PDA

View Full Version : பிறக்காமலேயே இருந்திருக்கலாம்....!!



ஓவியன்
12-07-2008, 07:36 AM
''நாளை என் பிறந்தநாள் விருந்து''
மறக்காமல் வந்து விடுவென,
அலை பேசியில்
அழைத்து, அழைத்துக்
களைத்துப் போனவன்
அலுத்துப் போய்க் கூறினான்..

''பிறக்காமலேயே இருந்திருக்கலாம்''

இளசு
12-07-2008, 07:49 AM
இயல்பாய் நிகழ்ந்து, கடந்துபோக வேண்டியவை
இப்படி நிர்ப்பந்தங்கள், சம்பிரதாயங்கள்..
சுற்றியிருப்பவர் எதிர்பார்ப்புகள் என
ஊதிப்பெரிதாக்கப்பட்டால் -

ஆதிக்காரணமும்
அது தரவேண்டிய மகிழ்ச்சிக்குப் பதிலாக
அலுப்பைத் தருமோ???!!!

பாராட்டுகள் ஓவி!

சுகந்தப்ரீதன்
12-07-2008, 08:08 AM
அதுக்கு அழைக்காமலே இருந்திருக்கலாம்..!!

-அவனுக்கு அருகிலிருந்தவன் சொன்னது..!!

வாழ்த்துக்கள் அண்ணா..!!
யதார்த்த கவி..சுவையாக உள்ளது..!!
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா..!!

அமரன்
12-07-2008, 08:16 AM
சுற்றந்தழால் தமிழனின் தலையாய பண்புகளில் ஒன்று.
விழாக்களும் பண்டிகைகளும் சுற்றந்தழாலிலுண்டு.
"சம்பிராதயம்" ஊடுருவ முதன்மை பின்னடைய
some பிற(ர்)காயம் இப்படியெல்லாம் பேசவைக்குது!!!

சிவா.ஜி
12-07-2008, 10:16 AM
இளசு சொல்வதைப் போல கட்டாயங்களால் சங்கடங்கள்தான் மிச்சம். சந்தோஷத்தையும் களவாடிவிடும். சலிப்பை தரும் கொண்டாட்டங்களால் அந்த கொண்டாட்டங்களே வேண்டாமென தோன்றவைத்துவிடுகிறது.
யதார்த்தமான சலிப்புதான். வாழ்த்துகள் ஓவியன்.

நாகரா
12-07-2008, 11:21 AM
பிறந்து இறந்து
கொஞ்ச நேரம் ஓய்ந்து
மீண்டும் மீண்டும்
தொடரும்
இப்பொய் வாழ்க்கைச் சுழலில்
சடங்கு சம்பிரதாயச் சழக்கில்
தொடர்ந்து புத்தி மழுங்கத்
தொலையும்
பிறவா இறவாப் பெருநிலையாம்
பேரின்பப் பெருவாழ்வு.

Narathar
12-07-2008, 11:39 AM
நிதர்சனமான உண்மையை
அழகு கவியாக்கிய
ஒவியனுக்கு வாழ்த்துக்கள்.....

ஓவியன்
13-07-2008, 01:56 AM
ஆதிக்காரணமும்
அது தரவேண்டிய மகிழ்ச்சிக்குப் பதிலாக
அலுப்பைத் தருமோ???!!!

பாராட்டுகள் ஓவி!

நான் சொல்ல வந்ததைச் சரியாக நாடி பிடித்து விட்டீர்களே....

மிக்க நன்றி அண்ணா..!! :)

ஓவியன்
13-07-2008, 01:58 AM
அதுக்கு அழைக்காமலே இருந்திருக்கலாம்..!!

-அவனுக்கு அருகிலிருந்தவன் சொன்னது.!!
இதுக்கு நான் இந்தக் கவிதையை எழுதாமலேயே இருந்திருக்கலாம்...!! :)

மிக்க நன்றி, சுபி...!! :)


some பிற(ர்)காயம் இப்படியெல்லாம் பேசவைக்குது!!!

உண்மையே அமரன், உங்கள் அழகான பார்வைக்கு நன்றிகள்..!! :)

ஓவியன்
13-07-2008, 02:01 AM
யதார்த்தமான சலிப்புதான். வாழ்த்துகள் ஓவியன்.ஹா, ஹா..!!

