PDA

View Full Version : நினைத்துப் பார்க்கிறேன்-4....

அறிஞர்
11-07-2008, 04:05 PM
நினைத்துப் பார்க்கிறேன்

பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம்.
வகுப்பில் உள்ள என்னை போன்ற பையன்கள்..
பொண்ணுங்களை பற்றி பேச ஆரம்பித்த காலம்..

ஒவ்வொருத்தனும்...
என்னோடு ஆளுடா அது,
என்னோடு ஆளு சிக்னல் கொடுத்ததுடா......
என்னோடு ஆளு அப்பன் வந்தாரா.....
என இளமையில் களிப்பில் இருந்தார்கள்....

நான் யாரை காட்டுவது...
நான் படித்தது ஆண்கள் பள்ளியில்...
வீட்டிலோ கண்டிப்பு....

எனக்கு ஒரு தேவதை வரமாட்டாளா என யோசித்த பொழுது....
உன்னை கண்டேன்.....

நம் சந்திப்பை இன்றும் கண்டு வியக்கிறேன்....

நல்ல தண்ணீர் பிடிக்க... இரண்டு தெரு செல்லவேண்டும்...
அங்கு தண்ணீர் பிடிக்க கூட்டமாக பலர்...
தண்ணீர் குழாய் உள்ள தெருவினர்... பிடித்துவிட்டு...
பாவம் புண்ணியம் பார்த்து மற்றவர்களுக்கு விட்டால் தான்
நாம் தண்ணீர் பிடிக்க இயலும்.

மூன்று குடத்தை சைக்கிளில் கட்டிக் கொண்டு... நான்..
பக்கத்து தெருவில் வசிக்கும் நீயோ ஒரு குடத்துடன்....

அந்த பகுதிக்கு புதிதாக குடி வந்ததால்..
உன்னைப்பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை....

தண்ணீர் குழாய் அருகில் ஒரே பெண்கள் கூட்டம்...
அங்கு இருந்த பலரை பார்த்தேன்.
என் வயதை ஒட்டி இருந்த பெண்கள் சிலர் தான்.
அவர்களில் நீ மட்டும்... எனக்கு தனியாக தெரிந்தாய்...
அப்பொழுது மனசுக்குள் ஒரு மத்தாப்பு....
பல் வெளித்தெரியாமல் புன்னகை...

எனக்கென பிறந்தவள் இவள் தானோ... என்ற எண்ணம்....
நிமிட நேரத்தில் எனக்குள் எத்தனை மாற்றங்கள்...

உன்னை ரசித்ததில் தண்ணீரை மறந்தேன்..
நமக்கு தண்ணீர் பிடிக்க வாய்ப்பு வந்தது...
நீயோ மெல்லிய குரல்...
"நீங்க முதல்ல பிடிங்க...."
"இல்லை நீங்க முதல்ல பிடிங்க" நான்...

கடைசியில் வென்றது நான்...

உன்னை தண்ணீர் பிடிக்கச் சொல்லி விட்டு...
உன் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தேன்...

அது வரை எந்த பொண்ணையும் அவ்வளவு ரசித்தது இல்லை...
முதல் அனுபவம்... ஆஹா.. என்ன சொல்வது...
மனசு முழுக்க... ஒரே பரவசம்....

சூரியன்
11-07-2008, 04:10 PM
அழகான கவிதை.

பழைய நினைவுகளை நினைக்கும் போது எப்போதுமே அதில் ஒரு இன்பம் உண்டு அண்ணா.

mania
11-07-2008, 04:12 PM
ஆஹா.....ஆஹா.....ஆனா இப்படி ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் மாதிரி சஸ்பென்ஸிலே விட்டிங்களே... கடைசியில் கிடைத்தது என்ன????
சந்தேகத்துடன்
மணியா:rolleyes:

அறிஞர்
11-07-2008, 04:14 PM
அழகான கவிதை.

பழைய நினைவுகளை நினைக்கும் போது எப்போதுமே அதில் ஒரு இன்பம் உண்டு அண்ணா.
நன்றி சூரியன்..
சும்மா பொழுது போகதப்ப கிறுக்கினது..
கவிதை என சொல்லவேண்டாம்.

இதை படித்து.. பலர் கதை இது போல் வெளிவரும் என எண்ணுகிறேன்.

அறிஞர்
11-07-2008, 04:15 PM
ஆஹா.....ஆஹா.....ஆனா இப்படி ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் மாதிரி சஸ்பென்ஸிலே விட்டிங்களே... கடைசியில் கிடைத்தது என்ன????
சந்தேகத்துடன்
மணியா:rolleyes:
நன்றி தலை..
இப்ப தானே ஆரம்பிக்குது.. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?
நானும் நிறைய எழுதனும்னு.. பார்க்கிறேன்....
எவ்வளவு போகுதுன்னு தெரியலை...

சூரியன்
11-07-2008, 04:24 PM
இதை படித்து.. பலர் கதை இது போல் வெளிவரும் என எண்ணுகிறேன்.

நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா.
ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.

Narathar
11-07-2008, 04:29 PM
ஆஹா!!!
நம்ம அறிஞரின் ஆட்டோகிராப்.........
இதை அப்படியே தொடரலாமே???
ஒரு அழகிய காதல் கதை படித்ததைப்போலிருக்கும்.

அறிஞர்
11-07-2008, 04:30 PM
நீங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா.
ஒவ்வொருவரின் வாழ்விலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.
உங்க கதையை கொஞ்சம் அவுத்து விடுங்க.. சூரியன்..

அறிஞர்
11-07-2008, 04:32 PM
ஆஹா!!!
நம்ம அறிஞரின் ஆட்டோகிராப்.........
இதை அப்படியே தொடரலாமே???
ஒரு அழகிய காதல் கதை படித்ததைப்போலிருக்கும்.
விட்டா நம்மை மாட்டிவிட்டுவீர்போல
இது முழு ஆட்டோகிராப் இல்லை.....
தொடர எனக்கும் ஆசை தான்...
நேரம் அனுமதிப்பதை பார்ப்போம்.

இளசு
11-07-2008, 04:42 PM
அன்பு அறிஞரே

அயராப் பணிகளுக்கிடையில் உள்ளே இருந்த அந்த கலையுள்ளம் விழித்த கணங்களில் பொழிந்தவையா இவை!

அலாதி நடை..
அணைத்துப்பேசும் சுகமான எழுத்து!

அசந்தேன் அறிஞரே!

இப்படியான நேரங்கள் அமைந்து
இத்தொடரை இனிதே முடிக்க என் அன்பான வாழ்த்துகள்!

--------------------------

இவ்வகை இனிய உணர்வுகளால் தழுவப்படாத இளமை இல்லை!
ஒவ்வொருவரையும் ''அழகி'ய பின்னோக்க வைக்கும் ''ஆட்டோகிராப்'' இது!

mania
11-07-2008, 04:50 PM
காதல் என்றால் கவிதை தாராளமாக சுரக்குமோ....?????
கொட்டட்டும் கவிதை மழை.....
காத்திருக்கிறோம் குடையில்லாமல் நனைய..???!!!!
ஆச்சர்யத்துடன்
மணியா...

mukilan
11-07-2008, 04:50 PM
நன்றி தலை..
இப்ப தானே ஆரம்பிக்குது.. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி?
நானும் நிறைய எழுதனும்னு.. பார்க்கிறேன்....
எவ்வளவு போகுதுன்னு தெரியலை...

நிறைய எழுதணுமா நிறையப் பேரைப் பற்றி எழுதணுமா ? ச்சும்மா...

நீங்கள் நினைத்துப் பார்த்தது மட்டுமில்லாமல் அனைவரையும் நினைத்து பார்க்க வைத்து விட்டீர்கள். எளிய சொல்லாடல். உங்களின் குறும்பாவிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

mania
11-07-2008, 04:52 PM
ஒரிஜினல் அய்யம்பேட்டை வேலை....:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா:D:D

Narathar
11-07-2008, 05:11 PM
விட்டா நம்மை மாட்டிவிட்டுவீர்போல
இது முழு ஆட்டோகிராப் இல்லை.....
தொடர எனக்கும் ஆசை தான்...
நேரம் அனுமதிப்பதை பார்ப்போம்.

ஹைய்யா!!! அறிஞர் தொடரப்போகின்றாராம்........

எங்கே எல்லோருமா சேர்ந்து ஒரு "ஓ................" போடுங்க.... :icon_b:

பூமகள்
11-07-2008, 05:20 PM
அறிஞர் அண்ணா வெகுநாட்களுக்கு பின்பு எழுதிய ஓர் டச்சிங் பதிவு...!!

பள்ளிக் கூடம் போக அரை டிராயர் போடுவதை வெட்கப்பட்டு பேண்ட்க்கு மாறும்(எட்டான் வகுப்பு தாண்டி ஒன்பதாம் வகுப்பு வருகையில்) அந்த மழலை மனத்தில்.. ஏற்பட்ட உணர்வுகளின் நினைவுகளே சுகமானவை தான் இல்ல அண்ணா??!!

ஹூம்.. நான் இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தும் இப்படி ஓர் அனுபவம் ஏதும் ஏற்படவில்லையே...!!

ரொம்ப படிச்சிட்டேன் போல இருக்குனா...!!

நீங்க நல்லாவே ரசிச்சீங்க சரி... அப்புறம் தண்ணீர் பிடிச்சீங்களா?? மறுபடி எப்போ பார்த்தீங்க??!!

இப்படி பாதியில் விட்டா எப்படினா..??!!
தொடராக்கி எழுதுங்களேன்..!!

