PDA

View Full Version : தமிழன் என்றாலே அழிவுதானா?மறத்தமிழன்
12-07-2008, 07:04 PM
இந்திய கடற்பரப்பில் நேற்றைய தினம் 2 தமிழக உறவு மீனவர்கள் கோரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழர்தான் எப்பொழுதும் அல்லலுறும் நிலை இருக்கிறது. இப்போது அது எமது தந்தை நாடாகிய தமிழகமும் அல்லலுறும் அவல நிலையை தோற்றுவித்துள்ளது.

இங்கே சொடுக்குங்கள் (http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml)

ஏனிந்த அவலம். இதற்குதான் நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். தமிழன் என்றால் ஏதிலிதான். நாதியற்றவன். யாரும் சுட்டுப்பொசுக்கலாம். என்ன கொடுமை!!

தீபா
12-07-2008, 07:11 PM
இச்செய்தி கேள்விப்பட்டதும் நான் நினைத்தது. இங்கே திரியாக மறத்தமிழன் கொடுத்திறீர்கள்.... எத்தனை தமிழர்கள் அழிந்தாலும் தமிழும் தமிழ்நாடும் வாழும் என்று வீர வசனமெல்லாம் பேச எனக்கு விருப்பமில்லை. துர்க்குணம் பிடித்தவர்கள் ஆயிரம் பேர் இறப்பதற்கும் ஒரு நல்ல தமிழன் இறப்பதற்கும் கூட சமான நிலை இல்லை என்பதே என் கருத்தும்.

அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது...? பகடைக்காய் ஆடிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் இன்னும் துரியோதனன் ஆட்சி முடியவில்லை... பொறுங்கள் தமிழரே! பாண்டவர்கள் புறப்படுவார்கள்.

அதுவரையிலும் இத்தமிழருக்காக கண்ணீர் சிந்தவேனும் நாம் நினைத்துக் கொண்டிருப்போம்...

ஓவியன்
13-07-2008, 02:09 AM
வழக்கமாக, தாம் செய்து விட்டு போராளிகள் செய்ததாகக் கதை பின்னி விடுவார்கள்...

இந்த முறையாவது உண்மை வெளியே தெரிந்ததே...!!

உயிர் நீத்த நம் உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தனை செய்வோம்...

அன்புரசிகன்
13-07-2008, 02:17 AM
மறத்தமிழா... தமிழனின் உயிர் இப்போது அவ்வளவாக பேசப்படுவதில்லை. பாருங்கள்.. இதில் கூட 2 பேர் தான் இறந்திருக்கிறார்கள்.

நம்நாட்டின் பத்திரிக்கைகளில் கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டுவெடிப்பு கைது இதுபோன்ற செய்திகள் சர்வசாதாரணமாகிவிட்டது. ஒரு 50 பேருக்கு மேல் இறந்தால் தான் சற்று திரும்பிப்பார்க்கிறது உலகம். இந்த செய்தி கூட பிபிசி தமிழில் தான் வந்திருக்கும் ஆங்கிலத்திலோ சி என் என் இலோ வந்திருக்கா,??? இதே ஒரு கிளைமோரில் ஒரு சிங்களவர் காயமடைந்திருந்தால் அதற்கு புஷ் கண்டனம் தெரிவித்திருப்பார்...

தலைவிதி என்று நழுவிவிட முடியாது. எமக்கென்று எங்கும் தனியரசில்லை.... அதில் அங்கம் வகிப்பவர்களும் நமக்காக இல்லை... தமிழை வளர்க்கிறோம் என்று வேறெதயோ வளர்க்கிறார்கள்....

மறத்தமிழன்
13-07-2008, 03:25 AM
தலைவிதி என்று நழுவிவிட முடியாது. எமக்கென்று எங்கும் தனியரசில்லை.... அதில் அங்கம் வகிப்பவர்களும் நமக்காக இல்லை... தமிழை வளர்க்கிறோம் என்று வேறெதயோ வளர்க்கிறார்கள்....

