PDA

View Full Version : சுவாமி.நித்ரானந்தா



mukilan
12-07-2008, 01:45 AM
அது ஒரு அழகிய நந்தவனம்.பூத்துக் குலுங்கும் மலர்கள்.. மயக்கும் மணம் பரப்பி நின்ற மகிழம்பூ மரங்கள். யாரோ ஒரு அழகிய பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். அழகான பெண்ணுடன் நானா? அதானே நல்ல கனவாகத்தான் இருந்திருக்க வேண்டும். மார்கழி மாதத்தின் காலை நேரம். தலையையும் சேர்த்து மூடிக்கொண்டு, குளிருக்கு கம்பளி கொடுத்த கதகதப்பில்தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென மழை வந்த பொழுதே நான் சுதாரித்திருக்க வேண்டும்..... என் சகதர்மினி தான். கையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு என்னை எழுப்ப முயற்சிக்கிறாளாம்.

என் மனைவியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். கல்யாணம் முடிந்த புதிதில் போனால் போகிறதென்று கொஞ்சமே கொஞ்சம் என்று அழகாக இருந்தவள்தான்.. என்னாயிற்றோ மகள் பிறந்ததிலிருந்தே அழகோடு சண்டையிட்டுக் கொண்டவள் போல கிஞ்சித்தும் அழகு படுத்திக் கொள்வதே கிடையாது. நான் சொல்லியும் காண்பித்து விட்டேன்.

போதும் உங்க மூஞ்சிக்கு என்பாள்.
நான் மீறி ஏதேனும் சொல்லிவிட்டால் உடனே என் அம்மாவைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டு சண்டை பிடிக்க வந்துவிடுவாள். எல்லா வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எங்கள் வீட்டில் என் அம்மாவிற்கும் என் வீட்டுக்காரிக்கும் நல்ல பொருத்தம். அவர்கள் கூட்டணி எப்பொழுதும் ரொம்ப கெட்டி.எங்கே என்னைப் பட்டினி போட்டு விடுவார்களோ என்று அடிக்கடி வாய்மூடி வெளிநடப்பு செய்து விடும் சிங்கிள் மேன் நான்.

நான்... ? பேரு பரந்தாமன். சென்னையில் ஸ்டேட் பேங்கில் புரபேஷனரி ஆபிசராக இருக்கிறேன். ரயில்வே கலாசி வேலையில் இருந்து ஐ.ஏ.எஸ் வேலை வரைக்கும் எல்லா வேலைக்கும் முயற்சி பண்ணி தெய்வம் கைவிட்டப்பறம் என் முயற்சியின் திருவினையால வேலை வாங்கினேன். இங்கே சென்னைல நான் அம்மா, என் தர்மபத்தினி செல்வி, மகள் கயல்விழியோடு இருக்கிறேன்.

தூக்கம் என்பது எவ்வளவு அருமையான விசயம் இல்லையா? அப்படியே உடல் பாரத்தை இறக்கி மனபாரம் போக கண்ணை மூடிக்கொண்டு... அடடா. கிட்டத்தட்ட அது ஒரு தியானம். அதை அனுபவிச்சாதான் தெரியும். என் காதுக்கருகில் வெடி குண்டு வெடித்தாலும் என் தூக்கம் கலையாது. நித்திரையை நிரம்பவும் அனுபவிப்பேன் என்பதால் எனக்கு சுவாமி.நித்ரானந்தா என்றே பட்டம் கொடுக்கலாம். ஆனால் என்னைக்கூட தூக்கத்தில் எழுப்பும் வித்தையையும் கிராதகி கற்று வைத்திருக்கிறாள். ஆரம்பத்தில் காதுக்கருகில் பேசிப்பார்த்து... என்னை அசைத்துப் பார்த்து...ம்ஹீம் எதற்கும் அசையாத என்னை தண்ணீர் ஊற்றி(கவனிக்க தெளித்து அல்ல ஊற்றி) எழுப்பக் கற்றுக் கொண்டிருக்கிறாள். தூக்கத்தில் தண்ணீர் ஊற்றிய பிறகு தூக்கமாவது மண்ணாவது. என் தவம் கலைக்கும் இந்த மேனகைக்குச் சாபமா இட முடியும்?:eek:.

நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் அப்பா அலாரம் வாங்கிக் கொடுத்தார். அது அடித்து நான் கேட்டதெல்லாம் பகலில்தான். நமக்கும் நித்ராதேவிக்கும் அப்படி ஒரு காதல். மனிதர் உணர்ந்து கொள்ள.. சரி வேண்டாம் விட்டிடுங்க. அது யார் அவ நித்ராதேவி என் சக்களத்தி எனச் செல்வி ஓடி வந்து விடுவாள்.

ஆனால் என் அத்தைப் பையன் அனந்தராமன் அப்படியல்ல. பையன் படு உஷார்ப்பேர்வழி. நான் நித்ரானந்தா என்றால் அவன் உஷாரானந்தா.அலாரம் வைத்தால் அது அடிப்பதற்குள் எழுந்து அதனை ஆஃப் செய்பவன். உறங்குவானோ இல்லையோ தெரியாது. ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே எழுந்து விடுவான். இப்படித்தான் சிறுவயதிலே கிராமத்தில் பாட்டி வீட்டில் விடுமுறைக்கு நாங்கள் எல்லாம் சென்றிருந்த பொழுது ஏதோ சத்தம் கேட்டு விழித்தவன் பக்கத்து வீட்டில் திருடர்களைக் கண்டு அனைவரையும் எழுப்பி அவர்கள் பிடிபடக் காரணமாய் இருந்தான். ஊரே அவனைப் பாராட்டிப் பேச அத்தைக்கு இருப்புக் கொள்ளவில்லை. எங்கே போனாலும் எங்க அனந்து ரொம்ப சுறுசுறுப்பு.. எப்போவுமே உஷாரா இருப்பான் என்றெல்லாம் பெருமை பீற்றிக்கொள்வார். அந்தத் திருடன் பிடித்த கதையை மாட்டிக்கொண்ட ரெக்கார்டு டிஸ்க் போல அதையே வசனம் மாறாமல் சொல்லிக் காட்டுவார். மாமா அதைவிட ஒரு படி மேல். எங்க அனந்து சி.பி.ஐ ஆபிஸராவானாக்கும். நீ எல்லாம் என்னத்துக்குடா ஆவே மடி பிடிச்ச பயலே என்பார் என்னை.

அனந்து சென்னை மாநகராட்சிப் பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாராக இருக்கிறான். சிறுவயதில் எங்கள் வீட்டிற்கு வருகையில் என் அம்மா எழுந்து வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டே எழுந்து விட்டேன் என்பான். என் அப்பாவும் தங்கை பையனை வானளாவப் புகழ்வார். நீயும் அவனைப் போல இருக்கணும் பரந்தாமா என்ற அட்வைஸ் வேறு. சரியென்று தலையாட்டுவதைத் தவிர வேறேன்ன செய்ய. அன்றிலிருந்து இன்று வரை தலையாட்டும் காரியத்தைச் சிரமேற்கொண்டு செய்து வருகிறேன்.

இன்று பேங்க் சென்று உக்காரக்கூட இல்லை. செல்போனில் அனந்துவின் அம்மா(அத்தை) அழைத்தார்.
என்ன ஆச்சு அத்தை என்றேன்.
பரந்தாமா, அனந்து மயங்கி விழுந்துட்டாண்டா. எனக்குப் பயமாயிருக்கு கொஞ்சம் வந்துட்டுப் போயேன் என்றார்.
மேனேஜரிடம் சென்று அரைநாள் பர்மிஷன் போட்டு விட்டு அனந்து வீட்டிற்குச் சென்றேன். போன மாதம்தான் அனந்துவிற்கு திருமணம் ஆகியிருந்தது.
அனந்துவின் மனைவி சுமதி வாங்கண்ணா! அவர் அங்கே படுத்திருக்கார்.. எனக்குப் பயமாயிருக்கு பாருங்க என்றார்.

நான் அனந்துவை எழுப்பினேன். ஈனஸ்வரத்தில் முனகினான். நம்பவே முடியவில்லை. காலடிச் சத்தம் கேட்டாலே எழுந்து விடும் அனந்துவா? ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டு டாக்டர்.பாத்ரூம்பூதம் கிளினிக்கிற்கு விரைந்தேன். டாக்டர் அனந்துவின் நாடி பிடித்துப் பார்த்தார். கண்களில் லைட் அடித்துப் பார்த்து விட்டு ஸ்லீப் டெப்ரிவியேசன் போலத் தெரியுதே என்றார். பின்னர் அவர் பரிந்துரைத்த சில தூக்க மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம்.

அனந்துவிடம் ஏன் டா தூங்கலை! என்றேன். சுமதி ராத்திரியெல்லாம் குறட்டை விடறாடா! எனக்குத் தூக்கம் போய்டறது என்றான். இதைக்கேட்டு சிரிப்பதா அழுவதா? என்றே தெரியவில்லை. ஆனால் தூக்கம் என்பது வரம் என்று புரிந்தது
இப்போ சொல்லுங்க நீங்க சுவாமி.நித்ரானந்தாவாக விரும்பறீங்களா இல்லை சுவாமி.உஷாரானந்தாவாக விரும்பறீங்களா?

...ஆங் சொல்ல மறந்திட்டேனே.. இப்போ அனந்துவை எப்படி எழுப்பறதுன்னு செல்வி கிட்ட போன்ல சுமதி டிப் கேட்கறாங்க. பின்னே அனந்துவிற்கு தூங்க ட்ரெய்னிங் கொடுத்தது நானாச்சே!:D சுவாமி.நித்ரானந்தாய நமக.:icon_rollout::icon_b:

தாமரை
12-07-2008, 02:02 AM
நீங்களுமா முகிலன்?

இதைப் படிக்கும் போது எங்கள் அம்மா என்னை எழுப்பும் நுட்பம் நினைவுக்கு வருகிறது..

ஒரு கப் காஃபி, அப்புறம் ஒரு சொம்புத் தண்ணீர் கொண்டு வந்து காஃபியை பக்கத்து டீப்பாய் வைத்துவிட்டு

தலைமாட்டில் அமர்ந்துகொண்டு கொஞ்சமாய்த் தண்ணீரில் விரல் நனைத்து இமைகளின் மேல் பூவுக்கு வர்ணம் பூசுவது மாதிரி, மெதுவாகத் தடவிவிட்டு "ராஜூ ராஜூ" என அழைப்பார்கள்..

அப்படியே தாமரை மலரும்....

என்ன கேட்டீங்க? இப்ப எப்படியா? இப்பவு தூக்கம் அப்படியேப் பூட்டியக் கதவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13609) தான். ஆனால் தூங்கும் முன் மனசுக்குள் அலாரம் செட் ஆகிடும். எத்தனை மணிக்கு விழிக்கணுமோ, அப்போது தானாத் தூக்கம் தெளிஞ்சிடும்.


தயவு செய்து யாரும் எங்க வீட்டு ஃபோன் நம்பரை முகிலனுக்கு குடுத்திராதீங்க.. :D :D :D

mukilan
12-07-2008, 02:09 AM
பரவாயில்லையே! என்னைப் போலவே தூங்க இங்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்.

உங்க போன நம்பர் எனக்குத் தெரிஞ்சா பரவாயில்லை... தெரியவேண்டியவங்களுக்குத் தெரியக் கூடாதே!:icon_ush:

பென்ஸ்
12-07-2008, 02:13 AM
வெல்கம் பேக் முகில்ஸ்....

நீண்........ட நாட்க்களுக்கு பிறகு ஒரு பதிவு....
அது என்னமோ பாருங்க இந்த பதிவு வாசிக்க வாசிக்க என் உதட்டு ஓரம் காதுவரை மெதுவாக சென்றதை "செல்வி" பார்த்து விட்டார்.....


எப்போதேனும் கடந்து செல்லும் யாரோ ஒரு பெண் நீ பூசும் வாசனைத் திரவியத்தை நினைவுபடுத்துகையில் உன்னை எப்படி மறப்பதாம்?

எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-)

மதி
12-07-2008, 02:24 AM
கலக்கல் முகில்ஸ்...

எப்படி இவ்வளவு சரளமா எழுதறீங்க...

சுவாமி நித்திரானந்தா நீங்க இல்லியே??

mukilan
12-07-2008, 02:27 AM
வெல்கம் பேக் முகில்ஸ்....

