PDA

View Full Version : சூஃபி மணிகள்



நாகரா
11-07-2008, 02:04 PM
ஓமென்றும் அகமென்றும் தம்மென்றும் எனக்குள்
யாமென்ற நெறிவிளக்கும் நபிகள்

ஓமென்ற அல்லாவும் அகமென்ற'ரு' ளம்மாவும்
தம்மென்ற நபிகளும் யாம்

ஓமென்ற பெருந்தயாளன் அகமென்ற அருட்ஜோதியள்
தம்மென்ற வாலறிவன் யாம்

பி.கு. : The Phonetic Spelling of Prophet "MOHAMMADH" contains the Vedic Mantras OM(Father), AHAM(Mother), DHAM(Son/Daughter/Christ/Guru/Rasul/Buddha)
பொறுப்பாளர்கள் மன்னிக்கவும், மந்திர விளக்கத்துக்காகவே ஆங்கிலம் கையாளப்பட்டது, நன்றி

பாலகன்
11-07-2008, 03:39 PM
அருமையான விளக்கம் நண்பரே நாகரா

அன்புடன்

நாகரா
11-07-2008, 03:45 PM
நன்றி அழகிய மணவாளரே!

நாகரா
12-07-2008, 03:17 AM
ஓங்கார இருப்பிற்குள் அகமாக நானெழுந்து
தம்மென் றிருக்கின்றேன் அறிந்து

ஓம்அகம் தம்மென்ற நாதவிந்து ஞானத்தால்
யாம்அளந் தோம்அடி முடி

மூலந்திறக் குமோங்காரம் இருதயந்திறக் குமகம்மேம்
பாலந்திறக் குமேதம்மெனும் மந்திரம்

ஓமென்னும் அகமென்னும் தம்மென்னும் மும்மந்திர
நாமத்தான் மகம்மது நபிகள்

"ஓம்அகம் தம்"யாம் மெய்ஞ்ஞானத் திருமந்திரம்
நாயகம் நபிகள் கொடை

ஓங்கார அல்லாவின் மெய்த்தூதர் மகம்மது
மெய்யகம் ஆனந்தம் தந்தார்

நாகரா
16-02-2009, 04:30 AM
ஆதி அல்லாவே ஆளாய் இங்கிருக்கும்
சேதி சொல்வாரே நபி

நபியார் சொல்லுஞ் சேதி புரிய
அவியா வாழ்வின் சுகம்

சுகபூரண வாழ்வை ஆர்க்கும் தருவார்
அகபூமியில் ஓங்கும் இறை

இறைந்தெங்கும் இருந்தும் யாவுங் கடந்தும்
மறைந்திருக்கும் ஒருவனே அல்லா

அல்லாவின் திடமே தோன்றும் எல்லாம்அவன்
அல்லாத இடமே இல்லை

இல்லை இலக்கணம் என்றாலும் இப்பாக்கள்
சொல்லும் இலக்கைப் பிடி

பிடியாமல் உலகியல் உள்ளத்தே அல்லா
படிந்தால்மெய் விலகா துயிர்

உயிர்மூச்சாய் உள்ளாடும் அருளாளர் அல்லாவின்
பயிர்போன்றார் உடம்பார் காண்

காணும் இருவிழிமேல் மூடிய திருவிழியால்
காணக் குருநபியை நாடு

நாடு நடுநாடி மூல கணபதியைக்
கூடு சிவசத்திக் கோலம்

நாகரா
16-02-2009, 05:07 AM
கோல மயிலேறிக் குவலயஞ் சுற்றும்
பால குருநின்னகம் யானை(யான்"ஐ")

யானை(யான்"ஐ") முகத்தனை அகத்திலே கண்டுப்பின்
கோனைத் தரையிலே இறக்கு

இறக்குமதி அருளின் ஏற்றுமதிப் பொருளின்
திறந்திருக்கும் இருதயத் தூடே

ஊடே உள்ளே வெளியே எங்கும்
ஆரே அல்லா 'உ'வர்

'உ'வரைஅகத் துணர்ந்தால் அவரிவராம் புறத்தேவர்
எவரையுமே வணங்க வேண்டா

வேண்டாமை வேண்டுதல் இலானடி பற்ற
வேண்டாமே வீம்புச் சடங்கு

அடங்கு இருதய அன்புக் கிடங்கில்
அடங்கி அறிவாய் எழு

எழுந்தே அவனியில் இறங்கித் தயவாய்ப்
பழுத்தே உயிர்நலம் பேண்

ஏணித் தண்டில் ஏறி இறங்குந்
தூணாய்த் தோன்றுஞ் ஜோதி

ஜோதி உருவமாய்ச் சுடரும் மெய்க்கு
ஆதி அருவம் உயிர்

துளசி
17-02-2009, 09:46 PM
நாகரா அவர்களே உங்களுடைய தமிழ்ப்புலமை என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. கவிதை விளங்கவில்லை மன்னிக்கவும்.

நாகரா
18-02-2009, 02:58 AM
நன்றி துளசி

உம்மை விளக்கும் ஒருவனை உள்ளே
உம்முள் விளங்கவே தவம்

அமரன்
18-02-2009, 08:48 AM
எல்லாமே கருத்தை அள்ளுகின்றன.
சிலதின் கருத்தை மட்டுமே என்னால் அள்ள முடிகிறது.
பொழிப்புரைக்க முடியுமா நாகரா அய்யா.

நாகரா
18-02-2009, 10:02 AM
உள்ளே அருளூற்றாய்ப் பொழியும் வள்ளலை
அள்ள அமரரே நீர்

உம் ஆர்வத்திற்கு நன்றி அமரன், நேரங்கிடைக்கும் போது ஒவ்வொன்றாய் விளக்குகிறேன்

நாகரா
18-02-2009, 10:30 AM
முதல் மூன்று மணிகளும்
அருட்தந்தை அருட்தாய் சற்குரு
என்னும் திரித்துவ ஒருமையாய்
நம்முள் நீங்காது உறையும்
கடவுளை வாழ்த்துகின்றன!

(ஐ) "யாம்"(I AM-நான் இருக்கிறேன்) என்ற தன்னறிவு
ஓம் என்ற பரமபிதா மந்திரமாய்(ஆதி அருவம்)
அகம்(அஹம்) என்ற பரிசுத்த ஆவி மந்திரமாய்(ஜோதி உருவம்)
தம்(DHAM-"ஆனந்தம்" என்பதில் வரும் தம்) என்ற குமார மந்திரமாய்(அருவ உருவ ஒருமை விளங்கும் ஞான குரு வடிவம்)
வெளிப்படுகிறது, இதில் அதிசயம் என்னவென்றால் வேதாந்த சித்தாந்த முடிபுகள் சுட்டும் இம்மூன்று மகா மந்திரங்களும் நபிகள் நாயகத்தின் "மொஹம்மத்" என்ற பெயரில் அடக்கம்!

MOHAMMADH ஓம்!
MOHAMMADH அகம்(அஹம்)!!
MOHAMMADH தம்!!!
(எழுத்துக்களை இடம் மாற்றிப் படிக்க வேண்டும்)

சமய சமரசத்துக்கு இதை விடச் சிறந்த உதாரணம் வேண்டுமோ, நபிகள் வேதங்களின் பிழிவைத் தன் பேரிலேயே ஏந்தி இருக்கிறாரே!

விளக்கம் கேட்ட துளசிக்கும் அமரனுக்கும் நன்றிகள்