PDA

View Full Version : மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா!-பகுதி-1



mukilan
13-07-2008, 03:47 AM
மரபணு ஓர் அறிமுகம்.
கவனிக்க: இந்தக் கட்டுரையின் நோக்கம் மரபணு மாற்றத் தொழில் நுட்பம் பற்றிய சிறு விழிப்புணர்வு கொடுப்பது மட்டுமே! அத்தொழில் நுட்பத்தை விளக்குவதோ அல்லது அத் தொழில்நுட்பத்தை ஆதரிப்பதோ இல்லை. விளக்குவதற்காக சில(பல) வார்த்தைகளை ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் ஆங்கில வார்த்தைகள் கொடுத்துள்ளேன்.தகவல் சேகரிக்க இணையத்தையும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், நான் பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுது எடுத்த குறிப்புகளையும் பயன்படுத்தியுள்ளேன்.

கடந்த சில வருடங்களாகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பற்றி இந்தியாவில் பலரும் மூலை முடுக்குகளிலெல்லாம் கூட்டம் போட்டு விவாதிக்கிறார்கள். இதில் உண்மையான புரிதலோடு விவாதிப்பவர்கள் இருக்கிறார்கள். புரிதலே இல்லாமல் அமெரிக்கத் தொழில்நுட்பம்,முதலாளித்துவம் என்ற ரீதியில் மட்டுமே விமர்சனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனந்தவிகடனில் இந்த வாரம் தவளைத் தக்காளி என்கிற ரீதியில் ஒரு கட்டுரை வேறு வெளி வந்திருக்கிறது. அதில் திரு.சென் என்பவர் அத்தொழில் நுட்பத்தின் நன்மை குறித்து சில கருத்துக்களைக் கூறியிருந்தார். அப்பொழுதுதான் எனக்கும், நாம் ஏன் மன்றத்து நண்பர்களுக்கு சிறிது விளக்கம் கொடுக்க கூடாது எனத் தோன்றியது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.

மரபணு பற்றிய சிறு விளக்கம்:

மரபணு என்றால் என்ன? மரபணுவின் பங்கு என்ன?
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/evolution-gene.gif
மரபு + அணு. மரபு என்பது Heredity, வழி வழியாக வருவது. ஒரு உயிரினம் தன்னகத்தே கொண்டுள்ள குணாதிசயங்களை தன் பிள்ளைகளுக்கு (offspring) வழி வழியாக கொடுப்பதற்கான அணு. ஒரு உயிரினம் உருவாகுகையில் அதன் கை எப்படி இருக்க வேண்டும்!. கண்களின் நிறம் எப்படி இருக்க வேண்டும்!, தாவரங்களில் எந்த நிறத்தில் பூ பூக்க வேண்டும்!, விதை எந்த வடிவமைப்பில் இருக்க வேண்டும்!, இலை எப்படி இருக்க வேண்டும்!, கனி எப்படி ருசிக்க வேண்டும்! என பல்வேறு குணங்களை நிர்ணயம் செய்வது இந்த மரபணுக்கள் தான். கவனிக்க: சில நேரங்களில் ஒரு மரபணு மட்டுமே ஒரு குணத்தை நிர்ணயம் செய்ய முடியாது, கூட்டணிதான். அது மட்டுமல்ல சூழலுடன் வினை புரிவதன் மூலமும் மரபணுக்கள் ஒரு குணத்தின் மீது தாங்கள் கொண்ட பிடியினைத் தளர்த்த வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது. சரி மரபணு எங்கே காணப்படுகிறது? மரபணுக்கள் டி.என் ஏவில் காணப்படும்.
http://static.howstuffworks.com/gif/dna-2.jpg

ஒவ்வொரு மேல்நிலை உயிரினமும்(தாவரங்கள், விலங்குகள்) இரண்டு வித நியூக்ளிக் அமிலம் கொண்டு இருக்கும்.
1. DNA- Deoxy Ribo Nucleic Acid (டி.என்.ஏ)
2. RNA- Ribo Nucleic Acid (ஆர். என்.ஏ).
இதில் டி. என். ஏ தான் முக்கியமானவர். இரண்டு ப்யூரின்களும் இரண்டு பிரமிடின்களும் சேர்ந்து உருவாக்கும் இரட்டைச் சுழல் ஏணி போன்ற அமைப்புதான் டி.என்.ஏ.
அடெனின்-A (Adenine), குவானின்-G (Guanine) என்பவை ப்யூரின்கள்- Purines.

தயாமின்T (Thymine), சைட்டோஸின்-C (Cytosine) என்பவை பிரமிடின்கள்- pyrimidines. RNAவில் தயாமினுக்குப் பதிலாக யுராசில்(Uracil)

டி.என்.ஏவில் காணப்படும் ப்யூரின் - பிரமிடின் கூட்டணி அமினோஅமிலக் குறியீடு (கோடான்-codon) எனப்படும். அமினோ அமிலக் குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தை(Amino Acids) உருவாக்குகின்றன. இதில் AGC என்பது ஒருவித அமினோ அமிலத்தை (serine) உருவாக்கும். CGC என்பது வேறு வகை அமினோ அமிலத்தை(Arginine) உருவாக்கும். நன்றாக நினைவில் கொள்ளுங்கள் இந்த மூன்று செட்கள்தான் குறிப்பிட்ட அமினோஅமிலத்தை உருவாக்க வேண்டும் என்றில்லை. இதில் மாறுபாடுகள் இருந்தாலும் அந்தக் குறிப்பிட்ட அமினோ அமிலத்தை அடையலாம். எடுத்துக்காட்டாக TAT மற்றும் TAC இரண்டுமே டைரோஸின்(Tyrosine) எனப்படும் அமினோ அமிலத்தை உருவாக்குகின்றன. அமினோ அமிலத்தின் முக்கியத்துவம்? அமினோ அமிலம் மற்றொரு அமினோஅமிலத்துடன் சேர்ந்து, பாலி-பெப்டைடுகள் (Polypeptides) அமைத்துப் பின்னர் புரதங்களை (Proteins) உருவாக்குகின்றது. புரதங்கள் வினையூக்கிகளாகவும் உடல் கட்டமைப்புக்குத் தேவைப்படுவனவாகவும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு டி.என்.ஏ என்பது ....... ATG CAT GTC ATA CCA TAG CTA GAG..... எனத் தொடரும். அமினோஅமில உற்பத்திக்கான ஆரம்பிக்கும் பட்டன் (Start codon) ATG என்றால் முடித்து வைக்கும் பட்டன் (Stop codon) TAG. அதாவது ATG என்ற அமினோ அமிலக்குறியீடு அமினோஅமில உற்பத்தியை ஆரம்பிக்கும். பின்னர் அந்தந்த அமினோஅமிலக் குறியீடுகளுக்கு தகுந்தாற்போல அமினோஅமிலங்கள் உற்பத்தியாகும்.TAG என்ற அமினோஅமிலக்குறியீடு எங்கு குறுக்கிட்டாலும் அமினோஅமில உற்பத்தி நின்று விடும். இவ்வாறு ஒரு டி.என்.ஏ குறிப்பிட்ட அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. அந்த அமினோ அமிலங்களின் கலவையால் ஒரு குறிப்பிட்ட புரதம் உருவாகுகின்றது.
http://i27.photobucket.com/albums/c182/Rajmirra/dna-codon-amino-acids.jpg
இப்பொழுது எங்கே தொடங்கியது என்பது தெரிகிறதா? AGC என்ற மூன்று கட்சிக் கூட்டணியின் மூலம் Serine என்ற அமினோஅமிலமும் பின்னர் அந்த அமினோஅமிலம் மூலம் ஒரு குறிப்பிட்ட புரதமும் உருவாக்கப் படவேண்டும் என்று ஒரு உயிரினம் தன் மரபணுவில் குறிப்பேற்றி வைத்திருக்கிறது. அது தன் பிள்ளைக்கு தன் டி.என்.ஏவைக் கொடுப்பதன் மூலம் எந்தப் புரதம் என அந்த வரைபடத்தின்(Blueprint) மூலம் கட்டளையிடுகிறது.

கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்பதானால் தக்காளியின் சிவப்பு நிறம் கொடுக்க காரணமான நிறமிகளை உருவாக்கவேண்டிய வரைபடம் டி.என்.ஏவில்தான் இருக்கிறது. மாம்பழம் இனிக்க வேண்டுமானால் இனிப்பு சுவை கொடுக்கக் கூடிய சுக்ரோஸ் போன்ற கார்போஹைட்ரேட்டுகளை உருவாக்க வேண்டிய வரைபடம் மரபணு அண்ணாதான் வைத்திருக்கிறார். புசுபுசுவென்று வெள்ளை நிறத்துடன் உங்கள் வீட்டு ஜிம்மிக்கு அப்படியான நிறம் கொடுக்கச் சொல்லி ஜிம்மியின் பாட்டனார், பின்னர் ஜிம்மியின் தகப்பனார், என வழி வழியாக அந்த மரபணு வந்து கொண்டே இருக்கிறது.

என்ன நண்பர்களே இன்று அதிகமாக தகவல்களைக் கொடுத்து விட்டேனா? அடுத்த பாகத்தில் மரபணு மாற்றம் என்றால் என்ன அதை எப்படிச் செய்கிறார்கள் எனப் பார்க்கலாம். அதற்கடுத்த பாகங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களினால் ஏற்படும் நன்மை தீமைகள், சர்வதேச அளவில் மரபணுமாற்றம் விளைவிக்கும் விளைவுகள் பற்றிக் காணலாம். சந்தேகங்கள் இருந்தாலும் உடனுக்குடன் கேளுங்கள். என்னால் முடிந்த விளக்கம் தர விருப்பமாயிருக்கிறேன்.:icon_b:

பூமகள்
13-07-2008, 03:57 AM
இன்றைய சூழலில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அருஞ்செய்தி..!!
ஹேட்ஸ் ஆஃப் டூ யூ முகில்ஸ் அண்ணா...!

உங்களின் அரும்பணி தொடர வேண்டுகிறேன்..!!
படித்து விட்டு விமர்சிக்கிறேன்.. மன்னிக்கவும் அண்ணா..! முதல் பின்னூட்டமிட வேண்டி...!! :)

அழகிய தொடக்கத்துக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!

ஓவியன்
13-07-2008, 04:04 AM
சில நாட்களாக நானும் யோசித்துக் கொண்டிருந்த ஒரு விடயம் இது...

அப்போது, என் ஞாபக அலைக்குள் சிக்கியது நம்ம முகில்.ஜிதான்...
அவராகவே இந்த தலைப்பில் விளக்க முற்பட்டது கொள்ளை மகிழ்ச்சியே..!! :)

இப்போது அலுவலகத்திலிருக்கிறேன்,
கொஞ்ச நேரத்தின் பின் முழுமையாக வாசித்த பின் மீள என் சந்தேகங்களைக் கேட்கிறேன்..!!

தீபா
13-07-2008, 04:12 AM
சில பதிவுகளிலிருந்து தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல தாவரவியல் ஆராய்வாளர் என்பது, அதன் நிரூபணம் இங்கே பதிவாக மிளிர்கிறது.

தெளிவாகப் புரியும்படி எழுதியமைக்கு நன்றி முகிலன்

ப்யூரின் ப்ராமிடின் கூட்டணியின் வெற்றிக்களிப்பு
இரு அமினோ அமிலங்களின் புணர்ச்சியில் புரதம்
அவ்விணைகளின் நுட்பமான விரிவுரை (தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடைப்பட்ட தோன்றல்)
அவ்விளக்கத்தை உறுதிபடுத்தும் முதற்படம்
மரபணுக்களின் இருத்தலுக்கான காரணங்கள்

என்று

பாடம் நடத்துகிறீர்கள்...