நீண்........ட நாட்க்களுக்கு பிறகு ஒரு பதிவு....
அது என்னமோ பாருங்க இந்த பதிவு வாசிக்க வாசிக்க என் உதட்டு ஓரம் காதுவரை மெதுவாக சென்றதை "செல்வி" பார்த்து விட்டார்.....



எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-)

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பென்ஸ். உங்க வீட்லயும் ஒரு செல்வி இருக்காங்களா? :sprachlos020:

எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-
என் துரதிர்ஷ்டம்தான் பென்ஸ் இது. நானும் இன்னும் கொஞ்ச நாள் என்று சொல்லிச் சொல்லியே நாட்களைக் கடத்தி விட்டேன். நிச்சயம் டிசம்பர் 2008க்குள் வந்து விடுவேன் என நினைக்கிறேன். மன்றத்தின் சங்கமத்தில் கலந்து கொள்வது பற்றி உறுதியாகத் தெரியாததால் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை.:traurig001:

தாமரை
12-07-2008, 02:28 AM
எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-)

பென்ஸ் உண்மையைச் சொல்லிடுங்க. எங்க இருக்கீங்க!:eek::eek::eek::eek::D:D:D

mukilan
12-07-2008, 02:30 AM
கலக்கல் முகில்ஸ்...
எப்படி இவ்வளவு சரளமா எழுதறீங்க...

நன்றி மதி! உங்கள் ஊக்கம் இருக்கையில் எல்லாம் சரளமா வருமப்பு.

..
சுவாமி நித்திரானந்தா நீங்க இல்லியே??இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க:confused:
நேற்று இரவுதான் உங்களிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். பென்ஸ் வேறு எப்பொழுது இந்தியா எனக் கேட்டு விட்டார்:sauer028::sauer028:

mukilan
12-07-2008, 02:31 AM
பென்ஸ் உண்மையைச் சொல்லிடுங்க. எங்க இருக்கீங்க!:eek::eek::eek::eek::D:D:D
அவர் மன்றத்திற்கு வந்து போகும் நேரத்தைப் பார்த்தால் ஏதோ வட அமெரிக்க நாட்டில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது.:wuerg019:

தாமரை
12-07-2008, 02:34 AM
அவர் மன்றத்திற்கு வந்து போகும் நேரத்தைப் பார்த்தால் ஏதோ வட அமெரிக்க நாட்டில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது:

அப்படியென்றால் இந்தியா எப்போது போறீங்க என்றல்லவா கேட்டிருக்கணும்.:wuerg019: :eek::eek::eek:

mukilan
12-07-2008, 02:39 AM
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் பென்ஸ் அப்படிக் கேட்டிருந்தால் நாம் இங்கு விவாதிக்கவே தேவையில்லையே!
நல்லாக் குழப்புறாரே!!!!

தாமரை
12-07-2008, 02:43 AM
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் பென்ஸ் அப்படிக் கேட்டிருந்தால் நாம் இங்கு விவாதிக்கவே தேவையில்லையே!
நல்லாக் குழப்புறாரே!!!!

விவாதிக்கத் தேவையில்லைன்னா? ஓ புரிஞ்சிடுத்து. பென்ஸ் இங்க இருந்தா உங்களை எப்படி இந்தியாவிற்கு வரூவீங்க எனக் கேட்பார் என யோசிக்கிறீங்களா? ஏன் பென்ஸ் இருந்தா வரமாட்டீங்களா?

யோ(வ்) -- சிக்கறீங்க தானே!:D:D:D

தாமரை
12-07-2008, 03:28 AM
போன மாதம்தான் அனந்துவிற்கு திருமணம் ஆகியிருந்தது.
அனந்துவின் மனைவி சுமதி வாங்கண்ணா! அவர் அங்கே படுத்திருக்கார்.. எனக்குப் பயமாயிருக்கு பாருங்க என்றார்.

நான் அனந்துவை எழுப்பினேன். ஈனஸ்வரத்தில் முனகினான். நம்பவே முடியவில்லை. காலடிச் சத்தம் கேட்டாலே எழுந்து விடும் அனந்துவா? ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டு டாக்டர்.பாத்ரூம்பூதம் கிளினிக்கிற்கு விரைந்தேன். டாக்டர் அனந்துவின் நாடி பிடித்துப் பார்த்தார். கண்களில் லைட் அடித்துப் பார்த்து விட்டு ஸ்லீப் டெப்ரிவியேசன் போலத் தெரியுதே என்றார். பின்னர் அவர் பரிந்துரைத்த சில தூக்க மாத்திரைகள் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம்.

அனந்துவிடம் ஏன் டா தூங்கலை! என்றேன். சுமதி ராத்திரியெல்லாம் குறட்டை விடறாடா! எனக்குத் தூக்கம் போய்டறது என்றான். இதைக்கேட்டு சிரிப்பதா அழுவதா? என்றே தெரியவில்லை. ஆனால் தூக்கம் என்பது வரம் என்று புரிந்தது
இப்போ சொல்லுங்க நீங்க சுவாமி.நித்ரானந்தாவாக விரும்பறீங்களா இல்லை சுவாமி.உஷாரானந்தாவாக விரும்பறீங்களா?

...ஆங் சொல்ல மறந்திட்டேனே.. இப்போ அனந்துவை எப்படி எழுப்பறதுன்னு செல்வி கிட்ட போன்ல சுமதி டிப் கேட்கறாங்க. பின்னே அனந்துவிற்கு தூங்க ட்ரெய்னிங் கொடுத்தது நானாச்சே!:D சுவாமி.நித்ரானந்தாய நமக.:icon_rollout::icon_b:




வெல்கம் பேக் முகில்ஸ்....

எப்போ இந்தியா வருவதா உத்தேசம்....:-)




அவர் மன்றத்திற்கு வந்து போகும் நேரத்தைப் பார்த்தால் ஏதோ வட அமெரிக்க நாட்டில் இருப்பது போலத்தான் தோன்றுகிறது.:wuerg019:


கூட்டிக் கழிச்சுப் பாருங்க. கணக்கு சரியா வருவது தெரியும் முகில்ஸ்.:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

ஓவியன்
12-07-2008, 05:17 AM
சரியாகச் சொன்னீங்க முகில் ஜீ..!!

நித்திரை என்பது ஒரு வரம், நித்திராதேவியின் பூரண அனுக்கிரகம் பெற்றவன் பாக்கியராஜ், மன்னிக்கணும் பாக்கியசாலி..!! :D

நானும் ஒரு பாக்கியசாலியே...!! :)

ஓவியன்
12-07-2008, 05:19 AM
பென்ஸ் உண்மையைச் சொல்லிடுங்க. எங்க இருக்கீங்க!:eek::eek::eek::eek::D:D:D

வாவ், வாவ், வவ் (நன்றி மலர்..!! :D) - பென்ஸானந்தா, நித்திரானந்தா ஆக இருக்கையில் பதிந்த பதிவது...!! :D

இளசு
12-07-2008, 08:16 AM
ஆஹா முகில்ஸ்..

இப்படி ஒரு அழகிய நகைநடையில் முழுக்கதை படைப்பது தனித்திறமை!
அதையும் உன்னிடம் கண்டு கொள்ளை மகிழ்ச்சி எனக்கு..

நித்ராதேவியின் முதல் காதலன் நானாக இருப்பேன் என நினைக்கிறேன்..

8-9 மணி நேரம் தினமும் அவளுடன் கழி(ளி)க்கவில்லை என்றால்,
வார இறுதியில் விட்டதைப் பிடிப்பேன்..
''எப்படிங்க....'' என என் கறார் கணக்கைக் கண்டு வியப்பாள் என் 'செல்வி'.

பணிக்குச் செல்வதற்கன்றி வேறு எதற்காகவும் என் நித்ராலிங்கனத்தைக் கலைக்காத திருச்செல்வி!

------------------------

இந்த மெல்லியல் கதைக்கு என் குதூகலித்த மனதின் நன்றியும் பாராட்டும்!

ஓவியன்
12-07-2008, 09:15 AM
8-9 மணி நேரம் தினமும் அவளுடன் கழி(ளி)க்கவில்லை என்றால்,
வார இறுதியில் விட்டதைப் பிடிப்பேன்..!

ஆஹா இளசு அண்ணா,
இந்தப் பழக்கம் எனக்கும் இருந்தது..

