PDA

View Full Version : வெளுத்த நீலம்..!



பூமகள்
10-07-2008, 06:51 AM
வெளுத்த நீலம்..!



ரத்தக் காட்டேரி கதை எல்லாரும் படிச்சி பயந்து ஓய்ந்திருப்பீங்க… இப்போ அடுத்த கதைக்கு வருகிறேன்..

இது நடந்ததும்.. ஒரு ஞாயிறன்று தான்.. எப்போதும் எனக்கென்று ஏதும் வாங்கச் செல்வதென்றால் ஒரே துள்ளலாகிவிடும் மனம்… அது ஒரு பாதணி வாங்கினாலும் தான்.. ஆனா பாருங்க.. பூவு ரொம்ப சிக்கனம்.. செலவெல்லாம் அதிகம் செய்ய மாட்டேன்.. (நாம மத்தவங்களுக்கு தானே செலவு வைப்போம்..!! :D:D)

ஒரு நாள் துணிகள் வாங்க எங்கள் ஊரில் போடப்படும் கடைத் தெருவுக்குள் சென்றோம்.. இரு நாட்கள் மட்டுமே அவை இருக்குமென்பதால் அதிக கூட்டமாக இருக்கும்.. முண்டியடித்து ஒரு வழியாக உள்ளே சென்ற பொழுது.. வண்ண வண்ண சுடிதார்கள் கண்ணைப் பறித்தன.. சரி.. அப்பாவிடம் சொல்லி ஒரு சுடிதார் வாங்கிவிடலாமென ஐடியா மனதில் உதித்தது..

அப்பாவிடம் அடம் பிடிக்க .. அப்பாவும் சம்மதிக்க.. சரியென்று சுடிதார் துணிவகைகளைத் தேடிக் கொண்டிருந்தேன்..

அருகே ஒரு பெரிய பெண்மணி வந்து நின்று.. நான் தேர்வு செய்வதையே அவரும் எடுத்து.. இது போல என் பொண்ணு கேட்டா.. அது போல என் பொண்ணு கேட்டா என்று.. உரைத்துக் கொண்டிருந்தார்கள்..

நான் ஒரு 3 அல்லது 4 சுடிதார் தேர்வு செய்தபின்.. கடைசியில் அதில் இரண்டு அல்லது மூன்று எடுப்பது வழக்கம்.. அதே போல.. தேர்வு செய்தவற்றை கடைக்காரரிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொல்ல..

ஒரு நீல வண்ண சுடிதார் எனக்காக என்னிடம் கடைக்காரர் காட்டிக் கொண்டிருந்தார்.. நான் அதையும் எடுத்து வையுங்க.. நான் கடைசியில் முடிவெடுக்கிறேன் என்று சொல்ல..

கடைக்காரர் எடுத்து வைப்பதற்குள்.. அந்த பெண்மணி அந்த சுடிதாரை எடுத்து வைத்துக் கொண்டு.. “ஏம்மா.. எடுத்துட்டியா இதை.. செலக்ட் செய்திட்டியா..” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.. எத்தனை நேரம் தான் பூவு அதை சமாளிக்க..

“இல்லீங்க.. எடுத்து வைக்க சொல்லியிருக்கேன்.. கடைசியா செலக்ட் செய்வேன்” என்று சொல்ல.. அவர் விடாப்பிடியாக மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டே இருந்தார்..

கொஞ்சம் கோபமாக வந்தாலும்.. அடக்கிக் கொண்டு..
“உங்களுக்கு பிடிச்சா எடுத்துக்கோங்க.. எனக்கு பிரச்சனையில்லை” என்று நான் ஒரேயடியாக சொல்ல… அப்பெண்மணி வாயடைத்துப் போய்.. அதை எடுத்துக் கொண்டார்..

சரி அதோடு விட்டால் பரவாயில்லை.. அதுக்கப்புறம் செய்தாரே பார்க்கனும் ஒரு காமெடி..