பின் குறிப்பு: அண்ணியிடம் காட்டினீங்களா அறிஞர் அண்ணா?? இல்லாட்டி நான் வேணா காட்ட உதவட்டுமா??!! :D:D

Narathar
11-07-2008, 05:45 PM
பின் குறிப்பு: அண்ணியிடம் காட்டினீங்களா அறிஞர் அண்ணா?? இல்லாட்டி நான் வேணா காட்ட உதவட்டுமா??!! :D:D
[/COLOR]

அண்ணியே அவங்கதானோ என்று எனக்கொரு சந்தேகம்........

நாராயணா!!!!!

arun
11-07-2008, 06:05 PM
இது போல அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு தொடருங்கள் தங்களது அனுபவத்தினை

அறிஞர்
11-07-2008, 07:39 PM
அசந்தேன் அறிஞரே!

இப்படியான நேரங்கள் அமைந்து
இத்தொடரை இனிதே முடிக்க என் அன்பான வாழ்த்துகள்!

--------------------------

இவ்வகை இனிய உணர்வுகளால் தழுவப்படாத இளமை இல்லை!
ஒவ்வொருவரையும் ''அழகி'ய பின்னோக்க வைக்கும் ''ஆட்டோகிராப்'' இது!
நன்றி இளசு...
தாங்கள் பக்கம் இருக்க... எழுதுவதில் தயக்கம் என்ன?
முயற்சிக்கிறேன்.

அறிஞர்
11-07-2008, 07:40 PM
காதல் என்றால் கவிதை தாராளமாக சுரக்குமோ....?????
கொட்டட்டும் கவிதை மழை.....
காத்திருக்கிறோம் குடையில்லாமல் நனைய..???!!!!
ஆச்சர்யத்துடன்
மணியா...
தலை இது கிறுக்கல் தான்.
தாங்கள் எழுதினால்.. அந்த காலத்தை திரும்பி பார்க்க இயலுமே..

அறிஞர்
11-07-2008, 07:41 PM
நிறைய எழுதணுமா நிறையப் பேரைப் பற்றி எழுதணுமா ? ச்சும்மா...

நீங்கள் நினைத்துப் பார்த்தது மட்டுமில்லாமல் அனைவரையும் நினைத்து பார்க்க வைத்து விட்டீர்கள். எளிய சொல்லாடல். உங்களின் குறும்பாவிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
நன்றி முகிலன்..
ஒவ்வொரு வயதிலும் எத்தனை பேரை கடந்து வந்திருக்கிறோம்...
நிறையவும் எழுதலாம்...
நிறைய பேரைப் பற்றியும் எழுதலாம்.

அறிஞர்
11-07-2008, 07:45 PM
அந்த மழலை மனத்தில்.. ஏற்பட்ட உணர்வுகளின் நினைவுகளே சுகமானவை தான் இல்ல அண்ணா??!!

ஹூம்.. நான் இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தும் இப்படி ஓர் அனுபவம் ஏதும் ஏற்படவில்லையே...!!

ரொம்ப படிச்சிட்டேன் போல இருக்குனா...!!

நீங்க நல்லாவே ரசிச்சீங்க சரி... அப்புறம் தண்ணீர் பிடிச்சீங்களா?? மறுபடி எப்போ பார்த்தீங்க??!!

இப்படி பாதியில் விட்டா எப்படினா..??!!
தொடராக்கி எழுதுங்களேன்..!!

பின் குறிப்பு: அண்ணியிடம் காட்டினீங்களா அறிஞர் அண்ணா?? இல்லாட்டி நான் வேணா காட்ட உதவட்டுமா??!! :D:D

அதை மழலைப்பருவம் என ஒத்துக்கொள்ள இயலாது..
உமக்கு அனுபவம் அந்த வயதில் வராதது ஆச்சர்யமே.... படிப்பில் மூழ்கி விட்டீர்கள் போல...

வீட்டுல போட்டுக்கொடுக்க இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்.. :sauer028::sauer028:

அறிஞர்
11-07-2008, 07:45 PM
அண்ணியே அவங்கதானோ என்று எனக்கொரு சந்தேகம்........

நாராயணா!!!!!
ஹிஹி அப்படி இருந்தா... இப்படியா எழுதுவோம்.. :cool::cool:

அறிஞர்
11-07-2008, 07:46 PM
இது போல அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு தொடருங்கள் தங்களது அனுபவத்தினை
நன்றி.. அருண்.. தொடருகிறேன்.

தீபன்
12-07-2008, 02:30 AM
ஹிஹி அப்படி இருந்தா... இப்படியா எழுதுவோம்.. :cool::cool:
சுகமான நினைவுகள்....

அதுக்காக இப்படி உண்மையை போட்டுடைக்கக்கூடாது... கூடவிருந்தே குழிபறிக்க நாங்க இருக்கம்ல... அண்ணிக்கிட்ட காட்டினா அப்புறம் ஆப்புத்தேன்!

அன்புரசிகன்
12-07-2008, 09:26 AM
நமக்குத்தான் இந்த காதல் என்றாலே எரிச்சலெரிச்சலா வரூது..... ஆனா உங்களுக்கு என்னமோ நன்னாவே வரூது. (கவிதை) :D

ஹிஹி அப்படி இருந்தா... இப்படியா எழுதுவோம்.. :cool::cool:

அதுதானே... மனைவிக்காக இவ்வளவு நேரம் செலவழிச்சிருப்பீங்களா???

ஆனால் வாசிக்கும் போது இதமாக இருந்தது. - கவிதை.....

சிவா.ஜி
12-07-2008, 10:09 AM
இந்த மாதிரியான நினைவுகளை அசைபோடுவதே ஒரு அலாதி சுகம். டைம் மெஷினில் எறி அந்த நிமிடங்களுக்கே நாம் செல்வதைப் போல ஒரு இதம்.
தொடருங்க அறிஞர். கூடவே வருகிறோம்.

ஓவியன்
12-07-2008, 10:56 AM
அன்பின் அறிஞரே
உங்களோடு எனக்குக் கொஞ்சம் கோபம்...!!

பின்னே, என்ன
இந்த இரசனை கொஞ்சும்
எழுத்துக் கோர்வைகளை
இத்தனை நாள்
ஒளித்து வைத்திருந்திருக்கின்றீர்களே...!! :sprachlos020:

அவை இயம்பிய சம்பவத்தையும் தான்..!! :D

இரசித்தேன், அழகான ஒரு காதலை இரசிப்பது போலவே..!! :)

Narathar
12-07-2008, 12:20 PM
ஹிஹி அப்படி இருந்தா...
இப்படியா எழுதுவோம்.. :cool::cool:

இந்த வரி இன்னொறு புதுக்கவிதை சொல்லுதே???!!!!

நாராயணா!! ஹா ஹா!! :lachen001:

மன்மதன்
12-07-2008, 01:26 PM
நினைத்துப் பார்க்கிறேன்

பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம்.
வகுப்பில் உள்ள என்னை போன்ற பையன்கள்..
பொண்ணுங்களை பற்றி பேச ஆரம்பித்த காலம்..

உன்னை தண்ணீர் பிடிக்கச் சொல்லி விட்டு...
உன் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தேன்...

...

ஆஹா...!!:icon_b:

எல்.கே.ஜி. கடைசி பெஞ்சில்
இருந்து ஆரம்பிக்காம, ஒரேதடியா
எட்டாவதுக்கு ஜம்ப் பண்ணிட்டிங்களே.. நியாயமா..:rolleyes::rolleyes:

உங்கள் காதல் டைரியில்
நனைய காத்துக்கொண்டிருக்கிறேன்..:)

தொடர்ந்து கொடுங்க அறிஞரே..!!

மன்மதன்
12-07-2008, 01:28 PM
ஆஹா.....ஆஹா.....ஆனா இப்படி ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் மாதிரி சஸ்பென்ஸிலே விட்டிங்களே... கடைசியில் கிடைத்தது என்ன????
சந்தேகத்துடன்
மணியா:rolleyes:

வேறென்ன .. தண்ணிதான்..:D:rolleyes:

தீபா
12-07-2008, 03:33 PM
வாரே வா!! அறிஞர்! அப்படியே என்னை இழுத்துச் செல்கிறீர்கள்.
மணிமணியா விழுதுங்க வார்த்தை (Money இல்லீங்க) இந்த தண்ணீர் குழாய் இருக்கே, இதைப்பத்தி நிறைய எழுதலாம். ஏன்னா, அதை அனுபவச்சவங்களுக்கு நிறய நிறைய தெரியும். தண்ணீர் குடத்தைப் போலவே!!

இன்னிக்கும் கூட தண்ணிக்குடத்தைத் தூக்கிட்டு இருக்கிறேன் அறிஞர். யார் யார் பாப்பாங்கன்னு தெரியும். இந்த மாதிரி ரசிக்க காலமும் உண்டு. என்ன, நீங்க சொல்லீட்டீங்க, என்னால சொல்லமுடியல.
-------------
இது ஒருவிதமான ஈர்ப்பு, மனக்கவர்ச்சி, அப்போதைய வயது காதல் என்ற சுவரில் ஓவியம் வரையத்தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருக்கும். இன்னும் சொல்லப் போனால், ஏக்கம். மனம் ஒருவழிப்பாதையில் செல்லும், ஒற்றைக் கற்றையில் காதல் ( Love at first sight ) சொன்னால் அடி, சொல்லாமல் போனால் மனதுள் இடி. இந்தமாதிரி முதல்காதலும் தேவைதான்.. அடிக்கடி அண்ணியிடம் அடிவாங்கியிருக்கும் போது நினைத்துப் பார்க்க........???
மனப்புரளலின் போது நினைவுகள் அசைபோட உதவியாக இருக்கும். மனப்பாதையின் ஆரம்பத்திற்கு நம்மை இழுத்துச் சென்றமர்த்தும் ஆகாயப்பயணம். இப்பொழுது கூட நினைக்கத்தோன்றுமே! அவள் எனக்கு மனைவியாக வாய்த்திருந்தாள்???

