PDA

View Full Version : கோஹினூர் கொலைகள்!!(நிறைவடைந்தது)



சிவா.ஜி
08-07-2008, 01:48 PM
பாகம்-1

ஆம்ஸ்டர்டாம் சிப்போல் விமான நிலையத்தில், ட்ரான்ஸிட்டில் அடுத்த பயணத்துக்கான போர்டிங் அட்டையை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தான் வெற்றிச் செல்வன். ஜியாலஜிஸ்ட்டாக ஒரு அமெரிக்க எண்ணை திருடும் மகா நிறுவனத்தினருக்காக மேற்கு ஆப்பிரிக்க நாடான கபான் என்ற நாட்டில் பணியிலிருந்தான். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாயகம் வந்துபோகும் வாய்ப்பிருந்தது. கபான் நாட்டிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு விமானச்சேவை இல்லையென்பதால், கே.எல்.எம் விமான சேவையின் மூலம் சிப்போல் வந்து அங்கிருந்து சென்னை செல்வது அவன் வழக்கம். வழக்கமென்றால் இது மூன்றாவதுமுறை அவ்வளவுதான்.

கபானின் தலைநகரம் லிப்ரெவெலியில் விமானம் ஏறும்போதே சிப்போல் விமான நிலைய வரிவிலக்கு கடைகளில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாராக சட்டைப் பையில் வைத்திருந்தான். 5அடி 10 அங்குல உயரம். சாக்லேட்டு கலருக்காரா, சிலேட்டு முதுகுகாரா என்று பாடப்படக்கூடியவனாக நல்ல ஆரோக்கியத்தில் இருந்தான்.

அடுத்த வரிசையில் ஒரு ஜெர்மேனியன், ஆத்தா உடம்புக்குள் புகுந்து மலையிறங்கியபின் நிற்பதைப் போல தலை தனியாக ஆட, நின்று கொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தான். மேசைக்கு அந்தப்புறமிருந்த பெண்ணிடம்

'என்னை ஏன் இரண்டு நாளாக இந்த விமான நிலையத்தில் வைத்திருக்கிறீர்கள். என்னை என் வீட்டுக்கு அனுப்புங்கள்.என் ரஷ்ய மனைவி எனக்காக காத்துக்கொண்டிருப்பாள்.'....

என்று சலம்பிக்கொண்டிருந்தான். அவன் சலம்பலைத் தாங்க முடியாதவனாக அவனருகே வந்த விமான நிலைய ஊழியர் ஒருவர் அவனை சமாதானப் படுத்தி அப்புறப்படுத்தினார். வெற்றிச்செல்வன் அந்த ஊழியரிடம் என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு,

"மூன்று நாட்களுக்கு முன் இவனும் ஒரு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தான். அன்றே அவனது அடுத்த விமானமும் தயாராக இருந்தது. நன்றாக குடித்துவிட்டு நடக்க முடியாமல் இருந்தவனை விமானத்தில் ஏற நாங்கள் சம்மதிக்க வில்லை. நேற்றும் அதன் முன் தினமும் இதே தொல்லைதான். அதனால் இப்போதும் இங்கேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. எப்படியும் இன்று தண்ணீர்த் தொட்டியில் இரண்டுமணிநேரம் முக்கிவைத்தாவது அனுப்பிவிடுவோம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவன் வெற்றி. அதே சமயம் தன்னால் முடிந்த உதவியையும் செய்யக்கூடியவன். கவிதை எழுதுவான். கராத்தே தெரிந்துவைத்திருக்கிறான். டிஸ்கொதேக்களுக்கும் போவான், சுகி சிவத்தின் உரை கேட்கவும் போவான். கையில் கிடைத்த போர்டிங் அட்டையை எடுத்துக்கொண்டு மெல்ல வரிசைவிட்டு வெளி வந்தான். அருகிலிருந்த திரையில் அவனது விமானம் புறப்படும் டெர்மினலைக் கண்டுபிடித்தான். மிகப்பெரிய விமானநிலையம். இவனது டெர்மினல் அங்கிருந்து சற்றேறக்குறைய அரை கிலோமீட்டர் இருந்தது. நடக்க ஆரம்பித்தான். இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாமென்ற எண்ணத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடை இருந்த பகுதிக்குப் போனான்.

30, 50, 125 ஈரோ என்று விலைகள் போட்டிருந்த அட்டைகளைப் பார்த்ததும் வாங்கவேண்டுமென்று தோன்றிய எண்ணத்தை இந்தியத்தொகையில் மாற்றிப்பார்த்து கைவிட்டான். போனமுறை திரும்பி வரும்போது தங்கையும், நெருங்கிய நன்பனும் வாங்கிவரச் சொன்னதை மட்டும் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளிவந்து நடை பாதையில் சங்கமமான நிமிடம் அந்தப் பெண் அவனை இடித்துக்கொண்டு போனாள். கோபமாய் அவளைத் திரும்பிப் பார்த்தவன், அதே நேரம் இவனை நோக்கித் திரும்பிய அவளது கலக்கமான முகம் பார்த்து கோபம் குறைந்து குழப்பமானான். துவாரப்பாலகர்களைப் போல, கோட் அணிந்த இரண்டுபேர் அவளை அரை அங்குல இடைவெளியில் கிட்டத்தட்ட தள்ளிக்கொண்டு போனார்கள்.

எப்போதும் தலைதூக்கும் அவனது ஆர்வம் இப்போது எட்டிப் பார்த்தது. கைக்கடிகாரம் பார்த்து அந்த எண்ணத்தை மறந்து நடந்தான். நான்கு அடிகூட நடந்திருக்க மாட்டான்...ஒரு ஆள் இந்தியமுகம், மேற்கத்திய நாகரீகத்துடன் இருந்த அவன் இவனை நிறுத்தினான். கையில் வைத்திருந்த வெள்ளைக் காகிதத்தை அவனிடம் கொடுத்துக்கொண்டே ஆங்கிலத்தில்,

'அதோ அங்கே போகிறாளே ஒரு பெண்..."என்று அவனை சற்றுமுன் இடித்துவிட்டுப் போனப் பெண்ணைக் காட்டி,

"இதை என் கையில் திணித்துவிட்டுப் போனாள். இதில் என்ன எழுதியிருக்கிறதென்று என்னால் படிக்க முடியவில்லை. ஏதாவது இந்திய மொழியாக இருக்கும்...உங்களுக்குப் புரிகிறதா என்று பாருங்கள்' என்றான்.

இவனுக்கே உள்ள குறும்பில்..அந்த மனிதனைப் பார்த்து "ஏன் நீங்களும் இந்தியர்தானே...உங்களால் படிக்க முடியாதா?" என்று கேட்டதும்,

"ஹே மேன்...நான் இந்தியனாக இருந்தாலும் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு இந்த குப்பைகளெல்லாம் தெரியாது...கீப் திஸ்' என்று அந்த கை துடைக்கும் தாளை வெற்றியின் கைகளில் திணித்துவிட்டு எனக்கென்ன என்பதைப்போல நகர்ந்து மறைந்தான்.

சுரு சுருவென்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டே அந்த தாளைப் பிரித்தான். அதில்

"என்னைக் காப்பாத்துங்க...ஆபத்து"

என்று தமிழில் எழுதியிருந்தது.

தொடரும்

செல்வா
08-07-2008, 02:49 PM
முதல்ல வந்து என்னைக் காப்பாத்துங்க... இப்புடி எல்லாம் சஸ்பென்ஸ் வச்சீங்க... அப்புறம் என்னைக் காப்பாத்துங்கணு அஞ்சல் அனுப்பும் படி ஆயிடும்.

ஆரம்பித்து விட்டது சிவா அண்ணாவின் அடுத்த அட்டகாசம்...
துவங்கி விட்டது துப்பறியும் தொடர்கதை
கோஹினூருக்காக கொடூரக் கொலைகளுடன் குலைநடுங்க வைக்கும் காட்சிகள்...
படிக்கத் தவறாதீர்கள்.....
அட அட .அண்ணா... இப்டி எல்லாம் நான் விளம்பரம் செய்வேன் அதனால இந்தக் கதைய நான் தான் பாக்கட் நாவலாக்கப் போறேன்.. :)

கண்மணி
08-07-2008, 02:55 PM
அட அட .அண்ணா... இப்டி எல்லாம் நான் விளம்பரம் செய்வேன் அதனால இந்தக் கதைய நான் தான் பாக்கட் நாவலாக்கப் போறேன்.. :)

பாக்கெட்ல போட எப்படியெல்லாம் பிளான் பண்றாங்க பாருங்கண்ணா!:eek::eek::eek:

mukilan
08-07-2008, 03:04 PM
தொடர் கதைக்குரிய இலக்கணங்களோடு அசத்தலான ஆரம்பம். இன்னமும் நீங்கள் தொடர்ந்து கொடுக்கப் போகும் வைரங்களுக்காகக் காத்திருக்கிறோம் அண்ணா.
நன்றியும் எதிர்பார்ப்பும்..

சிவா.ஜி
08-07-2008, 03:44 PM
முதல்ல வந்து என்னைக் காப்பாத்துங்க... இப்புடி எல்லாம் சஸ்பென்ஸ் வச்சீங்க... அப்புறம் என்னைக் காப்பாத்துங்கணு அஞ்சல் அனுப்பும் படி ஆயிடும்.

ஆரம்பித்து விட்டது சிவா அண்ணாவின் அடுத்த அட்டகாசம்...
துவங்கி விட்டது துப்பறியும் தொடர்கதை
கோஹினூருக்காக கொடூரக் கொலைகளுடன் குலைநடுங்க வைக்கும் காட்சிகள்...
படிக்கத் தவறாதீர்கள்.....
அட அட .அண்ணா... இப்டி எல்லாம் நான் விளம்பரம் செய்வேன் அதனால இந்தக் கதைய நான் தான் பாக்கட் நாவலாக்கப் போறேன்.. :)

அட அட அட என்னா விளம்பரம்ப்பா....இப்படியெல்லாம் ஓவர் பில்டப் குடுத்து என்னைய கவுக்க எத்தினி நாளா திட்டம்....?

ஏதோ நம்மால முடிஞ்ச அளவுக்கு எழுதலான்னு பாத்தா...வில்லங்கம் பண்ணுதாங்களே....

சிவா.ஜி
08-07-2008, 03:47 PM
தொடர் கதைக்குரிய இலக்கணங்களோடு அசத்தலான ஆரம்பம். இன்னமும் நீங்கள் தொடர்ந்து கொடுக்கப் போகும் வைரங்களுக்காகக் காத்திருக்கிறோம் அண்ணா.
நன்றியும் எதிர்பார்ப்பும்..

நன்றி முகிலன். என் சின்ன மூளையில் தோன்றும் ஏதோ சில எண்னங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தட்டிக்கொடுத்தோ அல்லது குட்டிக் கொடுத்தோ என்னை ஆதரிக்க வேண்டியது நீங்கள்தான்.

செல்வா
08-07-2008, 03:56 PM
பாக்கெட்ல போட எப்படியெல்லாம் பிளான் பண்றாங்க பாருங்கண்ணா!:eek::eek::eek:
:icon_ush::icon_ush: ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போடாதீங்க... (உங்களையும் பார்ட்னராச் சேத்துக்கறேன்) :D:D

அன்புரசிகன்
08-07-2008, 05:04 PM
அடக்கடவுளே... இப்படி எல்லாம் பொறுமைகாக்க வைக்காதீங்க...

மிக மிக சுவாரசியமாக போகிறது...

மதி
09-07-2008, 02:52 AM
ஆரம்பிச்சாச்சா..உங்க அட்டகாசங்களை. இதற்கு தான் தயார் படுத்திக் கொண்டிருப்பதாக சொன்னீங்களா? உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

கலக்கலான ஆரம்பம்.. சீக்கிரம் தொடருங்க..

சிவா.ஜி
09-07-2008, 04:36 AM
நன்றி அன்பு. நன்றி மதி. சீக்கிரமே தொடர்ந்துடுவோம். நீங்கள்லாம் கூட வரும்போது எனக்கென்ன தயக்கம்.

aren
09-07-2008, 04:43 AM
அட்டகாசமான ஆரம்பம். இதைப் படித்தவுடனேயே அதற்குள் தொடரும் என்பதைப் பார்த்து கொஞ்சம் ஏமாற்றம் கொஞ்சம் எரிச்சல்.

பரவாயில்லை. ஒரு நல்ல கதையைப் படிக்க நேரம் எடுத்துக்கொண்டால் பரவாயில்லை.

தொடருங்கள்.

சிவா.ஜி
09-07-2008, 04:50 AM
அடடா...ஆரெனை எரிச்சலடைய வைத்துவிட்டேனா....இனி வேகமாகப் போகலாம் ஆரென். அடுத்த பாகத்துக்கு கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டதால் உடனே போட முடியவில்லை. விவரங்கள் கிடைத்துவிட்டன. இனி வேகமாக பதிகிறேன். நன்றி ஆரென்.

aren
09-07-2008, 04:54 AM
ஒன்றும் அவசரமில்லை. மெதுவாகவே கதையை கொண்டுசெல்லுங்கள்.

இதயம்
09-07-2008, 05:08 AM
ஆஹா..சிவாவின் அடுத்த தொடர்கதை..!! கதை படிக்கும் அளவுக்கு நேரமில்லாத நான் அவரின் கதைகளை படிக்க காரணம் அவரின் எழுத்து நடை, விறுவிறுப்பான கதையோட்டம் என்னுடைய ஆதர்ச நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் பாணியோடு ஒத்திருக்கிறது. ராஜேஷ்குமார் நிறைய க்ரைம் கதைகள் எழுதினாலும் எல்லா கதைகளும் கெட்டவன் அழிவான் என்ற நீதியோடு முடியும். அதே போல் தமிழுக்கு எளிமை சேர்க்க அவர் நிறைய வார்த்தைகளை உருவாக்கி இருக்கிறார். உதாரணத்திற்கு, "(தொலைபேசி எண்ணை) டயல் செய்தான்" என்பதை அவர் மிக அழகாக "டயலினான்" என்பார். இது போன்ற புதுமைகள் அவர் கதையை படிக்கும் சுவராஸியத்தை தூண்டுபவை..! அவரின் அந்த நடை, நீதி, புதுமைகளை நான் நம் சிவாவின் எழுத்துக்களில் காண்கிறேன். அவர் கதைக்கு கொடுத்திருக்கும் தலைப்பை வைத்து கணிக்கும் பொழுது கோஹினூர் வைரத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையில் நிறைய கொலைகள் விழும் போலிருக்கிறது..!!

ஒரு க்ரைம் தொடர் கதைக்கான இலக்கணங்களோடு தொடங்கி இருக்கும் கதையின் முதல் அத்தியாயத்தின் முடிவு ஏற்கனவே பல கதைகளில் வந்தது தான் என்றாலும் இனி வரப்போகும் அத்தியாயங்களை வைத்து தான் கதையின் சிறப்பை சிலாகிக்க முடியும். நம் எதிர்பார்ப்பின்படி ஒரு சிறப்பான கதையை சிவா தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படைப்பின் வெற்றி என்பது வாசகனை சென்றடையும் எளிமையான எழுத்தில் இருக்கிறது. அவர் எழுத்தில் இருக்கும் எளிமை நிச்சயம் சிவாவுக்கு பெரும் வெற்றியை தேடித்தரும். குற்றக்கதைகளை சிவாவால் மிக எளிதாக எழுத முடியும் அவரின் முந்தைய எழுத்துக்களில் இருந்து கண்டு கொள்ளலாம். உதாரணம், அவரிடம் தான் கடலோரக்குற்றங்கள் கதையில் வந்த சேட்டு உள்ளிட்ட "சில்லறைகள்"..! இனி வரப்போகும் கதையின் அடுத்தடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..!!

கூடிய விரைவில் ஜீயே பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் ஜி. அசோகன் நம் சிவாவை தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதுவரை, அவரின் நாவலை பாக்கெட் நாவலாக போட்டு பாக்கெட்டை நிறைக்க நினைக்கும் "(அப்)பாவி"களின் சூழ்ச்சியில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டுமே என்று எனக்கு கவலையாய் இருக்கிறது..!!

வாழ்த்துக்கள் சிவா.!!

Narathar
09-07-2008, 05:50 AM
சுறு சுறுப்பான விமான நிலையம்...
அடுத்தவர் நிலமைக்காக கவலைப்படும் நாயகன்.
ஆபத்தில் ஒரு இந்தியப்பெண்......

ஆஹா!!! தொடருங்கள் தொடருங்கள்

சிவா.ஜி
09-07-2008, 06:04 AM
இதயம் சொல்லும் அளவுக்கு என்னால் எழுத இயலாது. அதனால் கவலைப் படாதீர்கள் சில (அப்)பாவிகளே பாக்கெட் நாவல் போட்டுக்கொள்ளட்டும்.
ஆனால் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்ய முயலுகிறேன். நன்றி இதயம்.

நன்றி நாரதர். தொடர்ந்து வாங்க.

தீபா
09-07-2008, 06:10 AM
ஏதோ துப்பறியும் நாவல் மாதிரி இருக்குங்க. இதில வெற்றிச்செல்வனுங்கறது நம்ம 'செல்வரையா? இல்லை (தாமரை) செல்வரையா?

ஆரம்ப்ம் அமர்க்களம். தூள்பரத்துங்க. கூடவே வருகிறேன்.

சிவா.ஜி
09-07-2008, 07:51 AM
பாகம்-2

லண்டன், யார்க் பிரதேசம். பூதம் ரோட்டில் செயிண்ட் மேரி ஹவுஸில் அமைந்திருந்தது அந்த அலுவலகம்.பளபளக்கும் பித்தளைப் பெயர்ப்
பலகையில் வெகு அழகான எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது "கவுன்சில் ஃபார் பிரிட்டிஷ் ஆர்க்கியாலஜி தலைமை அலுவலகம்".இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் தன் முனைவர் பட்டத்தை அகழ்வாராய்ச்சி துறையில் முடித்திருந்த எழிலரசி, இந்த அலுவலகத்தில் இணைந்து
ஒரு வருடமாகிறது.இதை வேலை என்பதை விட இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதியதால், அதீத ஆர்வத்தால்
பணி நேரத்தை வரையறுக்காமல் அலுவலகமே கதியென்று கிடப்பவள்.


அன்று பணி தொடங்கிய இருபதாவது நிமிடம் அவளுடைய துறைத்தலைவரிடமிருந்து அழைப்பு வந்தது. பிரிட்டிஷ் பாணியில் கட்டப்பட்ட அந்த அலுவலகத்தில் எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தன.கோப்புகள் பாதுகாக்கும் துறையின் தலைவி எலீஸா உட்பட கதவுகள்,ஜன்னல்கள் எல்லாமே மிகப் பெரிதாய் இருந்தன.நடந்து போகும்போது எதிர்ப்பட்ட எல்லோருக்கும் தலை சாய்த்து வணக்கம் சொல்லிக்கொண்டே துறைத்தலைவரின் அறையை சமீபித்தாள்.மூடியிருந்த கண்ணாடிக்கதவுக்கப்பால் மறுபடியும் பிரம்மாண்டமான மேசைக்குப் பின்னால் அவர் அமர்ந்திருந்தார். குள்ளமாய் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கைப் போன்ற தோற்றத்தில் இண்டியானா ஜோன்ஸ் தொப்பியியுடன் இருந்தார்.

நாசூக்காய் கதவைத் தட்டிவிட்டு தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவளை நிமிர்ந்து பார்த்து

"ஹலோ டியர் வா! அமர்ந்துகொள்!' என்றார்.

ஒரு தந்தையின் கரிசனத்தை அவரிடம் அவள் எப்போதும் காண்பாள்.

"காலை வணக்கம் சார்"

"எலீல் உனக்கு இந்த நாள் ஒரு மறக்கமுடியாத நாளாய் அமையப்போகிறது"

"சார்......" புரியாமல் அவரைப் பார்த்தாள்.

"மதிய உணவுக்குக் பிறகு நீயும் நானும் அரண்மனைக்குப் போகிறோம். மகராணியின் மகுடத்தைப் பார்க்க.."

அவள் காதுகளை அவளாலேயே நம்ப முடியவில்லை. ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தவளிடம்,

"திகைக்காதே சின்னப் பெண்னே...இந்திய அரசாங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்த நாட்டு மக்கள் பார்வைக்கு வைக்க அவர்களின்
கோஹினூர் பதித்த மகுடம் இந்தியாவுக்கு போகிறது. அந்தக் குழுவில் நீயும் இருக்கிறாய். முதல் கண்காட்சி உங்கள் ஊர் சென்னையில்
நடைபெறப் போகிறது. நமது துறை சார்பாக இரண்டு பேர் வேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டதால் நான் உன்னைப்
பரிந்துரைத்திருக்கிறேன். அதன் முன்னோட்டமாக நம்மை அதாவது உன்னை அவர்கள் சந்திக்க விரும்புகிறார்கள். மதியம் மூன்று மணிக்கு
சந்திப்பு. அதற்குள் உன்னை நீ தயார் படுத்திக்கொள். அந்த வைரத்தைப் பற்றி விவரங்களை தெரிந்துகொள். ஏற்கனவே தெரிந்திருக்கும்.
இருந்தாலும் அவர்களைக் கவரும் விதத்தில் உன் விஷயஞானம் இருக்க வேண்டும். போ. மதியம் பார்ப்போம்"

முடிந்தது என்பதைப் போல பின் பக்கமிருந்த கோப்புகள் வைக்கும் அலமாரியின் பக்கம் திரும்பிக்கொண்டார்.

இன்னும் தன்னிலைக்கு வராமலேயே அனிச்சை செயலாய் இருக்கையை விட்டு எழுந்து தன் இடத்துக்கு வந்தாள் எழில்.

மதியம் மிகச் சரியாக இரண்டு மணிக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் குறிப்பிட்டிருந்த நேரத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. எழிலின் அட்சரசுத்தமான ஆங்கில விளக்கம் அவர்களுக்கு திருப்தியளித்தது. மகுடம் வைக்கப்பட்டிருந்த மகா பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப் பட்டாள். துறைத்தலைவர்மற்றும் அவளுடன் இந்தியாவுக்கு வரவிருக்கும் ஆலன் டவுன்செண்ட் என்ற இந்த குழு அந்த அறையை அடைந்தது. எழிலின் இதயம் படபடத்தது. இதுவரை படித்தும் கேட்டுமே வந்திருந்த அந்த இணையில்லா ஒளி மலையை இப்போது நேரில் பார்க்கப் போகிறோம் என்ற பரவசத்தில் இருந்தாள்.

மின்னணு முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த அந்த பெட்டகம் திறந்தது. அருகிலிருந்த ஒரு பொத்தானை அந்த பாதுகாப்பு அதிகாரி தட்டியதும் உள்ளிருந்து ஜகஜ்ஜோதியாய் மகுடம் வெளிப்பட்டது.

1850 ஆம் ஆண்டு ஜூலை 2ந்தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்ட அந்த 105.602 கேரட் எடை கொண்ட கோஹினூர் பாந்தமாய் அந்த மகுடத்தில் அமர்ந்திருந்தது.ஒரு மயக்க நிலையிலேயே அதை பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்.

அறைக்கு வெளியே வந்து இன்னும் ஒரு மாதத்தில் இது இந்தியா செல்லுமென்றும், அதனுடன் பயணிக்கும் அனைவரும் தற்காப்புப் பயிற்சி பெற்ரிருக்க வேண்டியது கட்டாயம் என்பதாலும் நாளையிலிருந்து எழிலுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் வகுப்பு ஆரம்பிக்குமென்றும் சொல்லப்பட்டது.

அலுவலகம் திரும்பிய எழிலையும், ஆலனையும் அழைத்த துறைத்தலைவர்.

"நாளைமுதல் நீங்கள் நேரடியாக வகுப்புக்கு செல்லலாம். அலுவலகம் வரத்தேவையில்லை. அவர்களே உங்களை அழைத்துப் போவார்கள்" என்று சொல்லி வாழ்த்துகளையும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அன்று அலுவலகம் முடிந்து அவள் தங்கியிருக்கும் இடத்துக்கு பூதம் சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவளை யாரோ பின் தொடர்வதாகத் தோன்றியது. சட்டென்று திரும்பிப்பார்த்தவளின் பார்வையில் அந்த இரண்டு ஆசாமிகள் தெரிந்தார்கள்.


தொடரும்

Narathar
09-07-2008, 08:19 AM
விறுவிறுப்பான இரண்டாம் பாகத்தையும் தந்துவிட்டீர்கள்...
நன்றி!

அவளுக்கு கிடைத்த இந்த வாய்ப்பே ஆபத்தில் முடியப்போவது இன்னும் ஆவலை தூண்டுகிறது...

தொடருங்கள்

தீபா
09-07-2008, 08:25 AM
இரண்டாம் பாகம் கலக்கல்..

ஆங்கில நாவல் படிக்கிற உணர்வு இருக்கிறது.. ஒவ்வொரு பாகத்தின் முடிவிலும் திகிலோடு நிறுத்துகிறீர்கள்...

கோஹினூர் வைரம் இந்தியாவுக்குச் சொந்தமானதுதானே! கோஹினூர்ன்னா உலகையே வெல்லும் ஒளி பொருந்திய அப்படின்னு அர்த்தமாமே! ஆந்திராவுக்குச் சொந்தமான இந்த வைரத்தோட பிரயாணம் பல வரலாறு சொல்லும். துக்ளக் வம்சத்தினர்தான் முதன்முதல்ல ஆந்திராவிலிருந்து கோஹினூரை கொள்ளை அடிச்சாங்க அப்பறம் இது பெரும்புகழ்பெற்ற பாபர் கைக்குப் போச்சு... அவருக்கு அதைவிட அதிக விலையுயர்ந்த 'ஆட்சி; கண்ணுக்குத் தெரிய, அதை ஹீமாயூண்ட்ட கொடுக்க, அது ஷாஜகான் ஒளரங்கசீப் வரைக்கும் முழு மொகல் வம்சத்தில இருந்துச்சு அப்பறமா பாரசீக நாதிர்ஷா சுருட்டிட்டு போக... இறூதியா ஒரு சீக்கியர்கிட்ட சிக்கினதா கேள்வி,.. அப்பறம் பெயர் தெரியாத வெள்ளைக்கார பிரபு ஒருத்தர் (இறுதி மொகல்ன்னு நினைக்கிறேன்) ஒரு அரசர் கிட்ட தொப்பிய மாத்தறேன் பேர்வழின்னு புடுங்க, போச்சு..... எல்லாம் போச்சு...

இதுவரைக்கும் ராணியோட தலையில இருக்கு... அதைக் கொள்ளையடிக்கறது மாதிரி பல படங்கள் வந்திருக்கு...

கொலை செய்யறது மாதிரி இந்த நாவல் வந்திருக்க்.. பார்போம்

கண்மணி
09-07-2008, 09:02 AM
பூதம் சாலையா? இந்தப் பேரில எதுவும் குசும்பு இல்லியே சிவாஜியண்ணா?

சிவா.ஜி
09-07-2008, 09:07 AM
அதான் குசும்பை ஆரம்பிச்சுட்டீங்களே....நடத்துங்க. அது Bootham சாலை.
தமிழ் பூதமில்ல...ஹி..ஹி..

ஆதி
09-07-2008, 09:48 AM
அட்டகாசமா போகுது கதை.. அடுத்தது என்ன என்னும் ஆர்வத்தை கிளப்புகிறது.. வாழ்த்துக்கள் சிவா அண்ணா..

மதி
09-07-2008, 10:05 AM
ஹைய்யோ..ஹைய்யோ..
பிச்சு உதறீங்க...!
கலக்கலான இரண்டாம் பாகம்... இன்னும் படிக்கத் தூண்டிகிறது...!
சீக்கிரம்..

aren
09-07-2008, 10:07 AM
இப்போது கதை கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது. அப்போ என்னை காப்பாத்துங்க என்று சொன்னது நம்ம எழிலரசியா?

தொடருங்கள். இரண்டாவது பாகும் பிரமாதமாக வந்திருக்கிறது.

குறைந்தது 20 பாகங்களாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

சிவா.ஜி
09-07-2008, 11:03 AM
ஆதி, மதி, ஆரென் அனைவருக்கும் நன்றி. ஆரென் கண்டிப்பா 20 பாகம் போகும். ஆனா அதுவரைக்கும் நீங்க எல்லாரும் திருப்திபடற மாதிரி எழுதனுமே என்று அச்சம் இன்னும் பொறுப்பைக் கூட்டுகிறது. நிச்சயம் முயல்வேன்.

ஓவியன்
09-07-2008, 11:16 AM
இந்த மன்றத்தில் நான் அடிக்கடி வராத பகுதி, இந்த சிறுகதைகள் தொடர்கதைகள் பகுதியே...

ஆனால் இன்று இந்தக் கதையின் தலைப்பு என்னைக் கொக்கியாய் உள்ளே இழுக்க, சிவா அண்ணனின் சரளமான எழுத்து நடை என்னை லயிப்புடன் கதையோட்டத்தில் பயணிக்க வைத்தது. இதயம் குறிப்பிட்டது போல ராஜேஸ்குமாரின் எழுத்து நடைப் போல, அவரைப் போலவே ஆங்காங்கே நாடுகள், தொழினுட்பம் சார்ந்த விடயங்களைத் தூவி கதையினை நகர்த்தும் விதம் முதல் தரம்...!!

பாராட்டுக்கள் சிவா, ''மன்றத்தின் கிரைம் சக்ரவர்த்தி'' என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்க பரிந்துரை செய்கிறேன்...

சிவா.ஜி
09-07-2008, 11:28 AM
வாரது வந்த மாணிக்கமே...ஓவியரே...நன்றி. அதுக்காக என்னை கிரைம் சக்ரவர்த்தியாக்கிடாதீங்கோ....இந்தியா போனதும் பிடிச்சி உள்ளே தள்ளிடப் போறாங்க.(சும்மா தமாஷுக்கு).

இருந்தாலும் அந்த பட்டத்துக்கு தகுதியானவர் எப்போதுமே லியோமோகன் அவர்கள்தான். நான் இப்போதும் ஆரம்பநிலை எழுத்தாளன்தான் ஓவியன்.

ஓவியன்
09-07-2008, 11:36 AM
இந்தியா போனதும் பிடிச்சி உள்ளே தள்ளிடப் போறாங்க.(சும்மா தமாஷுக்கு).

அப்போ நீங்க இப்போ வெளியே தான் இருக்கீங்களா...??? :D(இதுவும் சும்மா டமாஷூ தான் :icon_rollout:)

சிவா.ஜி
09-07-2008, 12:55 PM
அப்போ நீங்க இப்போ வெளியே தான் இருக்கீங்களா...??? :D(இதுவும் சும்மா டமாஷூ தான் :icon_rollout:)

ஆஹா...இப்படிவேற இருக்கா....?

செல்வா
09-07-2008, 01:10 PM
அண்ணா.... அடுத்த பாகம் எப்போ.... ?

mukilan
09-07-2008, 01:28 PM
வாசகர்களை யூகம் செய்ய வைத்து திருப்பங்கள் (ட்விஸ்ட் கண்ணா ட்விஸ்ட்டு) வைத்து எழுதுவதுதான் கிரைம் நாவலாசிரியர்களின் சிறப்பாயிற்றே! சிறுகதை எழுதுவதே நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். இது தொடர்கதை என்பது எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே! உங்கள் முயற்சிக்கு வந்தனங்கள் அண்ணா!

நீங்கள் தினமும் கொடுக்க வேண்டும் என்றில்லை அண்ணா ஒரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை. ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால் பாகங்கள் மிகவும் சிறியதாக இருப்பதாக உணர்கிறேன். மற்ற நண்பர்களின் கருத்து என்னவோ?

சிவா.ஜி
09-07-2008, 01:34 PM
நன்றி முகிலன். என்னுடைய கடலோரக் குற்றங்கள் தொடரை எழுதியபோது பாகங்கள் மிகப் பெரிதாக இருக்கின்றன, வாசிப்பவருக்கு அது சிரமமாக இருக்குமென்று சொன்னதால் முதலில் இட்ட பாகங்களை பிரித்துக் கொடுக்க வேண்டியதாயிருந்தது.
அதனால்தான் இந்த முறை சிறு பாகங்ககளாகக் கொடுக்கிறேன். நீங்கள் எப்படி விருப்பப்படுகிறீர்களோ அப்படியே செய்து விடலாம்.

அன்புரசிகன்
09-07-2008, 01:42 PM
சும்மா சொல்லப்படாது. சுமந்தே சொல்றேன்... அசத்தலாக உள்ளது... நீண்டகாலத்தின் பின் காமிக்ஸ் படிப்பது போன்ற ஒரு அனுபவம்... தொடருங்கள்...



குறைந்தது 20 பாகங்களாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்தளவுக்கு நம்மளால தாங்கமுடியாது. அப்படியென்றால் நமக்கு தனிமடலில் அனுப்பிவிட்டு பிறது சாகவாகமாக பதியுங்கள்.:D

சிவா.ஜி
09-07-2008, 02:03 PM
பாகம்-3

ஆரம்பத்தில் ஒரு தங்கும் விடுதியில் தற்காலிகமாகத் தான் தங்கியிருந்தாள் எழில். அங்கிருந்து யார்க் வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. எலீசாதான் தனக்குத் தெரிந்த குடும்பத்தினரின் அபார்ட்மெண்ட்டில் ஒரு இடம் பிடித்துக்கொடுத்தாள். அலுவலகத்திலிருந்து நடந்து போகக்கூடிய தொலைவுதான். பூதம் சாலையில் கிளிஃப்டன் போகும் திசையில் சென்று இடது புறம் திரும்பினால் பூதம் டெர்ரஸ்ஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் அவளது அறை.

அன்று அவள் அங்கே போவதற்காக நடந்துபோய்க்கொண்டிருக்கும்போதுதான் அந்த இருவரும் தன்னைப் பின் தொடர்வதைப் பார்த்தாள்.லேசாக அச்சம் தோன்ற நடையை எட்டிப் போட்டாள்.சிறிது தொலைவு சென்று மீண்டும் பார்த்த போது அவர்களைக் காணவில்லை. நிம்மதிப் பெருமூச்சுடன் அறைக்கு வந்தாள்.

அடுத்த நாள் தொடங்கி மூன்று நாட்கள் பயிற்சிக்குப் பிறகு வார விடுமுறை. திங்களன்று மீண்டும் பயிற்சிக்குப் போக காருக்காக காத்திருந்தாள். அங்கிருந்து 30 அடி தூரத்தில் ஒரு திருப்பத்தில் செய்தித்தாளை மறைத்தபடி நின்றுகொண்டிருந்த அந்த இருவரையும் மீண்டும் பார்த்தாள். பயமாக இருந்தது. இதுநாள் வரை இப்படி நேர்ந்ததில்லை. இந்த கோஹினூர் குழுவில் இணைந்த பிறகு ஏன் இப்படி நடக்கிறது. மேலதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமா, வேண்டாமா என்று குழப்பமாய் சிந்தித்துக்கொண்டிருந்தபோதே...கார் வந்தது. அவளை ஏற்றிக்கொண்ட பிறகு ஆலன் இருப்பிடத்துக்குப் போய் அவனையும் ஏற்றிக்கொண்டு போவது வழக்கம். ஆனால் அன்று ஆலனின் இருப்பிடம் போகாமல் தங்கள் அலுவலகத்துக்கே கார் வந்து சேர்ந்ததில் குழப்பமானாள். ஓட்டுநரைக் கேட்டதற்கு துறைத் தலைவர் வரச் சொன்னதாய் சொன்னார்.

ஏதோ பேச வேண்டியிருக்கும் போல. சரி பார்த்துவிட்டு வரலாமென்று துறைத்தலைவரின் அறைக்குப் போனாள். அமரச் சொன்னார். ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டுவிட்டு எப்போதும் போலில்லாமல் உற்சாகமிழந்த நிலையில் அவர் இருந்ததை உணர்ந்தாள். அதற்கான காரணத்தையும் அவர் அடுத்து சொன்ன செய்தியைக் கேட்டதும் தெரிந்துகொண்டாள்.

"எலீல்....இந்த செய்தியை வருத்தத்தோடு சொல்ல வேண்டியுள்ளது...' பீடிகையைப் பார்த்ததும் முதலில் அவள் நினைத்தது அவளை கோஹினூர் குழுவிலிருந்து கழட்டிவிட்டுவிட்டார்கள் என்றுதான். ஆனால் தொடர்ந்து அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள்.

'ஆலனை யாரோ கொலை செய்து விட்டார்கள். நேற்றிரவு இரவுவிடுதியில் நடந்த கைகலப்பில் சக குடிகாரனால் குத்திக்கொல்லப்பட்டான். உன்னோடு இனி கிரிஸ்டோஃபர் சேர்ந்து கொள்வான். வருத்தமாக இருக்கிறது.ம்...எப்படியோ தி ஷோ மஸ்ட் கோ ஆன்...சரி இந்த தகவல் தரவே உன்னை அழைத்தேன். கிரிஸ்ஸும் இப்போது உன்னுடன் வருவான் கிளம்புங்கள்"

பயிற்சி வகுப்பு வரும் வரை என்னென்னவோ சிந்தனைகள். கைக்கலப்பில் கொலை நிகழ்வது இங்கு சர்வசாதாரணம். இருந்தாலும் ஆலனின் மறைவு அவளுக்கு அதிச்சியாகத்தான் இருந்தது. அவனது கொலையையும், தன்னைப் பின் தொடர்பவர்களையும் இணைத்து முடிச்சுப் போட்டுப் பார்த்து கலக்கமடைந்தாள். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டாள்.

கிரிஸ் ஆலனைப் போல அத்தனை நல்லவனாகத் தெரியவில்லை. சமீபத்தில்தான் அந்த அலுவலகத்துக்கு வேறு இடத்திலிருந்து மாற்றலாகி வந்திருந்தான். நட்பான பார்வை கொஞ்சமும் இல்லை. இவனோடு எப்படி இந்த பயணம் முடியும் வரை தாக்குப் பிடிப்பது என்று யோசனையாக இருந்தது. நம் வேலை மட்டும் நாம் பார்ப்போம். அவன் எப்படி இருந்தால் நமக்கென்ன என்று சமாதானப் படுத்திக்கொண்டாள்.

ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே ஓரளவுக்கு அந்தப் பயிற்சிகளில் தேறிவிட்டாள் எழில். குழு புறப்படும் நாள் முடிவு செய்யப் பட்டது. இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன. அவர்களோடு போனால் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்க அதிக சமயம் கிடைக்காது. ஊரிலிருந்து வந்து இப்போதுதான் முதல் முறையாக இந்தியா போகிறாள். அப்பா அம்மா, குட்டித் தங்கையோடு கொஞ்சநாள் இருக்கவேண்டுமென்று ஆசையாய் இருந்தது. தன் துறைத்தலைவரிடம், அந்தக் குழு கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்பாகவே தான் தாய்நாடு போக விரும்புவதாகவும், அங்கே அவர்களுடன் இனைந்து கொள்வதாகவும் சொல்லி சம்மதம் கேட்டாள். அவரும் சிரித்துக்கொண்டே சம்மதித்தார்.

மனம் கொள்ளா சந்தோஷத்தோடு கடை கடையாய் ஏறி இறங்கி எல்லோருக்கும் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு விமானம் ஏறினாள். விமானம் ஆம்ஸ்டர்டாம் சென்று அங்கிருந்து சென்னை போவதாய் இருந்தது.சிப்போல் விமான நிலையத்தில் இறங்கி தன் அடுத்த விமானத்தைப் பிடிப்பதற்காக அந்த நீளப் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தவளை அந்த இருவரும் வெகு அருகாய் சமீபித்தார்கள். அவளை சத்தம் போடக்கூடாது என்று மெல்லியக் குரலில் எச்சரித்துவிட்டு, அருகிலிருந்த நாற்காலியில் அமருமாறு சொன்னார்கள். நான்கு நாற்காலிகள் இணைந்திருந்தது. அதில் அவளை நடுநாயகமாக அமர்த்திவிட்டு இரண்டுபேரும் அடுத்தடுத்து அமர்ந்து கொண்டார்கள்.அவர்களை அருகில் பார்த்ததுமே, இருவரும் தன்னை லண்டனில் பின்தொடர்ந்தவர்கள்தான் என்பதை புரிந்துகொண்டாள். அதில் ஒருவன் தன் கோட் பையிலிருந்து அந்தப் புகைப் படத்தை எடுத்து அவளுக்குக் காட்டினான்.