நான் தேர்வு செய்து எடுத்து வையுங்க என்று சொன்ன சுடிதாரை எடுத்துஎன்னிடம் நீட்டி.. "என் பொண்ணும் இதே கலரில் கேட்டா.. சரி இதை இவுங்களேஎடுத்துக்கட்டும்.." அப்படின்னு சொல்லி என்னிடம் தந்தாங்க..

எனக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.. நான் எடுத்ததை இவுங்க எதுக்கு எனக்குதருவது போல் தரனும்னு...

அப்புறம் மெதுவாகப் புரிஞ்சது.. நான் எடுத்துக்கச்சொன்னதால் அவுங்களும் தாராள மனம்னு காட்ட சொல்லியிருக்காங்கன்னு....

கடைக்காரர் அந்த பெண்மணி சென்றவுடன்… “ஏங்க.. இருந்தது ஒரே பீஸ்.. நீங்க எடுத்துட்டேன்னு சொல்ல வேண்டியது தானே.. நான் உங்களுக்கு தானே காட்டினேன்.. அவுங்க வியாபாரம் செய்யறவங்க தான்..” அப்படின்னு சொன்னார்..

“இல்லீங்க அவுங்க ஆசையா கேட்டுட்டே இருந்தாங்க.. அதான்.. எடுத்துக்க சொல்லிட்டேன்” அப்படின்னு நான் சொன்னேன்..

என்ன தான் நான் விட்டுக் கொடுத்திருந்தாலும்.. ஒரு சின்ன பொண்ணிடம்.. நான் தேர்வு செய்வதாகப் பார்த்து அதையே தனக்கு வேண்டுமென்பது போல சண்டைக்கு வந்த அப்பெண்மணியையும்.. அந்த நீல நிற சுடிதார் மெட்டீரியலையும் அன்றிரவு முழுக்க மறக்க முடியவில்லை..:traurig001::traurig001:

இத்தனைக்கிடையிலும்…


பெரியவங்க மனசு இத்தனை சின்னப் புள்ளத்தனமா இருக்கேன்னு கொஞ்சம் சிரிப்பும் வந்தது…!!:icon_ush::icon_rollout:

இதுலிருந்து எனக்கு தெரிஞ்சது என்னன்னா… நமக்கு பிடிச்சதை உடனே தக்க வைச்சிக்கனும்.. இல்லாட்டி நம் கண்முன்னே.. நாளை அது வேறொருவருடையதாகிடும்…:icon_rollout:

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
10-07-2008, 07:05 AM
இதெல்லாம் ரொம்ப பரவாயில்லக்கா. எப்பவாச்சம் ஹோட்டல்ல போய் ஒரு உணவை ஆர்டர் பண்ணிட்டு உக்காந்தாக்கா பக்கத்துல ஒருத்தன் ருசிச்சு ரசிச்சு சாப்டுற சாப்பாட பாத்துட்டு தப்பு பண்ணிட்டோமே பேசாம இதயே நாமலும் ஆர்டர் பண்ணியிருக்கலாம்னு தோணும் பாருங்க.

என்னதான் பொண்டாட்டிகளுக்கு 20000 ரூபாய் மதிப்பு புடவைய எடுத்துத்தந்தாலும் பக்கத்து வீட்டு பரிமளம் புடவை மாதிரி இல்லன்னு சொல்லாத பொண்ணுங்க இல்லம்மா. (பொண்டாட்டிகள்னு போட்டதால தப்பா கிப்பா நெனச்சுடாதீங்க மக்களே. உங்க எல்லாத்துக்கும் சேத்துதான் வக்காலத்து வாங்கி இருக்கேன்.)