ரசிப்பை அடக்கி நம்முள் எழும் காதலுக்கும், வெறும் ரசிப்புக்கும் வித்தியாசமுண்டு. காதல் என்பது காதலை ரசிப்பது,, காதலுக்காக ரசிப்பதல்ல. உங்களது முதல் அனுபவம் அப்படியொரு ரசிப்பை நோக்கித்தான் இருந்திருக்கவேண்டும்.

நேரம் கிடைத்து இதுபோன்றதொரு நினைவுப் பதிவுகளைத் தொடர்ந்து எங்களுக்கு வழங்கிக்கொண்டிருங்கள் அறிஞர்.. :icon_b:

தீபா
12-07-2008, 03:36 PM
ஆஹா...!!:icon_b:

எல்.கே.ஜி. கடைசி பெஞ்சில்
இருந்து ஆரம்பிக்காம, ஒரேதடியா
எட்டாவதுக்கு ஜம்ப் பண்ணிட்டிங்களே.. நியாயமா..:rolleyes::rolleyes:

!!

அதான் அவரு அடிச்ச LKG கூத்தை நீங்க பதிவு பண்ணி வெச்சிருக்கீங்களே! :D

அறிஞர்
13-07-2008, 02:47 AM
இந்த மாதிரியான நினைவுகளை அசைபோடுவதே ஒரு அலாதி சுகம். டைம் மெஷினில் எறி அந்த நிமிடங்களுக்கே நாம் செல்வதைப் போல ஒரு இதம்.
தொடருங்க அறிஞர். கூடவே வருகிறோம். நன்றி... சிவா..

தாங்கள்.. அசைபோடும் பதிவுகள் முன் இது சின்ன படைப்பே.....

தனியா உட்கார்ந்து யோசித்தால்.. இதமான நினைவுகள்.

அறிஞர்
13-07-2008, 02:50 AM
அன்பின் அறிஞரே
உங்களோடு எனக்குக் கொஞ்சம் கோபம்...!!

பின்னே, என்ன
இந்த இரசனை கொஞ்சும்
எழுத்துக் கோர்வைகளை
இத்தனை நாள்
ஒளித்து வைத்திருந்திருக்கின்றீர்களே...!! :sprachlos020:

அவை இயம்பிய சம்பவத்தையும் தான்..!! :D

இரசித்தேன், அழகான ஒரு காதலை இரசிப்பது போலவே..!! :)
கருத்துக்கு நன்றி ஓவியன்...
பலருடைய திறமைகளைப் பார்க்கும்பொழுது....
எழுத பயம் தான்...
அதான் பெரிசா எழுதறதில்லை..
அப்ப அப்ப எழுதுவேன்...

அறிஞர்
13-07-2008, 02:51 AM
ஆஹா...!!:icon_b:

எல்.கே.ஜி. கடைசி பெஞ்சில்
இருந்து ஆரம்பிக்காம, ஒரேதடியா
எட்டாவதுக்கு ஜம்ப் பண்ணிட்டிங்களே.. நியாயமா..:rolleyes::rolleyes:

உங்கள் காதல் டைரியில்
நனைய காத்துக்கொண்டிருக்கிறேன்..:)

தொடர்ந்து கொடுங்க அறிஞரே..!!
மன்மதன் அளவுக்கு.. டெர்ரர் குரூப் இல்லைங்க...
ஏதோ வாலிப வயதில் ஏற்பட்ட குறும்புகள்...

அறிஞர்
13-07-2008, 02:53 AM
வாரே வா!! அறிஞர்! அப்படியே என்னை இழுத்துச் செல்கிறீர்கள். :icon_b:
நன்றி தென்றல்....
எனக்கு மேல் உங்களுக்கு அனுபவம் அதிகம் இருக்கும்போல....
கலக்குகிறீர்கள்...

அந்த காலத்தை நினைத்தால்.. ஒரு சுகமான உணர்வுகள்.... வித்தியாசமான அனுபவங்கள்..

நேரம் கிடைகும்பொழுது தாங்களும் எழுதுங்களேன்.

அறிஞர்
13-07-2008, 02:59 AM
தண்ணீர் குழாய்....
நீ...
நான்..
உன் அமுத மொழி...
எனக்குள் மாற்றம்...
ஆஹா... நினைத்தாலே பரவசம்...

மற்ற நண்பர்களிடம் சொல்ல....
எனக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டா...
என எனக்குள் ஒரு சந்தோசம்...

பக்கத்து வீட்டு நண்பனிடம்...
"டேய் தண்ணீர் குழாயடியில் ஒரு பெண்ணை பார்த்தேன்டா"
"யாருடா அது" என்னைவிட ஆர்வமானான்....
"டேய் ரொம்ப வழியாத.. எனக்குன்னு ஒரு ஆள.. பார்த்திருக்கேண்டா"
"அப்படியா யாருடா அது" என இன்னும் ஆர்வமானான்....

"தண்ணீர் பிடிக்க வந்தாங்கடா..... நம்ம வயசுதான்... முகத்துல கூட பருக்கள் சில.... " என உன்னை பற்றி சொன்னவுடன்...

"ஓ... அதுவா... நம்ம பக்கத்து வீதி மாமியோட பொண்ணு..." என்றான்..

ஆஹா.. உன்னைப்பற்றி அறிய இவன் போதுமே.. என்று ஒரே சந்தோசம்...

"டே உனக்கு அவங்களை பத்தி தெரியுமா..... இன்னும் சொல்லுடா"
"என்னடா.... ஒரே மரியாதை... நம்ம வயசு தான் அவளுக்கு..." அவன்..

"சரி சரி... அவளைப்பற்றி சொல்லுடா..." என நச்சரிப்பு
அவனோ.... பெரிய இரகசியத்தை வைத்திருப்பவன் போல் பந்தா பண்ண....

ஆம் எனக்கு
மாபெரிய.... இரகசியம் அது தானே...
உன்னைப் பற்றி...
உன் குடும்பம் பற்றி......
அறிவது...

"பக்கத்து வீதியில் கார்னர் வீடு..
அவள் படிப்பது... மகளிர் பள்ளியில்
அவள் அம்மா.. அங்கு டீச்சர்...
அவங்க அப்பா ரிடையர்டு.....
அவளுக்கு ஒரு அக்கா....." என அவன் உன்னைப் பற்றி...

ஆஹா இது போதுமே எனக்கு....
அதுவரை...
உலகத்தில் நான் யாரையும்
இவ்வளவு.. விசாரித்ததில்லை....

ஒரு நாளில் என்னில்
நீ ஏற்படுத்திய....
மாயம் என்னடி இது...

இன்றும் எண்ணி வியக்கிறேன்.

Keelai Naadaan
13-07-2008, 03:20 AM
வசனக் கவிதையில் இனிமையான நினைவுகள்.
ரசித்து எழுதியிருக்கிறீர்கள். ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.
அந்த நாள் நினைவுகளை கிளறிவிடும் படைப்பு.

Narathar
13-07-2008, 04:02 AM
இன்றும் எண்ணி வியக்கிறேன்

இன்னும் எழுதி வியக்கவையுங்க..... நம்மளை :)

( இதிங்...... ஈடபஸ்ஸே? :D )

சிவா.ஜி
13-07-2008, 04:15 AM
இதுதான் நம்ம ஆளுன்னு மனசு முடிவு பண்ணதுக்கப்புறம், அந்தப் பெண்ணைப் பற்றின துணுக்குச் செய்தியும் ஏதோ சரித்திர உண்மையைப் போல கேட்டுக்கொண்டே இருக்கப் பிடிக்கும்.

மிகவும் எதார்த்தமாக சொல்லும் முன்பருவக் காதல் அழகாக இருக்கிறது.
இன்னும் எழுதுங்கள் அறிஞர்.

தீபா
13-07-2008, 04:23 AM
ஆஹா!! அறிஞரே! அப்படியே எனது பால்ய (?) காலத்துக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.

ஒன்றுவிடாது அனைத்தும் அறியும் அத்தெரு நண்பர்கள்
அறிந்துகொள்ளும் ஆவலில் இரகசியம் உடைக்கக் காத்திருக்கும் காதலன்.

என

மொத்த உலகத்தையும் கைக்குள் அடக்கி வேடிக்கை பார்க்கச் செய்வது நிதர்சனம்.

தொடருங்கள்

தீபா
13-07-2008, 04:24 AM
இன்னும் எழுதி வியக்கவையுங்க..... நம்மளை :)

( இதிங்...... ஈடபஸ்ஸே? :D )

ஏதோ உள்குத்தை மறைமுகமா உங்க மொழியில சொல்றீங்க போலிருக்கே??

சூரியன்
13-07-2008, 05:41 AM
உங்க கதையை கொஞ்சம் அவுத்து விடுங்க.. சூரியன்..

என்னை மாட்டிவிட பாக்குரீங்க.:mini023:
சிக்க மாட்டேன்.:icon_rollout:

Narathar
13-07-2008, 05:45 AM
ஏதோ உள்குத்தை மறைமுகமா உங்க மொழியில சொல்றீங்க போலிருக்கே??

எங்க மொழி தமிழ் மட்டும் தான்க....
இது எங்களூர் மொழி. :D

அதில் ஒரு உள்குத்தும் இல்லை....
நம்மூர் காரங்க வந்து விபரம் சொல்வாங்க! நாராயணா!!!

சூரியன்
13-07-2008, 05:50 AM
ஒரு நாளில் என்னில்
நீ ஏற்படுத்திய....
மாயம் என்னடி இது...

இன்றும் எண்ணி வியக்கிறேன்.

அப்பறம் என்ன சொல்லுங்க எல்லோரும் காத்திருக்காங்க.

