PDA

View Full Version : ரூம் போட்டு யோசிக்கலாம் வாங்க



mukilan
04-07-2008, 04:22 AM
மக்கா!
இதுவும் அனைவரும் பங்கு பெற உள்ள ஒரு நகைச்சுவை திரிதான். சின்ன வயசா இருக்க சொல்லோ குமுதம் ஆனந்தவிகடன்லலாம் டமாசு படிச்சினுக்குறோம். நான் தம்மாத்தூண்டு பையனாக்கீறப்போ படிச்சது திடீர்னு ஞாபகத்தில வந்திச்சு.ஸ்ட்ரெயிட்டா மேட்டராண்ட வர்றேன். மேட்டர் இன்னானா அந்தக் காலத்தில அதாவது புராணங்கள் மற்றும் மன்னராட்சி காலங்களில் தொலைக்காட்சி விளம்பரங்கள் இருந்திருந்தால் அப்போது அதை அன்றாட வாழ்வில் எப்படிப் பயன் படுத்தியிருப்பார்கள்?

எடுத்துக்காட்டாக


ராமாயணத்தில் ராவணனின் பத்து தலைகளில் ஒவ்வொன்றாக ராமன் வீழ்த்திய போது லட்சுமணன் சொல்வது: இட்ஸ் கான், போயே போச்சே! போயிந்தே!! (அமிர்தாஞ்சன் - தலைவலி தைலம்)

திரெளபதி வீமனிடம்:
உங்களைத் துவைச்சிப் போடுங்க சமைச்சிப் போடுங்கன்னா சொல்றேன்!
போய் துரியோதனன் குடலை உருவிட்டு வாங்கன்னுதானே சொல்றேன்.
(இதயம் நல்லெண்ணெய்- சித்ரா)

ஊமைத்துரை கட்டபொம்மனிடம்: எண்ணே! பரங்கிப் பயலுவ நம்ம கோட்டையைப் பீரங்கி வச்சி சுடப்பாக்காம். ஏதாவது செய்ணே!
கட்டபொம்மன்: ஏலே! சவத்துமூதி! நான் கோட்டைச் சொவத்தையெல்லாம் ஃபெவிக்கால் போட்டு ஒட்டினேன் பார்த்தியா! ஏலே அந்த ஆக்கங்கெட்ட கூவை என்னலே செஞ்சிடுவான்!
(ஃபெவிக்கால்)

இப்படியே கொஞ்சம் கொஞ்சமா இந்தத் திரியை இழுத்து விடுங்க மக்கா:icon_b:

aren
04-07-2008, 04:36 AM
நல்ல தொடக்கும். நம்மகிட்டேதான் சரக்கே இல்லையே.

மக்கள் வரட்டும்.

SivaS
04-07-2008, 05:20 AM
ஏண்ணே நாமெல்லாம் படிச்சு ரசிப்போம்ணே எழுத சொல்லி சொல்லாதீங்கண்ணே.
மேல் வீடு உள்ளவய்ங்க நீங்க எழுதுங்க நாமளும் ட்ரை பண்றோம்ணே.

சிவா.ஜி
04-07-2008, 06:31 AM
அசத்திட்டீங்க முகிலன். அருமையான திரி தொடங்கியிருக்கீங்க. இப்பதான் ரூம் போட்டிருக்கேன்...யோசிச்சிட்டு அப்பால வந்து கண்டுக்கறேன்....இப்பதைக்கு அப்பீட்டு........

இளசு
04-07-2008, 06:35 AM
கலக்கிட்ட முகில்ஸ்...

கடோத்கஜன் : (கல்யாண சமையல் சாதம் உண்டபின்)
திருப்தி , திருப்தி, மனசுக்கு ரொம்ப திருப்தி!

விபீடணன் ; (ராமர் அணிக்கு மாறியபின்)
நல்ல விஷயங்கள் அதிகமா இருந்தா மாறித்தானே ஆகணும்

குசேலன் : அவல் கொடுத்தபோது
என் (இல்லாத) வருமானத்துக்கேற்ற தரமான பரிசு!

(எல்லாமே பவர் சோப் !)

கண்மணி
04-07-2008, 06:39 AM
மாறி வரும் காலத்திற்கேற்ப மாறி வரும் மன்றம்
மன்றத்திற்காக மாறாத இளசு!!!

