PDA

View Full Version : இயல்பு



நாகரா
10-07-2008, 03:21 AM
காலியான கோப்பையுள்
நிரம்பி வழிகிறது
அமுதக் காற்று

அமுதக் காற்றில்
இழைந்தாடுகிறது
ஈரமான நெருப்பு

ஈரமான நெருப்புள்
இணைந்தோடுகிறது
கதகதப்பான நீர்

கதகதப்பான நீரில்
களிப்பில் மிதக்கிறது
திடமான மெய்

திடமான மெய்யுள்
கனத்திருக்கிறது
உயிரெனும் வழி

உயிரெனும் வழியேந்திச்
சும்மா இருக்கிறது
காலியான கோப்பை

ஓவியன்
12-07-2008, 05:46 AM
தொடங்கும் இடத்திலேயே முடிகிறது...

புரிவதற்குக் கொஞ்சம் கடினம்,
கடினத்தைக் கரைத்து
புரிய வைத்த வரிகளுக்கு
நன்றியும் வாழ்த்துக்களும் அண்ணா....

இளசு
12-07-2008, 07:54 AM
தொடங்கும் இடத்திலேயே முடிகிறது...



உண்மைதான் ஓவி!

இறைவன் என்றொரு கவிஞன் - அவன்
படைத்த கவிதை மனிதன்!
அதில் அறிஞனும் மூடனும் உண்டு - ஆனால்
தொடக்கமும் முடிவும் ஒன்று!

ஏன்? - படத்தில் கவியரசர் வரிகள் இவை!

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=256754#post256754



------------------------------

ஆதியந்தம் ஒன்றான வாழ்க்கை வட்டம்!
பாராட்டுகள் நாகரா அவர்களே!

ஓவியன்
12-07-2008, 09:42 AM
ஆனால்
தொடக்கமும் முடிவும் ஒன்று![/COLOR]

நிதர்சன வரிகள் அண்ணா,

ஆனால்
சிலர் தெரியாதிருக்கின்றனர்
பலர் தெரிந்தும் தெரியாதது போல்
நடிக்கின்றனர் - அவ்வளவுதான் வித்தியாசம்.

நாகரா
12-07-2008, 10:54 AM
உற்சாகமூட்டும் உம் பின்னூட்டங்களுக்கு நன்றி ஓவியன், இளசு.