PDA

View Full Version : மலர்ந்தவையும் மலராதவையும்..!பூமகள்
10-07-2008, 03:15 PM
http://img26.picoodle.com/img/img26/4/7/10/poomagal/f_29902994299m_ee225ef.jpg


மலர்ந்தும்
எங்களில் வாசமில்லை...!

மலராத
எங்களில் நேசமில்லை...!

மலர்ந்ததால்
உலர்ந்தது..
எங்களின்
வாழ்க்கை..!

மலராததால்
புலரவேயில்லை
எங்களின்
வாழ்க்கை..!

காய்க்காத பூவானது
எம் குற்றமா??

மலராத மலரானது
எம் குற்றமா??

பூ காய்ந்தாலும்..
காயாது
எங்கள் மேலான பழி..!

மொட்டவிழ்ந்தாலும்
அழியாது
எங்கள் மேலான சுழி..!

உருவாக்காததால்
நாங்கள்
இல்லத்தில் இருந்தும்
இல்லாமலானோம்..!

உருவாகாததாலே
நாங்கள்
இல்லத்தில் இருக்காத
இல்லாதவர்களானோம்..!

அறிவியல் விடியலில்
மூச்சுப் பிடித்து
காத்திருப்போம்..!!

மலர்தலும்
காய்த்தலும்
புலரும் நம்
வாழ்வில் வா...!!

பாலகன்
10-07-2008, 03:19 PM
பரவாயில்லையே மலர்களும் மொட்டுக்களும் இப்ப பேச ஆரம்பிச்சிடுச்சே.........

பூ மகளே கவிதை அருமையிலும் அருமை

அன்புடன்
பில்லா

ஷீ-நிசி
10-07-2008, 03:30 PM
ரொம்ப நல்லாருக்கு பூமகள்...

மிக கொடுமையானது, இவ்வுலகில் பெண்ணாக பிறந்தும் பிள்ளைப்பேறு அடையாத கொடுமை, பெண்ணாய் பிறந்தும் காலத்திற்கேற்ற மாற்றங்கள் நிகழாமலிருப்பது,

மிக ஆழமான கருவிது....

வாழ்த்துக்கள் பூமகள்... (தலைப்பை இன்னும் சுருக்கியிருக்கலாம்)

பூமகள்
10-07-2008, 03:35 PM
பரவாயில்லையே மலர்களும் மொட்டுக்களும் இப்ப பேச ஆரம்பிச்சிடுச்சே.........
ரொம்ப நன்றிங்க பில்லா அண்ணா..!!
முதல் பின்னூட்டமே.. என் ஃபேவரட் 'தல' அஜித்:rolleyes: பில்லாவிடமிருந்து வந்தது கண்டு மகிழ்ச்சி..!! :) :icon_rollout:

ரொம்ப நல்லாருக்கு பூமகள்...
மிக ஆழமான கருவிது....
வாழ்த்துக்கள் பூமகள்... (தலைப்பை இன்னும் சுருக்கியிருக்கலாம்)
மிக்க நன்றிகள் ஷீ..!
கருவை கச்சிதமாகப் பிடித்துவிட்டீர்கள்..!

முடிந்தளவு தலைப்பைச் சுருக்கியிருக்கிறேன் ஷீ..!
உங்க உடன் ஊக்கத்துக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றிகள் ஷீ..!! :)

அறிஞர்
10-07-2008, 03:41 PM
அருமை பூமகளே...

மேலாக பார்க்கும்பொழுது ஒரு அர்த்தம்
உள்ளாக பார்த்தால் பல அர்த்தங்கள்...

வரிகளின் கையாடல்.. அருமை...

வாழ்த்துக்கள்..

நாகரா
10-07-2008, 03:46 PM
வாசமில்லாது மலர்ந்தும்
விழிகளை
வண்ணங்களால் வசீகரித்தோம்

மொட்டவிழாது இருந்தும்
காய்க்காது உலர்ந்தும்
விழுந்து எருவாகி
காய்க்கும் மலர்களுக்குக்
காரணமானோம்

இப்படியும் பேசுதே
பல மலர்களும் சில மொட்டுகளும்!

பல பரிமாணங்களை உள்ளடக்கிய
ஆழமான கவிதை.
இன்னும் ஆழ்ந்து
என் மர மண்டையில்
ஏதாவது உறைத்தால்
மீண்டும் வருகிறேன்.

வாழ்த்துக்கள் பூமகளே!
செழித்து வளரட்டும் உம் கவிப்பூங்கா!
எம் மன வண்டுகள் பருகத் தேன் அள்ளித் தரட்டும்!

நல்லதோர் அருங்கவிக்குப் பாராட்டுகளும் நன்றியும்.