பூமகள்
13-07-2008, 06:22 AM
அழகிய எழுத்து நடை..!!

அறிஞர் அண்ணா.. கை வசம் இத்தனை பெரிய திறமையை மறைத்து வைத்து.. எங்களுக்கு கொஞ்சும் சாட்டையை மட்டும் காட்டி வந்தீர்களே.. இது உங்களுக்கே நியாயமா??!!

உங்க எழுத்துகள் அவ்விடத்தினை முன்னிருத்துவதோடு... எங்களை அங்கே கட்டிப் போடவும் செய்கிறது..!!

அடுத்த பாகம் காண ஆவலோடு..!!

இளசு
13-07-2008, 06:31 AM
மற்ற நண்பர்களிடம் சொல்ல....
எனக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டா...
என எனக்குள் ஒரு சந்தோசம்...

பக்கத்து வீட்டு நண்பனிடம்...
"டேய் தண்ணீர் குழாயடியில் ஒரு பெண்ணை பார்த்தேன்டா"
"யாருடா அது" என்னைவிட ஆர்வமானான்....
"டேய் ரொம்ப வழியாத.. எனக்குன்னு ஒரு ஆள.. பார்த்திருக்கேண்டா"
"அப்படியா யாருடா அது" என இன்னும் ஆர்வமானான்....
.

இப்படி உசுப்பிவிட்டு உசுப்பிவிட்டே
இந்த இளமைப்பருவத்தை
இனிய சுகரணக்களமாக்குவதில்
இன்றியமையாதது - peer pressure!

எனக்கென்னவோ முக்கால்வாசி காதல்கள் முளைப்பது
நண்பர் குழாம் தூவும் தூண்டல் தூறல்களால்தான் எனத் தோன்றுகிறது..

படிப்பவர் அனைவரையும் அவரவர் கடந்த -
அழகிய நிலாக்காலத்துக்கு அழைத்துச் செல்லும் இனிய தொடர்..

அசத்துறீங்க அறிஞரே!

ஓவியன்
13-07-2008, 06:46 AM
நினைத்துப் பார்த்தலின் இரண்டாம் பகுதியும்
நினைத்துப் பார்க்க வைக்கின்றன
சேரனின் ஆட்டோ கிராப் போல...

தொடர்ந்து,
நினைவுகள் கரைபுரண்டோடட்டும்,
ஒரு அழகான் நதி போல...!!

ஓவியன்
13-07-2008, 06:51 AM
இன்னும் எழுதி வியக்கவையுங்க..... நம்மளை :)

( இதிங்...... ஈடபஸ்ஸே? :D )

எங்க மொழி தமிழ் மட்டும் தான்க....
இது எங்களூர் மொழி. :D

அதில் ஒரு உள்குத்தும் இல்லை....
நம்மூர் காரங்க வந்து விபரம் சொல்வாங்க! நாராயணா!!!

அறிஞர் ரீல் விடுறார்னு நாரதர் சொல்லுகிறார்...!! :icon_rollout:

நாராயணா......!!! :D

(நாரதரே பேசாமல், நீங்களே அர்த்தத்தை சொல்லி இருக்கலாமிலே...!! :D)

Narathar
14-07-2008, 04:10 AM
நாரதரே பேசாமல், நீங்களே அர்த்தத்தை சொல்லி இருக்கலாமிலே...!! :D)

இப்படி உங்களுக்கு சிங்களம் வராது என்பதை நிரூபிச்சதுக்கப்புரம் சொல்லுவோமில்ல.....

ஓவியன்
14-07-2008, 04:21 AM
இப்படி உங்களுக்கு சிங்களம் வராது.....

இதிங்...... ஈடபஸ்ஸே..!! :icon_rollout:

ஹீ, ஹீ - நாரதரும் ரீல் விடுகிறார்..!! :D

அன்புரசிகன்
14-07-2008, 10:05 AM
மற்ற நண்பர்களிடம் சொல்ல....
எனக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டா...
என எனக்குள் ஒரு சந்தோசம்...
----------

"தண்ணீர் பிடிக்க வந்தாங்கடா..... நம்ம வயசுதான்... முகத்துல கூட பருக்கள் சில.... " என உன்னை பற்றி சொன்னவுடன்...

பாரிய ஏக்கத்தின் பின் கிடைத்த காதலாக்கும்... இவ்வளவு பெருமிதமாக கூறுவதால்...

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். யாராவது நமக்கு பிடித்தவர்கள் கள்ளமாக பார்த்தால் ரொம்ப ஆசையுடன் முத்தமிட்டால் முகத்தில் பருப்போடும் என... உண்மைதானா அறிஞரே....

ம்.......... அப்புறம்.............. :D :p :D :p :icon_rollout:

இன்னும் எழுதி வியக்கவையுங்க..... நம்மளை :)

( இதிங்...... ஈடபஸ்ஸே? :D )
அது இ யா? அல்லது ஈ..........யா????

சிங்களவன் தற்கொலை செய்யப்போறான்.... :lachen001:

அறிஞர்
14-07-2008, 01:55 PM
வசனக் கவிதையில் இனிமையான நினைவுகள்.
ரசித்து எழுதியிருக்கிறீர்கள். ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.
அந்த நாள் நினைவுகளை கிளறிவிடும் படைப்பு.
நன்றி கீழை நாடான்...
நினைவுகள் இன்னும் கிளறட்டும்..
படைப்புகள் பெருகட்டும்.

இன்னும் எழுதி வியக்கவையுங்க..... நம்மளை :)

( இதிங்...... ஈடபஸ்ஸே? :D ) அது என்ன கடைசி வரி... :confused::confused:

அறிஞர்
14-07-2008, 01:56 PM
இதுதான் நம்ம ஆளுன்னு மனசு முடிவு பண்ணதுக்கப்புறம், அந்தப் பெண்ணைப் பற்றின துணுக்குச் செய்தியும் ஏதோ சரித்திர உண்மையைப் போல கேட்டுக்கொண்டே இருக்கப் பிடிக்கும்..
என்ன பண்ணுறது.. எல்லாம் வயசுக் கோளாறு.. அனைவருக்கும் ஏற்படும் அனுபவங்கள்.

அறிஞர்
14-07-2008, 01:57 PM
ஆஹா!! அறிஞரே! அப்படியே எனது பால்ய (?) காலத்துக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.
மொத்த உலகத்தையும் கைக்குள் அடக்கி வேடிக்கை பார்க்கச் செய்வது நிதர்சனம். நன்றி தென்றல்...

அறிஞர்
14-07-2008, 01:58 PM
என்னை மாட்டிவிட பாக்குரீங்க.:mini023:
சிக்க மாட்டேன்.:icon_rollout:
இளமையா இருக்கிங்க.. நிறைய கதை தங்களிடம் இருக்குமே...
அதான் சொன்னேன்.

அறிஞர்
14-07-2008, 01:59 PM
அழகிய எழுத்து நடை..!!

அறிஞர் அண்ணா.. கை வசம் இத்தனை பெரிய திறமையை மறைத்து வைத்து.. எங்களுக்கு கொஞ்சும் சாட்டையை மட்டும் காட்டி வந்தீர்களே.. இது உங்களுக்கே நியாயமா??!!

உங்க எழுத்துகள் அவ்விடத்தினை முன்னிருத்துவதோடு... எங்களை அங்கே கட்டிப் போடவும் செய்கிறது..!!

அடுத்த பாகம் காண ஆவலோடு..!!

நன்றி பூமகள்....
மன்றத்தில் உள்ள கவி ஜாம்பவான்கள் முன் சிறியவன்... எழுத பயப்படுகிறேன்.

ஏதோ சும்மா கிறுக்கினது...

உற்சாகமூட்டுவதற்கு நன்றி...

அறிஞர்
14-07-2008, 02:01 PM
இப்படி உசுப்பிவிட்டு உசுப்பிவிட்டே
இந்த இளமைப்பருவத்தை
இனிய சுகரணக்களமாக்குவதில்
இன்றியமையாதது - peer pressure!

எனக்கென்னவோ முக்கால்வாசி காதல்கள் முளைப்பது
நண்பர் குழாம் தூவும் தூண்டல் தூறல்களால்தான் எனத் தோன்றுகிறது..

படிப்பவர் அனைவரையும் அவரவர் கடந்த -
அழகிய நிலாக்காலத்துக்கு அழைத்துச் செல்லும் இனிய தொடர்..

அசத்துறீங்க அறிஞரே! தாங்கள் சொல்வது 100% உண்மை...
அடுத்தவர்களை உசுப்பிவிட்டே சுகம் காணம் துடிக்க ஒரு நண்பர் கூட்டம்...

உற்சாகப்படுத்துவதற்கு நன்றி இளசு..

Narathar
14-07-2008, 02:01 PM
அது இ யா? அல்லது ஈ..........யா????

சிங்களவன் தற்கொலை செய்யப்போறான்.... :lachen001:

ஈ போட வேண்டிய இடத்தில் இ போட்டால் செய்தாலும் செய்வான்!!! நாராயணா!!!!

அறிஞர்
14-07-2008, 02:02 PM
நினைத்துப் பார்த்தலின் இரண்டாம் பகுதியும்
நினைத்துப் பார்க்க வைக்கின்றன
சேரனின் ஆட்டோ கிராப் போல...

தொடர்ந்து,
நினைவுகள் கரைபுரண்டோடட்டும்,
ஒரு அழகான் நதி போல...!! ஒவ்வொருத்தருக்கும் சொந்த ஆட்டோ கிராப் இருக்குமே....
உங்க ஆட்டோ கிராப் எப்ப வரும்.. :confused::confused:

அறிஞர்
14-07-2008, 02:03 PM
அறிஞர் ரீல் விடுறார்னு நாரதர் சொல்லுகிறார்...!! :icon_rollout:

நாராயணா......!!! :D

(நாரதரே பேசாமல், நீங்களே அர்த்தத்தை சொல்லி இருக்கலாமிலே...!! :D)
ஆஹா.. அப்பாவியா அர்த்தம் கேட்டேன்.....

