PDA

View Full Version : 20/20யால் செல்வாக்கிழக்கும் 50/50யை காப்பாற்ற ICC முடிவு.



ராஜா
10-07-2008, 04:53 AM
20-20 எதிரொலி: ஒரு நாள் போட்டி பார்முலாவை மாற்றும் ஐசிசி

டெல்லி: டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டிருப்பதால், 50 ஓவர் ஒரு நாள் போட்டிகளுக்கு மவுசு குறைந்து போய் விடாமல் தடுக்கும் வகையில், அதில் அதிரடி மாற்றங்களை செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது.

ஒரு காலத்தில் டெஸ்ட் போட்டிகள் கோலோச்சின. பின்னர் 60 ஓவர் ஒரு நாள் போட்டிகள் வந்தன. அதை பின்னர் டிரிம் செய்து தலா 50 ஓவர்களைக் கொண்டதாக அவை மாறின. தற்போது 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் வந்து விட்டன.

20-20 ஓவர் போட்டிகளால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் செல்வாக்கிழந்து போய் விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து ஒரு நாள் போட்டிகளில் பல மாற்றங்ளைக் கொண்டு வந்து அவற்றை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்ற ஐசிசி தீர்மானித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளை இரண்டு இன்னிங்ஸ் கொண்டதாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன என்று ஐசிசியின் பொது மேலாளர் டேவ் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளை 40 ஓவர் கொண்டதாக குறைப்பது அல்லது 20 ஓவர்களை கொண்ட இரண்டு இன்னிங்ஸ் போட்டிகளாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனவாம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி ஆகிய 3 வடிவங்களையுமே பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், ஒருநாள் போட்டிகள் 60 ஓவர் போட்டிகளாக அறிமுகமாகி பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்துள்ளதால் மேலும் சில மாற்றங்களை செய்யலாம் என்று தெரிவித்தார்.

Source: Oneindia

aren
10-07-2008, 06:21 AM
எப்படியோ பணம் வசூல் செய்பவர்கள் அனைவரும் நன்றாக பணம் வசூல் செய்தால் சந்தோஷமே!!!

கொள்ளயடிப்பதற்கு ஒரு அளவுகோல் என்பதே இல்லாமல் போய்விட்டது.

தீபா
10-07-2008, 11:36 AM
என்னதான் சொல்லுங்க. 50 ஓவர் மேட்சுல அழகா ஆடற விதமே தனிதாங்க... அதிலதாங்க எல்லா சாதனையுமே செஞ்சாங்அ.... ஆனா நாளைக்கு என்ன நடக்கும்னு சொல்லமுடியாது. டெஸ்ட் அழியக்கூடாது... 50 ஓவரும் நிக்கணும்... ஆனா பின் வரும் காலத்தில 20/20 மிக மிக முக்கியமா இருக்கும்...

aren
10-07-2008, 01:37 PM
20/20 போட்டியால் நிச்சயம் ஒரு நாள் போட்டிகள் குறைந்துவிடும். மூன்று மணிநேரம் ஆடினாலே ஒரு நாள் ஆடும் சம்பளத்தைவிட அதிகமாக இப்பொழுது சம்பாதிக்கமுடியுமே.

போகிற போக்கைப் பார்த்தால் நம் மக்கள் கிரிக்கெட்டை டிவியில் பார்ப்பதையே நிறுத்திவிடப்போகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஷீ-நிசி
10-07-2008, 02:36 PM
20/20 காலத்திற்கேற்ற மாற்றங்கள்.. அதுதான் எதிர்காலத்தில் வலம் வரும.. இதை தடுக்கமுடியாது.

அறிஞர்
10-07-2008, 03:28 PM
பணம், சூதாட்டத்திற்கு கிரிக்கெட் என நிலை உள்ளது.

இதில் பணம் எப்படி பார்க்க இயலுமோ அப்படி மாற்றியமைக்க வேண்டியது தான்.

உதயசூரியன்
13-07-2008, 09:48 AM
பணம், சூதாட்டத்திற்கு கிரிக்கெட் என நிலை உள்ளது.

இதில் பணம் எப்படி பார்க்க இயலுமோ அப்படி மாற்றியமைக்க வேண்டியது தான்.

அறிஞர் சொல்வதை ஆமோதிக்கிறேன்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்