பூமகள்
10-07-2008, 04:41 PM
மேலாக பார்க்கும்பொழுது ஒரு அர்த்தம்
உள்ளாக பார்த்தால் பல அர்த்தங்கள்....
புரிந்து உடன் பின்னூட்டமிட்ட அறிஞர் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :)

பூமகள்
11-07-2008, 08:07 AM
வாழ்த்துக்கள் பூமகளே!
செழித்து வளரட்டும் உம் கவிப்பூங்கா!
நல்லதோர் அருங்கவிக்குப் பாராட்டுகளும் நன்றியும்.
மிக்க நன்றிகள் நாகராஜன் அண்ணா..!
உங்கள் பாராட்டு கண்டு மகிழ்ச்சி. :)

Narathar
11-07-2008, 10:15 AM
பூக்களின் சோகத்தை
பூக்களின் பிண்ணனியில்
பூமகள் அருமையாக தந்துள்ளார்

வாழ்த்துக்கள் : கவிதைக்கு
வருத்தங்கள் : பூக்களுக்கு

பூமகள்
11-07-2008, 12:56 PM
அழகான பின்னூட்டம்..

மகிழ்ந்தேன் நாரதரே...!!
உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
ஊக்கத்துக்கு மிகுந்த நன்றிகள்..!! :)

இளசு
11-07-2008, 01:02 PM
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினார் வள்ளலார்..

பருவத்தே பயிராகாத கொடிகளுக்காகப்
பாடினார் பாமகள்..

சொல்வளம், வரிவடிவம், கட்டு -அழகு..
கரு,ஆதுரம் - அருமை.

பாராட்டுகள் பாமகளே!

பூமகள்
11-07-2008, 01:07 PM
உங்க பார்வையில் பட வைக்க எத்தனை பாடு...:eek::eek: அப்பாடா நிம்மதி..!! ;):icon_ush::)

பெரியண்ணாவின் அழகு விமர்சனம் கிட்டிவிட்டது...!! :icon_rollout::icon_rollout:
நெகிழ்ந்தேன்.. நன்றிகள் அண்ணலே..! :)

'ஆதுரம்' என்றால் என்னங்க பெரியண்ணா??!!:confused::icon_ush: (எதுக்கும் தமிழகராதி புரட்டிட்டு வருகிறேன்..!!:icon_rollout:)

அகராதியில்
ஆதுரம் - ஆசை, நோய் என்று இருக்கிறது அண்ணலே..!

இளசு
11-07-2008, 01:14 PM
ஆதுரம் என்றால் - ஒருவர் மேல் கருணையும் அன்பும் நல்லது நடக்கணும் என்ற ஆவலும் கலந்து நம்முள் பொங்கும் சுகந்த நல்லுணர்வு!

ஆசையாய்த் தழுவதல் வேறு
ஆதுரமாய்த் தழுவுதல் வேறு!

பூமகள்
11-07-2008, 01:29 PM
வேறுபாடு புரிந்து விட்டது பெரியண்ணா..!! :)

தெள்ளமுது தெளித்த பாடத்தால்
தெளிந்தேன்.. உண்டேன்..!! :)

இளசு
11-07-2008, 01:32 PM
புதுச்சட்டை போட்டு சிரித்து வரும் மழலையை ஆசையாய்த் தழுவலாம்..

அடிபட்டு வலித்து அழுது, களிம்பால் வலி குறைந்து, பாதுகாப்பு உணர்ந்து மெல்லத் தேம்பும் குழந்தையை ஆதுரமாய்த் தழுவலாம்..

சரியா பூ?

பூமகள்
11-07-2008, 01:37 PM
நீங்க சொன்னா பிழையாகுமா பெரியண்ணா??!!

மிக மிகச் சரி..!!

முதலாமது..
ஆனந்தமாய்..!

இரண்டாமது..
ஆதரவாய்..!

இன்று ஒரு தமிழ் வார்த்தை கற்றேன் அண்ணலின் பாடத்தால்..!!
(கவிதையில் பயன்படுத்திக்கலாமே.. ஹை ஹை..!! ;))

மனமார்ந்த நன்றிகள் அண்ணலே..! :)

mukilan
11-07-2008, 02:06 PM
திருநங்கைகள் பற்றிய கவிதையோ என நான் முதலில் சற்றுத் தடுமாறிவிட்டேன். ஷீ-நிசியின் விளக்கத்தால் தெளிந்தேன். பாமகள் என அண்ணா அளித்த பட்டம் சாலத் தகும் பூ! சிறு வயதிலேயே கவிதையைக் காதலோடு நிறுத்தாமல் சமுதாயப் பிரச்சினைகளைச் சாடப் பயன்படுத்தியிருப்பது மிக அருமை. அதிலும் காலகாலமாக நடந்துவந்தாலும் அமுக்கியே வைக்கப்பட்டுள்ள அநீதி இது. ஆமாம் யார் குற்றம்? இதே நிலை ஒரு ஆணுக்கு இருந்தால்!

இங்கே பெற்றோரின்றி ஏராளமான குழந்தைகள்-
குழந்தைகள் இன்றி ஏராளமான பெற்றோர்.