அவருக்கு இது தான் வேலை....

அவரை கண்டுக்காதீங்க..

அன்புரசிகன்
14-07-2008, 02:04 PM
ஒவ்வொருத்தருக்கும் சொந்த ஆட்டோ கிராப் இருக்குமே....
உங்க ஆட்டோ கிராப் எப்ப வரும்.. :confused::confused:
உங்கள் மனைவி மன்றில் இல்லை என்ற துணிவு உங்களுக்கு... எல்லோருக்கும் அப்படியா,,,,,????? :D

அறிஞர்
14-07-2008, 02:05 PM
பாரிய ஏக்கத்தின் பின் கிடைத்த காதலாக்கும்... இவ்வளவு பெருமிதமாக கூறுவதால்...

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். யாராவது நமக்கு பிடித்தவர்கள் கள்ளமாக பார்த்தால் ரொம்ப ஆசையுடன் முத்தமிட்டால் முகத்தில் பருப்போடும் என... உண்மைதானா அறிஞரே....

நன்றி அன்பு..
பரு உருவாதல்.. வாலிபத்தில்...
இதை நம்மவர்கள்.. எப்படி வேண்டுமானாலும் சம்பந்த படுத்திக் கொள்வர்..

அறிஞர்
14-07-2008, 02:06 PM
உங்கள் மனைவி மன்றில் இல்லை என்ற துணிவு உங்களுக்கு... எல்லோருக்கும் அப்படியா,,,,,????? :Dஓஹோ அப்படி ஒரு சேதி இருக்கோ.....

மனைவிக்கு மன்றம் பற்றி சொல்வதே இல்லிங்க...
இப்படி தன்னிச்சை சுற்ற இயலுமா..

ஓவியன்
14-07-2008, 02:54 PM
ஒவ்வொருத்தருக்கும் சொந்த ஆட்டோ கிராப் இருக்குமே....
உங்க ஆட்டோ கிராப் எப்ப வரும்.. :confused::confused:

அக்சுவலா, சேரனோட ஆட்டோகிராப்புக்கு முதலில வந்திருக்கணும்..
என்ன செய்ய வரும் வழியில் ஒரு சின்ன பஞ்சர்...
அப்படியே பஞ்சரைச் சரியாக்கி ஒரு வழியா வந்தா
இடை நடுவே என்னோட கிராப் என்ற ஆட்டோவை (அதுதாங்க ஆட்டோ கிராப்..!! :lachen001:)
அன்புரசிகன் ஆள் வைத்துக் கடத்திட்டார்..!! :D:D:D

மன்மதன்
14-07-2008, 03:54 PM
இன்னும் எழுதி வியக்கவையுங்க..... நம்மளை :)

( இதிங்...... ஈடபஸ்ஸே? :D )

இப்பத்தான் குழாயடில காதல் ஆரம்பிக்குது..பஸ்ல பின்னால துரத்திகிட்டு போற எபிசோட் வர்ரதுக்கு நிறைய பதிவு வெயிட் செய்யண்டி..:D

Narathar
14-07-2008, 03:55 PM
ஆஹா.. அப்பாவியா அர்த்தம் கேட்டேன்.....

அவருக்கு இது தான் வேலை....

அவரை கண்டுக்காதீங்க..

இதுக்குத்தான் தீர விசாரிக்கனும்ங்கிறது!!!!
நீங்கள் என்னிடம் அப்பாவியாகவில்லை.......
ஓவியனிடம் தான்! அப்பாவியாகியுள்ளீர்கள்

அவர் தான் புருடா விடுறார்......

இப்பத்தான் குழாயடில காதல் ஆரம்பிக்குது..பஸ்ல பின்னால துரத்திகிட்டு போற எபிசோட் வர்ரதுக்கு நிறைய பதிவு வெயிட் செய்யண்டி..:D

ஓ அது "கிளைமாக்ஸில்" வருமோ? :aetsch013:

arun
14-07-2008, 06:12 PM
கண்களை மூடி கொண்டு பள்ளிக்கு சென்ற மாதிரி ஒரு உணர்வு தங்களது பதிப்பில் தெரிகிறது பிரமாதம் தொடருங்கள்

அறிஞர்
14-07-2008, 08:08 PM
இப்பத்தான் குழாயடில காதல் ஆரம்பிக்குது..பஸ்ல பின்னால துரத்திகிட்டு போற எபிசோட் வர்ரதுக்கு நிறைய பதிவு வெயிட் செய்யண்டி..:D

ஓ அது "கிளைமாக்ஸில்" வருமோ? :aetsch013:
பேசாம மன்ஸ் தொடர சொல்லிவிட வேண்டியது தான்.

அறிஞர்
14-07-2008, 08:22 PM
கண்களை மூடி கொண்டு பள்ளிக்கு சென்ற மாதிரி ஒரு உணர்வு தங்களது பதிப்பில் தெரிகிறது பிரமாதம் தொடருங்கள் கருத்துக்கு நன்றி அருண்..

aren
15-07-2008, 03:05 AM
அறிஞரே அசத்தல்தான். நான் கூட உங்கள் வண்டவாளத்தை எடுத்துவிடுங்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் வெளியே வருகிறது.

அருமையான ஆரம்பம். காதல் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். உங்கள் வார்த்தைகளில் அது நன்றாகவே தெரிகிறது.

நண்பன் உங்களை நன்றாகவே உசுப்பி விட்டிருக்கிறான். அடுத்தது என்ன என்று சீக்கிரம் எழுதுங்கள்.

படிக்க ஆவலுடன் இருக்கிறோம்

அறிஞர்
15-07-2008, 02:56 PM
அறிஞரே அசத்தல்தான். நான் கூட உங்கள் வண்டவாளத்தை எடுத்துவிடுங்கள் என்று பலமுறை கேட்டிருக்கிறேன். இப்பொழுதுதான் வெளியே வருகிறது.

அருமையான ஆரம்பம். காதல் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். உங்கள் வார்த்தைகளில் அது நன்றாகவே தெரிகிறது.

நண்பன் உங்களை நன்றாகவே உசுப்பி விட்டிருக்கிறான். அடுத்தது என்ன என்று சீக்கிரம் எழுதுங்கள்.

படிக்க ஆவலுடன் இருக்கிறோம் கருத்துக்கு நன்றி.. ஆரென்....

உசுப்பிவிட ஒரு கூட்டம்... அனுபவித்து பாடுபட ஒரு கூட்டம்.. இதான் உலகம்...

அறிஞர்
15-07-2008, 03:34 PM
மொத்தம் 4 பாகம் எழுதினேன்.. பிறகு எப்ப எழுதப்போகிறோனோ..

பூமகள்
15-07-2008, 03:54 PM
நீரலைகளின்
நினைவலைகளில்
அவளலைகள்...

அவளி(ல்)லைகள்...
மிதந்த மேல்பரப்பில்...

கண் மூடி ரசித்த
வளர்பருவ காலம்...

ரசித்தேன்.. தொடருங்கள் அறிஞர் அண்ணா...!! :)

அறிஞர்
15-07-2008, 04:04 PM
நீரலைகளின்
நினைவலைகளில்
அவளலைகள்...

கண் மூடி ரசித்த
வளர்பருவ காலம்...

நன்றி பூமகள்....
அனுபவித்த காலம் ஒன்று..
ரசிக்கின்ற காலம் ஒன்று..

அறிஞர்
15-07-2008, 04:06 PM
உன்னைப் பற்றி...
அறிந்தவுடன்.....
உன் நினைவுகளால்...
இரவு நிறைந்தது.....

அடுத்த நாள் காலை தண்ணீர் குடத்தை எடுத்து ஆர்வமுடன்... குழாயடி நோக்கி சென்றேன்.....
"என்னாச்சு...
ஐயா ரொம்ப ஜாலி மூட்ல.. இருக்காரு..
என்ன விசேசம்"
என அம்மா கூட வம்பு இழுத்தாங்க...

உன்னைப் பற்றி சொல்லி..
ஆரம்பத்தில் வம்பை விலைக்கு வாங்க
நான் தயாரில்லை....

"ஒன்னுமில்லை மா" என எஸ்கேப் ஆனேன்...

தண்ணீர் குழாயடியில்...
உன்னை காணவில்லை...
நீ வரும் வழியை நோக்கினேன்..
கண்ணுக்கெட்டிய தூரத்தில் நீ இல்லை...
தண்ணீர் பிடிக்க என் வேளை வந்தது..
என்னை பிடிக்கச் சொல்ல
"பரவாயில்லை நீங்க பிடிங்க...." என பலருக்கு வழி விட்டேன்...

அங்கிருப்பவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்..
தண்ணீர் பிடிக்க பறப்பான்..
இன்று எல்லாருக்கும் வழிவிடுகிறானே...

காரணத்தை.. எல்லாரிடமும் சொல்ல முடியுமா என்ன.....

அங்கும் இங்கும் என் பார்வை
சுற்றியதை.. கண்ட..
குறும்புக்கார ஒரு அம்மிணி..
"என்ன தம்பி.. யாரையோ தேடுற மாதிரி இருக்கு"
என வம்புக்கு இழுக்க....
"அதெல்லாம் ஒன்னுமில்லைங்க.." நான் வழிய....
சுற்றி இருந்த சிலரின் நக்கல் சிரிப்பு.... எனக்கு கேட்டது...

இதுக்கு மேல இருந்தா ரிஸ்க்..
என தண்ணீர் பிடித்து கிளம்பினேன்....

