PDA

View Full Version : அவன்..



rambal
23-07-2003, 01:26 PM
அவன்..

இலக்கில்லா ஓடுகிறான்
எதை எதையோ தேடுகிறான்
பரிகசிக்கவும் ஆளில்லை
பரிகாசத்திற்கும் கூடத்தான்..

ஊனை உருக்கி தின்னப்பார்க்கும்
தனிமையில் தவிக்கிறான்..

பிரபஞ்சத்தின்
காற்று எல்லைகளுக்கப்பாற்பட்ட
வீதிகளில் பயணிக்கிறான்..

சில சமயம் மிருகமாகி
சுகிக்கிறான்
சில சமயம்
ஞானியாகி போதிக்கிறான்..
சில சமயம்
குழந்தையாகி மகிழ்கிறான்..

அவனும் வாழ்கிறான்
கோடிக்கணக்கான தூசுகளுக்கிடையில்
ஒரு தூசுவாய்..

இப்போது..
எங்கோ யாத்திரைக்கு கிளம்புகிறான்..
மீண்டு வருவானா?
மீண்டும் வருவானா?

பாரதி
23-07-2003, 02:10 PM
அன்பு ராம்.. பாராட்டுக்கள்.
விடுமுறையில் நீங்கள் செல்வதற்கும் இந்த கவிதைக்கும் சம்பந்தம் உண்டா..?

anbu
23-07-2003, 04:00 PM
மீண்டும் மீண்டும் வரவேண்டும் உங்கள் கவிதைகள்

வாழ்த்துகிறேன் ராம்பால் !

இ.இசாக்
23-07-2003, 05:10 PM
மகிழ்ச்சியாக அமையட்டும் பயணம் ராம்பால் அவர்களே!

இளசு
23-07-2003, 08:20 PM
வாழ்க்கை ஒரு வட்டச்சாலை..
பிரிவது..பிரியம் வளர்க்க!
தனிமையில் சிந்திக்க..
இன்னும் இறுக்கம் கூடி
இருமனம் சந்திக்க..

மன்றம் உன் காதலி ராம்..
அண்ணன் உன் காவலன் ராம்..

Tamil_Selvi
25-07-2003, 04:46 PM
நன்றாக உள்ளது உங்கள் கவிதை.

- தமிழ்ச்செல்வி