PDA

View Full Version : சாபம் தா



shibly591
07-07-2008, 09:06 AM
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........

ஆதவா
07-07-2008, 09:09 AM
நமக்கு தரிசனம் போதுங்க..

நல்லா இருக்குங்க.

அகத்தியன்
07-07-2008, 09:25 AM
சாபம் தர தேவதைகள் தேவையில்லை நண்பரே.
சாத்தான்கள் போதும்.

தேவதைகள் வரம் மட்டுமே தரும்.

அதை சாபமாக்குவதும், வரமாக்குவதும், பக்தனின் கையில்தான் உண்டு.

என்ன நண்பரே?
சௌக்கியமா? எப்படி போகின்றது வாழ்க்கை?
இப்பொதும் சம்மாந்துறை பக்கம் மழை பெய்கின்றதா என்ன? :icon_b::icon_b::icon_b:

shibly591
07-07-2008, 10:42 AM
வாருங்கள் நண்பரே..உப்படி போகிறது வாழ்க்கை?எங்களை நினைவிருப்பது கண்டு மகிழ்ச்சியே...சம்மாந்துறையா?மழையா?வரண்டு போய்விட்டது

அகத்தியன்
07-07-2008, 10:54 AM
உங்களை மறக்கலாமா?

உங்கள் வளாகம் என்ன சொல்கிறது?

நீங்கள்தான் மறந்தது போல ஒரு பிரமை.

மழை இல்லாததால்தான் நீங்கள் கவிதை யால் வாய்க்கால் வெட்டுகின்றீர்களோ?

shibly591
07-07-2008, 10:58 AM
வளாக வாழ்வு இந்த 25ம் திகதியுடன் உடன் முடிகிறது....சம்மாந்துறை என்றாலே வரட்சிதானே...வாய்க்கால் வெட்ட அங்கே வாய்ப்பேயில்லை.றிஸ்வானின் அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது அகத்தியன்..(வேறு ஒருவருடன்)

ஓவியன்
07-07-2008, 11:07 AM
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........

பாவம் இந்தக் காளை
சாபம் தந்து விட்டுப் போ
இன்னும் ஆயிரமாயிரம்
கவிதைகள் எழுதக் கடவென... :aetsch013:

அகத்தியன்
07-07-2008, 11:12 AM
றிஸ்வானின் அவளுக்கு திருமணம் முடிந்துவிட்டது அகத்தியன்..(வேறு ஒருவருடன்)

:traurig001::traurig001:

உண்மையில் வலிக்கிறது நண்பரே.

எல்லாம் முடிந்த பின் ஓர் மழைநாளில் அவனை சந்தித்தேன்.
காதல் என்ன பருவம் என்று கேட்டதற்கு, காலம் சொல்லும் என்றான்.

ஊமைக்காதல் ஒன்றுக்கும் உதவாது.

அவ்வூர் மண்ணில் எத்தனை பேரின் கண்ணீர்?

aren
07-07-2008, 11:13 AM
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........

அந்த சாபம் நான் கேட்க நினைத்த வரத்தைவிட சிறப்பாக இருக்கட்டும்.

அகத்தியன்
07-07-2008, 11:22 AM
அந்த சாபம் நான் கேட்க நினைத்த வரத்தைவிட சிறப்பாக இருக்கட்டும்.

இது கவித

அருமை நண்பரே

இளசு
07-07-2008, 04:51 PM
நிராகரிப்பு - உதாசீனத்தைவிட மேல்..
எதிர்மறையாகவாவது ஓர் அங்கீகாரம் என்பதால்..


பாராட்டுகள் ஷிப்லி!

அக்னி
08-07-2008, 08:25 AM
தவமிருக்கிறேன்
வரம் தரத்தேவையில்லை
தேவதையே...
சாபமாவது தந்துவிட்டுப்போ........
சாபமும் தர வராவிட்டால்,
சாவையேனும் தர, வந்துவிட்டுப் போ...

ரசித்தேன்... பாராட்டுக்கள்...

shibly591
08-07-2008, 08:54 AM
விமர்சனங்களுக்கு நன்றிகள்..கவிதையை படித்துவிட்டு பாராட்டிய வாழ்த்துக்கள் அத்தனையும் எனக்கு வரம்தான்...