PDA

View Full Version : எனது கவிதைகள்



மதுரை மைந்தன்
09-07-2008, 05:48 PM
கண்களே என் இனியவளை
காணச் செய்ததற்கு நன்றி

காதுகளே அவளின் கிளிப்பேச்சை
கேட்க வைத்தற்கு நன்றி

கால்களே என்னை அவளிடம்
அழைத்துச் சென்றதற்கு நன்றி

கைகளே அவளுக்கு மலர் செண்டு
கொடுத்தற்கு நன்றி

அறிவே உனக்கு மட்டும் என்
நன்றி கிடையாது
ஏனென்றால் நீ அடிக்கடி
'பெண்களை நம்பாதே' என்று
தொல்லை கொடுப்பதால்

_______________________________________


வெற்றியை இலக்காகக் கொண்டு
ஓடுபவர் பலர்

வெற்றி வாகை சூடப்
பிறந்தவர் சிலர்

வெற்றிக் கனியை
தட்டிப் பறிப்பவர் சிலர்

எனது வெற்றியோ
நீ சிந்தும் புன்னகையே

______________________________________

தினமும் காலையில் ஒளி வெள்ளமாய்
உதிக்கும் ஆதவனைப் போல் உதித்த
எனது கவிதை எங்கே ?

குளிர் நாட்டில் ஆதவனை மறைத்த
கார் மேகங்களில் மறைந்து விட்டதா?

பீறிட்டு வெளி வரும் ஊற்றுக்கண் போல்
வெளிவந்த எனது கவிதை எங்கே ?

இங்கு உள்ள வெந்நீர் ஊற்றுக்களின்
வெப்பத்தில் மடிந்து விட்டதா?

கவிதையை எழுதி ஒரு குழந்தயைப்
பெற்ற தாய் போல் மகிழ்ந்தேனே
எங்கே எனது கவிதை?

குழந்தை காணாமல் போய் விட்டது
எனது கவிதை நின்று விட்டது

______________________________________

எங்கிருந்தோ வந்தாய்
என்னைக் கவர்ந்தாய்
என் உளம் புகுந்தாய்
எங்கேயோ மறைந்தாய்
என்னைத் தவிக்கவிட்டு

நீ சொர்க்கத்தில் இருப்பதாக
கூறுகிறார்கள்
நீ இல்லாமல் நரகத்தில்
வாடும் என்னை
எப்போது அழைக்கப் போகிறாய்?

வீரனாக இருந்திருந்தால்
உடன்கட்டை ஏறியிருப்பேன்
உன்னுடன்
கோழையாகப் போனதனால்
வெறும் கட்டையாக வாழ்கிறேன்
_________________________________________________
உன்னைத் தொட்ட தென்றல்
என்னைத் தொடவில்லை

உன்னைத் தீண்டிய கடலலைகள்
என்னைத் தீண்டவில்லை

உன்னை வருடிய இளங் காற்று
என்னை வருடவில்லை

உன் நினைவில் நான்
விண் வெளியில் மிதப்பதால்
------------------------------------------------------------------------
எப்படி உன்னை வருணிப்பேன்?

உன்னை தங்கச் சிலை என்றால்
அயல் நாட்டிற்கு கடத்திவிடுவார்களோ?

உன்னை அலங்காரத் தேர் என்றால்
யாராவது இழுத்துச் சென்றுவிடுவார்களோ?

உன்னை முல்லைக் கொடி என்றால்
உனக்கு வேலி இட்டு விடுவார்களோ?

உன்னை புள்ளி மான் எனறால்
உன்னை வேட்டையாடி விடுவார்களோ?

உன்னை மோனாலிசா என்றால்
சித்திரமாய் தொங்கவிடுவார்களோ?

-------------------------------------------------------------------------
உன் நினைவே ஒரு சங்கீதம்
இன்று அந்த சங்கீதத்தில்
ஏன் இத்தனை அபசுரம்?

உன் நினைவே ஒரு கவிதை
இன்று அந்த கவிதையில்
ஏன் இத்தனை பிழைகள்?

உன் நினைவே ஒரு நாடகம்
இன்று அந்த நாடகத்தில்
திரை போடப்பட்டது ஏன்?

உன் நினைவே ஒரு காவியம்
இன்று அந்த காவியம்
சோகக் காவியம் ஆனது ஏன்?

-----------------------------------------------------------------------
என்னை பிரிய மாட்டேன் எனறு
நீ விட்ட கண்ணீர் துளிகள்

நீ என்னை விட்டு பிரிந்ததால்
நான் விடும் கண்ணீர் துளிகள்

ஆனந்த கடலில் சங்கமிக்கும்
நாம் இருவரும் இணைந்தால்

----------------------------------------------------------------------
குழியில் விழுந்துவிட்டேன்
நீ சிரிக்கும்போது உன்
கன்னத்தில் விழும் குழியில்

விழியில் விழுந்து விட்டேன்
கவிதைகள் பல சொல்லும்
அழகான உன் விழியில்

பழியில் விழுந்து விட்டேன்
உன் வாழ்க்கையை கெடுத்ததாக
என் மீது நீ போட்ட பழியில்

arun
09-07-2008, 05:54 PM
சில கவிதைகள் எங்கோ படித்ததாக நினைவு கவிதைகள் அருமை பாராட்டுக்கள்

சூறாவளி
09-07-2008, 06:42 PM
அறிவே உனக்கு மட்டும் என்
நன்றி கிடையாது
ஏனென்றால் நீ அடிக்கடி
'பெண்களை நம்பாதே' என்று
தொல்லை கொடுப்பதால்

_______________________________________

பழியில் விழுந்து விட்டேன்
உன் வாழ்க்கையை கெடுத்ததாக
என் மீது நீ போட்ட பழியில்

இதுக்குதான் அறிவுறை சொன்னா யாரு கேட்கவே மாட்டாங்க... (சும்மா தமாசுக்குதான்..)

ம்ம்ம்... அபாரம்... ஒரு முழு காதல் கதையை கவிதை வரியில் சொல்லிபுட்டிங்க... வாழ்த்துக்கள்... மதுரை வீரன் அவர்களே...

மதுரை மைந்தன்
10-07-2008, 11:41 AM
சில கவிதைகள் எங்கோ படித்ததாக நினைவு கவிதைகள் அருமை பாராட்டுக்கள்


படித்திருக்கக் கூடும். ஸ்வரங்கள் என்ற இணைய தளத்தில் நான் சிலவற்றைப் பதிபபித்திருக்கிறேன.. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
10-07-2008, 11:43 AM
இதுக்குதான் அறிவுறை சொன்னா யாரு கேட்கவே மாட்டாங்க... (சும்மா தமாசுக்குதான்..)

ம்ம்ம்... அபாரம்... ஒரு முழு காதல் கதையை கவிதை வரியில் சொல்லிபுட்டிங்க... வாழ்த்துக்கள்... மதுரை வீரன் அவர்களே...

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே