாதகக் கணிப்பு சாட்சி!

நல்ல கவிதைக்குப் பாராட்டுகள் ஜூனைத்!

பூமகள்
13-07-2008, 06:30 AM
தொட்டதுக்கெல்லாம் "ஜாதகம்,ஜோசியம்" பார்ப்பது இப்போது நாகரிகம் ஆகிவிட்டது..

எங்கள் ஊரில் சமீப காலமாக பல கட்டிடங்களின் வெளிப்பூச்சுகள் அடிக்கும் ஆரஞ்சு நிறம்.. அல்லது வெளிர் பச்சை.. மஞ்சள் நிறங்களாக கண்ணைக் கொத்தும் வகையில் இருக்கும்..

காரணம் என்னவெனத் தெரியாமலேயே.. ஏதாவது "வாஸ்து" பித்தாக இருக்குமென்று புலம்பிய எனக்கு... சன் செய்தி அலைவரிசையில் இதற்கான காரணம் சொல்லப்பட்டது..

சமீப காலமாக.. வாஸ்து என்ற பெயரில் பல கட்டிடங்கள் அடிக்கும் வண்ண நிறங்களால் ஆக்கிரமிக்கப்படுவதையும்.. அதற்குக் காரணம்.. வாஸ்து தான் என்பதையும் சொன்னார்கள்..

இதை விட வேடிக்கை.. அந்த வண்ணக் கலவைகள் எத்தனை அதிக விலையாயினும்..அது தான் வேண்டுமென்று அடம்பிடித்து அடிக்கும் கட்டிட உரிமையாளர்கள்...

ராசிக் கல்.. அதிர்ஷ்ட டாலர்.. இப்படி பல வடிவங்களில் தொலைக்காட்சிகளில் விளம்பரம் பார்க்கையில்.. சிரிப்பே மிஞ்சுகிறது..

மக்கள் என்று தான் திருந்துவார்களோ??
-----------------------------------------------
சரியான சாடல் ஜூனைத் அண்ணா..!!
பாராட்டுகள். :)

நாகரா
17-07-2008, 04:53 AM
கோள்களைப் பற்றிக்
கோள் சொல்வதே
குறிக்கோளாய்க் கொண்ட
ஜாதக அஞ்ஞானிகளின்
பிடியில் சிக்கிய மடமையைப்
படம் பிடிக்கும் உம் கவிதை
அருமை
வாழ்த்துக்கள், ஹஸனீ