PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை 9



ஆதவா
07-07-2008, 11:45 AM
நிசப்தம்.

நீண்டு விரவியிருக்கும்
நிசப்தத்தினை
என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை

நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது

இரவின் உச்சத்தில்
நிசப்தம் நிலவியிருக்குமா என்று
இரவுகளை எண்ணியிருக்க
வெளிச்சம் குத்தி இரவு அலறியதில்
நிசப்தத்தின் வாடை மறைந்தது.

பிரபஞ்ச நுனியில் கால்புதைத்து
வெறுமை கோள்களில் நிசப்தம் தேட
சூன்யம் என்னும் சப்தம்
தெறித்து நிசப்தம் கலைந்தது

எங்கு தேடினும்
அதன் முடிச்சைப் பெற முடியவில்லை

பிறிதொருநாள்
எனக்கருகே சம்மணமிட்டு
கவனிக்க ஆளில்லை என்று
சப்தமாய் அழுதுகொண்டிருந்தது
நிசப்தம்

நாகரா
07-07-2008, 12:15 PM
நிசப்தத்தின் முடிச்சை
நற்றமிழ்ச் சத்தமிடும்
உம் கவிதையின் கூர்மை
வெட்டிப் போட்டதோ!

கவிதை அருமை ஆதவரே! வாழ்த்துக்கள்

ஆதவா
07-07-2008, 12:26 PM
நிசப்தத்தின் முடிச்சை
நற்றமிழ்ச் சத்தமிடும்
உம் கவிதையின் கூர்மை
வெட்டிப் போட்டதோ!

கவிதை அருமை ஆதவரே! வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நாகரா அவர்களே!

உங்க்கள் ஞானம் முன் நானென்ல்லாம் எம்மாத்திரம்? :)

ஷீ-நிசி
07-07-2008, 02:26 PM
ம்ம்ம்.. எங்கே நிம்மதி... போல எங்கே நிசப்தம்.. தேடித் தேடி அலைந்தான் எங்கு தேடியும் காணவே இயலவில்லை. அந்த முடிவு அற்புதம்..

மனதில் தோன்றியது......

தேடி ஒருவழியாய் அவன் அந்த நிசப்தத்தை கண்டுபிடித்து அமர்ந்திருந்தவேளையில் உள்ளிருந்து 'லப் டப்' 'லப் டப்' என்று அவன் இதயம் அந்த நிசப்தத்தை கலைத்துக்கொண்டிருந்தது.

கவிதையில் ஒரு மெல்லிய அமைதி நிலவுகிறது..

வாழ்த்துக்கள்!

நாகரா
07-07-2008, 03:34 PM
உங்க்கள் ஞானம் முன் நானென்ல்லாம் எம்மாத்திரம்? :)

ஆதவர் நிசப்தமாய்
அருட்கதிர் அனுப்பி
எம் விழி திறப்பார்
சுத்த வெளி நிசப்தமே
அவர் சுடரொளிச் சொற்களை
வாழ்த்தி வணங்க
பித்த மன உன்மத்தர்
யாமெலாம்
ஆதவ அருட்சித்தர் முன்
எம்மாத்திரம்!
ஆ! தவர்! என்று
ஞாலமே போற்றி வணங்கும்
மா தவர் அவர் முன்
நாகம் நா அடங்கி
நிற்கும் நிசப்தமாய்.

ஆதவா
08-07-2008, 09:52 AM
ம்ம்ம்.. எங்கே நிம்மதி... போல எங்கே நிசப்தம்.. தேடித் தேடி அலைந்தான் எங்கு தேடியும் காணவே இயலவில்லை. அந்த முடிவு அற்புதம்..

மனதில் தோன்றியது......

தேடி ஒருவழியாய் அவன் அந்த நிசப்தத்தை கண்டுபிடித்து அமர்ந்திருந்தவேளையில் உள்ளிருந்து 'லப் டப்' 'லப் டப்' என்று அவன் இதயம் அந்த நிசப்தத்தை கலைத்துக்கொண்டிருந்தது.

கவிதையில் ஒரு மெல்லிய அமைதி நிலவுகிறது..

வாழ்த்துக்கள்!

மிக்க நன்றி ஷீ-நிசி..

உங்கள் கற்பனை அபாரம். அதை நான் யோசிக்கவில்லை. கவிதை அமைதியாக இருந்தாலும் அது சப்தக் கிணறுகளில் ஊற்றெடுத்த நீர்...

நன்றியுடன்
ஆதவன்

ஆதவா
08-07-2008, 09:53 AM
ஆதவர் நிசப்தமாய்
அருட்கதிர் அனுப்பி
எம் விழி திறப்பார்
சுத்த வெளி நிசப்தமே
அவர் சுடரொளிச் சொற்களை
வாழ்த்தி வணங்க
பித்த மன உன்மத்தர்
யாமெலாம்
ஆதவ அருட்சித்தர் முன்
எம்மாத்திரம்!
ஆ! தவர்! என்று
ஞாலமே போற்றி வணங்கும்
மா தவர் அவர் முன்
நாகம் நா அடங்கி
நிற்கும் நிசப்தமாய்.


மிக்க நன்றி நாகரா... உங்கள் வாழ்த்தின்படி அமைய எனக்கும் ஆனந்தமே!!

இளசு
15-07-2008, 07:37 PM
எங்கெங்கோ தேடித்தேடி
உன்னில் என்னை நான் கண்டேன் -

மேலாக பாடிச்செல்லும் காதல் பாட்டு இது..



இன்னொன்று கொஞ்சம் ஆழமானது _ எழுதியவர் ஆனந்த்

'இருந்த இடத்தில்' .

"இருந்த இடத்தில்

இருந்தபடியே

நீ இரு

நான் வருவேன்

உன் கால்களை வருடிச் செல்லும்

நீரெல்லாம் கழிந்தபின்னே"

கவிதை சொல்கிறது - ''கவிஞனே! நீ வார்த்தைகளைத் தேடிக்கொண்டே இரு. கடைசியில் வார்த்தைகளின் வெறுமையை நீ உணர்வாய். அப்போது நீ கவிதையை அதாவது என்னைக் காண்பாய்!"

-----------------------

தேடலில்தான் எத்தனை ரகம்..

இங்கே .ஆதவன் தேடுவது நான் என்றதைத் தாண்டி..
வார்த்தைகளைக் கடந்து..
ஒலிகளும் அற்ற ஒரு பிரதேசம்..?

கிடைத்ததா?
கிடைத்ததுதான் தேடியபோது நினைத்ததா?

யோசிக்க வைக்கிறாய் ஆதவா..
பாராட்டுகள்..


நாகரா, ஷீ - பின்னூட்டங்கள் அருமை!

அக்னி
24-11-2010, 11:09 AM
அசைவு இருந்தால் நிசப்தம் இருக்காது...

நிசப்தம எங்கே...???
எப்படியிருக்கும் நிசப்தம்...???
நிசப்தம் தேடும்
எண்ணத்தின் அசைவும்
நிசப்தத்தைக் கலைத்துவிட்டிருக்குமோ...

முற்றும் துறந்தவன் என்று யாருமில்லை,
அவன் துறவையும் துறக்காதவரை...

ஆசையை வென்றவன் என்று யாருமில்லை,
அவன் ஆசையை வெல்லும் ஆசையை வெல்லாதவரை...

அதுபோலத்தான்,
நிசப்தம் தேடும் நிலையும்...


நிசப்தத்தின் சூக்குமம் தேடி
தாயின் கருவறையினுள்
மீண்டும் சென்றதில்
அன்று உதைத்த ஒலி
எதிரொலித்ததில் நிசப்தம் தொலைந்தது

இந்த வரிகள் கற்பனையின் அதியுச்சம்...
பாராட்டு ஆதவாவுக்கு, விசேஷமாக இவ்வரிகளுக்கு...

நிசப்தம் வர சப்தமும் வருகின்றதே,
எப்படி வரும் நிசப்தம்...???

கீதம்
24-11-2010, 09:53 PM
சப்தத்தின் அதிர்வில்
நடுங்கி ஒடுங்கியது நிசப்தம்!
அட, முரணாய் இங்கே
நிசப்தம் தனக்குள்
ஒடுக்கியது சப்தம்!
நிசப்தம்!

அக்னி அவர்கள் குறிப்பிட்ட வரிகள் என்னையும் கவர்ந்தன.
தாய்மையும் எதிரொலிக்கக் கண்டேன் அவ்வரிகளில்!

பாராட்டுகள் ஆதவா.

கீதம்
24-11-2010, 09:57 PM
முற்றும் துறந்தவன் என்று யாருமில்லை,
அவன் துறவையும் துறக்காதவரை...

ஆசையை வென்றவன் என்று யாருமில்லை,
அவன் ஆசையை வெல்லும் ஆசையை வெல்லாதவரை...



ஆழ்மனம் ஊடுருவிய அற்புத வரிகள்.
பாராட்டுகள் அக்னி அவர்களே.

ஆன்டனி ஜானி
25-11-2010, 03:42 AM
காயபட்ட மனதை நேசி
நேசித்தமனதை
காயபடுத்தாதே ...

..............................
கவிதைகள் ரெம்ப நல்லா இருக்கு வார்த்தைகள்,வரிகள் ஒன்ற்ன்ரும் சரியாக கவிதைகளால் அமைத்து இருக்கு