சிவா.ஜி
04-07-2008, 07:06 AM
ஆஹா...இளசு....இங்கே ரொம்ப புதுசு.....
ஒசத்தி கண்ணா ஒசத்தி........!!

aren
04-07-2008, 07:11 AM
கலக்கிட்டீங்க இளசு!!!

mukilan
04-07-2008, 12:34 PM
கலக்கல்ஸ் இளசு அண்ணா! அதுவும் எல்லாமே ஒரே ஒரு விளம்பரத்தில் இருந்து பிறந்தவை.ரூம்ல உக்கார்ந்துதான் யோசிச்சிருக்கீங்க..

mukilan
04-07-2008, 12:35 PM
மாறி வரும் காலத்திற்கேற்ப மாறி வரும் மன்றம்
மன்றத்திற்காக மாறாத இளசு!!!
எனி உள்குத்து?:D:D

கண்மணி
04-07-2008, 12:39 PM
உள்குத்தா? அதுவும் பவர் சோப் விளம்பரந்தான். இளசுவும் மன்னர்தான்...

ஹி ஹி..

விளம்பரம் குடுங்க காட்சி அமைப்பைக் கொடுக்கறேன்..

டி.வி.யே பார்க்காத அப்பாவி:rolleyes::rolleyes::rolleyes:

mukilan
04-07-2008, 01:01 PM
Youtube தளத்தில் Tamil+commercials அல்லது Tamil + advertisemensts இபப்டி ஏதாவது காம்பினேஷன் கொடுங்க. நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் அவை சுவாரசியமானவையா? எனக்குத் தெரியாதுங்கோ!
http://www.youtube.com/watch?v=uD0mWWAXr_M&feature=related

மன்மதன்
04-07-2008, 01:05 PM
முகில்ஸ் அமர்க்களமாக ஆரம்பிக்க

இளசு அண்ணா திரிக்கு பவர் கொடுக்க

நன்றாக வளரட்டும்..

நானும் ரூம் போட்டு யோசிச்சிட்டு வர்ரேன்..ஹிஹி

இளசு
06-07-2008, 07:22 AM
இடம் : அஸ்தினாபுரம் அரண்மனை

திருதராட்டினன் சிற்றுண்டி அறைக்கு வந்து..
''காந்தாரி, காஃபி எடுத்துவா டியர்''
திருதராட்டினன்,மேசையில் அமர்ந்து காபி கோப்பையை வழக்கம்போல் கைநீட்டி தேடி எடுக்க முயலும்போது...
ஒரு பெரிய கோப்பையும், நூறு சின்ன சின்ன கோப்பைகளுமாய்
காஃபி மணம் நூறு மடங்காய்..

மகிழ்ச்சியில் திருதராட்டினன் - ''ரியல்லி?''
காந்தாரி தலையசைத்து - ம்ம்

பின்னணியில் - ம்ம்ம்ம் (நூறு) ஆனந்தம்...ம்ம்ம்ம்ம்ம் BRU -வுடன் ஆரம்பம்ம்ம்ம்ம்!

பூமகள்
06-07-2008, 07:24 AM
ஹீ ஹீ...!! :D:D
ரசித்து வாய் விட்டுச் சிரித்தேன் பெரியண்ணா...!!

நூறு குட்டிக் கோப்பைகள்...!!

தாங்குமா பூமி இப்போது??!! ;)

ஓவியன்
06-07-2008, 07:26 AM
முகில்.ஜியின் திரியும் அதனை தொடர்ந்து பற்ற வைக்கும் இளசு அண்ணாவின் பதிவுகளும் அருமை...


விபீடணன் ; (ராமர் அணிக்கு மாறியபின்)
நல்ல விஷயங்கள் அதிகமா இருந்தா மாறித்தானே ஆகணும்

நம்மூர் அரசியல்வாதிகள் போல விபிடணனை உணர்ந்தேன் - அருமை..!! :icon_b:

பூமகள்
06-07-2008, 07:30 AM
சீதா தேவியின் திருமண நாள்..

தம்பதிகள் சகிதமாக... ராமரோடு சேர்ந்து.. தன் தந்தையின் காலில் விழப் போகிறார்..

