PDA

View Full Version : விளைவு..!



பூமகள்
05-07-2008, 06:17 PM
http://img26.picoodle.com/img/img26/4/7/5/poomagal/f_jumpingtoskm_862709e.jpg

விளைவு..!


நெரிசல் இடுக்கில்
நழுவியபடி..
வாழ்க்கை..!

நகர்ந்தேன்..
விரட்டியது..!

குமைந்தேன்..
பேருருவமாகி
பயங்காட்டியது..!

எழுந்தேன்..
வியந்தது..

விழித்தேன்..
விலகியது..!

அறிந்தேன்..!
அலறியது..!

அறிவித்தேன்..!
தெறிக்க ஓடியது..

நிமிர்ந்தேன்..!

வானம்
வசமாகியது..!
வாழ்வு
சுகமாகியது..!

குறிப்பு: (இருவேறு கோணங்கள்..:icon_rollout:)

ஓவியன்
06-07-2008, 01:52 AM
நகர்ந்தேன்..
விரட்டியது..!

குமைந்தேன்..
பேருவமாகி
பயங்காட்டியது..!

எழுந்தேன்..
வியந்தது..

விழித்தேன்..
விலகியது..!

அறிந்தேன்..!
அலறியது..!

அறிவித்தேன்..!
தெறிக்க ஓடியது..

நிமிர்ந்தேன்..!

நான் சிறுவனாக இருந்த போது, நம்ம வீட்டுக்கு எதிரிலே ஒரு அல்ஷேசன் நாய் படுத்திருக்கும், பக்கத்திலே போனால் உர் என்று உறுமும்....
பயந்து ஓடினால், விட்டுத் துரத்தும்....
ஓடி விட்டு நின்று அதனைப் பார்த்து முறைத்தால் அதுவும் நிற்கும்...
நாம், அதனை நோக்கி முன்னேறினால், அது பின்வாங்கி ஓடும்....!!

பூமகள், வாழ்க்கையின் பல விடயங்கள் இப்படித்தான்...
பயந்து ஓடினால், ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.

எழுந்து நின்றால் வானமே வசப்படும்...
உங்கள் கவிதை போல, தேனாக இனிக்கும்...!! :icon_b:

பாலகன்
06-07-2008, 02:22 AM
புலிக்கு வாலாய் இருப்பதை விட
எலிக்க தலையாய் இருப்பதே மேல்,,,,

முயன்றால் முடியாதது ஒன்று உண்டோ

வாழ்த்துக்கள் நண்பியே

அன்புடன்
பில்லா

ஓவியன்
06-07-2008, 04:25 AM
புலிக்கு வாலாய் இருப்பதை விட
எலிக்க தலையாய் இருப்பதே மேல்,,,,

எலிக்கு வாலாக இருப்பதிலும்
புலிக்கு வாலாய் இருப்பதே மேல்...!!

எலிக்குத் தலையாக இருப்பதிலும்
புலிக்குத் தலையாக இருப்பதே மேல்...!!

:D:D:D

சிவா.ஜி
06-07-2008, 04:47 AM
விழுந்தவனைப் பார்த்து எழுந்து நிற்கும் உலகம், எழுந்தவனைப் பார்த்ததும் விழுந்துவிடுகிறது அவனது காலடியில்.

விழித்துப் பார்த்ததிலேயே விலகி ஓடிய உலகம், அறிவித்ததும் தெறித்தது.
இது உறுதிக்கு கிடைத்த வெற்றி.

இதே உறுதி வாழ்வை முடித்துக்கொள்வதிலும் ஏற்படும்போது..வாழ்க்கை தோற்கிறது. அப்போதும் வானம் வசப்படுகிறது. உருவத்துக்கல்ல...ஆன்மா இழந்த அருவத்துக்கு.

வார்த்தை அமைப்புகளால் எங்களை வசப்படுத்திவிட்டாய் தங்கையே. பாராட்டுகள்.

இளசு
06-07-2008, 07:10 AM
நிழல்..
இருளால் ஆனது
கரியது..
அதை மதித்து அதையே பார்க்கும்வரை அது இருக்கும்..

அதை மிதித்து உச்சிவான் நோக்கினால்
நிழல் இருந்தாலும் , அது இல்லை!


