PDA

View Full Version : இன்பம் எங்கே?(காதல் முதல் கடைசி மூச்சு வரை)டாக்டர் அண்ணாதுரை
08-07-2008, 05:24 AM
மொட்டை மாடியில்
மஞ்சல் வானம் கருபூத்த வேளையில்
தென்னை ஓலை வெண்ணிலவை
உரசிக் கிறுக்கையில்
மனம்.....
உருகி உருகி
பெருகி பெருகி வருகின்ற இன்பம்.....

மனதை திருடியவள்
கருங்கூந்தலை தென்றலில்
உலரவைக்கையில்.......
முடிக்கீற்றல்கள் முகத்தில்
பறந்து படர்ந்து
தொடந்து வந்து தருகின்ற இன்பம்.....

அந்திச்சுருங்கும் அந்த வேளை...
அலைனுரையும் மணல்கறையும்
காதலால் கட்டிப்புரண்டு அமிழ்கையில்...
சல்லாபச் சங்கமச்சிதறல்கள்
வெறித்தமுகத்தில்
சில்லென்று தொடுகின்ற இன்பம்.....

பொத்திவச்ச மல்லிகையாய்
பத்துதிங்கள் கடந்து கைதவழும்போது...
மழலைச்சிரிப்பொலியில்,
அவள் கண்ணக்குழியில் மனம் விழுந்து
உவகையில்....
துள்ளி துள்ளி
சொல்லி சொல்லி பெருகுகின்ற இன்பம்......

முதல் பிறைபோல....
எட்டிப்பார்க்கும் நரையொன்று,
அதனைக்கண்டுபிடித்து மகள்,
பிஞ்சுவிரலில்......
சுண்டிப்போட்டு பிடுங்கித்தருகையில்..
வாழ்க்கையின்....
பரிணாம வளர்ச்சியிலும்;
தளர்ச்சியின் அங்கீகாரத்தை
அமைதியாக ஏற்கும் பக்குவ இன்பம்.....

பிறை பல மாறி
பொளர்ணமியாய் வாழ்க்கையை...
வாழ்ந்து வென்ற அமைதியில்,
சுடர்வெளிர் வானில்...........
கடைசி சுவாசத்தில் மரணத்தை
சுகமாக வரவேற்கும் இன்பம்........

இதைவிட வேறென்ன வேண்டும்?

இளசு
08-07-2008, 05:28 AM
அழகுக் கவிதை!
முழுமைக் கவிதை..

அந்தியில் தொடங்கும் இன்பக்காட்சிகள்..
(முதலில் தென்னங்கீற்று.. நிலவோடு
அடுத்து கருங்கூந்தல் கீற்று.. அவள் முகத்தோடு)
அந்திமம் வரை தொடரும் மனப்பாங்கு..

இந்தவகை மன அமைவு இருந்தால்
இன்பம், இன்பம், இன்பம் மட்டுமே!

ஆக்க உணர்வூட்டும் கவிதைகளின் முதல் ஊக்கன் நான்!

பாராட்டுகள் அண்ணாதுரை அவர்களே!

சிவா.ஜி
08-07-2008, 05:51 AM
ஒரு முழுதாய் வாழ்ந்த வாழ்க்கை கவிதையாய் பூத்து வாசம் வீசுகிறது.
இணைதலில் தொடங்கி இறப்பதில் முழுமையடைந்த இந்த நாயகனின் வாழ்க்கை ஒரு வரம்.
அனைத்துக் கட்டங்களிலும் அதற்கேயுண்டான இன்பத்தை அனுபவித்து மனநிறைவோடு வானம் ஏகுவது எத்தனை பேருக்கு வாய்க்கும்?

அழ்கான கவிதை டாக்டர் சார். வாழ்த்துகள்.

கண்மணி
08-07-2008, 05:56 AM
இதைவிட வேறென்ன வேண்டும்?

அண்ணாதுரையின் பலப்பலக் கவிதைகள் வேண்டும். :D :D :D:icon_b::icon_b::icon_b::icon_b:

Narathar
08-07-2008, 06:30 AM
உயிரோட்டமான கவிதை
வாழ்த்துக்கள்! :)கடைசி சுவாசத்தில் மரணத்தை
சுகமாக வரவேற்கும் இன்பம்........

இதைவிட வேறென்ன வேண்டும்?யாருக்கு டாக்டருக்கா......????
நோயாளிக்கா........ ??? :D
( ஆனந்தவிகடன், குமுதம் வாசித்ததால் வந்த வினை!!! )

டாக்டர் அண்ணாதுரை
08-07-2008, 07:13 AM
வாழ்க்கையில் நடந்து முடிந்த துன்பத்தைப் பற்றியே நினைத்து, நம் முன்னல் கைநீட்டி நிற்கும் எதிர்காலத்தைபற்றிய சிந்தனைக்கு இடம்தறாமல், நமக்கு நாமே மதில்சுவற்றை ஏற்றிக்கொண்டால், இன்பத்தினை நுகர்வதெப்படி? இருப்பதை ஆராதிப்போம்...வருவதை எதிர்கொள்வோம்...தயார்நிலையில் இருந்தால், மனம் திடமாக எதையும் சுதாகரிக்கும்.....சரிதானே?

ஓவியன்
08-07-2008, 07:26 AM
சரியான கவிதை
தேவையான கவிதையும் கூட....

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
மீள ஒரு முறை உணர வைத்தது....

நன்றிகளும் வாழ்த்துகளும் டாக்டர் அவர்களே..!!

ஆதவா
08-07-2008, 10:29 AM
ஆரம்பம் முதல் இறுதி வரையிலும்

திகட்டத் திகட்டத் தேன் குடிப்பதைப் போல.... ஆனால் தேன் திகட்டிவிடலாம்.. இக்கவிதை அவ்வாறல்ல.

ஒவ்வொரு வரிகளையும் கற்பனை செய்து பார்க்கும்பொழுது நமக்குத் தோன்றாதவைகள் எத்தனை எத்தனை என்று வெட்கம் வருகிறது.

நாள் முழுக்க இந்த வனத்திலேயே கிடந்துவிடலாமோ?

வாழ்த்துகள் டாக்டர்....

தொடர்ந்து எழுதுங்கள்...

டாக்டர் அண்ணாதுரை
08-07-2008, 10:50 AM
ஆஹா ஆதவா.......உங்கள் வரிகள்தான் எனக்கு இப்போது தேன்!!!
உண்மைதான் ஓவியன்.....
வாழ்க்கை வாழ்வதற்கே....வாழ்ந்து கொண்டே இன்புருவோமே!

பிச்சி
08-07-2008, 05:06 PM
ஆகா.. பிரம்மாதாம். கொஞ்ஞி கொஞ்ஞி எழுதியிருக்கீங்க

(கொஞி) ஞ் வரமாட்டேங்குது

பாலகன்
08-07-2008, 05:15 PM
வாழ்க்கை கவிதை அருமை அண்ணா துரை,, தொடரட்டும் உங்கள் பயனம்

அன்புடன்
பில்லா

டாக்டர் அண்ணாதுரை
09-07-2008, 05:28 AM
பிச்சி, பில்லா....இருவருக்குமே நன்றிகள்.