"ஒரே நாளில்
என்னையே மாற்றி விட்டு....
இப்படி கவுத்திட்டியே..."

என மனதுக்குள்... செல்ல திட்டுக்கள்.....

"எப்ப உன்னை பார்ப்பேன்...
மனசுக்குள்.. மத்தாப்பு...
எப்பொழுது தோன்றும்..
என எதிர்பார்ப்பு...."

ஆஹா பாதி.. வழியில்
நீ.. காலி குடத்துடன்.....

"தேவதை நடை கண்டவுடன்...
என்னில் ஏற்படும் மாற்றங்களை
என்ன சொல்வேன்..... "

உன்னைப் பார்த்து நான் சிரிக்க முயல..
நீயோ... கண்டும் காணாதது.. போல சென்றாய்.....

மனசுக்குள் மத்தாப்பு...
கேள்வி வெடிகளாய் மாறினது.....
"அவளுக்கு வேறு ஆள் ஏதும் இருப்பானா...?
ஏன் என்னை பார்த்து சிரிக்கவில்லை....??
என்னை பிடிக்கவில்லையா???"
என கேள்விக்குறிகள் வளர்ந்தன....

ஏன் ஏன்.. என தூக்கம் கலைந்தது....

உனக்கு ஒன்னுத் தெரியுமா.....
என் வாழ்க்கையில் தூக்கம் குறைந்த முதல் இரவு அது தானாடி....

ஒரு நாள்.. மத்தாப்பு..
மறு நாள்.. மந்தாரம்....

என்னடி வாழ்க்கை..... இது....
பெண்களென்றாலே இப்படி தானா...
ஆயிரம் கேள்விகள்...

அடுத்த நாள்....

இளசு
15-07-2008, 05:20 PM
ஆஹா.

வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்

எனப் பாடத் தோணுதே!

அம்மாவிடம் தப்பி - குழாயடி
அம்மணிகளிடம் வழிந்து
எதிர்பார்ப்பு புஸ்-ஆனதால் குமைந்து
எதிரில் வந்தும் கண்டுக்காததால் தளர்ந்து..

விடலை மனசின் அனாடமி பாடம்!

அசத்துறீங்க அறிஞரே!

எங்கே இருந்தது இந்தத் திறமை இத்தனை நாளும்???!!!!!

arun
15-07-2008, 06:16 PM
அசத்துங்க அசத்துங்க

அறிஞர்
15-07-2008, 07:38 PM
விடலை மனசின் அனாடமி பாடம்!

அசத்துறீங்க அறிஞரே!

எங்கே இருந்தது இந்தத் திறமை இத்தனை நாளும்???!!!!!
நன்றி இளசு....
விடலை பருவத்தில் அனைவரிடம் வந்து போகும் உணர்வுகள் தான் இது.....
திறமை எங்கே போகுது.. அப்படியே இருக்கும்..
நேரம் அனுமதிக்கும்பொழுது இன்னும் தொடரும்...

அசத்துங்க அசத்துங்க
நன்றி அருண்..

ஓவியன்
16-07-2008, 02:07 AM
அட நம்ம அறிஞரின் உள்ளே
ஒரு பாரதிராஜா இருப்பார் போலிருக்கே...
கிராமிய மணம் கமழ....
காதல் தெறித்து விழும் வரிகள் அழகோ அழகு...!!

அன்புரசிகன்
16-07-2008, 02:23 AM
அண்ணியோட மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா???? :lachen001:

கலக்குறீங்களே..... மனதுக்குள் மத்தாப்பு மட்டும் தானா????

வானவேடிக்கை ஒன்றுமில்லையா????

மனசுக்குள் மத்தாப்பு...
கேள்வி வெடிகளாய் மாறினது.....
"அவளுக்கு வேறு ஆள் ஏதும் இருப்பானா...?
ஏன் என்னை பார்த்து சிரிக்கவில்லை....??
என்னை பிடிக்கவில்லையா???"
என கேள்விக்குறிகள் வளர்ந்தன....

சிரிக்கவில்லை என்றவுடன் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்ற காரணத்திலும் வேறு ஆளிருப்பானோ என விடலைகளின் மனதில் வரும் காரணம் என்ன??? தம்மீதுள்ள அதீத நம்பிக்கையா??? புரியவில்லை...

எதையும் எதிர்பார்க்கமுடியவில்லை.... தொடரும் என போடாமலேயே எதிர்பார்ப்பை தூண்டுறீங்கள்.....

aren
16-07-2008, 02:28 AM
அசத்துங்க அசத்துங்க அறிஞரே. இத்தனை விஷயங்களை இத்தனைநாள் உள்ளே மறைத்து வைத்திருக்கிறீர்கள்.

இப்பவாவது வெளியே வந்ததே என்ற சந்தோஷம் எனக்கு.

mukilan
16-07-2008, 03:30 AM
அறிஞரின் லவ்வோகிராஃப்! இந்தியா கடந்த நான்கு மாதங்களில் சந்தித்த விலைவாசியேற்ற கிராஃப் போல விறு விறுனு ஏறுதே! அறிஞரே! உங்கள் ஆராய்ச்சி எந்தத் துறையில்?

அறிஞர்
16-07-2008, 03:03 PM
அட நம்ம அறிஞரின் உள்ளே
ஒரு பாரதிராஜா இருப்பார் போலிருக்கே...
கிராமிய மணம் கமழ....
காதல் தெறித்து விழும் வரிகள் அழகோ அழகு...!! நன்றி ஒவியன்...
இது ரொம்ப ஓவரு...

அறிஞர்
16-07-2008, 03:04 PM
அண்ணியோட மின்னஞ்சல் முகவரி தரமுடியுமா???? :lachen001:

கலக்குறீங்களே..... மனதுக்குள் மத்தாப்பு மட்டும் தானா????

வானவேடிக்கை ஒன்றுமில்லையா????

சிரிக்கவில்லை என்றவுடன் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்ற காரணத்திலும் வேறு ஆளிருப்பானோ என விடலைகளின் மனதில் வரும் காரணம் என்ன??? தம்மீதுள்ள அதீத நம்பிக்கையா??? புரியவில்லை...

எதையும் எதிர்பார்க்கமுடியவில்லை.... தொடரும் என போடாமலேயே எதிர்பார்ப்பை தூண்டுறீங்கள்..... ஏன் நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா... இப்படி மாட்டிவிட பார்க்கிறீங்க....

விடலை பருவத்தில் வரும் மனோபாவங்கள்.. இது

அறிஞர்
16-07-2008, 03:05 PM
அசத்துங்க அசத்துங்க அறிஞரே. இத்தனை விஷயங்களை இத்தனைநாள் உள்ளே மறைத்து வைத்திருக்கிறீர்கள்.

இப்பவாவது வெளியே வந்ததே என்ற சந்தோஷம் எனக்கு.நன்றி ஆரென்
உங்களிடமிருந்து பெரிதாக ஒரு கவி மழை பொழியும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அறிஞர்
16-07-2008, 03:06 PM
அறிஞரின் லவ்வோகிராஃப்! இந்தியா கடந்த நான்கு மாதங்களில் சந்தித்த விலைவாசியேற்ற கிராஃப் போல விறு விறுனு ஏறுதே! அறிஞரே! உங்கள் ஆராய்ச்சி எந்தத் துறையில்?
நன்றி முகிலன்..

ஆராய்ச்சி வேறு
இது வேறு...
இரண்டும் தனி டிராக்கில்...

பூமகள்
16-07-2008, 03:13 PM
மத்தாப்பு பூத்த
மகிழம் பூ வயது...

அல்லி வட்டம்
அவளாக..
அவன் வைத்த
புல்லி வட்டத்தின்
இதழ்களாக
பிரித்துப் போடப்பட்ட
இளநெஞ்ச நிகழ்வு...

உலகில் அனுபவிக்காதவர்
உளரோ??!!

அடுத்த பாகத்துக்காக... ஆவலுடன்..

பாராட்டுகள் அறிஞர் அண்ணா.. :)

சுகந்தப்ரீதன்
17-07-2008, 01:36 PM
ஹூம்.. நான் இருபாலர் படிக்கும் பள்ளியில் படித்தும் இப்படி ஓர் அனுபவம் ஏதும் ஏற்படவில்லையே...!!:D:D

உலகில் அனுபவிக்காதவர்
உளரோ??!!:)
முன்னுக்கு பின் முரணாக உள்ளது பூமகளே..!!

இதிலிருந்தே உங்களிடமும் களஞ்சியம் ஒளிஞ்சி கிடக்கிறது எங்களுக்கு தெரிகிறது..!!

அறிஞருக்கு அடுத்து அம்மணி நீங்கள் தொடரலாமே...??:fragend005::icon_rollout:

அறிஞர்
17-07-2008, 02:21 PM
மத்தாப்பு பூத்த
மகிழம் பூ வயது...
உலகில் அனுபவிக்காதவர்
உளரோ??!!
.. :)
நன்றி பூமகளே....

நம்மில் பலர் அனுபவித்தோரே...

அறிஞர்
17-07-2008, 02:22 PM
முன்னுக்கு பின் முரணாக உள்ளது பூமகளே..!!

இதிலிருந்தே உங்களிடமும் களஞ்சியம் ஒளிஞ்சி கிடக்கிறது எங்களுக்கு தெரிகிறது..!!

அறிஞருக்கு அடுத்து அம்மணி நீங்கள் தொடரலாமே...??:fragend005::icon_rollout:
ஆஹா சரியான பிடி பிடி பிடிச்சிட்டிங்க...
அடுத்த அம்மிணி தான்..