சிவா.ஜி
10-07-2008, 07:12 AM
இப்படியும் சிலபேர். இன்னும் சிலர் எதை எடுப்பது எனத் தெரியாமல் நாம் செலெக்ட் செய்யும்போது அருகிலேயே இருந்து உற்றுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நம்முடைய செலெக்ஷனைப் பார்த்ததும் அவர்களுக்கு ஐடியா கிடைக்கும். ஆனால் நமக்குத்தான் சங்கடமாக இருக்கும்.

ஆனால் இந்தப் பெண்மணி செய்தது கொஞ்சம் ஓவர்தான். ஏதோ தானே விட்டுக் கொடுப்பதைப் போல பந்தா காண்பித்திருக்கிறார்.
என்ன செய்யறது பூ...சில நேரங்களில் சில மனிதர்கள்.

பூமகள்
10-07-2008, 07:14 AM
நன்றிகள் ஜூனைத் அண்ணா..!!

என்ன செய்யறது பூ...சில நேரங்களில் சில மனிதர்கள்.எனக்கும் அதே தான் தோன்றியது சிவா அண்ணா..!!
ஹூம்.. இப்படியும் சில பேர்..!:frown:

பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள் சிவா அண்ணா..! :)

அறிஞர்
10-07-2008, 03:44 PM
பல நேரங்களில்...
பெரியவர்கள் சிறுபிள்ளை தனம் காட்டுவது வேடிக்கை தான்.
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிறிய மனிதன் இருப்பது இயற்கை தான்....
ஆனால் அடம்பிடிப்பது... கோபம் கொள்வது தவறு...

பூமகள்
10-07-2008, 03:49 PM
ரொம்ப சரியா சொன்னீங்க அறிஞர் அண்ணா..!
கொஞ்சம் அடம் பிடிப்பது ஓவராகிப் போனதால் தான் இந்த பதிவு எழுத வேண்டியதாகிவிட்டது..

உங்க பின்னூட்டத்துக்கு நன்றிகள் அண்ணா..!!:)

mukilan
10-07-2008, 04:05 PM
நான் என்ன நினைத்தேன் தெரியுமா? இது கடைக்காரரின் உள்குத்து என்று. சில நேரங்களில் கடைக்காரர்கள் இது போன்றோரை பணியமர்த்தியிருப்பர். அவர்களும் இது அருமை, எனக்கும் வேண்டும் என்றோ அடடா இது எத்தனையோ ரூபாய் தகும் குறைந்த விலைக்கு கொடுக்கிறார்களே என்றொ சம்மன் இல்லாமல் ஆஜராவார்கள். பரவாயில்லை எப்படியோ அதை வாங்காமல் வந்தது நல்லதுதான். உண்மையிலேயே அந்த நீலச் சுடிதார் வெளுத்துப் போயிருந்தால்...:smilie_abcfra::icon_p:

எனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் அது எனக்குப் பொறுத்தமில்லை என்று மனதை தேற்றிக் கொள்வேன்.

புதுவை அரவிந்த அன்னை சொல்லியது:
இறைவன் எப்பொழுதும் நீ கேட்பவையெல்லாம் வழங்குவதில்லை! ஆனால் எப்படியும் உனக்கு எது பொருத்தமானதோ அதையே வழங்குவார்.

தங்கவேல்
11-07-2008, 02:46 AM
பூ, இப்படியெல்லாம் வேற அரசியல் இருக்குமா துணிக்கடையில் ?

aren
11-07-2008, 03:02 AM
மனசுக்குள்ளே ஒரு சின்ன சந்தோஷம், நம்ம பூவையும் ஒரு பெண் வந்து கலாய்ச்சியிருக்காங்களே என்று நினைக்கும்பொழுது.

இருந்தாலும் நம்ம பூவாச்சே விட்டு கொடுக்கமுடியுமா. ஆமாம் பூ அந்தப் பெண் செய்தது சரியில்லை, சுத்த மோசம், நீங்கள் விட்டு கொடுத்திருக்கக்கூடாது. ஒரு பிடி பிடிச்சிருக்கனும்.

பரவாயில்லை, அடுத்த சான்ஸ் கிடைக்கும்.

