PDA

View Full Version : காதல் கவிதைகள் எழுத வாருங்கள்.ஆதவா
03-07-2008, 03:59 PM
புதுமையாக என்ன செய்யலாம்? ஒன்றும் செய்யமுடியாததுதான்.. இருந்தாலும்...

நம் மன்றத்து கவிஞர்களுக்குக் காதல் என்றால் தேன். காதலை எப்படியும் வைத்து எழுத முடிபவர்கள்... அவர்களுக்கு இந்தத் திரி கொஞ்சமேனும் பயனுள்ளதாக இருக்குமானால் அது எனக்குப் பெருமை.

சரி, என்ன செய்யலாம்?

காதல் பல சூழ்நிலைகளில் பொருத்தி உங்களால் எழுத முடியும் என்பது நான் அறிந்தது. இங்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சூழ்நிலை தரப்படும். அதை மையப்படுத்தி காதல் கவிதைகள் எழுதவேண்டும்.. இதற்கு சில உதாரணங்களோடு நானே துவக்குகிறேன்.

இதோ :


மையப்பொருள் : காதல்
இடம் : கோவில் (கோவிலை, கடவுளை சுற்றி காதல் கவிதைகள் புனையலாம்..)

நீ கடவுளைத் தொழுகிறாய்
என்னை நினைத்துக் கொண்டே

கடவுள் அழுகிறான்,
பாவம்
ஒருமுறையாவது அவனை நினைத்துவிடு.

கற்பூரம் கறைந்து ஒழுகுவதைப் போல
உன் பக்தி அத் தெய்வத்தின் முன்
ஒழுகுகிறது.

அபிஷேக அர்ச்சனையால்
கண்களை சிமிட்டமுடியா துக்கத்தில்
அமர்ந்திருக்கிறது தெய்வம்.

பக்தியால் கண்மூடுகையில்
உன் காதணி ஆடக் கண்டேன்

அதன் காதல் ஊசலை அளந்து
வேகத்தைக் கணக்கிடுகிறேன்
அது
எனது இமையின் அசைவோடு
ஒத்துப் போகிறது.

தொடருங்கள் நண்பர்களே! காதல் கோவிலில் வளரட்டும்..

(இத்திரிக்கு நல்ல தலைப்பு சொல்லுங்களேன்.. ப்ளீஸ்)

இளசு
05-07-2008, 10:10 AM
பெண்
இடையும் இறைவனும் ஒன்றுதான்
இரண்டும்
இருந்தும் தெரிவதே இல்லை!

- பா.விஜய் பாடல் இது!

அபிஷேக நேரத்தில், தேவி ஸ்ரீதேவி, அப்பப்பா சரணம், ஸ்ரீதேவி என் வாழ்வில் - என கோவில் குறியீடுகளை அதிகம் குழப்பமாய் பயன்படுத்தியவர் நம் வாலி!

கோவில், இறை, பக்தி - இவை களங்களாய், பின்புலமாய் இருக்க
காதல் கவிதை எழுதணும் என்றால் -

இதய சுத்தியும்
கத்திபோல் கவனமும் வேணும்.


ஆதவனின் ஆரம்பம் இங்கே...

அடுத்தடுத்து இக்களத்தில் அடிபடாமல் கவி விளையாட
யார் வருகிறார்கள்?

கவனிப்போம்...

நாகரா
05-07-2008, 11:12 AM
உயிரற்ற கல்லை
பக்தியுடன் நோக்குகிறாய்.
உயிருள்ள என் மேல்
காதலுடன் நோக்காயோ!

என்னுள்ளே கடந்தேன்
உள்ளெல்லாம் உன் உருவம்
உள்ளம் உருக்கும்
உன் நினைவின் வெம்மை

சுடரில் கரையும் கற்பூரம் போல்
உன் மீது கொண்ட காதலில்
கரையும் நான்

நீ நடக்குந் தடங்கள்
என் நெஞ்சில் விழுகின்றன

உன்னைக் கடக்குங் கணங்களில்
படபடக்கும் இதயம்

என்னுயிர்ப் பறவை
மெய்க்கு வெளியே
பறந்து போய்
தேவாலயம் உன்னில் வாழ்கிறது

நடைப் பிணமாய்க் கிடக்கும்
என்னை
உன் காதல் நோக்கால்
உயிர்த்தெழச் செய்ய
உன்னால் மட்டுமே முடியும்

என் கடவுள் நீ தானடி
காதல் வரந்தர
இன்னுமேன் தாமதம்!

(ஆதவரின் முயற்சிக்கு என் ஆதரவு, நன்றி)

ஆதவா
06-07-2008, 03:28 AM
மிக்க நன்றி இளசு அண்ணா மற்றும் நாகரா அவர்களே!

அடுத்தடுத்து யாரும் துவங்காத நிலையில் நான் மீண்டும் கவிதைகளோடு வருகிறேன்...