கண்ணீர் மல்க தந்தையைப் பார்க்கிறார்...
தந்தையின் விழிகளிலும் ஈரம்..

திடீரென அவரின் தொப்பியை தட்டுவது போல கை தூக்கி... பயங்காட்டுகிறார் சீதா...

கண் சிமிட்டிச் சிரித்து சீதா பிராட்டி சொல்கிறார்...
லைஃபில் வேணும் கிரேசித்தனம்...!!

(மிரண்டாவா.. பாஃண்டாவா தெரியலியே...!! ;))

ஓவியன்
06-07-2008, 07:30 AM
இராமயணத்தில் சஞ்சீவி மலையை பெயர்த்து வந்து கீழே வைத்து விட்டு ஆஞ்சநேயர் கூறுவார்...

பூஸ்ட் இஸ் சீக்ரெட் ஃஆப் மை எனர்ஜி...!!

(பூஸ்ட்)

இளசு
06-07-2008, 07:32 AM
நம்மூர் அரசியல்வாதிகள் போல விபிடணனை உணர்ந்தேன் - அருமை..!! :icon_b:

நம்மூர் அரசியல் அகராதியில்
நல்ல விஷயங்கள் = சூட்கேஸ்கள், தேர்தல் சீட்டுகள், பதவிகள்..


------------------------------------------

Grace -ஆன பூ கொஞ்சம் Crazy-ஆகவும்..
அசத்தல்... தொடரட்டும்!

பூமகள்
06-07-2008, 07:39 AM
கோகுலத்தில் கண்ணன்.. அம்மாவோடு அடுப்படியில்..

கண்ணன்: அம்மா.. புளியோகரா...

யசோதை: கண்ணா.. சொல்லு... புளியோகரே...

கண்ணன்: அங்... ம்மா.... புளியோ....கரா...

யசோதை: புளியோகரே.....

(ஒளிந்திருந்த வெண்ணைத் திருடன்.. புளியோதரை சாத வாசத்தில் மயங்கி வெளிப்படுகிறார்... மாட்டிவிட்டு செம அடி வாங்கிக் கொடுத்து... புளியோதரை சாப்பிட்ட படி நம் கோகுல கண்ணன்..!! :))

புளியோகரே.. ரெடி மிக்ஸ்..!

ஓவியன்
06-07-2008, 07:40 AM
நம்மூர் அரசியல் அகராதியில்
நல்ல விஷயங்கள் = சூட்கேஸ்கள், தேர்தல் சீட்டுகள், பதவிகள்..!

உண்மைதான் அண்ணா....

இராமனின் பக்கத்திலிருந்து பார்த்தால் விபிடணன் நல்லது நாடி வந்தவன்..
இராவணனின் பக்கத்திலிருந்து பார்த்தால் அதிகாரத்துக்காக
அண்ணனையே காட்டிக் கொடுத்தவன்....

விபீடணினிலும் அண்ணனுக்காக
அவன் செஞ்சோற் கடனுக்காக
தான் நிற்பது தப்பான பக்கமென்றறிந்தும்
இறுதிவரை போராடி மடிந்த
கும்பகர்னன் எவ்வளவோ மேலானவன்..!!

mukilan
06-07-2008, 01:26 PM
அடடா! நிஜமாவே ரூம் போட்டு யோசிக்கிறீங்களே மக்கா! ப்ரூ கலக்கல்ஸ் அண்ணா! நீங்க ரொம்ப யோசிச்சிருக்கீங்க.
பூமகள் Crazyத் தனமால்ல இருக்கு... கலக்குங்க கலக்குங்க
இப்போதான் தெரியுது ஓவியனோட சீக்ரெட் ஆஃப் எனர்ஜி. பூஸ்ட் பில்டப் சூப்பர்.