பார்த்ததும் அதிர்ந்தாள். அழுகை வந்தது. அடக்கிக்கொண்டாள். அவளுடைய அப்பா அம்மா, தங்கை மூன்றுபேரும் கயிறால் பிணைக்கப்பட்டு துப்பாக்கிமுனையில் இருந்தார்கள். துப்பாக்கி பிடித்திருந்தவனின் முகம் தெரியவில்லை. ஆனால் அது அவளுடைய வீடுதான் என்பது பின்னனியில் தெரிந்தது.

"பார்த்தாயல்லவா...எங்களிடம் ஆயுதம் ஏதுமில்லை. ஆனால் இந்த அலைபேசிதான் ஆயுதம். நீ ஏதாவது எக்குத்தப்பாய் செய்யத் துணிந்தால் அங்கே இந்த மூவரும் கொல்லப் படுவார்கள். அதனால் சமர்த்தாக எங்களுடன் வா. சென்னையில் இறங்கியதும் நீ செய்ய வேண்டியதை சொல்கிறோம். அதற்கு இடையில் எந்த சாகசமும் கூடாது. புரிந்ததா?"

தெளிவாகப் புரிந்தது. அவள் இப்போது அவர்களின் பிடியில். என்ன செய்வது உடனடியாக யோசிக்க முடியவில்லை. எழுந்து நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் நிறைய இந்திய முகங்களைப் பார்த்ததும் ஒரு யோசனைத் தோன்றியது. அந்த இருவரையும் பார்த்து தான் பாத்ரூம் போக வேண்டுமென சொன்னாள். பாத்ரூமுக்கு எதிரான இருக்கைகளில் அமர்ந்து கொண்டு,

"நாங்கள் இங்கேயே அமர்ந்திருப்போம். சீகிரமாய் போய்விட்டு வா. தப்பிக்க நினைத்தால்...." சொல்லாமல் விட்டதைப் புரிந்துகொண்டு
அந்த அறைக்குள் நுழைந்தாள். அவசரமாய் அங்கிருந்த கை துடைக்கும் வெள்ளைப் பேப்பரை எடுத்து எழுத நினைக்கும்போதுதான் உறைத்தது அவளிடம் பேனாவோ, பென்சிலோ இல்லை என்பது. வியர்க்கத் தொடங்கிவிட்டது. பதட்டத்தில் அழுகை வந்தது.தலையில் கை வைத்துக்கொண்டு குனிந்தவள் அதைப் பார்த்ததும் பிரகாசமானாள். இடுப்பில் கட்டியிருந்த பவுச். அதனுள் அவசர ஒப்பனைக்காக சில பொருட்கள் இருந்தன. அதில் உதட்டுச் சாயமும் இருந்தது. அவசரமாய் அதை எடுத்தவள் கூரான முனையால் எழுதினாள்.

"என்னைக் காப்பாத்துங்க ஆபத்து.." ஆபத்துவில் து முடிவடைவதற்குள் கதவு தட்டப்பட்டது. அந்தப் பேப்பரை அப்படியே மடித்து கையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அந்த இரண்டு பேரும் வெளிக்கதவுக்கு அருகே பொறுமையிழந்து நின்றுகொண்டிருந்தார்கள்.

கோபத்தோடு அவளைப் பார்த்துக்கொண்டே நடக்கச் சொன்னார்கள்.அப்போதுதான் அவளுக்கு உறைத்தது அய்யோ தமிழில் எழுதிவிட்டோமே..இதைக் கொடுக்கப்போகும் ஆளுக்கு தமிழ் தெரியாவிட்டால் என்ன செய்வது? சரி யாரோ ஒருவரிடம் கொடுப்போம் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டே நடந்தாள். போகும் வழியில் ஒரு இந்திய முகம் தெரிந்தது. போகிற போக்கில் அவருடைய கையில் அந்தப் பேப்பரை திணித்தாள். கொடுத்துவிட்டு சற்றே திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் நேராக நடக்கத் தொடங்கியவள் ஒருவனோடு மோதிக்கொண்டாள். தமிழ்முகம். நிச்சயம் இவன் தமிழன்தான். அடடா இவனிடம் கொடுத்திருக்கலாமே...அவனைத் திரும்பிப் பார்த்த அதே சமயம் அவனும் அவளைப் பார்த்தான்.

பார்த்தவன் எதுவும் செய்யாமல் திரும்பி நடக்கத் தொடங்கினான். மீண்டும் திரும்பிப் பார்த்தாள் எழில் ஒரு நப்பாசையுடன். அவள் கொடுத்த வெள்ளைத்தாளை அந்த ஆள் இவனிடம் கொடுப்பதைப் பார்த்தவள் மகிழ்ந்தாள். நிச்சயம் அவனுக்குத் தமிழ் தெரிந்திருக்கும். ஏதாவது செய்வான் என்று நம்பினாள். ஆனால் அவன் கைகடிகாரத்தைப் பார்த்துவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கியதும் நம்பிக்கையிழந்தாள்.


தொடரும்

மதி
09-07-2008, 02:08 PM
ஆஹா...இப்போது முடிச்சு சேர்கின்றது.... ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டே போகிறீர்கள்...சிவாண்ணா...

இனி அடுத்த பாகத்தை எதிர்பார்த்து...

அன்புரசிகன்
09-07-2008, 02:10 PM
என்னமா போகுது.... வாசிக்கும் போதே தொண்டை காய்ந்துவிடுகிறது.... சுவாரசியமாக உள்ளது அண்ணலே..

தொடருங்கள்...

Narathar
09-07-2008, 02:22 PM
அஹா!!!
பாகங்கள் கூடிக்கொண்டே போகும் பொது விறு விறுப்பும் கூடுதே............

கதையை விறு விறுப்பு குறையாமல் நகர்த்திச்செல்லும் கலையை நன்றாக கற்ருள்ளீர்கள்.....

தொடரட்டும்..................................

mukilan
09-07-2008, 03:11 PM
நான் முதலில் எழிலரசிதான் "ஆபத்து உதவுங்கள்" என எழுதியிருப்பாள் என யூகித்தேன். ஆங்கிலம் கற்றிருந்தாலும் அவசர காலத்தில் எழுதுவது தமிழில்தானோ? உங்கள் தமிழ்ப்பற்றை (எழிலரசியின் தமிழ்ப்பற்றை) வியந்தேன் அண்ணா.

meera
10-07-2008, 06:26 AM
சிவா அண்ணா, உங்கள் தங்கைக்கு இந்த கதை படிப்பதில் மட்டும் கொஞ்சம் பொருமை குறைவு. அடுத்த பாகத்தை விரைவாய் தாருங்களேன்...........

கதையை நகர்த்தும் விதம் அருமை அண்ணா. சலிப்பில்லாமல் எடுத்து செல்ல ஒரு தனி திறமை வேணும். அந்த திறமை தங்களிடம் அதிகமாய் இருக்கிறது.

சிவா.ஜி
10-07-2008, 06:40 AM
ரொம்ப நன்றிம்மா மீரா. சீக்கிரமே அடுத்தடுத்த பாகங்களைத் தருகிறேன்.

aren
10-07-2008, 09:51 AM
மீராவிற்கு பயந்து உடனே அவசரத்தில் எழுதவேண்டாம். மெதுவாக எழுதுங்கள், ஒன்றும் அவசரமில்லை. கதை நன்றாக வரவேண்டும் என்பதே என் விருப்பம்.

காத்திருப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. சஸ்பென்ஸ் குறையாமல் கதையை எழுதுங்கள்.

சிவா.ஜி
10-07-2008, 10:26 AM
அப்படியில்லை ஆரென். நிறைய நேரம் இருக்கிறது. அதனால் சீக்கிரம் தர முடியும் என்று சொன்னேன். ஆனாலும் நிறைய யோசித்துதான் எழுத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் வாசிப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.

aren
10-07-2008, 10:36 AM
ஏனென்றால் வாசிப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.

அந்த பயம் எப்பொழுதும் உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் நிச்சயம் வெற்றிப்பாதையை நோக்கி செல்கிறீர்கள் என்றே அர்த்தம். அந்த பயம் போய்விட்டால் கீழே இறங்குகிறோம் என்று அர்த்தம்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
10-07-2008, 10:43 AM
பாகம்-4


விமானத்தில் வந்து அமர்ந்த பின்னும் வெற்றிச்செல்வனுக்கு மனசு கேட்கவில்லை. யாரென்று தெரியாமல் இருந்திருந்தாலும் பரவாயில்லை. இந்தப் பெண்தான் ஆபத்தில் இருக்கிறாள் என்று தெரிந்த பின்னாலும் உதவமுடியாமல் வந்துவிட்டதை நினைத்து வருத்தப்பட்டான். சுயநலமாய் சிந்தித்தது அவனுக்கே வெட்கமாக இருந்தது. இப்போது என்ன செய்ய முடியும்? விமானத்தில் ஏறுவதற்கு முன்பாவது ஏதாவது செய்திருக்கலாம்..இப்போது ஏறின பிறகு.....வெய்ட்...வெய்ட் என்று ஓடிக்கொண்டிருந்த எண்ணத்துக்கு சடன் பிரேக் போட்டுவிட்டு தூரத்தில் வந்து கொண்டிருந்த பயணிகளில் அந்தப் பெண்னின் முகத்தை உற்றுப் பார்த்தான். அட...அவளேதான். எங்கே அந்த கிங்கரர்கள்....வருகிறார்களே...

இவளுக்கு உதவ வேண்டுமென்பது விதி போல இருக்கிறது. அதனால்தான் இதே விமானத்தில் அவளும் வருகிறாள். 9 மணி நேர பயணம். நிறைய சமயம் இருக்கிறது பார்த்துக்கொள்ளலாம். நினைத்துக்கொண்டிருந்தவன் ஆச்சர்யப்பட்டான். நடு வரிசையில் இருந்த நான்கு இருக்கைகள் கொண்ட அந்த அமைப்பில் அவன் அமர்ந்திருந்த வரிசைக்கு நேர் முன்னால் வரிசையில் அந்த இரண்டு பேரும் அமர்ந்தார்கள். ஓரத்தில் மூன்று இருக்கை அமைப்பில் அவனுக்கு ஒரு வரிசை விட்டு முன்னால், இவன் இடது புறமாகப் பார்த்தால் கண்ணில் படக்கூடிய இடத்தில் அவள் அமர்ந்தாள்.

அமர்ந்த சிறிது நேரத்திலேயே அவள் திரும்பிப்பார்த்தாள். இவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்த அவள் கண்கள் மன்றாடியது. இவனும் அதை உணர்ந்து கொண்டு நானிருக்கிறேன் பயப்படாதே என்று நயனமொழி பேசினான். அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது. ஆனால் இவனுக்குத்தான் உள்ளுக்குள் ஒரு உதறல். இந்த கிங்கரர்களைப் பார்த்தால் பக்கா கிரிமினல்களாகத் தெரிகிறார்கள். அவளுக்குநம்பிக்கையூட்டிவிட்டோம், ஆனால் இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலைப்பட்டான்.
-----------------------


விமானநிலையத்தில் வெற்றிச்செல்வன் சென்ற திசைக்கு எதிர் திசையில் எழிலை வலுக்கட்டாயமாய் அழைத்துக்கொண்டு போனவர்களில் ஒருவன் அங்கிருந்த கணிணியில் இணையத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு ஏதோ தகவலை அனுப்பினான். காத்திருந்தான். திரை அசைந்தது. லண்டனிலிருந்து செய்தி வந்திருந்தது. இவர்கள் போய் இறங்கியதும் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்துவிட்டதென்றும்,நேரே எழில் வீட்டுக்கே சென்று அங்கேயே தங்கிக் கொள்ளும் படியும் அந்த செய்தி சொல்லியது.

செய்தியை மூளைக்கு சேர்த்துவிட்டு இணையத் தொடர்பை வெட்டிவிட்டு எழுந்தவன் மற்ற இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு வந்த வழியே திரும்பி நடந்தான்.எழிலுக்கு குழப்பமாய் இருந்தது. ஏன் மீண்டும் வந்த வழியே போகிறார்கள். அப்படியென்றால் நான் பயணிக்க வேண்டிய சென்னை விமானத்தில்தான் பயணிக்கப் போகிறோமா? அப்படியென்றால் அவனும் அந்த விமானத்தில் இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது. அவனை மறுபடிப் பார்த்தால் எப்படியாவது உதவும்படி கேட்கவேண்டும். மனதுக்குள் எழுந்த எண்னங்களை சுமந்து கொண்டே அவர்களுடன் நடந்தாள் எழில்.

எதிர்பார்த்தபடியே அவன் விமானத்தில் இருந்தான். தூரத்திலிருந்தே என்னைக் கவனித்தவன் கண்களில் உதவும் எண்ணம் தெரிகிறது. அப்பாடா நமக்கு உதவ ஒருத்தனாவது இருக்கிறானே..எண்ணிக்கொண்டே அவனுக்கு ஒரு இருக்கை முன் பக்கமாக அவனது இடப்புறமாக அமர்ந்தாள். அட இதென்ன அந்த இரண்டு பேரும் சரியாக அவன் இருக்கைக்கு முன்னால் அமர்கிறார்களே. அப்படியே பின்னாலிருந்து கழுத்தை நெரித்து கொன்றாலென்ன?

யோசனையுடனே எழில் அவனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்து பயப்படாதே நானிருக்கிறேன் என்று கண்னாலும் கையாலும் சைகை செய்தான்.நீண்ட நேரத்துக்குப் பிறகு அவள் முகம் சற்றே தெளிவடைந்தது.
--------------------------------


விமானம் புறப்பட்டது. பணிப்பெண் கொண்டு வந்து கொடுத்த எதுவும் வெற்றிக்கு சுவைக்கவில்லை. யோசனையாகவே இருந்தான். பளிச்சென்று ஒரு திட்டம் தோன்றியது. விமானத்தில் வைத்து எதுவும் செய்ய முடியாது. சென்னை சென்று சேர்ந்ததும் இவர்களுக்கு முன்னால் இறங்கி அங்கிருக்கும் அதிகாரிகளிடம் இவர்களிடம் போதைப் பொருள் இருப்பதாக சொல்லிவிடலாம். எதுவும் இல்லையென்றாலும், சோதனைக்கு சிறிது நேரமெடுத்துக்கொள்வார்கள். அந்த சமயத்தில் இவளை காப்பாற்றிக் கூட்டிச் சென்றுவிடலாம். திட்டம் உருவானதும் கொஞ்சம் நிம்மதியடைந்தான். பணிப்பெண்னைக் கூப்பிட்டு ஒரு லார்ஜ் கொண்டுவரச் சொல்லி அதைக் கொண்டாடினான்.

----------------------------




சென்னை. நுங்கம்பாக்கத்தில் ஒரு தனி பங்களா. கணிணிக்கு முன்னால் அமர்ந்திருந்தவன்தான் அங்கிருந்த மற்ற நான்கு பேருக்கும் தலைவனாய் இருக்க வேண்டும். முகத்தில் ஒரு மிதப்புத் தெரிந்தது. தண்ணியாலா..இல்லைத் திமிராலா என்று இணங்காண முடியவில்லை. கணிணியில் செய்தி வந்தது. படித்து முடித்ததும்,

"நாளைக்குக் காலையில 5 மணிக்கு ப்ளைட் லேண்ட் ஆகும். மூணு பேரும் வராங்க. பாஸ்கர் நீயும் ஆனந்தனும் போங்க. அவங்களைக் கூட்டிக்கிட்டு நேரா இங்க வந்துடுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல நமக்குத் தேவையான எல்லா சாமானும் வந்துடும். சூசை எடுத்துட்டு வருவான். நாளக்கு அவங்க வந்ததும் எல்லாருமா கிளம்பி அந்த பொண்ணு வீட்டுக்கே போயிடலாம். நம்ம அடுத்த எல்லா வேலைங்களையும் அங்கருந்தே செஞ்சிக்கலாம்.'
------



விடியற்காலை 5 மணிக்கு விமானம் சென்னையின் மண்ணைத் தொட்டது. அவசர அவசரமாய் எழுந்த வெற்றி, தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்புவதற்கு முன் அந்த இருவரையும் பார்த்தான். அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார்கள். "அடப்பாவிங்களா நல்லா சரக்கடிச்சிட்டு மட்டையாயிட்டானுங்கன்னு நினைக்கிறேன்...அப்ப இவனுங்க வர்றதுக்கு நேரமாகும். அவளை கூட்டிக்கிட்டு போயிடலாம்" என்று நினைத்துக்கொண்டே அவளை அணுகி கையைப் பற்றி அழுத்தி காதருகே சொன்னான்...

"அவங்க ரெண்டு பேரும் இப்போதைக்கு எந்திரிக்க மாட்டானுங்க. நாம சீக்கிரம் இங்கிருந்து போயிடலாம் வாங்க..' என்றதும் அவர்களைத் திரும்பிப்பார்த்த எழில் அவன் சொல்வது சரிதானென்று நினைத்துக்கொண்டு அவளும் அவசரமாய் கிளம்பினாள். சற்று நடந்தவள் சட்டென்று திரும்பி அவர்களிடம் வந்து இரண்டு பேரின் சட்டைப் பைகளையும் துழாவி கைப்பேசிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் வெற்றியோடு இணைந்து கொண்டாள்.

"என்ன ஆச்சு ஏன் திரும்பிப் போனீங்க..?"

"வாங்க...போகப் போக சொல்றேன். முதல்ல இறங்கலாம்"

அடிப் பாவி உதவ வந்தவன் கிட்டயே பந்தா காமிக்கறயா...? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே இறங்கினான்.


இமிகிரேஷனுக்காக வரிசையில் நிற்கும்போது அனைத்தையும் வெற்றியிடம் சொன்னாள் எழில்.

"இது பெரிய லெவெல் விஷயமா இருக்கே. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும். இந்த ரெண்டுபேரும் மறுபடியும் உங்களை தொந்தரவு பண்ண வருவாங்க."

'எப்படி அவங்களால வர முடியும் அதான் அவங்க செல் போனை எடுத்துக்கிட்டு வந்துட்டேனே.." சந்தோஷமாய் சொன்ன எழிலை குறுஞ்சிரிப்போடு பார்த்த வெற்றி,

"ஹய்யோ ஹய்யோ...என்னங்க இது அவங்க என்ன லோக்கல் ரௌடிங்களா...சர்வதேச கிரிமினல்ங்க. அவங்க வைரத்தை திருடத்தான் ப்ளான் பண்னியிருக்காங்க. இவ்ளோ பெரிய வேலையில ஈடு பட்டிருக்கிறவங்களுக்கு உங்களைக் கண்டு பிடிக்கறது ஒண்ணும் பெரிய விஷமில்லை. அது மட்டுமில்ல...இப்ப உங்க அப்பாவும் அம்மாவும், தங்கையும் அவங்க கஸ்டடியிலதான் இருக்காங்கங்றதையும் ஞாபகம் வெச்சுக்கங்க"

"சரிதாங்க, ஆனா இவங்க போன் பண்ணி சொன்னாத்தானே அங்க இருக்கறவங்களுக்குத் தெரியும். அப்ப உடனடியா எங்க பேரண்ட்ஸுக்கு ஆபத்தில்ல, அவங்க வர்றதுக்கு முன்னால போய் போலீஸ்ல சொல்லிடுவமா?"

அவள் சொன்னதைக் கேட்டதும் வெற்றி யோசித்தான். சரிதான். இந்த இரண்டுபேரும் அவர்கள் கூட்டாளிகளைத் தொடர்புகொள்ள கொஞ்ச நேரமாகும். அதற்குள் நாம போலீஸுக்குப் போவதுதான் நல்லது என்று நினைத்துக்கொண்டே எழிலிடம்,

"செய்யலாம். அவங்க அதிரடியா ஏதாவது நடவடிக்கை எடுத்து உங்க பேரண்ட்ஸை காப்பாத்திடுவாங்க. இந்நேரம் அவங்களை எழுப்பிவிட்டிருப்பாங்க. இந்த வரிசை வேற நகரமாட்டேங்குது.." வெற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பகுதி பரபரப்பானது.

விமான நிலைய ஊழியர்கள் இரண்டு ஸ்ட்ரெச்சர்களை தள்ளிக் கொண்டு வந்தார்கள்.இவர்கள் நின்றுகொண்டிருந்த வரிசைக்கு அடுத்திருந்த திறப்பின் வழியாக அவைகளைக் கொண்டுபோகும் போது முகங்களைக் காண முடிந்தது. அதே இரண்டுபேர்தான்.

'என்னங்க எழில், எழக்கூட முடியாத அளவுக்கு மட்டையாயிட்டாங்களா...இல்ல மண்டையைப் போட்டுட்டாங்களா?"

இவன் எழிலிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த பின்னால் இருந்தவர் சொன்னார்.

"ஆமா..ரெண்டு பேரும் அவங்க சீட்ல செத்து கிடந்தாங்களாம்"

வெற்றியும் எழிலும் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள்.


தொடரும்

aren
10-07-2008, 10:51 AM
கடைசிவரியில் பயங்கரமான சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்கள். தொடருங்கள். கதை நன்றாகவே செல்கிறது.

தீபா
10-07-2008, 10:54 AM
ஆஹா... இதை அப்படியே ஆங்கிலத்தில் நாவலாக எழுதினால் நிச்சயம் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள்... அப்படி ஒரு திரில் எதார்த்தம். முதல் பாகம் மூன்றாம்பாகத்தோடு இப்போது இணைந்திருக்கிறது. இனிமேல் பார்ப்போம்... எனக்கென்னவோ நீங்க கததயை வேகமா ஓட்டறமாதிரி இருக்கு.... இதே வேகத்தில நிறைய பாகம் வந்தா கில்லியை விட ஃபாஸ்டா இருக்கும்..

கலக்குங்க.

தீபா
10-07-2008, 11:01 AM
அய்யோ!!! சிவாஜி அண்ணே இப்படி திடீர்னு நிறுத்தாதீங்க... பயங்கர சஸ்பென்ஸ்..... உண்மையைச் சொல்லட்டுமா ராஜேஸ்குமார் நாவல் நிறைய படிச்சிருக்கேன். ஆனா இந்த அளவுக்கு இல்லை.. ஒருத்தரு மாத்தி ஒருத்தரு கொலை.. அப்ப கொன்னது யாரு? எழிலா? ஒரே சந்தேகம்..... செம திரில்.... அடுத்த பாகத்தத இன்னிக்கே போட்டுடுங்க..

meera
10-07-2008, 11:13 AM
மீராவிற்கு பயந்து உடனே அவசரத்தில் எழுதவேண்டாம். மெதுவாக எழுதுங்கள், ஒன்றும் அவசரமில்லை. கதை நன்றாக வரவேண்டும் என்பதே என் விருப்பம்.
காத்திருப்பதில்தான் சந்தோஷமே இருக்கிறது. சஸ்பென்ஸ் குறையாமல் கதையை எழுதுங்கள்.


அண்ணா, இதை எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் ஆமா சொல்லிபுட்டேன்.

அவர் திறமைசாலி அவசரமாய் எழுதினாலும் கவனமாய் எழுதுவார்.

என்ன சிவா அண்ணா, சொன்னது சரிதானே?????

aren
10-07-2008, 11:15 AM
அண்ணா, இதை எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் ஆமா சொல்லிபுட்டேன்.

அவர் திறமைசாலி அவசரமாய் எழுதினாலும் கவனமாய் எழுதுவார்.

என்ன சிவா அண்ணா, சொன்னது சரிதானே?????

பாருங்களேன். நீங்கள் அவசரப்படுத்தியதால் இரண்டு பேரை விமானத்திலேயே கொன்றுவிட்டார்கள் அவசரம் அவசரமாக.

சிவா.ஜி
10-07-2008, 11:22 AM
நன்றி ஆரென், நன்றி தென்றல். உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

மீரா நீங்க கவலைப் படாதீங்க. ஆரென் சொன்னமாதிரியெல்லாம் அவசரத்துல கொலை பண்ணல...யோசிச்சுத்தான் பண்ணியிருக்கேன்(அடடா...இப்படிச் சொல்லிட்டேனே...ஓவியன் வேற ஒருமாதிரி கேட்டிருந்தாரு...)

எனவே ஆரென் விரும்பும் மாதிரி தரமாகவும், தங்கைக்கு தேவைப்படுவது மாதிரி தாமதமில்லாமலும் தருகிறேன். சரியா?

பூமகள்
10-07-2008, 11:42 AM
நான் கொஞ்சம் ஸ்லோ சிவா அண்ணா...
மன்னிச்சிக்கோங்க...

முதல் பாகம் தான் படிச்சி முடிச்சிருக்கேன்... ஆரம்பமே...அசத்தல்...
மீன் குஞ்சுக்கு நீந்த யார் கற்றுக் கொடுத்தாங்க.. அது போல... சிவா அண்ணாவுக்கு கதையெழுதப் படிக்க வேண்டியதே இல்லாத அளவுக்கு பிறவி எழுத்தாளர்... பாராட்டுகள் அண்ணா..!!
வெற்றிச் செல்வன்.. பேரு அன்புச் செல்வன் சூர்யாவை நினைவூட்டியது.. அப்படியே ஹீரோ இருப்பார்னு பார்த்தா.. பின்னாடி வந்த வர்ணனை... கவுத்திப் போட்டுச்சு.. போங்க..!!

ஆனாலும்.. நம்ம கதை ஹீரோவை நான் சூர்யாவா தான் நினைச்சிப்பேன்...!! ;)

தொடருங்கள் அண்ணா.. நான் மெல்ல மெல்ல தவழ்ந்து விரைந்து வருகிறேன்..!! :)

சிவா.ஜி
10-07-2008, 11:57 AM
ரொம்ப நன்றிம்மா. பூ வாசமில்லாமல் பதிவு நகருதேன்னு நினைச்சேன்...அதுவும் கிடைச்சிடிச்சி. சூர்யா மாதிரி இல்லன்னாலும் ஒரு விஷால் மாதிரி நினைச்சிக்கம்மா.

mukilan
10-07-2008, 12:37 PM
இத...இத.. இதத்தான் நான் எதிர் பார்த்தேன்.மூன்றாம் பாகம் முத்தாய்ப்பாக இருக்கிறது அண்ணா. போன முறை எளிதாக ஊகம் செய்யுமளவிற்கு அந்தப் பெண்ணின் பாத்திரம் இருந்தாலும் இம்முறை யார் கொலை செய்திருப்பார்கள் என்று ஊகிக்கவே முடியவில்லை. கோஹினூர் வைரங்கள் ஏதேனும் சக்தி உடையவையா? தன்னை அடைய நினைப்பவர்களை காலி செய்து விடுமா? எழிலரசி பணிப்பெண்கள் கொணர்ந்த உணவில் ஏதேனும் விஷம் கலந்தாளா? எத்துணை கேள்விகள்! காத்திருக்கிறோம் அண்ணா!

சிவா.ஜி
10-07-2008, 12:43 PM
ரொம்ப நன்றி முகிலன். யூகங்கள் தொடரட்டும்....உடன் வருவதற்கு மிக்க நன்றி.

meera
10-07-2008, 01:46 PM
பாருங்களேன். நீங்கள் அவசரப்படுத்தியதால் இரண்டு பேரை விமானத்திலேயே கொன்றுவிட்டார்கள் அவசரம் அவசரமாக.

அண்ணா, க்ரைம் நாவல்னா கொலை இல்லாம கதை நல்லா இருக்குமா???

சிவா அண்ணா சரியா போடவேண்டிய இடத்துலதான் போட்டு தள்ளிருக்காறார். அதுக்கு நான் காரணம் இல்லீங்கோ.......:mini023::mini023:

aren
10-07-2008, 01:48 PM
அண்ணா, க்ரைம் நாவல்னா கொலை இல்லாம கதை நல்லா இருக்குமா???

சிவா அண்ணா சரியா போடவேண்டிய இடத்துலதான் போட்டு தள்ளிருக்காறார். அதுக்கு நான் காரணம் இல்லீங்கோ.......:mini023::mini023:

அப்போ கொலை செய்தது சிவா அண்ணாதான் என்று தீர்மானமாக சொல்கிறீர்களா? கதையின் சஸ்பென்ஸை அப்படியே சொல்லிவிட்டீர்களே.

இன்னும் சிவா அண்ணாவின் பாத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லையே. அதற்குள் உங்களுக்கு எப்படித் தெரியும்.

குழப்பத்துடன் மற்றவர்களையும் குழப்பும்
ஆரென்

meera
10-07-2008, 01:50 PM
சிவா அண்ணா சூப்பரூங்கோ............

அடுத்தடுத்து எதிர்பார்த்துட்டு இருக்கேன்.

மதி
10-07-2008, 02:59 PM
அசத்தல் அசத்தல் அசத்தல்.....
இதற்கு மேல என்ன சொல்ல...! அந்த பக்கம் இந்த பக்கம் கொஞ்சம் நகர்ந்துட்டு வரலாம்னு பார்த்தா ரிலீஸ் பண்ணிட்டீங்க...

அடுத்து எப்போண்ணா..? சஸ்பென்ஸ் தாங்கல..

Narathar
10-07-2008, 03:06 PM
இது என்ன புது கலாட்டா?
கடத்தியவங்களே செத்துட்டாங்களா???

இதைத்தான் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த என்று சொல்வார்களோ

அடுத்த பாகம் எப்போ?

அன்புரசிகன்
10-07-2008, 04:59 PM
அங்கிருந்தவங்களோட யாருடையதாவது அலைபேசியை வாங்கி செய்தியை அனுப்பியிருப்பார்கள் என்று பார்த்தால் மரித்துப்போயுள்ளனரே.... சுவாரசியம் இன்னும் அதிகரிக்கிறது. எப்படி இறந்தார்கள்??? பல எதிர்பார்ப்புக்களுடன் கதை தொடரும் என்பதுடன் நிற்கிறது...

மீதியை எதிர்பார்த்திருக்கிறேனுங்க..

meera
11-07-2008, 07:29 AM
சிவா அண்ணா, சீக்கிரம் வாங்க.அதிரடியாய் அடுத்த பாகத்தை தாங்க.

aren
11-07-2008, 07:35 AM
சிவா அண்ணா, சீக்கிரம் வாங்க.அதிரடியாய் அடுத்த பாகத்தை தாங்க.

சிவா, மெதுவா வாங்க. ஒன்னும் அவசரமில்லை. மீரா கேட்டதால் ஏதோ எழுதினோம் என்று எழுதவேண்டாம். கதை சிறப்பாக இருக்கவேண்டும். இப்பவே சொல்லிவிட்டேன்!!!

meera
11-07-2008, 08:04 AM
சிவா, மெதுவா வாங்க. ஒன்னும் அவசரமில்லை. மீரா கேட்டதால் ஏதோ எழுதினோம் என்று எழுதவேண்டாம். கதை சிறப்பாக இருக்கவேண்டும். இப்பவே சொல்லிவிட்டேன்!!!

அண்ணா, நீங்க என்னோட சண்டை போட்டுட்டே இருக்கீங்க. நான் சொல்ல வேண்டிய இடத்துல சொல்லிருவேன் ஆமா..............:traurig001::traurig001::sauer028:

பூமகள்
11-07-2008, 08:38 AM
வச்ச கண்ணு வாங்காம.. எழிலையும் வெற்றிச் செலவனையும் கவனிச்சிட்டே இருக்கற மாதிரி ஓர் உணர்வு...!!

விமானம் ஏறாத பூவையே விமானம் ஏற வைச்சிட்டீங்களே..!!

சிவா அண்ணா.. காசில்லாம உலகம் சுத்திக் காட்டுவீங்கன்னு பார்த்தா கதை சென்னையில் தான் நடக்கப் போகுதா இனி??!!!:eek::eek: :frown:

நான் மறுபடி மறுபடி சொல்றது இது தான்... :icon_rollout:
உங்க சிறுகதைகளையும் இந்த நாவலையும் நம்ம ஊரின் பதிப்பகத்தில் பேசி வெளியிடுங்கள் அண்ணா...:icon_b::icon_b::icon_b:

பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் மூக்கின் மீது விரலை வைத்துப் பார்ப்பார்கள்..!!

உங்க கூட இந்த அணில்புள்ளை நானும் சேர்ந்து பெருமைப்பட்டுப்பேனில்ல அண்ணா??!! ;) :)

அடுத்து என்னவாகுமோன்னு பயமா இருக்கு... :eek::eek:

(ஹீரோ ஹீரோயின் கிடைச்சிட்டாங்க... இனி ரொமாண்டிக்காகவும் போக போகுதுன்னு நினைக்கிறேன்..!! :D:D)

mukilan
11-07-2008, 12:14 PM
உங்க கூட இந்த அணில்புள்ளை நானும் சேர்ந்து பெருமைப்பட்டுப்பேனில்ல அண்ணா??!! ;) :)

மேலே பூவு சொன்ன காரணத்திற்காக எங்களுக்கும் அடுத்து என்னவாகுமோன்னு பயமா இருக்கு... [FONT=Latha][COLOR=YellowGreen]:eek::eek:"

பூமகள்
11-07-2008, 12:32 PM
மேலே பூவு சொன்ன காரணத்திற்காக எங்களுக்கும் அடுத்து என்னவாகுமோன்னு பயமா இருக்கு..[/color][/font].]:eek::eek:"
ஒரு பச்ச:icon_rollout:ப் பார்த்து எத்தனை பொறாமை பாருங்க இந்த முகில்ஸ் அண்ணாவுக்கு...??!!
வவ்வ... வவ்வ...!! :aetsch013: :icon_rollout: (நன்றி: தங்கை மலர்)

இருங்க இருங்க.. உங்கள அப்புறமா கவனிச்சிக்கிறேன்..!! :rolleyes: :D:D

சிவா.ஜி
12-07-2008, 11:39 AM
மன்னிச்சுடுங்க அடுத்த பாகத்தை இன்னைக்குப் போட்டுடறேன். இப்ப நான் மன்றம் வர்ற பைபாஸ்ல 5 வரிகளுக்கு மேல் பதிவிட முடியாது. வீட்டுக்குப் போய்தான் பதிய வேண்டும்.

கூடவே வந்து உற்சாகமளிக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சிவா.ஜி
12-07-2008, 03:37 PM
பாகம்-5

வெற்றிக்கு எதுவும் புரியவில்லை. யாரால் ஆபத்து வருமென்று நினைத்தானோ அவர்களே இறந்துவிட்டது எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது.

ஆனாலும் இன்ப அதிர்ச்சி. எழிலைப் பார்த்து,

"அப்பாடா...ஒரு பெரிய தொல்லையிலருந்து விடுதலை கிடைச்சிடிச்சி.சரிங்க மிஸ்.....உங்க பேர் என்னன்னு சொல்லவேயில்லையே.."

"நீங்க கேக்கவேயில்லையே...என் பேர் எழிலரசி. நீங்க..?'

'நான் வெற்றிச் செல்வன். ஷார்ட்டா வெற்றி. அதுசரி இந்த பேரை வெள்ளைக்காரங்க எப்படி கூப்பிட்டிருப்பாங்க. ரொம்ப
கஷ்டப்பட்டிருப்பாங்களே'

"ஆமா இப்ப அதுதான் முக்கியம். அந்த ஆராய்ச்சியெல்லாம் விடுங்க. மொதல்ல போலீஸ்கிட்ட போகலாம். எங்க குடும்பத்தோட நிலைமை எப்படியிருக்கோ?"

"ஆமாமா...ஆனா போலீஸ்கிட்ட போறதுக்குள்ள மொதல்ல உங்க வீட்டுக்குப் போன் பண்ணுங்க. நிலவரம் எப்படி இருக்குன்னு
தெரிஞ்சிக்கிட்டா அவங்களுக்கு தகவல் கொடுக்க வசதியா இருக்கும். பண்ணுங்க"

தன் கைப்பையிலிருந்து அலை பேசியை எடுத்து வீட்டு எண்ணிற்கு டயல் செய்தாள். அழைப்பு போய்க்கொண்டிருந்தது. இன்னும் பதில் வராதது அவளுக்கு டென்ஷனைக் கொடுத்தது...அம்மா, அப்பா யாராவது எடுங்களேன்....

"ஹலோ" எதிர்முனையில் அம்மாவின் குரலைக் கேட்டதும் பரபரப்பானாள்.

"ஹலோ அம்மா எப்படியிருக்கீங்க? உங்களை யாரோ சிலபேர் மிரட்டிக்கிட்டிருக்கறதா ரெண்டுபேர் சொன்னாங்களே...இப்ப அவங்க அங்க இருக்காங்களா..."

படபடப்பாய் இவள் அடுக்கிக் கொண்டே போன கேள்விகளுக்கு அமைதியாய் கொஞ்ச நேரம் காது கொடுத்துவிட்டு அந்த முனையிலிருந்து பதில் வந்தது.

"மிரட்டிக்கிட்டிருந்தானுங்க அந்த கடங்காரனுங்க...ஆனா இப்ப இல்ல.."

"இல்லன்னா போய்ட்டாங்களா?"

"ஆமா ஒரேயடியா மேல போய்ட்டானுங்க. எங்களை துப்பாக்கி வெச்சு மிரட்டிக்கிட்டு இருந்தானுங்க...அப்ப திடீர்ன்னு ரெண்டுபேர் சட சடன்னு உள்ள வந்தாங்க. படபடன்னு சுட்டாங்க இங்க இருந்த ரெண்டு பேரும் செத்துப் போய்ட்டானுங்க. அதோட மட்டுமில்லாம அந்த ரெண்டுபேரோட பாடிங்களையும் அவங்களே தூக்கிட்டுப் போய்ட்டாங்க. என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியாம நாங்க பயந்துபோய் இருக்கோம். நீ எங்கருந்துடி பேசற?"

"என்னம்மா சொல்ற அவனுங்களை யாரோ வந்து சுட்டுக் கொண்ணுட்டாங்களா? யாரும்மா அது? எனக்கும் தான் புரியல. சரி நாங்க இப்பவே வீட்டுக்கு வரோம்."

வெகு இயல்பாய் வெற்றியையும் தன்னுடன் சேர்த்து நாங்கள் வருகிறோம் என்று சொன்னதை நினைத்து அவளுக்கு ஆச்சர்யமாகிவிட்டது. எப்படி இவன் என்னோடு இணைந்தான்?

அவள் போனில் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த வெற்றி லேசாக புன்னகைத்தான். அவனுடைய புன்னகையைப் பார்த்து வெட்கப்பட்டாள் எழில்.

"ஸோ...வீட்டுலயும் இப்ப ஆபத்து நீங்கிடிச்சி. யாருங்க அது உங்களுக்கு நிழல் மறைவுல உதவி செய்யறது?"

"எனக்கே தெரியலங்க. ப்ளைட்ல அவனுங்களை கொன்னது நீங்களா இருக்குன்னுதான் நான் நினைச்சேன். ஆனா இப்ப எங்க வீட்டுக்கும் வந்து காப்பாத்தியிருக்காங்க..ஒண்ணுமே புரியலையே"

"லண்டன்ல உங்களை அந்த ரெண்டுபேர் ஃபாலோ பண்ணினதை உங்க ஆபீஸ்ல சொன்னீங்களா? இல்ல முக்கியமான விஷயத்துக்காக நீங்க வந்திருக்கறதால உங்களைக் கண்கானிக்கறதுக்கு யாரையாவது பிரிட்டிஷ் அரசாங்கமே அனுப்பியிருக்காங்களா?'

"நோ ஐடியா. சரி வீட்டுக்கு நீங்களும் வரீங்களா?"

"அதான் நாங்க வரோம்ன்னு சொல்லிட்டீங்களே. கண்டிப்பா வரேன். உங்களை பத்திரமா வீட்டுக்கொண்டுபோய் சேர்த்துட்டு அப்புறமா நான்
போறேன்."

"ரொம்ப தாங்க்ஸ்ங்க"

" வீட்டுக்குப் போய் சூடா ஒரு கப் காஃபி குடுத்துட்டு அப்புறமா சொல்லுங்க. இப்ப கிளம்புங்க"


கால் டாக்ஸியில் ஏறிக்கொண்டு அவளுடைய வீடு இருக்கும் புறநகர் பகுதியான நங்கநல்லூருக்குப் புறப்பட்டார்கள்.

கால்களை நன்றாக நீட்டிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான் வெற்றி. எழில் இன்னும் படபடப்பு அடங்காதவளாய் கைவிரல்களை கஷ்டப்படுத்திக்கொண்டிருந்தாள்.