பயிர் எண்ணிக்கை குறைவான இடத்தில் நாற்று வாங்கி நடவு செய்கிறோமல்லவா?
கவிதைக்குப் பொருத்தமாக நீ தேர்ந்தெடுத்த ஆர்க்கிட் மலர்களிலும் வாசனை கிடையாது, கனி கிடையாது எல்லாவற்றிற்கும் மேலாக மலராவிடின் மொட்டுக்கு மதிப்பும் கிடையாது.

ஆதுரம்- இளசு அண்ணாவின் விளக்கம் அருமை. ஆதுரம் என்பது பெரியவர்கள் சிறார்களின் மேல் வைக்கும் அன்பு எனக் கொள்ளலாமா அண்ணா?

சிவா.ஜி
12-07-2008, 07:12 AM
மலராத மொட்டுகள்,,,மலராதது அவைகளின் குற்றமா?
மலரவில்லையானாலும் அவை மலர்கள்தானே....

மிக அருமையான் வார்த்தையாடல். பூமகளை நிறைவான பாமகளாய்க் காட்டும் வரிகள்.

யாரும் தொடத்தயங்கும் கருவை வெகு அழகாய் கையாண்ட தங்கையைப் பார்த்து மனம் பூரிக்கிறது.

வாழ்த்துக்கள்ம்மா.

பூமகள்
12-07-2008, 07:44 AM
சிறு வயதிலேயே கவிதையைக் காதலோடு நிறுத்தாமல் சமுதாயப் பிரச்சினைகளைச் சாடப் பயன்படுத்தியிருப்பது மிக அருமை.
உங்களின் ஊக்கத்துக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றிகள் முகில்ஸ் அண்ணா..!! :)

கவிதைக்குப் பொருத்தமாக நீ தேர்ந்தெடுத்த ஆர்க்கிட் மலர்களிலும் வாசனை கிடையாது, கனி கிடையாது எல்லாவற்றிற்கும் மேலாக மலராவிடின் மொட்டுக்கு மதிப்பும் கிடையாது.
ஆஹா... இதுல இத்தனை செய்திகள் அடங்கியிருக்கா??!!:eek::eek: :icon_b::icon_b:

அப்போ மிகச் சரியாகத்தான் கவிதைக் கருவையும் யோசித்திருக்கிறேன்..!!:icon_rollout:

எதேட்சையாக இருப்பினும்.. உங்களின் இந்த விளக்கம் எப்படி அழகாக படம் கவிதையில் பொருந்துகிறது என்பதை உணரச் செய்து விட்டது..!!:icon_b:

கொடிகளோடும் செடிகளோடும் உரையாடி மகிழ ஆசைப்படும் பூவுக்கு கிடைத்த ஓர் பொக்கிசம் முகில்ஸ் அண்ணா..!!:cool::icon_rollout:

உங்க பதிவுகள் என்றென்றும் வரவேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்..!! :)

பூமகள்
12-07-2008, 07:55 AM
மலராத மொட்டுகள்,,,மலராதது அவைகளின் குற்றமா?
மலரவில்லையானாலும் அவை மலர்கள்தானே....
மிக அருமையான் வார்த்தையாடல். பூமகளை நிறைவான பாமகளாய்க் காட்டும் வரிகள்.
//மலரவில்லையானாலும் அவை மலர்கள் தானே...//
சுப்பரா சொல்லிட்டீங்க..!!
ரொம்ப நன்றிகள் சிவா அண்ணா..!! :)

சுகந்தப்ரீதன்
12-07-2008, 08:30 AM
முதலில் வேதனையும் வெம்மையும் கலந்து வெளிப்பட்ட வரிகள்..
இறுதியில் நம்பிக்கைக் கொண்டு நகர்ந்திருப்பது சிறப்பு..!!

கனமான கரு..!! அதை அழகான உருவில் வடித்திருக்கும் உன் வரிகள்..!!
வாழ்த்துக்கள்..பூமகள்..!! தொடரட்டும்.. உன் கவி பயணம்..தெளிந்த நீரோடையாய்..!!

இளசு
12-07-2008, 09:22 AM
ஆர்க்கிட் மலர்களிலும் வாசனை கிடையாது, கனி கிடையாது எல்லாவற்றிற்கும் மேலாக மலராவிடின் மொட்டுக்கு மதிப்பும் கிடையாது.அபாரம்.. அசந்தேன்..

பாராட்டுகள் முகில்ஸ்!. ஆதுரம் என்பது பெரியவர்கள் சிறார்களின் மேல் வைக்கும் அன்பு எனக் கொள்ளலாமா அண்ணா?

பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் எந்த நிகழ்வும் ஆதுரமானதே!

தீபன்
13-07-2008, 01:32 AM
பூவொன்றின் பூக்கவிதை. நன்று. பெரியவங்க சொன்னபின் நான் என்னத்த சொல்ல... தொடருங்க.