PDA

View Full Version : பொல்லாத கனவுகள்..



rambal
22-07-2003, 01:19 PM
பொல்லாத கனவுகள்..

சில மனுஷிகளின்
ஆதர்சத்தில்
ராஜகுமாரன்கள்
உருவாகிறார்கள்..

சில மனுஷன்களின்
நீட்டிக்கப்பட்ட
விரகத்தில்
ராஜகுமாரிகளும்..

இவள் கனவு காணலாம்
ராஜகுமாரியைப் போலும்..
இவன் கனவு காணலாம்
ராஜகுமாரனைப் போலும்..

எந்த ராஜகுமாரிக்கு
எந்த ராஜகுமாரனோ?
கனவுகள் பொல்லாதவை...

karavai paranee
22-07-2003, 01:25 PM
பொல்லாத கனவுகள்

என் கனவில் அவளும்
அவள் கனவில் நானுமல்லாமல்

கனவுகள் பொல்லாதவைதான்

நன்றி நண்பரே

சிறுகச்சொன்னாலும் தெளிவாகச்சொல்கின்றீர்கள் வாழ்த்துக்கள்

சேரன்கயல்
23-07-2003, 04:17 AM
சந்திரபாபு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது...

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...பாடலில் இப்படி கனவு பற்றி வரும்..

gankrish
23-07-2003, 10:19 AM
சேரன்கயல் அவர்களே அந்த பாட்டு

அவள் கனவில் அவன் வருவான் அவளை பார்த்து சிரிப்பான்
இவன் கனவில் யார் வருவார் யாரை பார்த்து சிரிப்பான்..

ராம் .. உங்களிடம் உள்ளது `கனவுகளே ஆயிரம் கனவுகளே....'

Narathar
25-07-2003, 06:03 AM
என்ன ராம்பால் நம்ம ராஜகுமாரனையுமா? ;) சொல்கின்றீர்கள்?

Tamil_Selvi
25-07-2003, 04:58 PM
:P இனிமையான ஓர் கவி...
கனவுகள் பொல்லாதவைதான் இருந்த போதிலும் கனவுகளை தவிர்க்க முடியுமா?