முக்கியச் சாலையிலிருந்து உட்புறச் சாலைக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே வண்டி குலுக்கலுடன் நின்றது. சட்டென்று விழித்துப் பார்த்த வெற்றி ஆபத்தை உணர்ந்தான். டாக்ஸிக்கு முன்னால் ஒரு ஸ்கார்பியோ குறுக்காக நின்று கொண்டிருந்தது. திட்டிக்கொண்டே கீழே இறங்கிய டாக்ஸி டிரைவர் ஸ்கார்ப்பியோவிலிருந்து இறங்கிய ஒருவனால் ஒரே அடியில் கீழே சாய்க்கப் பட்டான். எழிலின் கைகளைப் பிடித்து,

"இங்கேயே உக்காந்துக்கிட்டிருங்க இதோ வந்துடறேன்.." என்று சொல்லிவிட்டு இறங்கிய வெற்றி, ஸ்கார்ப்பியோ ஆளை அவன் எதிர் பார்ப்பதற்குள் தாடைக்குக் கீழ் ஒரு அப்பர் பஞ்ச் கொடுத்தான். இவனது சக்தி மிகுந்த அந்த தாக்குதலில் நிலைகுலைந்து இரண்டடி பின்னால் சாய்ந்தவன் உடனடியாக உதட்டோரம் ரத்தம் உணர்ந்தான். அடுத்தடுத்து வெற்றியிடமிருந்து கிடைத்த குத்துகளால் தரையில் சாய்ந்தான்.

அதற்குள் இன்னும் இரண்டு பேர் வேகமாக இறங்கி வந்தார்கள்.

வெற்றி சற்றே பின்வாங்கி அப்படியே அமர்ந்து வலது காலை மட்டும் நீட்டி வேகமாக சுழட்டினான். அது அந்த இரண்டு பேரின்
கால்களுக்கிடையில் புகுந்து அவர்களைக் கீழே தள்ளியது. சட்டென்று துள்ளி எழுந்த வெற்றி அப்படியே எகிறி கையை மடக்கி முழங்கையை கீழே விழுந்த ஒருவனின் நெஞ்சில் இறக்கினான். அடுத்தவனுக்கும் அதையே பாரபட்சமில்லாமல் பகிர்ந்தான்.

அடுத்த நான்கு நிமிடங்களில் மூன்று பேரும் தள்ளாடி வண்டியில் ஏறி பறந்துவிட்டார்கள். நடப்பதையெல்லாம் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த எழில் திறந்த வாயை மூடவேயில்லை. கிழே விழுந்திருந்த டாக்ஸிடிரைவரை எழுப்பி, வண்டியிலிருந்து தண்ணீரை எடுத்துவந்து தெளித்து மயக்கம் தெளிவித்தான். அவன் முகத்தில் பீதி அப்பட்டமாகத் தெரிந்தது. நாக்கு குழற,

'யார் சார் அவனுங்க...எதுக்கு தாக்க வந்தாங்க?"

"ஆக்ச்சுவலா எனக்கும் தெரியாது. ஆனா இனிமே இந்த மாதிரி ரிஸ்க் எடுக்க கொஞ்சம் யோசிப்பானுங்க. சரி அதை விடுங்க. உங்களால இப்ப வண்டி ஓட்டமுடியுமா?'என்றான்.

"ஓட்டுவேன் சார். கழுத்துதான் செம வலியா இருக்கு. மாடு முட்டுன மாதிரி அடிச்சிட்டான் பேமானி. நீங்க போய் உக்காருங்க சார். போலாம்."

உள்ளே வந்து அமர்ந்தவனையே விழிவிரிய பார்த்துக்கொண்டிருந்த எழிலின் முகத்துக்கு நேராக சொடுக்கி,

"ஹலோ...என்ன ஆச்சு...கமான்...நார்மலுக்கு வாங்க."

"அப்பா....என்னா அடி. அவனுங்க நெனைச்சுக் கூட பார்த்திருக்க மாட்டானுங்க. செம போடு போட்டீங்க. உங்களுக்கு கராத்தேவெல்லாம்
தெரியுமா?"

"ம்...எல்லாம் காலேஜ் டைம்ல கத்துக்கிட்டது. இப்ப உதவியிருக்கு.இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?"

வெளியே எட்டிப் பார்த்துவிட்டு,

"கொஞ்ச தூரம் தான். இன்னும் 5 நிமிஷத்துல போயிடலாம்."


வீட்டுக்கு வந்து இறங்கிக்கொண்டு டாக்ஸியை அனுப்பிவிட்டு கதவைத் தட்டினாள்.

அவர்களை வரவேற்றது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.


தொடரும்

மதி
12-07-2008, 05:05 PM
கராத்தே தெரிஞ்சவனா வெற்றி..கதை வழக்கம் போல வேகம் குறையாமல் போய்கிட்டு இருக்கு... அடுத்து எப்போ..?

mukilan
12-07-2008, 05:12 PM
நான் ஏற்கனவே ஒரு முடிச்சையே அவிழ்க்க முடியாமத் திணறிக்கிட்டு இருக்கேன். இதில கூடுதலா இன்னும் இரண்டு முடிச்சா.... நல்ல திருப்பங்கள் அண்ணா. திகில் புதினம் எழுதுவதற்கு உண்மையிலேயே ரூம் போட்டுதான் யோசிக்கணும்.
காத்திருத்தலுடன்...

பூமகள்
12-07-2008, 05:14 PM
ஹை... நம்ம வெற்றி... சண்டையெல்லாம் போட்டு அசத்திட்டாரே..??!!!

எழிலை இம்ப்ரஸ் பண்ணிடாருங்கோவ்...!!

ஆனா..வீட்டில் இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறாரா?? அப்படின்னா...
அச்சச்சோ... கொஞ்சம் பயமா இருக்கே...??!!

அடுத்தது என்னாகும்னு பயமா இருக்குங்க சிவா அண்ணா... பேசாம ஐந்து பாகம் விரைவா எழுதிட்டு... அடுத்தடுத்த வேலை நாட்களில் வெளியிட்டுடுங்க...! சனி ஞாயிறு விடுமுறை.. எப்படிங்க அண்ணா நம்ம ஐடியா...??!!


பூவுக்கு பொறுமை பத்தாம பொறுமையைக் கடன் வாங்க வைச்சிறாதீங்க சிவா அண்ணா....!!

கதை நிஜமாலுமே சூப்பர் சூப்பரோ சூப்பர்..!! :)

தீபா
12-07-2008, 05:16 PM
அப்படியே கண்ணுமுன்னால நடக்கிறாப்ல... :)

ஏற்கனவே ப்ளைட்ல இருந்தவன் சாவுக்குக் காரணம் தெரியாம முழிச்சிட்டு இருக்கிறப்போ, இப்ப வீட்டில வேற... எப்படி இதை இணணக்கப் போறாங்கன்னு புரிபடல.. ஆனா ஒண்ணு நிச்சயம்.. கதை பயங்கர திரில்.. ஸ்பீடும் கூட... சண்டைக் காட்சிகள் விவரித்த விதம் அருமை...

பாராட்டுகள்.. சீக்கிரம் அடுத்து கொடுங்கோ!! :icon_b:

சிவா.ஜி
12-07-2008, 05:19 PM
மதி, முகிலன், தங்கை பூ எல்லாருக்கும் நன்றி. இந்த ஊக்கம்தான் எனக்கு அதிக பட்ச உற்சாகத்தைக் கொடுத்து எழுத வைக்குது.

இன்னும் இன்னும் தரமுயர்த்த வேண்டுமென என்னை தூண்டுகிறது.

சிவா.ஜி
12-07-2008, 05:22 PM
பூம்மா.....உங்களுக்குத்தான் சனி ஞாயிறு விடுமுறை....எங்களுக்கு இல்ல....மறந்துட்டியா...

சிவா.ஜி
12-07-2008, 05:24 PM
ரொம்ப நன்றி தென்றல். தொடர்ந்து வரும் உற்சாக வார்த்தைகளுக்கு சக்தி மிக அதிகம். அதில் பாதியையேனும் பயன்படுத்திக்கொண்டு உங்களுக்கு திருப்தியளிக்கும் விதத்தில் எழுதுவேன் என்று உறுதியாக சொல்வேன்.

சிவா.ஜி
13-07-2008, 05:14 PM
பாகம்-6

நுங்கம்பாக்கம். நாலாவது பாகத்தில் பார்த்த அதே வீடு. ஆனால் இந்தமுறை உச்சக்கட்டப் பதட்டத்தில் இருந்தார்கள். அப்போதுதான் விமானநிலையத்திலிருந்து தகவல் வந்திருந்தது. அவர்கள் எதிர்பார்த்திருந்த இரண்டு வெள்ளைக்காரர்களும் மண்டையைப் போட்டுவிட்டார்களென்று. அந்த அதிர்ச்சி காய்வதற்குள் அடுத்த மெகா அதிர்ச்சியாக எழிலின் வீட்டிலிருந்த ஆட்களும் கொல்லப்பட்டது தொலைபேசி செய்தியாக வந்தது. கூடவே மிரட்டலும். இனி இந்தக் காரியத்தில் இறங்கினால் யாருமே உயிரோடு இருக்க மாட்டீர்களென்று.

மிதப்பாய் இருந்த தலைவன் இப்போது வடிவேல் ரேஞ்சுக்கு வந்துவிட்டான். அந்த லண்டன் பார்ட்டியின் பேச்சைக் கேட்டு, முன்பணமாகக் கிடைத்த லட்சங்களை வைத்து ஆர்வத்துடன் இந்த வேலையில் இறங்கியது, இந்தளவுக்கு ஆபத்தில் கொண்டுவந்து விடுமென்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.யார் அவர்கள் நிழல் மறைவில் பயங்கரங்களை நிகழ்த்துகிறார்கள்? இதே வேலையைச் செய்யும் வேறு குரூப்பாக இருக்குமா? அல்லது அரசாங்க உளவுத்துறையா? யாராயிருந்தாலும் மிகவும் ஆபத்தானவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்ததால் இந்தக் காரியத்தில் இறங்கும் எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டான்.

தன் ஆட்களிடம் சொல்லிவிட்டான். நம்ம பழைய வேலையையே பார்க்கலாம். இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று. கொல்லப் பட்டவர்களின் உடல்களைக்கூட காணோம். நாமும் இந்த மாதிரி அனாமத்து பிணமாக ஆகக்கூடாது என்று கும்பலோடு பாண்டிச்சேரிக்குப் போய் கொஞ்ச நாள் தலைமறைவாய் இருக்க முடிவு செய்தார்கள்.

--------------------------------------------


சென்னையின் வேறு பகுதி. அந்த அறை ஹைடெக் சமாச்சாரங்களால் நிறைந்திருந்தது. காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கணிணியில் ஏதோ செய்து கொண்டிருந்த ஆண்டனி..ஒரு ஆங்கிலோ இந்தியன். குற்றங்கள் செய்வது அவனுக்கு மேட்னி ஷோ சினிமா பார்ப்பதைப்போல. அவனுக்கென்று ஒரு கும்பல் இருந்தது. தற்சமயம் அவன் இறங்கியிருப்பது பார்வைக்கு வைக்கப்பட இருக்கும் கோஹினூரை களவாடுவதில்.

வெள்ளைக்காரனுக்கு நாங்களும் சளைத்தவர்களல்ல என சவால் விடுமளவுக்கு நவீன யுக்திகளை தெரிந்து வைத்திருந்தான். விலைகூடிய எலக்ட்ரானிஸ் சாதனங்களை துணைக்கு வைத்துக்கொண்டு பெரிய அளவில் குற்றங்கள் செய்பவன். கோஹினூர் வந்து சேரும் நாள், வைக்கப்படவிருக்கும் இடம். எத்தனைபேர் அதனுடன் வருகிறார்கள். எந்த வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக இருக்கிறார்கள்,எல்லா விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருக்கிறான். ஆனால் அவன் பார்வையில் எழில் இல்லை. யாருடைய துணையுமின்றி அந்தக் காரியத்தை செய்யமுடியும் என்று அசாத்திய நம்பிக்கையோடு இருந்தான்.

அந்த வேலைக்காக அவன் புதிதாக தருவித்திருந்த சாதனங்களைத்தான் இப்போது சரிபார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் வேலையை முடிக்கட்டும் அதற்குள் எழில் வீட்டில் என்ன நடக்கிறதென்று பார்த்துவிட்டு பிறகு வந்து இவனைக் கண்டுக்கலாம்.

----------------------------------


இன்ஸ்பெக்டரை அவர்கள் எதிர்பார்க்காதது திகைப்பில் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் கறுப்பாய், உயரம் அதிகமில்லாமல் இருந்தார். முகத்தில் கடுமை தெரியவில்லை. நிறைய பேசுவாரென்று தெரிந்தது. இவர்களைப் பார்த்ததும் உள்பக்கமாக தலையைத் திருப்பி,

"இதா...உங்க பொண்ணு வந்துடிச்சில்ல...கூட ஒரு பையனுமில்ல வந்திருக்காரு" என்று சொல்லிவிட்டு,

"வாம்மா எழிலரசி. உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கம்ல" பேச்சில் திருநெல்வேலி தெரிந்தது.

“சார் நீங்க.....எப்படி இங்கே...?”

“அதெல்லாம் அப்புறமா சொல்லுதேன். மொதல்ல அம்மாவப் பாருங்க. பயந்துபோய் கெடக்காக”

உள்ளே நுழைந்த எழிலை அவளுடைய அம்மா ஓடி வந்துக் கட்டிக்கொண்டாள்.

மௌனமாய் வந்த வெற்றி எதுவும் பேசாமல் அப்படியே நின்றான். அம்மாவை அப்படிப் பார்த்ததில் எழிலுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.என்னவெல்லாம் நடந்துவிட்டது. அம்மா ரொம்பத்தான் பயந்துவிட்டிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே, ஆறுதலாய் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு,

"அதான் நல்லபடியா வந்து சேர்ந்துட்டனில்லம்மா...இப்ப எதுக்கு அழற? எனக்கு ஒண்ணுமில்ல.." சொல்லிக்கொண்டே வந்தவள் வெற்றி நிற்பதைப் பார்த்துவிட்டு,

'அடடா...சாரிங்க...உக்காருங்க" என்று சொல்லிவிட்டு, அம்மா அப்பாவிடம் திரும்பி.."இவர் வெற்றிச்செல்வன். ரொம்ப உதவியா இருந்தார். இவர் இல்லன்னா நான் இப்ப வீட்டுக்கு வந்திருக்க முடியாது." என்றாள்.

"அவளுடைய அப்பாவும் அம்மாவும் கை கூப்பிக்கொண்டே ரொம்ப நன்றிங்க தம்பி. நாங்க ரொம்பவே பயந்துட்டோம்.என்னென்னவோ நடக்குதே...எங்க பொண்ணுக்கு என்ன ஆகுமோன்னு தவிச்சுப் போய்ட்டோம். உக்காருங்க தம்பி." என்று எழிலின் அப்பா சொன்னதும்,

"அடடா என்னங்க இது? கண்ணுக்கு முன்னால ஒருத்தருக்கு ஆபத்துன்னா பாத்துகிட்டு சும்மா போயிட முடியுங்களா? ஆனா என்னைவிட ரொம்பப் பெரிய உதவியா அந்த ரெண்டு பேரையும் கொன்னவங்கதான் செஞ்சிருக்காங்க.." அவன் அப்படிச் சொன்னதும் இன்ஸ்பெக்டர்,

"அய்யோ நீங்க என்ன சொல்லுதீங்க...கொலையா...யாரு? எங்கே? கொஞ்சம் விவரமாச் சொல்லுறியளா?' என்றார்.

"சார் உங்களுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சிதான் இங்கே வந்திருக்கீங்கன்னு இல்ல நான் நினைச்சேன்" எழில் சொன்னதும்,

"இல்லம்மா...வெள்ளைக்காரங்க குழுவில நீங்களும் வரப்போறதா எங்களுக்கு தகவல் வந்தது. ஆனா ஒரு வாரம் முன்னாலயே நீங்க வர்றதாகவும் சொன்னாங்க. உங்களுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி மேலதிகாரிங்க சொன்னதால, பாத்து பேசிட்டுப் போக வந்தேன். இங்க என்னடான்னா...கொலையெல்லாமில்ல நடந்திருக்கு...?'

"சார் அப்ப உங்களுக்கு எந்த விவரமும் தெரியாதா?' கேட்டுக்கொண்டே, அம்மாவைப் பார்த்து "அம்மா...காஃபி குடுக்கிறியாம்மா. சாருக்கும், வெற்றிக்கும் சேத்து"என்றாள்.

'நான் அப்பவே குடிச்சிட்டேன். அம்மா குடுத்துட்டாங்க" இன்ஸ்பெக்டர் அந்த ஃபில்டர் காஃபியின் சுவையை இன்னும் நாக்கில் தேக்கிவைத்துக்கொண்டே சொன்னார்.

"சரி எனக்கும் வெற்றிக்கும் குடும்மா" சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் திரும்பி " சார் ஆக்சுவலா என்ன நடந்துதுன்னா....' என்று தொடங்கி லண்டனில் ஆரம்பித்து சற்று நேரத்துக்கு முன்னால் நடந்த சண்டைவரை சொல்லிமுடித்தாள்.

அனைத்தையும் கேட்டவர்,

"அடக் கடவுளே இவ்வளவு நடந்திருக்கா? அப்ப உனக்கு...ஏந்தாயி உன்னப் பாத்தா என் மவ பானுமதி மாதிரியே இருக்கே...உனக்குன்னு சொல்லலாமில்ல...? சம்மதத்திற்கு எதிர்பார்க்காமல் தொடர்ந்தார்...அப்ப உனக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம்ல. களவானிப் பயலுவ இங்க வரைக்குமில்ல வந்திருக்கானுவ? சரிம்மா இதையெல்லாம் கம்ப்ளெண்டா எழுதிக் குடுக்கப் போறியளா?"

"இப்ப எதுவும் சொல்ல முடியல சார். எங்க மேலதிகாரிங்களுக்கு இன்னும் தெரியப்படுத்தல. அவங்களுக்கு தெரிவிச்சுட்டு, அவங்க என்ன அட்வைஸ் பண்றாங்களோ அது மாதிரி செய்யறேன்."
என்று எழில் சொன்னதும் அவரும் சிறிது யோசித்துவிட்டு,

"சரி. அப்படியே செய்யுங்க. ஆனா இங்க வீட்ல கொலை நடந்திருக்கே..அதுக்கு என்ன செய்யறது?'

"சார் ப்ளீஸ்...நீங்க தனிப்பட்டமுறையில வேணுன்னா இன்வெஸ்டிகேஷன் பண்ணிக்கங்க. எங்களை இதுல தயவு செஞ்சி இன்வால்வ் பண்ணாதீங்க. அப்பாவும், அம்மாவும் ஏற்கனவே பயந்திருக்காங்க.அது மட்டுமில்ல,எனக்கு திரும்ப லண்டன் போறதுக்கு சிக்கல் வருமோன்னு பயமா இருக்கு. இது என்னோட ரெக்வெஸ்ட் சார்"என்று எழில் கேட்டுக்கொண்டதும், அவரும் சம்மதித்து, நிகழ்ந்ததை சற்று விவரமாய்க் கேட்டுக்கொண்டு, பிறகு சந்திப்பதாய் சொல்லிவிட்டு கிளம்பினார்.

அடுத்து வெற்றியும் கிளம்பினான். மறக்காமல் அவளுடைய அலைபேசி எண்-ஐ வாங்கிக்கொண்டு.




தொடரும்

mukilan
13-07-2008, 05:24 PM
ஆங்கிலோ இந்தியன் ஆண்டனியும் மறத்தமிழன் வெற்றிச் செல்வனும் மோதப் போகிறார்களா? பலே! சரியான போட்டி! ஆமா எங்கூரு இன்ஸ்பெக்டருக்கு ஒரு பேரு இல்லியா அண்ணாச்சி! ச்சும்மா வெளாட்டுக்குத்தான் கேட்டேன் தப்பா நினைக்காதீக!.
வட்டார மொழி வழக்கும் சேர்த்து அடடா! சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய் வாசனை.
கலக்கல்! கலக்கல்!! கலக்கல்!!!

பூமகள்
13-07-2008, 05:29 PM
அடுத்து வெற்றியும் கிளம்பினான். மறக்காமல் அவளுடைய அலைபேசி எண்-ஐ வாங்கிக்கொண்டு.

:icon_b::icon_b:
இந்த வரிகள் படிச்சதும் குறுநகை முகத்தில் எட்டிப் பார்த்தது சிவா அண்ணா..!! :)

கதை விறுவிறுப்பு குறையாமல் இருக்கிறது... இன்ஸ்பெக்டர்.. பேச்சு அசல் திருநெல்வேலி பேச்சு வழக்காடலை காதில் ஒலித்தது..

தொடருங்கள் சிவா அண்ணா.. ஆவலோடு பயணிக்கிறோம். :)

சிவா.ஜி
13-07-2008, 05:50 PM
ஆங்கிலோ இந்தியன் ஆண்டனியும் மறத்தமிழன் வெற்றிச் செல்வனும் மோதப் போகிறார்களா? பலே! சரியான போட்டி! ஆமா எங்கூரு இன்ஸ்பெக்டருக்கு ஒரு பேரு இல்லியா அண்ணாச்சி! ச்சும்மா வெளாட்டுக்குத்தான் கேட்டேன் தப்பா நினைக்காதீக!.
வட்டார மொழி வழக்கும் சேர்த்து அடடா! சர்க்கரைப் பொங்கலில் ஏலக்காய் வாசனை.
கலக்கல்! கலக்கல்!! கலக்கல்!!!

நன்றி முகிலன். அவருக்குப் பேரு இருக்கு. இனிமேத்தான் கலக்கப்போறார். அதனால அப்ப சொல்லிக்கலான்னு இப்ப விட்டுட்டேன்.

meera
14-07-2008, 06:46 AM
அய்யோ, பூ உன் ஹீரோ சூப்பரா சண்டை போட்டுருக்காரே!!!!

அண்ணா ரொம்ப நல்லா பொகுது. நான் கொஞ்சம் லேட்டா படிச்சுட்டேன். இனி சரியா கூடவே வருவேன்

கண்மணி
14-07-2008, 06:49 AM
ஏன் தான் ஹீரோவுக்கு சூர்யா, விஷால்னு அலையணும் சிவாஜியண்ணா, மன்றத்தில இதுக்குண்ணே ஒரு ஹீரோ இருக்காரே! அவர் பேரு அவர் பேரு ... மதி!!!

சிவா.ஜி
14-07-2008, 07:15 AM
நன்றிம்மா மீரா. பூவோட ஹீரோவுக்கு இன்னும் நிறைய வேலை பாக்கியிருக்கு.

சிவா.ஜி
14-07-2008, 07:16 AM
அட ஆமால்ல....நம்ம மதி இருக்கும்போது வேற ஹீரோ எதுக்கு? சரியாச் சொன்னீங்க கண்மணி.

மதி
15-07-2008, 07:22 AM
ஏன் தான் ஹீரோவுக்கு சூர்யா, விஷால்னு அலையணும் சிவாஜியண்ணா, மன்றத்தில இதுக்குண்ணே ஒரு ஹீரோ இருக்காரே! அவர் பேரு அவர் பேரு ... மதி!!!


அட ஆமால்ல....நம்ம மதி இருக்கும்போது வேற ஹீரோ எதுக்கு? சரியாச் சொன்னீங்க கண்மணி.

இது நானில்லேங்கோ...

aren
15-07-2008, 07:25 AM
ரொம்பவும் வேகமாக போறீங்க. நான் இன்னும் நான்காவது பாகத்தையே படிக்கவில்லை.

meera
15-07-2008, 08:10 AM
ரொம்பவும் வேகமாக போறீங்க. நான் இன்னும் நான்காவது பாகத்தையே படிக்கவில்லை.

அய் அண்ணா லேட்டா??????????:lachen001::lachen001: நான் படிச்சுட்டேனே படிச்சுட்டேனே:icon_rollout::wuerg019::icon_rollout:

aren
15-07-2008, 09:03 AM
அய் அண்ணா லேட்டா??????????:lachen001::lachen001: நான் படிச்சுட்டேனே படிச்சுட்டேனே:icon_rollout::wuerg019::icon_rollout:

சிவா அவர்கள் இப்படி வேகமாக எழுதுவதற்குக் காரணமே நீங்கதான். அதான் அவரை மெதுவாக போகச்சொல்கிறேன்.

மதி
15-07-2008, 09:49 AM
சிவாண்ணா... சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

தீபா
15-07-2008, 11:50 AM
ஏனனய பாகத்தில் இருந்த திகில் இதில் குறைவு என்றாலும் இப்போது இது தேவைதான்.. சற்று ஓய்வெடுத்து பயணிப்பது போல இருக்கும். அந்த விசயத்தில் தெளிவாக வென்றிருக்கிறீர்கள். சபாஷ். ஆரென் அவர்கள் மெதுவாகப் போகச் சொல்கிறார்.. ஆனால் சிவா அவர்கள் இப்போது போவதே நிரம்ப மெதுவாகத்தான் தெரிகிறது... கதை போகும் விதம் பார்க்கும்போது நிறைய பாகங்கள் வரும் போல இருக்கிறதே!!

சிவா.ஜி
15-07-2008, 12:55 PM
ஆமாம் தென்றல். இந்த மித வேகம் தற்சமயம் தேவைப்பட்டதால் சற்றே குறைத்திருக்கிறேன். சொல்ல வந்ததையும், நிகழ்வுகளையும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் கொஞ்சம் அதிக பாகங்கள் தேவைப்படுகிறது,
நீங்கள் அனைவரும் என்னுடன் இருக்கும்போது உற்சாகம் கூடுகிறது. நன்றிகள் பல அனைவருக்கும்.

aren
16-07-2008, 08:46 AM
ஐந்தாவது பாகம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் தமிழ் சினிமால் ஸ்டைலில் கதாநாயகன் மாதிரி எதிரிகளை பந்தாடுவதுதான் கொஞ்சம் இடறுகிறது.

தொடருங்கள்.

aren
16-07-2008, 08:53 AM
இது நானில்லேங்கோ...

மனசுக்குள்ளே பின்ன ஏன் சிரிக்கிறீங்க!!!

aren
16-07-2008, 08:54 AM
ஏதோ பொடிவைத்து ஆறாவது பாகத்தை முடித்திருக்கிறீர்கள். இன்ஸ்பெக்டர் எதுக்கு நம்பர் வாங்கிக்கொண்டு போனார். அவர் உண்மையா அல்லது போலியா?

சிவா.ஜி
16-07-2008, 09:38 AM
பாகம்-7


இன்ஸ்பெக்டரும், வெற்றியும் கிளம்பிப்போன பிறகு உடனடியாக தன் அறைக்கு வந்த எழில், அனைத்து விஷயத்தையும் தன் துறைத்தலைவருக்கு மின்னஞ்சலில் அனுப்பினாள். அவர் ஏகமாய்க் கவலைப் பட்டு இவளின் பாதுகாப்புக் குறித்து விசாரித்தார். காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றி சொன்னாள். சற்றே நிம்மதியடைந்து எச்சரிக்கையாய் இருக்கும்படி சொன்னார். இன்னும் ஐந்து நாட்களில் கோஹினூர் குழு கிரீடத்துடன் சென்னை வருமென்றும், அவள் அந்தக் குழுவை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சென்று சந்திக்கவேண்டுமென்றும் சொன்னார்.

நடந்த சம்பவங்களின் தாக்கம் அவர்களின் இயல்பான குதூகலத்தை மறைத்திருந்தது. ஆசையாசையாய், கடைகளில் ஏறி இறங்கி வாங்கி வந்த பொருட்களை அதே அளவு சந்தோஷத்தோடு அவளால் தர முடியவில்லை. அந்த இறுக்கமான சூழலை மாற்ற ஒரு இடமாற்றம் தேவைப் பட்டது. அதனால் குடும்பத்துடன் இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணம் போனார்கள். அந்த இரண்டு நாட்களில் வெற்றி அவளை மூன்றுமுறை தொடர்புகொண்டான். அவளுக்கும் அவனுடன் பேசுவது சந்தோஷமாகவே இருந்தது. குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த சம்பவங்களும் நிகழாத அந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு................,,


போன பதிவில் பார்த்த நெல்லை இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் தன்னுடன் இரண்டு போலீஸ்காரர்களுடன் காசிமேட்டில் கடலுக்கு சற்றே அருகில் இருந்த அந்தக் குப்பத்தில் வண்டியை நிறுத்தினார். அரை மணி நேரத்துக்கு முன்னால்தான் அங்கிருந்து அவருக்குத் தகவல் வந்தது.பூட்டியிருந்த அந்தக் குடிசைக்குள் பிணவாடை அடிப்பதாக. ஜீப்பைவிட்டு இறங்கிய சொக்கலிங்கம் அங்கே நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுக்காரனைப் பார்த்ததும் தெரிந்து கொண்டார். அவன் தான் தனக்கு தகவல் சொல்லியவன் என்று.

அந்த ஆள் முன்னால் வந்து,

"சார் என் பேரு லூர்துசாமி. நாந்தான் உங்களுக்குப் போன் போட்டது" என்றான்.

"ஓ...! ச்சரி அந்த குடிசை எங்க இருக்கு?"

அவரைத் தன்னைப் பின் தொடருமாறு சொல்லிவிட்டு நடந்தான் லூர்து. அவரோடு வந்த மற்ற காவலர்களுடன் அந்தக் குறுகிய சந்துக்குள் நுழைந்தார். அவன் சென்று அந்த பூட்டியிருந்த குடிசைக்கு முன்னால் நின்றுகொண்டான். அந்த இடம் நெருங்கியதும்,உடனடியாக மூக்கைப் பொத்திக்கொண்டார். உடன் வந்திருந்த ஆறுச்சாமி தலைமைக் காவலர். லோக்கல் பாஷையில் ஏட்டய்யா. கோவைக்கு அருகேயுள்ள சின்னவேடம்பட்டியைச் சேர்ந்தவர். இன்ஸ்பெக்டருக்கு அருகில் வந்து,

"ஏனுங் சார், வெளியவே இந்த நாத்தமடிக்குது, இன்னும் உள்ள போனா கொடல் வெளிய வந்து வுழுந்துடுமாட்டமிருக்கு" என்றவரைப் பார்த்து

"ஆமால, ச்சரி வா...போய்ப் பாப்போம். என்ன எழவை உள்ளுக்கு வெச்சிருக்காங்கேன்னு."

பூட்டை உடைத்து திறக்க காவலர்களிடம் சொல்லிவிட்டு, லூர்துவிடம் பேச்சை ஆரம்பித்தார் சொக்கலிங்கம்.

"எலே லூர்து...லூர்துதான ஒம்பேரு? எப்ப தெரிஞ்சிது இந்த மேட்டரு?"


"சார் காத்தால என் வூட்லருந்து வெளியே வந்து கடக்கரைக்கு போவச் சொல்லோ உள்ளருந்து கப்படிச்சிது. கருவாட்டு நாத்தத்துல சரியாத் தெரியல. ஒரு பத்துமணிக்கா...மறுக்கா இந்தாண்ட வந்தப்ப பொணநாத்தம் அட்சிதா அதான் உங்களுக்கு போன் போட்டேன்."


"நல்ல வேலைதாம்ல செஞ்சிருக்கே. இது யாரு குடிசைலே?"

"இப்ப யாரும் இல்ல சார். போன வாரம் வரைக்கும் சௌந்தரும் அவன் வூட்டுக்காரியும் இருந்தாங்க. இத்த யாருக்கோ வித்துட்டு வேற தாவுக்கு போறன்னு சொல்லிட்டுப் போய்ட்டான் சார்"

'இப்ப எங்க இருக்கான்னு தெரியுமா?"

"தெரியாது சார். அவன் இந்தக் குப்பத்துக்கு வந்து நாலு மாசம்கூட ஆகல சார். எதோ மெக்கானிக் கடையில வேலை செஞ்சிக்கினு இருந்தான்."

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வீச்சம் அதிகரித்தது. கதவு திறந்து கொண்டதால். கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக்கொண்டே உள்ளே நுழைந்தவர்கள் கண்ணுக்கு அந்த இரண்டு ஆண்பிணங்கள் தெரிந்தது. ஒரே அறையுடைய அந்தக் குடிசையின் ஒரு மூலையில் கை கால்களை வித்தியாசமான கோணத்தில் மடக்கிக்கொண்டு கிடந்த அந்த உடல்களைப் பார்த்தார். சட்டைகளில் பளிச்சென்று தெரிந்த அந்த பொத்தல்கள் காட்டிக்கொடுத்துவிட்டன அது துப்பாக்கியால் சுட்ட அடையாளமென்பதை.

இந்தக் குப்பத்தில் நிகழ்ந்த தகராறுக் கொலையென்றால், அது அரிவாள் வெட்டாகவோ அல்லது கத்திக் குத்தாகவோத் தான் இருக்கும்.அது மட்டுமல்லாமல் அறையில் எங்கும் ரத்தச் சிதறல்களைக் காணோம். இது இங்கு நடக்கவில்லை. வேறு எங்கோ நிகழ்த்தி உடல்களை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள் என்பதை யூகித்துக்கொண்டார். அதிக நேரம் உள்ளே நிற்காமல் வெளியே வந்து அந்தக் குடிசைக்கு சற்று தூரத்தில் நின்றுகொண்டு அலைபேசியில் ஆம்புலன்ஸுக்கும், மற்ற துறைகளுக்கும் தகவல் கொடுத்துவிட்டு ஜீப்பிற்கருகே வந்தார்.

லூர்துசாமியையும், அக்கம் பக்கதிலிருப்பவர்களையும் விசாரித்தார். யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை.

-------------------------------------------------------------

திரும்ப ஆண்டனியிடம் வருவோம். இப்போது அவன் சோதனை முடிந்து திருப்தியான புன் சிரிப்புடன் இருக்கையை விட்டு எழுந்து கைகளை உயர்த்தி நெட்டி முறித்தான்.இன்னும் அரையடி உயர்த்தினால் மின் விசிறியைத் தொட்டுவிடுமளவுக்கு வளர்ந்திருந்தான். முகத்தில் மைக்ரோ அளவுக்குக் கூட இரக்கமில்லை.எந்த கொடுஞ்செயலையும் தயக்கமே இல்லாமல் செய்வானென்று அந்த முரட்டுமுகம் சொன்னது.

அந்த மின்னணு சாதனத்தை எடுத்து பையில் வைத்துக்கொண்டான். வெளியே வந்தான். வீட்டைப் பூட்டிவிட்டு வாகனத்தில் அமர்ந்து புறப்பட்டான். வந்து சேர்ந்த இடம் ஒரு வணிக வளாகம். பல கடைகள் இருந்த அந்த வளாகத்தில் பெரிதாகவும் இல்லாமல், மிகச் சிறிதாகவும் இல்லாமலிருந்த,கண்ணாடிகளால் அடைக்கப் பட்டிருந்த அந்த கைப்பேசி சமாச்சாரங்கள் விற்கும் கடையைத் தேர்ந்தெடுத்தான். உள்ளே நுழைந்தான். கடை சிப்பந்தியிடம் ஏதோ ஒரு கைப்பேசியைக் காண்பித்து எடுக்கச் சொன்னான். அவன் திரும்புவதற்குள் சுற்றிலும் நோட்டம் விட்டான். வாடிக்கையாளர்கள் ஆறு பேர் இருந்தனர். கடை சிப்பந்திகளையும் சேர்த்து ஒன்பது பேர்.மெல்ல பைக்குள் கையை விட்டு அந்த mp3 பாடலை இசைக்கும் சாதனத்தை இயக்கி அதன் ஒலிப்பான்களைக் காதுகளில் பொருத்திக்கொண்டான். சப்தத்தை அதிகமாக்கி வைத்துக்கொண்டான்.

அதற்குள் அவன் கேட்டக் கைப்பேசி வந்திருந்தது. அதைப் பார்ப்பதாக பாவலா செய்தான். சிப்பந்தி அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்க நகர்ந்த சமயம் தன் பையில் வைத்திருந்த அந்த மற்றொரு மின்னணு சாதனத்தை உயிர்ப்பித்தான். உடனடியாக அங்கிருந்த அத்தனை பேரும் தலையைப் பிடித்துக்கொண்டு தடுமாறினார்கள். கண்களில் அதீத வலி தெரிந்தது. தங்களை நிலைப் படுத்திக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டார்கள். பேச முடியவில்லை.அதிக சப்தத்தில் ஒரு ஆங்கிலப் பாடல் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது. சட்டென்று ஆண்டனி இரண்டாவதாய் உயிர்ப்பித்த அந்த சாதனைத்தை சாகடித்தான். விசை போட்டதைப் போல அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் இன்னும் அந்த வலி மிச்சமிருப்பதை அவர்கள் முகம் காட்டிக்கொண்டிருந்தது.

யாருக்கும் எதுவும் புரியாமல் சின்ன சலசலப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து பல காரணங்களை ஒவ்வொருவரும் யூகித்து சொல்லத் தொடங்கினார்கள். சரி பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஆண்டனி கடையைவிட்டு வெளியே வந்தான். முகத்தில் சிரிப்பு. வேலை செய்கிறது. எதிர்பார்த்ததைப் போலவே விளைவுகள் இருக்கிறது.திருப்தியுடன் வண்டியில் அமர்ந்தவன் தனக்குள் சொல்லிக்கொண்டான்...

"கோஹினூரே....வருகிறேன். உன்னை அடைகிறேன்..!"

-----------------------------------------------------------------

B1-காவல் நிலையம். சற்றே தளர்வாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார் சொக்கலிங்கம். பையன் கொண்டு வைத்த தேநீரையும் உடனே எடுத்துக் குடிக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அதை எடுத்துக் குடித்தவரை கவனித்துக்கொண்டிருந்த ஏட்டு ஆறுச்சாமி, மெல்ல தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தார்.

“சார்....ஏதோ யோசனையில இருக்கீங்களாட்டருக்கு...? அந்த பொணங்கள பத்திதான யோசன பண்றீங்க?”

“ஆமாம்ல....எந்த செத்தமூதியோ எங்கனையோ ச்சம்பவத்த நடத்திபுட்டு நம்ம ஏரியாவுல வந்து பொணத்தை போட்டுட்டாய்ங்க. அவனுவ யார் எவருன்னு கண்டுபிடிக்கனுமே”

“ சார் எவனாச்சும் லோக்கல் கேடிங்ளாத்தான் இருப்பாங்க. நம்ம லிஸ்ட வெச்சு தேடினா கெடைச்சிடுவாங்க சார்”

‘ம்..அதுவும் சரிதாம்ல..போ போயி அந்த ஃபைல கொண்டுகிட்டு வா”

ஆறுச்சாமி நகரவும்..தொலைபேசி அடித்தது. அதனை எடுக்கத் திரும்பிய ஆறுச்சாமியைப் பார்த்து தான் எடுப்பதாய் சைகை காண்பித்துவிட்டு அவரை போகச்சொன்னார்.

ரிஸீவரை காதுக்குக் கொடுத்தார்.

“ஹலோ பி1 போலீஸ்டேசன், இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் ஸ்பீக்கிங்...”

மறுமுனையின் அதிகாரக் குரல் கேட்டதும்,

“எஸ் சார்...ஓகே சார். அந்த கேங்கா சார்...அப்படியா....இதோ இப்பமே வாரேன்...ஓக்கே சார். வெச்சிடுதேன் சார்”

எதிர்முனைக்கு கூடுதலான பவ்யம் காட்டி பேசிவிட்டு, சத்தமாக..

‘யோவ் ஆறுச்சாமி...ஃபைல் வேணாம்ய்யா...இங்குட்டு வா” என்றதும்

வேகமாக வந்த ஆறுச்சாமி,

“ஏனுங் சார் பைல் வேணாமின்னிங்க. யார் சார் போன்ல?”

‘கமிஷனர் ஆபீஸ்லருந்து ஏசிபி போன் பண்ணியிருந்தார்யா. அந்த செத்துப்போன களவாணிப் பயலுங்க யாருன்னு கண்டுபிடிச்சிட்டாய்ங்களாம். என்னைய வரச் சொன்னாரு. நீயும் கூட வா.”

“கண்டுபுடிச்சிட்டாங்களாமா சார்? யார் சார் அவங்க?”

“எல்லாம் நமக்குத் தெரிஞ்சவெங்கதாம்ல...வா...போம்ப்போது சொல்லுதேன்...கிளம்பு”


தொடரும்...............

சிவா.ஜி
16-07-2008, 10:56 AM
ஐந்தாவது பாகம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் தமிழ் சினிமால் ஸ்டைலில் கதாநாயகன் மாதிரி எதிரிகளை பந்தாடுவதுதான் கொஞ்சம் இடறுகிறது.

