PDA

View Full Version : இலங்கை-இந்திய டெஸ்ட் தொடர்



arun
08-07-2008, 10:12 PM
மும்மூர்த்திகளான சச்சின்,கங்குலி,திராவிட் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர்

தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது வீரேந்தர் சேவாக் துணை கேப்டன் பதவி வகிப்பார்

யுவராஜ் நீக்கப்பட்டுள்ளார் ஓய்வு என்று சொல்லப்பட்டாலும் இலங்கை ஆடு களங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சேர்க்கப்படவில்லை என்ற கருத்து நிலவி வருகிறது

டெஸ்ட்டில் புதிய முகங்களாக கவுதம் கம்பிர் ரோகித் சர்மா மற்றும் ஓஜா சேர்க்கப்பட்டுள்ளனர்

தண்டனை முடிந்து பஜி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்

இர்பான் பதான் மற்றும் சாவ்லாவுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது (ஆசிய கோப்பையில் மோசமாக பந்து வீசியதால் நீக்கப்பட்டிருக்கலாம்)

அணி விபரம்

வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், ராகுல் திராவிட், சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி வி ஸ் லக்ஷ்மன், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல், அனில் கும்ப்ளே (கேப்டன்), கர்பஜன் சிங்க், இஷாந்த் சார்மா, ஜாகீர் கான், சிங்க், முனாப் பட்டேல், ப்ரக்யன் ஓஜா.

ஓவியன்
09-07-2008, 01:29 AM
பட்டேலும் கார்த்திக்கும் ஒரு சேர அணியில் இருக்கின்றனரா...???

சரி,

ஜோ மகேஷூக்கு ஏன் இன்னமும் ஒரு இடத்திலும் வாய்ப்புக் கொடுக்கிறார்கள் இல்லையோ, தெரியலையே...

xavier_raja
09-07-2008, 07:02 AM
இந்த தொடரில் சச்சின் அற்புதமாக விளையாடி லாராவின் ரெக்கார்டை முறியடிக்கவேண்டும். வாழ்த்துக்கள். (அவர் பெப்ஸியின் பிராண்டு அம்பாஸிடராக இருந்ததிலிருந்து நீக்கபட்டுவிட்டார், அதனால் அவருக்கு ஆண்டுக்கு 4-5 கோடி இழப்பாம், பாவம்)

aren
14-07-2008, 05:51 AM
தோனி ஓய்வு. இதை எப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தது. அவர் ஐபில் போட்டியிலிருந்து ஓய்வு எடுத்திருக்கவேண்டும். ஏன் செய்யவில்லை. அங்கே தினமும் மாட்சுகள் இருந்ததே. ஏன் அப்பொழுது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. காரணம் அதில் ஒரு மாட்ச் ஆடினால் அமெரிகன் டாலர் ஒரு லட்சம் கிடைக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடரில் ஐந்து நாட்கள் ஆடினாலும் மூவாயிரம் டாலருக்கும் குறைவாகவே கிடைக்கிறது.

இதை கவனிக்கும்பொழுது ஆஸ்திரேலியர்கள் ஒரு படி மேல். அவர்கள் டெஸ்ட் போட்டிக்குத்தான் முதலிடம் ஐபில் பின்னர்தான் என்று டாட்டா காட்டிவிட்டு மேற்கு இந்தீஸ் டூர் சென்று விட்டார்கள்.

சச்சின் உடம்பு சரியில்லை, இருந்தாலும் ஐபில் மாட்சில் ஆடினார் ஆனால் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் டூர் செல்லவில்லை.

அவ்வளவுதான் நம் மக்கள். இதையெல்லாம் மறந்துவிடுவார்கள்

அறிஞர்
25-07-2008, 02:18 PM
இந்தியா முதல் ஆட்டத்தில் முரளியின் அபார பந்துவீச்சால் தடுமாறுகிறது.....

இலங்கை 600/6

இந்தியா 156/6

அன்புரசிகன்
25-07-2008, 02:21 PM
வெற்றிதேல்வியின்றித்தான் முடியும். ஏதாவது சாகசங்கள் நடந்தால் தவிர...

ராஜா
25-07-2008, 02:45 PM
தோனி ஓய்வு. இதை எப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதித்தது. அவர் ஐபில் போட்டியிலிருந்து ஓய்வு எடுத்திருக்கவேண்டும். ஏன் செய்யவில்லை. அங்கே தினமும் மாட்சுகள் இருந்ததே. ஏன் அப்பொழுது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. காரணம் அதில் ஒரு மாட்ச் ஆடினால் அமெரிகன் டாலர் ஒரு லட்சம் கிடைக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடரில் ஐந்து நாட்கள் ஆடினாலும் மூவாயிரம் டாலருக்கும் குறைவாகவே கிடைக்கிறது.

சச்சின் உடம்பு சரியில்லை, இருந்தாலும் ஐபில் மாட்சில் ஆடினார் ஆனால் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் டூர் செல்லவில்லை.

அவ்வளவுதான் நம் மக்கள். இதையெல்லாம் மறந்துவிடுவார்கள்

நாட்டுப்பற்று இல்லாமல் பேசாதீர்கள் மாட்டிரிக்ஸ்..!
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

mathura
25-07-2008, 04:06 PM
இந்திய அணியினர் சொதப்புகிறார்களே. fஆலோ ஆனை தவிர்க்க முடியுமா?

அறிஞர்
25-07-2008, 04:44 PM
இந்திய அணியினர் சொதப்புகிறார்களே. fஆலோ ஆனை தவிர்க்க முடியுமா?
ரொம்ப கஷ்டம் தான்..

shibly591
26-07-2008, 04:44 AM
7-170 இந்தியா.....

shibly591
26-07-2008, 05:01 AM
9 வது விக்கட்டும் விழுந்துவிட்டது...

இது இந்தியாவின் பலவீனம் என்று சொல்லமாட்டேன்..காரணம் இது இலங்கையின் பயிற்சி மைதானம்..தவிர இலங்கை சுழற்பந'து வீச்சாளர்களுக்கு இங்கு பந்து வீச வேண்டிய தந்திரோபயங்களை நன்றாகவே கற்று விட்டார்கள்..

திராவிட் டெண்டுல்கர் கங்குலி இவர்கள் கொஞ்சம் பொறுமையாக ஆடியிருக்கலாம்

ஓவியன்
26-07-2008, 05:05 AM
அசைக்க முடியாத விக்கெட்டாக களத்தில் நிற்கும் லக்ஸ்மனுக்கு திராவிட் தோள் கொடுத்திருக்கலாம்...

ஓவியன்
26-07-2008, 09:42 AM
Sri Lanka 600/6d
India 223 & 103/6 (34.2 ov)

இப்போது இந்திய அணி இந்தப் போட்டியை ட்ரா செய்ய வேண்டுமெனின் ஒரே ஒரு வழிதான் இந்திய அணிக்கு இருக்கு...........







கொழும்பில நல்லா மழை பெய்ய வேண்டும்
ஹீ, ஹீ ....!! :D:D:D

அகத்தியன்
26-07-2008, 10:55 AM
இலங்கை அணி ஒரு இனிங்க்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.:aktion033::aktion033::aktion033::aktion033:

முரளி மென்டிஷ் கூட்டணியால் இந்தியா பந்தாடப்ப்ட்டுவிட்டது.:icon_b: :icon_b::Hellfighter1::Hellfighter1:

வாழ்த்துக்கள் இலங்கை அணிக்கு.:080402gudl_prv::080402gudl_prv:

ராஜா
26-07-2008, 11:23 AM
அடடா..!

திறமை மிக்க இந்திய அணிக்கு இன்னொரு "எதிர்பாராத" தோல்வியா..?

அவர்கள் எங்கும் புலிகளாயிற்றே..!

அகத்தியன்
26-07-2008, 11:25 AM
அடடா..!

திறமை மிக்க இந்திய அணிக்கு இன்னொரு "எதிர்பாராத" தோல்வியா..?

அவர்கள் எங்கும் புலிகளாயிற்றே..!


குசும்பு+ லொள்ளு= ராஜா :)


சத்யராஜ் உங்க ஊரா?;) ;)

ஓவியன்
26-07-2008, 11:28 AM
ஆமா சத்யராஜ் உங்க ஊரா?;) ;)

அகத்தியன், அது யாரு ஆமா சத்யராஜ்..?? :confused:

அகத்தியன்
26-07-2008, 11:33 AM
அகத்தியன், அது யாரு ஆமா சத்யராஜ்..?? :confused:

இன்றைய உமது பதிவுகள் எல்லாம் இப்படி ஒரு வகையாத்தான் போய்க்கிட்டிருக்கு. ஏன் என்டுதான் புரியல.:sauer028: :sauer028: :sauer028:

இப்பவே கண்ணக்கட்டுதே...... முடியல:traurig001: :traurig001:

ஓவியன்
26-07-2008, 11:39 AM
ஏன் என்டுதான் புரியல.:sauer028: :sauer028: :sauer028: :traurig001: :traurig001:

அது ஒன்றும் பரம இரகசியம் கிடையாது...