அறிவியல் அப்போது எனக்குக் கசந்ததால் மதிப்பெண்கள் தாளைவிட்டு கசிந்தன. இப்போது மீண்டும் அறிய ஆவல். அறியத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் அதை விரிய தருவீர்கள் என்றும்

எதிர்பார்த்து
தென்றல்

சிவா.ஜி
13-07-2008, 04:27 AM
இதைத்தான் முகிலன் நான் உங்களிடமிருந்து மிக ஆவலுடன் எதிர்பார்த்தேன். மரபணுவைப் பற்றி அழகு தமிழில் எளிய வார்த்தைகளில் சுவாரசியமாக எழுதும் கலையைக் கண்டு வியக்கிறேன். இன்னும் வரப்போகும் விபரங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அறிவியல் எனக்கு என்றுமே கசந்ததில்லை. அதுவும் இப்படியான கட்டுரைகள் சுவாரசியத்தின் உச்சம். மிக்க நன்றி முகிலன்.

mukilan
13-07-2008, 04:40 AM
பதிவிட்ட சில நிமிடங்களில் இத்துணை ஆதரவுக் குரல்களா?
ஒரு புறம் மகிழ்ச்சி! மறுபுறம் அறிவியலை ஆர்வம் குறைக்காமல் சுவையாகச் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கம்!
பூமகள், ஓவியன் உங்களின் ஆர்வம் கண்டு அகமகிழ்கிறேன்.!

தென்றல் உங்கள் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றுமே அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. உங்கள் வார்த்தைக் கையாளல் அசத்தல். உங்களின் ஆர்வத்திற்கும் தலை சாய்க்கிறேன்.
சிவா.ஜி அண்ணா உங்கள் மேலான ஆதரவு கிட்டியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற முனைப்பும் இப்பொழுது அதிகமாகியிருக்கிறது.

நன்றி நண்பர்களே!

பென்ஸ்
13-07-2008, 04:48 AM
நான் கொடுத்த மரபனு மாற்றிய ரோஜாவை கண்டு "ஆய்...!!! சூப்பராக்குல்ல" என்று என்னை புகழ்ந்த போதும்....

நடுவே வரும் கறுப்பு விதைக்காய், எனக்கு பிடிக்காத water melon வாங்கி, கஸ்டபட்டு வெட்டினால் உள்ளே விதையில்லை... சாப்பிட்டா நல்ல ருசி.....

எத்தனை அருமையான சமச்சாரம்..... வளர்ந்து வரும் ஜனத்தொகைக்கு உணவூட்ட இது நிச்சயம் உதவும்....

ஆனால்... இயற்க்கையோடு மனிதன் விளையாடும் ஒவ்வொரூ கணமும் அதற்க்கான பரிசை பெற்று கொண்டுதான் இருக்கிறான்.
இன்று ஒரு மருத்துவரிடம் பேசி கொண்டிருக்கையில், இந்தியாவில் இயற்க்கை மருத்துவம் செய்வதை புகழ்ந்து கொண்டிருந்தார், அவர் கூறுகையில் "தொண்டை வலிக்கு அலோபதி மருந்துகள் செய்யும் அதே பலனை, தேன் சாப்பிடுவதன் மூலம் பலன் கிடைக்கும், ஆனால் நமக்கு அதுவும் தேனிக்கள் இங்கு மறைய ஆறம்பித்த பிறகே தெரிகிறது, நாம் மிகவும் தாமதமாகிவிட்டோமோ...!!!" என்றார்,.....

பல முறை நம் நிலை அப்படிதானே இருக்கிறது...

நான் சாப்பிட்டு விட்டு எறிந்த மாங்கொட்டை மரமாக நிற்கிறது என்று அம்மாவிடம் சொல்லுவது உண்டு.... அந்த பாக்கியன் நம் குழந்தைகளுக்கு கிடைகுமா???? இல்லை மாமரம் நடவும் நாம் முதலாளித்துவ நாட்டினிடம் கையேந்த வேண்டுமா...????