சில பிரசினைகள் -
மனதில் முன்னுரிமை கொடுக்கும் வரை
பார மலை!
உதறி எழுந்து வேறு களப்பணியில் மூழ்கிவிட்டால்
மலை இருக்கும்... பாரமிருக்காது!

எத்தனை கோணம் என்றாலும்
ஆக்க விளைவுகள் என்றால்
என் ஆதரவு எப்போதும் இருக்கும்!


வாழ்த்துகள் பாமகளே!

படமும், வரிவடிவமும் அழகோ அழகு!

பூமகள்
06-07-2008, 07:17 AM
இருளுக்கும்..
வெளிச்சத்துக்குமான
போராட்டம்...!!

உலகம்
உய்த்தலுக்கும்..
காரணமாகிறது...
வாழ்க்கை
அர்த்தமாகவும்..!!

சில நெருக்கடிகள்..
நம்மை
நிமிர்த்துகின்றன..

சில படிப்பினைகள்..
நம்மை..
நாமறியச் செய்கின்றன..

உங்களின் அலசல் கண்டு பேருவகை பெரியண்ணா...:icon_rollout::)

சிலர் பதிவுகள்..
நம் உடம்புக்கு..
சத்து நீர்...

தெம்பாகியது..
மலரும் இனி
மனம்..!

நன்றிகள் பகர்ந்து நிற்கிறேன் உங்களின் முன்னே....!!:icon_rollout:

மன்மதன்
06-07-2008, 11:28 AM
ஒவ்வொரு நாள் விடியும் போதும் வாழ்க்கை எதாவது ஒரு ஆச்சரியத்தை பொத்தி வச்சிருக்கும்.. பயப்படாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும்..

கவிதைக்கு பாராட்டுகள் பூ.

நாகரா
06-07-2008, 01:22 PM
பேருவமா
அல்லது
பேயுருவமா

வளைந்து சுருண்டு
படுத்துக் கிடந்த
நான்
உம் விளைவு
மகுடிக் கவிதை நாதத்தில்
மயங்கி விழித்து
எழுந்தாடுகிறேன்

என் பாதம் வரை
பரவிய
உம் நாத ஜோதியின்
விளைவாய்
உயிர்ப்புள்ள சிலுவையாய்ப்
படமெடுத்து நிற்கிறேன்

இரு வேறு கோணங்கள் என்னில்

உச்சி முதல் பாதம் வரை நிற்கும்
என் செங்குத்துக் கோணம்
கிறிஸ்துவின் சத்தியம்
என்னில் பரவியதன்
விளைவு

இருதயத்தின்
இரு பக்கங்களிலும்
ஒருங்கே பரவிய
என் நேசக் கரங்களின்
பக்கவாட்டுக் கோணம்
என் வழியே
கிறிஸ்துவின் நித்திய ஜீவன்
உலகில் பரவியதன்
விளைவு

செங்குத்தும் பக்கவாட்டும்
ஒன்றும் என் இருதய வாய்(Thymus-The Mystic or Higher Heart-Secret Place of the Most High God)
முழங்கும் பேருபதேசம்
"இரு தயவாய்"
அம்மையப்பனாம்
பரமபிதா-பரிசுத்த ஆவியின்
நாத-விந்து விளைவு

பூமகளே!
படத்திலும் எழுத்திலும்
வரியிலும் ஒலியிலும்
அடைகளில் மறைந்த குறிப்பிலும்
என் விசுவரூப தரிசனத்தை
விளைவித்த வித்தகியே!
நீர் யாரோ!
சித்தர்கள் சொல்லும்
வாலையெனும் ஞானப் பெண்ணாய்
பூவுலகில் பூத்திருக்கும்
பூமகளோ!

தளைகளில் கட்டுண்டு விழுந்த மனிதம்
தளைகளைத் தகர்த்து எழுந்து
வானம் வசப்படும்
சுக வாழ்வு காணும்
இயேசு பிரான் போதித்த
மனந்திரும்புதலை
விளைவெனும்
உம் அருங்கவியில்
வளைத்துப் பிடித்த
உம் நேர்த்திக்குத்
தலை வணங்குகிறேன்,
வாழ்க நீவிர்!
உம் ஞான போதியின் நிழலில்
எம்மை வளர்ப்பீர் நீவிர்!

