PDA

View Full Version : காடு வெட்டி குரு கைது: பா.ம.க.வினர் மறியல்



mgandhi
05-07-2008, 07:41 AM
காடு வெட்டி குரு கைது: பா.ம.க.வினர் மறியல்


வன்னியர் சங்கத் தலைவரும், பா.ம.க.வின் முக்கிய நிர்வாகியுமான இன்று அதிகாலை கைது செய்யபட்டார்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி பகுதி காடுவெட்டியைச் சேர்ந்தவர் ஜெ. குரு. இவர் வன்னியர் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெ. குணேசகரன் (33). குணசேகரன் பா.ம.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, அதிமுக பாசறையைத் தொடங்கவுள்ளதாகக் கூறிய குணசேகரனை குருவின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், குரு உள்பட 4 பேர் மீது மீன்சுருட்டி போலீஸôர் மே 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று குருவுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், நேற்று இரவு குரு கைதாகிறார் என அப்பகுதியில் தகவல் பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நள்ளிரவு வரையிலும் அவர் கைது செய்யப்படவில்லை.

ஆனால் இன்று அதிகாலை 4.40 மணிக்கு அரியலூர் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள குருவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குருவை பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் சிறிது நேரம் தங்க வைத்து பின்பு காலை 9 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் சென்று நீதிபதி ஜீவானந்தம் முன் ஆஜர்படுத்தப்படுத்தினர். குருவை 18ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குரு கைது செய்யப்பட்ட பிறகு காலை 5.15 மணிக்கு போலீசார் அவரது வீட்டை சோதனையிட சென்றனர். ஆனால் அங்கு கூடியிருந்த பா.ம.க.வினர் போலீசாரை தடுத்தனர். அதனால் மா.ம.க. மாவட்ட செயலாளர் வைத்தி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

குருவை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசினார். இந்த கைது நடவடிக்கையால் பெரம்பலூரில் பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து உடைக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி. தஞ்சை, கரூர், திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

குரு முன்பு ஆண்டிமடம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். கடந்த தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பா.ம.க., பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய மந்திரி ராசா, மாவட்ட ஆட்சியர் ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்தார்.

அந்த விமர்சனங்கள் குறித்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் குரு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. குரு கைது செய்யப்பட்டதையொட்டி வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

ராஜா
05-07-2008, 07:58 AM
அம்மா எதிர்ப்பு தெரிவிக்க கொஞ்சம் தயங்கக்கூடிய விதத்தில் நடந்த கைது நடவடிக்கை.



அரசு இயந்திரத்தின் நின்று கொல்லும் தன்மை அறிந்து குரு ஆடிப்போயிருப்பாரோ..?

அம்மாவும் கூட யோசித்துக்கொண்டுதான் இருப்பார்.. மருத்துவரை இழுக்க, தொண்டரை கைவிட்டுவிடலாமே என்று.

இதயம்
05-07-2008, 08:43 AM
தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் சதுரங்கத்தில் காய்களின் நகர்த்தலும், ஆட்ட விறுவிறுப்பும் அதிகரிக்கும்..!! அதற்கு முன்னோட்டம் இந்த கைது என சொல்லலாமா..?

mathura
05-07-2008, 01:36 PM
ஒருவரைஒருவர் தரகுறைவான வார்தைகளால் தாக்கிக்கொள்வது தமிழனின் மரபோ?

தங்கவேல்
05-07-2008, 01:49 PM
இதெல்லாம் அரசியலில் சகஜம்....

பாலகன்
05-07-2008, 02:20 PM
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை,,,,,,