ஆனால் இப்போது என் ‘செல்வி'க்காக
இந்தப் பழக்கத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
மாற்ற முயலுகிறேன், ஏனெனின்
வார இறுதி நாட்கள் மட்டும்தானே
அவள் சுமையை நானும் கொஞ்சம்
பகிரும் நாட்கள்....!!

சிவா.ஜி
12-07-2008, 10:12 AM
ஆஹா...முகிலன்....அசத்திட்டீங்க. அழகான சரளமான எழுத்து. தடையில்லாமல் வாசித்து ரசிக்க முடிகிறது. எங்க வீட்ல "செல்வி"யால பிரச்சனையில்லை. நாங்கள் பெற்ற செல்வத்தால்தான். அவள் எழுந்தால் நானும் எழுந்துவிடவேண்டும். அருமையாக இருக்கிறது முகிலன். பாராட்டுகள்.

செல்வா
12-07-2008, 10:24 AM
ஒரு உதவாக்கரைப் பிரச்சனையில மாட்டிக்கிட்டு தவிச்சுட்டுருந்தேன். சரி கொஞ்ச நேரம் மனச வேறுபாதக்கி திருப்பலாம்னு மன்றம் வந்து இந்தக் கதையை வாசிச்சேங்க...

அட அட... என்ன ஓரு எள்ளல் .. நகை நடை. பாராட்டுறதுக்கு வார்த்தைகளே இல்லீங்க அண்ணா....
மனசு அப்படியே லேசாயிடுச்சு.... பஞ்சு மாதிரி....

அடிக்கடி நீங்க நித்ரானந்தா மாதிரி தூங்காம உஷார் பார்ட்டி மாதிரி கதைகள் தரணும்கிறது என்னோட அன்புக்கட்டளை.

அன்புரசிகன்
12-07-2008, 01:32 PM
வார இறுதியில் விட்டதை பிடிக்கும் பழக்கம் எனக்கும் மத்தியகிழக்கிற்கு வந்தநாளில் இருந்து வந்துவிட்டது... ஆனால் நான் சுதந்திரப்பறவை... யாராவது அலைபேசியில் அழைக்காவிட்டால் நானே ராஜா. நானே மந்திரி...

புன்முறுவலுடன் வாசிக்க ஒரு கதை தந்ததற்கு கோடி நன்றிகள் அண்ணா.... வேலைப்பளுக்களிடையில் மனம் லேசானது.... (வைத்தியர் செலவுகள் மீதமாகும். .இதுபோன்ற கதைகள் வந்தால்)

mukilan
12-07-2008, 03:20 PM
மிக்க நன்றி ஓவியன். ஆமாம் நித்ராதேவியின் காதல் அத்துணை சுலபமாக அனைவருக்கும் கிட்டுவதில்லை. சரி யாரந்த பாக்கியராஜ்?

mukilan
12-07-2008, 03:23 PM
அன்பு இளசு அண்ணா, உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி. உங்களையும் மன்றத்தில் உள்ள நம் மற்ற நண்பர்களையும் போன்றோரின் சத்தான பின்னூட்டத்தினாலேயே இந்த முயற்சியில் இறங்கும் மனதிடம் வந்தது. உங்கள் ஆதூரமான அன்பிற்கு நன்றி அண்ணா.

சிவா.ஜி அண்ணா உங்களின் ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி. செல்வி எழுப்பினால்தான் கோபம் வரும்... நீங்கள் பெற்ற செல்வம் எழுப்பினால் கோபமே வராதே:D. அது என்ன என்றே தெரியவில்லை மனைவி கொடுத்த அத்துணை தொல்லைகளையும் மகள் கொடுத்தால் மனம் மகிழுமாமே?

mukilan
12-07-2008, 03:31 PM
செல்வா என் கதை படித்து உங்கள் மனம் எளிதானாதானால் அது நான் செய்த பாக்கியம்.இப்படியான பாராட்டுக்களுக்காகவே இன்னமும் படைக்கவேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. என்னால் முடிந்த அளவில் இன்னமும் பல படைப்புக்கள் கொடுக்கிறேன்.
அன்பு, உங்களின் அன்புக்கு மிக்க நன்றி. என்னால் முடிந்த வரை இனிப் படைக்க முயல்கிறேன்... உங்கள் வைத்தியச் செலவைக் குறைக்கவாவது:D

பூமகள்
12-07-2008, 03:39 PM
முகில்ஸ் அண்ணா... இல்ல இல்ல... சுவாமி நித்ரானந்தா ஜி... :D:D
கதையின் ஆரம்பமே.. ரம்யமா ஆரம்பிச்சி.. கலக்கிட்டீங்க.. நிஜமாவே ரொம்ப அழகான கதை..

