PDA

View Full Version : ஆகப்போவது என்ன?தீபன்
04-07-2008, 05:56 AM
ஆகப்போவது என்ன?

அயல் வீட்டில் தினம் சண்டை
அடிதடியால் பெரும் தொல்லை!

தலைவிபோடும் கூக்குரல்கள்
தலையிடியாய் அயலெங்கும்!

தட்டிக்கேட்க எட்டிப்பார்த்தேன் - கண்களால்
வெட்டிப்பார்த்து குட்டுவைத்தாள்,
“உள்வீட்டு விடயமிது
உம்பாட்டில் கிடவுமென”.

வாய்மூடி மீண்டு வந்தேன்
வாய்ப்புவரக் காத்திருந்தேன்.

மாற்றாந்தாய் மனப்பான்மையொடு
மறுகிநின்றாள் மக்களோடு
மாற்றமின்றி தினந்தோறும்
நீண்டு சென்றது அடிதடிகள்!

பஞ்சம் வீட்டில் வலைவிரிக்க
பகட்டாய் ஊருலா சென்று வந்தாள்!
பசித்த பிள்ளைகள் பிணிதீர்க்க
கடைக்கண்தானும் மறுத்து நின்றாள்!

பொறுமையின் எல்லைக்கு பொறுமை போக
பொங்கிய பிள்ளைகள் வீட்டைப் பொசுக்க
ஓடி வந்து (என்) கால் பணிந்தாள்
ஓய வைக்க உதவிகேட்டாள்!

“உம்வீட்டுப் பிரச்சினையிது
உம்பாட்டில் தீருமென”
கூறவந்த நாவடக்கி
நாகரீகமாய் நான் மறுக்க
நடையைக் கட்டினாள் நகரெங்கும்!

தெருத்தெருவாய் சென்று நின்று
கண்கள் வளி நீர் வடித்து
இரத்து நின்றாள் பிச்சைக்கு!

முன்னர் உரைத்தமொழி மறந்து
கண்ணீர் சுரந்தழுதாள் உதவிக்கு!

ஆயினும்,
விதைத்த வினை அறுவடை ஆகையில்
ஆண்டவன் உதவினும்
ஆகப்போவது என்ன?

(இது சில ஆண்டுகளிற்குமுன் இடம்பெற்ற அரசியல் நிலவரத்தை குறித்து எழுதியது. தற்போதும் இது பொருந்தத்தான் செய்கிறது... அன்று தலைவி... இன்று தலைவன். அவ்வளவுதான் வித்தியாசம். )

இளசு
05-07-2008, 10:52 AM
நல்ல கவிதை தீபன்..

ஆட்சியர் தாய்க்குச் சமம்.
ஒரு கண்ணில் வெண்ணெயும்
ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
பூசும் தாய் - ஒரு பேய்..

அந்தப் பேய் ஒப்பாரி வைத்தால்?

நல்லது நடக்குமா விரைவில்?

தீபன்
05-07-2008, 04:01 PM
நல்ல கவிதை தீபன்..

ஆட்சியர் தாய்க்குச் சமம்.
ஒரு கண்ணில் வெண்ணெயும்
ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
பூசும் தாய் - ஒரு பேய்..

அந்தப் பேய் ஒப்பாரி வைத்தால்?

நல்லது நடக்குமா விரைவில்?

பல ஆண்டுகளிற்கு முன் ஈழத்தில் போராளிகளின் கை மேலோங்கியபோது அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிக்கா அம்மையார் அதுவரை உதாசீனம் செய்துவந்த இந்திய அரசிடம் அவசர உதவிகோரி சென்றமையும் கடுப்பிலிருந்த இந்தியா அப்போது உதவி வழங்க மறுத்தமையும் வரலாறு. இந்த சம்பவத்தை இந்தியாவின் பார்வைய்லிருந்து மறைமுகமாக சித்தரித்திருந்தேன். (அப்படின்னாத்தான் நாங்க மறையாம இருக்கலாம்...).

இந்த சம்பவம் இப்போதும் பொருந்தக்கூடியதாக உள்ளதால் புதிதாக பதிவிட்டேன். (ஆனால் மறைமுகமாக உதவிகள் வழங்கப்பட்டுக்கொண்டுதா இருக்கின்றது.)

பலருக்கு இதன் பின்னணி புரியாததால் கவிதையும் புரிந்திராது. ஆனால், இளசு அண்ணல் புரிந்துகொண்டது மட்டுமல்லாமல் ஆதரவாய் சில வார்த்தைகளும் பதிந்திருக்கிறார்கள். நன்றி அண்ணா.

தீபா
09-07-2008, 06:30 AM

எனக்கும் முதல்ல புரியலைங்க.. நான்கூட தமிழ்நாட்டு அரசியலோன்னு நினச்சேன். பரவாயில்லை... இங்க மட்டும் என்ன வாழுதாம்? நல்லா எழுதிறீங்க. தொடர்ந்து கலக்குங்க.