PDA

View Full Version : குத்திக் காட்டியது - என் தமிழ்சுகந்தப்ரீதன்
03-07-2008, 02:40 PM
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்!

***************************************************************

(மின்னஞ்சலில் வந்த கவிதையிது.. ஆனால் அதில் எழுதியவர் பெயர் குறிப்பிடபடவில்லை..!! இருந்தாலும் இந்த கவிதை எனக்கு பிடித்ததற்க்கு காரணம் என் தமிழும் என்னையும் குத்திக் காட்டியதால்தான்..!!)

ஆதவா
03-07-2008, 02:51 PM
மார்வலஸ்!!

மலர்விழி
03-07-2008, 03:52 PM
'amazing' என்று சொல்ல நா துடித்தது,
எனினும் தமிழ் தடுக்கிறது,:rolleyes:

மிக மிக அருமை அண்ணா!!!:icon_b:

mukilan
03-07-2008, 04:02 PM
மார்வலஸ்!!

முதல்ல உங்களைக் குத்தனும்யா!:eek: அவரே தமிழ் குத்திக்காட்டினதால போட்டிருக்கிறாரு:sauer028::sauer028:

Narathar
03-07-2008, 05:23 PM
அருமையான சொல்லாடல்.........
மிக அருமை, மிக அருமை

சுகந்தப்ரீதன்
05-07-2008, 09:22 AM
நன்றி நண்பர்களே..!!

முடிந்தவரை நாம் தமிழை மொழிய முயலுவோமே..?!

இளசு
05-07-2008, 10:03 AM
நல்ல பதிவு... நன்றி சுகந்தா!

ஆதவனின் எள்ளல் அருமை!

என் தமிழைத் தக்கவைத்த மன்றத்துக்கு நன்றி!

அன்புரசிகன்
05-07-2008, 01:50 PM
உண்மையாகவே குத்தியது...

குத்தி காட்டியதற்கு நன்றிகள்....

ஆதவா
06-07-2008, 02:59 AM
முதல்ல உங்களைக் குத்தனும்யா!:eek: அவரே தமிழ் குத்திக்காட்டினதால போட்டிருக்கிறாரு:sauer028::sauer028:

தமிழ் தமிழ் என்று அலம்பல் செய்கிறோமே! அந்தத் தமிழுக்காக நான் என்ன செய்துவிட்டேன் என்று எண்ணும்போது ஒருபக்க கவலை முகி அண்ணா.

மார்வலஸ் என்பது என்னைப்போல, ஆங்கிலம் கலக்கும் தமிழர்களுக்கான எள்ளல். குறிப்பாக இதற்கு அழகு தமிழில் நல்ல வார்த்தைகளைப் போட்டு விமர்சனம் கொடுத்திருக்கலாம்.. ஆனால் அது எனது குத்தல்களை மறைத்தது போல இருக்கும்..

இன்றும் Sorry யை மன்னிப்பு ஆக்க
இன்றும் Please ஐ தயவுசெய்து ஆக்க

இன்னும்..... முடியவில்லை...

தமிழ் எதையும் வரவேற்த்து அணைக்கும்..... இந்த தன் 'மன்னிப்பையும்' தயவுசெய்து'ஐயும் மறந்துவிட்டு சாரியையும், ப்ளீஸையும்
சேர்த்துக் கொள்ளும்...

பல சொற்களைத் தெரிந்தே சொல்லத் தெரியவில்லை.... இது தமிழன் படும்பாடு.. அரசு செய்யும் கேடு..

பாலகன்
06-07-2008, 03:32 AM
பல சொற்களைத் தெரிந்தே சொல்லத் தெரியவில்லை.... இது தமிழன் படும்பாடு.. அரசு செய்யும் கேடு..

நேர்மையான பதில் ஆதவா,

உண்மையில் நாம் தான் தமிழ் தமிழ் என்கிறோம்,,, ஆனால் அரசிடமிருந்து சிறு துறும்பையும் நாம் தமிழ் வளர்ச்சிகாக பெற்றதில்லையே..........

=================================================

சுகந்தரே,

அம்மா என்று கத்திய உங்கள் நாயகனை குத்திய முள் சொல்லிற்று நீக்கள் தமிழன்னையின் மகன் என்று............

தமிழ் தாயை விட்டு நாம் எவ்வளவுதான் விலகிச்சென்றாலும் நம் அன்னை சாகா வரம்பெற்றவள் அன்றோ, எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அவள் ஆட்சிசெய்துகொன்டிருக்கிறாள்,, அதனால் குறைந்த ஆயுள் கொன்ட மற்ற மொழியின் மோகம் எல்லாம் கொஞ்சநாள் தான்.........

அன்புடன்
பில்லா

தீபன்
06-07-2008, 04:11 AM
அருமையான பதிவு.
(சின்ன சந்தேகம்... முள்ளால் குத்தப்பட்டவர் அ.தி.மு.க. தொண்டராயிருக்குமோ...!)

ஓவியன்
06-07-2008, 06:07 AM
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்புவின் கையெழுத்து இது...!!

இதனை நாம் நெஞ்சில் எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம்...!!

நன்றிகள் பல சுபி..!! :)

ஓவியன்
06-07-2008, 06:10 AM
(சின்ன சந்தேகம்... முள்ளால் குத்தப்பட்டவர் அ.தி.மு.க. தொண்டராயிருக்குமோ...!)

அடி ஆத்தா..!! (நான் எந்த கழக தொண்டரும் இல்லை என்பதற்காக இந்த வார்த்தை:D)

இப்படியெல்லாம் சிந்திப்பாங்களா...?? :eek:

aren
07-07-2008, 06:41 AM
நல்ல கவிதை சுகந்தா. எழுதியவருக்கு என் பாராட்டுக்கள். இங்கே பதிவு செய்து எங்களுக்கு புரியவைத்த சுகந்தனுக்கு என் நன்றிகள்.

நம்மால் ஆங்கிலம் கலக்காமல் ஒரு முழு வாக்கியம் சொல்லமுடியுமா? என்னால் நிச்சயம் முடியாது. நாம் அப்படியே வாழப் பழகிவிட்டோம்.

அடுத்த தலைமுறையாவது மா(ற்)றட்டும்.

arun
16-07-2008, 07:00 PM
அருமை பகிர்வுக்கு நன்றி