பூமகள்
17-07-2008, 02:29 PM
முன்னுக்கு பின் முரணாக உள்ளது பூமகளே..!!
அறிஞருக்கு அடுத்து அம்மணி நீங்கள் தொடரலாமே...??:fragend005::icon_rollout:
அடப்பாவி சுகு...
எங்க ஒரு அறிவாளி சுகுவோட பதிவு இல்லாம போகுதேன்னு பார்த்தேன்..
நீ குழம்பிட்டே சுகு..
தன்னிலையையும் படர்க்கையையும் ஒன்னா படிச்சி குழப்பிட்டியே...
முன்னர் சொன்னது தன்னிலை..
இரண்டாவது படர்க்கை.. :icon_rollout:

நீ பேசாம உன் ஆட்டோகிராஃபை எடுத்துவிடேன்.. அழகான இயற்கையான இடமாச்சே உங்க ஊரு..... :rolleyes::cool:

தீபன்
19-07-2008, 09:00 AM
அதிகம் சஸ்பென்ஸ் வைக்காதிங்கண்ணா... நீங்க பட்ட அவஸ்தை நாங்களும் படனுமா... மிச்சத்தயும் கெதியா சொல்லுங்க...

தீபன்
19-07-2008, 09:02 AM
அடப்பாவி சுகு...
எங்க ஒரு அறிவாளி சுகுவோட பதிவு இல்லாம போகுதேன்னு பார்த்தேன்..
நீ குழம்பிட்டே சுகு..
தன்னிலையையும் படர்க்கையையும் ஒன்னா படிச்சி குழப்பிட்டியே...
முன்னர் சொன்னது தன்னிலை..
இரண்டாவது படர்க்கை.. :icon_rollout:

நீ பேசாம உன் ஆட்டோகிராஃபை எடுத்துவிடேன்.. அழகான இயற்கையான இடமாச்சே உங்க ஊரு..... :rolleyes::cool:
படர்க்கையில் தன்னிலையும் அடக்கம்தானே....:confused::confused::confused:

சுகந்தப்ரீதன்
19-07-2008, 09:28 AM
நீ பேசாம உன் ஆட்டோகிராஃபை எடுத்துவிடேன்.. அழகான இயற்கையான இடமாச்சே உங்க ஊரு..... :rolleyes::cool:இன்னும் கனிகாவோட கேரக்டரை யாருக்கு கொடுக்கறதுன்னு முடிவாகலை..பூவு..:fragend005::lachen001:!!

அது முடிவானதும் நான் கண்டிப்பா எழுதிடுறேன்.. (அதுக்கு முன்னாடி எழுதுனா யாருமே கனிகா கேரக்டருக்கு ஒத்துக்காம போயிடுவாங்களோன்னு ஒரு சின்னபயம்..ஹி..ஹி..)

அமரன்
19-07-2008, 05:55 PM
பா.விஜய் படைத்த
உடைந்த நிலாக்கள் கவிதைத்தொகுப்பு
என்னைக் கவர்ந்தவைகளில் ஒன்று.

அதற்குச்சற்றும் சளைக்காத நினைவுப்பா(ர்)வை.
இளவேனில் காலத்துக்குரிய சம்பவக்கோ(ர்)வை.
வசனகவிதை நினைவுகளில் நனைந்து
விசனக்கவிதை எழுததூண்டுது மனது.

காதல்=கவிதை..
உங்கள் கவிதைக் காதல்.
காதல் களஞ்சியத்தில் சேமிப்பு.
பொருத்தம் பிரமாதம்.

அறிஞர்
21-07-2008, 01:47 PM
அதிகம் சஸ்பென்ஸ் வைக்காதிங்கண்ணா... நீங்க பட்ட அவஸ்தை நாங்களும் படனுமா... மிச்சத்தயும் கெதியா சொல்லுங்க...
கருத்துக்கு நன்றி தீபன்....
மிச்சத்தில் கொஞ்சத்தை இப்பொழுது கூறுகிறேன்.

அறிஞர்
21-07-2008, 01:49 PM
இன்னும் கனிகாவோட கேரக்டரை யாருக்கு கொடுக்கறதுன்னு முடிவாகலை..பூவு..:fragend005::lachen001:!!

அது முடிவானதும் நான் கண்டிப்பா எழுதிடுறேன்.. (அதுக்கு முன்னாடி எழுதுனா யாருமே கனிகா கேரக்டருக்கு ஒத்துக்காம போயிடுவாங்களோன்னு ஒரு சின்னபயம்..ஹி..ஹி..)
கதாநாயகிகளை தேர்வு செய்ய அணிவகுப்பை முதலில் நடத்திவிட வேண்டியதுதானே..

அறிஞர்
21-07-2008, 01:51 PM
பா.விஜய் படைத்த
உடைந்த நிலாக்கள் கவிதைத்தொகுப்பு
என்னைக் கவர்ந்தவைகளில் ஒன்று.

அதற்குச்சற்றும் சளைக்காத நினைவுப்பா(ர்)வை.
இளவேனில் காலத்துக்குரிய சம்பவக்கோ(ர்)வை.
வசனகவிதை நினைவுகளில் நனைந்து
விசனக்கவிதை எழுததூண்டுது மனது.

காதல்=கவிதை..
உங்கள் கவிதைக் காதல்.
காதல் களஞ்சியத்தில் சேமிப்பு.
பொருத்தம் பிரமாதம்.நன்றி அமரா...
பழைய காலத்து சம்பவங்களை அசைபோட்டு...
சில வரிகளால்.... அழகூட்டினால்...
தனி அழகுதான்..

சுகந்தப்ரீதன்
21-07-2008, 01:54 PM
கதாநாயகிகளை தேர்வு செய்ய அணிவகுப்பை முதலில் நடத்திவிட வேண்டியதுதானே..அறிஞர் அண்ணா..பெரிய ஆளுண்ணா நீங்க.. ஓசியிலியே பேப்பரை முழுசா படிக்க பாக்குறீங்களே...:mini023:

அறிஞர்
21-07-2008, 01:56 PM
பல கேள்விக்குறிகள்.....

உன்னை பார்க்க ஒரு விருப்பமில்லை...
ஆனால்...
உன்னை மறக்க மனது தயாராக இல்லை...

ஆக மொத்தத்தில்
நான் நானாக இல்லை....

வழக்கம்போல்
தண்ணீர் குடம்....
சைக்கிள்...
குழாயடி.......

மீண்டும் மனசுக்குள் மத்தாப்பு..
வாயில்.. புன்னகை...
இரகசியம்....
குழாயடியில் நீ.....

சைக்கிளை நிப்பாட்டி...
மெதுவாக குடத்தை எடுத்து வைத்துவிட்டு....
கூட்டதோடு.. ஒருவனானேன்...
பார்வை மட்டும்....
உன்னை விட்டு அகலவில்லை....

நேற்று வம்புக்கு இழுத்த...
குறும்புக்கார பெண்மணி..
"என்ன தம்பி... நேத்து இந்த பொண்ணை தான் தேடினீங்களா"
என போட்டு உடைக்க...
"இல்லைங்க" என நான் நெளிய...
அதை கண்டு நீ நகைக்க.....
மொத்தத்தில்..
என்னை நான் மறந்தேன்....

மனசுக்குள் ஒரு பூரிப்பு...
"எப்படியோ நான் உன்னை தேடினது
உனக்கு தெரிந்து விட்டது.." என..

அன்று போல் தண்ணீர் பிடிக்கும்பொழுது....
"நீங்க முதல்ல பிடிங்க...." என நீ சொல்ல
"இல்லைங்க.. நீங்க பிடிங்க.." என நான் சொல்ல...

இன்றும் நானே வென்றேன்...
முதலில் நீ பிடித்து விட்டு... நகர......

உன்னை ரசித்துக்கொண்டே இருந்தேன்..
உன் ஒவ்வொரு அசைவையும் என்னவென்று நான் வர்ணிக்க....
நான் கவியரசாக இருந்திருந்தால்...
உடனே கவிதையொன்று வடித்திருப்பேன்.....

உன்னைப் பார்த்து கொண்டு..
தண்ணீர் குடத்தை சரியாக வைக்காமல்...
தண்ணீர் வீணாக.......

மற்றொரு குறும்புக்கார பெண்மணி...
"தம்பி.. பொண்ணை பார்த்தது.. போதும்..
குடத்தை.. ஒழுங்கா பிடிங்க...... " என...

நான் அசடு வழிய....
நீ திரும்பி பார்த்து....
குறும்பாய்... சிரிக்க.......

மீண்டும் ஆயிரம் தீபங்கள்..
ஒளியாய் மனதுக்குள்.....

அவசர அவசரமாய் தண்ணீர் பிடித்து...
வேக வேகமாய்....
நீ சென்ற வழியை தொடர......
பாதி வழியில் உன்னை கண்டேன்...

என்னை அறியாமல்...
என் வேகம் குறைந்தது...
கைகள் பிரேக் பிடிக்க....

உன்னை ரசித்து
பின்னால் சைக்கிளில் நான்...

குடமோ இடுப்பில்...
அதை அழகாய வளைத்த மெல்லிய கரங்கள்...
மெல்லிய கரத்தில்... சிலு சிலுக்கும் கண்ணாடி வளையல்கள்...
உன் தலை கூந்தல் சடையின் ஆட்டம் அங்குமிங்கும்...
கால் கொலுசின் மெல்லிய இசைத் தாளம்.
உன் நடையோ..... அளந்து வைத்தாற்போல்....
அந்த நடையை நான் என்ன சொல்ல...
அன்ன நடை என்பார்களே
அதுதான் இதுவோ..... என
எனக்குள் ஒரு சந்தேகம்....

ஆக மொத்தத்தில்
என்னை மறந்து...
உன் பின்னால்...
நான்...

ஆனால்
என்னை முழு வீதியே பார்த்ததை..
நான் அறியவில்லை...