தொடருங்கள்.
நன்றி ஆரென். தமிழ் சினிமா ஸ்டைல் பறந்து பந்தாடுவது. இது நிஜமாகவே ஒரு தற்காப்புக் கலை அறிந்தவனால் நிகழ்வது. இது சாத்தியமே ஆரென்.

மதி
16-07-2008, 12:08 PM
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

அசத்தலா கொண்டு போறீங்க கதையை....முடிச்சு...மேல் முடிச்சு..மர்மம் மேல் மர்மம்...

பூமகள்
16-07-2008, 12:18 PM
சஸ்பென்ஸ் தாங்கல சிவா அண்ணா....

அட.. நம்ம கொங்கு தமிழ் காவலர் இருக்காரா??!! அப்போ திருநெல்வேலுக்கும் கொங்கு நாட்டு தமிழுக்கும் பத்து பொருத்தம் போங்கோ.... பிரமாதம்... பிரமாதம்...

பாராட்டுகள் சிவா அண்ணா..

அடுத்த பாகத்தினை எதிர்நோக்கி....

சிவா.ஜி
16-07-2008, 12:34 PM
நன்றி மதி. முடிச்சுப் போடும்போது சுலபமா இருக்கு...எப்படி அவிழக்கப் போறேன்னு கலக்கமா இருக்கு.(சும்மா....நாம போட்ட முடிச்சை நாமதானே அவிழ்க்கனும...ஹி...ஹி்)

சிவா.ஜி
16-07-2008, 12:35 PM
ரொம்ப நன்றிம்மா பூ. கொங்கு தமிழை கொஞ்சமாத்தான் காட்டியிருக்கேன்...இனி அடுத்த பாகங்கள்ல நிறைய வரும்.

mukilan
16-07-2008, 04:22 PM
யாரிந்தப் புதிய பிணங்கள். அவர்களா இவர்கள்? சூப்பர். நல்ல முடிச்சு.

நொய்யல் நதிக்கரைத் தமிழும், தாமிரபரணித் தமிழும் கூவக்கரைத் தமிழோடு கலந்து பேசும் காட்சியை கண்முன் காட்டியிருக்கிறீர்கள். ஆண்டனி கண்டு பிடித்த மின்னணுக் கருவி எத்துணை பேரை ஆட்டம் காணச் செய்யுமோ?

அருமை அண்ணா! உங்கள் பயணத்தை தொடருங்கள். நாங்களும் பின் தொடர்ந்து வருகிறோம்.

சிவா.ஜி
17-07-2008, 04:23 AM
மிக்க நன்றி முகிலன். உங்கள் தொடர்ந்த ஊக்கம் உற்சாகத்தை அளிக்கிறது. அந்த ஊக்கம் உடனிருக்கும்போது பயணம் இன்னும் சுகப்படும்.

சிவா.ஜி
19-07-2008, 05:31 AM
பாகம்-8

வெற்றி அலைபேசியில் எழிலை அழைத்தான். ஒரு உயர்ரக குளம்பிக் கடையில் சந்திக்கலாமென்று சொல்லிவிட்டு முன்னதாகவே சென்று எழிலுக்காகக் காத்திருந்தான். அவனை அதிகம் காக்க வைக்காமல் எழில் எழிலாய் வந்தாள். அவன் எதிரே அமர்ந்ததும், அவளைப் பார்த்து

"வாவ்....!" என்றான். எழில் முறைத்தாள். சூடில்லாமல்.

"இப்ப எதுக்கு இந்த வாவ்?"

"இல்ல அன்னிக்கு இருந்த அரிபரியில உங்களை சரியாக் கவனிக்கல. சும்மா சொல்லக்கூடாது அழகாவே இருக்கீங்க.."

" ஹலோ மிஸ்டர்....இதெல்லாம் கொஞ்சம் ஓவர். எதுக்காகக் கூப்டீங்கன்னு சொல்லுங்க. நாளைக்கு கோஹினுர் குழு வராங்க. எனக்கு கொஞ்சம் தயார் படுத்திக்க வேண்டியிருக்கு."

"அய்...கோவத்தப் பாரு. ஹலோ...நானும் இது மாதிரி இதுக்கு முன்னால சொன்னதில்ல. அதென்னவோ உங்களைப் பாத்ததும் சொல்லனுன்னு தோணுச்சி சொன்னேன். பிடிக்கலைன்னா சாரி."

"இட்ஸ் ஓக்கே....சொல்லுங்க. எதுக்கு வரச் சொன்னீங்க"

உடனே பதில் சொல்லாமல் தன் கைப்பையிலிருந்து அந்த காகிதங்களை எடுத்தான். அவளிடம் கொடுத்தான். "பாருங்க' என்றான்

வாங்கிப் பார்த்தவள்,

"என்ன இது லண்டன் போன் நம்பர்ஸ் கூடவே சில பேருங்க...எனக்குப் புரியல."

'ப்ளைட்ல மண்டையைப் போட்டாங்களே அவங்களோட போன்லருந்து அவங்க கூப்பிட்ட எண்கள், அந்த எண்களின் உரிமையாளர்கள்தான் இதெல்லாம்."

"மை காட்...அந்த போன்களை நீங்கதான் எடுத்துட்டுப் போனீங்களா....திஸ் ஈஸ் ட்டூ மச்..."

"மன்னிச்சுக்குங்க. உங்களை கட்டாயப்படுத்தினவங்களோட விவரம் தெரிஞ்சிக்கனுன்னு தோணுச்சி. அதுவுமில்லாம அந்த போனை வெச்சிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க? அதான் அன்னைக்கே உங்க பையிலருந்து சுட்டுட்டேன்."

"அதெப்படி நீங்.."

"கட் இட்...எடுத்தாச்சு பாத்தாச்சு. இப்ப அதெல்லாமா முக்கியம். நான் சொல்றதை கேளுங்க.இந்த எண்களை லண்டன்ல இருக்கிற என்னோட கிளாஸ்மேட்டுக்கு அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவன் முகவரியோட எல்லா விவரங்களையும் கொடுத்துட்டான். கூடவே...அவங்க ஆபத்தானவங்கங்கற உபரிச் செய்தியையும் சொன்னான்."

"பட் அவங்களால வர இருந்த ஆபத்துதான் இப்ப இல்லையே. நமக்கு எதுக்கு இந்த விவரமெல்லாம்?"

"என்ன எழில்...இப்படி சொல்ற...இறந்துபோனவங்க மட்டும்தான் அவங்க குரூப்ல இருப்பாங்களா? வேற ஆளுங்களை அனுப்பினா என்ன செய்யறது. ஸோ...இந்த விவரங்களை அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட கொடுப்போம். அவர் டிபார்ட்மெண்ட் மூலமா மூவ் பண்ணி ஏதாவது நடவடிக்கை எடுப்பார்."

"நீங்க சொல்றதும் சரிதான். ஆனா அவர் எந்த ஸ்டேஷன்னு தெரியாதே. அவரோட போன் நம்பரும் இல்லையே?"

"நான் எதுக்கு இருக்கேன்?.அதெல்லாம் தெரிஞ்சிடிச்சு. B1 ஸ்டேஷன்லத்தான் இருக்கார். இப்பவே போலாமா...இல்ல உனக்கு ஏதாவது வேலையிருக்கா?"

"முக்கியமான வேலை எதுவும் இல்லை. இப்பவே போகலாம்....வெயிட்..வெயிட்....அதென்ன...என்னை நீ வா..போன்னு ஒருமையில கூப்பிட ஆரம்பிச்சிட்டீங்க....?" அப்படிக் கூப்பிடுவதைத்தான் அவளும் விரும்புகிறாள் என்பது மனதுக்குள் இருந்தாலும், அவனை வேண்டுமென்றே சீண்டிப் பார்த்தாள்.

"அடடா...அது ஒரு ஃப்ளோல வந்துடிச்சி...ஆனாலும் நீ கோவப்பட்ட மாதிரி தெரியலையே?"

"கோவப்படனுன்னா எப்படி. எழுந்து நின்னு,முகமெல்லாம் சிவக்க, க்றீச்சுன்னு கத்த சொல்றீங்களா? சினிமாப் பாத்து ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க. சரி நம்ம சண்டையை அப்புறமா போட்டுக்கலாம். இப்ப வாங்க இன்ஸ்பெக்டரைப் பாக்கப் போகலாம்."

"இரு...இன்னும் காஃபி வரலையே. வந்ததும் குடிச்சிட்டுப் போகலாம்"

"சரி."
"ஒண்ணு பண்ணேன் எழில்...நீயும் என்னை வா...போன்னே..ம்ஹீம்...வெறும் வான்னே சொல்லலாமே...?"

"வெறும் வா"

அவர்கள் காவல் நிலையத்தை அடைந்தபோது அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்த சொக்கலிங்கம் தன் தொப்பியை கழற்றிவிட்டு வியர்த்திருந்த, தன் அறுவடை முடிந்த வயல் போல இருந்த தலையைத் துடைத்துக்கொண்டிருந்தார்.இவர்களைப் பார்த்ததும்,

"அடடே...வாம்மா...உன் பேரு....'நினைவுக்கு வராமல் இழுத்தார்.

"எழிலரசி...எழில் சார். அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"

" அடடா...அப்படியெல்லாம் இல்லம்மா...ஒரெ டென்ஷன்...என்ன பண்னச் சொல்லுதீக...போலீஸ்காரன் பொழப்பு அப்படி. சரி உக்காருங்க என்ன விஷயமா வந்தீங்க? என்று இரண்டுபேரையும் பார்த்து சொன்னார், கேட்டார்.

"சார்...இவங்கக் கூட வந்த ரெண்டுபேரும் செத்துப்போயிட்டானுங்க இல்ல. வரும்போது அவனுங்க செல் போனை எடுத்துட்டு வந்தோம். அதுலருந்து கொஞ்சம் விவரம் கிடச்சிருக்கு. அதை உங்க கிட்ட காட்டிட்டுப் போகலான்னு வந்தோம்" என்று சொல்லிக்கொண்டே வெற்றி அந்தக் காகிதங்களை அவரிடம் நீட்டினான்.

வாங்கிப் பார்த்தவர்,

"அட இதெல்லாம் வெளிநாட்டு நம்பராவில்ல இருக்கு. வெள்ளக்காரங்க பேரு எல்லாமே. லண்டன்னு இல்ல இருக்கு?"

"ஆமா சார். இவங்களை அங்கேருந்தே ஃபாலோ பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க. அவங்க ரெண்டுபேரும் செத்துட்டாலும், இந்த குரூப்லருந்து வேற யாரையாவது அனுப்பினா என்ன பண்றது சார்? அதான் உங்ககிட்ட சொல்லி உதவிக் கேக்கலான்னு வந்தோம்"

"நல்ல வேலை செஞ்சே. இவிங்களுக்குப் பாதுகாப்புக் குடுக்கச் சொல்லிதான் எனக்கு ஏற்கனவே ஆர்டர் இருக்கே."என்று சொன்னவர், எழிலைப் பார்த்து,"ஏம்மா உங்க வீட்டுக்கு ரெண்டு PC ங்களை அனுப்பி வெச்சேனே வராய்ங்கல்ல?"

"அடுத்த நாளே வந்தாங்க சார். ஆனா நாங்கதான் ரெண்டுநாள் வெளியூர் போயிட்டோம். திரும்பி வந்ததும் அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணச் சொன்னாங்க. பண்னோம். ஆனா இன்னும் வரல."

"அட செத்தமூதியளா....இருக்கட்டும் பாத்துக்கிடுதேன். நான் வேற ரெண்டுபேரை இன்னைக்கே அனுப்பி வெக்கிறேம்மா"

"சார் நாளைக்கு லண்டன்லருந்து அந்த குழு வரப்போறாங்க. சென்னையில மூணுநாள் இருப்பாங்க. நான் அவங்களோடத்தான் இருக்கவேண்டியிருக்கும். அதுக்குள்ள நீங்க ஏதாவது செஞ்சி அவங்களால எனக்கு எதுவும் ஆபத்து வராம பாத்துக்குங்க சார் ப்ளீஸ்"

"நீ கவலைப் படாதம்மா. நான் உடனே எங்க மேலதிகாரிங்ககிட்ட பேசி அந்தக் களவாணிப் பயலுவளை வளைக்கச் சொல்லிடுதேன்."


அவர்களை வழியனுப்பிவிட்டு ஆறுச்சாமியை அழைத்தார்.

'சார்.....!"

"செத்துப்போனவனுங்க அந்த ராயபுரம் சேகர் ஆளுங்கன்னு சொன்னேன்ல.."

'ஆமா சார்"

அந்த சேகர் பயலக் காணம்ல. அவன்கூட திரிஞ்சிக்கிட்டிருக்கிற பயலுவலையும் காங்கல. எங்கயோ எஸ்கேப் ஆயிட்டானுங்க. இந்த ரெண்டுபேரையும் போட்டுத்தள்னவன் யாருன்னு ஒண்ணும் புடிபடல." சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் சத்தம் கேட்டது. வெள்ளைச் சட்டையும், வெள்ளைக் கால்சட்டையும் போட்ட இரண்டுபேரும் உடன் வேறு இரண்டுபேரும் ஒரு ஆசாமியை இழுத்துக்கொண்டு வந்தார்கள். அந்த இழுத்துக்கொண்டு வரப்பட்டவன் முகத்தில் ரத்தம் இருந்தது. அடித்திருக்கிறார்கள். பிக்பாக்கெட் கேஸாயிருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர்களைப் பார்த்து,

"எலே யாருலே நீங்கள்லாம், எதுக்கு இவனை அடிச்சி இழுத்துட்டு வாரீக?"

அந்த வெள்ளச் சட்டைக்காரன் பேசினான்.

"சார் என் பேர் சம்முகம். கால் டாக்ஸி ஓட்றேன் சார். ஒரு வாரம் முன்னால ஏர்போர்ட் பார்ட்டிங்க ரெண்டுபேரை ஏத்திக்கிட்டு நங்கநல்லூர் போகும்போது இவனும் இவன்கூட ரெண்டுபேரும் வண்டியை மறிச்சி என்ன அடிச்சானுங்க சார். வண்டியில வந்த ஒருத்தர்தான் இவனுங்களை நல்லா அடிச்சித் தொரத்திட்டாரு. இன்னைக்கு நம்ம ஸ்டேண்ட் பக்கமா இவனைப் பாத்தேன். அதான் வளைச்சுப் பிடிச்சி இஸ்தாந்துருக்கோம்"

சொக்கலிங்கத்துக்கு எழில் சொன்ன சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. அவர்களைத் தாக்கியவர்களில் ஒருவனா இவன்.. அப்ப இவன் எந்த குரூப்பா இருக்கும்...என்று யோசித்துக்கொண்டே...

"நல்ல வேலைதாம்ல பண்ணியிருக்கீங்க. வெரிகுட். சரி இவனை நாங்கப் பாத்துக்கிடுதோம். நீங்க போங்கலே" என்று சொல்லிவிட்டு கான்ஸ்டபிள்களைக் கூப்பிட்டு அவனை லாக்கப்பில் அடைக்கும்படி சொன்னார்.

கூட்டி வந்தவர்கள் போன பிறகு லாக்கப்பில் இருந்தவனிடம் தன் போலீஸ்விசாரனையைத் தொடங்கினார். அவன் சொன்ன விஷயங்களைக் கேட்டதும்...அட இது நம்ம கேஸ்... இன்னும் ஆழமாத் தோண்டனும் என்று நினைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

-----------------------------------------------

ஆண்டனி பிரிட்டிஷ் ஹைகமிஷன் அலுவலகம் இருந்தப் பகுதியில் அந்த அலுவலகத்துக்கு எதிரே நின்றுகொண்டிருந்தான். நீண்ட நேரமாய் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அங்குதான் நாளை கோஹினூரைக் காட்சிக்கு வைக்கப் போகிறார்கள். தன் வேலை முடிந்ததும் அங்கிருந்து தப்பிக்கும் வழிகளை ஆராய்ந்துகொண்டிருந்தான். கிட்டத்தட்ட முழுத் திட்டமும் உருவாகியிருந்தது. அவன் இதழோர சிரிப்பில் அலட்சியம் தெரிந்தது.


தொடரும்

பூமகள்
19-07-2008, 06:01 AM
எழில் வெற்றி ஜோடி... இப்ப தான் இன்னும் சுவாரஸ்யமாக...!! ;) :D:D

கோஹினூர் வைரத்தைக் காண நாங்களும் காத்திருக்கிறோம் சிவா அண்ணா. :)

க.கமலக்கண்ணன்
19-07-2008, 08:26 AM
இவ்வளவு நல்ல க்ரைம் கதையை சின்ன வயதில் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார், சுபா மற்றும் பல எழுத்தாளர்களை நினைவுக் கொண்டு வந்து என்னை பின்னோக்கி சென்று மலரும் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது உங்களின் அற்புதமான தொடர். உங்களின் கதை முடிந்த உடன் புத்தகமாக அச்சிட்டு சென்னையில் உள்ள நமது தமிழ் மன்ற உறவுகளுக்கு வழங்க வேண்டும்... ஆனால் பணிசுமையால் இதை அப்போதே படிக்க முடியவில்லை...

எழில் என்னுடைய ஹீரேயின் என்று சகலமானர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.... (பூக்கு ஹீரோ போல எனக்கு ஹீரேயின்) ஹி ஹி ஹி ஹி

அடுத்த பகுதிக்காக மிக மிக ஆவலுடன்

செல்வா
19-07-2008, 09:18 AM
ஹா...ஹா... அண்ணா... கடைசி 3 அத்தியாயங்கள என்னால நிதானமா வாசிக்க முடியல அதான் பின்னூட்டம் போடல.. இப்பத் தான் வாசிச்சு முடிச்சேன். கலக்கல் அண்ணா... ரொம்ப நாள் ஆச்சு அண்ணா இப்படி ஒரு விறு விறுறு கதை வாசிச்சு... ஊருக்குப் போனாதான் வாசிக்கிறது.
அருமையாப் போகுது கதை... பேச்சு வழக்கிலேயே... உரையாடலைத் தொடர்வது ரொம்ப நல்லாருக்கு...
உங்ககிட்ட இன்னும் கத்துக்க நிறைய இருக்கு.. அண்ணா...
அடுத்து உங்க அனுமதியோட கீழ உள்ள வாசகத்துல ஒரு சின்ன மாற்றம் செய்து வாசிச்சுக்கிறேன்.


"ஒண்ணு பண்ணேன் எழில்...நீயும் என்னை வா...போன்னே..ம்ஹீம்...வெறும் வான்னே சொல்லலாமே...?"
"வா..."


"ஒண்ணு பண்ணேன் எழில்...நீயும் என்னை வா...போன்னே..ம்ஹீம்...வெறும் வான்னே சொல்லலாமே...?"

"வெறும் வா..."
:eek::eek::eek::eek:
இன்னும் கொஞ்சம் கவனம் வைங்க அண்ணா... ரெண்டு பேரோட ரகளைல... :) நல்லா மொக்க போடவிடுங்க... :)

சிவா.ஜி
19-07-2008, 10:36 AM
இவ்வளவு நல்ல க்ரைம் கதையை சின்ன வயதில் பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஸ்குமார், சுபா மற்றும் பல எழுத்தாளர்களை நினைவுக் கொண்டு வந்து என்னை பின்னோக்கி சென்று மலரும் நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டது உங்களின் அற்புதமான தொடர். உங்களின் கதை முடிந்த உடன் புத்தகமாக அச்சிட்டு சென்னையில் உள்ள நமது தமிழ் மன்ற உறவுகளுக்கு வழங்க வேண்டும்... ஆனால் பணிசுமையால் இதை அப்போதே படிக்க முடியவில்லை...

எழில் என்னுடைய ஹீரேயின் என்று சகலமானர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.... (பூக்கு ஹீரோ போல எனக்கு ஹீரேயின்) ஹி ஹி ஹி ஹி

அடுத்த பகுதிக்காக மிக மிக ஆவலுடன்

வாங்க கமலக்கண்ணன். உங்க மனமார்ந்த பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
நீங்க தொடர்ந்து வரும்போது உற்சாகமாய் இருக்கிறது.

சிவா.ஜி
19-07-2008, 10:38 AM
அடுத்து உங்க அனுமதியோட கீழ உள்ள வாசகத்துல ஒரு சின்ன மாற்றம் செய்து வாசிச்சுக்கிறேன்.

"ஒண்ணு பண்ணேன் எழில்...நீயும் என்னை வா...போன்னே..ம்ஹீம்...வெறும் வான்னே சொல்லலாமே...?"

"வெறும் வா..."


அட இது நல்லாருக்கே. தம்பி சொன்னா கேக்காம இருப்பேனா. மாத்தியாச். நன்றி செல்வா.

சிவா.ஜி
19-07-2008, 10:39 AM
கோஹினூர் வைரத்தைக் காண நாங்களும் காத்திருக்கிறோம் சிவா அண்ணா. :)

நானும்தாம்மா...ஹி...ஹி..

meera
19-07-2008, 10:52 AM
ஆஹா அண்ணா அசத்தல் அசத்தல். ஆனாலும் இந்த வெற்றிக்கு இவ்ளோ ஆர்வம் ஆகாது. எல்லா போன் நம்பர், அட்ரஸ் எல்லாம் தரானே...

பூ நான் வில்லன் யாருனு கண்டுபிடிச்சுட்டேனே..............

ஆனா சொல்ல மாட்டேன்..........

சிவா.ஜி
19-07-2008, 11:24 AM
பூ நான் வில்லன் யாருனு கண்டுபிடிச்சுட்டேனே..............

ஆனா சொல்ல மாட்டேன்..........

ஆஹா...மீராம்மா...எனக்கு மட்டும் சொல்லுங்களேன் ப்ளீஸ்.......

mukilan
20-07-2008, 04:08 AM
ஆஹா ஒருவன் பிடிபட்டுவிட்டான். நம்ம சொக்கலிங்கம் அண்ணாச்சி கெட்டிக்காரவுக.வெரசா மத்த களவாணிப் பயலுகள பிடிச்சிருவாக. வெற்றி-எழில் கூட்டணி கோஹினூர் வைரத்தை எப்படி ஆண்டனியிடம் இருந்து கட்டிக்காக்குமோ? என்ற பயம் வேறு. தொடருங்கள் உங்கள் திகில் பயணத்தை. நாங்களும் வருவோம்.

சிவா.ஜி
20-07-2008, 05:44 AM
நன்றி முகிலன். உங்கள் தொடர்ந்த ஊக்கம் உற்சாகத்தைக் கூட்டுகிறது.

அக்னி
20-07-2008, 07:51 PM
வாழ்த்துகள்... பாராட்டுகள்... நன்றிகள்...

எல்லாத்தையும் சொல்றேன்ன்னு பாக்கறீங்களா...
சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
சிறப்பாக அமைப்பதற்குப் பாராட்டுக்கள்.
சிறப்பாகத் தருவதற்கு நன்றிகள்.

சிவா.ஜி...
குறையாத விறுவிறுப்பும், எதிர்பாராத திருப்பங்களும், தொய்வில்லாத ஓட்டமும் நிறைந்துள்ளது. தொடருங்கள்...

இன்றுதான் அனைத்துப் பாகங்களையும் வாசித்தேன். நாளை வருமா என்று எதிர்பார்க்கவும் காக்கவும் வைத்துவிட்டீர்கள்.

காத்திருப்பது கடினம்தான். ஆனால், காத்திருப்பதனால் சிறந்த ஒரு க்ரைம் நாவல் கிடைக்கும் என்பதால் காத்திருக்கின்றேன்.



"ஹே மேன்...நான் இந்தியனாக இருந்தாலும் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு இந்த குப்பைகளெல்லாம் தெரியாது...கீப் திஸ்' என்று அந்த கை துடைக்கும் தாளை வெற்றியின் கைகளில் திணித்துவிட்டு எனக்கென்ன என்பதைப்போல நகர்ந்து மறைந்தான்.

ஒரு வரியில் சொன்னாலும், மேலைத்தேய கோகத்தை நச் என்று சுட்டிக் காட்டியமைக்குச் சபாஷ்...
எம் தாய்மொழியைத் தெரிந்திருப்பதே கௌரவக் குறைவு என்ற நிலை, வெட்கிக்கவும், கண்டிக்கப்படவும் வேண்டியது.

பிரிட்டிஷ் பாணியில் கட்டப்பட்ட அந்த அலுவலகத்தில் எல்லாமேபிரம்மாண்டமாக இருந்தன.கோப்புகள் பாதுகாக்கும் துறையின் தலைவி எலீஸா உட்பட கதவுகள்,ஜன்னல்கள் எல்லாமே மிகப் பெரிதாய் இருந்தன.
:eek::eek::eek:
:D :lachen001: ;) :rolleyes: :icon_ush: :shutup:

சிவா.ஜி
21-07-2008, 04:05 AM
ஆஹா...அக்னியின் பின்னூட்டம் பார்த்து ஆனந்த ஜ்வாலை அகத்தில் எழுகிறது. நீங்கள் அனைவரும் உடன் இருக்கும் போது எனக்கென்ன கவலை?. சிறப்பாக அமைய நிச்சயம் முயற்சிக்கிறேன். தங்கள் அன்புக்கு நன்றி அக்னி.

aren
21-07-2008, 04:58 AM
கலக்குகிறீர்கள் சிவா. இன்னும் என்னென்ன வரப்போகிறதோ என்ற ஆர்வத்தை இப்பொழுதே இந்தக் கதை ஏற்படுத்திவிட்டது.

இதையே ஒரு திரைப்படமாக எடுக்கலாம் போலிருக்கே.

மன்மதன்கிட்டே பேசலாமா?

சிவா.ஜி
21-07-2008, 05:15 AM
ஆஹா...ஆரென். ரொம்ப நன்றி. அப்ப மன்மதனையே வெற்றிச்செல்வனாக்கிட வேண்டியதுதான்.

மதி
21-07-2008, 12:46 PM
அடுத்து ப்ளீஸ்....

எவ்வளவு நாள் தான் காத்திருப்பது...???

இப்படி அல்லாடவுடறீங்க... !!!

சிவா.ஜி
21-07-2008, 01:56 PM
பாகம்-9


அன்று விடியற்காலையிலேயே கோஹினூர் குழு தனி விமானத்தில் சென்னை வந்திறங்கி விட்டார்கள்.விமான நிலையம் முழுவதும், உச்சபட்ச
பாதுகாப்புப் பணியில் சென்னை காவல்துறை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். குண்டு துளைக்காத மிகப் பாதுகாப்பான ஒரு வாகனம்
இங்கிலாந்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னைத் துறைமுகத்துக்கு வந்திருந்தது. அதனுடன் வந்திருந்த லண்டன் பாதுகாப்பு
அதிகாரிகள் நான்கு பேர் அதனை சில சோதனைகளுக்கு உட்படுத்திவிட்டு இன்று விமானநிலையத்துக்குக் கொண்டு வந்திருந்தார்கள். நேரடியாக
ஓடுதளத்திற்கே அந்த வாகனம் கொண்டு செல்லப்பட்டது.

வெகு எச்சரிக்கையாய் அந்த கிரீடம் இருந்த கனமான பெட்டி விமானத்திலிருந்து அந்த வண்டிக்கு மாற்றப்பட்டது. அந்தக்குழுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியை தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் கைகுலுக்கி வரவேற்றார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினார்கள். தமிழகக் காவல்துறைத் தலைவரும், சென்னை நகர காவல்துறை ஆணையரும் மற்ற உயர் அதிகாரிகளும் அந்தக் குழுவுனருக்கு ஒரு வரைபடத்தைக் காட்டி விளக்கினார்கள். கிரீடம் கொண்டு செல்லப்படும் வழியை எப்படி அமைத்திருக்கிறார்களென்றும், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கிறதென்றும் சொன்னார்கள்.

லண்டன் அதிகாரியின் முகத்தில் திருப்தி தெரிந்தது. முதலாவதாக ஒரு வாகனம் அனுப்பப்பட்டது. அது சென்ற ஐந்து நிமிடங்களில் மற்றொரு
வாகனம். அடுத்த ஐந்து நிமிடங்களில் முன்னாலும் பின்னாலும் வாகனங்கள் சூழ பட்டத்து இளவரசியின் பரிவாரங்களுடன் கூடிய ஊர்வலமாய் கோஹினூர் பதித்த கிரீடம் புறப்பட்டது.


அந்த ஊர்வலம் கடக்க இருந்த ஒரு முக்கியச் சாலையின் ஒரு பக்கத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த வாகன
ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிவப்புச் சிந்தனையாளர் அருகிருந்தவரிடம் அங்கலாய்த்தார்...

'யார் பொருளை யார் சொந்தம் கொண்டாடிக்கொண்டு இப்படி ஆர்ப்பாட்டமாக வருவது? கொள்ளையடித்து சென்றவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு. ச்சே...வெட்கக்கேடு"

கேட்டுக்கொண்டிருந்தவர் பாவம் இவர் என்ன சொல்கிறார் என்று விளங்காமல் "சர்தாங்க" என்று பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட்டு
பார்வையை அந்த ஊர்வலத்தின் மேல் திருப்பினார்.


ஊர்வலம் பிரிட்டிஷ் ஹை கமிஷன் அலுவலகம் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது. கிரீடத்தை உள்ளே கொண்டு செல்லும் முன் ஒரு குழுவினர்
உள்ளே சென்று ஏற்பாடுகளை ஆராய்ந்துவிட்டு வந்து கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார்கள்.பொதுமக்களின் காட்சிக்காக கிரீடம் வைக்கப்பட
இருக்கும் இடத்துக்குக் கொண்டு செல்லப் பட்ட அது, அதற்கான பிரத்தியேக கண்ணாடிக் கூண்டுக்குள் வைக்கப் பட்டது. நாளை மாலை காட்சித் தொடங்கும். நவீன ஆயுதங்களுடன் லண்டனிலிருந்து வந்திருந்த அதிகாரிகள் அந்த இடத்தை ஆக்ரமித்துக்கொண்டார்கள். உள்ளூர் போலீஸ்
உள்ளே வர அனுமதிக்கவில்லை. நீங்கள் வெளியிலிருந்து பாதுகாப்புக் கொடுங்கள் நாங்கள் உள்ளிருந்து பாதுகாத்துக் கொள்கிறோமென்று அந்த
தலைமை அதிகாரி இந்த தலைமை அதிகாரியிடம் சொன்ன போது அவரது இதழோரம் ஒரு இளக்காரத்தை அடையாளம் கண்டார் தமிழகக்
காவல்துறையின் தலைமை அதிகாரி.

"இந்த திமிரும் எகத்தாளமும் உங்க கூடப் பிறந்ததுதானேடா...மடையர்களா...இந்த தேசம் நீங்கள் விட்டுப்போனதைப் போல அல்ல இன்று. உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்திலும், மனிதத் திறமையிலும் வளர்ந்துவிட்ட தேசம். போ உன் வைரத்தை நீயே கட்டிக்கொண்டு அழு" என்று மனதில் நினைத்துக்கொண்டு சம்பிரதாயச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, தன்அதிகாரிகளை அழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினார்.



எழிலோடு பயிற்சி எடுத்துக்கொண்ட கிரிஸ் மற்றும் சில உதவியாளர்கள் தனிக் குழுவாய் வந்து அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
தங்கியிருந்தார்கள். அவர்களை சந்திக்க எழில் மதியம் மூன்று மணிக்கு போனாள்.வரவேற்பாளினியின் நுனி நாக்கு ஆங்கிலக் கேள்விகளுக்கு
அதைவிட சிறந்த முன் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த எழிலைப் பார்த்து அந்தப் பெண் லேசான பொறாமையுடன் காத்திருக்கச்
சொன்னாள். அருகிருந்து உள்தொடர்பு சாதனத்தில் ஏதோ எண்ணை தன் அழகான நகங்களுக்கு பாதிப்பு வராமல் ஒற்றினாள்.
மறுமுனையுடனான உரையாடலுக்குப் பிறகு எழிலை அறை எண் 1005க்குப் போகச் சொன்னாள்.


கதவை மென்மையாகத் தட்டினாள் எழில். திறந்தது கிரிஸ். இவளைப் பார்த்ததும், சினேகமான சிரிப்பில்லாமல்...சாதாரணமாக உள்ளே வா
என்றான். எழிலுக்கு அவனது செயல் எரிச்சலை மூட்டியது. உள்ளே வந்தவள் அங்கு இன்னொரு நம்ம ஊர்ப் பெண்ணும் நிற்பதைப் பார்த்தாள்.

ஹோட்டல் ஊழியையாய் இருக்குமென்று நினைத்துக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் சம்பிரதாயமாகக் கைகுலுக்கினாள். இந்தக் குழுவுக்கு
தலைவராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவரைப் பார்த்து தான் எத்தனை மணிக்கு காட்சி அரங்குக்கு வரவேண்டும், எந்த உடை அணிய
வேண்டுமென்ற விவரங்களைக் கேட்டாள்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவர்,

"இந்தத் தகவலைச் சொல்வதற்க்கு உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன் மிஸ் எலீல். உங்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் தெரிய வந்ததும், அரண்மனை பாதுகாப்பு அதிகாரிகள் உங்களால் ஏதும் பிரச்சனை வருவதற்கான சாத்தியம் இருப்பதாய் அபிப்பிராயப் படுகிறார்கள். அதனால்
உங்கள் மொழியில் விளக்க உரை கொடுக்க இதோ இங்கு நிற்கும் மிஸ் நிலாவை நான்கு நாட்களுக்குமுன் தேர்வு செய்துவிட்டோம். இவர் இதே
ஊரில் இருப்பவர்தான். இந்த மூன்று தினங்களுக்கு மட்டும் இவர் எங்களுக்காக வேலை செய்வார். அதனால்...(சற்றுத் தயங்கி) நீங்கள்
உங்கள் விடுமுறையை சந்தோஷமாகக் கழித்துவிட்டு திரும்ப வாருங்கள். மீண்டும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்"

அலட்டிக் கொள்ளாமல் தட்டச்சிய வாசகங்களை ஒப்புவிப்பதைப் போல சொல்லிவிட்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டார்.

எழில் அதிர்ச்சி மற்றும் லேசான அவமானத்தால் முகம் சிவந்தாள். கிரிஸ்ஸைப் பார்த்தாள். அவன் முகத்தில் ஓடிய எள்ளலைப் பார்த்ததும்
கோபத்தில் சிவந்தாள். திட்டவட்டமாக அவர் சொல்லிவிட்ட பிறகு அங்கு நிற்பதில் எந்த புண்ணியமும் இல்லை என்று நினைத்துக்கொண்டு தான் தயாரித்துக் கொண்டு வந்திருந்த விவரங்கள் அடங்கிய கோப்-ஐ எடுத்துக்கொண்டுத் திரும்பினாள். தலைவரால் மீண்டும் அழைக்கப்பட்டாள்.

"தயவு செய்து அந்த கோப்-ஐ எங்களிடம் தர முடியுமா? இவர்களுக்கு உதவும்" என்று நிலாவைக் காட்டிச் சொன்னார்.

சடாரென்று எழுந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டாள் எழில். தான் கஷ்டப்பட்டுத் தயாரித்த விவரங்களெல்லாம் இவர்களுக்கு ஆயத்தமாய் கிடைக்க வேண்டுமாமே...எருமைத் தலையர்கள். மனதுக்குள் திட்டிக் கொண்டே அதைக் கொடுத்துவிட்டு விருட்டென்று வெளியேறினாள்.


ஹோட்டலை விட்டு வெளியே வந்த எழில் இன்னும் ஆத்திரம் அடங்காமல் இருந்தாள். தான் அவமதிக்கப்பட்டதாய் நினைத்தாள். எல்லாமாய் சேர்ந்து அவளுக்கு அழுகையாய் வந்தது. யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலத் தோன்றிற்று. வெற்றியை அலைபேசியில் அழைத்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் மாநகர சந்தடிகளுக்கு இடையில் மரங்களால் சூழப்பட்ட அந்த பூங்காவில் இருந்தார்கள். மாலை நாலு மணியானாலும் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நிழலான இடத்தில் அமைந்த நீள இருக்கையாய்த் தேடி அதில் அமர்ந்தார்கள். சற்றுமுன்தான் அங்கு நிழல் எட்டியிருக்கும் போல. சுட்டது. வேறு நல்ல இடமில்லாததால் அங்கே அமர்ந்தார்கள்.

வந்த உடனே அவளுடைய முகத்தைப் பார்த்து அவள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்டு அவளே சொல்லட்டுமென்று இதுவரைக் காத்துக்கொண்டிந்தான் வெற்றி.ஆனால் அவன் அப்படி எதுவுமே கேட்காமல் அமர்ந்திருந்ததைப் பார்த்து எழிலுக்கு மேலும் ஆத்திரம் வந்தது. அந்த கோபத்துடனே...

"ஒரு மனுஷி அவசரமா போன் பண்ணிக் கூப்ட்ருக்காளே...என்னவா இருக்கும், ஏதுன்னு ஏதாவது ஒரு வார்த்தைக் கேட்டியா..வந்ததிலிருந்து என்னவோ ரவிஷங்கரோட வாழும் கலை பயிற்சிக்கு வந்தவன் மாதிரி அமைதியா உக்காந்திருக்கே..."

அந்தக் கோவத்திலும் அவள் சொன்ன உதாரணத்தைக் கேட்டு அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"ஹே...ஹே...கூல்.வந்ததும் உன் முகத்தைப் பாத்தே தெரிஞ்சிக்கிட்டேன். உனக்கு மனசு சரியில்லை. எதுவோ உன்னை தொந்தரவு பண்ணுதுன்னு. நீயே சொன்னாத்தான் நல்லாருக்குன்னு காத்துக்கிட்டிருந்தேன். சாரி. இப்ப சொல்லு என்ன உன்னோட பிரச்சனை?

ஆதுரமான அவன் வார்த்தைகளைக் கேட்டதும் அவன் மீது இருந்த செல்லக் கோபம்கூட மறைந்து நடந்ததை திராவிடக் கட்சிகளின் பேச்சாளர்களைப் போல மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

முழுவதையும் கேட்டவன் ஒரு பெரிதான வெடிச் சிரிப்புச் சிரித்தான்.

எழிலுக்கு மறுபடியும் கோபம் ஏறி மூக்கின்மேல் அமர்ந்துகொண்டது.

"இப்ப நான் என்ன ஜோக்கா சொன்னேன். எதுக்கு இந்த சிரிப்பு?

"எழில்...இங்கபாரு. நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு ஏன் சொல்லியிருக்காங்க. இப்ப நீ அந்த டீம்ல இல்லாமப் போனதும் நல்லதுக்குத் தான்."

'என்ன பேசற நீ. இதுக்காகத்தானே நான் வந்ததே. அந்த புகழ்பெற்ற கோஹினூர் வைரத்துக் கூட மூணுநாள் கழிக்கலாம், நிறைய வி.ஐ.பிங்க வருவாங்க அவங்களைப் பாக்கலாம், பேசலாம், என்னோடத் திறமையைக் காமிக்கலான்னு எவ்ளோ ஆர்வமா இருந்தேன். இப்ப எதுவுமே இல்லாம போயிடிச்சேன்னு நானே வெறுத்துபோயிருக்கேன்...நீ தத்துவமா சொல்ற? பொடலங்கா"

"அடேயப்பா...பூ ஒன்று புயலானதே...ஓக்கே..ஓக்கே...ஜஸ்ட் லிஸன். நீ ஆசைப்பட்ட எல்லாமே நடந்திருக்கும். ஆனா ஒரு விஷயத்தை நீ மறந்துட்டே. உன் உயிருக்கு ஆபத்து எந்த நேரத்திலும் இருந்திருக்குமில்ல?"

"என்ன சொல்ற நீ? என் உயிருக்கு என்ன ஆபத்து?"

"எழில்...நடந்த சம்பவங்களை வெச்சுப் பாக்கும்போது உனக்கு என்ன தெரியுது? உன்னை உபயோகிச்சு அந்த வைரத்தைத் திருட ஒரு கும்பல் நினைச்சது. ஓக்கே...ஆனா அவங்களையே கொன்னுட்டாங்க இன்னொரு குரூப். அப்ப இந்த வைரத்துக்காக இப்பவே இரண்டு குரூப் காத்துக்கிட்டிருக்காங்க. இன்னும் எத்தனை இருக்குன்னு சொல்ல முடியல. அதுல ஏதாவது ஒரு குரூப்போ அல்லது ரெண்டோ அந்த வைரத்துக்காக முயற்சி பண்ணும் ஏதாவது குழப்பம் நடந்து துப்பாக்கி சூடு அது இதுன்னு ஏற்பட்டா..அதுல உனக்கும் ஏதாவது ஆகலாமில்லையா?"