எப்படிங்க அண்ணா.. இப்படி?? எழுத்துகள் கைவசம் இருந்தா எனக்கும் கொஞ்சம் தாங்களேன்.. நானும் ஒரு நல்ல கதை எழுதலாம்னு எழுத முயல்கிறேன் முயல்கிறேன்.. ஹ்ம்ம்.....

நித்திராதேவியின் கருணை கண்டிப்பா எப்படிப் பார்த்தாலும் 8 மணி நேரம் கிடைக்கும் படி இருக்கிறேன்.. முன்பெல்லாம் 10 மணி நேரம்.. ஹீ ஹீ..!!

ஆனால்.. படிக்கும் காலத்தில்.. இரவு விழித்துப் படிப்பதோடு சரி.. காலையில் நீங்கள் சொன்னது போல.. கம்பளி போர்த்திய ரம்யமான நித்திரை தான்... அதுக்கு மட்டும் இடைஞ்சல் வந்தது... என் கோபம் தாங்காது.. அதுக்கு பயந்துட்டே என்னை தொட்டு அம்மா எழுப்பவே மாட்டாங்க..

தொலைக்காட்சியையோ.. வானொலியையோ.. சத்தமாக வைத்து.. அல்லது சூரியன் முகத்தில் படும்படி ஜன்னலைத் திறந்து...
கதவை.. திடீரென சத்தமாக திறந்து..
என் அறையில் ஓடிக்கொண்டிருக்கும் விசிறியை நிறுத்தி...

இப்படி ஏதேனும் ஒரு உத்தியில் தான் என்னை எழுப்பிவிடுவார்கள்..

கொஞ்சம் கோபம் வந்தாலும்.. நேரம் பார்த்து... எழுந்து அரக்கப் பரக்க கிளம்புகையில்.. கோபம் ஓடிப் போகும்..!!

இன்னும் பல பாடங்கள் உங்களின் எழுத்துகளில் கற்க விரும்பும் சிஷ்யை..நான்...

குருவே.. நிறைய எழுதுங்கள்.. பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!!

mukilan
12-07-2008, 03:55 PM
வெல்கம் டூ த கிளப் பூ! மன்றத்தில் உள்ள மக்கா எல்லாருமே என்னைப் போலத்தான் போல. பாமகளின் பாராட்டுப் பத்திரத்திற்கு நன்றி.
என்ன நான் குருவா? கவிமகளே உன்னிடம் கற்றுக் கொள்ள ஏராளமிருக்கிறது.. இதில் நான் சொல்லிக் கொடுப்பதாவது. சரி இருவருமே கற்றதைப் பகிரலாம்:icon_b:

பூமகள்
12-07-2008, 06:22 PM
நிறை குடம் நீர் தழும்பாதுன்னு சொல்வாங்க.. அது இங்கே பார்த்துட்டேன்..!!

முகில்ஸ் அண்ணா... பெரிசா பில்டப் கொடுக்காதீங்க.. குருன்னு சொன்னா ஒத்துக்கனும் ஆமா...!! ;)

தீபா
12-07-2008, 06:40 PM
சுவாமி நித்ரானந்தா எனவும் ஏதோ சாமியார் கதை போலும் என்று நினைத்துக்கொண்டேன்.

உறக்கம் என்பது ஆழ்மன விழிப்புநிலை. மனம் விரிந்து கனவுகளாக வாசமிடும்போது உறக்கம் எத்தனை சுகம் என்பது அனுபவித்தவர்கள் அறிவார்கள். ஆனால் உறக்கம் அகசுகங்களுக்குத்தானே தவிர, புற சுகங்களுக்கல்ல. மெய்யுட் புலன்கள் எத்தனை சுகம் பெறுகிறவொ அத்தனை கெடுதியும் புறப் புலன்களோடு அப்பிக் கொள்கின்றன. இதற்காகவெல்லாம் எனக்கு உறக்கம் பிடிக்காது என்று சொல்லுவதற்கில்லை. துரித தூக்கமும் துரித விழிப்புமாய் அல்லது நெடுநேர முழிப்பு நெடுநேரத்தூக்கமும் வித்திட்ட தினங்களாக வாழ்க்கை கடத்திச் செல்லுகிறது என்னை.