மதி
06-07-2008, 02:01 PM
அட..எல்லோரும் இந்த கலக்கு கலக்கறீங்க...
போட்டுத் தாக்குங்க...

mukilan
06-07-2008, 03:03 PM
மதி உங்களுக்கும் ஒரு ரூம் போட்டுக் கொடுத்திருக்கேன். உக்கார்ந்து யோசிச்சிட்டு வாங்க! அப்படியே உங்க ஆபீஸ் 'மொக்க"ச் சாமிகளிடம் கேட்டிட்டு வந்தாலும் ஓ.கே

பாலகன்
06-07-2008, 03:08 PM
நானும் ஒன்னுக்கு ரென்டு ரூம் போட்டு தான் யோசிச்சிக்கிட்டு
இருக்கேன்.... ஒன்னும் மண்டையில ஏறமாட்டேங்குதே,,,,,, முகில்ஸ்

அன்புடன்
பில்லா

mukilan
06-07-2008, 03:09 PM
எனக்கும் அப்படித்தான் அதான் மன்றத்து மக்களை இழுத்து விட்டிருக்கேன்.,...

கண்மணி
06-07-2008, 03:56 PM
இராமனும் சீதையும் காட்டுக்குப் போக தாயாராகிக் கொண்டிருக்கிறார்கள்..

இலட்சுமணன் ஆவேசமாக வருகிறான்..

இலட்சுமணன் : அண்ணா, இது என்னக் கோலம்? ஏன் மரவுரி?

இராமன் : நான் காடாள வேண்டும். பரதன் நாடாள வேண்டும்..

இலட்சுமணன் : யார் சொன்னார்கள்?

இராமன் : அம்மா சொல்லாம வேற யார் சொல்லுவாங்க?

(மெடிமிக்ஸ் விளம்பரம்)

mukilan
06-07-2008, 04:59 PM
கலக்கல் கண்மணி! எத்தனை ரூம் போட்டு யோசிச்சீங்க?

பாலகன்
06-07-2008, 05:02 PM
இராமன் : அம்மா சொல்லாம வேற யார் சொல்லுவாங்க?

(மெடிமிக்ஸ் விளம்பரம்)

ரெம்ப நல்லாயிருக்கு கண்மணி,,

வாழ்த்துக்கள்

அன்புடன்
பில்லா

mukilan
07-07-2008, 03:06 AM
மாமல்லபுரத்தின் கடற்கரை.. ஆயனச் சிற்பியின் புதல்வி சிவகாமியும், மகேந்திரவர்ம பல்லவன் மகன் நரசிம்மனும்.
நரசிம்மன்: அன்பே சிவகாமி... நான் உன்மேல் உயிரினும் மேலான காதல் வைத்திருக்கிறேன்.
சிவகாமி: இன்னொரு முறை சொல்லுங்க..

ஏதோ சேலை விளம்பரம்...

எண்ணம்
07-07-2008, 09:05 AM
எல்லாமே சூப்பர். தொடருங்கள்
நமக்கு படிச்சு,ரசிக்கிறதே பழக்கமாயிடுச்சா, அதான் ரூம் போடுறதுக்கே யோசிக்க வேண்டியதா இருக்கு.....இருந்தாலும் ட்ரை பன்னுறேன்.......

கண்மணி
07-07-2008, 12:54 PM
சகுந்தலை : நான் உங்கள் மனைவி.. கானகத்தில் காதலித்து கந்தர்வ மணம் செய்து கொண்டோமே!!!
துஷ்யந்தன் : ஆதாரம் இருக்கா?

மீன் வயிற்றிலிருந்து மோதிரம் கிடைத்ததும், அதைப் பார்க்கும்

துஷ்யந்தன்

என்ன ஒரு ஆதாரம்..

அதிரடி அரசன்
07-07-2008, 03:27 PM
பந்த சுவத்துல அடிச்சா திரும்பி வரும்...
கால் பந்த சுவத்துல அடிச்சாலும் திரும்பி வரும்...
ஏன்.... டென்னிஸ் பால சுவத்துல அடிச்சாலும் திரும்பி வரும்... ஆனா...
வாலி பால சுவத்துல அடிச்சா திரும்பி வருமா????

எப்படிங்க வரும்... அதான் வாளில மாட்டிக்குதே...அப்புரம் எங்க இருந்து திரும்பி வர்ரது... ஹி ஹி

வாளிய தலையில கவுத்து வெச்சிகுனு யோசிப்போர் சங்கம்...
அதிரடி அரசன்

கண்மணி
09-07-2008, 01:07 AM
சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானியை மணந்த யயாதி சுக்ராச்சாரியார் சாபத்தால் இளமை இழந்து குரூபியாகிறான்..(இவன் பரத வம்சத்தைச் சேர்ந்தவன், அஸ்தினாபுரத்தை ஆண்டவன்)

ஒவ்வொரு மகனாகச் சென்று அவனின் இளமையைத் தனக்குக் கொடுத்து விட்டு நாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான்.

முதல் நான்கு மகன்கள் ஏற்றுக் கொள்ள மறுக்க,

ஐந்தாவதும் கடைசியுமான மகன் அவன் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறான்..

யயாதிக்கு இளமை மீள சந்தோஷமாகப் பாடுகிறான்.,..

"ஆனந்தம் ப்ரூவுடன் ஆரம்பம்"

ஏன்னா,

இளமையைக் கொடுத்தவன் பேர் புரு...


ஹி ஹி ஹி..

ஓவியன்
09-07-2008, 01:17 AM
யயாதிக்கு இளமை மீள சந்தோஷமாகப் பாடுகிறான்.,..
"ஆனந்தம் ப்ரூவுடன் ஆரம்பம்"
ஏன்னா,
இளமையைக் கொடுத்தவன் பேர் புரு...
ஹி ஹி ஹி..

முடி..............லை...!!! :D

நிரம்பவும் இரசித்தேன் கண்மணி..!! :)

கண்மணி
09-07-2008, 01:34 AM
குறைந்த பட்சம் விளம்பரங்களின் பஞ்ச் வசமாவது போட்டுக் கொடுங்களேன்,,,

mukilan
09-07-2008, 03:58 AM
விசுவாமித்திரரின் ஆசிரமம்..
ராமனும் லட்சுமணனும் சிறுவர்களாய் ஆசிரமத்தை காத்து வருகிறார்கள்.
லட்சுமணன்: அண்ணா அந்த அரக்கர்கள் ஆசிரமத்தின் அமைதியைக் கலைக்க வருகிறார்கள்..
ராமன்: கவலைப்படாதே லட்சுமணா! நான் பார்த்துக் கொள்கிறேன்.
அரக்கன்1-ஹா!ஹா! ராமா பொடிப்பயலே
அரக்கன் 2: ஆமாம் என்ன செய்து விடுவாய்?
அரக்கன் 3: நாம் நாங்கள் மூன்று பேர் என்ன செய்து விடுவாய்?
ராமன் ஒரு அம்பை விடுகிறார் அது மூவரையும் கொல்கிறது.

லட்சுமணன்: என்ன ஆச்சர்யம்! எப்படி அண்ணா?
ராமன்: அம்பு ஒன்று! அழிவு மூன்று!

பாம் ஒன்று செயல் மூன்று (அமிர்தாஞ்சன்)

இதுக்கு நான் ரெண்டு நாள் ரூமில உக்கார்ந்து யோசிச்சேன்.

mukilan
09-07-2008, 03:59 AM
முடி..............லை...!!! :D

நிரம்பவும் இரசித்தேன் கண்மணி..!! :)

ரிப்பீட்டேய்:icon_b::icon_b:

aren
09-07-2008, 04:15 AM
துரியோதனின் அரண்மனை
அங்கே திரெளபதியின்
புடவையைப் பற்றி
இழுக்கிறார்கள்.

திரெளபதி செய்வதறியாமல்
கிருஷ்ணா என்னை காப்பாற்று என்கிறார்

புடவை முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது
ஆனால் திரெளப்தி உள்ளே ஜீன்ஸ்
போட்டுக்கொண்டிருக்கிறார்.

துரியோதனன் செய்வதறியாமல்
இது என்ன கதை கிருஷ்ணா என்கிறார்

புதுசு கண்ணா புதுசு
என்கிறார் கிருஷ்ணன்

(குங்குமம் விளம்பரம்)

ஓவியன்
09-07-2008, 04:21 AM
(குங்குமம் விளம்பரம்)

ஆரேன் அண்ணா, ஒரு பேச்சுக்கு ரூம் போட்டு யோசிக்கச் சொன்னா, உண்மையாகவே ரூம் போட்டு யோசிப்பீங்களா..?? :D:D:D

mania
09-07-2008, 05:21 AM
சூப்பர் ஆரென்.......
அன்புடன்
மணியா....:D
(அதுக்காக மற்றவை எல்லாம் சுமார் என்றல்ல.....அனைத்துமே அட்டகாசம்....!!!!)