உன் வீடு வந்தது....
நீ உள்ளே செல்ல.....

நான் உன்னை கடந்து... சென்று...
உன் அழகை ரசிக்க எண்ணி....
நான் திரும்பினேன்...
நீ உன் வீட்டு காம்பவுண்ட் கதவை மூடிக்கொண்டே
என்னைப்பார்க்க....

நான்.... என்னை மீண்டும் மறந்தேன்......

சைக்கிள் தடுமாற...
தண்ணீர் குடங்கள் கீழே சரிய....
தண்ணீர் கொட்ட....
வீதியில் சிலர் பார்த்து சிரிக்க....

நீயோ குறும்பு நகைப்புடன் வீட்டின் உள்ளே சென்றுவிட்டாய்.....

என்னை என்னவென்று சொல்ல.....
ஒரு சில நாளில்
ஒருத்தி படுத்தும் பாடுகள் தான் எத்தனை....
பாடுகளின் மத்தியிலும்
மனதில் ஆயிரம் குத்துவிளக்குகள்..
ஒரே குதூகலம் தான்......

அறிஞர்
21-07-2008, 01:59 PM
அறிஞர் அண்ணா..பெரிய ஆளுண்ணா நீங்க.. ஓசியிலியே பேப்பரை முழுசா படிக்க பாக்குறீங்களே...:mini023: சரி சரி.. உங்க கதையில் பாதியையாவது அவுத்துவிடுங்க..

சிவா.ஜி
21-07-2008, 02:15 PM
நாலாவது பாகம் கலக்கலாக இருக்கிறது. 80 களில் எங்களுக்கும் நடந்ததை கறுப்பு வெளுப்பு ப்ளாஷ்பேக்கில் பார்க்கிறமாதிரி ஒரு உணர்வு.
அந்தக் குறும்புப் பெண்மணி, எப்படியோ நான் அவளுக்காக காத்திருந்தது அவளுக்குத் தெரிந்துவிட்டதே என்ற குதூகலம், விட்டுக் கொடுத்தல், சைக்கிள் சாகசம்.....அடடா...என்னவென்று சொல்ல...அழகு கொப்பளிக்கும் ஒரு மென்மையான காதல்கதை.

அசத்துறீங்க அறிஞர். வாழ்த்துகள்.

இளசு
21-07-2008, 05:49 PM
இந்த பாகம் கிளுகிளுப்பு கூடுதல் அறிஞரே!

அதெப்படி.. கூட்டம் நிறைந்த வீதியில் கூட
தனிமையாய் இருப்பதாய் நினைக்க வைக்கும் காதல்?

பெண்களின் இடுப்பு வளைவு அழகு கூடுவதே
அவர்கள் தண்ணீர்க்குடம் சுமப்பதால்தானோ?

வீழ்ந்தவை குடங்களாக இருக்கலாம்..
நனைந்து சிலிர்த்தவை இதயங்கள் அல்லவா..?

தொடரட்டும் இக்குற்றாலத் தொடர்!

பாராட்டுகள் உங்கள் சாரல் நடைக்கு!

அன்புரசிகன்
21-07-2008, 06:02 PM
ஐயா...
மெய் சிலிர்க்கிறது...
கண்ணால் சீண்டுகிறீர்களே.... தாண்டுவ(டிய)து எப்போது???
இதுவரை உள்ள(த்)தில் காதல் வசம் உண்டா?

arun
21-07-2008, 06:21 PM
கடந்த கால நினைவை தட்டி எழுப்புகிறீர்கள் குறிப்பாக இந்த பாகம் பள்ளி கால நினைவுகளை நினைக்க தோன்றுகிறது

arun
21-07-2008, 06:22 PM
இந்த பாகம் கிளுகிளுப்பு கூடுதல் அறிஞரே!

அதெப்படி.. கூட்டம் நிறைந்த வீதியில் கூட
தனிமையாய் இருப்பதாய் நினைக்க வைக்கும் காதல்?

பெண்களின் இடுப்பு வளைவு அழகு கூடுவதே
அவர்கள் தண்ணீர்க்குடம் சுமப்பதால்தானோ?

வீழ்ந்தவை குடங்களாக இருக்கலாம்..
நனைந்து சிலிர்த்தவை இதயங்கள் அல்லவா..?

தொடரட்டும் இக்குற்றாலத் தொடர்!

பாராட்டுகள் உங்கள் சாரல் நடைக்கு!

இதெல்லம் ஆராயக்கூடிய விஷயமா? இளசு அவர்களே

அனுபவிக்கனும் :icon_b::icon_b:

mukilan
21-07-2008, 08:38 PM
இன்றும் நானே வென்றேன்...
முதலில் நீ பிடித்து விட்டு... நகர......

ஆண்கள் தோற்பது போல் தோற்று ஜெயிப்பது காதலிகளுக்கு எளிதாகப் புரிவதில்லை! அறிஞர் நானோ பார்ட்டிகளை விட நுண்ணிய பெண்ணின் மனதைப் படிக்க முயன்றதன் விளைவாகத்தான் ஆராய்ச்சியில் இந்தப் போடு போடுகிறாரோ? அடிக்கடி திரும்பிப் பாருங்க.

mukilan
21-07-2008, 08:39 PM
வீழ்ந்தவை குடங்களாக இருக்கலாம்..
நனைந்து சிலிர்த்தவை இதயங்கள் அல்லவா..?

ரசித்தேன்!

அறிஞர்
22-07-2008, 06:24 PM
நாலாவது பாகம் கலக்கலாக இருக்கிறது. 80 களில் எங்களுக்கும் நடந்ததை கறுப்பு வெளுப்பு ப்ளாஷ்பேக்கில் பார்க்கிறமாதிரி ஒரு உணர்வு.
அந்தக் குறும்புப் பெண்மணி, எப்படியோ நான் அவளுக்காக காத்திருந்தது அவளுக்குத் தெரிந்துவிட்டதே என்ற குதூகலம், விட்டுக் கொடுத்தல், சைக்கிள் சாகசம்.....அடடா...என்னவென்று சொல்ல...அழகு கொப்பளிக்கும் ஒரு மென்மையான காதல்கதை.

அசத்துறீங்க அறிஞர். வாழ்த்துகள்.
ஒவ்வொருத்தருக்கும் அருமையான அனுபவங்கள்....
80 பிளாஷ் பேக்கை.. கிறுக்கி விடவேண்டியது தானே.. சிவா.ஜி..

அறிஞர்
22-07-2008, 06:25 PM
இந்த பாகம் கிளுகிளுப்பு கூடுதல் அறிஞரே!

அதெப்படி.. கூட்டம் நிறைந்த வீதியில் கூட
தனிமையாய் இருப்பதாய் நினைக்க வைக்கும் காதல்?

பெண்களின் இடுப்பு வளைவு அழகு கூடுவதே
அவர்கள் தண்ணீர்க்குடம் சுமப்பதால்தானோ?

வீழ்ந்தவை குடங்களாக இருக்கலாம்..
நனைந்து சிலிர்த்தவை இதயங்கள் அல்லவா..?

தொடரட்டும் இக்குற்றாலத் தொடர்!

பாராட்டுகள் உங்கள் சாரல் நடைக்கு!
நன்றி இளசு...
எத்தனை கூட்டம் இருந்தாலும்
இருவர் மட்டுமே இருப்பது போன்ற
மாயையை ஏற்படுத்துவதன் காதல்..

அறிஞர்
22-07-2008, 06:26 PM
கடந்த கால நினைவை தட்டி எழுப்புகிறீர்கள் குறிப்பாக இந்த பாகம் பள்ளி கால நினைவுகளை நினைக்க தோன்றுகிறது
சொல்லிக்கிட்டே இருக்கிங்க...
கொஞ்சம் எடுத்துவிடுங்க..

அறிஞர்
22-07-2008, 06:27 PM
இதெல்லம் ஆராயக்கூடிய விஷயமா? இளசு அவர்களே

அனுபவிக்கனும் :icon_b::icon_b:
அவரும் அந்த காலத்தில் அனுபவித்தவர்தான்...

அறிஞர்
22-07-2008, 06:28 PM
இன்றும் நானே வென்றேன்...
முதலில் நீ பிடித்து விட்டு... நகர......

ஆண்கள் தோற்பது போல் தோற்று ஜெயிப்பது காதலிகளுக்கு எளிதாகப் புரிவதில்லை! அறிஞர் நானோ பார்ட்டிகளை விட நுண்ணிய பெண்ணின் மனதைப் படிக்க முயன்றதன் விளைவாகத்தான் ஆராய்ச்சியில் இந்தப் போடு போடுகிறாரோ? அடிக்கடி திரும்பிப் பாருங்க. முடிவில் யார் வெற்றி பெறுகிறார்கள்.. என்பது இன்றும் கேள்விக்குறிதான்..

இப்படி அடிக்கடி திரும்பி பார்த்தா..
நானோ பார்ட்டிகள்... வேறுபக்கம் திரும்பிவிடும்..

arun
22-07-2008, 07:24 PM
சொல்லிக்கிட்டே இருக்கிங்க...
கொஞ்சம் எடுத்துவிடுங்க..

எனது நினைவுகளை கொஞ்சம் எடுத்து விட்டேன் நினைவுகள் மீண்டும் தொடரும்

அறிஞர்
22-07-2008, 08:47 PM
எனது நினைவுகளை கொஞ்சம் எடுத்து விட்டேன் நினைவுகள் மீண்டும் தொடரும்
கொஞ்சத்தை பார்த்தேன்..
மிச்சத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

arun
12-12-2008, 08:38 PM
கொஞ்சத்தை பார்த்தேன்..
மிச்சத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

மீண்டும் கொஞ்சம் நினைத்து பார்க்கலாமே??..:):)