கதையின் முடிவிலான ஓரப்புன்னகை (பரந்தாமனின் செய்கை) ஓட்டம் எள்ளல் உணர்வை அள்ளித் தருகிறது. அதைக் கொண்டுவந்து முடித்தது சுகத்தையே தருகிறது.

என்ன செய்யலாம்? அதிகால 12க்கு அருகில் நித்திரை தேவி அழைக்கிறாள்.... அனுதின காரியமான அதை இப்பொழுது கடைபிடிக்கவேண்டியதுதான்,.

பாராட்டுக்கள்

mukilan
12-07-2008, 09:01 PM
உறக்கம் என்பது ஆழ்மன விழிப்புநிலை. மனம் விரிந்து கனவுகளாக வாசமிடும்போது உறக்கம் எத்தனை சுகம் என்பது அனுபவித்தவர்கள் அறிவார்கள். ஆனால் உறக்கம் அகசுகங்களுக்குத்தானே தவிர, புற சுகங்களுக்கல்ல. மெய்யுட் புலன்கள் எத்தனை சுகம் பெறுகிறவொ அத்தனை கெடுதியும் புறப் புலன்களோடு அப்பிக் கொள்கின்றன. இதற்காகவெல்லாம் எனக்கு உறக்கம் பிடிக்காது என்று சொல்லுவதற்கில்லை. துரித தூக்கமும் துரித விழிப்புமாய் அல்லது நெடுநேர முழிப்பு நெடுநேரத்தூக்கமும் வித்திட்ட தினங்களாக வாழ்க்கை கடத்திச் செல்லுகிறது என்னை.


உங்கள் வார்த்தைப் பிரயோகம் கண்டு வியந்து நிற்கிறேன். இவ்வளவு ஆழமாகத் தூக்கம் பற்றி நான் சிந்திக்கவில்லை. உங்களின் பாராட்டுக்கு நன்றி தென்றல்.

பென்ஸ்
12-07-2008, 10:05 PM
8-9 மணி நேரம் தினமும் அவளுடன் கழி(ளி)க்கவில்லை என்றால்,
வார இறுதியில் விட்டதைப் பிடிப்பேன்..
''எப்படிங்க....'' என என் கறார் கணக்கைக் கண்டு வியப்பாள் என் 'செல்வி'.

பணிக்குச் செல்வதற்கன்றி வேறு எதற்காகவும் என் நித்ராலிங்கனத்தைக் கலைக்காத திருச்செல்வி!!

அட இதுலையும் ஒத்துமையா.....

அது என்னவோ இளசு, கண்விழித்து 74 மணி நேரம் வேலை செய்து முடித்து, 36 மணி நேரம் தொடர்ந்து உறங்கிய சாதனை எனக்கு உண்டு.....

வாழ்கையில் 1/3 தூங்கி தீர்ப்பதாக தோன்றினாலும் காலையில் "இன்னும் ஒரு 5 நிமிடம்" என்று பல முறை நீட்டி சுகப்பட்டுக் கொள்வது இனிமை எனக்கு....

முகில், நாம் ஒரே லாங்கிடூடில் தாம் இருக்கிறோம்.....
தாமரை... என்ன குசும்புயா உமக்கு, பாவம் முகில்ஸ்.

இளசு
12-07-2008, 10:08 PM
அட இதுலையும் ஒத்துமையா.....

.

நமக்கிருக்கும் கொஞ்ச மூளையை இப்படி ரெகுலர் ரீ-சார்ஜ் பண்ணாட்டி
அப்புறம் எப்படி காலம் தள்ளுவதாம் பென்ஸ்..

நமக்கெல்லாம் டிரான்ஸிஸ்டர் பெட்டி ஸ்ட்ராங்!
உள்ளிருக்கும் பேட்டரிதான் வீக்!