"ஷோ நடக்கப் போறது ஒரு நாளைக்கு மூணு மணிநேரம்தான். அந்த நேரத்துலத் தான் நான் அங்க இருப்பேன். அதுவுமில்லாம அப்ப நிறையபேர் இருப்பாங்க. அப்ப போய் யாராவது அதைத் திருட முயற்சி பண்ணுவாங்களா?"

"அப்பதான் பண்ணுவாங்க. ஈஸியா உள்ள நுழைய முடியும். யாரையாவது பிணை கைதியாப் பிடிச்சுக் கூட செய்யலாம். இல்லை அதிரடியா சுடக்கூடச் செய்யலாம்.எப்படிப் பாத்தாலும் நீ அப்ப அங்க இருக்கறது ரிஸ்க்தான். ஸோ கவலையை விடு. அவங்க சொன்ன மாதிரி விடுமுறையை அனுபவிப்போம்"

'என்னது?'

"சரி அனுபவி"

'இல்ல வெற்றி. நீ சொன்னமாதிரி இதுவும் நல்லதுக்குத்தான்னாலும்..இந்த விஷயத்துல நாம ஏதாவது செய்யனுன்னு எனக்கு தோணுது. தெரிஞ்சோ தெரியாமலோ நாம இதுல சம்பந்தப்பட்டுட்டோம். இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டிப் பாத்துடலாமா?"

"வாவ்...வாம்மா மின்னல்! அசத்துற. ஓக்கே நான் ஆட்டத்துக்கு ரெடி. வா இப்பருந்தே ஆரம்பிக்கலாம். முதல்ல உங்க வீட்டுக்குப் போகலாம். அவங்களை மிரட்டினவங்களைப் பத்தி ஏதாவது தெரிஞ்சா அந்த நூலைப் பிடிச்சிட்டே முன்னால போலாம்.

தொடரும்

அக்னி
21-07-2008, 02:42 PM
இப்பொழுது ஒரு சிறு ஆதங்கம் என் மனதில்.
அதாவது, வெற்றி ஒரு தனியார் டிடெக்டிவ் ஆகவேனும் இருந்திருக்கலாமே என்றுதான்.

சரி. அது போகட்டும்.
நம்ம :D எழிலை இப்படி வெளியேற்றிவிட்டார்களே. இருந்தாலும் எழில் + வெற்றி கூட்டணியால்தான் கோஹினூர் கொலைகளில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று (ஏற்படணும்) நம்புகின்றேன்.

எங்கள் நாடுகளைச் சுரண்டி வளர்ந்தவர்கள், எங்கள் மேல் செலுத்தும் மேலாதிக்கத்திற்கு, எமது அரசாங்கங்கள் பல்லிளிப்பது வெட்கத்திற்குரியதே.


அருகிருந்து உள்தொடர்பு சாதனத்தில் ஏதோ எண்ணை தன் அழகான நகங்களுக்கு பாதிப்பு வராமல் ஒற்றினாள்.

:eek:
வர்ணனைகள் புதுமை + இனிமை
ரொம்பத்தான் கவனிச்சிருக்கிறீங்க போலிருக்கே... ;)

தேவையற்ற இடங்களில் தவிர்க்கப்படும் ஆங்கிலச் சொற்கள், யதார்த்தமான கதை ஓட்டத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் தவிர்க்கப்படும் சிவா.ஜி யின் எழுத்தாற்றலுக்கு பெரிய சபாஷ்...

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
21-07-2008, 02:48 PM
அப்படி வெற்றி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்தவன் என்று காட்டியிருந்தால் அது பழசுதானே அக்னி. இப்ப ரெண்டுபேரும் சேர்ந்து ஏதோ செய்யனுன்னு நினைக்கறாங்க. பாப்போம் என்ன செய்யப் போறாங்கன்னு.

நன்றி அக்னி.

அக்னி
21-07-2008, 03:01 PM
நீங்க அப்பிடி வாரீங்களா...
சாதாரண மக்களாய் இருந்து சாதிக்கையில், பாத்திரங்கள் மிகவும் பேசப்படும்தான். வரவேற்கின்றேன்.

யவனிகா
21-07-2008, 03:04 PM
வேலை பளுவிற்கு இடையே இப்போது தான் வாசிக்கத் துவங்கியுள்ளேன் சிவா அண்ணா...விறு விறு..சுரு சுரு...மொறு மொறு...

ஆரம்பமே அசத்தல் அண்ணா...முழுமையாக படித்து விட்டு வருகிறேன் முதலில்...

க.கமலக்கண்ணன்
21-07-2008, 03:19 PM
முழுவதுமாய் படிக்கவில்லை இந்த பாகத்தை முழுவதும் படித்துவிட்டு சொல்கிறேன்...

mukilan
21-07-2008, 03:28 PM
எதிர்பாராத ஏமாற்றம். வெல்லம் சாப்பிடுவது ஒருத்தர், விரல் சூப்புறது வேறொருத்தரா... பாவம் எழில்.

வாழும் கலை ரவிசங்கர் போல, திராவிடக் கட்சிப் பேச்சாளர்கள் போல போன்ற ஒப்பீடுகளை ரசித்தேன் அண்ணா.

நுனி நாக்கு ஆங்கிலம் அதைவிட முன் நுனி நாக்கு ஆங்கிலம்; வாம்மா மின்னலு போன்ற நகைச்சுவையும் கலந்து இந்தப் பகுதி ஒரு கல கலாதான் போங்கள்.!

தொடரட்டும்!

மதி
21-07-2008, 04:24 PM
ஆஹா...
அதே விறுவிறுப்பு.. உங்களோட வர்ணனைகளும் அதிரடி...

அடுத்த பாகத்தை எதிர் நோக்கி..

அக்னி
21-07-2008, 04:55 PM
எதிர்பாராத ஏமாற்றம். வெல்லம் சாப்பிடுவது ஒருத்தர், விரல் சூப்புறது வேறொருத்தரா... பாவம் எழில்.
அட...
முகில்ஸ், எழிஸ்சுக்காக ரொம்பத்தான் பரிதாபப்படறாரே... ;)


இந்தப் பகுதி ஒரு கல கலாதான் போங்கள்.!

நம்ம அமரனுக்கு வைக்கிற உள்குத்து ஏதுமில்லையே... :rolleyes:

சிவா.ஜி
21-07-2008, 05:14 PM
வாங்க யவனிகா. உங்க வேலைப் பளுவைப் பத்தி தெரியும். அத்தனை வேலைக்களுக்கிடையில் இதை படிக்க நேரம் ஒதுக்கி பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றிம்மா.

சிவா.ஜி
21-07-2008, 05:16 PM
ரொம்ப நன்றி முகிலன். ரொம்ப நன்றி மதி. மொத்தத்துல இந்த பகுதிக்கு வந்த பின்னூட்டங்களும் ரொம்ப கலகலாதான்.

mukilan
21-07-2008, 05:36 PM
அட...
முகில்ஸ், எழிஸ்சுக்காக ரொம்பத்தான் பரிதாபப்படறாரே... ;):
எல்லாம் ஒரு பாசம் தான். எழிலரசியாச்சே


நம்ம அமரனுக்கு வைக்கிற உள்குத்து ஏதுமில்லையே... :rolleyes:

இதென்ன கலாட்டா?

அறிந்து கொள்ளும் ஆர்வமுடன்,:D:D

meera
22-07-2008, 02:57 AM
அய் ஆட்டம் இப்போ தான் சூடு பிடிக்குது.அசத்தல் அண்ணா தொடருங்கள்

aren
22-07-2008, 03:16 AM
ஆஹா...ஆரென். ரொம்ப நன்றி. அப்ப மன்மதனையே வெற்றிச்செல்வனாக்கிட வேண்டியதுதான்.

அப்படின்னா ஆண்டனி வேடம் எனக்குத்தான்!!!

aren
22-07-2008, 03:25 AM
ஒன்பதாவது பாகம் நன்றாக நான் எதிர்பாத்தது மாதிரியே இருக்கிறது.

அப்படின்னா இந்த கொள்ளைக்கூட்டத்துத் தலைவன் எழிலின் லண்டன் பாஸ்தான்.

சிவா.ஜி
22-07-2008, 04:01 AM
அய் ஆட்டம் இப்போ தான் சூடு பிடிக்குது.அசத்தல் அண்ணா தொடருங்கள்

ஆமாம்மா சென்னையில இன்னும் சூடு குறையலயாம்....அப்ப அந்த சூடு இங்கேயும் இல்லாம இருக்குமா? நன்றிம்மா.

சிவா.ஜி
22-07-2008, 04:04 AM
அப்படின்னா ஆண்டனி வேடம் எனக்குத்தான்!!!

பொருந்தலையே ஆரென். ஆண்டனி பாறைன்னா நீங்க பஞ்சு. நீங்க அன்பின் ஆரென்...எப்படி வில்லனாவெல்லாம்....?உங்களுக்காக வேற ஏதாவது கேரக்டரை படத்துல டெவலெப் செஞ்சுக்கலாம். தயாரிப்பாளருக்கு இல்லாத கேரக்டரா?(கேப்ல கிடா வெட்டறதுன்னா இதான்...ஹி..ஹி...)

இதயம்
22-07-2008, 05:25 AM
அன்பு சிவா...
எப்படி இருக்கீங்க..? வேலை பார்க்கிறீங்களா..? சாப்பிடுறீங்களா..? தூங்குறீங்களா.? ஏன் கேட்கிறேன்னா.. மன்றத்துல நீங்க எழுத ஆரம்பிச்ச பிறகு உங்களுக்கு எழுத்தே இப்ப வேலையாகிப்போச்சு..!! ரொம்ப காலமா மன்றத்துல இருக்கிற நான் இதுவறை மூவாயிரத்து சொச்சம் பதிவுகள்ல இருக்க, ஒரு வருஷத்துக்கு முன்னால நான் அறிமுகப்படுத்தி மன்றம் வந்த நீங்க என்னடான்னா 6500-ஐ தாண்டி எக்ஸ்ப்ரஸ் வேகத்துல போய்க்கிட்டிருக்கீங்க..! பெருமை+பொறாமை கலந்த உணர்வு எனக்கு. 2 விரலால் தட்டி, தட்டியே நீங்க இத்தனை எழுதுறத பார்க்கிறப்பவே எழுத்துக்கும், மன்றத்துக்கும் நீங்க எவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கறீங்க, எவ்வளவு நேரத்தை இதுக்காக செலவு பண்றீங்கன்னு ஆச்சரியமா இருக்கு, இன்னும் சொல்லணும்னா கொஞ்சம் அதிர்ச்சியாவும் கூட...!! மன்றத்தில் எழுதுகிறவர்களில் பலருக்கு அவர்கள் எழுதுறது அவர்களின் சுய திருப்திக்காக..! சிலருக்கு அவர்களின் சுய திருப்தி மற்றும் மற்றவர்களின் திருப்திக்காகவும்.! அதில் நீங்க ரெண்டாவது ரகம். எங்கேயெல்லாம் திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு இருந்தாலும் அதை நல்ல மனுஷன் பாராட்டியாகணும். நான் நல்லவனான்னு எனக்கு தெரியல, ஆனா எப்பவும் நல்லவனா இருக்கணும்னு ஆசை எனக்குள்ள இருக்கு. அந்த ஆசை தான் இதையும் எழுத வச்சிது.!!!

சும்மா சொல்லக்கூடாது.. உங்க தொடர் பர,பரன்னு போகுது..! ஒரு கதையை சொல்லும் போது அதை நம் மனவோட்டத்தில் காட்சியாக்கி காட்ட வர்ணனைகளும், உரையாடலும் ரொம்ப அழுத்தமா, எளிமையா இருக்கணும். அது இந்த கதையில் நிறைஞ்சி இருப்பதால் ஒரு விறுவிறுப்பான படம் பார்க்கிற மாதிரி தெளிவா இருக்கு..! நாளுக்கு நாள் உங்க எழுத்தில் ரொம்ப தேர்ச்சி..!! கற்பனை கதையை தான் எழுதுறீங்கன்னாலும் இடையிடையே உங்க சொந்தக்கருத்துக்களை (மேற்கத்தியர்கள் பத்தி சி.சி மனிதர் சொல்லு கருத்து, திராவிடகட்சியாளர்களின் பேச்சு, ரவிஷங்கரின் வாழும் கலை போன்றவற்றை) கிண்டலாவும், நக்கலாவும் சூசகமா நுழைக்கிற யுக்தியை நாம் ரொம்பவே இரசிக்கிறேன்.

இந்த கதையை சிறப்பா எழுத இலண்டன் தெருப்பெயர்கள் இருந்து வைரம் பத்தின தகவல்கள் வரை இணையத்தில் நீங்க தேடி, தேடி சேகரித்ததை கண்டு ரொம்ப ஆச்சரியப்பட்டுப்போனேன். செய்யும் தொழிலில் காட்டும் அர்ப்பணிப்பு அந்த தொழிலில் சிறந்தவர்களாக்கி விடும். உங்களின் தொழில் எழுத்து இல்லைனாலும் அந்த அர்ப்பணிப்பு உங்ககிட்ட இருக்கு. எனக்கென்னவோ உங்க தொழிலை மாத்திக்கிறது நல்லதோன்னு தோணுது. நம் மன்றம்-கிற சின்ன வட்டத்துக்காக எழுதுற கதையிலேயே இத்தனை ஈடுபாடு காட்டுற நீங்க உங்க வாசகர் வட்டம் விரிவடைஞ்சா இன்னும் சிறப்பா செய்வீங்கங்கிறது என் கணிப்பு. சிலர் கதை எழுதும் போது தமிழை காப்பாத்துறேன்னு சொல்லிக்கிட்டு எழுதுற அவருக்கும் புரியாம, படிக்கிற நமக்கும் புரியாம எழுதி இம்சிப்பாங்க. ஆனா நீங்க எழுதும் வார்த்தை எதுவும் எங்களுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தல. ஒரு இடத்தில் நீங்க எழுதியிருந்த சுத்தமான, புழக்கத்தில் இல்லாத "குழம்பிக்கடை" என்ற வார்த்தையை கூட ஒரு நகைச்சுவை கண்ணோட்டத்துடனே என்னால் பார்க்க நேர்ந்தது.

அளவுக்கதிகமான திருப்பம் வைப்பதாக நினைத்து கதையின் இயல்பான ஓட்டத்தை கெடுக்காம, அதன் போக்கில் கதையை நகர்த்தி தெளிந்த நீரோடை போல சீரா கொண்டு போறதுக்காக உங்களுக்கு ஒரு சபாஷ்..! ஆரென் சொன்ன மாதிரி ஒரு விறுவிறுப்பான தமிழ் சினிமாவா எடுத்தா நிச்சயம் இது சில்வர் ஜூப்ளி தான் (இந்த தமிழ் தலைப்பே இருக்கட்டும்.. அரசோட வரிவிலக்கு கிடைக்குமே..!). 10 வருஷத்துக்கு முன்னாடி இதை எழுதி, படம் எடுத்திருந்தா விஜயகாந்த் தான் இதுக்கு ஹீரோவா இருந்திருப்பார். இப்போதைக்கு சூர்யா தான் இந்த வெற்றிச்செல்வன் கேரக்டருக்கு பொருத்தமானவர் (இந்த பெயர் கூட சூர்யாவோட காக்க..காக்க "அன்புச்செல்வனின்" இன்ஸ்பிரேஷன் தான்னு நினைக்கிறேன்). இந்த கதைக்கு பிரபல நடிகர்களெல்லாம் வேணாம், நாம் நடிகர்களை நம்பாம கதையை தான் நம்பணும்னா ஏற்கனவே இந்த கதைக்கு ஹீரோவா போட மன்றத்தில் கிசுகிசுக்கப்படுற "அவரே" என்னோட சாய்ஸும்..!! ஆனா நம்ம விருப்பம் எதுன்னாலும் ஹீரோ பத்தின இறுதி முடிவை தயாரிப்பாளர் தான் எடுக்கணும்..! எது எப்படியோ, சினிமாவில் போட்ட காசு(ம், அதன் மூலம் இலாபமும்) ஆரெனுக்கு திரும்ப கிடைக்கணும்கிறது தான் எப்பவும் நம்ம வேண்டுதல்..!! (அப்பாடா.. கேப்பில் கிடா வெட்டியாச்சு..!!)

அடுத்து, உங்க படைப்பை தவிர்த்து நான் ஆச்சரியப்படுற இன்னொரு விஷயம் ஒண்ணு இருக்கு. நானும் எத்தனையோ இணைய ஃபாரம்களுக்கு போய் இருக்கேன், படிச்சி இருக்கேன். ஆனா, படைப்பாளிகளை இத்தனை ஊக்குவிக்கிற மனப்பான்மையுள்ளவர்களை நம்ம மன்றத்தில் மட்டும் தான் பார்க்கலாம். ஒவ்வொரு படைப்பையும் அனுபவிச்சி படிச்சி, அது மனசுக்கு பிடிச்சா விலாவரியா சிலாகிச்சு சொல்ற பாங்கு நம்ம மன்றத்தோட தனிச்சிறப்பு. இதில் பெரிய வேடிக்கை என்னன்னா, சில படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்கள் அந்த படைப்பை விட இரசனையா இருக்கிற அதிசயமும் இங்க தான் நடக்குது.

அடுத்து இன்னொரு பெருமை எனக்கு வேணும்னு நினைக்கிறேன். ஒவ்வொரு க்ரைம் எழுத்தாளருக்கும் அவர்களுக்கே சொந்தமான துப்பறியும் ஜோடிகள் இருப்பார்கள் (உதா: ராஜேஷ்குமார்: விவேக்-ரூபலா, ப.பிரபாகர்: பரத்-சுசீலா, சுபா: நரேன்-வைஜெயந்தி, ராஜேந்திரகுமார்: ராஜா-ஜென்னி இப்படி..). அதே போல் நீங்களும் துப்பறியும் கதைகளுக்காக ஒரு ஜோடியை உருவாக்கலாமே..!(பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் சிவாவின் துப்பறியும் ஜோடி *****-**** உருவாக காரணமானவர் என்று அதில் என் பெயர் வரும் என்ற நப்பாசை தான்..!! ஹி..ஹி..!! ). அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த(!!) பெண்ணின் பெயரை ஜோடிப்பெண்ணுக்கு வைத்து ஒவ்வொரு கதையிலும் அந்த பெண்ணின் பெயரை எழுதி, எழுதி மனசுக்குள் தீபாவளி கொண்டாடலாம்.!!

அடுத்து, இன்னொரு விஷயம் பத்தி உங்களுக்கு சொல்லணும். அது சரியோ தவறோ, ஆனா என் மனசுக்கு பட்டதை சொல்ல விரும்புறேன். ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனுக்கே உரித்தான தனித்தன்மை இருக்கும். அது உங்கள் எழுத்திலும் இருக்கு. அதை எப்பவும், யாருக்காகவும் நீங்க மாத்திக்க கூடாது. நீங்க வருங்காலத்தில் ஒரு பெரிய எழுத்தாளரா வந்தா அந்த தனித்தன்மை தான் அதுக்கு காரணமா இருக்கும். எழுத்தாளனுக்கு தன் படைப்புக்கள் விஷயத்தில் கர்வம் இருக்கணும். "என் படைப்பு தான் உயர்ந்தது" என்ற எண்ணம் மனசில் இருந்தா தான் யாரும் தன்னை மிஞ்சிடக்கூடாதுங்கிற எண்ணத்தில் இன்னும் சிறப்பா படைப்புகளை படைக்கும் அக்கறை பிறக்கும். அதனால் உங்கள் வழியில் நீங்கள் போய்க்கிட்டே இருங்க..! மத்தவங்களுக்காக நீங்க உங்க படைப்பில் ஒரு வார்த்தையை கூட மாத்தக்கூடாது. அப்படி நீங்க செஞ்சா அடுத்து "உங்களுக்கு கதை சரியா எழுத வரலை, பேசாம சமையல் குறிப்பு எழுதுங்களேன்"ன்னு சொல்லவும் வாய்ப்பிருக்கு.!! நீங்க போற வழி சிறப்பா இருந்தா நிச்சயம் உங்க பின்னாடி பெருங்கூட்டம் வரும்.!!

உங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்..!!!!

இப்படிக்கு,
உங்களின் வாசகன்.

பூமகள்
22-07-2008, 06:08 AM
எழில் முகம் சிவப்பு எனக்கும் வந்துவிட்டது...

பின்னே என்ன அண்ணா... எழில் எத்தனை கனவுகளோடு வேலையில் தீவிரமாய் உழைத்திருப்பாள்.... இப்படி கடைசி நிமிடத்தில்.......

சரி வெற்றி சொல்வது போல்...

எல்லாம் நன்மைக்கே...!! :)

ஆங்காங்கே எடுகோள்கள்... சூப்பர்.... குறிப்பாக ஆங்கில காவலர் இளக்காரம்.. மற்றும்.. சிவப்பு சிந்தனைக்காரரின் அங்கலாய்ப்பும்...

ஆர்வமோடு காத்திருக்கிறோம் சிவா அண்ணா...

சிவா.ஜி
22-07-2008, 06:28 AM
அப்பாடா....இதயம் பிராண்ட் மகா மெகா நூறு சதவீதம் உற்சாக பின்னூட்டம். உங்கள் பின்னூட்டத்தை வரிவரியாய் வாசித்துக்கொண்டு வரும்போதே அதில் நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையையும் அப்படியே கிரகித்துக் கொண்டேன். மிகச் சிறந்த ஆலோசனைகளும், மனம்திறந்த பாராட்டுகளுமாய் என்னை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டது உங்கள் பின்னூட்டம்.

உண்மைதான் இதயம் நான் என்னுடைய சுய விருப்பத்துக்காகவும், நம் மன்ற உறவுகளுக்காகவும்தான் எழுதுகிறேன். நீங்கள் சொன்னதைப் போல நாளை வெகுஜன எழுத்தாளனாய் ஆனாலும், அதற்கும் காரணம் உங்களைப் போன்ற உறவுகளும் இந்த மாமன்றமும்தான் இருக்கும்.

மனம் நிறைய அச்சத்துடனும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இன்னும் உழைக்க வேண்டுமே என்ற ஆர்வத்துடனும்.......மனம் நிறைந்த நன்றி.

சிவா.ஜி
22-07-2008, 06:30 AM
..

சரி வெற்றி சொல்வது போல்...

எல்லாம் நன்மைக்கே...!! :)

ஆங்காங்கே எடுகோள்கள்... சூப்பர்.... குறிப்பாக ஆங்கில காவலர் இளக்காரம்.. மற்றும்.. சிவப்பு சிந்தனைக்காரரின் அங்கலாய்ப்பும்...

ஆர்வமோடு காத்திருக்கிறோம் சிவா அண்ணா...


ஊன்றிப் படித்து சுட்டிக்காட்டிய வரிகளோடான உன் பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீங்கள் எல்லோரும் உடன் வர உற்சாகமாய் தொடருவோம்.

அக்னி
24-07-2008, 01:33 PM
டொக்...
டொக்... டொக்...
”வீட்டுக்காரர்... வீட்டுக்காரர்...”
வீடு திறந்து கிடக்கு ஆக்களக் காணோம்... எங்கே போயிருப்பாங்க...
”சிவா.ஜி ண்ணா... சிவா.ஜி ண்ணா... எங்க போயிட்டீக... கொஞ்சம் எட்டிப் பாருங்க...”
(நன்றி: ஓவியன்)


(பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் சிவாவின் துப்பறியும் ஜோடி *****-**** உருவாக காரணமானவர் என்று அதில் என் பெயர் வரும் என்ற நப்பாசை தான்..!! ஹி..ஹி..!! )
இதயத்தின் அனுமதியுடன், இதயத்தின் பெயரைப் பயன்படுத்தலாமே... :rolleyes:
(எனது தொடர்ச்சியான பதிவாக, மேலே மேற்கோள் காட்டியதை மீண்டும் வாசிக்கவும்...)


இப்படிக்கு,
உங்களின் வாசகன்.
எவ்வளவோ எழுதிப் பாராட்டினாலும், சிவா.ஜி யின் எழுத்துக்கு, உண்மையான அங்கீகாரம், கௌரவிப்பு, விருது என்பன இந்த வார்த்தைகளில்தான். :icon_b: இதயம்.
(இதயம் வாசகன் ஆகுவதென்பது சாதாரண விடயமா..?)

இதயத்தின் வழியில் நானும் சிவா.ஜி யை வாழ்த்துகின்றேன்.

வாழ்த்துகள் சிவா.ஜி...
இப்படிக்கு,
உங்களின் வாசகன்... ரசிகன்...


எழில் முகம் சிவப்பு எனக்கும் வந்துவிட்டது...


இப்போ, :love-smiley-008:இப்பிடீன்னா...

அப்போ, :starwars006: அப்படியா...
அப்பச்சரி... ;)

meera
25-07-2008, 04:16 AM
சிவா அண்ணா, கோஹினூர்க்கு என்ன ஆச்சு??

ஆரம்பீங்க அடுத்த பாகம்.

சிவா.ஜி
25-07-2008, 10:19 AM
பாகம்-10


ஆண்டனி தன் அறையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தான். மூன்று நாட்கள் இருக்கின்றன. கடைசி நாள்வரை தாமதிக்கக்கூடாது. நாளையே காரியத்தை ஆரம்பித்து அடுத்தநாள் முடித்துவிட வேண்டும். அவனுடைய ஸ்பான்சர்(புரவலர்-ஆ) அவனிடம் ஆயிரம் முறைக் கேட்டுவிட்டார். இத்தனை செலவு செய்கிறோமே காரியத்தை முடித்துவிட முடியுமா என்று. பொறுமையாய் ஒவ்வொருமுறையும் முடியுமென்றே பதிலளித்து வந்தான். இன்று கடைசியாய் ஒரு முறை தான் அந்தக் கூடத்தில் உபயோகிக்கப் போகின்ற உபகரணங்களை சோதனைக்கு உட்படுத்திக்கொண்டிருந்தான்.

கச்சிதம். எல்லாமே கச்சிதமாய் வேலை செய்கிறது. வேலை முடிந்ததும் யாருக்கும் தெரியாமல் வெளியேற மிகச் சரியான வழிமுறைகளை உருவாக்கி விட்டான். அதற்காகவே கடந்த ஐந்து நாட்களாய் அந்த பிரதேசத்தையே சுற்றிச்சுற்றி வந்து, புகைப்படங்கள் எடுத்து அவற்றின் உதவியால் ஒரு வரைபடம் தயாரித்திருந்தான். அதன்படி அவன் மாட்டிக்கொள்ளவே வாய்ப்பில்லை என்று நூறுசதவீதம் நம்பினான்.

ரத்தம் சிந்தவே தேவையில்லை. இந்த ஆபரேஷனை கத்தியில்லா ரத்தமில்லா ஆப்பரேஷனாகச் செய்து முடிக்கவே அவன் விரும்பினான். உள்ளே நுழையும்போது கடுமையான சோதனை இருக்கும். துப்பாக்கி கொண்டுபோக முடியாது. பரவாயில்லை. அவனது திட்டத்துக்கு அந்த உலோகம் தேவையில்லை.அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.."உன்னால் முடியுண்டா...."

------------------------------------

பூங்காவிலிருந்து வெளியே வந்த வெற்றியும், எழிலும் அந்த முன்மாலைநேர ஜனத்திரளுக்குள் சங்கமமானார்கள். யாரையும் இடிக்காமல் நடப்பதென்பது இயலவே இயலாது என்பதைப் போல இருந்த அந்த மனித சமுத்திரத்தில் நீந்திக்கடக்க நிறையவே சிரமப்பட்டார்கள். சென்றுகொண்டிருக்கும்போதே எழிலின் கையைப் ப்டித்து யாரோ இழுத்தார்கள். கோபத்துடன் யார் எனப் பார்க்கத் திரும்பியவள் அவளுடைய அம்மாவை அங்கே எதிர்பார்க்கவேயில்லை.

"அம்மா நீ எப்படி இங்க? புஷ்பலதா ஆண்ட்டி வீட்டுக்குத்தானே போறதா சொல்லிட்டு காலையிலயே போனே?"

அவளிடம் பேசிக்கொண்டே வெற்றியைத் தேடினாள். சற்றுத்தள்ளி நின்றுகொண்டிருந்தான். அவனை தங்களருகே அழைத்தாள்.

"அவ வீட்டுக்குத்தாண்டி போனேன். திடீர்ன்னு அவ மகளுக்கு ஏதோ துணி எடுக்கனும், சாயங்காலமா போனா இந்த இடத்துல நடக்கக்கூட முடியாதுன்னு சொல்லிட்டு இப்பவே கூட்டிக்கிட்டு வந்துட்டா"

"எங்க அவங்க?"

"இதோ வந்துட்டே இருக்கேன்.."

தாட்டியான சரீரத்தை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அந்த வயதிலும் அலங்காரத்தோடு அசைந்து வந்து சேர்ந்தார் அந்த புஷ்பலதா.

"என்னடி எழில், நல்லாருக்கியா? லண்டன் வேலையெல்லாம் நல்லா போவுதா? நம்ம ஊர் சாப்பாடு அங்க கிடைக்குதா? போம்போது பருப்பு பொடி, புளியோதரை பொடி வத்தக்குழம்பு பேஸ்ட் எல்லாம் எடுத்துட்டு போடி. வெறும் சாதத்தில போட்டு சாப்டுக்கலாம்..அது சரி அங்க அரிசியெல்லாம் கிடைக்குதா..?"

அந்தம்மாவின் அடுக்குத்தொடர் கேள்விகள் எரிச்சலைத் தந்தாலும், வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

"எல்லாம் கிடைக்குது ஆண்ட்டி. ஒண்ணும் பிரச்சனையில்லை.." பதில் சொல்லிக்கொண்டிருந்தவள் தன் அம்மாவின் முக மாற்றத்தைப் பார்த்து விட்டு,

"என்னம்மா?" என்றாள். அதற்குள் பத்து ரூபாய்க்கு மூன்று என ஒரு பையன் கூவிக்கொண்டு வர அந்த பேனாக்களை வாங்க திரும்பினார் புஷ்பலதா.

"அந்த வேன்லருந்து ஒருத்தன் இறங்குறான் பாரு எழில், அவனும் அவன்கூட இன்னொருத்தனும்தான் அன்னிக்கு வீட்டுக்கு வந்து அந்த கடங்காரங்களை சுட்டுக் கொண்ணு, எடுத்துட்டுப் போனவங்க" மெல்ல கிசுகிசுத்தார் எழிலின் அம்மா.

அவர் சொன்னதைக் கேட்ட எழில் வெற்றியைப் பார்த்தாள். வெற்றியும் எழிலைப்பார்த்து இமைகளை மூடித்திறந்து அவளின் பார்வைக்கான அர்த்தம் விளங்கியதாய் அவளுக்கு சைகை செய்தான். தொடர்ந்து, அதே மெல்லியக்குரலில்,

"ஆண்ட்டி, நல்லா பாத்து சொல்லுங்க அவன்தானே அது?"

"நல்லாத்தெரியும்ப்பா அவனேதான்" என்று கையை உயர்த்திக்காண்பித்தவரின் கையை அவசரமாய்த் தாழ்த்திவிட்டு,

"கையைக் காமிக்காதீங்க. அவன் பாத்துடப்போறான்"

"ஏம்ப்பா பாத்தா என்ன?"

"ஒண்ணுமில்ல ஆண்ட்டி. சரி நீங்க இவங்களோட பர்ச்சேஸுக்கு போங்க எங்களுக்கு கொஞ்சம் வேலையிருக்கு. போய்ட்டு வந்துடறோம்"
என்று அவரிடம் சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் எழிலைக் கூட்டிக்கொண்டு அவனைப் பின்தொடர்வதற்காக அவசரமாய் நகர்ந்தார்கள். கை நிறைய பேனாக்களோடு திரும்பிய புஷ்பலதா,

"யாருடி இந்தப் பையன்? எழிலைக் கூட்டிக்கிட்டு எங்க போறான்? உன் பொண்ணைப் பாத்தியா, என்கிட்டக்கூட சொல்லிக்காம போயிட்டா"

சற்று தயங்கிவிட்டு, விவரங்கள் எதுவும் இவளுக்கு சொல்லவேண்டாம் என்று தீர்மானித்து,

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல லதா. அந்த தம்பி பேரு வெற்றிச்செல்வன். எழில்கூட வேலை செய்யறவர். அவரும் லீவ்ல வந்திருக்கார். ஏதோ டிக்கெட் விஷயமா போகணுன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க, அதான் அவசரமா போயிட்டாங்க" என்று சரளமாய் ரீல் சுற்றினார்.


வேனிலிருந்து இறங்கியவன் பக்கத்திலிருந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்தான். வெற்றி அவசரமாய் எழிலிடம்,

"எழில், நீ இங்கேயே இருந்து அந்த வேனையே வாட்ச் பண்ணிக்கிட்டிரு. நான் அவனை ஃபாலோ பன்றேன். ஒரு வேளை நான் அவனைத் தவறவிட்டு, அவன் திரும்பி வந்துக் கிளம்பினா நீ அவனை ஃபாலோ பண்ணிட்டுப் போ. எனக்கு ஃபோன் பண்ணு நானும் வந்துடறேன்.'

என்று அவளிடம் சொல்லிவிட்டு அந்த ஆள் கண்பார்வையிலிருந்து மறைவதற்குள் அவனை சமீபித்துவிடவேண்டுமென்ற வேகத்தில் அவனை நோக்கி விரைந்தான்.


வேனையே பார்த்துக்கொண்டிருந்த எழில் அந்த கதவுகளின் கண்ணாடி தாழ்வதைக் கவனித்தாள். 'ஓ அப்ப இன்னும் யாரோ அந்த வேனுக்குள்ள இருக்காங்க'என்று நினைத்துக்கொண்டு கூர்ந்து கவனித்தாள். உள்ளிருந்து ஒரு தின்பண்டத்தின் காலியான உறையை வெளியில் போட அந்த வெள்ளையான ஆணின் கை நீண்டது. உள்ளே இருப்பவனின் முகம் தெளிவாகத் தெரியவில்லையென்றாலும் அவன் ஒரு வெள்ளைக்காரனென்பது புரிந்தது. சற்று நேரத்தில் அந்த உள்ளிருட்டு லேசாகக் கண்களுக்குப் பழக்கமானவுடன் இன்னொருவனும் இருப்பது நிழலாய் தெரிந்தது.

கண்ணாடி ஏற்றப்பட்டுவிட்டது. எழில் பரபரப்பானாள். உடனே தன் கைப்பேசியில் வெற்றியை அழைத்தாள். நடந்துகொண்டே பேசுவது அவனது குரலின் ஏற்ற இறக்கத்திலிருந்து தெரிந்தது. தான் பார்த்ததைச் சொன்னாள். தொடர்ந்து கண்காணிக்குமாறு சொல்லிவிட்டு அவன் தொடர்பைத் துண்டித்தான்.

சற்று நேரத்தில் அந்த உள்ளூர் ஆசாமி திரும்பி வந்தான். கையில் பழுப்பு நிறத்தில் ஒரு உறை இருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து எஞ்சினை உசுப்பிவிட்டான். எழில் சுற்றுமுற்றும் பார்த்தாள் வெற்றியைக் காணவில்லை. சரி அவன் சொன்னதைப் போல இவர்களைப் பின் தொடர்ந்து போக வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு ஆட்டோவைக் கூப்பிடத் திரும்பினாள். சரேலென்று ஒரு ஆட்டோ அவள் பக்கத்தில் வந்து நின்றது. அதில் வெற்றி அமர்ந்திருந்தான்.

"சீக்கிரம் ஏறு. வேன் கிளம்பிடிச்சி. அண்ணே இப்ப கிளம்புதே இந்த வேனை ஃபாலோ பண்ணனும் சீக்கிரமா போங்கண்ணே" என்று ஆட்டோ ஓட்டுநரைப் பார்த்து சொன்னதும்,

"நீ வொர்ரி பண்ணிக்காதபா...என் கண்லருந்து தபாய்ச்சுனு போய்டுவானுங்களா அவனுங்கோ. நீ குந்துபா. அந்த பாப்பாவையும் குந்த சொல்லு." பந்தயத்துக்குத் தயாராவதைப் போல ஆக்ஸிலேட்டரை முறுக்கினார் அந்த நடுத்தர வயது மண்ணின் மைந்தன்.


---------------------------------

இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் ஏக சந்தோஷத்தில் இருந்தார். குப்பத்திலிருந்து கொண்டுவந்த அந்த இரண்டு பிரேதங்களின் அடையாளம் தெரிந்ததும், கால் டாக்ஸி ஓட்டுநர் பிடித்துக் கொண்டு வந்தவனை விசாரித்ததிலும் அனைவரும் அந்த குறிப்பிட்ட லோக்கல் கும்பலின் ஆட்கள்தான் என்பது தெரிந்தது.கும்பலின் தலைவனும் மற்ற ஆட்களும் தலைமறைவாகிவிட்ட விஷயம் தெரிந்ததும், அவர்களைத் தேடும் வேலையில் இறங்கி, ஒவ்வொரு முனையாய் பிடித்துப் பிடித்து, கடைசியில் கும்பலோடு அவர்களை பாண்டிச்சேரியில் வளைத்துப் பிடித்தார்கள்.

இவர்கள் ஏவப்பட்டவர்கள். ஏவியவர்கள் லண்டனில் இருந்தார்கள். வெற்றி கொண்டு வந்து கொடுத்த தொலைபேசி எண்களும் இந்த கும்பலின் தலைவனின் அலைபேசியிலிருந்து சேகரித்த எண்களில் இருந்தது. லண்டனிலிருந்து வந்த அந்த இரண்டுபேர்தான் எழிலைக் கடத்த முயன்று விமானத்தில் உயிர்விட்டவர்கள் என்பது தெரிந்தது. எல்லா விவரங்களையும் தன் மேலதிகாரிக்குத் தெரியப்படுத்தினார் சொக்கலிங்கம்.

அனைத்தையும் கேட்டவர், சொக்கலிங்கத்தையும் அவரது குழுவையும் பாராட்டிவிட்டு அத்தனை விவரங்களையும் எடுத்துக்கொண்டு கோஹினூரின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குழுவின் தலைமை அதிகாரியிடம் அவற்றை கொடுத்தார்.உடனடியாக அந்த விவரத்தை லண்டனிலிருந்து வந்திருந்த அரன்மனை பாதுகாப்புக் குழு தலைவருக்குத் தெரியப்படுத்தினார்.

அந்த விவரங்கள் அடங்கிய கோப்புகளை வாங்கி புரட்டிக்கூட பார்க்காமல்,

"திஸ் ஈஸ் ஓல்ட் ஸ்டோரி ஃபார் அஸ். இவையெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். விமானத்தில் அந்த இரண்டுபேர் இறந்ததுமே எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது. அவர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் கும்பலை லண்டனில் வைத்து கைது பண்ணிவிட்டோம். ஸோ நீங்க உங்க பாதுகாப்புப் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்க"

என்று வெகு அலட்சியமாய் சொல்லிவிட்டு அந்தக் கோப்புகளை கிட்டத்தட்ட கொண்டுவந்தவிரிடம் வீசினார். உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார்.

"அந்த கும்பலைக் கைது பண்ணிட்டீங்க ஆனா அந்த ரெண்டுபேரையும் கொன்னவங்க இன்னும் உங்க கோஹினூரை தட்டிக் கொண்டுபோக வேலை செஞ்சிக்கிட்டிருக்காங்கங்கறதை மறக்காதடா வெள்ளைக்கார தடியா."

மனதுக்குள் நினைத்துக்கொண்டு திரும்பினார் சென்னை நகர கமிஷனரும், கோஹினூர் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான ரியாஸ்கான்.


தொடரும்

செல்வா
25-07-2008, 11:03 AM
அண்ணா.... திரு.கருணாநிதி அவர்களோட ரோமாபுரிப் பாண்டியன் படிச்சிருக்கீங்களா? ஒரு பத்தி வாசிக்கும் போது இப்படித்தான் கதை என ஊகம் பண்ணுவோம் பாத்தா அடுத்தப் பத்தில நாம எதிர்பார்த்தேயிராத ஒரு திருப்பம் காத்திட்டுருக்கும். அப்படி ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கும் அந்த புதினத்தில். அந்த ஞாபகம் தான் வந்துச்சு இதை வாசிக்கும் போது எனக்கு. இருக்கை நுனியில வரவைத்திருச்சு... சீக்கிரம் தொடருங்கள்.