பூமகள்
11-07-2008, 05:17 AM
அவர்களும் இது அருமை, எனக்கும் வேண்டும் என்றோ அடடா இது எத்தனையோ ரூபாய் தகும் குறைந்த விலைக்கு கொடுக்கிறார்களே என்றொ சம்மன் இல்லாமல் ஆஜராவார்கள்.
எனக்கும் அந்த குழப்பம் இருந்தது அண்ணா...!:confused::icon_ush:
அதனால் தான் அதிகம் நான் அடம் பிடிக்காமல் பிடிச்சிருந்தா எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டேன்...!!:p:rolleyes:
அவுங்க ப்ளேன் எதுவாகினும் அப்போ பிரச்சனை இல்லையே..!!:icon_b::icon_b:

பரவாயில்லை எப்படியோ அதை வாங்காமல் வந்தது நல்லதுதான். உண்மையிலேயே அந்த நீலச் சுடிதார் வெளுத்துப் போயிருந்தால்...:smilie_abcfra::icon_p:அதை ஏன் அண்ணா கேக்குறீங்க.... நீலச் சுடிதார் எடுக்காத சோகத்தில்.. மூன்று சுடிதார் எடுத்துவிட்டேன்..!!:cool::rolleyes:
சுடிதார் வாங்கற ஐடியாவிலேயே போகாமல்... மூன்று சுடிதார் வாங்கிட்டு வந்து அம்மாட்ட திட்டு வாங்கியதெல்லாம் வேற கதை...!!:icon_ush::fragend005::traurig001::traurig001:

புதுவை அரவிந்த அன்னை சொல்லியது:
இறைவன் எப்பொழுதும் நீ கேட்பவையெல்லாம் வழங்குவதில்லை! ஆனால் எப்படியும் உனக்கு எது பொருத்தமானதோ அதையே வழங்குவார்.ரொம்ப நல்ல கருத்து முகில்ஸ் அண்ணா..!!
அப்படி சொல்லி மனசை தேத்திக்கிறேன்..!!:icon_rollout:

பூமகள்
11-07-2008, 05:21 AM
பூ, இப்படியெல்லாம் வேற அரசியல் இருக்குமா துணிக்கடையில் ?
எனக்கு எதுவுமே தெரியாதுங்களே தங்கவேல் அண்ணா...:icon_rollout::traurig001:
நிஜமா இப்படியுமா நடக்குங்க??!!:confused::icon_ush:

மனசுக்குள்ளே ஒரு சின்ன சந்தோஷம், நம்ம பூவையும் ஒரு பெண் வந்து கலாய்ச்சியிருக்காங்களே என்று நினைக்கும்பொழுது.
இருந்தாலும் நம்ம பூவாச்சே விட்டு கொடுக்கமுடியுமா. ஆமாம் பூ அந்தப் பெண் செய்தது சரியில்லை, சுத்த மோசம், நீங்கள் விட்டு கொடுத்திருக்கக்கூடாது. ஒரு பிடி பிடிச்சிருக்கனும்.
பரவாயில்லை, அடுத்த சான்ஸ் கிடைக்கும்.
வாங்க வாங்க ..:sprachlos020::eek::eek:
அரென் அண்ணா...
இப்படியும் சொல்றீங்க.. அப்படியும் சொல்றீங்க..!!:confused::icon_ush:
உங்களை எப்படி நம்பி பதில் எழுதறது??!!:icon_rollout:

நீங்க பூவு பக்கம் தானே??!! :icon_ush::wuerg019:

mukilan
11-07-2008, 12:19 PM
நன்றி பூ நான் பொருத்தத்திற்குப் பொருத்தமே இல்லாம பொறுத்தம்னு பொறுப்பு கெட்டத்தனமால்ல போட்டிருக்கேன்!