இன்று என்னுடைய மேலதிகாரி விடுமுறையில் இருக்கிறார்..!! :D:D:D

ராஜா
26-07-2008, 11:51 AM
மேலதிகாரி அலுவலகம் வரலையா..?

அப்போ ரெட்டை கொண்டாட்டம்தான்..!

நடத்துங்க..!

shibly591
26-07-2008, 12:18 PM
சுழல் மன்னன் முரளியின் துணையுடனும்..சுழல் இளவரசன் அஜந்த மெண்டிஸின் சிறந்த பந்துவீச்சின் மூலமும் பெரு வெற்றி பெற்றிருக்கும் எங்கள் இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்...

அமரன்
26-07-2008, 04:08 PM
மேலதிகாரி அலுவலகம் வரலையா..?

அப்போ ரெட்டை கொண்டாட்டம்தான்..!

நடத்துங்க..!

இரட்டை வால் கொண்டாட்டம் என்று வந்திருக்க வேண்டும்.

ஏம்பா ஓவியரே..
நீங்க சொன்ன "மேலதிகாரி" இன்றைய அலுவல் அகம் எல்லாம் சேர்ந்து என்னமோ சொல்லுதே..

அறிஞர்
26-07-2008, 04:50 PM
இலங்கை சொந்த ஊரில் முதலை போல்... வீழ்த்துவது என்பது மிக கடினமே...

முதல் போட்டி.. இந்திய அணியினருக்கு நல்ல பாடம்.

வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்.

அமரன்
26-07-2008, 04:54 PM
சரிதான் அறிஞரே!
இலங்கை அணியை சொந்த நிலத்தில் சந்திப்பது சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதைப் போன்றது. சந்திப்பது புலி எனும் போது எதிர்கொள்ளலில் (வி)வேகம் இருக்கனுமே.. அதை இந்தப் போட்டியில் காணக்கிடைக்கலயே..

மறத்தமிழன்
26-07-2008, 06:04 PM
மீண்டும் இந்தியா சொதப்பல். அவர்கள் வாய் சொல்லால் மட்டும் மைதானத்துக்கு வெளியே விளையாடுகிறார்கள். உள்ளேயோ சொன்னதை மறந்து விடுகிறார்கள். இதைவிட நல்ல இந்திய அணியை தயார் செய்ய முடியாது. இதற்கே தோல்வி என்றால் இலங்கை நன்றாகவே விளையாடி உள்ளது. பொதுவாக இந்தியர்கள் சுழற்பந்திற்கு ஜாம்பவான்கள். ஆனால் இன்றோ மண் கவ்வி விட்டார்கள். புதிய விதிமுறையால் இந்தியர்களுக்கு நட்டமே. ஆனால் அத்தனையும் நேர்த்தியான தீர்ப்புகள். எதிலும் தப்பில்லை. இப்படி இந்தியா விளையாடுமா? மஹேல ஜயவர்த்தனாவும் இப்படித்தான் மனதுக்குள் நினைத்திருப்பார்.ம்ம்ம்ம்

அன்புரசிகன்
26-07-2008, 06:47 PM
இம்முறை கிடைத்த 4 சதங்களும் சனத்தின் சதங்கள் போல் அல்ல. அனைத்தும் book shots மூலம் வந்தவை.... இந்திய அணியினர் சுழல் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்கமுடியாமல் போனதன் காரணம் புரியவில்லை. டெஸ்ட் ஆட்டங்களுக்கேற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் சோபிக்கத்தவறியது தான் சோகம்.

வர்ணபுர வளர்ந்துவரும் நல்ல இளைய வீரர். ஆடிய 5 ஆட்டங்களில் 2 சதம் 2 ஐம்பது பெற்றிருக்கிறார். மற்றவர்கள் பழையவர்களே....

இந்திய அணிக்கு பயிற்சி இல்லை என்றால் அது போன்ற கேலிக்கூத்து ஒன்றுமில்லை.... முதல் 2வது துடுப்பாட்டத்தையாவது பொறுமையாக விளையாடியிருக்கலாம்... அரை நாளில் அனைவரும் ஆட்டமிழந்தது தான் வேடிக்கையாக உள்ளது...



Day 4
Drinks: India - 195/9 in 58.0 overs (VVS Laxman 41, I Sharma 0)
India: 200 runs in 60.2 overs (362 balls), Extras 2
VVS Laxman: 50 off 94 balls (6 x 4)
Drinks: India - 217/9 in 71.0 overs (VVS Laxman 56, I Sharma 7)
Innings Break: India - 223/10 in 72.5 overs (I Sharma 13)
India 2nd innings
Lunch: India - 25/1 in 6.4 overs (G Gambhir 12)
12:14 local time: Over 6.4 Muralitharan asks for a lbw referral of Sehwag and it is given in favour of the bowler.
India: 50 runs in 11.3 overs (69 balls), Extras 0
Drinks: India - 74/2 in 20.0 overs (G Gambhir 31, SR Tendulkar 9)
14:14 local time: Over 23.4 Jayawardene asks for the review, when Tendulkar was caught at leg slip of the bowling of Muralitharn.
India: 100 runs in 32.4 overs (196 balls), Extras 0
Tea: India - 103/6 in 34.2 overs (KD Karthik 0)
14:53 local time: Over 33.6 Jayawardene asks for a review as he takes the catch of Karthik at first slip, which was turned down by the third umpire as it was off the pad.
14:57 local time: Over 34.2 Jayawardene asks for a review of the bowling of Mendis for a catch at short leg.

pasaam
27-07-2008, 05:22 AM
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். கங்காருவைக் கூட விரட்டி விரட்டி அடித்தவர்கள். இங்கு சிங்கத்தைக் கண்டு நடுங்கிய படிதான் நின்றார்கள். இருந்தும் சச்சின், லக்ஸ்மன், இசாந்த் சர்மா போன்றோர் சிறிது பயமின்றி மட்டை பிடித்தார்களதான். ஆனால் அவர்களும் சுருண்டு விட்டார்கள். பதற்றத்துடன்தான் விளையாடினார்கள். ஓங்கி அடிக்கவேயில்லையென்றுதான் கூறவேண்டும். ஏன்றுதான் நெஞ்சில் உரம் வருமோ? தினேஸ் கார்த்திக் ககாப்பிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி சோபிக்கவில்லை. ஏன்தான் தெரிவுக்குழு இவரை தேர்ந்தெடுத்தது. இவரை விட பார்த்திவ் பரவாயில்லையே. எமக்கெல்லாம் பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது. சாதாரண தொல்வியல்ல. படதோல்வியாச்சே! அடுத்த டெஸ்டிலாவவது என்ன செய்வார்களோ?

minmini
27-07-2008, 02:41 PM
நான் கூட நினைக்கவில்லை இந்தியா இப்படியான படுதோல்வியை கானும் என்று. நான் நினைக்கிறேன் இந்திய அணி சரியாக பந்து வீசவே இல்லை என்று.:D

மற்றபடி ஏழு துடுப்பட்ட வீரர்களை கொண்டும் இல்ங்கை அணியின் ப்ந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டதே!!!!!!!!!!!!!!!!!!!!!:eek:

எது எப்படியோ இல்ங்கை அணியின் அபார வெற்றிக்கு மணமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்.:icon_b:

ராஜா
28-07-2008, 03:30 AM
தோல்விகள் தவிர்க்க முடியாதவை..! மற்றும் இயல்பானவை..!!

ஆனால் தோல்வியுறும் முறையில் இருக்கிறது வேறுபாடு. மைக் டைசனோ, ரோஜர் ஃபெடரரோ தோல்வியைச் சந்தித்துதான் ஆகவேண்டும். ஆனால் அது போராடி பெற்ற தோல்வியா.. அல்லது எதிர்ப்பேயின்றி பொறியில் அடிபட்ட எலி போல அடைந்த தோல்வியா என்பதில்தான் ஒரு தனிப்பட்டவர் அல்லது குழுவின் விளையாட்டுத் திறன் அடங்கியிருக்கிறது.

arun
28-07-2008, 06:55 PM
முதலில் 600 ரன்கள் வந்தே இருக்காது பல கேட்சுகளை நழுவ விட்டனர்

வழக்கம் போல அடுத்த டெஸ்ட்டை எதிர்பார்க்க வேண்டியது தான் :D:D

அன்புரசிகன்
29-07-2008, 07:52 AM
இலங்கை அணிக்கு மிதவேக பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் அழைக்கப்பட்டுள்ளார்....

shibly591
29-07-2008, 06:06 PM
இலங்கை உற்சாகத்துடன் 31ம் திகதி களமிறங்கப்போகிறது..

தம்மிக்க தெரிவு செய்யப்பட்டு விட்டார்...

இலங்கை அஜந்த மெண்டிஸின் அதிர்ச்சி வருகைக்கப்பிறகு புதியவர்களுக்க வாய்ப்பளிக்கத்தொடங்கியிருக்கிறது..

அப்படியே சனத் ஜெயசூரிய போல ஒரு அதிரடி இளம் வீரரை தேடி எடுங்கப்பா.....

அறிஞர்
30-07-2008, 03:52 PM
இலங்கை அணிக்கு புதியவர்கள் வரவு... வலு சேர்க்கட்டும்...

ஜெயசூர்யாவுக்கு எப்ப தான் ஓய்வு கொடுக்கப்போறாங்க..

ராஜா
30-07-2008, 05:54 PM
சனத் போன்றோர் கிரிக்கெட்டுக்கு உற்சாக வண்ணம் பூசுபவர்கள்..!

முடிந்தவரை ஆடி ரசிகர்களுக்கு விருந்து படைக்கட்டுமே..!!!

அன்புரசிகன்
31-07-2008, 12:06 PM
ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய காம்பீர் ஷேவாக் ஆகியோர் மாலை தேனீர் இடைவெளிக்குப்பின்னர் அடுத்தடுத்த பந்துபரிமாற்றங்களில் 4விக்கட்டுக்களை பறிகொடுத்துள்ளனர்...

ஷேவாக் லக்ஷ்மன் ஜோடி தற்சமயம் களத்தில் உள்ளனர்...

ஷேவாக் ஒருநாள் போட்டியில் ஆடுவது போல் ஆடிக்கொண்டிருக்கின்றார். 42 பந்து பரிமாற்றங்களில் ஷேவாக்கின் 124 (115 பந்துகளில்) உடன் இந்திய அணி 205 ஓட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் லக்ஷ்மன் 8 ஓட்டங்களில் உள்ளனர்.

ஆட்டமிழந்தவர்கள்
காம்பீர் 56
ட்ராவிட் 2
சச்சின் 5
கங்குலி 0

இலங்கை அணியின் சார்பில் சமிந்தவாஸ் மற்றும் மென்டிஸ் தலா 2 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.



India 1st innings R M B 4s 6s SR
G Gambhir (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/28763.html) lbw b Mendis 56 134 103 8 0 54.36
V Sehwag (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/35263.html) not out 124
115 19 2 107.82
R Dravid (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/28114.html) c Warnapura b Mendis 2 7 6 0 0 33.33
SR Tendulkar (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/35320.html) lbw b Vaas 5 5 3 1 0 166.66
SC Ganguly (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/28779.html) c http://img.cricinfo.com/engine-nav/keeper.gifHAPW Jayawardene b Vaas 0 4 5 0 0 0.00
VVS Laxman (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/30750.html) not out 8
20 1 0 40.00----------------------
http://img.cricinfo.com/spacer.gif Bowling Ohttp://img.cricinfo.com/spacer.gif M R W Econ

WPUJC Vaas (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/50804.html) 14http://img.cricinfo.com/spacer.gif 1 57 2 4.07

KMDN Kulasekara (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/49535.html) 8http://img.cricinfo.com/spacer.gif 1 40 0 5.00 (2w)
BAW Mendis (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/268739.html) 13http://img.cricinfo.com/spacer.gif 1 69 2 5.30

M Muralitharan (http://content-gulf.cricinfo.com/slvind/content/current/player/49636.html) 7http://img.cricinfo.com/spacer.gif 0 35 0 5.00

அறிஞர்
31-07-2008, 02:06 PM
ஆட்டநேர இறுதியில் 214/4 இந்தியா...

சேவாக்கின் பொறுப்பான ஆட்டம் சிறப்பு.

சேவாக்-கம்பீர் நல்ல துவக்கத்தை கொடுத்தும்.. அதை சரியாக பயன்படுத்தாத சீனியர் வீரர்கள் டிராவிட், டெண்டுல்கர், கங்குலியை என்ன சொல்வது...

வயதானவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டிய காலம் வந்துவிட்டதோ..

arun
31-07-2008, 07:11 PM
ஆட்டநேர இறுதியில் 214/4 இந்தியா...

சேவாக்கின் பொறுப்பான ஆட்டம் சிறப்பு.

சேவாக்-கம்பீர் நல்ல துவக்கத்தை கொடுத்தும்.. அதை சரியாக பயன்படுத்தாத சீனியர் வீரர்கள் டிராவிட், டெண்டுல்கர், கங்குலியை என்ன சொல்வது...

வயதானவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டிய காலம் வந்துவிட்டதோ..

அப்படி தான் தோன்றுகிறது பேசாமல் யாரேனும் ஒருவருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்கலாம்

shibly591
01-08-2008, 05:10 AM
263---4

சேவாக்--156

லக்ஸ்மன்---32

ஓவியன்
01-08-2008, 05:14 AM
அப்படி தான் தோன்றுகிறது பேசாமல் யாரேனும் ஒருவருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுக்கலாம்

இது நல்லா இருக்கே, எத்தனையோ இளம் வீரர்கள் வாய்ப்புக்கள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்க....

இவர்கள் கொடுத்த வாய்ப்புக்களை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர்....

shibly591
01-08-2008, 05:24 AM
லக்ஸ்மன் ஆட்டமிழந்துள்ளார்...

மெண்டிஸின் பந்தில் சமரவீரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்துள்ளார்...

இந்தியா---278-5

shibly591
01-08-2008, 05:40 AM
ஆறாவது விக்கெட்டும் வீழ்ந்துள்ளது..

தினேஸ் கார்த்திக் பெவிலியன் செல்கிறார்..

மெண்டிஸின் பந்தில் எல்.பி முறையில் அவர் ஆட்டமிழக்குமு;போது இந்தியா 293---6

கும்ப்ளே நுழைந்திருக்கிறார்

shibly591
01-08-2008, 06:14 AM
இந்தியா----315--6

shibly591
01-08-2008, 06:21 AM
கும்ப்ளே அவுட்

முரளிதரனின் பந்தில் ஸ்டம்ப் செய்யப்பட்டு வெளியேறுகிறார்..

இந்தியா---317-7

அன்புரசிகன்
01-08-2008, 06:48 AM
இந்தியஅணி 328 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்கள் என்ற கணக்கில் தொடருகிறது. ஷேவாக் தனது 200 ஐ பூர்த்திசெய்துள்ளார்.

தற்சமயம் களத்தில் உள்ளோர் இ.ஷர்மா மற்றும் ஷேவாக்...

மென்டிஸ் முரளி வாஸ் முறையே 5 - 2 - 2

அன்புரசிகன்
01-08-2008, 06:56 AM
ஆட்டமிழக்காமல் 201 என்ற ஷேவாக்கின் ஓட்டங்களுடன் 329ற்கு இந்திய அணி சகலவிக்கட்டுக்களையும் இழந்துள்ளது...


மென்டிஸ் முரளி வாஸ் முறையே 6 - 2 - 2

aren
01-08-2008, 07:21 AM
மெண்டிஸ் நம்ம மக்களை இப்படி ஹிப்னாடிஸம் மாதிரி அடக்கி வைத்திருக்கிறாரே. இந்த டெஸ்டில் ஷேவாக் கொஞ்சம் விதிவிலக்கு என்று தெரிகிறது.

மெண்டிஸ் இப்படி பந்து வீசுவதால் முரளிக்கு கொஞ்சம் பிரச்சனைகள் குறையும். பந்துவீச்சை ஏற்க இன்னொருவர் இருப்பது இலங்கைக்கு இப்பொழுது கூடுதல் பலம்.

ஓவியன்
01-08-2008, 08:29 AM
இலங்கை அணி தன் முதல் பந்துப் பரிமாற்றத்தில் மைக்கல் வெண்டோட்டை முதல் விக்கெட்டாக இழந்தாலும் சங்காரவும் வர்ணபுரவும் பொறுமையாக ஆடிக் கொண்டிருக்கின்றனர்....

ஷாகிர்கானின் பந்துப் பரிமாற்றமொன்றில் வர்ணபுர நான்கு பவுண்டரிகளை அடித்திருந்தார்....

arun
01-08-2008, 06:25 PM
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஸ்கோர்

இந்தியா 329 (ஆல் அவுட்)

இலங்கை 215/5


MG Vandort c Dravid b Khan 4
BSM Warnapura c Gambhir b Harbhajan Singh 66
KC Sangakkara c & b Harbhajan Singh 68
DPMD Jayawardene not out 46
TT Samaraweera lbw b Harbhajan Singh 14
TM Dilshan c Gambhir b Harbhajan Singh 0
HAPW Jayawardene not out 5

அமரன்
01-08-2008, 06:35 PM
மீண்டும் சேவாக் இந்தியாவை சே! வாக் கிலிருந்து மீட்டார்..

ஓவியன்
02-08-2008, 02:12 AM
களத்தில் அணித்தலைவர் ஜெயவர்த்தனவும் விக்கட் காப்பாளர் ஜெயவர்த்தனவும் நிற்கின்றனர்...

பார்ப்போம் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை இன்னும் எத்தனையால் உயர்த்துவார்களென...

ராஜா
02-08-2008, 08:17 AM
பஜ்ஜியின் சுழற்சியில் இலங்கை,( இந்திய அணியின் எண்ணிக்கைக்கும் சுமார் 30 ஓட்டங்கள் குறைவாக) ஆட்டமிழந்தது..

மாம்ஸ்... முழு விபரம் ப்ளீஸ்..!.

வாசகி
02-08-2008, 01:55 PM
இறுதி நாள் மைதானம் துடுப்பாட்ட வீரர்களின் சத்துரு. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

ஓவியன்
02-08-2008, 02:20 PM
இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு..