தகவலுக்கும்... புரிய வைத்தமைக்கும் நன்றி முகில்ஸ்.....

mukilan
13-07-2008, 04:59 AM
அருமை பென்ஸ்!
"ஆனால்... இயற்க்கையோடு மனிதன் விளையாடும் ஒவ்வொரூ கணமும் அதற்க்கான பரிசை பெற்று கொண்டுதான் இருக்கிறான். "

நான் உங்களோடு ஒத்துப் போகிறேன். சில நேரங்களில் நாம் இயற்கையோடு விளையாடித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியாததால் நாம் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யவும் நம்மால் முடிவதில்லை.
உங்களின் எதிர்பார்ப்பு மிக நியாயமானது. அது நிறைவேறும் என்பதும் உண்மை. ஆனால் நீங்கள் இறுதியாக "இல்லை மாமரம் நடவும் நாம் முதலாளித்துவ நாட்டினிடம் கையேந்த வேண்டுமா...????" எனறு கேட்டிருக்கிறீர்கள் அல்லவா அந்தக் கேள்விக்கான பதிலை அடைய ஆட்சியாளர்களில் இருந்து ஏர் பிடிக்கும் உழவர்கள் வரை அனைவருக்கும் இத் தொழில்நுட்பம் பற்றிய விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சரியான புரிதல் இருந்தால் சரியாகத் திட்டமிட்டு கொள்கைகளை வகுக்க முடியும். அதற்கான சின்ன முயற்சியை நாமே துவங்கலாமே என்றுதான்.

பென்ஸ்
13-07-2008, 05:06 AM
ஆட்சியாளர்களில் இருந்து ஏர் பிடிக்கும் உழவர்கள் வரை அனைவருக்கும் இத் தொழில்நுட்பம் பற்றிய விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சரியான புரிதல் இருந்தால் சரியாகத் திட்டமிட்டு கொள்கைகளை வகுக்க முடியும். அதற்கான சின்ன முயற்சியை நாமே துவங்கலாமே என்றுதான்.
இது இதைதான் எதிற்பாத்தேன்.....
முகில்ஸ் இந்தியா பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமில்லை....

தீபா
13-07-2008, 05:11 AM
நான் சாப்பிட்டு விட்டு எறிந்த மாங்கொட்டை மரமாக நிற்கிறது என்று அம்மாவிடம் சொல்லுவது உண்டு.... அந்த பாக்கியன் நம் குழந்தைகளுக்கு கிடைகுமா???? இல்லை மாமரம் நடவும் நாம் முதலாளித்துவ நாட்டினிடம் கையேந்த வேண்டுமா...????

தகவலுக்கும்... புரிய வைத்தமைக்கும் நன்றி முகில்ஸ்.....


அருமை பென்ஸ். நீங்கள் புரிந்துணர்ந்து எழுதியிருக்கிறீர்கள். :icon_b:

சூரியன்
13-07-2008, 05:27 AM
மிகவும் உபயோகமான கட்டுரை அண்ணா.

நானும் பல சமயம் இதை பற்றி தெரிந்துகொள்ள ஆசைபட்டு தேடினால் செய்திகள் ஆங்கிலத்தில்தான் கிடைத்தது.
தங்களின் இந்த திரியின் மூலம் இதைப்பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பூமகள்
13-07-2008, 06:01 AM
உயிர் நுட்பவியலில் மரபியல் சார்ந்த இந்த துறை எனக்கு மிக பிடித்த பாடம்..!!

தாவரவியலை ரசித்து ரசித்துப் படித்திருக்கிறேன்..!

முகில்ஸ் அண்ணாவின் இந்தப் பதிவு.. எனது தாவரவியல் படிப்புகளை அப்படியே நினைவூட்டிவிட்டது..!! அந்தத் துறையில் எனக்கிருக்கும் ஆர்வத்துக்கு சிறந்த குரு கிடைத்த பெருமிதம் எனக்கு...!!

அடெனின்.. குவாசின்
தையமின்.. சைட்டோசின்..