அண்மையில் யாருக்கோ பிறந்த நாள் வந்திச்சே..!! :D
மிக்க நன்றி சிவா..!! :)


இப்பொய் வாழ்க்கைச் சுழலில்
சடங்கு சம்பிரதாயச் சழக்கில்
தொடர்ந்து புத்தி மழுங்கத்
தொலையும்
பிறவா இறவாப் பெருநிலையாம்
பேரின்பப் பெருவாழ்வு.
அற்புதக் கருத்துப் பொதிந்த அழகான பின்னூட்டம், மிக்க நன்றி அண்ணா..!! :)

ஓவியன்
13-07-2008, 02:02 AM
நிதர்சனமான உண்மையை
அழகு கவியாக்கிய
ஒவியனுக்கு வாழ்த்துக்கள்.....

மிக்க நன்றி நாரதரே..!! :)

பென்ஸ்
13-07-2008, 02:21 AM
என்ன ஓவியன்... சித்தாந்தம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டீர்கள்....
இது உங்கள் புலம்பல் இல்லைதானே....

ஆமா... இந்த உலகத்தில் எல்லோரையும் சந்தோசமாக வைத்திருக்க முடியுமா..!!!???
அப்படி எதுக்கு செய்யனும்...!!!???

நாம சந்தோசமா இருக்கவா,,,, !!!!

அட எத்தனை கேள்விகளை எளுப்பி விட்டீர்கள்.....:)

ஓவியன்
13-07-2008, 02:43 AM
ஆஹா பென்ஸ் அண்ணாவா..!!

நலம்தானே...??

சித்தாந்தம் எல்லாம் இல்லை, நேரடியாகக் பார்த்த சம்பவத்தை இங்கே தந்தேன்....!! :)


ஆமா... இந்த உலகத்தில் எல்லோரையும் சந்தோசமாக வைத்திருக்க முடியுமா..!!!???
அப்படி எதுக்கு செய்யனும்...!!!???

நாம சந்தோசமா இருக்கவா,,,, !!!!

ஆமா, எல்லோரும் எல்லோரையும் சந்தோசமாக வைத்திருந்தால்.....
எல்லோரும்(இதற்குள் நாமும் அடங்கும் தானே) சந்தோசமாக இருக்கலாம்...

Keelai Naadaan
13-07-2008, 03:08 AM
குழந்தைகள் கொண்டாடினால் ரசிக்கலாம். பெரியவர்கள் ஆனபிறகு பொதுவாக பிறந்தநாள் கொண்டாடும் ஆசை குறைந்து விடுகிறது.
சில விதிவிலக்குகள் இருக்கலாம், சிலர் கொண்டாடுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம்
"பிறக்காமலேயே இருந்திருக்கலாம்" என சலிப்பு தோன்றினால் அனுபவங்கள் அதிகமானது காரணமாக இருக்கலாம்.
யதார்த்த கவிதை. பாராட்டுகள்.

பாலகன்
13-07-2008, 03:17 AM
''நாளை என் பிறந்தநாள் விருந்து''
மறக்காமல் வந்து விடுவென,
அலை பேசியில்
அழைத்து, அழைத்துக்
களைத்துப் போனவன்
அலுத்துப் போய்க் கூறினான்..

''பிறக்காமலேயே இருந்திருக்கலாம்''

ஒருவேளை செலவுக்கு பயந்து இப்படி சொன்னானோ?

ஓவியன்
13-07-2008, 03:21 AM
ஒருவேளை செலவுக்கு பயந்து இப்படி சொன்னானோ?

அது பிரச்சினை இல்லை பில்லா, ஒவ்வொருவரையும் அழைத்து அவரது பேச்சுக்களைக் கேட்டு, இதமாக அவருக்கு அழைப்பு விடுப்பது இருக்கிறதே...

அது மிகப் பெரிய வேலையே..!!

ஓவியன்
13-07-2008, 03:23 AM
"பிறக்காமலேயே இருந்திருக்கலாம்" என சலிப்பு தோன்றினால் அனுபவங்கள் அதிகமானது காரணமாக இருக்கலாம்.
யதார்த்த கவிதை. பாராட்டுகள்.

நன்றி, கீழை நாடன்..!!
நல்லதொரு கோணத்திலான பார்வை..!! :)

தீபா
13-07-2008, 03:40 AM
ஒரு நாளைத் தின்று அடுத்தநாள்

அடுத்த நொடியைத் தின்றேப்பம் விடும் நோக்கில் நிகழ் நொடி

ஆனால் நிகழ் நாளீன்றி அடுத்த நாளில்லை, நிகழ் நொடியின்றி அடுத்த நொடியில்லை.

நொடிந்து போனவர்களுக்கு அப்படித் தோன்றலாம். வாழ்த்தை வாகை வாசகமாக எடுத்துக்கொள்ளத் தெரியாதவர்களுக்கு..