அதற்கு கங்குலியும் லக்ஸுமனும் நிறைய உழைக்க வேண்டும் உதயநிலா(கார்த்திக்கை நம்ப முடியாத நிலையில், இவர்கள் சாதித்தால் தான் உண்டு)...

பொறுத்திருந்து பார்ப்போம், சாதிப்பார்களாவென....!!

அன்புரசிகன்
03-08-2008, 02:30 AM
நேற்றய ஆட்டம் குறைந்த வெளிச்சத்தினால் நிறுத்தப்பட்டிருந்தது... இறுதியாக வீசப்பட்ட 2 பந்துப்பரிமாற்றங்களில் 2 முக்கிய விக்கட்டுக்களை இந்தியா இழந்திருக்கிறது... ஆறு விக்கட்டுக்கள் மீதமுள்ள இந்நிலையில் இந்தியா 237 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.... களத்தில் கங்குலி மற்றும் லக்ஸ்மன். சிறந்த டெஸ்வீரர்கள்(???)...

இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை அணி சார்பில் வாஸ் முரளி மென்டிஸ் முறையே 2 - 1 - 1 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்....

அறிஞர்
03-08-2008, 02:57 AM
நாளைய ஆட்டம் தான் மிக முக்கியம்... கங்குலி-லஷ்மண் ஆட்டம் தான் இந்தியாவின் 2வது டெஸ்ட் முடிவை நிர்ணயிக்கும்.

pasaam
03-08-2008, 04:36 AM
இன்றைய ஆட்டம்தான் முடிவைத் தீர்மானிக்கக் கூடியதாகவிருக்கும. அதற்கு கங்குலி மற்றும் லக்மன் பொறுப்புடன் ஆடவேண்டும். அத்துடன் இலங்கை முத்த வீரர்கள் நடுவர்களை மிரட்டாமலோ அல்லது நிர்ப்பந்திக்காமலோ இருக்கவும் வேண்டும். (நேற்றைய ஆட்டத்தில் இது இடைக்கிடை அரங்கேறியது. தொலைக்காட்சியில் நேற்றைய ஆட்டத்தைப் பார்த்தவர்கள் இதை நன்றாக கண்டிருப்பர். வர்ணணையாளர்களும் இதை சுட்டிக்காட்டினர்)
பாசம்.
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

pasaam
03-08-2008, 06:07 AM
ஒருவாறு இந்தியா தனது இரண்டாவது இனிங்ஸ்ஐயும் கூடுமான விரைவாக முடித்துவிட்டது. 269+37= 306 ரன்கள் இலங்கைக்கு இலக்கு வழங்கியிருக்கிறார்க்ள. இந்திய மூத்த வவீரர்கள் இத்தடவையும் ஓரளவு சொதப்பிவிட்டாகள் தான். இவர்களில் முக்கியமாக கங்குலி, சச்சின் போன்றவர்கள் துடுப்பு மட்டையால் பந்தை எதிர்கொள்வதிலும் பார்க்க கால்காப்பால் தான் பந்தை எதிர்கொள்கிறார்கள். ஏனோ தெரியவில்லை. இலங்கையும் தனது 3 மிளாய்வையும் பய்னபடுத்தியமையும் பரிதாபம்தான்.
பார்ப்போம் இன்னமும் இன்றைய அரைவாசியும், நாளை முழுநாளும் மீதமாகவுள்ளநிலையில் இலங்கை ஆடத்தொடங்கவுள்ளது. 300 ஓட்டங்களை காலி மைதானத்தில் எடுப்பது கஸ்டம் என்று வல்லுனர்கள் கூறினாலும் எந்த நிலையையும் சமாளிப்பதில் இலங்கை வீரர்கள் வல்லவர்கள்.
பாசம்.
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

அன்புரசிகன்
03-08-2008, 06:17 AM
வழமையான சொதப்பல்... கங்குலி ஓட்டம் எதுவும் பெறாமலும் லக்ஷ்மன் 13 ஓட்டங்களுடனனும் ஆட்டமிழந்துள்ளனர். பின்பு வந்த பின்பு வந்த கார்த்திக் மற்றும் ஹர்பஜன் முறையே 20, 11 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்துள்ளர்.

இலங்கை அணி சார்பாக வாஸ் முரளி மென்டிஸ் ஆகியோர் முறையே 2 - 3 - 4 விக்கட்டுக்களை சாய்த்திருக்கின்றார்கள்.

தற்சமயம் இலங்கை அணி வர்ணபுரவை இழந்து 5 ஓட்டங்களுக்கு 1 விக்கட் என்ற நிலையில் உள்ளது. களத்தில் வான்டோட் மற்றும் சங்ககார உள்ளனர்.

307 என்ற வெற்றி இலக்கு இலங்கைக்கு இந்தியா தீர்மானித்துள்ளது... தற்சமயம் 302 என்ற வெற்றி இலக்கை நோக்கி 9 விக்கட்டுக்கள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடுகிறது.

அன்புரசிகன்
03-08-2008, 06:25 AM
இலங்கை அணி அடுத்தடுத்து 2 விக்கட்டுக்களை இழந்துள்ளது. (சங்ககார ஜெயவர்த்தன) சாஹீர் மற்றும் சர்மா முறையே 1-2 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்..

10/3 என்ற நிலையில் இலங்கை உள்ளது. கழத்தில் வான்டோட் மற்றும் சமரவீர...

ஓவியன்
03-08-2008, 09:14 AM
இன்றைய இறுதிநாள் போட்டியை இணையத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஒரு இணையத்தளத்தின் வர்ணனையின் ஒரு பகுதி இது...!!


And we have a dog in the ground. It wants to make friends with Sachin Tendulkar. Following him at the moment. The groundsmen are now carrying him off

:lachen001::lachen001::lachen001: :D:D:D :lachen001::lachen001::lachen001:

ஓவியன்
03-08-2008, 10:49 AM
307 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 132 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது...

சிவா.ஜி
03-08-2008, 10:56 AM
அட அப்ப நம்ம விளம்பர வீரர்கள் ஜெயிச்சுடுவாங்களா?

அகத்தியன்
03-08-2008, 11:23 AM
இந்தியா 170 ஓட்டங்கலால் வெற்றி.

வாழ்த்துக்கள்

உதயசூரியன்
03-08-2008, 11:34 AM
இரண்டாவது இன்னிங்க்ஸை பார்த்து கவுந்துடும் என்று நினைத்தேன்..
அவர்களுக்கு என்ன அவசரமோ.. இன்னைக்கே சரண்டர் ஆகி விட்டாங்க..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ராஜா
03-08-2008, 12:44 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்..!

pasaam
03-08-2008, 02:29 PM
என்ன ஆச்சரியம்! வெற்றிக்கனி இந்தியாவின் கைகளில். இலங்கை வீரா்களும் தாம் இந்திய வீரா்களுக்கு சளைத்தவா்கள் அல்ல என்பதை நிரூபித்துவிட்னா்(தோலவியின மூலம்). அதனால் பழம் நழுவி பாலில் வீழ்ந்தது. பின்பு பரிசளிப்பு நிகழ்வின் போதும் இலங்கை அணி தலைவா் இந்திய அணி யை பாராட்டிய விதமும் அடுத்த ஆச்சரியம். எது எப்படியோ வெற்றிக்கழிப்பில் நிலை தடுமாறாமல் அடுத்த டெஸ்டிலும் இந்தியா பொறுப்புடன் விளையாடி வெற்றி பெற்று தொடரையும் வென்றெடுக்க எமது முன்னேரான வாழ்த்துக்கள்.
பாசம்.
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

மாதவர்
03-08-2008, 06:02 PM
அப்படியா செய்தி!!
வாழ்த்துக்க்கள்

அறிஞர்
03-08-2008, 08:37 PM
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்...

aren
04-08-2008, 01:39 AM
ஷேவாக்கும் காம்பீரும் அருமையாக விளையாடியதால் நாம் தப்பித்தோம். ஹர்பஜன்சிங் பந்துவீச்சும் நன்றாக இருந்தது நமக்கு கை கொடுத்தது. இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சு அபாரம். மற்றபடி இந்திய டீம் ஆட்டம் கொஞ்சம் மட்டம்தான்.

மெண்டிஸ் பிராகாசிக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அன்புரசிகன்
04-08-2008, 02:02 AM
கடந்த ஆட்டத்தில் இந்தியஅணி இரண்டாவது துடுப்பாட்டத்தின் போது ஆடியது போல தான் இலங்கை நேற்று விளையாடியிருந்தது. முக்கிய துடுப்பாட்டவீரர்கள் பிரகாசிக்கத்தவறிவிட்டனர்.

வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

மன்மதன்
04-08-2008, 02:29 PM
மகிழ்ச்சியாக இருந்தது.. இந்திய அணி அடுத்த மேட்சை சமன் செய்தாலே போதும்..!!

