PDA

View Full Version : மிச்சமீதி



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-07-2008, 06:42 AM
ஒன்றுக்கொன்று உறவின்றி
முரண் கொண்டிருக்கும்
திருமண மண்டபத்தின்
நுழைவு வாயில் வாழை மரங்கள்

நாற்புறமும் ஒழுங்கின்றி
சிதறி கிடக்கும்
வாடகை நாற்காலிகள்

அலங்கோலப்பட்டிருக்கும்
பலமணி நேரங்களை விழுங்கிய
மேடையலங்காரங்கள்

அம்மாக்களுக்கு அல்வா கொடுத்து
கூட்டத்தோடு கூட்டமாய்
கலந்துவிட்ட பொடிசுகளின்
கோரஸான அழுகை சப்தங்கள்
கூட்டம் கலையத் தொடங்கும்போது

பலநாள் பட்டினிகிடந்தவர்கள்
பயங்கரமாய் புகுந்தாடியதைப்போல்
ஏகத்திற்கும் இறைந்துகிடக்கும்
முறையாய் சமைக்கப்பட்டு
நேர்த்தியாய் பரிமாறப்பட்ட
எக்கச்சக்க உணவுவகைகள்

அல்பாயிசில் சென்றவனின்
இரண்டாம் நாள் வீட்டின்
மயான அமைதியை ஒத்திருக்கும்
நாலு சுவற்றுக்குள் சற்றுமுன்
நடந்தேறிய திருவிழா

இவையெல்லாம் சேர்த்து
பெண்ணைப் பெற்றவரின்
எஞ்சியிருக்கும் வாழ்வை
பறைசாற்றுவதாய் தோன்றுமெனக்கு.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனி
www.junaid-hasani.blogspot.com

இளசு
05-07-2008, 06:48 AM
பல திருமணச் செலவுகள் பெண்ணைப் பெற்ற குடும்பத்தை
குற்றுயிரும் குலையுயிருமாய்க் குலைத்துவிடுவது உண்மையே!

நிதர்சன பிரசினைகளை அழகாய்க் கையாளும் உங்கள் திறமைக்கு
மற்றுமொரு சான்று!

பாராட்டுகள் ஜூனைத் அவர்களே!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-07-2008, 06:57 AM
பாராட்டுக்கு நன்றி இளசு அவர்களே.

சுகந்தப்ரீதன்
06-07-2008, 01:55 PM
லட்சுமியும் லச்சங்களும் கைமாறி போனபிறகு மிச்சமிருக்கும் லட்சணத்தை மிக அழகாக உரைத்திருக்கிறீர்கள்..!!

வாழ்த்துக்கள் நண்பரே..!! தொடர்ந்து எழுதுங்கள்..!!