PDA

View Full Version : மனித வாழ்க்கையை மாற்றி அமைக்க வல்ல விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள்-1மதுரை மைந்தன்
09-07-2008, 02:58 AM
1. தண்மையில் இணக்கத்தால் விளையும் சக்தி (Cold Fusion):

1989 ம் ஆண்டு மார்சு மாதம் 23ம் தேதி அமெரிக்காவில் Stanley Pons மற்றும் Martin Fleischmann என்ற இரண்டு விஞ்ஞானிகள் இத்தகைய சக்தியைப்பற்றிய தங்களது கண்டுபிடுப்பை வெளியிட்டனர்.

இணக்கத்தால் வெளியாகும் சக்தி என்ன என்று பார்ப்போம். தற்சமயம் அணு உலைகளில் எடை கூடிய யுரேனியம்-235 அணுக்களை பிளப்பதால் நமக்கு அணு சக்தியும் அதன் மூலம் மின் சக்தியும் கிடைக்கின்றன. ஆனால் அணுக்களை பிளப்பதால் வெளியாகும் சக்தி வாய்ந்த கதிர் வீச்சுக்கள் சுற்று வட்டாரங்களை மாசு படுத்தக்கூடியவை. மேலும் பிளவு பட்டபின் கழிவுப் பொருட்களாக மாறும் அணு உலையின் எரி பொருட்களை பாதுகாப்பது கடினமானது. ஏனெனில் இந்த கழிவுப் பொருட்களின் கதிரியக்கம் பல வருடங்களுக்கு நீடிக்கும் தன்மை வாய்ந்தது. மேலும் யுரேனியம் தாதுப் பொருளை தோண்டும் சுரங்கங்களில் அவற்றின் அளவு குறைந்து வருகிறது.

அணுக்களைப் பிளக்காமல் அவற்றை இணைக்கும் போதும் சக்தி வெளியாகின்றது. ஆனால் இத்தகைய இணைப்பிற்கு எடையில் மிகக் குறைந்த ஹைட்ரஜன் போன்ற அணுக்கள் உகந்தவை. சூரியனிலிருந்து வெளியாகும் சக்தி இவ்வாறே வெளியாகிறது. ஆகவே இத்தகைய இணைப்பு சக்தி வெளியாக சூரியனில் உள்ள வெப்ப நிலை (6000 டிகிரி) தேவைப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு எனற இடத்தில் கிட்டத் தட்ட நான்கு மாடி உயரத்திற்கு உள்ள ஒரு கட்டிடத்தில் அமைந்துள்ள பரிசோதனை கூடத்தில் the Joint European Torus (JET) என்ற பரிசோதனை இத்தகைய சக்தியை ஆராய்ந்து வருகிறது.

இந்த அணு உலையில் டிடூரியம் வாயுவை 7 மில்லியன் ஆம்பியர் மின் சக்தியைக் கொண்டு 300 மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பமாக்கப் படுகிறது. இந்த வெப்பம் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்பத்தைப் போல் பத்து மடங்கு அதிகமாகும். இத்தகைய வெப்பத்தில் அணுத் துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இணையும் போது வெளிப்படும் சக்தி அளவிடமுடியாதது. 1997 ம் வருடம் ஒரு சில வினாடிகளுக்கு JET அணு உலை சக்தியை வெளி விட்டது. இதுவரை இந்த ஆராய்ச்சியில் இதுவே ஒரு சாதனையாகும். இத்தகைய சக்தியைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதனைப் பார்க்கும்போது தண்மையில் இணக்கத்தால் விளையும் சக்தி வெளிப்பட அதிகமான வெப்பம் தேவையில்லை என்பது ஒரு பெரும் அனுகூலமாகும். இத்தகைய சக்தி சாதாரண அறையில் உள்ள வெப்பத்திலேயே உற்பத்தி ஆகும் என்பதால் ஒவ்வொரு வீடுகளிலும் இந்த சக்தி வெறும் தண்ணீரைக் கொண்டு உற்பத்தி செய்யப் படலாம். மோட்டார் வாகனங்கள் கூட இத்தகைய சக்தியைக் கொண்டு இயங்கலாம். பெரும் மின் உற்பத்திச் சாலைகள் அவற்றிலிருந்து மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள் இவைகளுக்கு தேவை இருக்காது. பெட்ரோல் போன்ற எரி பொருள்களின் உபயோகம் குறைந்து உலகத்தை அச்சுறுத்தி வரும் உலக வெப்பமேற்றுதல் (Global Warming) இருந்து விமோசனம் கிடைக்கும். இத்தகைய சக்தியின் உற்பத்தி மூலம் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தக் கூடிய கதிர் வீச்சு அபாயமும் இல்லை.

ஆனால் இத்தகைய அரிய கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்த விஞ்ஞானிகளையும் மற்ற விஞ்ஞானிகள் இகழ்ந்து குறை கூறியதால் அவர்கள் தலை மறைவாகச் செல்ல நேரிட்டது. தண்மையில் இணக்கத்தால் விளையும் சக்தி ஒரு ஏமாற்று வேலை என்று பலரும் நம்பத் தொடங்கினர். இந்த நிலை மாறி தற்சமயம் குறைந்தது எட்டு நாடுகளில் பல கோடிக கணக்கான டாலர் பொருட் செலவில் இந்த சக்தியைப் பற்றி ஆராய்ச்சி மேற் கொண்டு வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன் இந்த சக்தியைப் பற்றிய ஆராய்ச்சியில் பிரான்சு நாட்டில் மறைவான ஒரு இடத்தில் நடைபெற்று வருவதை ஒரு ஒளிப் படம் ( video by a Canadian TV channel) மூலம் அறிந்தேன். வருங்காலத்தில் இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்று மனித வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்.

சாலைஜெயராமன்
09-07-2008, 03:15 AM
1. தண்மையில் இணக்கத்தால் விளையும் சக்தி (Cold Fusion):

இந்த அணு உலையில் டிடூரியம் வாயுவை 7 மில்லியன் ஆம்பியர் மின் சக்தியைக் கொண்டு 300 மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பமாக்கப் படுகிறது. இந்த வெப்பம் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்பத்தைப் போல் பத்து மடங்கு அதிகமாகும்.[/B][/COLOR]

நல்ல தகவலுக்கு நன்றி திரு மதுரை,

மனிதனின் அற்புத ஆற்றலுக்குச் சான்று பகவர்வது இச் செயல். இயற்கையை விஞ்சும் சகல ஆற்றலும் நமக்கு உண்டு என்பது இது புலப்படுத்துகிறது.

நன்மைக்குப் பயன்படட்டும் நம் அறிவு

வாழ்த்துக்கள். நல்ல தகவல்களை மேலும் அறிவியுங்கள்

mukilan
09-07-2008, 04:22 AM
பிளவிலும் இணைவிலும் உண்டாகும் சக்தி ஆச்சர்யமூட்டுகிறதல்லவா? அதிலும் பிளவை விட இணைவில் ஆபத்து குறைவு என்று தெரியும்பொழுது இது ஒரு ஆக்க சக்தியாக உருவெடுக்கும் என்பது நல்ல விடயம். நீங்கள் கூறியபடி வீட்டிலேயே ஆபத்தின்றி தண்-பிணைப்பினால் சக்தியை உருவாக்க முடியுமெனில் அதைவிட இந்த நூற்றாண்டில் நிகழ்பெறக்கூடிய நல்ல நிகழ்வு வேறேதும் இல்லை. பயனுள்ள வியத்தகு தகவல்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
10-07-2008, 03:14 AM
நல்ல தகவலுக்கு நன்றி திரு மதுரை,

மனிதனின் அற்புத ஆற்றலுக்குச் சான்று பகவர்வது இச் செயல். இயற்கையை விஞ்சும் சகல ஆற்றலும் நமக்கு உண்டு என்பது இது புலப்படுத்துகிறது.

நன்மைக்குப் பயன்படட்டும் நம் அறிவு

வாழ்த்துக்கள். நல்ல தகவல்களை மேலும் அறிவியுங்கள்

நன்றி நண்பரே. உங்களது பாராட்டுக்கள் எனக்கு சக்தி தரும்.

மதுரை மைந்தன்
10-07-2008, 03:19 AM
பிளவிலும் இணைவிலும் உண்டாகும் சக்தி ஆச்சர்யமூட்டுகிறதல்லவா? அதிலும் பிளவை விட இணைவில் ஆபத்து குறைவு என்று தெரியும்பொழுது இது ஒரு ஆக்க சக்தியாக உருவெடுக்கும் என்பது நல்ல விடயம். நீங்கள் கூறியபடி வீட்டிலேயே ஆபத்தின்றி தண்-பிணைப்பினால் சக்தியை உருவாக்க முடியுமெனில் அதைவிட இந்த நூற்றாண்டில் நிகழ்பெறக்கூடிய நல்ல நிகழ்வு வேறேதும் இல்லை. பயனுள்ள வியத்தகு தகவல்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

இந்த ஆராய்ச்சியை மற்ற விஞ்ஞானிகள் எதிரத்தது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சதி என்று கூறலாம்.

நன்றி முகிலன் அவர்களே

SivaS
11-07-2008, 03:56 AM
மிக நல்ல ஆராய்ச்சி
இது மட்டும் சாத்தியம் ஆகுமெனில் உலகின் எரிபொருள் சுமைகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்

நன்றி மதுரை

மதுரை மைந்தன்
11-07-2008, 04:19 AM
மிக நல்ல ஆராய்ச்சி
இது மட்டும் சாத்தியம் ஆகுமெனில் உலகின் எரிபொருள் சுமைகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்

நன்றி மதுரை

மிக்க நன்றி சிவா அவர்களே

sreeram
29-08-2008, 05:47 AM
அறிவியல் ரீதியாக இந்த ஆராய்ச்சி நடைமுறைக்கு சாத்தியப்பட்டதல்ல....... இதன் விளைவுகள் அபாயகரமானவை.