Narathar
04-08-2008, 05:12 PM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!!!!
சும்மா அவங்களை திட்டாமல் இப்பவாவது வாழ்த்துங்கப்பா..........
நாராயணா!!!!

arun
04-08-2008, 05:56 PM
இரண்டாவது இன்னிங்சில் 300 ரன்கள் சேஸ் செய்வது சிறிது கடினம் என்பதால் கொஞ்சம் நம்பிக்கை இருந்தது

அந்த நம்பிக்கையை மெய்யாக்கி விட்டார்கள் நமது அணி வீரர்கள் அடுத்த டெஸ்ட்டில் அட்லீஸ்ட் டிரா செய்தாலே போதும்

tamilkumar
04-08-2008, 05:59 PM
வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

aren
05-08-2008, 01:52 AM
நம்ம கார்திக் சான்ஸ் கிடைத்தும் இப்படி கோட்டைவிட்டு விட்டாரே. தோனி தோனிதான். நம்ம ஆளு போனியாகவில்லை என்பதே உண்மை.

ஓவியன்
05-08-2008, 02:02 AM
நம்ம கார்திக் சான்ஸ் கிடைத்தும் இப்படி கோட்டைவிட்டு விட்டாரே. தோனி தோனிதான். நம்ம ஆளு போனியாகவில்லை என்பதே உண்மை.

அது கார்த்திக் தப்பில்லை ஆரென் அண்ணா, கார்த்திக்கின் கையில் பந்து நிற்குதில்லை - அதுதான் பிரச்சினை..!! :D

இரண்டு விக்கட் காப்பாளர்களை அணியில் வைத்து ஆடுகிறது இலங்கை அணி, கார்த்திக்கை வைத்து பிடிகளைக் கோட்டை விடுகிறது இந்திய அணி..!! :rolleyes:

pasaam
07-08-2008, 06:33 AM
அதிரடி மாற்றங்கள்்
2008.08.08ல் (நாளை) இலங்கையில் ஆரம்பமாகவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இலங்கையில் கடந்த 2வது டெஸ்ட்டில் குலசேகரா மற்றும் சமிந்த வாஸ் போன்றோர் பந்துவீச்சில் பிரகாச்கவில்லையாம் இதன் முதற்கட்டமாக குலசேகராவுக்குப் பதிலாக புதிய வீரர் தம்மிக பிரசாத் என்பவர் உள் வாங்கப்படுகிறார் எனவும், துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வண்டோடடுக்குப் பதிலாக இன்னொரு வீரரை சேர்க்கவும் ஆலோசிக்கப்படுதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தினேஷ் கார்த்திக் இரண்டு டெஸ்ட்டிலுமே பந்து காப்பில் சரியாக செயல்படவில்லையென்றும் பல பிடிகளைத் தவற விட்டுள்ள தாகவும்(100 வீதம் உண்மை) மற்றும் துடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லையெனவும் அதனால் அவருக்குப் பதிலாக பார்த்திவ் பட்டேல் இணைக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுசரி மும்மூர்த்திகள் நிலை என்னவாவது? சச்சினாவது பரவாயில்லை. ஓரளவு கஷ்டப்பட்டுப் போராடுகின்றார். ஏனையவர்கள்? ஏன் சுரேஜ் ரெய்னா, யுவராஜ், பியுஸ்செளலா, முரளி கார்த்திக் என்னானார்கள்? இவர்கள் சகல துறைகளிலும் ஓரளவு பிரகாசிப் பவர் களாச்சே? அல்லது வயது காணாதா?
சரி. பொறுத்திருப்போம். இன்னமும் 24 மணி நேரத்தில் பார்ப்போம்.
பாசம்
தமிழ் எந்தன உயிருக்கும் மேல்.

shibly591
07-08-2008, 06:37 AM
இந்தியா திறமையாக விளையாடும்...

மும்மூர்த்திகள் பாவம் வயசாகிட்டு இல்லையா...???

aren
07-08-2008, 06:45 AM
இந்த டெஸ்டில் நிச்சயம் திராவிடும் கங்குலியும் சோபிப்பார்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் அவர்களுக்கு கல்தா கொடுத்துவிடுவார்கள்.

கார்த்திக் பாடு அவ்வளவுதான். பார்தீவ் பட்டேல் உள்ளே வரக்கூடும்.

aren
07-08-2008, 06:45 AM
சச்சின் சதம் அடிப்பாரா?

ராஜா
07-08-2008, 07:36 AM
இந்தத் திரியை அருணின் " இலங்கை-இந்திய டெஸ்ட் தொடர்" திரியோடு இணைத்துவிடலாமே..!

pasaam
07-08-2008, 12:12 PM
சச்சின் சதம் அடிப்பாரா?

சச்சின் சதம் அடிப்பார் என எண்ணுகிறோம். அப்போதான் இந்தியா வலுவானதொரு நிலையை அடையும். ஆகவே அவா் நிச்சயம் அடித்தே தீரவேண்டும். இது அவரது ரசிகளின் ஏகோபித்த ஆவல்!
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

அமரன்
07-08-2008, 01:31 PM
அன்பு பாசம்..
சில விடயங்களை ஒரு இடத்தில் வைப்பது சிறப்பானது. உங்கள் திரியை இதனுடன் சேர்த்துள்ளேன்..

ஒத்துழைப்புக்கு நன்றி.

shibly591
07-08-2008, 07:17 PM
இந்தியா சிறப்பாக ஆடும்...

சச்சின் சதம் குவிப்பது கேள்விக்குறியே...

சேவாக்கும் கம்பீரும் நல்ல போமில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமே...

கொஞ்சம் கொஞ்சமாக இ.லங்கையின் சுழலை சமாளிக்க கற்று விட்ட இந்தியர்கள் போட்டியை டிரோ சௌ;து தொடரை சமன் செய்வார்கள் என நினைக்கிறேன்...

shibly591
07-08-2008, 07:27 PM
இந்தியா சிறப்பாக ஆடும்...

சச்சின் சதம் குவிப்பது கேள்விக்குறியே...

சேவாக்கும் கம்பீரும் நல்ல போமில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமே...

கொஞ்சம் கொஞ்சமாக இ.லங்கையின் சுழலை சமாளிக்க கற்று விட்ட இந்தியர்கள் போட்டியை டிரோ சௌ;து தொடரை சமன் செய்வார்கள் என நினைக்கிறேன்...

pasaam
08-08-2008, 07:03 AM
அன்பு பாசம்..
சில விடயங்களை ஒரு இடத்தில் வைப்பது சிறப்பானது. உங்கள் திரியை இதனுடன் சேர்த்துள்ளேன்..

ஒத்துழைப்புக்கு நன்றி.
__________________
-அமரன்

இணைப்புக்கு நன்றி அமரன் அவர்களே.
அன்புடன் பாசம்.

shibly591
08-08-2008, 07:09 AM
இந்தியா....104-3

பகல்போசன இடைவேளை...

புதிய இலங்கை வீரர் தம்மிக்க பிரசாட் சேவாக்..டெண்டுல்கர் ..டிராவிட் ஆகிய மூவரையுமே ஆட்டமிழக்கச்செய்து விட்டார்...

பார்ப்பபோம் என்ன நடக்கிறது என்று...?

pasaam
08-08-2008, 07:30 AM
3வது டெஸ்ட் தொடர் அதிரடியுடன் ஆரம்பித்தது. முதல் 42 பந்துகளில் சேவாக் - காம்பிர் ஜோடி 50 ஓட்டங்களைக் குவித்தனர். ஆனால் அந்தோ பரிதாபம் 21 பந்துகளில் 21 ஓட்டங்களை குவித்த சேவாக் தம்மிக பிரசாந்தின் பந்து வீச்சில் பிரசன்னவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்மூர்த்திகளில் ஒருவரான திராவிட் அவர்கள் (கிணற்றுப்படியில் பிள்ளையை விட்டு வந்தவர் போல்) அவசாமாக விளையாடி கால்காப்பில் பந்துபட 29 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெயியேறினார். இவரது விக்கட்டையும் தம்மிக பிரசாத் எடுத்தார். அடுத்து உள்ளே வந்தார் நமது நம்பிக்கை நட்சத்திரம் சச்சின். அவரும் மட்டையைவிட்டு கால் காப்பில் பந்தை வாங்கி (12 பந்துகளில் 06 ஓட்டங்களை குவித்த நிலையில்) அவுட் வழங்கப்பட்டது. ஆனால் சச்சின் இதை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். இறுதியில் அம்முறையீடு நிராகரிக்கப்பட்டு மீண்டும் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டதில் வழங்கயி அவுட்டில் ஒரு சந்தேகம் உள்ளது புரிகிறது. ஆனால் முன்னர் சச்சின் துடுப்பெடுத்து ஆடும் போது ஆடுகளத்தில் இவருக்கேதிராக 13 வீரர்கள் விளையாடுகிறார்கள் என்றொரு கதையுண்டு. இப்போ அவர்களுடன் இன்னொருவரும் சேர்ந்துட்டாரோ? இவரது விக்கட்டையும் எடுத்தது பிரசாத் தான். மொத்தமாக இன்று புதிதாக களமிறக்கிய தம்மிக பிரசாத் 10 ஓவர்கள் பந்துவீசி 49 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்ந்த 03 விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். இலங்கையின் அதிரடி மாற்றம் வேலை செய்கிறது போலும்.
இறுதியில் மதிய உணவு வேளையின் போது இந்தியா 03 விக்கட்டுக்கள் இழப்புக்கு 102 ஓட்ங்கள்என்ற நிலையில் காம்பீர் 57 ஓட்டங்களுடனும் கங்குலி 02 ஓட்டங்களுடனும் களத்திலுள்ளனர். பார்ப்போம்
பாசம்.
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

அன்புரசிகன்
08-08-2008, 08:57 AM
கங்குலி 35 ஓட்டங்களுடனனும் காம்பீர் 75 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கங்குலியை முரளியும் காம்பீரை மென்டிஸூம் வீழ்த்தினர்.