க.கமலக்கண்ணன்
25-07-2008, 02:08 PM
கதையின் அனைத்து பாகங்களும் மிக அற்புதம் என்று வெறும் பின்னூட்டம் மட்டும் அளித்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்ததன் விளைவாக கதை முடிந்த உடன் வெளிடபோகும் இந்த கதை புத்தகத்தின் அட்டை படம்...

http://www.tamilmantram.com/photogal/images/2574/3_Sivaji.gif

பூமகள்
25-07-2008, 03:55 PM
வாஆஆஆஆஆஆஆஆவ்...........................................!!

வாய் பிளந்து ரசித்தேன் கமலண்ணா...!!

கதையின் எழுத்தோட்டம் மிகப் பெரும் அழகென்றால் அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் மற்றொரு அழகான படம்...

என்னவென்று பாராட்ட...

சொக்கத் தங்கத்தின் மீது வைத்த தலை கிரீடம் போல ஜொலிக்கிறது அட்டைப்படம்..!!

சரியான நேரத்தில்.. சரியான நபருக்கு... சரியான பாராட்டு செய்திருக்கிறீர்கள்..

மனமார்ந்த பாராட்டுகள்..!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிவா அண்ணா,

கதையின் பத்தாம் பாகம் பாதி படிச்சிருக்கேன்..விமர்சனம் பின்னாடி வந்துட்டே இருக்கு...!! ;)

mukilan
25-07-2008, 04:02 PM
இந்தப் பகுதியிலும் பரபரப்பிற்குச் சற்றும் குறைவில்லை. உலகிலேயே இலவசமாகக் கிடைக்கும் அறிவுரையை வாறி வழங்க எத்தனை பேர்ப்பா கிளம்பீருக்காங்க புஸ்பலதா ஆண்ட்டி போல.

வேனை ஆட்டோ தொடர முடிந்ததா? வெற்றியும் எழிலும் தங்கள் முயற்சியில் வெற்றி அடைந்தார்களா?

ஆண்டனியின் கருவி அந்த இடத்தில் வேலை செய்யமல் போகக் கடவது என்று யாரேனும் சாபம் கொடுத்தால் தேவலாம் போல!

ஆனாலும் இந்த வெள்ளைத் தோல் காரர்கட்கு இவ்வளவு திமிர் ஆகாது...

விரு விருப்பான உங்களின் எழுத்து நடை தொடரட்டும்..

பொறுத்தமாக பாக்கெட் நாவலின் :D அட்டைப்படம் வடிவமைத்த கமலக்கண்ணன் அவர்கட்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்.

சிவா.ஜி
25-07-2008, 04:16 PM
மிக மிக அருமையா இருக்கு கமலக்கண்ணன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்காக இந்தளவு மெனக்கெட்டு செய்திருப்பதைப் பார்க்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

மனம் நிறைந்த நன்றி கமலக்கண்ணன்.

சிவா.ஜி
25-07-2008, 04:25 PM
நன்றி முகிலன். இந்த பாகம் தர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. சற்றே வேலை அதிகமாகிவிட்டது( எப்பவாவது இந்த மாதிரி ஆவதுண்டு...ஹி..ஹி..) தொடர்ந்த உங்கள் உற்சாக ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
25-07-2008, 04:31 PM
பொறுமையா படிச்சிட்டு வாம்மா பூ.

அக்னி
25-07-2008, 07:31 PM
ஏனுங்க சிவா.ஜி...
பத்தாம் பாகத்திற்கு முன்னர் நாம கொஞ்சப்பேர் பத்தி பத்தியா பின்னூட்டம் போட்டிருக்கமே...
கண்டுக்க மாட்டீங்களா... :cool:

பத்தாம் பாகம்...
குறையாத விறுவிறுப்பு. நன்று.

ஆனால், எனக்கு ஓரிடம் இடறலாகப்படுகின்றது.
அதாவது, எழிலின் அம்மா தமது வீட்டில் கொலை செய்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, புஷ்பலாதா ஏன் எந்தவிதமான அதிர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை?

சற்று தயங்கிவிட்டு, விவரங்கள் எதுவும் இவளுக்கு சொல்லவேண்டாம் என்று தீர்மானித்து,
இந்த வரியிலிருந்து, புஷ்பலதாவிற்கு ஏதும் தெரியாது என்றே தெரிகின்றது. அப்படியிருக்க, புஷ்பலதா உடனடியாகவே, வெற்றியைப் பற்றிக் கேட்டிட, எழிலின் அம்மா கூறிய விடயம் சாதாரண விடயமில்லையே. கொலைகாரர்களைப் பற்றி, அதுவும் தமது வீட்டிற் கொலை செய்தவர்களைப் பற்றியல்லவா சொல்லியிருந்தார் எழிலின் அம்மா.

சரி, எழிலின் காதிற்தான் இரகசியமாகக் கிசுகிசுத்திருந்தாலும், அதனை அடுத்து,

"ஆண்ட்டி, நல்லா பாத்து சொல்லுங்க அவன்தானே அது?"
என, இந்தக் கேள்வியை வெற்றி கேட்டிருக்க முடியாதே...

என்னங்க... நாஞ் சொல்றது சரிதானே... ;)


(புரவலர்-ஆ)
அப்போ புரவலர்-அ யாருங்க... :aetsch013:


கதையின் அனைத்து பாகங்களும் மிக அற்புதம் என்று வெறும் பின்னூட்டம் மட்டும் அளித்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்ததன் விளைவாக கதை முடிந்த உடன் வெளிடபோகும் இந்த கதை புத்தகத்தின் அட்டை படம்...

கமல் ஜி...
கண்கவர் அட்டைப்படம்.
மிகுந்த பாராட்டுக்கள்... :icon_b:


விமர்சனம் பின்னாடி வந்துட்டே இருக்கு...!! ;)
அப்போ, இன்னமும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா..?
:rolleyes:


ஆனாலும் இந்த வெள்ளைத் தோல் காரர்கட்கு இவ்வளவு திமிர் ஆகாது...

ஆமாங்க... ஆனால், வெள்ளைத்தோல் மோகமும், வெள்ளைத்தோல் சொல்லுவதற்குத் தலையாட்டுவோரும் இருக்கும்வரை, அவர்கள் திமிர் அடங்க வாய்ப்பேது... :confused:

சிவா.ஜி
25-07-2008, 09:50 PM
இதுக்குத்தான் அக்னி வேணுங்கறது. கூர்ந்து படித்துக் குறையைச் சொன்ன அக்னிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. அவசரத்துல கவனிக்கல. இப்ப மாத்திட்டேன்.

போனமுறை இட்ட பின்னூட்டத்துக்கு பதில் சொல்லாததால், அதுக்குத் தனியா ஒரு ட்ரீட் நீங்க எங்க ஊருக்கு வரும்போது குடுத்துடறேன் சரியா அக்னி சார்? சுட்டுடாதீங்க.

அக்னி
25-07-2008, 09:53 PM
ஒரு வரியைச் செருகிச், சரிப்படுத்திட்டியளே... :icon_b:

meera
26-07-2008, 03:11 AM
அண்ணா, நல்ல விரு விரு சுரு சுரு கதை ஓட்டம். நம்ம ஹீரோ, ஹீரோயின் அவங்களை சீக்கிரம் பிடிக்கட்டும்.



கமலண்ணா, அட்டைப்படம் கண்டு அசந்துவிட்டேன். சூப்பருங்கோஒ

சிவா.ஜி
26-07-2008, 04:12 AM
அண்ணா, நல்ல விரு விரு சுரு சுரு கதை ஓட்டம். நம்ம ஹீரோ, ஹீரோயின் அவங்களை சீக்கிரம் பிடிக்கட்டும்.

கமலண்ணா, அட்டைப்படம் கண்டு அசந்துவிட்டேன். சூப்பருங்கோஒ

ஏறக்குறைய கண்டுபிடிச்சிட்டாங்க. இனி என்ன செய்யப்போறாங்கன்னு பாப்போம்மா. தொடர்ந்த ஊக்கத்துக்கு நன்றி மீரா.

மதி
26-07-2008, 05:25 AM
அசத்தலோ அசத்தல்...
கதை ஜெட் வேகத்தில் போகிறது.. வெற்றியும் எழிலும் அடுத்து என்ன செய்தார்கள்...?

மதி
26-07-2008, 05:26 AM
கமலகண்ணன்...
உங்கள் அட்டைப்படம் அருமை...கதைக்கு ஏற்றாற்போல்...

க.கமலக்கண்ணன்
26-07-2008, 05:59 AM
பாராட்டிய பாசமலர்கள் மலர்களுக்கும்

மகிழ்வித்த மன்ற உறவுகளுக்கும் நன்றி நன்றி...

பூமகள்
26-07-2008, 10:29 AM
அப்போ, இன்னமும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா..? :rolleyes:
ஒரு நாள் காத்திருந்தா போதுமண்ணா..!! :icon_ush:
வந்துட்டோம்ல...!! :p:cool: :rolleyes::icon_b:

அக்னி அண்ணாவின் விமர்சனம்.. தகுந்த இடத்தில் சுட்டியது... சரியாக கதையை நகர்த்த உதவுகிறது.. தொடர்ந்து கதை சிறப்பாக வர.. பிழைகளை கவனியுங்கள்..! சிவா அண்ணா கவனத்துக்கு கொண்டு வந்து அதை அவர் கையாண்ட விதம்.. அருமையோ அருமை.. நிறைய கற்றுக் கொண்டேன். :icon_rollout:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிவா அண்ணா,

இப்போது ஆட்டோவில் நாங்களும் வெற்றி-எழில் கூட்டணியோடு பின் தொடர்கிறோம்..!!

ரொம்பவே விறுவிறுப்பாக போகிறது..

வெள்ளைக் காரர்களின் அலட்சிய போக்கு.. நம் மீதான மரியாதை அப்பட்டமாக காட்டியிருப்பது அருமை..

தொடருங்கள் சிவா அண்ணா... உடம்பையும் மனதையும் கவனித்துக் கொள்ளுங்கள்...!

கதை அவகாசம் எடுத்தே கொடுங்கள்.. இதற்காக ரொம்ப யோசித்து.. தலை வலியோ.. உடல் சோர்வோ வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன் தங்கை,

சிவா.ஜி
26-07-2008, 11:32 AM
உற்சாகமூட்டுவது மட்டுமல்லாது, பிழைகளையும் சொல்லும் இப்படியான ஆரோக்கியமான பின்னூட்டங்கள் யாரையும் நல்ல எழுத்தாளானாக்கிவிடும். பூமகள் சொன்னதைப்போல அக்னியின் மற்றும் அனைவரின் பின்னூட்டங்களும் எனக்குக் கற்றுத்தருபவை ஏராளம்.

அக்கறையான ஆலோசனைக்கு நன்றி பூம்மா.

அக்னி
26-07-2008, 12:30 PM
ஒரு நாள் காத்திருந்தா போதுமண்ணா..!! :icon_ush:
வந்துட்டோம்ல...!! :p:cool: :rolleyes::icon_b:

நான் நினச்சேன்..,


Originally Posted by பூமகள் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=369442#post369442)
விமர்சனம் பின்னாடி வந்துட்டே இருக்கு...!! ;)

ஆடிக்குப் பின் ஆடி வருமோன்னு...
(ஆடிக்குப் பின் ஆவணிதானே. எப்படி ஆடி வரும் என்று யாரும் கேட்ககக்கூடாது.)

சிவா.ஜி
26-07-2008, 01:05 PM
வந்துட்டாருய்யா பிரிச்சி மேயற புலி....உக்காந்து யோசிப்பீங்களோ?

சிவா.ஜி
26-07-2008, 04:11 PM
பாகம்-11

வெற்றியும், எழிலும் பின்தொடர்ந்த அந்த வேன், பரபரப்பான 24 மணிநேர போக்குவரத்து நெரிசலில் இருக்கும் முக்கிய சாலையிலிருந்து பிரிந்த அந்தக் கிளைச்சாலைக்குள் நுழைந்து, சுற்றிலும் வழக்கமான உயரத்தைவிட சற்று கூடுதலாக அமைக்கப்பட்டிருந்த சுற்றுச் சுவருக்குள் பாந்தமாய் அமர்ந்திருந்த அந்த சற்றே பழைய பங்களாவின் வாயிலில் வந்து நின்றது.

அத்தனைப் பரபரப்பான சாலைக்கு இவ்வளவு அருகிலேயே இப்படி ஒரு அமைதியான பிரதேசம் வித்தியாசமாக இருந்தது. அந்தத் தெருவில் ஆள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தது. இந்தத் தெருவில் வசிப்பவர்கள் எல்லோரும் பெரும்பணக்காரர்களாய் இருப்பார்கள். அதுதான் சாதாரண மக்களின் நடமாட்டம் இல்லை.


ஆட்டோவை ஒரு நூறு அடிக்கு முன்பாகவே சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, ஓட்டுநர் கீழிறங்கி குனிந்து முன்சக்கரத்தைப் பார்வையிடுவதைப்போல பாசாங்கு செய்தார். உள்ளேயே அமர்ந்துகொண்டு வெற்றியும் எழிலும் அந்த வேனை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

வேனை ஓட்டிக்கொண்டு வந்தவனே இறங்கி பூட்டைத் திறந்து அகலமான அந்த வாயில் கதவுகளை தள்ளித் திறந்து விட்டு மீண்டும் வந்து வேனில் அமர்ந்து உள்ளே செலுத்தினான்.

உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை அந்த பங்களாவுக்கு அருகில் போகச் சொன்னான் வெற்றி. இவர்கள் அந்த வாயிற்கதவை நெருங்குவதற்குள் அந்த பெரிய கதவுகளை மூடிக்கொண்டிருந்தான் அதைத் திறந்தவன். ஆட்டோவை நிறுத்தாமல், அதே சமயம் மிக மெதுவாக அந்த இடத்தைக் கடக்கும்போது பாதி மூடிக்கொண்டிருந்த கதவுகளின் இடைவெளியில் வேனிலிருந்து இறங்கி நடக்கத்தொடங்கிய அந்த இரண்டு வெள்ளைக் காரர்கள் தெரிந்தார்கள்.

ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவுக்குள்...

"ரொம்ப நன்றிண்ணே...அவங்களுக்குத் தெரியாம அந்த வேனை ரொம்ப சாமர்த்தியமா ஃபாலோ பண்ணீங்க. கில்லாடின்ணே நீங்க" நிஜமாகவே அந்த ஓட்டுநரைப் பாராட்டினான் வெற்றி.

"18 வருஷமா ஆட்டோ ஓட்டிக்கினு கீறேன்.இது மாறி எத்தினி தபா செஞ்சிக்கிறேன். இதெல்லாம் ஜுஜூபிபா. அது சரி நீங்க இன்னாத்துக்கு அவங்களை பாலோ பண்ணீங்க?"

சட்டென்று சுதாரித்துக்கொண்டு,

"நாங்க ஒரு தனியார் துப்பறியும் துறையைச் சேர்ந்தவங்க. அது விஷயமாத்தான் அவங்களை ஃபாலோ பண்ணோம்."

என்று நம்பும்படியான ஒரு பொய்யைச் சொன்னான்.

"ஓ துப்பறியறதுன்னா இந்த சி.ஐ.டி வேலைதான..?...சரி இப்ப எங்க போகனும்?"

அவர் கேட்ட சமயத்தில் அடுத்த முக்கிய சாலையின் முனையை அடைந்திருந்தார்கள்.

"இங்கேயே எறக்கி விட்ருங்கண்ணா. எங்களுக்கு இங்க கொஞ்சம் வேலையிருக்கு."

என்று சொல்லிவிட்டு அவருக்குப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டான்.

"இப்ப என்ன செய்யப்போறோம் வெற்றி?"

"அந்த இன்னொரு பார்ட்டிங்க யாருன்னு தெரிஞ்சிப்போச்சு. ஆனா என்ன செய்யப்போறாங்க, எப்படி செய்யப்போறாங்கன்னு தெரியல. இப்போதைக்கு இவங்களை தொடர்ந்து கண்கானிக்கறதுதான் நல்லது. நீ வீட்டுக்குப் போ. ரொம்ப நேரம் காத்துக்கிட்டிருக்க வேண்டியிருக்கும். நான் இங்கேயே இருக்கேன்"

"பரவால்ல நானும் இருக்கறேன்."

"வேணா எழில். ரொம்ப நேரம் தேவுடு காக்கனும். நீ வேற எதுக்கு?"

"பரவால்ல. நானும் இருக்கேன்."

"சொன்னாக் கேக்க மாட்டியே. நான் மட்டும் தனியா இருந்தா பாக்கறவங்களுக்கு சந்தேகம் வராது. நீயும் கூட இருந்தா போற வர்றவனெல்லாம் ஜோடியா இவங்க இங்க என்ன பண்றாங்கன்னு நினைப்பாங்க"

"சரி உன் இஷ்டம். நான் கிளம்பறேன். வீட்டுக்குப் போய் போன் பண்றேன். ஜாக்கிரதையா இரு வெற்றி"

உண்மையான அக்கறையில் அவனுடைய கையைப் பிடித்து சொன்னதும்,போலியாய் மயக்கம் வருவதைப் போல தள்ளாடினான் வெற்றி.

"ஏய் என்னா சீன் காமிக்கற?"

"இத்தனை நாள்ல முதல் தடவையா என் கையைப் பிடிச்சிருக்கே....நீ தொட்டதும்...ஜிவ்வுன்னு இருக்கு..."என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்ட வெற்றியைப் பார்த்து....

"ஹே...ஹே..ஸ்டாப் இட். அப்படியே கனவுல டூயட் பாட ஆரம்பிச்சுடாத. ஏற்கனவே நீ அந்த ரௌடிங்களோட சண்டை போட்டதுக்கே தமிழ் சினிமா ஹீரோ மாதிரி சண்டையெல்லாம் போடறாரு இவருன்னு பேசிக்கறாங்க. இப்ப டூயட்டும் பாட ஆரம்பிச்சின்னா இன்னும் சுத்தம். சரி நான் கிளம்பறேன். டேக் கேர். பை"

சொல்லிவிட்டு போய்விட்டாள்.

ஒரு மணிநேரம் கழிந்தது. அந்த பங்களாவின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் வெற்றி. மாலை மணி ஆறு ஆகியிருந்தது. அப்போது அந்த வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சற்று நேரத்தில் அந்த வேன் வெளியே வந்து வலதுபக்கம் திரும்பி விரைந்து மறைந்தது.

அதைப் பின் தொடரலாமா என்று எண்ணி நகர்ந்தவன், மனதை மாற்றிக்கொண்டு அந்த பங்களாவை நோக்கிப் போனான். வாசல் கதவுகளின் இடைவெளியில் கூர்ந்து பார்த்தவனின் பார்வையில் பட்டது, அந்த பூட்டு. வீட்டைப் பூட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள். சட்டென்று வெற்றிக்கு அந்த எண்ணம் தோன்றியது. உள்ளே நுழைந்துப் பார்த்துவிடுவோமா? வெளிக்கேட்டும் பூட்டியிருக்கிறது. திறக்க முடியாது. சுவரேறித்தான் குதிக்க வேண்டும். உயரம் சற்றுக் கூடுதல்தான். இருந்தாலும் அது அவனுக்குப் பிரச்சனையில்லை.

நுழைந்து பார்த்துவிடலாம்.முடிவெடுத்ததும் சுற்றுமுற்றும் பார்த்தான். யாரும் இல்லை. நொடியில் அந்த சுவரைத் தாண்டி உள்ளே குதித்தான். பூட்டியிருந்த கதவை நெருங்கினான். உறுதியான பூட்டு. எப்படி திறப்பது? உடைக்கலாம். ஆனால் திரும்ப வந்து பார்ப்பவர்களுக்குத் தெரிந்துவிடும். தெரிந்தால்தான் என்ன? சாதாரணத் திருடர்களின் வேலையாய் இருக்குமென்றும் நினைக்க வாய்ப்பிருக்கிறதே. உடைத்துவிடலாம். வீட்டுக்குமுன் அமைந்த தோட்டத்தில் கிடந்த உறுதியான ஒரு கருங்கல்லை எடுத்துக்கொண்டு வந்து பூட்டின்மீது அழுத்தமாய் இறக்கினான். மூன்றாவது தாக்குதலில் வாய் பிளந்துகொண்டது அந்த பூட்டு.

உள்ளே நுழைந்தவன் முதல் வேலையாகக் கதவை சாத்தி தாளிட்டான். அவன் நின்று கொண்டிருந்தது ஹாலில். பெரிதாக இருந்தது. ஒரு குடும்பம் வசிப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. காலியாக இருக்கும் இந்த பங்களாவை, தற்காலிகமாக வாடகைக்கு எடுத்திருப்பார்கள். நினைத்துக்கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தான். எதைத் தேடுகிறோம் என்ற இலக்கில்லாமல், பார்வையை ஒரு குத்து மதிப்பாக அறையின் எல்லா பாகங்களிலும் ஓட்டினான். மேசையைப் பார்த்ததும் பார்வை ஓட்டத்தை நிறுத்தினான்.

மேசையில் கணிணி இருந்தது.பெரும்பாலும் இவர்களின் தொடர்பு கணிணி வழியாகத்தானிருக்க வேண்டும். இதை திறந்தால் நாம் தேவையான ஏதாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு கணிணியை உயிர்ப்பித்தான். வழக்கம்போல கடவுச் சொல்லைக் கேட்டது. இதுவாயிருக்குமோ அதுவாயிருக்குமோ என்று சோதனை முயற்சியில் இறங்க நமக்கு நேரமில்லை. அதுவுமில்லாமல் எதை வைத்து அந்த வார்த்தையை யூகிப்பது? என்று நினைத்து, கல்லூரி சமயத்தில் கற்றுக்கொண்ட வித்தையை பிரயோகித்தான் வெற்றி. அவன் முயற்சியில் கிடைத்தது வெற்றி.

சீஸேம் திறந்துவிட்டது. இணையத் தொடர்பும் இருந்ததால் அதனை திறந்தான். நெருப்புநரி(ஃபயர்ஃபாக்ஸ்) நிறுவப்பட்டு இருந்ததால் நேரடியாக கடவுச்சொல்லை தெரிந்துகொள்ளும் சாளரத்தைத் திறந்து ஜிமெயிலின் உபயோகிப்பாளர் பெயரையும், கடவுச்சொல்லையும் தெரிந்துகொண்டு, ஜிமெயிலைத் திறந்தான். அந்த மின்னஞ்சல்களில் இருந்தவைகளைப் பார்த்து சிந்தனையில் ஆழ்ந்தான். 'ஓ கதை இப்படிப் போகிறதா? இவர்கள்தான் அந்த இரண்டாவது கும்பலா? அதிலிருந்த விவரங்களை தன் சாவிக்கொத்தில் எப்போதுமிருக்கும் ஃப்ளாஷ் மெமரி சாதனத்தில் பதிவேற்றிக்கொண்டு கணிணியை அணைத்தான்.

மேலும் தேடியதில், சில துண்டுச் சீட்டுகள் கிடைத்தன. அந்த வணிக வளாகத்திலிருந்து வேனை ஓட்டியவன் கொண்டு வந்த பழுப்புநிற உறை அங்கே இருந்தது. திறந்துப் பார்த்தான். நாளை மறுநாளை லண்டன் போவதற்கான பயணச்சீட்டுகள் இரண்டு இருந்தன. வேலையை முடித்துவிட்டு உடனடியாகப் புறப்பட இருக்கிறார்கள்.தான் வந்து போனதற்கான எந்த அடையாளமும் இல்லாமல், அங்கிருந்த எந்தப் பொருளையும் கலைக்காமல் கவனமாக, மீண்டும் ஒருமுறை உறுதிப் படுத்திக்கொண்டு, தான் தெரிந்துகொண்டவைகளின் சுமையை மனதில் ஏற்றிக்கொண்டு உடனே திரும்பினான்.


--------------------------


கோஹினூர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காட்சிக்கூடம். ஆண்டனி அங்கு இருந்தான். உள்ளே நுழையும்போது சோதித்தார்கள். ஐ-பாட் என்ற பாட்டுக்கேட்கும் சாதனமும், கைப்பேசியும் மட்டும் இருந்தது. அதை கையில் வாங்கி சோதித்துவிட்டுத் திரும்பக்கொடுத்தார்கள். மனதுக்குள் சிரித்துக்கொண்டே கிரீடம் இருந்த கூடத்துக்குள் நுழைந்தான். ஒரு இடம் கூட விடாமல் அத்தனையையும் கூர்ந்து நோக்கினான். கிரீடம் வைக்கப்பட்டிருந்த விசேஷக் கண்ணாடிக் கூண்டை உற்றுப்பார்த்தான். குண்டுதுளைக்காத, வெடிகுண்டால் தகர்க்கமுடியாத அந்த கூண்டை தகர்ப்பதுதான் தனக்கு இருக்கும் முக்கியமான வேலை என்பதை நினைத்துக்கொண்டான். ஆனால் தன்னிடமிருக்கும் அந்த லேசர் சாதனம் அதை சுலபமாகச் செய்துவிடும் என்ற நம்பிக்கையில் புன்முறுவல் பூத்தான்.

அதே கூடத்தில்தான், வெற்றி பின்தொடர்ந்த அந்த வேனை ஓட்டியவனும் அவனுடன் இருந்த வெள்ளைக்காரர்களும் இருந்தார்கள். அந்த வெள்ளைக்காரர்களும் கூடத்தைச் சுற்றிதான் நோட்டமிட்டார்கள்.காட்சி முடிய இன்னும் அரைமணிநேரம் இருந்தது. அங்கிருந்த காவலர்கள் பார்வையாளர்களை வெளியேறும்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

திரும்பப்போகும்போது அந்த இரண்டு வெள்ளைக்காரர்களும் எழிலுடன் பணிபுரியும் கிரிஸ்ஸை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையைப் பார்த்துவிட்டு நகர்ந்தார்கள். கிரிஸ்ஸும் கையை உயர்த்தாமல் கீழிறங்கிய நிலையிலேயே கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்தான்.

கிரீடத்தில் மற்ற இரண்டாயிரம் சில்லறை வைரங்களுடன் பாந்தமாய் அமர்ந்திருந்த கோஹினூர், நாளை யார் கைகளுக்குப் போகப்போகிறோமென்று தெரியாமல் தன் மலையளவு ஒளியைப் பாய்ச்சிக்கொண்டு கண்ணாடிக்கூண்டுக்குள் அமைதியாய் அமர்ந்திருந்தது.


தொடரும்

மதி
26-07-2008, 04:26 PM
அண்ணா...சஸ்பென்ஸ் தாங்கல...
அழகாக கொண்டு போறீங்க.....????!!!!

ஆமா...கல்லூரியில் அப்படி என்ன தான் கத்துக்கிட்டான் வெற்றி... ரகசியமா சொல்லுங்களேன்..

யவனிகா
26-07-2008, 05:56 PM
அட்டைப்படம் பாத்ததில் இருந்து, புத்தகத்தை கையில் எடுத்து எழுத்து மணத்தோட படிக்கணும்னு ஆசையா இருக்குண்ணா....

கதை கலக்கலா போயிட்டு இருக்கு...,அசத்தற கதைக்கு பின்னூட்டம் போட எழுத்தே பத்த மாட்டீங்குது...தொடருங்கள் அண்ணா....

அக்னி
26-07-2008, 08:02 PM
"ஹே...ஹே..ஸ்டாப் இட். அப்படியே கனவுல டூயட் பாட ஆரம்பிச்சுடாத. ஏற்கனவே நீ அந்த ரௌடிங்களோட சண்டை போட்டதுக்கே தமிழ் சினிமா ஹீரோ மாதிரி சண்டையெல்லாம் போடறாரு இவருன்னு பேசிக்கறாங்க. இப்ப டூயட்டும் பாட ஆரம்பிச்சின்னா இன்னும் சுத்தம். சரி நான் கிளம்பறேன். டேக் கேர். பை"

அட... நம்ம மன்றத்தில பேசினது இவங்களுக்கும் தெரிஞ்சுடுத்தே...

உரையாடல்கள், செயற்கைத்தனமற்று, இயல்பாக இருப்பது, மெச்சத்தக்கது.

தொடருங்கள்... சிவா.ஜி...

சிவா.ஜி
27-07-2008, 04:33 AM
நன்றி மதி. அது என்ன வித்தை என்று உங்களுக்கும் தெரியும்.

சிவா.ஜி
27-07-2008, 04:34 AM
ரொம்ப நன்றி யவனிகா. உங்களோட ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி.

சிவா.ஜி
27-07-2008, 04:35 AM
நன்றி அக்னி. ஆமா நம்ம மன்றத்துல பேசினதை யாரோ எழில்கிட்ட சொல்லிட்டாங்க...

க.கமலக்கண்ணன்
27-07-2008, 06:55 AM
இந்த பகுதி மிகவும் சஸ்பென்சுடன் செல்கிறது...

அருமையாக இருக்கு சிவா.ஜி

என்றெல்லாம் பின்னூட்டம் இடுவதை விட இந்த புத்தகத்தின் அட்டைபடம் பார்த்திருப்பீர்கள் அதன் உள்பக்கத்தின் மாதிரி படம்...

http://www.tamilmantram.com/photogal/images/2574/1_Sivaji_1.gif

சிவா.ஜி
27-07-2008, 07:24 AM
ஆஹா....கண்ணைக்கவரும் அருமையான பின்னணியில் கதையின் வரிகளைப் பார்க்கவே வெகு அழகாக இருக்கிறதே. உங்களின் இந்த ஆத்மார்த்தமான அன்புக்கு மனம் நிறைந்த நன்றி கமலக்கண்ணன்.

செல்வா
27-07-2008, 09:22 AM
அண்ணா இதுக்கு மேல எல்லா பாகத்தையும் எழுதி முடிச்சுட்டு போன் பண்ணிச் சொல்லுங்க அப்புறம் தான் வந்து வாசிப்பேன். இந்தத் திருப்பங்கள் எல்லாம் நம்மால தாங்க முடியாது அண்ணா.

சிவா.ஜி
27-07-2008, 12:05 PM
வாங்க கிஷோர். சில நாட்களாக உங்களைக் காணமுடியவில்லை. பணிப்பளுவா? மீண்டும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி. (அடைமொழிகள் எதுவுமில்லாமல் அண்ணா என்ற அழைப்பு மட்டும் போதுமே கிஷோர்?)

அமரன்
27-07-2008, 02:32 PM
காலையில் படிக்கத் தொடங்கினேன். ஒரு பாகத்துடன் முடிக்கும்படியாகத்தான் நேரம் அமைந்தது. ஆனால் எதிர்பார்ப்போ எகிறியது. கிடைத்த நேரத்தில் ஓடி வந்து மூன்றாம் பாகம் வரை படித்தேன்.. சொல்வதுக்கு எதுவுமில்லை. தப்பிருந்தால்த்தானே சொல்லுவதுக்கு. ஒவ்வொரு பாகத்திலும் எதிர்பார்ப்பு பன்மடங்காகுது..

சிவா.ஜி
28-07-2008, 03:42 PM
மிகுந்த பணிகளுக்கிடையிலும், கதையை வாசித்து பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி அமரன்.

சிவா.ஜி
28-07-2008, 03:52 PM
பாகம்-12


அன்று இரவே எழிலிடம் தான் தெரிந்துகொண்டதை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று ஆவலாக இருந்தான் வெற்றி. அவளை அலைபேசியில் அழைத்தான். அனைக்கப்பட்டிருந்தது.தாமதமாகிவிட்டதால் நங்கநல்லூர்வரை அந்த நேரத்தில் போய் அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாமென்று நினைத்து உறங்கிவிட்டான். உறங்குவதற்குமுன் லண்டனிலிருக்கும் தன்னுடைய வகுப்புத்தோழனைத் தொடர்புகொண்டு சில விவரங்களைத் தரச் சொன்னான். நாளைத் தருவதாக அவன் சொன்னதும் உறங்கிவிட்டான்.

காலை எழுந்ததும் முதல் வேலையாக எழிலை அழைத்தான். இந்தமுறை எடுத்தாள். பேசினாள்.

"நேத்து நைட் போன் பண்ணியிருந்தேன். ஸ்விட்ச் ஆஃப்-ஆ இருந்தது. என்னாச்சு?"

"அய்யோ அதை ஏன் கேக்கறே..? நேத்து எங்க வீட்டுக்கு சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. அதுல ஒரு வாலு இருந்தது. என் போனை எடுத்து நோண்டி ஆஃப் பண்ணி வெச்சுட்டுப் போய்ருக்கான். நானும் கவனிக்காம தூங்கிட்டேன். காலையில எழுந்ததும்தான் பாத்தேன் ஆன் பண்னேன் உடனே உன்னோட அழைப்பு"

மணியைப் பார்த்துக்கொண்டே,

'சோம்பேறி இப்பதான் எழுந்தியா? மணி ஏழாகுது?"

"ஆமா இப்ப லீவ்தான..என்ன பெரிய வெட்டிமுறிக்கற வேலை...அதுசரி நீயும் இப்பதானே எழுந்திருச்சிருப்பே?"

"ஆக்சுவலா நான் எட்டு மணிக்குத்தான் எந்திரிக்கறது வழக்கம். இன்னைக்கு முக்கியமான வேலைகள் இருக்கு. அதுக்காகத்தான் இந்த ஒருமணிநேர தியாகம்"

"அப்படியென்ன முக்கியமான வேலை?"

"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். நேத்து அந்த பங்களாவுக்குள்ள நுழைஞ்சிட்டேன்.."

"அடப் பாவி எதுக்கு இந்த ரிஸ்க்கெல்லாம்?"

"ரிஸ்க் எடுக்கறது எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி...தெரியும்ல"

"போதும் வழியாத.அப்புறம் வடிவேலு ரேஞ்சுக்கு அடி வாங்கப்போற. என்ன பாத்த அங்க? ஏதாவது இந்த கேஸுக்கு சம்பந்தமா கிடைச்சுதா? யார் அவங்க? என்ன செய்யப்போறாங்க?"...

"ஹோல்டான்..மும்பை எக்ஸ்ப்ரஸ்மாதிரி ஓடாத. அதெல்லாம் நேர்ல சொல்றேன் நீ நேர புறப்பட்டு டி நகர் பஸ்ஸ்டேண்டுக்கு வந்துடு. 9 மணிக்கு நான் அங்க இருப்பேன். நேர்ல சொல்றேன்"


9 மணிக்கு தி நகர் பேருந்து நிலையத்துக்கு முன்னால் தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து எழிலுக்காகக் காத்திருந்தான். பத்து நிமிடங்களில் எழில் வந்தாள். அவளையும் ஏற்றிக்கொண்டு பனகல் பூங்காவுக்கு வந்தான்.

"கிரிஸ்டோபர்ன்னு யாரையாவது தெரியுமா உனக்கு?" எழிலிடம் கேட்டான்.

"கிரிஸ்தானே..ஆமா என்கூடத்தான் வொர்க் பண்றான். அவனும் நானும்தான் கோஹினூர்க் குழுவில் இருக்கவேண்டியவங்க. இப்ப அவன் மட்டும் இருக்கான். கூட அந்த நிலாவோ கலாவோ.. எதுக்கு இப்ப அவனைப் பத்திக் கேக்கற?"

"அந்த இன்னொரு குரூப்புக்கு உதவபோறவன் இந்த கிரிஸ்தான். அவனோட உதவியால இந்த வைரத்தை திருடப்போறாங்க. அது மட்டுமில்ல, இன்னும் ரெண்டுமூணு ஆட்களோட பேர் கிடைச்சிது. அவங்கள்லாம் லண்டன்ல இருக்காங்க. என்னோட நன்பன் கிட்ட கேட்டேன். அவங்க ரொம்பப் பெரிய அந்தஸ்துல இருக்கறவங்களாம். ஆனா அவங்கதான் இங்க வந்திருக்கிற அந்த ரெண்டு வெள்ளைக்காரங்களுக்கும் கட்டளைகள் குடுக்கறாங்க. அதான் எனக்கும் புரியல"

"ஆமா இந்த மாதிரி பெரிய மனுஷங்களுக்கெல்லாம் ஒரு கறுப்புப்பக்கம் இருக்குமே? ஒருவேளை இதைமாதிரி கொள்ளையடிச்சிதான் பெரிய ஆளாவே வந்திருப்பானுங்களோ என்னவோ. எனிவே...கிரிஸ் உதவறான்னா அவங்களுக்கு இந்த வேலை சுலபமாயிடும். ஸோ நாம இப்ப என்ன செய்யப்போறோம்? போலீஸ்?"

"ஆமா உடனடியா நமக்குத் தெரிஞ்ச இந்த விஷயங்களை போலீஸ்கிட்ட சொல்லனும். சப்போஸ் வைரம் திருட்டுப் போயிடிச்சின்னாக்கூட அது இந்தியர்களால இல்லை, அவங்களாலத்தான்னு போலீஸால சொல்ல முடியும். அட்லீஸ்ட் நம்ம நாட்டுப் பேரையாவது காப்பாத்தலாம்."

"ஓக்கே. அப்ப நாம இப்ப யாரைப் பாக்கப் போறோம்?"

"நமக்குத் தெரிஞ்ச ஒரே போலீஸ் அதிகாரி அந்த சொக்கலிங்கம் தானே அவரைத்தான் பாக்கனும். கிளம்பு"


சொக்கலிங்கம் யோசனையில் ஆழ்ந்தார். ரொம்ப பெரிய விஷயமா இருக்கு. ஆனா போனமுறையே அந்த வெள்ளைக்கார அதிகாரி அலட்சியப்படுத்தினான்னு கமிஷனர் கோவமா இருந்தார். மறுபடியும் இதைக் கொண்டுபோய்க் கொடுத்தா என்ன சொல்வார்? அதுக்காக சும்மா இருக்க முடியாது. போய்ப் பாத்து கொடுக்கனும்.

வெற்றி எழிலுக்கு நன்றி சொல்லிவிட்டு,உடனடியாக கமிஷனரைப் பார்க்கக் கிளம்பினார்.

கமிஷனர் ரியாஸ்கான் அந்த கோஹினூர் சம்பந்தப்பட்ட விவரங்கள் என்றதுமே உடனடி எரிச்சலை முகத்தில் காட்டினார். பிறகு விவரங்களைப் படித்தார். முதல் வேலையாக சொக்கலிங்கத்தை ஒரு குழுவுடன் சென்று அந்த பங்களாவில் இருப்பவர்களைக் கைது செய்யும்படி சொல்லிவிட்டு, மீண்டும் அந்த மகாத்திமிர் பிடித்த அரண்மனைக் காவல் குழுத்தலைவரைச் சந்திக்கச் சென்றார். தன் மேலதிகாரிகளுக்கும் தெரிவித்தார். டி.ஜி.பியும் அங்கு வருவதாகக்கூறினார்.

ரியாஸ்கானும், டி.ஜி.பியும் அந்தக் கட்டடத்துக்கு வெளியே சந்தித்து கலந்தாலோசித்துவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.அந்த சமயத்தில் சொக்கலிங்கத்தின் அழைப்பு வந்தது. அமைதியாய் கேட்ட ரியாஸ்கான் "இதை எதிர்பார்த்தேன். சரி நீங்க உங்க ஸ்டேஷனுக்குப் போங்க, மேற்கொண்டு ஏதாவதுன்னா உங்களைக் கூப்பிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு டி.ஜி.பி யிடம்

'சார் அந்த பங்களாவுல யாருமே இல்லையாம். ராத்திரியே காலி பண்ணியிருப்பாங்க. அந்தப் பையன் வந்துட்டுப் போனதை மோப்பம் பிடிச்சிருப்பாங்க. இப்ப என்ன சார் செய்யறது?"

"இட்ஸ் ஓக்கே ரியாஸ். எப்படியும் அவங்க இங்கதானே வந்தாகனும். இத்தனைபேர் இருக்கிற இடத்துல எப்படி அவங்களால இந்த வேலையை செய்ய முடியும்? வாங்க அந்த ஆபீஸர்கிட்ட எல்லாத்தையும் சொல்வோம். என்னவோ செஞ்சிக்கட்டும். பட்...வெளியில இருக்கிற நம்ம பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி யாரும் தப்பிச்சிப் போகாம பாத்துக்கனும். எல்லாரையும் அலர்ட்டா இருக்கச் சொல்லுங்க"


சிவப்பேறிய கண்களுடன் அந்த அதிகாரி வந்து இருவரையும் வரவேற்றார். சுருக்கமாக விஷயத்தை விளக்கிவிட்டு விவரங்கள் அடங்கிய கோப்புகளைக் கொடுத்தார் டி.ஜி.பி. லேசான அதிர்ச்சியுடன் அதை வாங்கிப் பார்த்தவர், சிந்தனையில் சற்று நேரம் அமர்ந்தார். சட்டென்று நிமிர்ந்து மற்றொரு பாதுகாப்பு அதிகாரியை அழைத்து,

"உடனடியாக அந்த ஹோட்டலுக்குப் போய், கிரிஸ்ஸை அங்கே கைது செய்து வைத்திருங்கள். நாளை அவனை லண்டனுக்கு அனுப்பவேண்டும். எந்தக்காரணம் கொண்டும் அவன் இன்று மாலை காட்சிக்கூடத்துக்கு வரக்கூடாது." என்று கட்டளையைப் பிறப்பித்தார்.