பூமகள்
11-07-2008, 12:39 PM
பொருந்தாட்டியும் நாங்க பொறுப்பாக பொறுத்து பொருந்த வைச்சிட்டோம்ல முகில்ஸ் அண்ணா...!! ;)

இளசு
11-07-2008, 12:44 PM
அடுத்தவர் தேர்ந்தெடுத்த உடை,
அடுத்தவர் வரச்சொன்ன உணவு

பாமகளும், ஜூனைத்தும் சொன்ன இவை - உலகப்பொது ஆசை ஊக்கிகள்..

கவனிக்கப்படும் எதற்கும் மதிப்பு கூடும் -
காதலிக்கப்படும் நபருக்குக் கூடுவது போல!


பாராட்டுகள் பூ!

விகடன்
11-07-2008, 09:52 PM
எனக்கெல்லாம் உங்களைப்போல அனுபவம் ஒருகாலமும் வந்ததே கிடையாது. கடைக்கு போனால் எல்லாவற்றிலும் நோட்டம் விடுவேன். பிடித்திருப்பதை எடுத்துக்கொண்டு சென்று உடனேயே பரிசல் பண்ணீடுவேன். ஆனால் ஒரு வித்தியாசம். இதுவரை சுடிதார் போன்ற உடைகள் எடுக்கவில்லை. அந்தப்பக்கம் போனதுமில்லை. அப்படி போயிருந்தால் தாங்கள் சொன்ன அனுபவமும் கிடைத்திருக்குமோ என்னவோ???? :D

தாங்கள் சொல்ல வந்த விடயம் உண்மைதான். ஒருவர் வளர வளர அவரின் குணங்கள் பக்குவமடைந்து ஒரு கட்டத்தின் பின்னர் அது தேயத்தொடங்கிவிடுவதுண்டு. காலட்துடன் அவர்கள் மீண்டும் குழந்தைத்தனமாக நடக்கத் தொடங்கிடுவர். போட்டி, அடம்பிடிக்கும் குணம், அழுகைக்கு பதிலாக புறணி என்று வந்திடும்.

இப்போ நாம குருத்தோலையாக இருக்கிறோம். அதனால் இப்படி தெரிகிறதோ ...

பூமகள்
12-07-2008, 06:24 AM
கவனிக்கப்படும் எதற்கும் மதிப்பு கூடும் -
காதலிக்கப்படும் நபருக்குக் கூடுவது போல!
சத்தியமான வாக்குகள் பெரியண்ணா..!

ஒருவரும் பார்க்காவிடினும் உலகமே பார்ப்பது போன்ற தோற்றத்தை காதல் ஏற்படுத்துமென வைரமுத்து சொல்லியிருப்பார் ஒரு பாடலில்...

கவனிக்கப்படும் போது தான்.. எதுவும்
அதிக முக்கியத்துவமாகிறது.. மதிப்பு கூடுகிறது..!!

நன்றிகள் பெரியண்ணா. :)

இப்போ நாம குருத்தோலையாக இருக்கிறோம். அதனால் இப்படி தெரிகிறதோ ...
அதே தான் விராடன் அண்ணா..!!
கொஞ்சம் கொஞ்சமா பெரியவங்க மனநிலை புரிய ஆரம்பிச்சிருக்கு.. இன்னும் பக்குவமாகாத குருத்தோலையாகத்தான் இருக்கிறேன் போல இருக்கு..!! :icon_rollout::icon_ush:

மிக்க நன்றிகள் விராடன் அண்ணா. :)

அன்புரசிகன்
12-07-2008, 01:45 PM
வீட்டுக்கு வீடு வாசல் படி.... பூவும் வளர்ந்து பெரிய பாட்டியானதுக்கப்புறம் தன் பேர்த்திக்கு இது நல்லாயிருக்கும் என்று மலரோட பேர்த்திக்கு சொல்லமாட்டார் என்று என்ன உத்தரவாதம்??? :D

அந்த சம்பாசணை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன்.... சிரிப்பை அடக்க முடியல....