தற்சமயம் களத்தில் லக்ஷ்மன் மற்றும் பட்டேல்.... 162 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள்.

அன்புரசிகன்
08-08-2008, 10:12 AM
மென்டிஸின் பந்துவீச்சுக்கு யாரும் சிறப்பாக முகம்கொடுக்கவில்லை... படபடவென 4 விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார் மென்டிஸ் முரளி 2 விக்கட்டுக்களையும் தம்மிக்க 3 விக்கட்டுக்களையும் வீ்த்தியிருக்கின்னறர்.....

தற்சமயம் களத்தில் சாஹீர் மற்றும் ஷர்மா..... இந்தியா 203 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்கள் என்ற நிலையில் உள்ளது... குறைந்தது இன்று 29-25 பந்துப்பரிமாற்றங்கள் மீதம் உள்ளது...

அன்புரசிகன்
08-08-2008, 11:05 AM
சாஹீர் மற்றும் ஷர்மா சிறப்பாக ஆடுகிறார்கள்... 44 ஓட்டங்களை இணைப்பாட்டங்களாக பெற்றுள்ளார்கள்.... 254 ஓட்டங்களுக்கு 9 விக்கட்...

pasaam
08-08-2008, 11:05 AM
இறுதிச் சோடி சாகீா் கான் - இசாந்த் சா்மா நன்றாக விளையாடுகிறார்கள். சாகீா்கான் 28 ரன்கள் (59பந்துகள்) இசாந்த் சா்மா 12 ரன்கள் (53 பந்துகள்) இந்திய துடுப்பாட்ட வீரா்களை விட இவா்கள் பரவாயில்லை. ஏறத்தாள இதுவரை 112 பந்துகளை சமாளித்துவிட்டனா். இலங்கை வீரா் தில்சான் அபாரமாக களத்தடுப்பு செய்கிறார்.
பாசம்.

pasaam
08-08-2008, 11:27 AM
ஒருவாறு இந்தியத தனது 1வது இனிங்ஸை 249 ஓட்டங்களுக்கு முடித்துக்கொண்டது. இதில் பாராட்டத்தக்கவா்கள் சாகீா் கானும் இசாந் சா்மாவும் தான். இணைப்பாட்ட ஓட்டமாக 53 பெற்றனா். அது மட்டுமல்ல இலங்கையின் திறமையான பந்து வீச்சாளா்களான முத்தையா முரளிதரன், மென்டிஸ் மற்றும் தம்மிக பிரசாத் ஆகியோரின் பந்து வீச்சுக்கு அழகாக முகம் கொடுத்து சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நின்று 134 பந்துகள் அதாவது 23 ஓவா்களுக்கு மேல் சமாளித் துள்ளார்கள்.
மேலும் இலங்கை வீரா்கள் அனைவரும் தத்தமது திறமைகளைக் காட்டினார்கள். அதிலும் திலகரட்ண தில்சானின் களத்தடுப்பு மிக மிக அபாரம்.
இலங்கை வீரா்கள் தமது 1வது இனிங்சை ஆரம்பித்துள்ளனா். களத்தில் வண்டோட, வா்ணபுர ஆகியோர் உள்ளனா்.

பாசம்.

தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

rajatemp
08-08-2008, 11:39 AM
பேசாமல் பந்து வீச்சாளர்களை முதலில் இறக்கலாம்
துடுப்பாட்ட வீரர்களை கடைசியில் இறக்கலாம்
விளையாடதான்

shibly591
08-08-2008, 12:01 PM
பேசாமல் பந்து வீச்சாளர்களை முதலில் இறக்கலாம்
துடுப்பாட்ட வீரர்களை கடைசியில் இறக்கலாம்
விளையாடதான்

ஐடியா அருமை...

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

pasaam
08-08-2008, 12:34 PM
முதல்நாள் ஆட்டமுடிவில் இலங்கை 14 ஓட்டங்கள். மலிந்த வா்ணபுர இசாந் சா்மாவின் பந்து வீச்சில் போல்ட் ஆனார். மைக்கல் வண்டேட்டுடன் சமிந்த வாஸ் (நைற் வாச்மனாக) களத்திலுள்ளார்.
பாசம்
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

rajatemp
08-08-2008, 12:38 PM
விக்கெட்டா அதிசயமாக உள்ளது

அன்புரசிகன்
09-08-2008, 07:37 AM
42 ஆவது ஓட்டம் உள்ள நிலையில் இலங்கையின் வான்டோட் ஆட்டமிழந்தார்... பின்பு வந்த சங்ககார வாஸ் கூட்டணி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சிறந்த நிலைக்கு தற்சமயம் கொண்டுவந்துள்ளனர். களத்தில் வாஸ் 41 ஓட்டங்களுடன்னும் சங்ககார 49 ஓட்டங்களுடனும் இணைப்பாட்டமாக 79 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இந்தியா சார்பில் சர்மா மற்றும் சாகீர்கான் தலா ஒரு விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்...

இலங்கை அணி தற்றசயம் 121 ற்கு 2 விக்கட்டுக்கள் என்ற நிலையில் 128 ஓட்டங்கள் இந்தியாவுடன் பிந்திய நிலையில் உள்ளது...

ராஜா
09-08-2008, 07:49 AM
சமிந்தா 41 ஓட்டங்களா.. பலே..!

ஜாகீர் கானுக்கு சரியான சவால்..!!!!!

அமரன்
09-08-2008, 08:41 AM
வாஸ் 47 ஓட்டங்களுடன் வெளியேற களம் புகுந்த மஹெல இரு ஓட்டங்களுடன் உடனடியாகத் திரும்ப சமரவீரவும் சங்ககாரவும் களத்தில்.. இலங்கை 146/4..
நன்றி:கிரிகின்ஃபோ

"பொத்தனூர்"பிரபு
09-08-2008, 09:40 AM
Tea - Day 2
175/4

http://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifSri Lanka 1st innings
MG Vandort (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/50809.html) lbw b Khan 14 (50)
BSM Warnapura (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/50874.html) b Sharma 8 (22)
WPUJC Vaas (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/50804.html)c Sehwag b Harbhajan Singh 47 (111)
KC Sangakkara (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/50710.html) not out 72 (150)
DPMD Jayawardene (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/49289.html) lbw b Harbhajan Singh 2(6)
Samaraweera (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/50424.html) not out 21 (57)
Extras(b 2, lb 7, w 2)11http://img.cricinfo.com/spacer.gif
Total(4 wickets; 66 overs) 175 runs (2.65 runs per over)

Fall of wickets
1-14 (Warnapura, 5.6 ov), (http://content-eap.cricinfo.com/slvind/engine/current/match/343731.html?innings=2;view=fow;wrappertype=mainframe)
2-42 (Vandort, 16.5 ov),
3-137 (Vaas, 47.3 ov),
4-141 (DPMD Jayawardene, 49.1 ov)http://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gifhttp://img.cricinfo.com/spacer.gif


Bowling
Z Khan (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/30102.html) 1 wit
I Sharma (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/236779.html) 1 WIT
Harbhajan Singh (http://content-eap.cricinfo.com/slvind/content/current/player/29264.html) 2 wit

"பொத்தனூர்"பிரபு
09-08-2008, 09:52 AM
நேரடி ஒளிபரப்புக்கு இங்கே செல்லவும்


http://india-srilanka-sopcast.blogspot.com/

http://india-srilanka-sopcast.blogspot.com/

ராஜா
09-08-2008, 11:32 AM
சமரவீரா அவுட்..

இலங்கை 205 / 5

rajatemp
09-08-2008, 11:50 AM
நேரடி ஒளிபரப்புக்கு இங்கே செல்லவும்


http://india-srilanka-sopcast.blogspot.com/

http://india-srilanka-sopcast.blogspot.com/

இதை நேரில் வேறு பார்க்க வேண்டுமா

ஓவியன்
09-08-2008, 01:58 PM
சதமடித்துள்ளார் சங்ககார, பொறுமையாக களத்தில் நின்று இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை உயரக் காரணமாக இருந்தார்....
__________________________________________________________________________________________________________

இலங்கை அணித்தலைவரும், இலங்கைத் துடுப்பாட்ட வீரர்களும் கேட்கும் ப்ரீவியூ வேண்டுகோள்கள் பெரும்பாலும் வெற்றிகரமாக அமைகின்றன....