அத்தனையும் அத்துப்படியான மனம்.. இப்போது மிகத் தெளிவாக நினைவுக்கு வந்துவிட்டது...!

ப்யூரின்களும் பிரமிடின்களும் சேர்ந்து உருவாக்கும் அமினோ அமிலங்கள் ஒருங்கே கூட்டமைத்து.. புரதங்களை உருவாக்குகின்றன..

எத்தனை அழகு தமிழில் எளிய நடையில் விளங்க வைத்துவிட்டீர்கள் முகில்ஸ் அண்ணா..!!

தாவரங்களின் வடிவ.. நிற.. குண.. சுவை குணங்கள் வரைபடமாக அதன் மரபணுவில் அமைந்திருப்பது பற்றி ஓர் அகல்வாராய்ச்சி செய்து பார்க்க ஆவலாக உள்ளோம்..!!

சிஷ்யையாக உடன் வருகிறேன் குருவே..!!

உங்களைக் குருவென்று சொன்னது தப்பில்லை தானே??!!

மனமார்ந்த பாராட்டுகள் முகில்ஸ் ஜி..!! :)

mukilan
13-07-2008, 06:07 AM
மிகவும் உபயோகமான கட்டுரை அண்ணா.

நானும் பல சமயம் இதை பற்றி தெரிந்துகொள்ள ஆசைபட்டு தேடினால் செய்திகள் ஆங்கிலத்தில்தான் கிடைத்தது.
தங்களின் இந்த திரியின் மூலம் இதைப்பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூரியன். இக்கட்டுரையின் மூலம் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் அது என் பாக்கியம்.

mukilan
13-07-2008, 06:14 AM
பாமகளை மாணவியாகப் பெறுவது பாக்கியம்தான். இருந்தாலும் குரு என்பது சற்று மிகைப்படுத்தப் பட்ட சொல்லோ என மனம் குறுகுறுக்கிறது தங்கையே! நான் அறிந்ததை சொல்கிறேன். குரு என்பவர் ஒரு துறையில் பெரிய நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டுமல்லவா? எப்படி இருந்தாலும் உன் அன்புக்கு கட்டுண்டேன்.

இளசு
13-07-2008, 06:14 AM
அன்பு முகில்ஸ்,

டபுள் ஹெலிக்ஸுக்கு - இரட்டைச் சுழல் ஏணி -- வாட்சனும் க்ரிக்குமே பூரித்துப்போவார்களே... நான் எம்மாத்திரம்!

மிக அருமையாய் எளிமையாய் அடித்தளம் போட்டிருக்கிறாய்..

நல்ல தொடக்கம் - பாதி வெற்றி!

முழு வெற்றி இத்தொடருக்குக் கிட்ட வாழ்த்துகள்!

------------------------------

தவளைத் தக்காளி ( விகடன்)

காய்கறி சைவமாஆஆஆஆ? ( குங்ங்ங்குமம்ம்ம்ம்ம்ம்... விளம்பர பயங்ங்ங்ங்கர பெண்குரல்..)

இப்படி ''அதிருதுல்ல' தலைப்பைக் கொடுக்கும் ஊடக ஜித்துக்களுக்கு
முகிலனின் இக்கட்டுரை ஒரு நல்ல திசைகாட்டி..

படங்களுக்கு என் சிறப்புப் பாராட்டுகள்..

mukilan
13-07-2008, 06:22 AM
இத்தொடர் ஆரம்பிக்க நினைத்ததே உதவிக்கு தோள் கொடுக்க நம் அண்ணா இருக்கிறார் என்ற தைரியத்தில் தான். உங்கள் ஊக்கமும் ஆசியும் இருக்கையில் முனைந்து கொடுப்பேன் அண்ணா! படங்கள் கொடுத்தால் கொஞ்சம் எளிமையாகப் புரியுமென நினைத்ததன் விளைவுதான். வரைகலை தெரிந்திருந்தால் படங்களின் பாகங்களைத் தமிழில் கொடுத்திருப்பேன். மீண்டும் என் மனமார்ந்த நன்றி அண்ணா!.