நிச்சயமாக அன்பு ரசிகன். தமிழர்க்கெல்லாம் தாமே தலைவர் என்போரெல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்களோ? அஞ்சலிக் கவிதை எழுதலாம். அதை விட அவர்களால் வேறு என்ன செய்ய முடியும். ஈழத்தமிழ் அல்லலுறுகிறது. குரல் கொடுங்கள். ஆறுதல் அளியுங்கள் என வேண்டுகிறோம். பாவம் தம் உறவுகளின் உடலமே அவர்களின் உப்புக்கடலில் மிதக்கும் போது அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத கையகலாத நிலை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

அண்மையில் ஒரு சுற்றுலாவாக தமிழ்நாடு போயிருந்தேன். சித்திரை வருடப்பிறப்பு காலம். ஒரு நாள் பத்திரிகை எல்லாம் தலைப்பு செய்தி இருவர் சுட்டுக்கொலை. சென்னையில் பரபரப்பு. எனக்கு வியப்பாக இருந்தது. எமது ஊர் பத்திரிகைகள் எல்லாம் "நேற்றைய படுகொலைகள்" என்று ஒரு செய்தி நிரல் ஒதுக்குவார்கள். அதில் 10 அல்லது 12 அப்பாவிகளின் விபரம் இருக்கும். கொலைகள் தலைப்பு செய்தியாகும் காலம் மலையேறிவிட்டது. தினசரி செய்தித்தாளில் இப்படி வரவில்லை என்றால் எமக்கு குழப்பாமாகிவிடும். அப்படி போகிறது எம் நிலை.

"தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்றொரு நாடும் இல்லை"

தீபன்
13-07-2008, 04:11 AM
ஈழத்து செய்திகள் என்னும் திரியில் நான் பதிந்த செய்திகளிலிருந்து இந்த திரிக்கு சம்பந்தப்பட சில செய்திகளை இங்கே பட்டியலிடுகிறேன்.

1) கச்சதீவுக் கடற்பரப்பில் சுமார் 1000 இந்திய மீனவர்கள் கைது.

4) இலங்கையில் சிறையடைக்கப்பட்டுள்ள 43 இந்தியர்களை நேற்று இலங்கைக்கான இந்திய தூதுவராலய அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்திய அரசாங்கம் இலங்கைப் படையினருக்கு விசேட இராணுவப் பயற்சிகளை வழங்கவுள்ளது.

7) மன்னார் குடா பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வு தொடர்பாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் எதிர்வரும் 7 ம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாக பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது.

2) கொழும்பின் கடல், வான் கண்காணிப்பு "சார்க்' வேளை முற்றாக இந்தியாவிடம்! மன்மோகனின் பாதுகாப்புக்கு 100க்கும் குறைவானவரே வருவர்.

12) தமிழக மீனவர்கள் புலிகளுக்கு உதவுவதாகக் கடற்படை தெரிவிப்பு.

5) சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு கடந்த மாதம் சென்ற இந்திய உயர் அதிகாரிகள் குழு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிராயச்சித்தமாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானை தமிழர் தரப்பு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியாதாக "சுடரொளி" வார ஏடு தெரிவித்துள்ளது.

11) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி முருகனை விடுதலை செய்யக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2) இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி 2 தமிழக மீனவர்கள் பலி: மேலும் ஒருவர் காயம்.

இவற்றையும் தொகுத்து பார்க்குபோது இந்திய மத்திய அரசு, மானில அரசு போன்றவற்றின் உண்மை நிலைப்பாடுகள் தெளிவாகும்.
ஒரு தலைவரின் இழப்பை காரணம் காட்டியே தமிழனின் தலைவிதியை நிர்ணயம் செய்ய முற்படும் அவர்களின் அரசியல் புலப்படும்.
இந்த அரசியல் நகர்வில் ஈழத்தமிழனென்ன இந்தியத் தமிழனென்ன எல்லோரின் உயிரும் ஒன்றுதான்.