இவர்களிடம் திரும்பி,

"மிக்க நன்றி. உங்களின் இந்த உதவியை நான் மெச்சுகிறேன். இனி ஆகவேண்டியதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தப்பித்துப்போன அந்த இருவரையும் தேட வேண்டியது உங்கள் வேலை. தேடிக் கண்டுபிடித்ததும் எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். வணக்கம்"

எழுந்து நின்று கைக்குலுக்க கையை நீட்டினார்.


நேற்று இரவு காட்சிக்கூடத்திலிருந்து திரும்பிய ஆண்டனி ஒரு விஷமப்புன்னகையுடன் தன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்து கால்களைப் பரத்தி, சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டான். பிறகு எழுந்து தன் இரண்டு கை நடு விரல்களை கண்களுக்குள் ஒற்றி அந்த காண்டாக்ட் லென்ஸ்களை வெளியே எடுத்தான். அதில் ஒன்றை அதன் திரவத்தில் இட்டுவிட்டு, மற்றதை சற்று நேரம் உற்றுப்பார்த்தான். முளை கட்டி வைக்கப்பட்ட பயறிலிருந்து முளைத்ததைப் போல ஒரு வெகு மெல்லிய கம்பி அந்த லென்ஸின் ஓரத்திலிருந்து நீட்டிக்கொண்டிருந்தது. அதை வேறொரு பெட்டியில் இட்டு பத்திரப்படுத்தினான்.

அது பார்க்கத்தான் கண்களில் இடும் லென்ஸ். ஆனால் அது ஒரு ரிமோட் கேமரா. தான் பார்த்ததை உடனுக்குடன் மற்றொரு பதிவு செய்யும் சாதனத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். பாட்டுக்கேட்கும் சாதனத்தைப் போலிருந்த அந்த ஐ-போட்தான் அந்த பதிவு செய்யும் சாதனம். அதனுள் பதிவாகியிருந்ததை கணிணியில் பார்க்க ஏதுவாக அந்த சாதனத்துக்கும் கணிணிக்கும் தொடர்பேற்படுத்தினான். அவன் உற்றுப்பார்த்த அத்தனை சமாச்சாரங்களும் தெள்ளத் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

அந்தக் காட்சிக்கூடத்தின் மூலை முடுக்கெல்லாம் அட்சர சுத்தமாகப் பதிவாகியிருந்தது. இன்று மாலை இவன் அரங்கேற்றப்போகும் வைரக்கொள்ளைக்கான காட்சியமைப்பை கச்சிதமாக உருவாக்கிக்கொண்டான். முன்பே அலைபேசிக்கடையில் பரிசோதித்த சாதனத்தின் உதவியாலும், மேலும் பழைய காலத்து அலைபேசியைப் போல ஆண்டெனா கொண்டை வைத்த அந்த அலைபேசி போன்ற சாதனத்திலிருந்து வரும் அளவுகூட்டப்பட்ட மின்காந்த அலைகளாலும், கூடத்திலிருக்கும் பாதுகாப்புப் பணியாளர்களையும் சேர்த்து அனைவரையும் சற்று நேரத்துக்கு செயலிழக்க வைக்கலாம்.

கிடைக்கும் அந்த கால அளவு போதும். பேனாவைப் போன்ற தோற்றத்திலிருக்கும் லேசர் கதிர்களைப் பாய்ச்சும் அந்த கருவியின் துணையால் கோஹினூரை கவர்ந்திருக்கும் அந்தக் கண்னாடிக் கவசத்தை துண்டித்துவிட முடியும்.இந்த எல்லா சாதனங்களும் சோதனையில் தடுக்கப்படாதவைகள். டிஸ்கோ கிளப்புகளில் தன் இணையை அணைத்து கூட்டிக்கொண்டுப் போவதைப்போல இவற்றை எந்தத் தடையுமில்லாமல் உள்ளே கொண்டுபோக முடியும்.

எல்லாமே தான் திட்டமிட்டதைப்போல அச்சுபிசகாமல் நடந்து வருவதை நினைத்து தனக்குத் தானே பாராட்டிக்கொண்டான். நாளைய மாலை நேரத்துக்காக அந்த இரவிலிருந்து நன்றாக ஓய்வெடுக்கத் தொடங்கினான்.


சொக்கலிங்கம் கிளம்பிப் போனபிறகு வெளியே வந்த வெற்றி யோசனையில் இருந்தான்.

"அதான் எல்லாத்தையும் போலீஸ்கிட்ட சொல்லிட்டமே...இன்னும் என்ன யோசனை பண்ணிக்கிட்டிருக்கே? எழிலின் கேள்விக்கு உடனடியாக பதில் சொல்லாமல், சற்று நேரம் கழித்து,

"இன்ஸ்பெக்டரோட ரியாக்ஷனைப் பாக்கறப்ப, இந்த விஷயத்துல போலீஸ் முழுமூச்சா உள்ள இறங்கறதுக்கு என்னவோ தயக்கம் இருக்கறாமாதிரி தெரிஞ்சது. எனக்கென்னவோ இதையெல்லாம் மீறி இன்னைக்கோ இல்ல கடைசி நாளான நாளைக்கோ அந்த வைரம் திடுட்டு போயிடுன்னுதான் தோணுது"

"அய்யய்யோ...அப்ப நாம கஷ்டப்பட்டு சேகரிச்ச தகவல்ங்க எல்லாம் வேஸ்ட்டா?"

"அதெப்படி வீணாக விட்டுடுவேன். இன்னைக்கு நீயும் நானும் அந்த காட்சிக்கூடத்துக்குப் போறோம். அந்த ரெண்டு பேரை நமக்கு மட்டும்தான் அடையாளம் தெரியும். அவங்க அங்க இருந்து, ஏதாவது அடாவடி வேலையில இறங்கினா..அப்ப நாம களத்துல இறங்கிடலாம். சரியா?" என்று கட்டைவிரலை அவளுக்கு எதிராக நீட்டினான்.

'ஓகே...டன்" என்று தன் கட்டை விரலை அவனுடைய விரலுடன் தேய்த்து விலக்கினாள்.


தொடரும்

மதி
28-07-2008, 04:26 PM
ஏ...டண்டணக்கா..டணக்குநக்கா....

பரபரனு வேகமா போகுது....எப்படியும் இன்னும் ரெண்டு பாகத்துல முடிச்சிடுவீங்க போல... வெற்றி எழில் கூட்டணி சூப்பரோ சூப்பர்.. காட்சிக்கூடத்துல அவங்களோட அட்டகாசத்த எதிர்பார்க்கிறோம்..

அமரன்
28-07-2008, 08:42 PM
ஒரே மூச்சில் முழுவதும் படித்தேன்... பி.கே.பி நாவல்களில் வரும் பாத்திரங்கள் சரளமாகப் பேசி ரகளை செய்வது போல எழிலரசி-வெற்றி வெற்றிக்கூட்டணி..
நிலாவைக் காட்டும் போதே சின்னதாக ஒரு சந்தேகம்
பாண்டிச்சேரிக்கு ஓடிய பார்ட்டி... கிரிஸ் பார்ட்டி.. ஆன்டனி..
கோகினூரை களாவாட முக்கோண முனைப்பு...
பாண்டிச்சேரி ஓடியவன் திரும்பவும் திருட வருவானா?
கூட்டத்தை பிடிக்கப்போகிற கும்பல் எது?
இன்னும் இன்னும் இன்னபிற கேள்விகள்..
தொடர்ந்து இதுபோல எழுதினீங்கன்னா யோசிச்சு யோசிச்சு உங்களைப் போலவே அயிடும் தலை..

meera
29-07-2008, 02:06 AM
ஹை ஒரு கேங்க் மாட்டிருச்சு, இன்னும் ஒன்னு எப்போ மாட்டும்

எதிர்பார்ப்பை அதிகமாக்கறீங்க அண்ணா.

நாங்களும் காட்சிகூடத்துக்கு வர ரெடீஈஈஈஈஈஈஈஇ.

சிவா.ஜி
29-07-2008, 04:16 AM
தொடர்ந்து இதுபோல எழுதினீங்கன்னா யோசிச்சு யோசிச்சு உங்களைப் போலவே அயிடும் தலை..
இன்னைக்கு உங்களுக்கு வேற யாரும் கிடைக்கலையா...அமரன்?

முடி........................................................யல......

சிவா.ஜி
29-07-2008, 04:17 AM
வாங்க மீரா. எல்லாருமா காட்சிக்கூடத்துக்குப் போகலாம். கடைசியா ஒருமுறை அந்த கோஹினூரைப் பாக்கலாம். கூடவே தொடர்ந்து வந்து ஊக்கப் பின்னூட்டம் அளிக்கும் உங்களுக்கு மிக்க நன்றிம்மா.

சிவா.ஜி
29-07-2008, 04:32 AM
காட்சிக்கூடத்துல அவங்களோட அட்டகாசத்த எதிர்பார்க்கிறோம்..
அவங்க அட்டகாசம் பண்ணப்போறாங்களா...இல்ல அட்டகாசத்தைப் பாக்கப்போறாங்களா....பாக்கலாம் மதி.

சிவா.ஜி
29-07-2008, 04:36 AM
அன்புகுரியவர் சிவா அண்னா, மரியாதைக்குரியவர் எழுத்தாளர் திரு சிவா அண்ணா அவர்கள், இதில் அடைமொழிகள் எங்கு வருகின்றது அண்ணா? :D:D:D
எழுத்தாளரானாலும் அதே சிவாதான் கிஷோர். எனவே அந்த 'மதிப்பிற்குரிய', 'அவர்களே'.....இவையெல்லாம் அந்நியப்படுத்துகிறது. ஆகையால் இனி வெறும் சிவா அண்ணன்தான். சரியா?

mukilan
29-07-2008, 04:42 AM
""டிஸ்கோ கிளப்புகளில் தன் இணையை அணைத்து கூட்டிக்கொண்டுப் போவதைப்போல இவற்றை எந்தத் தடையுமில்லாமல் உள்ளே கொண்டுபோக முடியும்"""
உவமை சூப்பர்ங்னா :D

அய்யய்யோ...அப்ப நாம கஷ்டப்பட்டு சேகரிச்ச தகவல்ங்க எல்லாம் வேஸ்ட்டா?"

என்னது நாமளா.... படா உஷார்ப் பார்ட்டியாக்கீது. நம்பாளூ எம்மாம் கஷ்டப்பட்டுகிணு அவ்ளோ விசயத்தையெல்லம் இட்டாந்துக்கிறாரு. இந்த அம்மணி சொம்மா வூட்ல உக்கார்ந்துகிட்டு நைசா கேப்பில கெடா வெட்டிக்கிதா...

வழக்கம் போல விறு விறு... ஒரு முடிச்சு ஒரு வழியாய் அவிழ்ந்து விட்டதே... வெற்றிச்செல்வன் இன்னும் கொஞ்சநாள்ல வெற்றிச்செல்வியைச் சந்திக்கப்போறார்னு சொல்லுங்க.. கட்டி இழுத்து கூட்டிச் செல்லுங்கள். பின் வர நாங்க ரெடி:icon_b:

aren
29-07-2008, 04:47 AM
கதையில் விருவிருப்பு இதுவரை எள்ளளவும் குறையவில்லை. அப்படியே தொடருங்கள்.

கமலக்கண்ணன் அவர்கள் உங்களுக்குத் தேவையான அட்டைப்படத்தையும் மற்றும் முதல் பாகத்துப்படத்தையும் போட்டு கொடுத்துவிட்டார். ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு படம் வேண்டும்.

கதை முடிந்தவுடன் அடுத்தது புத்தகம்தானா? அத*ற்கு என் வாழ்த்துக்க*ள்.

சிவா.ஜி
29-07-2008, 05:13 AM
அதானே...இத்த கேக்க யாருமில்லையா...(அதான் நான் கொரலு குட்துக்கீறேனேன்னு கேக்கறீங்களா முகிலன்..ஹி..ஹி...)

சிவா.ஜி
29-07-2008, 05:15 AM
ரொம்ப நன்றி ஆரென். அனைவரையும் திருப்திப் படுத்த முடிந்தவரை முயல்கிறேன். மற்றவை உங்கள் கைகளில்.(புக்கா....?? இதெல்லாம் கொஞ்சம் ஓவரு...)

பூமகள்
29-07-2008, 07:11 AM
சூப்பர்...சிவா அண்ணா..!!

நம்ம ஹீரோ வெற்றி.. அசத்திட்டாரே...!!
ஹ்ம்ம்.... எழிலோடு சேர்ந்து எப்படி வைரத்தைக் காப்பாற்றப்போகிறார்னு பார்க்க ஆவலாக உள்ளது..

அடுத்த முடிச்சி இன்னும் அவிலாமல் இருக்கிறதே...

விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லை..

புத்தகம் போட்டால் நிச்சயம் எனக்கு ஒரு பதிப்பு வேணும் சிவா அண்ணா....!!(ஹீ ஹீ... ஃப்ரீயா தான்..!! :D:D) ;)
கட்டாயம் புத்தகம் போடுங்க. :)

சிவா.ஜி
29-07-2008, 07:36 AM
எல்லா முடிச்சும் இன்னும் இரண்டு பாகத்துல அவிழ்ந்துடும் பூம்மா. புத்தகமா....என்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே....

பூமகள்
29-07-2008, 07:45 AM
எல்லா முடிச்சும் இன்னும் இரண்டு பாகத்துல அவிழ்ந்துடும் பூம்மா. புத்தகமா....என்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலையே....
என்ன சிவா அண்ணா...:eek::eek: நிசமாலும் தான் சொல்றேன்..:icon_ush::wuerg019:
நீங்க புத்தகம் போடுவீங்க.. அதை ஊரெல்லாம் காட்டி.. என்ர அண்ணன் என்று காலரைத் தூக்கி ஒரு வெட்டு வெட்டிட்டு சந்தோசப்படனும்னு பார்க்கறேன்... :rolleyes::icon_ush::icon_rollout:

நீங்க என்னன்னா??!!!!!! :traurig001::traurig001:

சிவா.ஜி
29-07-2008, 11:34 AM
தங்கைகளும் தம்பிகளும் சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தானே வேணும். அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால், அன்பு கமலக்கண்ணனைத்தான் அதற்கு துணைக்கழைப்பேன்.

க.கமலக்கண்ணன்
29-07-2008, 01:52 PM
தங்கைகளும் தம்பிகளும் சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தானே வேணும். அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்தால், அன்பு கமலக்கண்ணனைத்தான் அதற்கு துணைக்கழைப்பேன்.

நிச்சயமாக அந்த சம்பவம் நடக்கத்தான் போகிறது... அதை செவ்வனே முடித்து அதன் வெளியீட்டு விழாவில் இந்த சம்பவத்தை நினைவு கூர்வேன்...

அன்புரசிகன்
29-07-2008, 03:40 PM
முழு மூச்சுடன் ஐந்திலிருந்து பன்னிரண்டுவரை வாசித்தேன்... கதை என்பதிலும் அந்த சம்பாசணைகளுடன் வாசிக்கும் போது நிஜமாக நடப்பது போன்ற உணர்வு.... தொடருங்கள் அண்ணா..

க.கண்ணனுக்கு. அந்த அட்டைப்படத்தில் இரத்த துளி சிவா என்பதின் மீது வீழ்வது போல் உள்ளது. மாற்றுங்கள். ஒரு மாதிரியாக இருக்கிறது. கொலைகள் அல்லது கோஹினூர் என்பதன் மேல் விழுத்துங்கள். இது என் கருத்து மட்டுமே...

சிவா.ஜி
29-07-2008, 05:27 PM
பாகம்-13

வெற்றி வந்து போன பிறகு அந்த பங்களாவுக்கு வந்தவர்கள், உடைந்திருந்த பூட்டைப் பார்த்ததுமே புரிந்துகொண்டார்கள். யாரோ தங்களை கவனிக்கத்தொடங்கிவிட்டார்களென்று. உள்ளே சென்று பார்த்தவர்கள், யாரும் வந்து போனதற்கான அடையாளமே இல்லாமலிருந்ததைப் பார்த்ததும், வந்து போனவன் மிகத் திறமைசாலியாயிருக்கிறான் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டு, மீண்டும் முழுவதுமாக அலசினார்கள். எல்லா பொருட்களும் போட்டது போட்டபடியே இருந்தது. வந்தவன் திருடுவதற்காக வரவில்லை. ஏதோ தகவல் தேடி வந்திருக்கிறான். ஆனால் எதுவும் கிடைக்காததால் போய்விட்டான் என்று நினைத்துக்கொண்டார்கள்.

ஆனாலும் ஆபத்தில் மாட்டிக்கொள்ள விரும்பாமல், அன்று இரவே வேறு இடத்துக்கு மாறிவிட்டார்கள். புதிய இடத்துக்குப் போனதும், அந்த வெள்ளைக்காரர்களில் ஒருவன் கைப்பேசியில் லண்டனைத் தொடர்பு கொண்டான். நடந்ததை சொன்னதும் மறுமுனையிலிருந்து வந்த பதிலால் உற்சாகமாகி, தன் சகாவிடம்,

"நடந்ததைப் பற்றி கவலைப் படவேண்டாமென்று சொல்கிறார்கள். ஏற்பாடுகள் எல்லாம் மிகச்சரியாக செய்யப்பட்டிருக்கிறது. அதனால் உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் என்றும், எப்படியும் அந்த வைரம் நம் கைகளுக்கு வரவேண்டுமென்றும் சொல்கிறார்கள்" என்றான்.

"நாளைக்கே வந்த வேலையை முடித்துவிடலாம். தடை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கிரிஸ் நமக்காக அங்கே எல்லா ஏற்பாடுகளையும் செய்திருப்பான். போவோம், எடுப்போம், திரும்பிவிடுவோம்" என்று வெடிச்சிரிப்புடன் அந்த சகா சொன்னதும் அனைவரும் அவனுடன் சேர்ந்து சிரித்தார்கள்.

உடனிருந்த உள்ளூர் துணைவர்களைப் பார்த்து,

" உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. நாளையிலருந்து நீங்க இங்கே வரவேண்டாம். இனி நடப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அப்படியே மாட்டிக்கொண்டாலும் நாங்கள் விமானம் ஏறும்வரை எங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லக்கூடாது. சத்தியம் செய்து கொடுங்கள்." என்று முதலில் பேசியவன் சொன்னதும், இவர்களும் அப்படியே செய்தார்கள்.

ஒரு பெரிய தொகையை அவர்களிடம் கொடுத்து, அவர்களை உடனே வெளியேறும்படி சொன்னார்கள்.அவர்கள் கிளம்பத் தொடங்கியதும்,

"ஒரு நிமிஷம், இந்த வாகனம் இங்கேயே இருக்கட்டும். நாளை எங்கள் வேலை முடிந்ததும் இதே வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டு நாங்கள் போய் விடுவோம். அதன் சாவியை மிதியடிக்கு கீழே வைத்து விடுகிறோம். நீங்கள் வந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னான்.


வெற்றியும் எழிலும், எழிலின் வீட்டிலிருந்தார்கள். இருவரையும் ஜோடியாகப் பார்த்த எழிலின் பெற்றோர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு

"ரெண்டுபேருக்கும் நல்ல பொருத்தம்" என்று ஒரே குரலில் சொன்னார்கள்.பக்கத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த எழிலின் குட்டித்தங்கை, இதைக் கேட்டுவிட்டு ஒரே ஓட்டமாக வெற்றி, எழிலிடம் ஓடிப்போய்,

'எழிலக்கா...ஓக்கேயாயிடிச்சி...." என்று சந்தோஷமாகக் கத்தினாள்.

"என்னடி ஓக்கே ஆயிடிச்சி?"

எழிலையும், வெற்றியையும் சுட்டுவிரலால் மாறி மாறிக் காட்டியபடி,

"உங்க ரெண்டுபேருக்கும் க்ரீன் சிக்னல் கிடைச்சிடிச்சி...அப்பாவும் அம்மாவும் சொன்னாங்க.." என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

இரண்டுபேரும் வெட்கப் புன்முறுவலுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கும்போது, திரும்பவும் ஓடி வந்து,

"எனக்கு ட்ரீட் வேணும். மாயாஜால் கூட்டிட்டுப் போங்க." ஏறக்குறைய கட்டளையாய் சொல்லிவிட்டு மீண்டும் ஓடி மறைந்தது அந்த பனிரெண்டு வயது குட்டிப் புயல்.

வெற்றி வாய்விட்டு சிரித்தான்.

எழில் அவன் சிரிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தவள், அந்த அழகான வாய்விட்ட குளோசப் சிரிப்பைப் பார்த்து சந்தோஷப்பட்டாள்.


"வாய்விட்டு சிரிக்க கான்ஃபிடன்ஸ் வேணும், அதுக்கு குளோசப் வேணும்" என்று விளம்பரபாணியில் அவள் சொன்னதும், வெற்றி அவளை நெருங்கி,

"இந்த குளோசப் போதுமா?" என்று கிறக்கத்துடன் பார்த்தான்.

அவனை கைகளால் பிடித்து தள்ளிக்கொண்டே...

"இன்னைக்கு அந்த வேலை முடியட்டும். நாளைக்கு இந்த குளோசப்பெல்லாம் வெச்சுக்கலாம். அதுவரைக்கும் நெருக்கத்துக்குத் தடா"

"ம்...சரி. மகாராணி சொல்லிட்டா அதுக்கு அப்பீலே கிடையாது. ஓக்கே. எழில், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?" என்று வெற்றி கேட்டதும், யோசனையுடன்,

"எந்த விஷயம்?" என்ற எழிலிடம்,

"நான் போலீஸுக்கு கொடுத்த விவரங்கள்ல, வைரத்தை திருடினதுக்கப்புறம் என்ன செய்யப்போறாங்கன்னு சொல்லல. அது எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனா, உனக்கும் அது இந்தக் கதை முடியறதுக்குள்ள தெரிஞ்சிடும்."

"ஏய்...சஸ்பென்ஸ் வெக்காத...இப்பவே சொல்லு. என்னால தாங்க முடியாது. ப்ளீஸ்..."

"நோ...கொஞ்சம் சஸ்பென்ஸ் இருக்கட்டும். உனக்கும் தெரியத்தானே போகுது. சரி இன்னும் அரை மணி நேரத்துல நாம கிளம்பனும். அண்ணா சாலைக்கு போய்ச் சேர அப்பதான் டைம் கரெக்ட்டா இருக்கும்" என்றதும்,

எழில் எழுந்து அவனுக்காக காஃபி தயார் செய்ய சமயலறைக்குச் சென்றாள்.


காட்சி தொடங்கிய இரண்டாவது நாள். பிரிட்டிஷ் துணை ஹை கமிஷன் அலுவலகத்துக்கு முன் ஒவ்வொரு மீட்டருக்கும் போலீஸ் இருந்தது. முக்கியமானவர்களின் வாகனங்களைத் தவிர்த்து மற்றவையெல்லாம், கட்டிடத்திலிருந்து நூறுமீட்டர் தள்ளியே நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகனத்திலிருந்து இறங்கி வந்தவர்களை ஒற்றை வரிசையாக ஆக்கி சோதனைக்குப் பிறகு கட்டிடத்துக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்குள் அங்கே பானிபூரி, சுண்டல்,வேகவைத்த கடலை, பஞ்சு மிட்டாய் என்று திடீர்கடைகள் தோன்றி கோஹினூர் கண்காட்சியை அரசு கண்காட்சி ரேஞ்சுக்கு மாற்றிவிட்டிருந்தது. கோஹினூர் வைரம் அச்சடித்த பனியன்கள், கைக்குட்டைகள் சந்தைக்கு வந்துவிட்டிருந்தது.

ஆண்டனியும் அந்த வரிசையில் இருந்தான். பெல்ட்டில் இணைத்திருந்த கைப்பேசி உறையில் அந்த மின்காந்த அலையை உருவாக்கும் கருவி, கைப்பேசி ஒப்பனையில் அமர்ந்திருந்தது. சட்டைப் பையில் பேனாவின் தோற்றத்தில் லேசர் சாதனமும், அதே பையில் மற்றொரு கைப்பேசி வடிவத்தில் ஒலி அலைகளை உருவாக்கும் சாதனமும் இருந்தது.

சோதனை செய்த வெள்ளைக்காரன், பழைய பாணி கைப்பேசியைப் பார்த்து, இளக்காரமாய் சிரித்துவிட்டு,"இண்டியன்ஸ்..." என்று சிரிப்பினூடே சொல்லிக்கொண்டே ஆண்டனியிடம் அதை திருப்பிக்கொடுத்தான். சட்டைப்பையைக் கூட சோதனை செய்யாமல், அவனை உள்ளே அனுமதித்தான். ஆண்டனி சிரித்துக்கொண்டான். "எஸ்...இண்டியன்ஸ். உனக்கும் உன் வைரத்துக்கும் ஆப்பு வைக்கப் போகும் இண்டியன்ஸ்" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே கூடத்துக்குப் போகும் நீண்ட வராண்டாவில் நுழைந்தான்.

ஏழு மணி, பத்து நிமிடம் இருக்கும்போது வெற்றியும், எழிலும் அந்தக் காட்சிக் கூடத்தில் நுழைந்தார்கள். அந்த இரண்டு வெள்ளைக்காரர்களும் கண்ணில் பட்டார்கள். அவர்களைப் பார்த்ததும், வெற்றி எழிலிடம் மெல்ல கிசுகிசுத்தான்,

"எழில் அவங்களையே, கண்காணிச்சுக்கிட்டிரு...அவங்களுக்குத் தெரியாம. நான் கொஞ்சம் முன்னால போய் வேற இடத்துல நிக்கிறேன்."

என்று சொல்லிவிட்டுத் திரும்பியவனை கையைப் பிடித்து நிறுத்தினாள் எழில்.

என்ன என்பதைப்போல பார்வையால் கேட்ட வெற்றியிடம்,

"அந்த கிரிஸ் எப்படி இங்கே வந்தான்? அவனைத்தான் ஹோட்டல் அறையிலேயே கைது செய்து காவலில் வைத்திருப்பதாக சொக்கலிங்கம் சொன்னாரே" என்றாள்.

"என்னது கிரிஸ் இங்க இருக்கானா..? எங்கே?"

'அதோ நிலாவும் அவனும் நிக்கறாங்க பாரு" என்று கிரிஸ் நின்றுகொண்டிருந்த திசையை கண்களால் காட்டினாள்.

கிரிஸ் அங்கே நின்றுகொண்டிருந்தான். எழிலையே பார்த்துக்கொண்டிருந்தான்.


தொடரும்

சிவா.ஜி
29-07-2008, 05:30 PM
முழு மூச்சுடன் ஐந்திலிருந்து பன்னிரண்டுவரை வாசித்தேன்... கதை என்பதிலும் அந்த சம்பாசணைகளுடன் வாசிக்கும் போது நிஜமாக நடப்பது போன்ற உணர்வு.... தொடருங்கள் அண்ணா..


மிக்க நன்றி அன்பு. உங்களனைவரின் ஊக்கம்தான் எனக்கு இன்னும் எழுத உற்சாகம் கொடுக்கிறது.

பூமகள்
29-07-2008, 05:43 PM
ஐயய்யோ...
கிரிஸ்..... ஆண்டனி... எழில்... வெற்றி....

எல்லாரும் கோகினூர் வைரத்தின் அருகில்...

என்னாச்சுனே தெரியலையே...

சீட்டின் நுனியில் அமர்ந்து படம் பார்க்கும் விறுவிறுப்பு...

சீக்கிரம் அடுத்த பாகம் போடுங்கவோ அண்ணா...

சஸ்பென்ஸ் தாங்க முடியலை...

செம கலக்கல் தொடர்.. சொல்லி சொல்லி கை வலிக்குதுனா

கடைசியில சொல்றேன்...! :)

அமரன்
29-07-2008, 06:51 PM
எழிலில் இருக்கும் ஆபத்தில் தொடங்கி வரத்தில் முடிக்கும் கதை.. எங்கேயும் தொய்வில்லாத நடை.. எழிலான நடைக்கு ஒரு ஷொட்டு..



"நான் போலீஸுக்கு கொடுத்த விவரங்கள்ல, வைரத்தை திருடினதுக்கப்புறம் என்ன செய்யப்போறாங்கன்னு சொல்லல. அது எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனா, உனக்கும் அது இந்தக் கதை முடியறதுக்குள்ள தெரிஞ்சிடும்


வாசகனை எழிலாக்கி

கிரிஸ் அங்கே நின்றுகொண்டிருந்தான். எழிலையே
பார்த்துக்கொண்டிருந்தான்.

இங்கிலாந்து காவல் அதிகாரி மேல் சந்தேகப்பட வைத்து குழம்பு வைத்து விட்டீர்களே.. செம ஹொட்டான குழம்பு.. :icon_b:

உறைப்புச் சாப்பிட்டால் விடாது சாப்பிடனும்.. அல்லது இனிப்புக் சாப்பிடணும்..

ஆவலுடன்,

meera
30-07-2008, 02:48 AM
ஆஹா நல்ல சீன்ல இப்படி இப்படி தொடரும் போட்டுட்டீங்களே அண்ணா. அவங்க நாட்டு போலீஸூம் இதுக்கு உடந்தையோ?????

சூப்பர் அண்ணா. அடுத்த பாகத்தையும் இப்படியே விரைவா தந்துருங்களேன் ப்ளீஈஈஇஸ்.

மதி
30-07-2008, 04:04 AM
இப்படியே எல்லோரையும் காக்க வைக்கறதுல அப்படி என்ன தான் சந்தோஷமோ...?

சிவா.ஜி
30-07-2008, 04:08 AM
பூமகள், அமரன், மீரா, கிஷோர், மதி எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. விரைவில் அடுத்தடுத்த பாகங்களைத் தந்துவிடுகிறேன்.
(ரெண்டு விரலால சீக்கிரமா தட்ட முடியலை. எண்ணங்களுக்கு இருக்கும் வேகம் விரல்களுக்கு இல்லை. இருந்தாலும் கூடிய விரைவில் கொடுக்கிறேன்)

சிவா.ஜி
31-07-2008, 09:57 AM
பாகம்-14


கிரிஸ்ஸை அங்கே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவன் எழிலைப் பார்த்த பார்வையில் ஒரு விரோதம் தெரிந்தது. காவலில் இருக்க வேண்டியவன் காட்சிக்கூடத்தில் இருக்கிறானென்றால், பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது... இதையெல்லாம் யோசித்த வெற்றி, இனி தாங்கள் அங்கிருப்பது, ஆபத்து என்பதாய் உணர்ந்தான். குறிப்பாக எழிலுக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைத்தான். எழிலிடம் மெல்ல,

"எழில், இனி நாம இங்க இருக்கறது எனக்கு அவ்வளவு சரியாப் படல. கிரிஸ் திரும்ப இங்க வந்திருக்கான்னா...எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்கான்னு அர்த்தம். அப்ப வைரத் திருட்டு இன்னைக்கு நிச்சயம் நடக்கப் போறது உறுதி. ஆனா இதுல சம்பந்தப்படாத மற்ற பாதுகாப்பு அதிகாரிகள் அதை தடுக்க முயற்சி செய்வாங்க. அந்த நேரத்துல துப்பாக்கி சூடும் நடக்க வாய்ப்பிருக்கு. எனிவே...அவங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை நமக்குத் தெரியும். ஸோ...வெளியிலப் போய் அவங்களுக்காக காத்துக்கிட்டிருக்கலாம். சீக்கிரமா கிளம்பு"

என்று அவசரப்படுத்தினான்.

"ஏன் வெற்றி நாம போகனும்? இப்பவே அந்த ரெண்டு பேரையும் மடக்கிடலாமே? மத்த பாதுகாப்பு அதிகாரிங்ககிட்ட சொன்னா உடனடியா அவங்க நடவடிக்கை எடுப்பாங்களே?"

"சரி...யார்கிட்ட சொல்றது? அப்படி நாம சொல்ற ஆளே அவங்களோட சேர்ந்தவனா இருந்தா என்ன பண்றது? சோதனைக்கு அப்புறமா உள்ள நுழைஞ்சவங்கன்னா அவங்ககிட்ட எந்த ஆயுதமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனா அதே சமயம், சோதனை இல்லாமலேயே அந்த ரெண்டுபேரும் வந்திருந்தாங்கன்னா...எதுக்கு ரிஸ்க்? எப்படியும் வைரத்தோட அவங்க வெளியே வருவாங்கதானே அவங்களைப் பின்தொடர்ந்து மடக்கிடலாம். எந்த நேரத்துலயும் நமக்கு உதவ சொக்கலிங்கம் இருக்கார். அவரை கைப்பேசியிலக் கூப்பிட்டா போதும். சரி சீக்கிரமா கிளம்பு"

என்று அவளையும் அழைத்துக்கொண்டு அவசரமாய் வெளியேறி, அந்தக் கட்டடத்தைச் சுற்றிக்கொண்டு அதன் பின் பக்க வாசல் கண்களுக்குத் தெரியும் தூரத்தில் மறைவாக நின்று கொண்டார்கள்.

பின்பக்க வாசலுக்கு அருகிலும் ஆறு காவலர்கள் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்தார்கள். இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று யோசித்தான். கொல்லப்போகிறார்களா அல்லது அங்கிருந்து வெளியேற்றப்போகிறார்களா? என்ன நடக்கப்போகிறதென்று நம்மால் பார்வையாளனாக இருந்து பார்க்க மட்டும்தான் முடியும் என்று நினைத்துக்கொண்டு அங்கே காத்திருந்தான் வெற்றி, எழிலின் கைகளைக் கோர்த்தபடி.

காட்சிக்கூடத்தில் உலாத்திக்கொண்டிருந்த ஆண்டனி கைக்கடிகாரத்தைப் பார்த்தான். அவனோடு வந்த பார்வையாளர்களெல்லாம் வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.அடுத்த குழுவை உள்ளே அனுமதிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்ததால், அனைவரையும் வெளியேறும்படி காவலர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதுதான் சமயம் என்று தீர்மானித்து,தன் காதுகளில் ஒலிப்பான்களை அழுந்தப் பொருத்திக்கொண்டு,
அந்த இரண்டு சாதனங்களையும் ஒருசேர இயக்கினான். அங்கிருந்த அத்தனைபேரும் தலையைக் கையில் பிடித்துக்கொண்டு துடித்தார்கள். இதில் கிரிஸ்ஸும் நிலாவும், மற்ற இரண்டு வெள்ளைக்காரர்களும் அடக்கம்.

ஆனால் ஒரு காதில் கைப்பேசியின் ஒலிப்பானை வைத்துக்கொண்டு மற்றொரு காதை தன் ஒற்றை விரலால் அடைத்துக்கொண்டு வெளிப்புற சத்தம் கேட்காமல், பேசிக்கொண்டிருந்த ஒரு காவலதிகாரி மட்டும் பாதிக்கப்படாமல் இருந்தார். பேசிக்கொண்டே திரும்பியவர், பார்வையாளர்களும், மற்ற காவலர்களும் தலையைப் பிடித்துக்கொண்டு அவஸ்தைப் படுவதைப் பார்த்தார். அதே சமயம் ஆண்டனி மட்டும் கோஹினூரை நெருங்கிக்கொண்டிருப்பதையும், தன் பையிலிருந்து அந்த லேசர் சாதனத்தை எடுப்பதையும் பார்த்தவர் உடனடியாக ஆபத்தை உணர்ந்தார்.

காதை அடைத்திருந்த ஒற்றை விரலை எடுத்ததும், அவருக்கும் அந்த வேதனை சட்டென்று தொற்றிக்கொள்வதை உணர்ந்ததும் உடனே மீண்டும் தன் அந்தக் காதை விரலால் அடைத்துக்கொண்டு வலது கையில் துப்பாக்கியை எடுத்தார். ஆண்டனியை நெருங்கினார். அதற்குள் ஆண்டனி லேசர் சாதனத்தை இயக்கத் தொடங்கிவிட்டான். அவனுக்கு பின்னால் மிக அருகில் சென்று நின்று கொண்டு ஹேண்ட்ஸ்-அப் என்றார்.

திடுக்கிட்டுத் திரும்பிய ஆண்டனி தடுமாறி துப்பாக்கியின் மேல் மோத ட்ரிகரில் நுழைத்திருந்த விரலுக்கு ஒரு விசை கிடைத்தது. காவலதிகாரி அவருக்கே தெரியாமல் ட்ரிகரை சுண்டினார். ஆண்டனியின் மார்போடு ஒட்டிக்கொண்டிருந்த துப்பாக்கி தோட்டாவை அவனுக்குள் துப்பியது. ஆண்டனியின் உடலைத் துளைத்துக்கொண்டு வெளியேறியது. ஆண்டனி அப்படியே சரிந்தான்.

உடனடியாக அவனது பையை சோதித்த அந்த காவலர், இரண்டு சாதனங்களையும் செயலிழக்க வைத்தார்.

சரியாக அதே சமயத்தில் காட்சிக்கூடத்தின் ஓரங்களிலிருந்து சிறிது சிறிதாக சில வெடிச்சத்தம் கேட்டது, அதைத்தொடர்ந்து கண்களில் எரிச்சலை வரவழைக்கும் பழுப்புநிற ரசாயண வாயு வெகு அதிக அளவில் வெளியேறி கூடத்தை சூழ்ந்தது. அடுத்து இருப்பவர்கூட கண்களுக்கு தெரியாத அந்த புகைமண்டலத்தில் மாட்டிக்கொண்ட அனைவரும் பலமாக இருமிய சத்தம் கேட்டது. ஐந்து நிமிடங்கள் நீடித்த புகைமண்டலம், மெள்ள தெளியத்தொடங்கியது. இதற்குள் காட்சிக்கூடத்தின் வெளியே இருந்த காவலர்களும் கண்களை கறுப்புக்கண்ணாடிகளாலும், வாயையும், மூக்கையும் கைக்குட்டைகளால் மூடிக்கொண்டு கூடத்துக்குள் பிரவேசித்தனர்.

புகை விலகி தெளிவானதும் ஆண்டனி விழுந்துகிடப்பது தெரிந்தது. ஆண்டனிக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த அதிகாரி புகை விலகியதும் மெல்ல பின்னால் திரும்பிப் பார்த்தவர், ஓடிவந்த அவருடைய சக காவலதிகாரிகளின் பார்வை நிலைக்குத்தியிருந்ததைப் பார்த்ததும், அந்த திசையில் தன் பார்வையை செலுத்தினார்.

கோஹினூர் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கூண்டு திறந்த நிலையில் இருந்தது. கிரீடத்தைக் காணவில்லை.

எழுந்து சென்று அதனை சோதித்துக்கொண்டிருக்கும்போது கட்டிடத்தின் வெளிப்பக்கம் பலமான வெடிச்சத்தமும், அதனைத் தொடர்ந்த அலறல்களும் கேட்டது.

கிரிஸ்ஸையும், அந்த இரண்டு வெள்ளைக்காரர்களையும் காணவில்லை. நிலா மயங்கி விழுந்திருந்தாள்.



அடுத்த பாகத்தில் முடியும்

meera
31-07-2008, 10:11 AM
அடுத்த கொலையா??? முக்கிய குற்றவாளி எஸ்கேப்??
சூப்பர் அண்ணா, ஹை அடுத்த பாகத்தையும் இதே மாதிரி சீக்கிரமா போடுங்க.ஆவலா இருக்குல்ல முடிவை படிக்க.

செல்வா
31-07-2008, 10:19 AM
:sprachlos020::sprachlos020::sprachlos020:
:eek::eek::eek::eek:

:icon_clap::icon_clap::icon_clap:

மதி
31-07-2008, 10:23 AM
எதிர்பார்த்த மாதிரி கிரிஸ் தான் காரணகர்த்தாவா...? ஆண்டனி இப்படி பரிதாபமாய் உயிர் விடுவானென்று தெரிந்திருக்கவில்லை...

மறைந்திருந்த வெற்றி எழில் என்ன ஆனார்கள்...? இன்னிக்கே அடுத்த பாகத்தையும் ரிலீஸ் பண்ணிடுங்கோ....

க.கமலக்கண்ணன்
31-07-2008, 10:30 AM
அய்யய்யோ சஸ்பன்ஸ் தாங்கமுடியலையே யாராவது வாங்களேன்...

அப்படியே கிளைமேக்ஸ் பற்றி சொல்லுங்களேன்...

அடுக்கடுக்காய் கதையை லவகமாக நகர்த்தியிருப்பது

அருமை... சிவா.ஜி க்கு ஓரு "ஓ" போடுங்க...

பூமகள்
31-07-2008, 11:02 AM
கமல் அண்ணா...
இதோ போடறேன் பாருங்க.............!!
"ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"
கலக்கல் சிவா அண்ணா..

கண் முன்னே எல்லாமே நடந்த மாதிரி ஓர் உணர்வு...!!

ஹையோ.. பழுப்பு நிற புகை வேற தொண்டைக் கமறலை ஏற்படுத்திடிச்சி... எப்படினா இப்படி எல்லாம்??!!

முடிவு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கேன்...

கிரிஸ் மாட்டப் போறான்..

அப்புறம்..
எழில்-வெற்றி கூட்டணி "டும் டும் டும்" தானே சிவா அண்ணா??!! ;)

அப்போ சீக்கிரத்தில் நாளைக்குள் கல்யாண சாப்பாடு உறுதி..!! :D:D

அமரன்
31-07-2008, 11:35 AM
என்ன சிவா இப்படிப் பண்ணிட்டிங்க.. தலைவலி, கண்ணெரிவு எல்லாத்தையும் உண்டு பண்ணிடீங்களே..

அபாயவளைவுகளில் அநாயாசமாக மடக்கித் திருப்பும் ரேஸ் வீரர் நீங்கள்.. பார்வையாளர்கள் நாங்கள்..

தீபா
31-07-2008, 01:36 PM
முக்குகளில் முடிச்சுகளும்
அம்முடிச்சவிழும் சூக்குமம் தெரிய
வெக்கமிழந்து படிக்கையிலும்
பிசைந்தோடி வருகிறது எழுத்தாளுமை
திக்குகள் எல்லாம் செறுகி வைக்கப்பட்ட
சீண்டல்களும் சுவாரசியக்குறைவின்றி
தேக்கி வைக்கிறது வாசகர்களை...

நல்ல கதையோட்டம் நல்ல
மாந்தர் நடமாட்டம்
அடுத்த பதிவில் முடிந்துவிடுகிறதோ என்று
எண்ணும் போது இடிந்துவிடுகிறது மனம்.
பின்னே?
இவ்வளவு சீக்கிரத்திலா முடிப்பது?
இன்னும் அதிகரித்திருக்கலாம் இதயம் வேகமாய் துடிப்பது.

வாழ்த்துகள் திரு.சிவா.ஜி எனும் சிறந்த எழுத்தாளரே!

சிவா.ஜி
31-07-2008, 04:36 PM
மீரா, செல்வா, மதி, கமலக்கண்ணன், பூமகள், அமரன், தென்றல், கிஷோர்.......உங்களனைவரின் உளப்பூர்வமான ஊக்குவித்தலால்தான் நான் இதுவரை எட்டியிருக்கிறேன். இயன்றவரை உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயன்றிருக்கிறேன். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நாளையே முடிவைக் கொடுத்துவிடுகிறேன்.

தென்றலின் கவிதை என்னைக் குளிர வைத்துவிட்டது. சவுதியின் 52 டிகிரி பெரு வெப்பத்தில் ஆறுதல் தென்றலாய் வீசிய பின்னூட்டங்களுக்கு அன்பில் நனைந்த நன்றிகள்.

mukilan
31-07-2008, 04:46 PM
ஆண்ட்டனியின் அகால மரணம் எதிர்பாராத முடிவு. க்ரிஸ் தன் திட்டத்தில் வெற்றியடைந்தானா இல்லை வெற்றியிடம் தோல்வியடைந்தானா... வெற்றி-எழில் மாலை மாற்றிக் கொண்டார்களா.. மிகுதியை வென் திரையில் காண்க.

வழக்கம் போல விறு விறு விறு...

பகுதி பகுதியாகப் படித்தாலும் கமலக்கண்ணன் அவர்களின் அட்டைப்படம் மற்றும் பகுதிகள் ஒவ்வொன்றின் படம் எனப் புத்தகமாகக் காண காத்திருக்கிறேன் அண்ணா.

சிவா.ஜி
31-07-2008, 06:19 PM
நன்றி முகிலன். புத்தகாமாய்த் தானே.... போட்டுவிடலாம். கமலக்கண்ணன் இருக்கும்போது கவலை எதற்கு. நல்ல வடிவமைப்பாளர் நம் மன்றத்துக்கு கிடைத்திருக்கிறார்.

சிவா.ஜி
01-08-2008, 09:28 AM
பாகம்-15(நிறைவுப் பகுதி)

கிரீடத்தை பெயர்த்தெடுத்துப் போனவர்களைப் பற்றி ஆச்சர்யத்துடன் அந்த வெள்ளைக்கார காவலர்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், வைரத்தை திருடிய அந்த இரண்டு வெள்ளக்காரர்களை அழைத்துக்கொண்டு பின் வாசலுக்கு வந்தான் கிரிஸ். கறுப்புத் துணிப்பையில் அந்தக் கிரீடத்தை வைத்து சுருக்கி கட்டியிருந்தார்கள். போகும் வழியில் சந்தித்துக்கொண்ட தலைமை காவலதிகாரி, அந்த இருவரைப் பார்த்து கண்களால் பாராட்டிவிட்டு, திட்டமிட்டபடி காரியத்தை செய்துவிட்டு வாருங்கள் என்று மெல்ல முனுமுனுத்துக்கொண்டே, எதுவும் தெரியாதவர் போல காட்சிக்கூடத்துக்குள் நுழைந்தார்.

பின் வாசலருகே காவலில் இருந்த அந்த ஆறு போலீஸாரும், முன் பக்கத்தில் கேட்ட வெடிச்சத்தால் அரண்டு முன் பக்கத்துக்கு ஓடினார்கள். அவர்கள் அங்கிருந்துப் போவதை கதவின் இடைவெளியில் பார்த்த கிரிஸ், அவசரமாய் அந்த இருவரையும் வெளியேற்றினான். கிரிஸ்-ஐ திரும்பிப்பார்த்துக்கொண்டே ஓடிய இரண்டாமவன் மோதிக்கொண்டது, ஒரு கான்ஸ்டபிளின் மீது. இவர் எங்கிருந்து வந்தார் என்று யோசித்தான். கொஞ்சம் தொலைவில் பீடி வலித்துக்கொண்டிருந்த கான்ஸ்டபிள், மற்றவர்கள் ஓடுவதைப் பார்த்துவிட்டு பீடியை தூக்கி எறிந்தவர், அது குப்பையில் விழுந்து புகைவதைப் பார்த்ததும் அதை பூட்ஸ்காலால் நசுக்கிவிட்டு திரும்ப ஓடிவந்தவர்தான் அந்த இரண்டாமவனின் மேல் மோதிக்கொண்டார். திறந்திருந்த கதவின் இடைவெளியில் கிரிஸ்ஸையும், ஓடிவந்தவனையும் பார்த்துவிட்டு, உடனடியாகக் கணக்குப் போட்டு ஆபத்தானவர்கள் என்பதை உறுதி செய்துகொண்டு தன் துப்பாக்கியை உயர்த்தினார்.

சுதாரித்துக்கொண்ட அந்த வெள்ளையன் அவரைப் பிடித்து தள்ளிவிட்டு ஓடிச் சென்று வேனில் ஏறிக்கொண்டான். மற்றவனை அவசரப்படுத்தினான். கிறீச்சிட்டுக்கொண்டு கிளம்பியது வேன். வெற்றி பரபரப்பானான்.

“எழில் சீக்கிரம் உக்காரு....” என்று சொல்லிவிட்டு தன் பல்ஸர் வண்டியை முடுக்கினான். வேனைப் பின்தொடர்ந்து சிட்டாகப் பறந்தது பல்ஸர்.

தடுமாறி கீழே விழுந்த காவலர் மீண்டும் எழுந்து பார்ப்பதற்குள் வேன் கிளம்பிவிட்டிருந்தது. உடனடியாக தன்னிடமிருந்த ரேடியோ சாதனத்தை இயக்கினார். அடுத்த நொடி அவருடைய தோளில் ஒரு குண்டு பாய்ந்தது. புகை வழியும் கைத்துப்பாக்கியுடன் கிரிஸ் அவரை நெருங்கி வந்து கொண்டிருந்தான். கீழே விழுந்தவரை இந்த முறை சரியாக நெஞ்சுக்கு குறி பார்த்து.....சுடுமுன்...கண்கள் நிலைகுத்தி கீழே விழுந்தான். அவனுடைய பின் மண்டையிலிருந்து ரத்தம் அடைப்பு நீங்கிய வடிகால் குழாயைப்போல ரத்தத்தை வெளியேற்றியது.. துப்பாக்கிச் சத்தம் கேட்டுப் பாதியில் திரும்பிய இன்னொரு காவலரின் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு அவன் தலைக்குள் குடியேறி கீழே தள்ளியிருந்தது.

வேனை அந்த வெள்ளையன் தாறுமாறாக ஓட்டினான். சிக்னல் வருவது தெரிந்தால், முன்கூட்டியே இடது, வலது என சட் சட்டெனத் திருப்பி செலுத்திக்கொண்டிருந்தான். அந்த சாலைகளில் சாகசம் காட்டிப் பழக்கமாகியிருந்த வெற்றியும் சளைக்காமல் பின் தொடர்ந்தான். வேன் சென்று நின்ற இடம் ஒரு கார்கோ அலுவலகம். ஒருவன் மட்டும் இறங்கி உள்ளே சென்றான். சடுதியில் திரும்ப வந்து வேனில் ஏறிக்கொண்டான். அதற்குள் வெற்றி எழிலை அங்கே இறக்கிவிட்டு, கமிஷனர் ரியாஸ்கானின் அலைபேசி எண்னைக் கொடுத்து அவரை அழைத்து விவரம் சொல்லச் சொன்னான். மீண்டும் கிளம்பிய வேனைத் துரத்தினான். வேன் நெரிசலான போக்குவரத்தை சட்டை செய்யாமல் பறந்துகொண்டிருந்தது. ஒரு கையில் ஆக்ஸிலேட்டரைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் கைப்பேசியைக் கையாண்டான் வெற்றி. எதிர் முனையில் பேசிய சொக்கலிங்கத்திடம் அவசரமாய் செய்தி சொல்லிவிட்டு கைப்பேசியை அப்படியே சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு ஆக்ஸிலேட்டரை இன்னும் முறுக்கினான்.

வேன்..சடார் சடாரென்று திரும்பி ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த தெருவுக்குள் நுழைந்து நின்றது. வெற்றி வந்த வேகத்தில் அந்த வேனின்மீது மோதாமல் தவிர்க்க பிரேக்கை முடிந்தவரை அழுத்தினான். டிஸ்க் பிரேக் என்பதால் சட்டென்று நிலைக்கு வந்ததில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டான்.. விழுந்த வேகத்தில் துள்ளி எழுந்தவன், அசையாமல் நின்றான். வேனிலிருந்து இறங்கியவர்கள் கைகளில் துப்பாக்கி முளைத்திருந்தது. அவை இவனையே குறி பார்த்தது. திடீரென்று பிரகாசமான ஒரு வெளிச்சம் அவர்கள் மேல் பாய்ந்ததில் கண்கள் கூச, கைகளால் மறைத்துக்கொண்டார்கள். அடுத்த நொடி இரண்டு வேட்டுச் சத்தம் கேட்டது. இருவருமே முழங்காலுக்கு கீழே சுடப்பட்டு கீழே சாய்ந்தார்கள்.

படபடவென்று காக்கி சரசரக்க சொக்கலிங்கத்தின் கூட வந்த காவலர்கள் ஓடிச் சென்று அந்த இருவரையும் மடக்கினார்கள்.

ரியாஸ்கானும், டி.ஜி.பியும் காட்சிக்கூடத்துக்குள் ஒரு போலீஸ் படையுடன் நுழைந்தார்கள். தலைமைக் காவலதிகாரியைக் கைது செய்வதாய்ச் சொல்லி விலங்கு மாட்டப்போனவரைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்தார் அந்த அதிகாரி.

“நான் ஒரு இங்கிலாந்துப் பிரஜை. அதுவுமல்லாமல் மாட்சிமைதாங்கிய மகாராணியின் அரண்மனைக்காவல் உயரதிகாரி. என்னை அவ்வளவு சுலபமாக உங்களால் கைது செய்ய முடியாது. அதற்கு எங்கள் அரசாங்கத்தின் அனுமதி வேண்டும். அதுவரை உங்களால் என்னைத் தொடக்கூட முடியாது.” என்று சொல்லி முடிப்பதற்குள், ரியாஸ்கான் அவரைப் பளாரென்று அறைந்தார்.

“ தமிழ்நாட்டுப் போலீஸைப்பற்றி உனக்குத் தெரியாது. ஆதாரங்கள் கிடைக்கும்வரைதான் கையைக் கட்டிக்கொண்டிருப்போம். ஆதாரம் கிடைத்துவிட்டால், கையை உடைப்போம். உனக்குத்தேவை உன் அரசாங்கத்தின் அனுமதிதானே...இரு...சார்..”என்று அழைத்ததும், பிரிட்டிஷ் துனை ஹை கமிஷனின் சென்னைப் பிரிவுத் தலைமை அதிகாரி முன் வந்து அப்போதுதான் அச்செடுக்கப்பட்ட இங்கிலாந்து அரசாங்க ஆனையைக் காட்டினார். அதோடு,

“இந்தத்துரோகியை இழுத்துக்கொண்டு போங்க. உங்கள் விசாரனையை முடித்துக்கொண்டு எங்கள் நாட்டுக்கு அனுப்ப உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

எல்லாம் முடிந்துவிட்டது என்றுத் தெரிந்ததும், அதிகாரம், ஆணவம் எல்லாம் அடங்கி தலைக் கவிழ்ந்து வெளியேறினார். போய்க்கொண்டிருந்தவரைத் தொட்டு நிறுத்தி,

“ என்ன சொன்னாய் அன்று....? வெளியிலிருந்து உங்கள் காவல் வேலையைப் பாருங்கள் என்று இளக்காரமாய் சிரித்தாயே....நாங்கள் எங்கிருந்தாலும் எங்கள் வேலையை மிகச் சரியாக செய்வோம்..” என்று அதே இளக்கார புன்னகையை அவரிடம் வீசிவிட்டு, “ம்...கூட்டிட்டுப் போங்க. அப்படியே அந்த ஸ்டெரெக்சர்ல கிரிஸ்ஸோட பாடியையும், காட்சிக்கூடத்தில் கிடக்கிற பாடியையும் மார்ச்சுவரிக்குக் கொண்டு போங்க” என்று மள மளவென்று கட்டளைகளைப் பிறப்பித்தார்.

சொக்கலிங்கத்தின் அழைப்பு வந்தது. பேசிவிட்டு டி.ஜி.பியிடம் திரும்பி,

“ சார் கிரீடத்தைக் கொண்டுபோன அந்த ரெண்டு பேரையும் மடக்கிட்டாங்க. அதே சமயம் நாம அனுப்பின இன்னொரு டீம் அந்த கார்கோ ஆபீஸ்லருந்து கிரீடத்தை கைப்பற்றிட்டாங்க. திருடுபோன ஒரே மணி நேரத்துல திருடுபோன மிக விலையுயர்ந்த பொருளை மீட்டிருக்கோம்ன்னா அந்தப் பெருமை எல்லாமே அந்த பையன் வெற்றிக்கும், எழிலுக்கும்தான் சேரனும் சார். அற்புதமான உழைப்பு அவர்களுடையது” என்றவரிடம், டி.ஜி.பியும் ஆமென்று ஆமோதித்தார்..

வெற்றித் திரும்ப அந்த கார்கோ அலுவலகத்துக்கு வந்து எழிலை கட்டியணைத்துக்கொண்டான்.

“நாம் சாதித்துவிட்டோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு எழில்” என்றவனிடம்,

“ஆமா வெற்றி. அன்னைக்கே கிரிஸ் இதில் சம்பந்தப்பட்டிருக்கான்னு தெரிஞ்சப்பவே அந்த தலைமை அதிகாரியைப் பத்தியும் தெரிஞ்சிருந்தா திருட்டே நடக்கவிடாம செஞ்சிருக்க முடியும்.” என்றவளிடம்,

“ அப்படித் தெரிஞ்சிருந்தா இன்னைக்கு கிடைச்ச இந்த திரில் கிடைக்காம போயிருக்குமே...” என்று சொல்லிவிட்டு அவள் கைகளை அழுத்தமாகப் பற்றினான்.

அவனைக் காதலுடன் பார்த்துக்கொண்டே,

“இன்னும் கொஞ்சம் குளோசப்ல வாடா.....என் கதாநாயகனே” எழில் கொஞ்சினாள்.


நிறைந்தது...............இனி கோஹினூருக்காகக் கொலைகள் தொடராது..................

அன்புரசிகன்
01-08-2008, 09:42 AM
அடடா.. இந்த வைரத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதை உள்ளதா....

கடைசிவரை கதையில் தொய்வில்லாது நிஜப்பார்வையில் நகர்த்திய சிவா அண்ணனுக்கு பாராட்டுக்கள்...

பூமகள்
01-08-2008, 09:43 AM
வைரத்துக்கு பின்னால் இருந்த புரியாத விடைகள் கச்சிதமாக அவிழ்க்கப்பட்டுள்ளன..

கதையின் சுவாரஸ்யம் குறையாமல் சென்றிருக்கிறது... இறுதி உரை.. திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போல கச்சிதம்..

மனமார்ந்த பாராட்டுகள் சிவா அண்ணா..!!

அடுத்தது என்ன... புத்தகம் தான்... கமலண்ணா ஓடியாங்கோவ்..! :)

தீபா
01-08-2008, 10:21 AM
கதை ஜொலிக்கிறது.. நிறைய திருப்பங்கள் நிறறய குழப்பங்கள் என்று அத்தனைக்கும் முடிவு கட்டி.....

ஒரு சந்தேகம். சரியாகப் படிக்கவில்லையோ என்று நினனக்கிறேன். அந்த குப்பத்து பிணங்கள் யாவர்?

அழுத்தம் திருத்தமும் முக்குகளில் முடிச்சுகளுமாக நிறைந்த இக்கதைக்கு நீங்கள் பின்புலத்தில் நன்கு உழைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது,.

அலைகளால் அதிரவைக்கும் கருவியை ஒரு ஆங்கிலப்படத்தில் கண்டிருக்கிறேன்.

திரைப்படமாக இருந்திருந்தால் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக இருந்திருக்கும்... உங்களின் எழுத்து வீச்சு தெறிக்கும் திகில் கதைகள் மேலும் மன்றில் தொடரவேண்டும்...

வாழ்த்துகள்...

க.கமலக்கண்ணன்
01-08-2008, 10:23 AM
அருமை கடத்தல் => சண்டை => காதல் => சென்டிமென்ட் => கோஹினூர் => கொலை =>

அப்படியே வரிசையில் கொண்டு வந்து கிட்டதட்ட ஒரு

அருமையான ஹாலிவுட் படம் பார்த்த உணர்வு....

அசத்திவிட்டீர்கள் சிவா.ஜி... புத்தகம் தயாரிப்புக் களத்தில்...

அதனால் விரைவில் வெளியீடு... உலகமெங்கும் தமிழ்மன்றம் வெளியீடு சென்னை மட்டும் கமலகண்ணன் வெளியீடு... (நிர்வாகிகள் அனுமதிப்பார்களாக...)

சிவா.ஜி
01-08-2008, 11:16 AM
அன்பு, பூமகள், தென்றல், கமலக்கண்ணன், கிஷோர் அனைத்து அன்பு உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஆரம்பத்திலிருந்து இக்கதையைப் படித்து, உற்சாகப்படுத்திய உங்களுக்கெல்லாம் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

கமலக்கண்ணன், உங்கள் ஆசை நிறைவேறினால், அதற்கு இந்தக் கதை தகுதியுடையதாயிருந்தால், எழுதியவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.

தென்றல், அந்த குப்பத்து பிணங்கள், எழிலைக் கடத்திய கும்பலைச் சேர்ந்தவர்கள். எழிலின் பெற்றோரை மிரட்டிக்கொண்டிருந்தவர்கள். அதை ஒரு பாகத்தில் சொக்கலிங்கம் சொல்வதாய் எழுதியிருக்கிறேன். ஆனால் தெளிவாக எழுதவில்லையோ என்று நினைக்கிறேன்.

மதி
01-08-2008, 11:51 AM
அட அட அட...
என்னமாய் அசத்தலாய் முடிச்சிருக்கீங்க....
வைரத்திற்கு பின் இத்தனை கதை இருக்கா......?

அசத்தல் முடிவு... வாழ்த்துகள் சிவாண்ணா..

aren
01-08-2008, 11:55 AM
முடிவு சுத்த சொதப்பல். இதுவரை இருந்த சுவாரசியம் முடிவில் அநியாயமாக கொலை செய்யப்பட்டுவிட்டதா என்ற அச்சம். இதுவரை நடந்த கொலைகளைவிட இந்தக் கதையின் முடிவுதான் உண்மையான கொலையோ என்று நினைக்கவைத்துவிட்டது.

கதை இப்படி முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முடிவு எனக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.

க.கமலக்கண்ணன்
01-08-2008, 01:11 PM
படங்கள் அனைத்தும் தயார் ஏதாவது பிழைத்திருத்தம் இருக்கிறதா?... இல்லை என்றால் புத்தகத்தில் ஏற்றிவிடலாம்...

தீபா
01-08-2008, 01:47 PM
முடிவு சுத்த சொதப்பல். இதுவரை இருந்த சுவாரசியம் முடிவில் அநியாயமாக கொலை செய்யப்பட்டுவிட்டதா என்ற அச்சம். இதுவரை நடந்த கொலைகளைவிட இந்தக் கதையின் முடிவுதான் உண்மையான கொலையோ என்று நினைக்கவைத்துவிட்டது.

கதை இப்படி முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முடிவு எனக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை.


அவர் சட்டென்று முடித்துவிட்டதாலோ என்னவோ!!!

கோஹினூரைக் காப்பாற்றி இருந்திருக்கலாம் - வழக்கம் போல..

புதுமையாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னவோ!!!!

ஆனாலும் சட்டென்று மனதில் பட்டதைச் சொன்னதை வரவேற்கிறேன். அது அவருக்குத் துணையாக இருக்கும்...

mukilan
01-08-2008, 02:09 PM
எனக்கும் முடிவில் மனம் ஒப்பவில்லை. ஆனால் ஒரு கதையின் படைப்பாளியாகிய உங்களுக்கு எப்படி முடித்து வைக்க வேண்டும் என்ற உரிமையை மதிக்கிறேன். முடிவில் அந்த வைரத்தை தூக்கிப்போடும் பகுதியைத் தவிர கதை ஆரம்பித்த நேரத்தில் இருந்து இன்றுவரை மிகச் சுவாரசியமாக அடுத்தடுத்த திருப்பங்களுடன் எடுத்து சென்ற உங்கள் லாவகத்தையும், அயராத உழைப்பையும் பார்த்து வியந்து நிற்கிறேன். 15 பாகங்கள்...ஒவ்வொன்றும் ஒரு சிறந்த துப்பறியும் நாவலுக்கேயுண்டான விறு விறுப்புடன் சென்றன. நன்றி சிவாஜி அண்ணா.

சிவா.ஜி
01-08-2008, 02:19 PM
ஆரென் தென்றல் சொன்னதைப்போல மனதில் பட்டதை அப்படியே சொன்னதற்கு மிகவும் நன்றி. இதற்கான இன்னொரு முடிவையும் எழுதி வைத்திருந்தேன். அது வழக்கம்போல அவர்களிடமிருந்து நாயகனும், நாயகியும் சாகசம் செய்து கைப்பற்றுவதாகத்தான் இருந்தது.

கோஹினூரைப்பற்றி பல தகவல்களைத் திரட்டிக்கொண்டிருக்கும்போது, இதனை சபிக்கப்பட்ட வைரமென்றும், இது சென்று சேருமிடத்திலெல்லாம் தீங்கு விளைவிக்குமென்றும், அதற்கான சில சரித்திர சம்பவங்களைப் பட்டியலிட்டிருந்தார்கள். அரசகுடும்பத்தின் மேல் கண்மூடித்தனமான விசுவாசம் வைத்திருப்பவர்களையும் நாம் அறிவோம். எனவே இரண்டையும் இணைத்து இப்படி ஒரு முடிவைக் கொடுத்தேன். இத்தனை பேர் இணைந்திருக்கும்போது அவர்கள் நினைத்திருந்தால் வைரத்தைக் கொண்டு வரும்போதே அதை அழித்திருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அவர்கள் மேல் பழி வராமல், சாதாரணத் திருட்டாக இதைக் காட்டத்தான் இப்படி செய்தார்கள்.

நான் சட்டென்று இந்தக்கதையை முடித்துவிடவில்லை. இதற்குமேல் இழுக்க இதில் ஒன்றுமில்லை(அல்லது என்னிடம் ஒன்றுமில்லை). எனவே முடித்துவிட்டேன். உங்களுக்காக நாளை அந்த மற்ற முடிவையும் பதிக்கிறேன். பரவாயில்லையென்றால் அதையே வைத்துக்கொள்லலாம்.

மேலும் என்னைச் சிந்திக்கத் தூண்டிய உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஆரென்.

சிவா.ஜி
01-08-2008, 02:22 PM
நன்றி முகிலன். முடிவைப்பற்றி ஆரெனுக்கு சொன்னதைதான் உங்களுக்கும் மேற்கோள் காட்டுகிறேன். தேவையென்றால் மாற்றிவிடலாம். திருப்திகரமாய் இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.

தீபா
01-08-2008, 02:34 PM
நன்றி முகிலன். முடிவைப்பற்றி ஆரெனுக்கு சொன்னதைதான் உங்களுக்கும் மேற்கோள் காட்டுகிறேன். தேவையென்றால் மாற்றிவிடலாம். திருப்திகரமாய் இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம்.

ஆஹா!!!

வாழ்த்த வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன்......

சிவா.ஜி
01-08-2008, 06:23 PM
மன்ற உறவுகளின் விருப்பத்திற்கிணங்க முடிவை மாற்றியிருக்கிறேன். குறையிருப்பின் தயவுசெய்து தயங்காமல் கூறவும். நன்றி

mukilan
01-08-2008, 07:23 PM
அதிகம் மசாலா கலந்து கார சாரமாக உணவு உண்டவர்கட்கு திடீரென்று வேறு உணவு கொடுத்தால் சற்று ஏமாற்றமாகத்தானே இருக்கும் அதே ஏமாற்றம்தான் எங்களுக்கும். ஆனால் மசாலா குறைவானதென்றால் நல்லதாமே?

எங்கள் விருப்பத்திற்கு தலைசாய்த்து எங்கள் வேண்டுகோளை ஏற்று முடிவை மாற்றிய உங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

15 பாகங்களுமே அருமை அண்ணா. உங்களின் இப்படைப்பை புத்தகமாகக் காணும் நாளுக்கு காத்திருக்கிறேன்.

நன்றிகள் கமலக்கண்ணருக்கும் உரித்தாகுக.

க.கமலக்கண்ணன்
02-08-2008, 02:46 AM
இப்போது மிக அற்புதமாக முடிந்திருக்கிறது

இந்த கதையின் முடிவுரை...

இந்த மாற்றம் கதையை மிக

இனிமையாக மெருகேற்றியிருக்கிறது... அதற்காக ஆரென் அவர்களுக்கு நன்றி...

meera
02-08-2008, 04:02 AM
அண்ணா, அசத்தல் முடிவு. ஒரு வழியா கோகிநூர் தப்பிச்சிருச்சு. முதலும் முடிவும் இனிமை.என் பாராட்டுக்கள் அண்ணா.

சிவா.ஜி
02-08-2008, 04:27 AM
முகிலன், கமலக்கண்ணன், தங்கை மீரா அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
நிச்சயம் ஆரெனுக்கும், முகிலனுக்கும் என் பிரத்தியேக நன்றிகள்,

சிவா.ஜி
02-08-2008, 06:21 AM
மன்னிக்கவும் கிஷோர். நீங்கள் சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டேன். நீங்களும் முடிவை மாற்றத்தான் சொல்லுகிறீர்களோ என எண்ணிவிட்டேன்.

aren
02-08-2008, 06:54 AM
சிவாஜீ அவர்களே, என்னை மன்னிக்கவும். இவ்வளவு சுவாரசியமான கதை இப்படி முடிந்துவிட்டதே என்ற ஆதங்கத்தில் நான் உங்களை மதிக்காமல் எழுதியதற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய கனவு இந்தக் கதை ஒரு புத்தகமாக வந்து மக்கள் மத்தியில் பிரசித்தம் அடையவேண்டும் என்பதே. அது இந்த முடிவால் பகல் கனவாகிவிடப்போகிறதே என்ற நினைப்பிலேயே கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டேன். அதுவும் கூவத்தில் அந்த இருட்டில் அவர் வைரத்தை எறிந்தது உண்மையான வைரமா அல்லது வெற்றியை திசைத்திருப்பலாம் என்ற நினைத்த சதித்திட்டமா என்று மக்கள் யூகிக்கக்கூடும். இப்படி யோசித்ததால் வந்தவிணை என்னுடைய அதிகப்பிரசங்கித்தனமான பின்னோட்டம். என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.

I am Sorry.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
02-08-2008, 06:55 AM
இந்தக்கதையை அடுத்த புத்தகமாக வெளியிடவேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாமா?

சிவா.ஜி
02-08-2008, 07:05 AM
அடடா...என்ன ஆரென் இது? உண்மையில் என் மீதுள்ள அக்கறையால்தான் அப்படிச் சொன்னீர்கள் என்று எனக்குத் தெரியும். மன்னிப்பு என்பதெல்லாம் என்னை வேதனைப் படுத்துகிறது. உண்மையில் உங்களுக்கு நான் நன்றிதான் சொல்லவேண்டும். புத்தக முயற்சியில் கமலக்கண்ணன் ஈடுபாட்டுள்ளார்.

க.கமலக்கண்ணன்
02-08-2008, 07:10 AM
படங்கள் அனைத்தும் தயார் பிழைத்திருத்தம் முடிந்துவிட்டால் புத்தகத்தில் ஏற்றிவிடலாம்.... பிழைத்திருத்தத்தை யாரிடம் ஒப்படைக்கலாம்?

சிவா.ஜி
02-08-2008, 07:16 AM
கிஷோர் உங்களின் பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்துவிட்டேன். ஒரு வித்தியாச முடிவைக் கொடுக்க நினைத்துதான் முந்தைய முடிவைக் கொடுத்தேன். ஆனால் கமர்ஷியலாக வெளியிடும் திட்டத்துக்கு அந்த முடிவு சரியாக வராதோ என்ற எண்ணமும்தான் இந்த மாற்றத்திற்குக் காரணம். ஆனால்...உங்களின் ஆதங்கம் புரிந்து....சற்றே குற்ற உணர்ச்சி.

சிவா.ஜி
02-08-2008, 07:17 AM
படங்கள் அனைத்தும் தயார் பிழைத்திருத்தம் முடிந்துவிட்டால் புத்தகத்தில் ஏற்றிவிடலாம்.... பிழைத்திருத்தத்தை யாரிடம் ஒப்படைக்கலாம்?
கமலக்கண்ணன் செல்வாவால் செய்ய முடியுமென்று நினைக்கிறேன். இதயமும் சிறப்பாக செய்வார். அவரால் நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டுப்பார்க்கிறேன்.

க.கமலக்கண்ணன்
02-08-2008, 07:23 AM
நல்லது அப்படியே ஆகட்டும். முடித்தவுடன் எனக்கு தெரிவித்தால் நான் முடித்துவிடுவேன்...

இளசு
06-08-2008, 08:35 PM
அன்பு சிவா

அனைத்து பாகங்களையும் ஒருசேர ஆற அமரப் படிக்கவேண்டும் என்ற
என் சுயவிருப்பினால் -

இன்று நினைத்ததை முடித்தேன் என்றாலும்

சுடச்சுட சொந்தங்களோடு சேர்ந்து கலகலப்பாய் அவ்வப்போது கலக்க முடியாமல் போயிற்றே எனக் கலங்குகிறேன்..

நேர்த்தியான தொடக்கம்.. ஆர்வம் கிளப்பும் முடிச்சுகள்..
இயல்பான உரையாடல்கள்..
விம்மிதம் தரும் தேச/மொழிப் பற்று..
கிளுகிளுப்பான இளங்காதல்
வட்டார வழக்கு, துல்லிய விவரணங்கள்..

பலவித அம்சங்களும் கொட்டிக்கிடக்கும் நவரச நாவல்!

சுவைக்க மகிழ்ச்சியும்..
நம் மன்றச் சொந்தம், நமக்காக என்ற கூடுதல் உரிமையுணர்வும்..

நூலாகவும் வெற்றி பெற வாழ்த்துகள்..

இதயம் தந்த பின்னூட்டத்தில் உங்களைப் பற்றிச் சொன்ன நன்மொழிகளை
வழி மொழிகிறேன்..

கமலகண்ணனின் படங்கள் கண்படும் அழகு.. பாராட்டுகள்.

உடன் ஓடிவந்து ஊக்கம் தந்த அத்தனை மன்றச் சொந்தங்களுக்கும்
என் கரைபுரண்ட அன்பு.. நீங்கள் விலைமதிப்பில்லா மன்றச் சொத்துகள்!


சிவா, உங்கள் கதை சொல்லும் திறனுக்கும், எண்ணியதை எழுதி முடிக்கும் ஆற்றலுக்கும் சாட்சி வைரம் இக்கதை!
சிறப்புப் பாராட்டுகள்..


( ஒரே குறை - நங்கநல்லூர் பெற்றோர் குணநலன்கள், பேச்சுகள், செயல்கள் -
இரண்டு கொலை விழுந்த அந்த சந்தர்ப்பத்துக்கு பொருந்தாமல் பிணகுகிறாற்போல் எனக்குத் தோன்றியது..)


----------------------------------------

மூன்ஸ்டோன் என ஆங்கில நாவல் - சபிக்கப்பட்ட இந்திய வைரம் இங்கிலாந்து போனாலும் நம்மவர்கள்
(அந்தக்காலத்திலேயே) அங்கே போய் மொழி/குளிரைத் தாண்டி அதை மீட்கப் போராடும் அதி அற்புத நாவல்..

இளவயதில் அதைப் படித்தபோது ஏற்பட்ட பரபர பரவசம் இப்போதும்..

வைரங்களுக்கு என ஒரு வசியம் இருக்கத்தான் செய்கிறது..

வைரமான எழுத்துகளுக்கும்...

வாழ்த்துகிறேன் சிவா..


அவ்வப்போது பின்னூட்டம் தராமைக்கு என்னை மன்னியுங்கள்..

(உங்களிடம் தட்டச்சில் இருந்தால், முதலில் தந்த முடிவை
எனக்கு தனிமடலில் அனுப்புங்கள்.. நன்றி சிவா)

செல்வா
06-08-2008, 09:49 PM
(உங்களிடம் தட்டச்சில் இருந்தால், முதலில் தந்த முடிவை
எனக்கு தனிமடலில் அனுப்புங்கள்.. நன்றி சிவா)

சிவா அண்ணாவினால் முந்தைய முடிவைத் தனிமடல் அனுப்ப இயலாது என்பதால். நான் அனுப்பிவைக்கிறேன்.

சிவா.ஜி
07-08-2008, 04:46 AM
நான் மிகவும் விரும்பி எதிர்பார்த்த இளசுவின் பின்னூட்டம் கிடைத்ததில் முழுமையானதாக எண்ணி ஆனந்தமடைகிறேன்.
ஆம் இளசு. எழிலின் பெற்றோர்களின், கொலையைக் கண்ணால் பார்த்தபிறகான உரையாடல்களில் எனக்கும் திருப்தியில்லை. கதையை முன்னே கொண்டுபோகும் ஆர்வத்தில் அதில் கவனம் செலுத்த தவறிவிட்டேன். இனி வரும் படைப்புகளில் நிச்சயம் இதை கவனத்தில் கொள்வேன்.மனம் நிறைந்த நன்றி இளசு.

rajatemp
07-08-2008, 05:31 AM
அருமையான கதை ஆனால் முடிவு முடிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது

சிவா.ஜி
07-08-2008, 05:56 AM
மிக்க நன்றி ராஜா. வைரத்துக்கான துரத்தல் ஒரு கட்டத்தில் முடிந்துதானே ஆகவேண்டும். எடுத்தார்கள், பிடித்தார்கள், முடித்தார்கள். சரிதானே ராஜா?

அமரன்
11-08-2008, 08:30 AM
சுறு சுறுப்பு உதாரணமாக-இனி
எறும்பைச் சொல்ல வேண்டாம்.
விறு விறு கதையரசு
சிவாவை சொல்லுங்கள்..

சிவா அசத்தி விட்டீர்கள் ..
அடுத்தது எப்போ என்று
எதிர்பார்க்க வைத்துவிட்டீர்கள்.

சிவா.ஜி
11-08-2008, 10:17 AM
மீண்டும் அமரக்காற்று அடிக்கத்தொடங்கியதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி அமரன். தற்சமயம் எந்த புதிய பதிவையும் பதிய இணையம் ஒத்துழைக்க மறுக்கிறது. நிலைமை சரியாகும்போது பார்ப்போம்.

samuthraselvam
19-03-2009, 05:19 AM
அண்ணா, என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஆஹா, அற்புதம், அருமை....... இப்படியெல்லாம் சொன்னால் பத்தாது.

கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே மாதிரி பரபரப்பாக இருந்தது.
ஒவ்வொரு பகுதியிலும் மனம் எழிலையும் வெற்றியையும் பின்தொடர்ந்து ஓடி, அவர்களின் வெற்றிக்குப் பின்தான், ஒரு நிலைப் பட்டது.

உங்களின் எழுத்துக்களில் மனதை கட்டிப் போடும் மாயம் உள்ளது. காட்சிகளின் விவரிப்பு கண் முன்னேயே நிறுத்துகிறது. கதை என்றால் அடுத்து இதுதான் என எதிர்பார்த்தால் அதுவல்ல இது, வேறு என்று எதிர்பார்த்ததை முறியடிக்கிறீர்கள்.

இதுவே ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு அடையாளம்.

திகிலுடன் இளைப்பாற கொஞ்சம் வெண்சாமரமாய் இளமைக் காதல் வசனங்கள். ஒரே மூச்சில் படிக்கத்தூண்டும் க்ரைம் நாவல் இது.

கோஹினூர் வைரம்கூட தற்பொழுது அளவில் சிறுத்து ஒளி இழந்து வருகிறது எனக் கேள்விப்பட்டேன்.
ஆனால் அதைவிட அதிக ஒளியுடன் :nature-smiley-002:மின்னுகிறது கோஹினூர் கொலைகள்!!:nature-smiley-002:

பரிசாக 200 இ-காஷ் தருகிறேன்.:icon_give_rose::icon_give_rose::icon_give_rose::icon_08:

சிவா.ஜி
19-03-2009, 06:53 AM
மிக மிக நன்றி தங்கையே. மன்ற உறவுகளின் ஊக்கமே என்னை எழுத வைக்கிறது. சிறந்த எழுத்து உருவாகவேண்டுமானால் சிறந்த வாசகர் அமையவேண்டும். நமது மன்றத்து உறவுகள் மிகச்சிறந்த வாசகர்கள். அவர்களை திருப்திபடுத்த வேண்டுமானால் சாதாரணமாக எழுதிவிட முடியாது. நிறைய உழைக்கவேண்டும்.

அந்த உழைப்புக்குப் பலனாக, அந்த சிறந்த வாசகர்களின் பாராட்டு கிடைக்கும் போது பெறும் மகிழ்ச்சி எல்லையற்றது. மிக்க மகிழ்ச்சியுடன் மனம் நிறைந்த நன்றி லீலும்மா.

(இ-பணத்துக்கு பிரத்யேக நன்றி)

SureshAMI
25-03-2009, 09:07 AM
nalla irukku