சரியான வகையில் தீர்மானித்துக் கொண்டு, சரியான நேரத்தில் வேண்டுகோள் விடுக்கும் மகேல ஜெயவர்த்தன பாராட்டுக்குரியவர்....

pasaam
10-08-2008, 04:06 AM
Originally Posted by "பொத்தனூர்"பிரபு View Post
நேரடி ஒளிபரப்புக்கு இங்கே செல்லவும்


http://india-srilanka-sopcast.blogspot.com/

http://india-srilanka-sopcast.blogspot.com/
இதை நேரில் வேறு பார்க்க வேண்டுமா

ஆமா. நேரே பார்த்த நமக்கு ஒரே போர் தான். இருந்தும் நம்ம இலங்கை அணிக்கு ஒரு சபாஷ்.
பாசம்
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்.

rajatemp
10-08-2008, 11:01 AM
இந்தியாவின் தோல்வி உறுதியா

ராஜா
10-08-2008, 11:08 AM
இந்தியா 109 / 4.

இலங்கையை விட 38 ஓட்டங்கள் பிந்தங்கிய நிலையில் தற்போது உள்ளது.

கம்பீர் 26

சேவாக் 34.

திராவிட் 26*

ராஜா
10-08-2008, 11:10 AM
தற்போது கள்மிறங்கும் சச்சின் (150 ஆவது டெஸ்ட்) சாதிப்பாரா..?

rajatemp
10-08-2008, 11:15 AM
ஆகா சச்சின் 1 ஓட்டம் எடுத்துவிட்டார் அதுவும் 3 பந்துகளில்

ஓவியன்
10-08-2008, 11:37 AM
சச்சின் டெண்டுல்கர் 14 ஓட்டங்களுடன் மெண்டிசின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார், ரிவியூவும் கேட்டுப் பார்த்தார், கடவுள் கருணை காட்டவில்லை...

ராஜா
10-08-2008, 11:37 AM
சச்சின் அவுட்..! (14 ஓட்டங்கள்).

131/ 5


அஜந்தா மெண்டிஸின் மாயா ஜாலத்துக்கு இளைய ப்ராட்மன் இரையானார்..

முதல் இன்னிங்ஸ் பற்றாக்குறை 16 ஓட்டங்கள் என்ற நிலையில் பாதி இந்திய அணி பெவிலியன் திரும்பியுள்ளது..!

rajatemp
10-08-2008, 11:57 AM
பணத்துடன் வெளியேறுகிறது இந்திய கிரிக்கெட் அணி

ராஜா
10-08-2008, 12:07 PM
இந்திய அணி மட்டையாளர் வரிசையில் இறுதி இணையான திராவிடும், லக்ஸ்மணும் தற்போது ஆடுகிறார்கள்..

ராகுல் திராவிட் 46*.

இந்தியாவின் நிலை... மதில் மேல் பூனை..!

வெற்றி தேவதை யாருக்கு மாலையிடப்போகிறாள் என்பதை தீர்மானிக்கும் கட்டம் இது..!!

pasaam
10-08-2008, 12:32 PM
ஆமா. இந்தியாவின் தோல்வி ஓரளவு (90 வீதம்) உறுதியாகிவிட்டது - ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலொழிய.
உண்மையிலேயே இலங்கையின் இளம் வீரா்கள் அசத்துகிறார்கள். தம்மிக பிரசாத் இந்திய அணியினரின் விக்கட் வீழ்த்தும் படலத்தை ஆரம்பித்துவைக்க மெண்டிஸ் தொடா்கிறார். அதற்கு நம்ம முரரளியும் உறுதுணைபுரிகிறார்.
ஆக மொத்தத்தில் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணியினா் தமது 2வது இனிங்ஸில் 05 விக்கட்டுகளைப் பறிகொடுத்து 14 ஓட்டங்களைப் பெற்றுள்ளனா். என்ன அபாரம்?
இம் முறை தொடரில் விறுவிறுப்பே இல்லாமல் போய்விட்டது. உப்பு - புளி இல்லாமல் பத்தியம் சாப்பிட்டது போலுள்ளது.
பாசம்
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

pasaam
10-08-2008, 04:21 PM
அஜந்தா மெண்டிஸ் - உலக சாதனை
ஒரு சுழல் பந்து வீச்சாளா் முதல் மூன்று டெஸ்ட் விளையாட்டிலும் பெற்ற விக்கட்டுக்கள் 24 ஆகவே இதுவரை இருந்துவந்தது. இச் சாதனை சுமார் 62 வருடங்களுக்கு முன்னா் இங்கிலாந்து வீரா் ஒருவரால் ஏற்படுத்தப்படடிருந்தது. தற்போது அதை முறியடித்து மெண்டிஸ் 25 விக்கட்டுக்களை பெற்றுள்ளார். அதுவும் இந்த மூன்றாவது டெஸ்டடில் இன்னமும் ஐந்து விக்கட்டுக்கள் வீழ்த்தப்படவுள்ளது. சாதனை எண்ணிக்கை மேலும் உயரலாம். அவ்வாறு எட்டப்படும் சாதனை இன்னமும் பல ஆண்டுகள் நிச்சயம் நீடிக்கும். முரளிக்குப் பின்பு சாதனை நாயகன் மெண்டிஸ்.
வாழ்க இலங்கையின் கிரிக்கட் சாதனை நாயகா்கள்.

arun
10-08-2008, 07:24 PM
ஆக மொத்தத்தில் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணியினா் தமது 2வது இனிங்ஸில் 05 விக்கட்டுகளைப் பறிகொடுத்து 14 ஓட்டங்களைப் பெற்றுள்ளனா். என்ன அபாரம்?
இம் முறை தொடரில் விறுவிறுப்பே இல்லாமல் போய்விட்டது. உப்பு - புளி இல்லாமல் பத்தியம் சாப்பிட்டது போலுள்ளது.
பாசம்
தமிழ் எந்தன் உயிருக்கும் மேல்

அன்பு நண்பரே இந்தியா 14 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது தெரியாமல் எதும் பதிக்க வேண்டாம் இது எனது தாழ்மையான கருத்து

arun
10-08-2008, 07:31 PM
அஜந்தா மெண்டிஸ் - உலக சாதனை
ஒரு சுழல் பந்து வீச்சாளா் முதல் மூன்று டெஸ்ட் விளையாட்டிலும் பெற்ற விக்கட்டுக்கள் 24 ஆகவே இதுவரை இருந்துவந்தது. இச் சாதனை சுமார் 62 வருடங்களுக்கு முன்னா் இங்கிலாந்து வீரா் ஒருவரால் ஏற்படுத்தப்படடிருந்தது. தற்போது அதை முறியடித்து மெண்டிஸ் 25 விக்கட்டுக்களை பெற்றுள்ளார். அதுவும் இந்த மூன்றாவது டெஸ்டடில் இன்னமும் ஐந்து விக்கட்டுக்கள் வீழ்த்தப்படவுள்ளது. சாதனை எண்ணிக்கை மேலும் உயரலாம். அவ்வாறு எட்டப்படும் சாதனை இன்னமும் பல ஆண்டுகள் நிச்சயம் நீடிக்கும். முரளிக்குப் பின்பு சாதனை நாயகன் மெண்டிஸ்.
வாழ்க இலங்கையின் கிரிக்கட் சாதனை நாயகா்கள்.

தெரியாமல் எந்தவொரு கருத்தையும் பதிக்க வேண்டாம் பிளீஸ்

ஓவியன்
11-08-2008, 04:42 AM
2001 ஆம் ஆண்டில் பாலோ ஆனில் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரலிய அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய லக்ஸ்மன் திராவிட் ஜோடி, இன்றும் அந்த பழைய வரலாற்றை மீண்டும் இலங்கை மண்ணில் நடத்திக் காட்டுமா...??

ராஜா
11-08-2008, 06:39 AM
வெங்கிப்பரப்பு வெங்கட் சாய் 50*

கும்ப்ளே..அவுட்..!

இந்தியா 7 விக்கெட் இழந்துவிட்டது.

229/7

82 ரன்கள் முன்னிலை.

ராஜா
11-08-2008, 06:51 AM
நாள் 4. உணவு இடைவேளை.

இந்தியா 238/7.

லக்ஸ்மண் 50*

ஹர்பஜன் 9*

ஓவியன்
11-08-2008, 08:13 AM
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி, இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு சுமார் 122 ஓட்டங்கள்...!! :)

அமரன்
11-08-2008, 08:15 AM
லக்ஸ்மன் ஆட்டமிழக்காத நிலையில் இந்திய அணி 268 ஓட்டங்களுடன் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை இழந்தது. 121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடத் தயாராகிறது இலங்கை அணி. ஒரு நாளை விட அதிகமாக உள்ள நிலையில் இலக்கை எட்டுமா இலங்கை..

தகவலுதவி: கிரிக்கின்ஃபோ

ராஜா
11-08-2008, 08:16 AM
இந்தியா...

விளையாட்டு இரசிகர்களின் மகிழ்வை ...

இரட்டிப்பு ஆக்குமா..? அல்லது..

தட்டிப் பறிக்குமா..?

ராஜா
11-08-2008, 08:26 AM
இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை பெருக்கும் நிகழ்வு..

இலங்கை 11/1.

வேன்டார்ட் விக்கெட்டை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார்..!