நன்றி பல உமக்கே!

பூமகள்
06-07-2008, 04:49 PM
வாழ்க்கையின் பல விடயங்கள் இப்படித்தான்...
பயந்து ஓடினால், ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.
எழுந்து நின்றால் வானமே வசப்படும்...
உங்கள் கவிதை போல, தேனாக இனிக்கும்...!! :icon_b:
தேனென முடித்திருப்பதை சுட்டிக் காட்டி
அமுது ததும்பும் கருத்து பதிந்தமைக்கு நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

முயன்றால் முடியாதது ஒன்று உண்டோ
வாழ்த்துக்கள் நண்பியே
முடியாததும் உழைத்தால்(முடியா = முடிய்+ஆ எடுத்துட்டு.. உகரத்தைச் சேர்த்து முடிய்+உ=முடியு) முடியுமே...!!
ரொம்ப நன்றிகள் சகோதரர் பில்லா...!

பூமகள்
06-07-2008, 04:58 PM
விழுந்தவனைப் பார்த்து எழுந்து நிற்கும் உலகம், எழுந்தவனைப் பார்த்ததும் விழுந்துவிடுகிறது அவனது காலடியில்.
வார்த்தை அமைப்புகளால் எங்களை வசப்படுத்திவிட்டாய் தங்கையே. பாராட்டுகள்.
ரொம்ப அழகான கருத்து சிவா அண்ணா..!!
மனம் நெகிழ்கிறது..!!


ஆனால்.. இன்னும் அந்த இரண்டாவது கோணத்தை யாருமே கண்டுபிடிக்கவில்லை போல உள்ளதே...!!:icon_ush::rolleyes:


அமரன் அண்ணா... அக்னி அண்ணா... அப்புறம்.. அல்லிராணி.. கண்மணி அக்கா.. எல்லாரும் ஓடியாங்கோ...!!:icon_ush:

ஒவ்வொரு நாள் விடியும் போதும் வாழ்க்கை எதாவது ஒரு ஆச்சரியத்தை பொத்தி வச்சிருக்கும்.. பயப்படாமல் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும்..
உண்மை தான் மதன் அண்ணா..!!

எத்தனை பெரிய விசயத்தை எத்தனை ஈசியா சொல்லிட்டீங்க...??!!
கிரேட்...!!:icon_rollout::icon_b:


உங்க கருத்தை அப்படியே மனதில் பதிவாக்கிவிடுகிறேன்..!! :rolleyes::aetsch013:(தேவைப்படுகையில்.. சொல்லி காலரைத் தூக்கிவிட்டுப்போமே...!!:D:D)


பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் மதன் ஜி. :)

பூமகள்
06-07-2008, 05:16 PM
வாழ்க நீவிர்!
உம் ஞான போதியின் நிழலில்
எம்மை வளர்ப்பீர் நீவிர்!
நன்றி பல உமக்கே!
உங்களின் பல மெய்ஞான பதில்கள்..
இக்குழந்தைக்கு புரியாமலே...!:icon_ush::confused:

ஆயினும்.. உங்களை உங்கள் வழியே சிந்திக்க வைத்திருக்கிறது இக்கவிதை என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றிகள் கோடி. :)

பாலகன்
06-07-2008, 05:20 PM
கைகளை விரித்தேன் சிறகுகள் போல
வசப்பட்டது வானம்
என் பாதங்கள் எட்டியது ஞாயிறை,,,,

அன்புடன்
பில்லா

நாகரா
06-07-2008, 06:24 PM
உங்களின் பல மெய்ஞான பதில்கள்..
இக்குழந்தைக்கு புரியாமலே...!:icon_ush::confused:

ஆயினும்.. உங்களை உங்கள் வழியே சிந்திக்க வைத்திருக்கிறது இக்கவிதை என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

உங்களின் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றிகள் கோடி. :)

குழந்தையைப் போல் வெள்ளை உள்ளத்துடன் இருப்பீர், பரலோக ராஜ்ஜியமும், மெய்ஞ்ஞானமும் உமக்கு வசப்படும்.

பேருவம் என்றால் என்ன?
அது பேயுருவம் என்றால் பிழை திருத்துவீர், பேருவம் சரியென்றால் அதன் பொருள் சொல்லுவீர்!

நன்றி தங்காய்.

நாகரா
06-07-2008, 06:31 PM
கைகளை விரித்தேன் சிறகுகள் போல
வசப்பட்டது வானம்
என் பாதங்கள் எட்டியது ஞாயிறை,,,,

அன்புடன்
பில்லா

விளைவின் சாரந்தந்த
வல்லான் பில்லாவே
வாழ்த்துக்கள்

படம் சொல்வதை
வரிகளில் பிடித்த
உம் கவிநயம் அருமை
கடைசி வரி
விளைவின் மகுடம்
பாராட்டுகள்

நாகரா
06-07-2008, 06:38 PM
எலிக்கு வாலாக இருப்பதிலும்
புலிக்கு வாலாய் இருப்பதே மேல்...!!

எலிக்குத் தலையாக இருப்பதிலும்
புலிக்குத் தலையாக இருப்பதே மேல்...!!

:D:D:D
புலிக்குத் தலையாக இருப்பதிலும்
மனிதத் தலையாக இருப்பதே மேல்...!!!

மனிதத் தலையாக இருப்பதிலும்
கடவுளின் இருதயமாக இருப்பதே மேல்...!!!

பாலகன்
06-07-2008, 06:52 PM
மனிதத் தலையாக இருப்பதிலும்
கடவுளின் இருதயமாக இருப்பதே மேல்...!!!

கடவுளின் இதயம்
சிலவேளைகளில் கல்லாய்
இருப்பதால்.......

மனிதனாய் இருப்பதே மேல்

அன்புடன்
பில்லா

நாகரா
06-07-2008, 07:04 PM
கடவுளின் இதயம்
சிலவேளைகளில் கல்லாய்
இருப்பதால்.......

மனிதனாய் இருப்பதே மேல்

அன்புடன்
பில்லா

கடவுள் ஏன் கல்லானார்?
மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே!

கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளை
மறந்து போனீரோ பில்லா!

நன்றி

நாகரா
06-07-2008, 07:41 PM
உங்களின் பல மெய்ஞான பதில்கள்..
இக்குழந்தைக்கு புரியாமலே...!:icon_ush::confused:


குழந்தையே!
உனக்கு இரண்டு கோணங்கள் உண்டு
அதாவது இரண்டு முக்கிய பரிமாணங்கள்(Two Main Dimensions)
முதலாவது தெய்வீகம்
அதுவே உன் முதல் ஆவது
அடுத்தாவது மனிதம்
அதுவே முதலை அடுத்து ஆவது
தெய்வீகம் மேலிருந்து வாங்குவது
எதை?
சிவமாம் அன்பை(சிலுவையின் செங்குத்துப் பாகம்-Vertical Axis)
மனிதம் மேலிருந்து வாங்கியதைக்(சிவமாம் அன்பை)
கீழிருந்து கொண்டே(அதாவது புனித மண்ணாம் அன்னை பூமியில் இருந்து கொண்டே)
பாரபட்சமின்றி அனைவர்க்கும்(உலக உயிர்த்திரள் அனைத்துக்கும்) பகிர்வது(சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்-Horizontal Axis)
உன் படத்தில் பகிரங்கமாய்த் தெரியும் உண்மையின் விளைவே இந்த விளக்கம்
இதுவே
"1. கடவுளை நேசி
2. உன் அண்டை வீட்டானையும் உன்னைப் போல் நேசி" (அவன் எதிரியாகவே உன் மயங்கிய மனத்துக்குத் தெரிந்தாலும்)
என்ற இயேசு நாதரின் உபதேச சாரம்
1. தெய்வீகம்
2. மனிதம்
(இந்த இரண்டுமில்லை என்றால் நீ யார்?
நடமாடும் பிணமே-கசப்பான நிசம்)
உன்னைப் பற்றிய இனிய உண்மை
நீ குறிப்பில் குறித்த இரு வேறு கோணங்களில்(மேற்சொன்ன 1,2)
மறை பொருளாய் மறைந்திருக்கிறது
நான் செய்தது மறை கழற்றிய பாட்டாளியின் வேலையே!
புட்டுப் புட்டு வைத்தாயிற்று
புட்டைப் புசிப்பது உன் கையில் தான் இருக்கிறது.
புட்டைப் பரிமாறவே என்னால் முடியும்
நான் புசிக்கும் புட்டைப்
பாரபட்சமின்றி உனக்கும் எவர்க்கும்
அவ்வளவே
உன்னைப் பற்றிய
என்னைப் பற்றிய
எவரையும் பற்றிய
இனிக்கும் உண்மை
கசப்பான நிசம் விட்டு
மனந்திரும்பி
இனிக்கும் உண்மையைச்
சுவைப்பதற்கு
இன்னுமா தயக்கம்

