PDA

View Full Version : அர்த்தமிழந்த நம்பிக்கைகள்சிவா.ஜி
06-07-2008, 05:09 AM
செய்தி: சுழலும் அடுக்குமாடி வீடுகள். விரைவில் துபாயில் அமைக்கப்படவுள்ளன.

படம்
http://www.imagehosting.com/out.php/i1820370_Rotatingtower.bmp

இனி கதை


"அடடே வாங்க மாமா...அத்தை, பசங்க எல்லாம் நல்லாருக்காங்களா?"

"எல்லாரும் நல்லாருக்காங்க விஷ்வா. நீ புதுசா அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கியாமே...?"

"ஆமா மாமா."

"வெரிகுட். ஆனா அபார்ட்மெண்ட்டா இருந்தாலும் வாஸ்து சரியா இருக்கனும். என்ன நான் சொல்றது?...வாசல் வடக்குப் பாத்துதானே இருக்கு..ஏன்னா உன் ராசிக்கு வடக்குதான் நல்லது"

"இல்ல மாமா"

"அப்ப கிழக்கா...அதுகூட பரவால்ல.."

"அதுவும் இல்ல மாமா"

"அடடா...மேற்குன்னா நிலை வாசலை வடக்கு ஓரமால்ல வெக்கனும்"

"அதுவும் இல்ல மாமா"

"அப்போ தெற்கா...ஆகாதே....சரி இருந்தாலும் பரிகாரத்துக்கு ஒரு கணபதியை வெச்சுடு"

"அதுவும் இல்ல மாமா"

"என்னடா குழப்புற..? எந்த திசையும் இல்லன்னா..எப்படிடா இது?"

"எந்த திசையும் இல்லன்னு சொல்லல மாமா...எல்லா திசையும்தான்னு சொல்றேன்"

"இப்ப இன்னும் அதிகமா குழப்புற..."

"இதுல குழப்பமே இல்லை. நான் வாங்கியிருக்கிற அபார்ட்மெண்ட் சதா சுழன்றுகிட்டே இருக்கும். வாசல் திசை மாறிக்கிட்டே இருக்கும். இந்த நிலைமையில் எப்படி வாஸ்து பாக்கறது மாமா...?"

மாமா தலை சுழலத் தொடங்கிவிட்டது.

ஓவியன்
06-07-2008, 05:35 AM
என் பணி காரணமாக துபாயில் வானுயுரம் சில கட்டங்களின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபடுவதுண்டு, அப்போது துபாய் டவர்ஸ் என்றொரு திட்டத்தில் பணியாற்றியிருந்தோம், மனிதனின் முதுகெலும்பின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவிருந்த அந்தக் கட்டடங்களின் வடிவம் ஆர்வமூட்டுவதாக இருந்தது, இது சாத்தியமா என சிந்திக்க வைத்தது. ஆனால் இப்போது, அதனிலும் அசாத்தியமான வடிவத்தில் இந்த சுழலும் கட்டடம்....!!
_______________________________________________________________________________________________________________________

இப்போது சிவாவின் கதைக்கு வருவோம், ஏற்கனவே அடுக்குத் தொடர்மாடிகளால் வாஸ்து நம்பிக்கைகள் அர்த்தமிழந்து போய்க் கொண்டுதானே இருக்கின்றன. என்ன இப்போது ஒரேயடியாக அர்த்தமிழக்கும் நிலை...\

எப்படி சிவா, ஒரு சின்னக் கருவையும், எப்படி ஒரு தீப்பொறியாக்கி ஒரு படைப்பாக்கி வியக்க வைக்கிறீர்கள்...?
வியப்புக்கள் தொடரட்டும்,
விழி விரிக்க நானும் காத்திருக்கின்றேன்.

மதி
06-07-2008, 05:35 AM
ஹாஹா..சூப்பருங்கோ...
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு புத்தகத்தில் இந்த சுழலும் குடியிருப்பை பத்தி போட்டிருந்தாங்க. எப்படி கட்டப் போறாங்க...? அதற்கான சிக்கல்கள் என்னன்ன..? அதை எப்படியெல்லாம் மாற்றப்போறாங்கன்னு.. அத வச்சே எங்க கம்பெனி மொக்க கேங்க்.. ஒரு நாள் முழுக்க பேசினோம்.

இப்போ உங்க கதையலேயும்.. சூப்பர். அப்படியே தம்பிக்கு அதுல ப்ளாட் புக் பண்ணினீங்கன்னா..நல்லாருக்கும்.

ஓவியன்
06-07-2008, 05:37 AM
அப்படியே தம்பிக்கு அதுல ப்ளாட் புக் பண்ணினீங்கன்னா..நல்லாருக்கும்.

சிவா அண்ணாவோட தம்பிக்குத் தானே, பண்ணிட்டாப் போச்சு..!! :D:D:D

மதி
06-07-2008, 05:40 AM
சிவா அண்ணாவோட தம்பிக்குத் தானே, பண்ணிட்டாப் போச்சு..!! :D:D:D

உங்களுக்குமா சேர்த்து கேட்டுடறேன்.. சிவாண்ணா.. உங்க தம்பிங்க எல்லோருக்கும் அங்க ஒரு ப்ளாட் புக் பண்ணிடுங்களேன்.

