PDA

View Full Version : நடாலுக்கு விம்பிள்டன் பட்டம்



shibly591
08-07-2008, 09:00 AM
உலகின் முதல் நி?94; வீரர் ரொஜர் பெடரரின் ஆதிக்கத்தை சிதறடித்த இரண்டாம் நிலை வீரர் ரபீல் நடால் 4 மணி நேரம் போராடி விம்பிள்டன் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் மூலம் தொடர்ந்து 6 ஆவது தடவையாகவும் விம்பிள்டன் பட்டம் வென்று சாதிக்க காத்திருந்த பெடரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் ஸ்பெயினின் ரபீல் நடால் 1980 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே ஆண்டில் பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரராக சாதனை படைத்தார். 1980 இல் சுவீடனின் பிஜோர்ன் பேர்க் இந்த சாதனையை படைத்திருந்த?992;்.

இது தவிர 1966 ஆம் ஆண்டுக்கு பின் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் ஸ்பெயின் வீரராகவும் நடால் பதிவ?985;ார். லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடால் முதல் இரண்டு செட்களையும் 64, 64 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். அப்போது மழை குறுக்கிட்டது. எனினும் பெடரர் தனது சாம்பியன் முத்திரையை பதிக்கும் வகையில் இரண்டு செட்கள் சரிவில் இருந்து மீண்டு அடுத்த இரண்டு செட்களிலும் டைபிரேக்கர் வரை போராடி வென்றார்.

இதனால் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவரும் கடுமையாக போராடினர். இதில் ஆதிக்கம் செலுத்திய நடால் போட்டியை 64, 64, 67 (57), 67 (810), 97 என வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த போட்டி 4 மணி 48 நிமிடங்கள் நீடித்தது. விம்பிள்டன் போட்டி வரலாற்றில் அதிக நேரம் நடந்த போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் 1982 ஆம் ஆண்டு ஜோன் மெக்கன்ரோஜிம்மி கோன்ஸ் மோதிய ஆட்டம் 4 மணி 16 நிமிட நேரம் நடைபெற்றது.

பட்டத்தை வென்ற பின்னர் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிப்பே?985; நடால் ஆனந்த கண்ணீரோடு காட்சி அளித்தார். பெடரரிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த அவர் உடனடியாக சிறப்பு அரங்குக்கு சென்று அங்கிருந்த ஸ்பெயின் இளவரசர் பெலிப் மற்றும் இளவரசி லெடிசியா ஆகியோரிடம் கைகுலுக்கி வாழ்த்து பெற்றார்.

வீரகேசரி

அக்னி
08-07-2008, 09:15 AM
கடந்த இரண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டிகளிலும் நடால், பெடரரை இறுதிப்போட்டியில் சந்தித்து தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது...

பகிர்தலுக்கு நன்றி ஷில்பி...

மன்மதன்
08-07-2008, 02:53 PM
போட்டி நடப்பதற்கு முன்னர் பெடரர் சொன்னது

'நடால் வெற்றி பெற்றால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன்'

வெற்றி பெற்றவுடன் நடால் சொன்னது

'பெடரர்தான் எப்பவும் கிங்'

இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..

இந்தப்போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளப்பியது.. அதை 100% பூர்த்தியும் செய்து விட்டது..

arun
08-07-2008, 09:23 PM
கடும் போராட்டத்துக்கு பின் பெற்ற வெற்றி இது விடா முயற்சியுடன் இந்த முறை கோப்பையை கைப்பற்றிய நடாலுக்கு வாழ்த்துக்கள்