PDA

View Full Version : உயர்வானவளே...!



யாழ்_அகத்தியன்
10-07-2008, 01:07 AM
என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்

*

என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ

உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்

*

கவிதை என்று
யார் கேட்டாலும்

உன் பெயர்
சொல்வேன்

உன் பெயர்
என்னவென்று
எவர் கேட்டாலும்

நான் எழுதாத
காவியம்
என்பேன்

*

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்

நான்
கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்

*

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்

எழுதிக்
கொண்டேயிருந்தேன்

உன்னை விட
எழுத நினைத்தேன்

எழுதுவதையே
மறந்துவிட்டேன்



-யாழ்_அகத்தியன்

அகத்தியன்
10-07-2008, 07:54 AM
என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ

உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்





-யாழ்_அகத்தியன்

அருமையான வரிகள்.

வாழ்த்துக்கள் நண்பரே.

இளசு
16-07-2008, 05:58 PM
மொத்த(முத்தக்)க்கடனையும் தீர்க்க
மொத்தமாய் தன்னையே தருவாள்..

காதல் கவிதை - சுகமானது..

பாராட்டுகள் யாழ் அகத்தியன் அவர்களே!

மதுரை மைந்தன்
16-07-2008, 08:18 PM
யாழ்_அகத்தியன் நண்பரே

உங்களது காதல் கவிதையை ரசித்தேன். காதல் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

யாழ்_அகத்தியன்
29-07-2008, 09:08 PM
வாழ்த்துக்கள் கூறிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

அறிஞர்
29-07-2008, 11:24 PM
ரசித்து.. எழுதப்பட்ட வரிகள்.....
அருமை யாழ்_அகத்தியன்..

muthuvel
24-12-2009, 07:10 AM
என் கண்களே
எனக்குப் பிடித்த
ஒளிப்பதிவுக் கருவி

காரணம்
அதற்கு உன்னை
மட்டுமே
பிடிக்கத் தெரியும்

*

என் பல
முத்தங்களுக்கு
சில முத்தங்களையே
திருப்பித்
தந்திருக்கிறாய் நீ

உன்னை என்னிடம்
இழப்பதற்காகவா
முத்தக் கடனில்
மூழ்கிக் கொண்டிருக்கிறாய்

*

கவிதை என்று
யார் கேட்டாலும்

உன் பெயர்
சொல்வேன்

உன் பெயர்
என்னவென்று
எவர் கேட்டாலும்

நான் எழுதாத
காவியம்
என்பேன்

*

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்

நான்
கவிஞனானது
உன்னை அழைத்து
அழைத்துத்தான்

*

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்

எழுதிக்
கொண்டேயிருந்தேன்

உன்னை விட
எழுத நினைத்தேன்

எழுதுவதையே
மறந்துவிட்டேன்



-யாழ்_அகத்தியன்

அண்ணே கலக்கல் எனக்கும் கொஞ்சம் சொல்லிகொடுங்க

யாழ்_அகத்தியன்
31-12-2009, 06:36 PM
வாழ்த்துக்கள் கூறிய அத்தனை உறவுகளுக்கும் மிக்க நன்றி

செல்வா
05-01-2010, 09:54 AM
அகத்தியன்
அகத் தவம் கலைத்து
எழுதவைத்தது யாராயினும் நம் போற்றுதலுக்குரியவர்...
ஒரு அழகிய கவிதை கிடைக்கக் காரணரானதால் :)
வாழ்த்துக்கள் கவிஞரே.