இன்னாதம்ம இவ்வுலகம்!(கசப்பான நிசம்)
இனிய காண்க இயல்புணர்ந்தோரே!(இனிக்கும் உண்மை)
என்ற நம் பாட்டன் பக்குடுக்கை நன்கணியாரின்
புறநானூற்றுப் பாடல் சொல்லி
அமைகிறேன்

நன்றி பூமகளே!

நாகரா
06-07-2008, 08:32 PM
http://img512.imageshack.us/img512/6236/repentyl3.gif

இரவு விழித்திருக்கிறது
கனத்த இமைகளைத்
திறந்து எழுகிறேன்.
கவிதை இரவாய்க்
கணினிக் காகிதப் பகலில்
விழுந்து விடிகிறேன்.
பூமகளின் "விளைவு"
விளங்க
இது ஒரு புது வித
படக் கவிதை.
நள்ளிரவில் விளையும்
நல்ல நாகத்தின் படம்.

நன்றி பூமகளே!

பாலகன்
07-07-2008, 03:06 AM
பூமகளின் விளைவை படம் போட்டு காட்டிய நண்பரே நாகரா,

நீங்க ஒரு கவிதை நயாகரா...................

பிடியுங்கள் பில்லாவின் அன்பை................. 100 இணைய காசுகள் பரிசு
மற்றும் பில்லாவின் மனதில் நீங்கா ஓர் இடம்

அன்புடன்
பில்லா

நாகரா
07-07-2008, 04:03 AM
பூமகளின் விளைவை படம் போட்டு காட்டிய நண்பரே நாகரா,

நீங்க ஒரு கவிதை நயாகரா...................

பிடியுங்கள் பில்லாவின் அன்பை................. 100 இணைய காசுகள் பரிசு
மற்றும் பில்லாவின் மனதில் நீங்கா ஓர் இடம்

அன்புடன்
பில்லா

வல்லான் பில்லாவிடம்
பரிசும் பாராட்டும் பெருவது
எனக்குப் பெருமை

உம் மனிதில் நீங்கா ஓர் இடம்
அது அருமையிலும் அருமை

என் பாதங்களை எட்டியது
உம் இருதய ஞாயிறின்
பேரொளிப் பிழம்பு

நன்றி பல அன்பரே!

பூமகள்
07-07-2008, 04:30 AM
பேருவம் என்றால் என்ன?
அது பேயுருவம் என்றால் பிழை திருத்துவீர், பேருவம் சரியென்றால்
பேருவம் அல்ல மன்னியுங்கள் அண்ணா.. அது எழுத்துப் பிழையே... நான் சொல்ல நினைத்தது... பேருருவம்..!

பேருருவம் ==> பெரிய உருவம்..

நாகரா
07-07-2008, 04:40 AM
பேருவம் அல்ல மன்னியுங்கள் அண்ணா.. அது எழுத்துப் பிழையே... நான் சொல்ல நினைத்தது... பேருருவம்..!

பேருருவம் ==> பெரிய உருவம்..

பிழை திருத்தியதற்கு நன்றி தங்காய், நான் பேயுருவம் என்று நினைத்தேன், பயங்காட்டியதென்றதால்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
07-07-2008, 06:55 AM
குனிய குனிய குட்டுமுலகிற்கு நல்ல சவுக்கடி. அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

பூமகள்
09-07-2008, 06:31 AM
நன்றிகள் ஜூனைத் அண்ணா..!!

இன்னும் இரண்டாவது பரிமாணத்தை யாருமே கண்டுபிடிக்கவில்லையே...!! :(