ராஜா
11-08-2008, 08:57 AM
23/2.

கடந்த இன்னிங்ஸின் கதாநாயகன் சங்கக்காரா வெளியேறினார்..!

mania
11-08-2008, 08:57 AM
ராஜா ஸ்கோரை அப்படியே டபிள் ஆக்கி 22/2....!!!!
அன்புடன்
மணியா.:D

அமரன்
11-08-2008, 09:07 AM
இலங்கைக் கப்டன் நாற்காலியுடன் வந்திருப்பாரோ..

Jayawardene (http://content-uk.cricinfo.com/slvind/content/current/player/49289.html) (rhb) 1 (18)

ராஜா
11-08-2008, 09:07 AM
அண்ணா...

அப்படிப் பார்த்தாலும் 110/10 தானே வருது...!

அப்போ.........????????????????????????????????????????

mania
11-08-2008, 09:19 AM
அண்ணா...

அப்படிப் பார்த்தாலும் 110/10 தானே வருது...!

அப்போ.........????????????????????????????????????????

:rolleyes::rolleyes::rolleyes::D:D:D

ராஜா
11-08-2008, 09:35 AM
தேநீர் இடைவேளை...

இலங்கை 45/2

வர்ணபுரா 20*, மகேலா 10*

வெற்றிக்குத் தேவை 77 ஓட்டங்கள்.

( இலங்கையில் மழை வரும் வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது..!)

அமரன்
11-08-2008, 09:37 AM
( இலங்கையில் மழை வரும் வாய்ப்பு இல்லையென்றே தெரிகிறது..!)

:):):)

45 ஓட்டங்களும் 2 விக்கட்டுகளும் எடுத்த கொடுத்த களைப்புத் தீர டீ குடிக்கப் போறாங்கோ...

ராஜா
11-08-2008, 10:50 AM
இந்தியாவை 8 விக்கெட் வேறுபாட்டில் இலங்கை வீழ்த்தியது..!

இலங்கை மண்ணில் இந்தியா தொடரை இறுதியாக வென்ற ஆண்டு.. 1993..!

இலங்கை அணிக்கு வாழ்த்துகள்..!

அமரன்
11-08-2008, 10:54 AM
கங்குலி வீசிய முதலாவது பந்து தொடரின் கடைசிப் பந்தானது..
நான்கு ஓட்டங்களை பெற்று அரைச்சதம் எட்டினார் ஜயவர்த்தன..

ராஜா
11-08-2008, 11:04 AM
110 கோடி மக்கட்தொகை கொண்ட நாட்டு அணியை வீழ்த்திய குட்டித்தீவுக்கு பாராட்டுகள்..!

"எதிர்பாராத" முறையில் தோல்வியுற்ற இந்திய "வீரர்களுக்கு" ஆறுதல்கள்..!

Narathar
11-08-2008, 11:04 AM
வெற்றி பெற்ற இலஙை அணிக்கு மன்றம் சார்பில் நாரதரது வாழ்த்துக்கள்

shibly591
11-08-2008, 11:27 AM
இலங்கைக்கு வாழ்த்துக்கள்...

ஆதி
11-08-2008, 12:57 PM
110 கோடி மக்கட்தொகை கொண்ட நாட்டு அணியை வீழ்த்திய குட்டித்தீவுக்கு பாராட்டுகள்..!

"எதிர்பாராத" முறையில் தோல்வியுற்ற இந்திய "வீரர்களுக்கு" ஆறுதல்கள்..!

அண்ணா இதில் ஏதாவது மறைபொருள் இருக்கா ?

இலங்கையணிக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..

உதயசூரியன்
11-08-2008, 01:45 PM
இலங்கைக்கு வாழ்த்துக்கள்..

ஆனாலும் ஒரே ஒரு சின்ன குறை..
டென்டுல்கருக்கு மூன்றாவது நடுவரும் தவறான தீர்ப்பளித்தது...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மன்மதன்
11-08-2008, 02:02 PM
110 கோடி மக்கட்தொகை கொண்ட நாட்டு அணியை வீழ்த்திய குட்டித்தீவுக்கு பாராட்டுகள்..!

"எதிர்பாராத" முறையில் தோல்வியுற்ற இந்திய "வீரர்களுக்கு" ஆறுதல்கள்..!

ஷேவாக் + கம்பீரின் துவக்க ஆட்டத்தை பார்த்ததும் 400 ரன்கள் டார்கெட் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தேன்..

'முடியல' என்கிறார்களே...:rolleyes:

அன்புரசிகன்
11-08-2008, 02:19 PM
தெரியாமல் எந்தவொரு கருத்தையும் பதிக்க வேண்டாம் பிளீஸ்

இலங்கையின் தினசரியில் வெளிவந்த செய்தி தான்.... விளையாடிய முதல் தொடரில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய பெருமை அஜந்த மென்டிஸை சூழ்ந்துள்ளது...

1946ம் ஆண்டு பிஸ்டர் என்பவர் 25 விக்கட்டுக்களை வீழ்த்தி கைப்பற்றிய அந்த சாதனையைத்தான் மென்டிஸ் தனதாக்கிக்கொண்டுள்ளார்...

ஆதாரம்:
சுட்டி1 (http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=84):


வீரகேசரி இணையம் 8/11/2008 2:17:07 PM -இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடரில் 25 டெஸ்ட் விக்கட்டுகளை வீழ்த்தி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1946 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கிரிக்கட் வீரர் பிஸ்டரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சுட்டி2 (http://content-gulf.cricinfo.com/slvind/engine/current/match/343731.html):

Indians, powered by the big four, landed up in Sri Lanka after the debacle of the youth in the Asia cup final. The mission was to conquer Ajantha Mendis and Murali. Sri lanka wanted to show their supremacy at home. Game on. The first battle went to Sri Lanka when M&M annihilated the visitors. Round two to India as they galloped on Sehwag's fury to overcome the hosts. The finale has been won convincingly by Sri Lanka. The fab four have struggled barring for a odd contribution here and there. Ajantha Mendis has already made little boys in Sri Lanka and India bend their middle fingers. He has been finger-licking good. So has been Sri Lanka.

Hang on for quotes from post-match ceremony.

Kumble: It was important to get a good first-innings total but we faltered. The batters were not consistent throughout the series. They let us down. We had a chance to make up in the second innings but again we didn't score.Well played Sri Lanka. They deserve this victory. Mendis was the key bowler for SL, supported by Murali." Asked what is the one thing he would like to change this series, Kumble deadpans, "The result."

Man of the Match Sangakkara : "It was a case of getting as many runs as possible and stretch the lead. The innings was set up by Vaas and later supported later by Prasanna and Dammika. The special thing for me is the entry of the youngsters - Ajantha Mendis, Warnapura, Prasanna. I was bit lucky in the 40s, the key thing is to capitalize and go on to score runs. A hundred is a hundred but this was one of the tougher ones, especially considering how this series has gone.

Man-of-the-Series Ajantha Mendis. Sanga translates for him.
"He didn't think too much and get confused. He just did what he knew. The basics. He got support from his team-mates and the crowd. He says that his family is extremely support of him and more importantly, he feels the whole of Sri Lanka supports him."

Arjuna Ranatunga gives him another trophy for taking the most number of wickets in a debut three-match series.

Mahela :"The guys showed lots of character especially after the Galle Test. Amazing effort. Sanga capped it off. We have been consistent in the last 2-3 years away from home as well. Our game is coming together. The younger players are taking responsibitly and the senior players pushed themselves. Murali still picked up 20 wickets and Vaas did very well. Both Murali and Mendis bowled very well and kept the pressure on the good Indian batting line up. we knew we wanted some extra pace and Dammika has a big heart. We have seen in the nets and that's what he did there. He didn't show much nerves. Excellent debut."

arun
11-08-2008, 06:23 PM
இலங்கையின் தினசரியில் வெளிவந்த செய்தி தான்.... விளையாடிய முதல் தொடரில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய பெருமை அஜந்த மென்டிஸை சூழ்ந்துள்ளது...
சுட்டி2 (http://content-gulf.cricinfo.com/slvind/engine/current/match/343731.html):

முதல் தொடரில் என்பதை அவர் பதிக்க தவறி விட்டார் நண்பரே சிரத்தையுடன் ஆதாரம் வெளியிட்டமைக்கு நன்றி

arun
11-08-2008, 06:25 PM
தொடரை வென்ற இலங்கை அணிக்கு பாராட்டுக்கள்

இந்திய அணிக்கு?..... :icon_rollout::fragend005:

அமரன்
11-08-2008, 07:52 PM
தொடரை வென்ற இலங்கை அணிக்கு பாராட்டுக்கள்

இந்திய அணிக்கு?..... :icon_rollout::fragend005:
ஒரு நாள் போட்டியின் கோப்பை சொந்தமாக்க முன்வாழ்த்துகள் சொல்லுங்கள்.

arun
12-08-2008, 07:26 PM
ஒரு நாள் போட்டியின் கோப்பை சொந்தமாக்க முன்வாழ்த்துகள் சொல்லுங்கள்.

எப்பொழுதுமே இதை தானே சொல்லி கொண்டிருக்கிறோம்:D