ஓவியன்
09-07-2008, 05:26 AM
சூப்பர் ஆரென்.......

வந்திட்டீங்களா..?? :)

நலமா அண்ணா, உங்கள் பார்வைக்காக நிறையத் திரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.. !! :)

mania
09-07-2008, 05:29 AM
வந்திட்டீங்களா..?? :)

நலமா அண்ணா, உங்கள் பார்வைக்காக நிறையத் திரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.. !! :)

இன்னும் சில காலம் அந்த திரிகள் காத்திரிக்கணுமே ஓவியன்....வேலை அந்த மாதிரி,.....
அன்புடன்
மணியா...:D

aren
09-07-2008, 05:33 AM
குசேலன் கிருஷ்ணரைப் பார்க்க வருகிறார்
கிருஷ்ணர் குசேலனின் ஏழ்மை நிலையை அறிந்து
அவருக்கு உதவ நினைக்கிறார்
ஆனால் அவர் கையில் உடனடியாக பொற்காசுகள் இருக்கவில்லை
உடனே அவர் இந்திரனிடம் பொற்காசுகள் கேட்கிறார்
உடனே இந்திரனும் கொடுத்து உதவுகிறார்

கிருஷ்ணர் இந்திரனுக்கு நன்றி கூறுகிறார்.
இதுக்கு எதற்கு நன்றி கிருஷ்ணா

இந்திரன் பாங்க்
அது உங்களது பாங்க் என்கிறார்

(இந்தியன் பாங்க் விளம்பரம்)

mania
09-07-2008, 05:38 AM
க.....கா............கி......கி.....:D:D
அன்புடன்
மணியா...:D

Narathar
09-07-2008, 06:41 AM
நீண்ட நாட்களுக்கு பின் கர்ணனைப்பார்த்து ஆச்சரியப்படுகின்றாள் குந்திதேவியார்...

அப்போது கர்ணன்
"நான் வளர்கிறேனே........... மம்மீ.........!!!"

கண்மணி
09-07-2008, 06:42 AM
நீண்ட நாட்களுக்கு பின் கர்ணனைப்பார்த்து ஆச்சரியப்படுகின்றாள் குந்திதேவியார்...

அப்போது கர்ணன்
"நான் வளர்கிறேனே........... மம்மீ.........!!!"

இது அனுமான் அஞ்சனா தேவியிடம் சொன்ன பதிலல்லவா?:D:D:D

lolluvathiyar
09-07-2008, 06:43 AM
ஒவ்வொருத்தரும் போட்டு தாக்கராங்களே நான் அதிகமாக டிவி பார்பதில்லை அதனால் எனக்கு விளம்பரங்கள் நினைவில் இருப்பதில்லை மத்தவங்க எழுதுங்க படிச்சு ரசிக்கிறேன்

பாலகன்
09-07-2008, 08:29 AM
ஒவ்வொருத்தரும் போட்டு தாக்கராங்களே நான் அதிகமாக டிவி பார்பதில்லை அதனால் எனக்கு விளம்பரங்கள் நினைவில் இருப்பதில்லை மத்தவங்க எழுதுங்க படிச்சு ரசிக்கிறேன்

ஆகா ஆகா வாத்தியார் கிரேட் எஸ்கேப்................... எப்படி தானா வருதா?

பில்லா

அதிரடி அரசன்
09-07-2008, 03:02 PM
ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்
நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...
மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,
நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்....

கொக்க மக்கா ஒரே போடா போட்டுடனும்..... ஹி ஹி...

அரசன் இவன் பூவரசன்

அகத்தியன்
09-07-2008, 03:16 PM
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு.
மறு கன்னத்திலும் அறைந்தால்.

அப்புறம் போட்டு தாளிச்சிடனும் :sauer028: :sauer028:

(ஏன்னா மறு கன்னத்திற்கு அப்புறம் என்ன செயணும்னு யாரும் சொல்லலயே......:D:D :D)

கண்மணி
13-07-2008, 09:34 AM
குருஷேத்திரப் போர்.. 14 ஆம் நாள் யுத்தம் சூரிய மறைந்ததினால் நிறுத்தப் பட்டு விட்டது.. அர்ச்சுனன் தன் சபதத்தில் தோற்று விட்டதால் தீ மூட்டி சுற்றி வந்து தீயில் பாயும் பொழுது

கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்க காண்டீபத்தில் நாணேற்றி வில்லைப் பூட்டி தீயில் இறங்கத் தயாராகும் போது..