கோயில் வளாகங்களை
இந்த தெய்வங்கள்
சுற்றுவதில்லை,
நீ சுற்றுகிறாய்.

பாலகன்
06-07-2008, 03:42 AM
ரொம்ப நேரம் கடவுள்
முன் நிற்காதே என் காதலியே
உன் அழகில் அவன் மயங்கி
எனக்கு வேட்டாகிவிட போகிறது

உன் பூசை புனஸ்காரமெல்லாம்
கடவுளுக்கு, அந்த மாலை மட்டும்
எனக்கதலைப்பு இப்படி இருந்தால் எப்படி இருக்கும் = உலகம் சுற்றும் காதல்
அன்புடன்
பில்லா

மாதவர்
03-08-2008, 06:48 PM
மாவிலை தொங்கும்
கோவிலில்
ஆவலாய் காத்திருந்தேன்
பூவிதழ் பறந்து வந்தாள்!
நாவில் வரவில்லை பேச்சு!!!

பென்ஸ்
03-08-2008, 08:09 PM
வித்தியாசமான முயற்சி என்றால் ஆதவாதான்...
மன்றத்தில் கவிதை என்றால் என்ன என்பது போல வலம் வந்த பலரையும் எழுத வைத்த பெருமை ஆதவருக்கு உண்டு...
ஆதவா...
இந்த களிமண்ணும் (என்னாதான் சொன்னேன்) உன் கையில் வைக்கிறேன்... சிலையாக்கி கொடு....

பென்ஸ்
03-08-2008, 08:22 PM
நச்சத்திரங்கள் மத்தியில் நீ..
கோவிலினுள் நிலாச்சோறு
திருகார்த்திகை பிரசாதம்...!!

மதுரை மைந்தன்
03-08-2008, 08:32 PM
கண் மூடினேன்
கோயிலில் கடவுளை நினைத்து
பொன்மகளாக நீ வந்தாய்
காசுகளை அள்ளி வீசினாய்
கண்ணைத் திறந்தேன்
காசுகளை வீசினர் பக்தர்கள்
தாடி மீசையுடனான என்னை
சாமியார் என்று நினைத்து

சிவா.ஜி
04-08-2008, 07:01 AM
தினமும் சந்திக்கலாம் கோவிலில்
செக்யூரிட்டி பிரச்சனையில்லை
ஆண்டவனிடம் அட்வான்ஸாய்
அனுமதி வாங்கிவிட்டேன்...இது திருமணத்தில்தான்
முடியுமென்ற உத்திரவாதம் கொடுத்து!

poornima
04-08-2008, 07:26 AM
இந்த இழை தொடர்பான கவிதை என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது தபூ சங்கர் கவிதை தான்..சூழல் நாயகி கோவில் கஞ்சி
பகிர்கிறாள் ஏழைகளுக்கு

அம்மனுக்குத் தானே
கஞ்சி காய்ச்சி
ஊற்றுவார்கள்
இங்கு அம்மனே
கஞ்சி ஊற்றிக்
கொண்டிருக்கிறது

நான் முயற்சித்த ஒன்று..

ஆராதனை விபூதி
பிரசாதம் எல்லாமுடன்
உனக்குப் பின்
அர்ச்சகர் என்னிடம் வர
நெற்றிக் குங்குமத்தோடு
உன்னையும் சேர்த்து
இட்டுக் கொள்கிறேன்
நெஞ்சத்தில்...

நம்பிகோபாலன்
04-08-2008, 09:59 AM
பலபெயர்களை
கொண்டு அர்ச்சனை
செய்கின்றனர்
எனக்கு தெரிந்து
ஒரே பெயரில்
அர்ச்சனை செய்யலாம்
அது
உன் பேர் மட்டுமே.......

பென்ஸ்
05-08-2008, 12:58 AM
சாமிக்கு சூடம் ஏற்றி
மனதை பற்ற வைக்கிறாய்...
உன் அசைவுகளை காண
நீ உடைக்கும் தேங்காய் சில்லாய்
தெறிக்கிறது மனம்...!!!!

பென்ஸ்
05-08-2008, 03:31 AM
சிரிப்பதை கொஞ்சம் நிறுத்து
பூசாரி மணி அடிப்பது
சாமிக்கு கேக்கலையாம்...!!!

மதி
05-08-2008, 04:00 AM
எங்க ஊர்
கோயில் மாடத்தில்
புறாக்களைக் காணவில்லையாம்...
தேடுகிறார்கள் பாவம்..
அவர்களுக்குத் தெரியாது
அவைகள்
உன்னைக் கண்டுபிடித்து
என் காதல் சொல்ல
என்னால் தூதுஅனுப்பப்பட்டிருக்கிறது
என்று..

(ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடா.உண்மையிலேயே ரொம்ப கஷ்டமா இருக்குங்க...)

மதி
05-08-2008, 04:02 AM
சுடுவெயிலில்
கோயில் பிரகாரங்களில்
நீ நடக்கையில்
உன் பாதம் நோகச் செய்த
அந்த சூரியன் மீது
கோபம் தான் எனக்கு..