சிவா.ஜி
06-07-2008, 05:43 AM
எனக்கு தம்பிங்களே இந்த மன்றத்துல மட்டும்தானே...அப்ப எல்லாருக்கும் ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட வேண்டியதுதான்.

சுகந்தா...அன்பு...ஏற்பாடு பண்ணுங்கப்பா.

பூமகள்
06-07-2008, 06:05 AM
சுழலும் கட்டிடமா??!!:eek::eek:

அச்சச்சோ...:icon_shok::icon_shok: எனக்கு இப்பவே கிறுகிறுன்னு வருதே...!!:icon_wacko::icon_wacko:

புதுச் செய்தியை கதையாக்கும் வன்மை அசர வைக்கிறது... இது சிவா அண்ணாவுக்கே உரிய தனிச்சிறப்பு..!!:icon_good::aktion033:

தம்பிகளுக்கு மட்டும் தானா ப்ளாட்?? :ohmy::huh:

தங்கைக்கு சீதனமா ஒரு ப்ளாட் கொடுப்பீங்க தானே சிவா அண்ணா??:icon_ush::sport-smiley-018:

(ஒரு பில்டிங்கே கேட்காமல் ஒரு ப்ளாட் மட்டும் கேட்கும்:medium-smiley-025:)
அப்பாவித் தங்கை,:sport-smiley-018::innocent0002:

சிவா.ஜி
06-07-2008, 12:46 PM
ஆஹா...தங்கைகளை மறக்க முடியுமா? எல்லாத்துக்கும் புக் பண்ணச் சொல்லிட்டேன். எந்த ஃப்ளோர் வேணுங்கறதை மட்டும் சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு பண்ணிக்கோங்கோ...

ஓவியன் சொன்னதைப் போல அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே அரை உயிர் போய்விட்ட வாஸ்து பூதத்தின் ஆட்டம் இந்தமாதிரி தொழில்நுட்பங்களால் முழுதாக முடிவுக்கு கொண்டுவரப்படும்.

சுழலும் குடியிருப்பு என்றதுமே எனக்கு வாசல் எந்தப்பக்கம் என்றுதான் நினைக்கத்தோன்றியது. அதன் விளைவு இந்த வரிகள். ச்சும்மா....

இளசு
06-07-2008, 01:57 PM
அமெரிக்காவில் இருந்தால் எந்த மணியில் இராகுகாலம்?
இந்திய நேரமா? அங்குள்ள பிராந்திய நேரங்களில் ஒன்றா?


வடதுருவத்தில் இருந்தால் எந்தப்பக்கம் சூலம்?

ஒளிவளையல்கள் அணிந்த சனிக்கிரகம்
என்னைப்பார்த்தால் எனக்கு துன்பமா?
தொலைநோக்கி மூலம் நான் சனியைப் பார்த்தாலும் வருமா?


நிலவு இன்னும் ஆணா?
ரேவதி உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திரங்கள்
இருபத்து ஏழும் அதற்கு மனைவியரா?

ஒரு எறும்புக்கு இத்தனை யானைகள் துணைவியரா?

அறிவியலால் மாற்றிவிட இயலா
மனமுடிச்சு சம்பிரதாயசாஸ்திரம்!

அதிகாலை ஆறுமணிக்கு தெரியும் திசையே
அத்தனை வாஸ்துவுக்கும் ஆதார திசை..
சில பல பரிகாரங்கள் உண்டு!
பல ஆயிரம் வாஸ்து கன்ஸல்டண்ட் ஃபீஸும் உண்டு!

---------------------------

புதுக் குடியிருப்புக்கு வாழ்த்துகள் சிவா!

சிவா.ஜி
06-07-2008, 02:05 PM
சில பல பரிகாரங்கள் உண்டு!
பல ஆயிரம் வாஸ்து கன்ஸல்டண்ட் ஃபீஸும் உண்டு!


பதில் சொல்ல முடியா கேள்விகள். புத்தியை தெளிவாக்கும் மருந்து வார்த்தைகளின் பிரிஸ்கிரிப்ஷன். இவைகளை உட்கொண்டால் குழப்பமின்றி வாழலாம். அருமை இளசு.

கடைசி இரண்டு வரிகள் சூப்பர். நிதர்சனமான உண்மை. நன்றி இளசு. உங்களிடம் அனைத்துக்கும் பரிகாரம் இருக்கிறது கன்ஸல்டண்ட் ஃபீஸ் இல்லாமலேயே.

கண்மணி
06-07-2008, 02:34 PM
சுழலும் வீட்டில் வாஸ்துதானே! அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விடலாமே,

சமையல் அறை தென் கிழக்கில் வரும்போது மட்டும் எரியும் அடுப்புகள்..
பூஜை அறை வடகிழக்கில் வரும்பொழுது மட்டுமே ஒலிக்கும் பூஜைமணி ஒலி..

வீடு சுற்றும் வேகத்திற்கு எதிர்த் திசையில் சுழலும் படுக்கை..

நிறைய மேட்டர் இருக்குதே..!!!

ஒவ்வொரு பிரச்சனையிலும் புதுப்புது வாய்ப்புகள்.. இல்லையா சிவாஜியண்ணா!...

சிவா.ஜி
06-07-2008, 02:47 PM
கண்மணி...இந்த ஐடியாவை அப்படியே வெச்சுக்குங்க. நம்ம ஊருக்கு இந்தமாதிரி கட்டிடம் வரும்போது பிழைப்பு போன வாஸ்து நிபுனர்களுக்கு ரொம்ப உதவும்.

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா.....அசத்தல்!:icon_b:

mukilan
06-07-2008, 03:00 PM
நான் சுழலும் உணவகத்திற்குச் சென்று உண்டிருக்கிறேன். சுழல்வதே தெரியாமல் மெல்லியதாய்ச் சுழலும். சுழலும் வீடா! அருமை! அருமை!! ஒரு செய்தியை கதையாக்கி, இப்படி சுழலும் வீடுகள் வந்தால் வாஸ்து எப்படி சுழலும் என்ற கற்பனை விவாதம் மிக அருமை அண்ணா! வீட்டினர் தவிர்த்த மற்ற வீட்டுக் குழந்தைகளுக்கு வீடே காட்சிப் பொருளாகி விடும். இப்படியான மூட நம்பிக்கைகள் அர்த்தமிழந்து போகட்டும்.

சிவா.ஜி
07-07-2008, 04:17 AM
சுழலும் ஹோட்டலை நான் பார்த்ததோடு சரி அதனுள் போனதில்லை.
நீங்கள் சொன்னதைப் போல அந்த வீடே ஒரு காட்சிப்பொருளாகிவிடும். மதியின் மொக்கை டீமைப் போலவே இங்கே நாங்களும் இதன் சாத்தியங்களைப் பற்றி நிறைய மொக்கைப் போட்டோம். வீட்டு உரிமையாளர்கள், அவரவர் வாகனங்களை தங்கள் வீட்டூக்குள்லேயே வைத்துக்கொள்ளுமாறு லிஃப்ட் பொருத்தப்பட்டுள்ளது. பார்க்க நன்றாக இருக்கிறது...ஆனால் எந்தளவு சாத்தியம் என்பதைப் பார்க்க வேண்டும்.

வாஸ்து ஆட்கள் பேஸ்து அடித்து நிற்கவேண்டும்.

நன்றி முகிலன்.

கண்மணி
07-07-2008, 04:32 AM
சுற்றும் வீடு ஒரு பில்லரைச் சுற்றிக் கட்டப் படுகிறது..நீர் வசதியை (குடி நீர், கழிவு நீர்)எப்படிச் செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். வீடு சுழல்வதால் கான்செண்ட்ரிக் சர்க்கிள் (ஒரே மையப் புள்ளியைக் கொண்ட வட்டங்கள் ) அமைப்பில் தான் இருந்தாக வேண்டும் இல்லையா?

சிவா.ஜி
07-07-2008, 04:53 AM
ஆமாம் கண்மணி. அதை Core Wall என்று சொல்கிறார்கள். ஆனால் தண்ணீர் இணைப்பு எப்படி சுழலும் என்பது புரியவில்லை.

கண்மணி
07-07-2008, 05:00 AM
அதில் கடினமொன்றுமில்லை. சிந்தித்துப் பார்த்தால் எளிதாகத்தான் இருக்கிறது..

lolluvathiyar
09-07-2008, 08:22 AM
சுழலும் கட்டிடமாக இருந்தாலும் நம்ம ஆளுக ஹைடெக் வாஸ்த்து அமைச்சுக்குவாங்க அதாவது வீட்டு வாசலில் ஒரு எல்சிடி மாட்டி வச்சுக்குவாங்க தெற்க்கு பக்கம் வாசல் சுத்துச்சுனா பிள்ளையார் வர்ரமாதியும் மற்ற பக்கம் போச்சுன்னா அதுக்கேத்த மாதிரி வச்சுக்குவாங்க எல்லாம் ஹைடெக் வாஸ்து கமர்சியல் வேலை செய்யும்

MURALINITHISH
19-08-2008, 08:43 AM
எப்படி வீடு கட்டினாலும் அதிலும் வாஸ்து பார்க்க ஒரு வழி செய்துவிடுவார்கள்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
19-08-2008, 01:18 PM
வாஸ்து மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்பது பலரும் அறிந்த விஷயம். சுழலும் வீடுகளில் வாஸ்து திசைகளை தொலைத்து விட்டு, அண்ணார்ந்து வானத்தை பார்க்கும் நிலை வந்தாலும் வரலாம். இனி வானம் பார்த்து வாஸ்து பார்க்கும் மனிதர்கள் அறிமுகமாவார்கள்.

மன்மதன்
19-08-2008, 01:28 PM
துபாயில் எல்லாமே சாத்தியமாகிறது போல..

எனக்கு தெரிந்து 'ஹயாத்' ஹோட்டல் மட்டுமே இப்படி இருப்பதாக தெரிகிறது..

இப்பொழுது வீடுகளும்..??

எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம்..