சுதர்சனச் சக்கரம் விலக.. சூரியன் வெளிப்படுகிறான்

கிருஷ்ணன் ஜெயம் சதாவைப் போல கண்ணை மூடிக் கொண்டு லையைச் சாய்த்துக் கொண்டு...ஜெயத்ரதனை நோக்கி கையை நீட்டி,,,



"அதான் ஜெயத்ரதன்" (ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் விளம்பரம்)

poornima
13-07-2008, 03:39 PM
இடம் : அஸ்தினாபுரம் அரண்மனை

திருதராட்டினன் சிற்றுண்டி அறைக்கு வந்து..
''காந்தாரி, காஃபி எடுத்துவா டியர்''
திருதராட்டினன்,மேசையில் அமர்ந்து காபி கோப்பையை வழக்கம்போல் கைநீட்டி தேடி எடுக்க முயலும்போது...
ஒரு பெரிய கோப்பையும், நூறு சின்ன சின்ன கோப்பைகளுமாய்
காஃபி மணம் நூறு மடங்காய்..

மகிழ்ச்சியில் திருதராட்டினன் - ''ரியல்லி?''
காந்தாரி தலையசைத்து - ம்ம்

பின்னணியில் - ம்ம்ம்ம் (நூறு) ஆனந்தம்...ம்ம்ம்ம்ம்ம் BRU -வுடன் ஆரம்பம்ம்ம்ம்ம்!

கலக்கல்னா இது கலக்கல் இளசு ஐயா

poornima
13-07-2008, 03:41 PM
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு.
மறு கன்னத்திலும் அறைந்தால்.

அப்புறம் போட்டு தாளிச்சிடனும் :sauer028: :sauer028:

(ஏன்னா மறு கன்னத்திற்கு அப்புறம் என்ன செயணும்னு யாரும் சொல்லலயே......:D:D :D)

எங்கோ படித்தது..

ஒருவன் உன்னைக் கல்கொண்டு எறிந்தால்
நீ அவனிடத்தில் பூ கொண்டு எறி..
அவன் மீண்டும் கல்கொண்டு எறிந்தால்
நீ பூந்தொட்டியை கொண்டு எறி
ங்கொய்யாலே சாவட்டும்...

mathura
13-07-2008, 03:46 PM
துரியோதனின் அரண்மனை
அங்கே திரெளபதியின்
புடவையைப் பற்றி
இழுக்கிறார்கள்.

திரெளபதி செய்வதறியாமல்
கிருஷ்ணா என்னை காப்பாற்று என்கிறார்

புடவை முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது
ஆனால் திரெளப்தி உள்ளே ஜீன்ஸ்
போட்டுக்கொண்டிருக்கிறார்.

துரியோதனன் செய்வதறியாமல்
இது என்ன கதை கிருஷ்ணா என்கிறார்

புதுசு கண்ணா புதுசு
என்கிறார் கிருஷ்ணன்

(குங்குமம் விளம்பரம்)

சூப்பர் கண்ணா சூப்பர்

இளசு
13-07-2008, 03:50 PM
ஒருவன் உன்னைக் கல்கொண்டு எறிந்தால்
நீ அவனிடத்தில் பூ கொண்டு எறி..
அவன் மீண்டும் கல்கொண்டு எறிந்தால்
நீ பூந்தொட்டியை கொண்டு எறி
ங்கொய்யாலே சாவட்டும்...


ஹ்ஹ்ஹ்ஹா! சபாஷ் பூர்ணிமா அவர்களே!
வாய்விட்டு சிரித்து ரசித்தேன்..
சபாஷ் படத்தில் குருடனாய் நடிக்கும் பார்த்திபன் கையாள்வார் இதை!

--------------

பூர்ணிமா அவர்களே!

நீங்கள் ஐயா-வைத் தவிர்த்தால் நான் அவர்களே என நீட்டி முழக்க மாட்டேன்..

இந்த டீலிங் உங்களுக்குப் பிடிச்சிருக்குங்களா?