மதி
05-08-2008, 04:09 AM
தைரியம் தான் உனக்கு
தந்தை தாய்
இருக்கையிலேயே
என் பெயரில் அர்ச்சனை செய்ய
சொன்னாய்...
சாமி என் பேரென்பது
உனக்கெப்படித் தெரியும்..!

பென்ஸ்
05-08-2008, 04:13 AM
மூன்றுமுறை சுற்றிவந்து
உன் விருப்பத்தை
சொல்லி போகிறாய்
முன்று வருடமாய்
நான் உன்னை சுற்றியும்
ஏன் மெளனம் காக்கிறாய்...!!!!

மதி
05-08-2008, 04:20 AM
ஆதவன் பார்வை
எனக்குண்டு
அதனால் தான்
மதி நான் அவ்வப்போது
உன் பூமிக்கண்களுக்குப்
புலப்படுகிறேன்.

மதி
05-08-2008, 04:21 AM
எதற்காக
சூரியபகவானை சுற்றி
வேண்டுகிறாய்
உன்னை சுற்றி நான்
வருவதறியாமல்
மதியாய்.

meera
05-08-2008, 04:34 AM
வீற்றிருக்கிறாய்
விக்கிரகமாய்
என் இதயக்கோயிலில்..

aren
05-08-2008, 05:09 AM
கோவிலுக்குச் சென்றேன்
அம்மனை தரிசிக்க
அம்மனாக நீ வந்தாய்
எனக்கு தரிசனம் கொடுக்க!!!

aren
05-08-2008, 05:20 AM
ஆலயம் சென்றேன்
அம்மனை தரிசிக்க!!!

அங்கே கண்டேன்
என் சீதையை!!!

கற்கள் உன் காலை
பதம் செய்வதைக் கண்டேன்!!!

அன்றே முடிவெடுத்தேன்
உன் காலில் கற்கள் படுவது
அன்றே கடைசியென்று!!!

அன்று முதல் உன் கால்
பூ போல் இன்றும்!!!

mukilan
05-08-2008, 06:20 PM
கோவிலில் கொடுத்த
குங்குமத்தை நான்
அருகில் நின்ற பெண்ணிடம்
கொடுக்க
ஓடிச் சென்று தட்டி விட்டு
உன் கை குங்குமம்
எனக்கு மட்டும் என்று
எச்சரித்துச் செல்கிறாய் நீ!

நாங்களும் காதல் கவிதை எழுதுவோம்ல! ::icon_ush:

நம்பிகோபாலன்
06-08-2008, 06:42 AM
மூலவரை பார்க்க
உற்சவர் புறப்பட்ட
கதைதான்
உன்னையும் சன்னிதியில்
அம்பாளையும்
கண்டபொழுது
சொல்ல தோன்றியது...

ஆர்.ஈஸ்வரன்
19-08-2008, 03:37 PM
உனைப் பார்த்தபின்
இனி
எதைப்பார்த்து
என்ன செய்யப்போகின்றன
என் கண்கள்

ஷீ-நிசி
19-08-2008, 04:02 PM
உன்னை கோவிலுக்கு வரவேண்டாம்,
என்று சொல்ல சொன்னது
அந்த சாமி!

பின்னே.....
எல்லோரும் உன்னையே
சுற்றி வந்தால்!!

நம்பிகோபாலன்
21-08-2008, 10:27 AM
கோவில் மணி அடிக்க
உன்னை பார்க்க
ஆகா
தேவியின் தரிசனம்
எனக்கு மட்டும் கிடைத்ததே.....

poornima
21-08-2008, 10:49 AM
உள்ளே அம்மன் தரிசனத்தை
ஊரே பார்த்து பக்தியில் ஆழ
வெளியே என்னைப் பார்த்து
பரவசமடந்துக்
கொண்டிருக்கிறாய் நீ

பென்ஸ்
11-09-2008, 04:23 AM
புது வெள்ளை மேலே கலர்
பட்டுதுணி , பளபளக்கும் அரிவாள்
என்று தடபுடலாக
தயாராகிறார் அய்யனார்
இந்த திருவிழாவாவது
உன் பார்வை கிடைக்குமா என்று
நப்பாசையில்...
என்னை போல்...!!!

தீபா
11-09-2008, 06:51 AM
புது வெள்ளை மேலே கலர்
பட்டுதுணி , பளபளக்கும் அரிவாள்
என்று தடபுடலாக
தயாராகிறார் அய்யனார்
இந்த திருவிழாவாவது
உன் பார்வை கிடைக்குமா என்று
நப்பாசையில்...
என்னை போல்...!!!

ஒருநிமிடம் யோசித்தேன்.. அந்த அய்யனார் தரிசனம் கிடைக்காமல் அரிவாளால் போட்டுத் தள்ளிவிட்டால்???? :lachen001: