PDA

View Full Version : அன்றும் இன்றும்



சிவா.ஜி
04-07-2008, 05:50 AM
அன்றைய நாட்களில்
இரவுகளில் ஓரறையில்
அப்புறமாக நீ, கட்டிலின்
இப்புறமாக நான்...
இடையில் எப்போதும்
இனிய மகன்
அசைவில்லா நிலை பார்த்து
அவன் உறங்கியிருப்பானென
எதிர் பார்த்து
உறங்கிவிட்டாயா நீ என
உன்னைக் கேட்டால்..
எதுக்குக் கேக்கறீங்க என
எழுந்து அமர்ந்து கேட்பான்
இம்சை அரசன்.....
இன்பமான இரவுகள் அவை!


இன்றைய நாட்களில்
வேலைக்குதவாதவனாய்
வீட்டைவிட்டு வெளியே
வேறு இல்லத்தில் நான்...
வேலைக்காகவே இந்த இல்லத்தில் நீ
எப்போதாவது வாசல் வந்து
இருக்கிறாயா நீயென
உன்னைப் பார்த்தால்
எதுக்குப் பாக்கறீங்க என
எழுந்து வந்து கேட்கிறான்
இம்சை அரக்கன்......
துன்பமான உறவுகள் இவை!

இளசு
04-07-2008, 06:42 AM
அந்திமந்தாரைகள்
ஒன்று சொந்த - வனத்திலும்
ஒன்று - வேறு வனத்திலும்..

அன்று பிரித்தது அன்பின் தெறிப்பு
இன்று பிரித்தது சமூக நெறிப்பு

ஒரு சிறுகதையை ரத்தினமாக்கி கவிதையாய்!
பசுமை, கருமை என வண்ணக்கலவையாய்!

வாழ்த்துகள் சிவா!

சிவா.ஜி
04-07-2008, 07:03 AM
என் கவிதையில் கதை ரத்தின சுருக்கமாய் இருக்கிறதென்றால்....உங்கள் பின்னூட்டத்தில்...கவிதை மொத்தமும் இனிய சுருக்கமாய்....

வார்த்தைகளின் விசுவரூபத்தைப் பார்த்து அதிசயிக்கிறேன்.

மிக்க நன்றி இளசு.