PDA

View Full Version : மனந்திரும்பு



நாகரா
11-07-2008, 12:29 PM
குண்டலி நாகமே!
கீழே படுபாவித்தனத்தை உண்ணும்
நயவஞ்சகக் கருநாகம் நீ
மனந்திரும்பி
மேலே இறைமகவாம் உன் உண்மை உண்ண
நல்ல பாம்பாவாய்!

முதுகடி நோக்கிய
உனது வாயை
180 பாகைகள் திருப்பி
தலையுச்சி நோக்கு.
தலைக்கு மேலிருந்து
எப்போதும் விழுந்து கொண்டிருக்கும்
மன்னாவை உண்ண
உனது வாலும் வாயும்
இடம் மாற வேண்டும்!
இடம் மாற
கருத்த உன் உடம்பு
வெளுக்கும்!
மனந்திரும்பி
இடம் மாறு
இப்போதே!

இளசு
11-07-2008, 12:58 PM
எல்லாரும் திரும்பி விட்டால்
ஏடன் தோட்டம் மீண்டும் வரும்..

யுதோபியன் கனவிது..
பலிக்குமா? பலிக்கட்டும்!

பாராட்டுகள் நாகரா அவர்களே!

நாகரா
11-07-2008, 01:56 PM
புரிந்துணர்ந்த உம் உடனடிப் பின்னூட்டத்துக்கு நன்றி பல இளைய பெரியவரே!

அறிஞர்
11-07-2008, 02:11 PM
மனந்திரும்புதல் இன்றியமையாதது...

எடுத்து சொல்லும் விதம் மென்மையாக இருந்தால்....
ஏற்றுக்கொள்வோர் பலர் ஆவர்....

நாகரா
11-07-2008, 02:51 PM
மனந்திரும்புதலின் இன்றியமையாமையை உணர்ந்த உமக்கு நன்றி அறிஞரே!

நமக்குள் கருநாகமாய்க் கருத்திருக்கும் குண்டலி சக்தியை நல்ல பாம்பாய் வெளுக்க வன்மையாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. இதையே நபிகள் நாயகம் நமக்குள் பேயாட்டம் போடும் ஆணவத்தை ஈவு இரக்கமின்றிக் கொன்று போடச் சொன்னார். இதுவே "ஜெஹாத்" என்பதன் மெய்ப்பொருள். ஆணவத்தை நாம் கொல்லவில்லையென்றால், அது நமக்குள் இருக்கும் இறைமகவுத் தன்மையை நாம் சேர விடாது, நம்மைக் கொன்று போடும்.