PDA

View Full Version : கடைக்காரர் பாடு



அகத்தியன்
04-07-2008, 03:22 PM
ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,

5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான். கடைக்காரர் கடைதட்டியில் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் போத்தலை மிக சிரமப்பட்டு கதிரை மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு போத்தலை வைத்து விட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல.........:traurig001::traurig001:
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் போத்தலை கீழே வைதுக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.
அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், எனற நிம்மதியுடன், மிட்டாய் போத்தலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..

கடைக்காரர் பாடு

mukilan
04-07-2008, 04:24 PM
அவர் விடாக்கண்டன்னா பையக் கொடாக்கண்டனா இருக்கானே

பாலகன்
04-07-2008, 05:08 PM
நல்லவேளை அதே மிட்டாயை கேட்டான் பையன்

அதுக்கு பக்கத்துல இருக்குற இன்னோரு முட்டாய்ன்னு கேக்கல

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாய்விட்டு சிரிச்சிச்சேன்

அன்புடன்
பில்லா

arun
20-09-2008, 01:44 PM
ஏற்கனவே எங்கோ கேட்ட மாதிரி இருந்தாலும் அருமை பகிர்வுக்கு பாராட்டுக்கள்

இளசு
20-09-2008, 06:52 PM
சட்டென சிரிக்க வைத்த துணுக்கு..

பகிர்ந்தமைக்கு நன்றி அகத்தியன்..

tamil alagan
21-09-2008, 10:44 AM
எல்லா சின்ன பையன் என்றாலே எல்லாம் சுட்டியாக தான் இருப்பார்கள் . இந்த பையனும் சுட்டி தான் .

lolluvathiyar
22-09-2008, 10:16 AM
அப்பா குரும்புகார பையனா இருப்பான் போல இருக்கு. அது சரி அந்த மிட்டாய் கடைகாரர் பையனை அனுப்பி விட்டு அப்புரம் பாட்டிலை மேல வச்சிருக்கலாம். அவருக்கு மேல ஏறி ஏறி எடுக்கனும்னு தலையில எழுதி வச்சிருக்கு போல இருக்கு

அமரன்
22-09-2008, 04:21 PM
கடைக்காரர் வேடத்தில் வடிவேலையும் சுட்டி வேடத்தில் சமீபகாலமாக வடிவேலுடன் கூட்டணி போடும் வாண்டூசையும் நினைத்துப் படித்தேன். சூப்பர் காமெடி.

ஓவியன்
25-09-2008, 11:18 AM
பரவாயில்லை, இப்படி நீட்டி நிமிர்ந்தால் கடைக்காரரின் உடம்பில் உள்ள வேண்டாத கொழுப்புக் கரையும்..!! :)

உமாமீனா
15-02-2011, 09:05 AM
இவனுங்களை :violent-smiley-010:, இல்லன்னா :violent-smiley-027: