PDA

View Full Version : என் உயிர் நாடியும்....



சூறாவளி
09-07-2008, 06:22 PM
எனக்கு வாழ்க்கையே
அஸ்தமனமாகியது போல்
தோன்றியது..
ஆனால்...
அது
உதயத்திற்கு
சற்று முன்னுள்ள
விடியலின் நிசப்தம்
என்பது
இன்றுதான்
உணர்ந்து கொண்டேன்....

என் நேசத்திற்குரியவளே !
என் கன்னங்களை
இதமாய் வருடும்
இந்த நேசக்கரங்களோடு
எங்கிருந்தாய் ?..

உன்
படபடக்கும்
பஞ்சுக் கரங்களை
என் கரங்களால்
அணைக்கும் போதே
இந்த
நெஞ்சமும் விம்முகிறதே !

உன்
மைவிழி போன்ற
கண்களுக்குள்
என்னையும்
என் "உயிரையும்"
எப்படி
அடைத்து வைத்தாய்?

என் உயிரே
உலர்ந்து விட்டது
எனும் வேளையில்,
என்
உயிரையும்
உயிரோவியமாய்
தீட்டியவளே !

என் சங்கு கழுத்தில்
உன்
மென் இதழ்கள்
பதியும் தருணத்தில்
என் உடல்முழுவதும்
நனையாமலயே
சிலிர்கின்றதே
இந்த ஒரு
நொடிக்காகத்தான்
என் உயிர் நாடியும்
இவ்வளவு நாளும்
துடித்ததோ!!!...

இளசு
15-07-2008, 09:41 PM
நம்பிக்கைவெளியின் முடிவில்
ஓர் ஒளிக்கீற்று..

இனியெல்லாம் சுகமே!

பாராட்டுகள் சூறாவளி அவர்களே!

ஓவியன்
16-07-2008, 01:41 AM
ஒன்றாக ஒரே உலகத்திலிருந்தாலும்
இந்தனை காலம்
பொறுத்திருக்க வேண்டி இருந்ததே....

பாராட்டுக்கள் சூறாவளி, உங்கள் சூறாவளிப் படைப்புக்கள் தொடரட்டும்..!! :)

அனுராகவன்
28-09-2010, 07:05 PM
பாராட்டுக்கள் சூறாவளி!!அருமையான வரிகள்...

சூறாவளி
28-09-2010, 07:13 PM
பாராட்டுக்கள் சூறாவளி!!அருமையான வரிகள்...


பழைய என் பதிவேடுகளை புதுபித்து கொண்டு வந்து நினைவலைகளை மீண்டும் மனதில் சாஞ்சாட வைத்து விட்டிர்கள்..

நன்றிகள்..

இக்கவி வரிகளை எழுதும் போது மனம் காதல் என்ற நீரோடையில் முழ்கி நீச்சலடித்து கொண்டிருந்தது... ஆனால் இப்போது நீச்சல் மட்டும் அடிக்கின்றேன்.. நீரோடையைதான் காணவில்லை...

அனுராகவன்
28-09-2010, 07:15 PM
இப்போது நீச்சல் மட்டும் அடிக்கின்றேன்.. நீரோடையைதான் காணவில்லை...

நிச்சயம் நீங்களும் நீந்தி வருவீர்கள்.. தொடர்ந்து பலரது கவிகள்,பிற ஆக்கங்களை கண்டு மகிழுங்கள்..