PDA

View Full Version : con, lpt1,com1, com2 - விஷேட வழியுண்டா..?



மஸாகி
13-07-2008, 03:24 AM
அன்பு நண்பர்களே..
con, lpt1,com1, com2 ...

மேற் குறிப்பிடப்பட்ட பெயர்களில் - கம்ப்யூட்டரில் சாதாரணமாக போல்டர்களை உருவாக்க முடியாதுள்ளது. உருவாக்க ஏதாவது விஷேட வழியுண்டா..?

praveen
13-07-2008, 04:34 AM
இதெல்லாம் சிஸ்டம் பெயர்கள், இதனை உருவாக்க இயலாது, ஏன் இந்தப்பெயரிலே தான் போல்டர் உருவாக்க அவசியம் என்ன? என்று சொல்லுங்கள் பதில் தருகிறேன்.

தீபா
13-07-2008, 04:45 AM
அவை dos drive பெயர்களாக களாக இருப்பதால் உங்களால் புதிய போல்டரைத் திறக்க முடியாது. என்றாலும் மாற்றுவழியின் திறக்கலாம்..

புது போல்டரை உருவாக்குங்கள்


அதை மாற்றுப் பெயராக்கும் போது (to rename) அப்படி Right Click செய்யுங்கள்
Insert Unicode control character என்ற Option வரும்.
அதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்பின் அப்படியே உங்கள் விருப்பமான பெயரை தட்டச்சுங்கள்..
நீங்கள் கேட்டது நடக்கும். :icon_b:

பாலகன்
13-07-2008, 05:25 AM
அவை dos drive பெயர்களாக களாக இருப்பதால் உங்களால் புதிய போல்டரைத் திறக்க முடியாது.

நண்பரே இந்த பெயர்கள் எல்லாம்........... டிவைஸ் போர்ட் பெயர்கள்,, அவை டாஸ் மட்டுமல்ல விண்டோஸிலும் உள்ளது

அந்த பெயர்களில் எதற்கு பெயர்களை உருவாக்கவேண்டும்,,, சரி போகட்டும்

அதற்கு, (ALT+255 or ALT 32) டைப் அடித்து பிறகு COM1 என்று டைப் செய்தால் வரும்

(ALT+255 or ALT 32) இவை இரண்டின் வேல்யு ஒரு எம்டி ஸ்பேஸ் பிறகு உங்கள் விருப்பமான பெயரை டைப் செய்யலாம், உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?

அன்புடன்
அ.மணவாளன்

மஸாகி
20-07-2008, 08:07 AM
நன்றிகள் - இவை வெறும் வார்த்தைகள் அல்ல..

எனது நண்பர்கள் என்னிடம் கேட்பதை..
எனது நண்பர்கள் உங்களிடம் கேட்கின்றேன் - அவ்வளவுதான்..

முடியாதென ஒரே சொல்லில் மறுப்பதை விட
முயற்சிக்கலாம் என்றுதான்...

நட்புக்கு - மஸாகி
20.07.2008